Friday, July 4, 2008

கற்பு, குஷ்பு, நாம்

“என்னடா ரொம்ப "டல்"லா இருக்க, வசந்த்?

"ஒண்ணுமில்லடா நேத்து ஒரு விவாதம்!"

“யாரோட?”

“சந்தியாவோடதான்”

“எதுவும் ஈகோ க்ளாஷா?”

“இல்லைடா, குஷ்பு, கற்பு, நம்மைப் பற்றி”

“குஷ்பு சொன்னதில் தப்பில்லை, இப்போலாம் எல்லோரும் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வச்சிக்கிறாங்கனு சொல்லியிருப்பாள்?”

“ஆமடா!”

“இந்தக்காலத்து படித்த பெண்கள் அப்படித்தான் ஃபீல் பண்ணுறாங்கடா”

“நீயும் இதை நம்புறியா?”

“பெண்கள் பத்தி நமக்கென்ன தெரியும், வசந்த்?”

“ரொம்ப கொஞ்சம்தான், அப்போ அவங்க சொல்றதைத்தான் நாம் நம்பனும்னு சொல்றியா?”

“நிச்சயமா!”

“இல்லைடா, எனக்குத்தெரிய நிறைய பசங்ககூட திருமணத்துக்கு முன் வெர்ஜினா இருந்ததா கேள்விப்பட்டு இருக்கிறேன்”

“பசங்க பற்றி நமக்கு நிச்சயம் தெரியும். அப்படி இருந்தால் என்ன? அதைப்பற்றியெல்லாம் அவங்க பெருமைப்படலை! அந்த மாதிரி ஆண்களைப்பார்த்து பரிதாபப்பட்டாலும் படுவாங்க! இந்தக்காலத்து பெண்கள்ல கூட சிலர்/பலர் வேர்ஜினாக இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் இங்கே பிரச்சினை அதில்லை”

“என்ன சொல்றடா?”

“நாங்க ஏன் வேர்ஜினா இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்கிறங்க? உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கீங்கனு கேக்கிறாங்க?”

“கல்யாணத்துக்கு முன் வெர்ஜினா இருப்பதில் அவங்க பெருமையடையறாங்களா? நான் நிச்சயம் பெருமையடைவேன்”

“இப்போதெல்லாம் பெருமையடைவதில்லை என்று நினைக்கிறேன், ஏன் பெருமையடையனும்?”

“எனக்கு சரியா தெரியல, இருந்தாலும் ஒரு சின்ன உறுத்தல் இந்த விஷயத்தில் எனக்கு”

“ஏன்?”

“சரியா தெரியாது”

“ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“இன்னும் நம்ம கலாச்சாரத்தில் >70% arranged marriage தான் பண்ணுறோம். ஆனால், சந்தியா, குஷ்பு, நீ, நான் எல்லாம் பார்க்கிற, இருக்கிற சொசையிட்டியில் arranged marriage, ரொம்ப அரிது. arranged marriage பண்ணுகிற பெண் வேர்ஜினா இல்லைனா, அவள் வரப்போகிற கணவனிடம் இல்லாமல் யாரிடமோ செக்ஸ் பற்றி பழகி இருக்காள்னு ஆகுது. அது சரியல்ல.. ஏன் காதலித்த அவனையே கல்யாணம் செய்து இருக்கலாம் இல்லையா?..இவங்க எல்லோரும் தனக்குப்பிடித்தவருடன் பழகி, காதல் மற்றும் காமத்தில் கலந்து பின்பு அவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டால் நல்லா இருக்குமே.. எதுக்கு செக்ஸ் பழக ஒரு ஆள், வாழ இன்னொரு ஆள்? இப்படியெல்லாம் யோசிக்கிறயா”

“Exactly”

“சரி, இதைவிடுடா, ரெண்டு டிக்கட்ஸ் இருக்கு, தசாவதாரம் பார்க்கப்போகலாம், வாறியா?

