Saturday, May 9, 2009

தமிழனுக்கு ஏதுடா நாட்டுப்பற்று?!

தமிழனத் தலைவர் என்று அழைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் அன்றும், இன்றும், என்றும் வெறுக்கப்பட்ட தமிழர் திரு கருணாநிதியை இன்று "பார்ப்பன நண்பர்", "தமிழின துரோகி" என்று "மானமுள்ள தமிழ்ப்பற்றாளர்கள்" நம்புவதுடன் இவரை வெறுக்கிறார்கள். வழக்கம்போல இவரை பார்ப்பனர்கள் எப்போவும் போலவே வெறுக்கிறார்கள்.

சரி கருணாநிதி இன துரோகி என்றால் இவருக்கு நாட்டுப்பற்று ஏதாவது உண்டா? நாட்டுக்காக இனத்தை தூக்கி எறிந்த தேசபக்தரா இவர்? நாட்டுப்பற்று உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

யார் நம்புவது? தமிழரல்லாதவர்கள் சிரிப்பார்கள்! தமிழரல்லாதவருக்கு, கருணாநிதி ஒரு தமிழ் ஃபெனாடிக்! தமிழனத்தலைவன்!

ஆனால் தமிழனுக்கு? கருணாநிதி ஒரு இன துரோகி! மொழி துரோகி! என்ன ஒரு பரிதாபம்!

சரி திரு. கருணாநிதியை விட்டுவிடுவோம். இப்போ தமிழனால் தமிழனை காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழர்கள் என்ன செய்வார்கள்? இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது? அப்படி ஒரு நிலைமையில் என்ன செய்வார்கள் தமிழ் பற்றாளர்கள்?

தமிழ்பற்றுடன் இருக்கும் இன்னொரு திராவிடனை தமிழின தலைவனாக்கி வெற்றியடைவார்களா?

காமெடி பண்ணாதீங்க! அதெல்லாம் அவர்களால் என்றுமே முடியாது! ஏன் முடியாது? அதுமட்டும் முடியவே முடியாது!

ஏன்? ஏன்? ஏன்?

எனக்குத்தெரியாது! வை கோவை கேளுங்க! இல்லை சீமானை கேளுங்க! இல்லைனா ராமதாசை கேளுங்க!

அப்போ என்னதான் செய்வார்கள்?

திராவிடரான தமிழர்கள், பார்ப்பன தெய்வங்களை வணங்குவார்கள்! தெய்வம் அருள் புரியாமல் இருக்குமா?


இப்போ பார்ப்பன தெய்வமான ஜெயலலிதாவை ராமதாசு, வை கோ போன்ற திராவிட பூசாரிகள் வழிபட்டு, தெய்வம் அருளை பெற்று விட்டார்கள்!

ஆக, இன்று தமிழனுக்காக குரல் கொடுப்பது பார்ப்பன வகுப்பை சேர்ந்த தெய்வம் அன்னை ஜெயலலிதா!

ஆமாம், கைபர் போலன் என்று பிதற்றும் ஒரு சில அரைவேக்காடுகளும் தெய்வம் ஜெயலலிதாவின் கைபர் போலன் பூர்விகத்தை மறந்த மரமண்டைகள்தாம்.

பார்ப்பன தெய்வம் ஜெயலலிதாதான் தமிழன் கண்ணீரை துடைக்கப்போகிறது. எப்படி? இன்னொரு இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி! பயப்படாதீர்கள்! இந்தமுறை இது நல்ல இந்திய அமைதிப்படை! இது சிங்களர்களைத்தான் தாக்கும்! தமிழர்களை அல்ல! என்று தெய்வத்தை வழிபடும் தமிழர்கள் நம்புகிறார்கள்! பார்ப்பன தெய்வத்தை நம்பாமல் இருக்கலாமா?

மொத்தத்தில் தமிழனுக்கு இனப்பற்று கிடையாது! அதனால் அவர்கள் வழிபடும் பார்ப்பன தெய்வங்கள்தான் தமிழன் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று மறத்தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

சரி, தமிழ்நாட்டுத் தமிழனுக்கு நாட்டுப்பற்றாவது உண்டா?

நீங்க வேற! நாட்டுப்பற்றுனா கிலோ எத்தனை ரூபாய்னு கேட்பவன் தமிழ்நாட்டுத்தமிழன்! அவனுக்கு என்னைக்குமே நாட்டுப்பற்று கிடையாது! நாட்டுப்பற்றின்மையை பெருமையாக நினைப்பவன் தமிழன்.

அப்போ தமிழனுக்கு என்னதான் இருக்கு? என்னதான் தெரியும்?

* பெரிய வாய்! வாய்கிழிய நெறையவே உளறத்தெரியும்!

* வாய்விட்டு அழுது பார்ப்பனதெய்வங்களை வணங்கத்தெரியும்!

* தமிழனுக்கு எதிரா சதி செய்ய பார்ப்பன தெய்வ வழிபாடு தெரியும்!

வேறென்ன வேணும்?

Thursday, May 7, 2009

வருண்! நீங்க "செலிப்ரிட்டி" ஆயிட்டீங்க!!!

