Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Sunday, May 17, 2009

ஹீரோ ராமதாஸ், ஹீரோயின் ஜெயா! படம் ஃப்ளாப்!

என்ன ஆச்சு நம்ம ஜெயா- ராமதாசு நடிச்ச நீலிக்கண்ணீர் படம்? என்ன ஆகும்? அட்டர் ஃப்ளாப் ஆச்சு! அப்போ இனிமேல் அவங்க மார்க்கட்? ஹீரோயின் ஓரளவுக்கு சூப்பர்ஸ்டார் என்பதால் மற்ற படங்களில் நடிச்சு சமாளிச்சுருவார்.

ஆனா ஹீரோ ராமதாஸ்தான் பாவம்! என்ன பண்ணுறதுனே தெரியலை! மனுஷன் காய்ஞ்சிட்டார்!

நம்ம சக்கண்ட் ஹீரோ "வை கோ" வின் உணர்ச்சிப்பூர்வமான இயற்கையான நடிப்பும் எடுபடலையா?

நம்ம மக்களைப்பற்றிதான் உனக்குத் தெரியுமே? உண்மையிலேயே அழுதாலும் சும்மா நடிக்கிறான் என்பார்கள். நடிப்புக்கு அழுதால் இவனுகளும் சேர்ந்து அழுவானுகள்!

அப்போ அடுத்த படம் என்ன நம்ம ஹீரோவுக்கு? யாருக்கு தெரியும்? ஆனா அவர் இப்போ விரும்பி பாடுற பாட்டு ஒண்ணு தெரியும்! என்ன அது?

சட்டி சுட்டதடா! "கை" விட்டதடா!
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா! :-)))

Saturday, May 16, 2009

பா ம க/ ராமதாசு தோல்வி! ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி!


பா ம க வின் தோல்வியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்! தமிழ் நாட்டு அரசியல் சாக்கடையில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக்கொண்டவர் ரஜினிகாந்த். இவர் ஜெ ஜெ யை எதிர்த்துக் குரல் கொடுத்தபோது ஜெ ஜெ தோல்வியைத் தழுவினார். அதேபோல் 2004 ல் இவரை தனிப்பட்ட முறையில் ராமதாஸ் தாக்கியதால், இவர் ரசிகர்களும், இவரும் மனதுடைந்து போனார்கள்.

இவர் ரசிகர்கள் ராமதாசுக்கு எதிராக ஓட்டுப்போட்டும் பிரச்சாரம் செய்தும் ராமதாசு பெரு வெற்றி வாகை சூடினார். அதனால் ரஜினி ரசிகர்கள் மனம் தளர்ந்து போனார்கள்.

ஆனால் வெற்றி தோல்வி எல்லாம் நிரந்தரம் இல்லை என்பதென்னவோ உண்மைதான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இந்தத்தேர்தலில் ராமதாசும் அவர் கட்சி பா ம க வும் படு தோல்வியடைந்துள்ளார்கள்.

இதற்கு காரணம், அவரே அவர் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டது போல் அவர் செய்த "இன்கண்ஸிஸ்டண்ட் பாலிடிக்ஸ்" . காங்கிரசுடன் கடைசி நிமிடம் வரை சேர்ந்து இருந்துவிட்டு காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்தது எடுபடவில்லை என்று சொல்லலாம்.

ஆனால் ராம்தாசின் இந்தத்தோல்வியை மிகவும் ரசித்துக்கொண்டாடுவது ரஜினி ரசிகர்கள்தானாம். இதில் ரஜினி பங்கு எதுவும் இல்லை என்றாலும், ராமதாசுடைய தோல்வியை கொண்டாடுகிறார்கள்.

எங்கே??

தங்கள் மனதுக்குள் கொண்டாடுகிறார்களாம் போனமுறை அடி வாங்கிய ரஜினி ரசிகர்கள்! :-)

Wednesday, May 13, 2009

காங்கிரஸ், ஜெ யுடன் கூட்டமைத்து ஆட்சி அமைத்தால் ?


இப்போதிருக்கும் நிலையை பார்த்தால், அ தி மு க கூட்டணிக்கு குறைந்தது 20 + எம் பி கள் கிடைக்கும் என்றே தோனுது. மேலும் காங்கிரஸும் படுதோல்வியடையாமல் ஓரளவுக்கு வெற்றிடையும் போல் இருக்கிறது.

காங்கிரஸ், அ தி மு க வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது! ராமதாஸ், வை கோ, ஜெயலலிதா, மற்றும் காங்கிரஸ் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தால், நம் ஈழத்தமிழ் மக்கள் ஆதரவாளர்கள் நிலைப்பாடு என்ன?

முதல்வர் கருணாநிதியை பழி வாங்கியாச்சு! சரி, அதற்கப்புறம் என்ன?

அப்படி வருகிற சூழலில்,

* ஜெயலலிதா, சோனியாவை கண்வின்ஸ் பண்ணி, இந்திய அமைதிப்படையை அனுப்பி தனி ஈழம் அமைத்துக்கொடுப்பாரா ?

* இல்லை, சோனியாவை புறக்கணித்து இதை ஜெ சாதிப்பாரா ?