Wednesday, July 2, 2008

காதல் கல்வெட்டு-4

வால்மார்ட் சென்ற வருண் ஷாப்பிங் எல்லாம் முடித்தான்.கடைசியில் கயலின் அருகாமை இன்று அவனை மயக்கியது ஞாபகம் வந்தது. "செல்ஃப் செக் அவுட்"டிலேயே செக் அவுட்பண்ணியதும் தன் டிஸ்கவரில் பே பண்ணிவிட்டு காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தான். அவன் கயலை பின்னால் இருந்து தழுவிய இடத்தை மறுபடியும் கடக்கும்போது மல்லிகை வாடை அடித்தது. அவனுக்கு கயலின் கழுத்து மற்றும் அவள் உடல் தன் மேல் உரசியது ஞாபகம் வந்தது. இந்த நினைவிலிருந்து தப்பிக்க இந்தியாவில் அப்பா அம்மாவிற்கு கால் பண்ணினான். அவன் வாரமொருமுறை சனிக்கிழமை அப்பா அம்மாவுடன் பேசுவதுவழக்கம்.

அம்மா பேசும்போது, வழக்கம்போல் அவனுக்கு நல்ல வரன்கள் வருவதாக சொன்னார்கள். மேலும் அப்பா வழக்கம்போல் பி பி இருப்பதைமறந்து, ஊறுகாய் வற்றல் எல்லாம் நிறைய சேர்த்துக்கொள்கிறார். நான் சொல்வதை கேட்பதே இல்லை. நீ சொன்னால்தான் கேட்பார் நீதான் அவரை திட்ட வேண்டும் என்று அம்மா புகார் பண்ணினார்கள்.

சிறுவயதில் இருந்து அப்பா- அம்மா இது போல் சண்டை போடுவதைப்பார்த்து வருகிறான், வருண். அப்பா ரொம்ப நல்ல மனிதர்தான், ஆனால் சாப்பாடு விசயத்தில் அவரால் கட்டுப்பாடாக இருக்க முடியாது. நல்லவேளையாக அவருக்கு டயபட்டிஸ், கொலஸ்டிரால் எதுவும் இல்லை. அவரின் ஹைப்பர் டென்ஷனும் அவர் 55 வது வயதில் தெரிய வந்தது. ஒருநாள் திடீரென்ன அப்பாவிற்கு மூக்கிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. அவசர சிகிச்சைக்கு சென்று என்னவென்று பார்க்கும்போது அவர் இரத்த அழுத்தம் 180/120 இருந்தது. அன்றிலிருந்துதான் அவருக்கு பி பி இருந்ததும் தெரிய வந்தது. பி பி அதிகமானதால், ஒரு வீக்கான நரம்பு உடைந்து அது மூலம் ப்லீடிங் ஆகி இருக்கு என்றார் டாக்டர். டாக்டரிடம் ரெகுலர் செக்-அப் பண்ணி இருந்தால் இது போல் கவனக்குறைவாக விட்டிருக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். மேலும் டாக்டர் சொன்னார், இதே நரம்புமூளையில் வெடித்து இருந்தால், அவருக்கு ஸ்ட்ரோக் வந்து கோமா ஸ்டேஜ்க்கு போயிருக்கும் பயங்கரம் இருந்தது என்றார் டாக்டர். கொஞ்சநாள் பத்தியமாகவும், ரெகுலர் செக்கப்பும் செய்து கொண்டிருந்தார் அப்பா. மாத்திரை ரெகுலராக சாப்பிடுவதால், பி பி கண்ட்ரோலில் இருந்தது. ஹைப்பர் டென்ஷன் கண்ட்ரோலுக்கு வந்தவுடன் இவர் கண்ட்ரோலிழந்தார். தன் சாப்பாட்டில் மறுபடியும் உப்பு காரம் அதிகமாக்கிக்கொண்டார். அம்மா அவருடன் எவ்வளவு சண்டை போட்டாலும், அவரை திருத்த முடியவில்லை. உப்பு காரம் குறைத்து சமைத்தால், வந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு அப்படியே சாப்பாடை வைத்துவிட்டு எழுந்துவிடுவார். வெளியில்போய் ஏதாவது ஹோட்டலில் போய் வாய்க்கு ருசியாக ஸ்னாக்ஸ் சாப்பிட்டு சமாளிப்பார். இந்த விசயத்தில் அப்பா அம்மாவிடம் கூசாமல் பொய் சொல்லுவதும் உண்டு. ஆனால் அமெரிக்காவிலிருந்து வருண் அவர் டயட்டை கண்ட்ரோல் பண்ணுவது சாத்தியமே இல்லை என்று அம்மாவுக்குப்புரியாது. அவர் என்ன பச்சைக்குழந்தையா? படித்தவர். அவருக்கே இதெல்லாம் தெரியனும் என்று நம்பினான் வருண்.