"என்ன வருண் நீங்க செலிப்ரிட்டி ஆயிட்டீங்க போல?"

"என்ன சொல்றீங்க?"

"உங்களை மையமா வச்சு ரெண்டு திரி ஆரம்பிச்சு இருக்காங்க! கண்ணா பின்னானு திட்டு உங்களுக்கு"

"வாழ்க!"

"ஒரு திரியில் உங்களை செருப்பால அடிக்கனும்னு பின்னூட்டம். இன்னொன்னுல உங்களை ஆணா பெண்ணானு அலசுறாங்க. ஏதோ உங்களை பாவம்னு விட்டு வச்சிருக்கார்களாம்?!"

"யாரு ஜெயலலிதா ஜால்ராவா? இல்லை என்ன செய்வாங்களாம்? தலையை வாங்கிவிடுவார்களா?"'

"அப்படித்தான் தோனுது"

"என்ன பண்றது? இப்படி வாய்ச்சொல்லில் வீரர்களை நான் இன்னைக்கு நேத்தா பார்க்கிறேன்?"

"ஏன் இதெல்லாம்?"

"நான் சாரு, ஞாநி, சீமான் பற்றி எல்லாம் எழுதுறேன் இல்லையா? நானும் ஒரு விமர்சகராஆயிட்டேன் போல. அவங்களுக்கு என் கருத்து பிடிக்கலை. திட்டுறாங்க"

"இருந்தாலும் ஒரு பிரபலப்பதிவர் இப்படி எழுதுறது- நீங்க ஒரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி, அது இதுனு? இதெல்லாம் அவருக்கு எதுக்கு?"

"ஊர் உலகம் ஆயிரம் சொல்லும். நான் என்ன பண்ண முடியும்? அவர்ட்ட போயி நான் யாருனு ப்ரூவ் பண்ண எந்த அவசியமும் இல்லை. அவர் ப்ளாக்ல நான் பின்னூட்டமெல்லாம் இடுவதில்லை. ஹானஸ்ட்லி ஐ ரியல்லி டோண்ட் கேர்"

"நீங்களும் அவரைப்பற்றி எழுத வேண்டியதுதானே?'

"இதென்னங்க சிறுபிள்ளைத்தனமா இருக்கு? ஒருவரை ஒருவர் இப்படியே விமர்சித்துகொண்டே போனால் வேற எதுவுமே எழுதமுடியாது. என் தரத்தை நான் இன்னொரு பதிவரை அவமானப்படுத்தி குறைத்துக்கொள்ள இஷ்டப்படவில்லை. அவர்களின் "ஃப்ரீடம் ஆஃப் ஸ்பீச்" னு போக வேண்டியதுதான். வரம்பு மீறினால் அவங்க தலையில் அவங்களே மண்ணள்ளி போட்டது போல்தான்"

'என்னவோ போங்க!"

"I dont think JJ is a God or something. She is a politician. She used ezham issue for HER ADVANTAGE in early nineties. She does the same even today. Why do one need to worship her for? That is ridiculous, imho. I criticized that as Seeman made her look like God or something. I still feel the same and I dont have any regrets. I did not do anyhting wrong! Thanks!

"ஆமா, நீங்க ஆரிய ஜால்ராவா?"

"Give me a break! LOL!"

Tuesday, May 5, 2009

சீமான் என்கிற முட்டாளின் உளறல்கள்!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்கிற பேரில் இந்த முட்டாளின் உளறல்கள் அளவுக்கு மிஞ்சுகிறது.

“ஜெயலலிதாவை வணங்குகிறேன்” இது இன்றைய உளறல்!!

அதென்னடா தமிழனுக்கு ஜெயலலிதாவை வணங்குவதுனா அவ்வளவு பிடிக்குது? “பாராட்டுகிறேன்” என்று சொல்வதே அதிகம். எதுக்காக வணங்குகிறாராம்?

தெரியாமல்தான் கேக்கிறேன், பிரபாகரனை கொஞ்சுவாரா என்ன இந்த ஜெயலலிதா? சும்மா உளறித்தள்ளுகிறான் இந்த காட்டுமிராண்டி திராவிடன்!

எம் ஜி ஆர் எந்தக்காலத்தில் பிரபாகரனை பாராட்டினார்? அன்றைய அரசியல் சூழல் என்ன? ராஜிவ் காந்தி மரணத்திற்குப்ப்பிறகு எம் ஜி ஆர் இருந்திருந்தால் அவரும் இன்று கருணாநிதி செய்வதைத்தான் செய்வார் என்று ஏன் இந்த முட்டாளுக்கு புரியவில்லை!

15 லட்சம் தமிழர்கள் இவரோட இலங்கைக்கு வராங்கலாம், இவர் போய் புடுங்கப்போறாராம்! அறிவு கிடையாதா இந்த முட்டாளுக்கு? ஒரு நாடுனா என்ன? ஒரு அந்நிய நாட்டு பிரச்சினையில் என்ன செய்ய முடியும் முடியாதுனு தெரியாத காட்டுமிராண்டி மாதிரி உளறுகிறான் இந்த முட்டாள். இவனை பிடிச்சு மறுபடியும் உள்ளே போடனும்!