அம்மாவிடம் பேசி முடித்தபிறகு, “அப்பாவிடம் ஃபோனைக்கொடுங்கம்மா!” என்றான்.

‘சரிப்பா வருண், உன் உடம்பை நல்லாப்பார்த்துக்கோ. அம்மாவுக்கு எந்நேரமும் உன் நினைவுதான்' என்று சொல்லி வழக்கம்போல் குரல் தழுதழுக்க முடித்தார்கள் அம்மா.

‘சரிம்மா! நீங்கள் அப்பாவிடம் சண்டைபோடாமல் தன்மையாக சொல்லுங்கள். இதெல்லாம் அவருக்கே தெரியனும் அம்மா!”

“வருண், எனக்கு பி பி எல்லாம் நார்மலாயிருக்குப்பா!” என்றார் அப்பா, டிஃபென்ஸிவாக.

“சரிப்பா, உடம்பைப்பார்த்துக்கொங்க! ரெகுலரா மாத்திரை சாப்பிடுங்கள். அந்த பி பி மிஷின் வைத்து ரெகுலர் ஆக வீட்டிலேயே செக் பண்ணுங்க!

“ரெகுலரா செக் பண்ணூறேன், வருண்! இப்போலாம் நார்மலாத்தான் இருக்குப்பா!”

“சரி, நான் வச்சுடுறேன்ப்பா. அடுத்த வாரம் பேசுறேன்” என்று முடித்தான் வருண்.

ஃபோன் வைத்தவுடனே மறுபடியும் ரிங் வந்தது.

“ஹல்லோ”

“என்ன ஃபோன் ரொம்ப நேரம் பிஸியா இருந்தது வருண்?”

“ஆமாம், கயல், அப்பா-அம்மாவிடம் பேசினேன்”

“எப்படி இருக்காங்க வருண்? என்ன சொன்னாங்க ஆண்ட்டி அங்கிள்?”

“எல்லாம் பழைய பல்லவிதான், கயல். நிறைய வரன் வருதாம், அப்பா உப்பு காரம் குறைக்கவே மாட்டேன்கிறாராம்”

“யாருக்கு வரன்?”

“எனக்குத்தான். வேற யாருக்கு?”

“உங்களுக்கு பொண்ணு பார்க்கிறார்களா, வருண்?”

“ஆமாம். அதுதான் 2 வருடமா பார்க்கிறாங்களே!”

“ஏன் உங்களை யாரும் கட்டிக்க மாட்டேன்கிறாங்களா, வருண்?”

“ஆமாம். என் ஃபோட்டோவைப்பார்த்து எல்லோரும் பயந்து விடுகிறார்களாம். ஆனால், அதை சொல்லாமல் வேறு ஏதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கிறாங்களாம்.”

“அதெல்லாம் இருக்காது”

'உனக்கெப்படித்தெரியும்?”

“இப்படி எல்லாம் பேசினால் எனக்குப்பிடிக்காது, வருண்”

“சரி, அப்பா, அம்மாவை கஷ்டப்படுத்தக்கூடாதுனு பேசாமல் இருக்கிறேன், கயல்!”

“ஏன் வாழ்நாள் முழுவதும், பிரம்மச்சாரியா இருக்கப்போறீங்களா?”

“தெரியவில்லையே, கயல். டு யு மைண்ட்?”

“ஆஃப் கோர்ஸ் ஐ டு. சரி, என் வீட்டு கதை கேக்குறீங்களா?”

“என்ன சொல்றாங்க ஆண்ட்டி?”

“போனவாரம் ஒரு அழையா விருந்தாளி வந்தாங்க! உங்க ஆண்ட்டியோட க்ளாஸ் மேட்டாம்! இந்தப்பக்கம் கடந்து போவதால், தோழி மகளைப்பார்க்க வருவாங்கனு உங்க ஆண்ட்டி சொன்னாங்க. அவங்க பேரு லக்ஷ்மி”

“எப்படிப் பேசினாங்க ஆண்ட்டியின் அன்புத்தோழி? போரா? ”

“அவங்க மகன் ஒரு ஃபிஸிஷியனாம். அவரைப்பற்றி நிறைய சொன்னாங்க. அப்போத்தான் புரிந்தது எனக்கு அவங்க விஜயம் எதுக்குனு”

“எதுக்கு, கயல்?”

“உங்க ஆண்ட்டி பேய் இருக்கே, அது உண்மையை மறைத்து இவர்களை அனுப்பி வைத்துள்ளது என்னை பெண் பார்க்க”

“பாவம் ஆண்ட்டி, உனக்கு நல்ல படித்த மாப்பிள்ளைதானே பார்த்து இருக்காங்க?”

“என்னிடம் உண்மையை சொல்லாமல் ஏன் மறைத்தது, உங்க ஆண்ட்டி?”

“சொன்னால், நீ வேணாம்னு சொல்லி இருப்ப, இல்லையா?”

“ஆமாம், அதுக்காக?”

“மாப்பிள்ளை ஃபோட்டோ பார்த்தியா?”

“பார்த்து வச்சேன், பேருக்கு”

“பிடிச்சதா?”

“இதென்ன கேள்வி வருண்? ஒருவர் டாக்டரா இருக்கிறார், அதிகம் சம்பாதிக்கிறார் என்பதற்காக மட்டும் ஒருவரை கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"

“சரி, அப்புறம் ஆண்ட்டியை கால் பண்ணி பேசினயா?”

“இதுவே கடைசித்தடவையா இருக்கட்டும்னு சொன்னேன்”

“ஆண்ட்டி என்ன சொன்னாங்க?”

“அது ஏதோ புரிந்த மாதிரி நடிச்சது”

“சரி, "பெட்" லயா இருக்க?”

“ஆமாம்”

“என்ன போட்டிருக்கே?”

மெளனம்

"என்ன போட்டு இருக்கனு கேட்டேன்"

“நைட் ட்ரெஸ்தான்”

“பொய் சொல்லாதே!, யு ஆர் நாட் எ குட் லையர், கயல்”

“சரி, தூக்கம் வரலையா உங்களுக்கு, வருண்?”

“இன்னைக்கு வராது, கயல்”

“ஏன்?”

“இன்னைக்கு மனது ஒரு மாதிரியா இருக்கு”

“எனக்கும்தான், வருண்”

“சரி ட்ரை டு ஸ்லீப், கயல்! குட் நைட்”

“குட் நைட், வருண்”

வருண் அவளிடம் ஏதோ ஒண்ணு சொல்லத்துடித்தான். கயலும் அதை கேட்கத்துடித்தாள். ஆனால் அது அவனுடைய மனநாக்கோடு நின்றுவிட்டது.


-தொடரும்

நீங்க பார்க்க யார் மாதிரி இருப்பீங்க?




80-பதுகளில் நான் சிறுமியாக இருந்த காலக்கட்டத்தில் பேபி ஷாலினிக்கு பயங்கர க்ரேஸ் இருந்தது. எனக்கு ரோல் மாடல் பேபி ஷாலினி தான்.ஷாலினி 80களின் டோரா என்றால் மிகையில்லை. ஷாலினி மாதிரியே ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று அம்மாவிடம் அழுது அடம் பிடித்திருக்கிறேன். என் அடம் பொறுக்க முடியாமல் ப்யூட்டி பார்லர் அழைத்து போய் பேபி ஷாலினி மாதிரியே முடி வெட்டி விட்டார்கள். தாங்க முடியாத மகிழ்ச்சி எனக்கு. ஷாலினி மாதிரியே ஒரு ஃப்ராக் போட்டு, அவரை மாதிரியே வீடெல்லாம் வேண்டுமென்றே ஒரு துள்ளலுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து என் சகோதரரை எரிச்சல்ப்பட வைத்திருக்கிறேன். "மம்மி, டேடி! இவளை ஏன் பெத்தீங்க? என்னோட நிறுத்தி இருக்க கூடாதா? பாருங்க மானத்தை வாங்கறா!"

வளர்ந்த பிறகு டீன் ஏஜில் பல நடிகைகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறேன். யாராவது, "நீ இந்த நடிகை மாதிரியே இருக்கே" என்றால் போதும். அந்த நடிகை மாதிரியே உடை அணிந்து, அவருடைய மேனரிசம்களை காப்பி பண்ண ட்ரை பண்ணி இருக்கிறேன். என் அண்ணன் தலையில் அடித்துக்கொள்வான், ஆனால் "ஏன் பெத்தீங்க" என்ற கேள்வியை விட்டுவிட்டான்(ஐயா வளர்ந்துவிட்டாராம்!). அந்த சமயத்தில் அழகு என்பதும், அழகா இருப்பதும் எனக்கு ரொம்ப முக்கியமாகப்பட்டது.

அண்டர் க்ராஜுவேஷன் முடித்து மேல் படிப்புக்காக அமரிக்கா வந்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமானது, "அழகென்பது தோலில் அல்ல, குணத்தில்,புத்திசாலிதனத்தில், நடந்துக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது". மேலும் அழகென்பது காலத்தால் அழியக்கூடியது இல்லையா? எனவே என் மனம் காலத்தால் அழியாத அறிவை தேடியது. விதம் விதமான புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன், என் சப்ஜெக்டுக்கு துளியும் சம்மந்தமில்லாத புத்தகங்களைக்கூட! கம்யூனிசம், பெரியாரிசம்,அமரிக்க வரலாறு, நாத்தீகம், ஆத்தீகம், செக்ஸ் எஜுகேஷன் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. உலகத்தை நான் பார்க்கும் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் "நீ அந்த நடிகை மாதிரி இருக்கே" என்றால் மகிழ்ச்சியடைவதில்லை- ஒரு புன்சிரிப்போடு மறந்துவிடுவேன். புத்திசாலிப்பெண், நல்ல மனதுடைய பெண் போன்ற காம்ப்ளிமெண்டுகளுக்கு பூரித்துப்போகிறேன். ஒரு நாள் என் தோழியுடைய அப்பா கூட "அந்த மல்லு நடிகை, அவள் பேரென்னமா? புல்புல்தாராவா? அவளை மாதிரியே இருக்க"

"அது நயன்தாரா அங்கிள்"

என்னுடைய நல்ல நண்பரொருவர் ஒருநாள், "என் மனைவி நீங்க சில்க் சுமிதா மாதிரியே இருப்பதா சொல்றாங்க" என்று சொன்னதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

சமீபத்தில் எனக்கும் வருணுக்கும் இடையே ஒரு உரையாடல்.

"உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும் வருண்?"

"ஏன் கேட்கற?"(பெண்கள் என்றால் மனிதர் உஷாராகி ரொம்ப கவனமாக தான் பதில் சொல்லுவார். அவர் மூளையில் அடிக்கும் வார்னிங் சிக்னல் எனக்கு வரைக்கும் கேட்கும். எங்கேயோ நல்ல அனுபவம் போல!!)

"இல்லை சும்மா தான் சொல்லுங்க"

"எனக்கு உன்னை தான் பிடிக்கும். நீ தான் உலகத்திலேயே ரொம்ப அழக்.."(இந்த ஹைதர் அலி காலத்து டயலாக்கை விடவே மாட்டீங்களா?)

"சரி சரி போதும், அப்படியே நம்பிட்டோம். நடிகைகளில் எந்த நடிகை பிடிக்கும் சொல்லுங்க"

"அப்படி ஏதும் பர்டிகுலரா கிடையாது"(எஸ்கேப், எஸ்கேப்!!)

"சும்மா சொல்லுங்க! நான் கோச்சுக்கமாட்டேன்"

"நிஜமாவே தான். எந்த நடிகையையும் குறிப்பிட்டு பிடிக்காது. நடிகைகள் எல்லாம் உன்னை மாதிரி இண்டெலிஜெண்டா பேசுவாங்களா, பதில் சொல்லுவாங்களா? உன்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்"

"சரி பொழைச்சுப்போங்க"


P.S: இதை படிப்பவர்கள் நீங்கள் பார்க்க யாரை மாதிரி இருப்பீர்கள்(நடிகை, நடிகன், அரசியல்வாதி வேறெதாவது பிரபலம்?) என்று தெரிவிக்கவும்.