* இல்லைனா ஜெ யே பிரதமராகி எல்லாவற்றையும் சாதிப்பாரா?

* இன்னொரு விஷயம்! அது என்ன பரிதாபம்னா சிதம்பரம் கட்டாயம் வெற்றி பெறுவார் போல இருக்கிறது!

உலகநாயகன் பெயரைக்காணோம்!! :( :(


ஹிந்து நாளிதழில் கமலஹாஷன் பெயர் வோட்டர்ஸ் லிஸ்ட் ல காணோம் என்று போட்டிருக்கிறது.


***Speaking to The Hindu on Wednesday, he said: “As an average citizen, as one of the hundred crore people in the country, I am truly concerned. I do not mean to ask ‘I am a star, how can you exclude my name?’ All I am asking is why should anyone’s name be left out?”***

இது யாரோடைய சதி?!

இல்லை கமலஹாஷனின் கவனக்குறைவா?!

கொஞ்ச நாள் முன்பே இதை இவர் கவனித்து இருக்க முடியாதா?

I feel very sorry for the "Universal Hero"! :( :( :(

Tuesday, May 12, 2009

திருநாவுக்கரசரால் ரித்தீஸ்க்கு வெற்றி வாய்ப்பு!

* ரித்தீஸ் (தி மு க) தொகுதியில் இவருடன் மோதும் * அ தி மு க (சத்திய மூர்த்தி), * திருநாவுக்கரசர் (பா ஜ க ), இருவருமே ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளவர்கள். திருநாவுக்கரசருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அவர் வெற்றி பெறாவிட்டாலும், கனிசமான வாக்குகள் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

திருநாவுக்கரசர் பெறும் ஓட்டுக்கள் யாருக்கு போக வேண்டியது என்று கவனித்தால், அவைகள் பெரும்பாலும் * சத்திய மூர்த்தி ( அ தி மு க) வுக்கு போக வேண்டியவை என்கிறார்கள்!

ரித்தீஸ் வெற்றி பெற்றால், அதற்கு பேருதவி செய்தது திருநாவுக்கரசர் தான்! இவர் சத்தியமூர்த்தியின் ஓட்டுக்களை பறித்துக்கொண்டு ரித்தீஸ்க்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கிறார் என்பதே உண்மை!

Monday, May 11, 2009

ஜெயலலிதாவின் இந்திய அமைதிப்படை புலிகளுக்கு எதிரி!

நம்ம தெய்வம் ஜெயலலிதா சொல்லி இருக்காங்க, "I would send the Indian Army to Sri Lanka to create a separate Eelam"

இதெல்லாம் எப்படி சாத்தியம்? உண்மையிலேயே என்ன ப்ளாட்? திராவிடன் உணர்ச்சிவசப்படுபவன். அதனால் அவன் சரியாக யோசிக்க முடிவதில்லை!

புலிகள் ஆதரவாளர்களுக்கு புரியவேண்டியது இதுதான்!

* அப்படி அனுப்பபடும் "இந்திய அமமதிப்படை" முதலில் புலிகளை ஒழிக்கும்!

* பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்!

* பிறகு, மெதுவாகத்தான் இலங்கை ராணுவத்தை தாக்கும்!

இப்படி தாக்கும்போது உலக நாடுகள், வல்லரசுகள் இலங்கையை இந்தியா தாக்குவதை பார்த்து இந்தியாவை கண்டிக்கும்! இந்தியப்படை வல்லரசுகளுக்கு பயந்து பின் வாங்கும்! பாதிவேலையை வெற்றியுடன் முடித்து இந்திய அமைதிப்படை வெளிவரும்!

ஜெயலலிதாவின் "இந்த ப்ளாட்" ஆல் புலிகளும், பிரபாகரனும் ஒழிக்கப்படுவார்கள்.

இதை தெளிவாக புரியாமல் போடுங்கம்மா ஓட்டு ரெட்டை இலையப்பார்த்து என்று கோசம் போடுகிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்! என்ன பரிதாபம்! :( :(

Saturday, May 9, 2009

தமிழனுக்கு ஏதுடா நாட்டுப்பற்று?!

தமிழனத் தலைவர் என்று அழைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் அன்றும், இன்றும், என்றும் வெறுக்கப்பட்ட தமிழர் திரு கருணாநிதியை இன்று "பார்ப்பன நண்பர்", "தமிழின துரோகி" என்று "மானமுள்ள தமிழ்ப்பற்றாளர்கள்" நம்புவதுடன் இவரை வெறுக்கிறார்கள். வழக்கம்போல இவரை பார்ப்பனர்கள் எப்போவும் போலவே வெறுக்கிறார்கள்.

சரி கருணாநிதி இன துரோகி என்றால் இவருக்கு நாட்டுப்பற்று ஏதாவது உண்டா? நாட்டுக்காக இனத்தை தூக்கி எறிந்த தேசபக்தரா இவர்? நாட்டுப்பற்று உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

யார் நம்புவது? தமிழரல்லாதவர்கள் சிரிப்பார்கள்! தமிழரல்லாதவருக்கு, கருணாநிதி ஒரு தமிழ் ஃபெனாடிக்! தமிழனத்தலைவன்!

ஆனால் தமிழனுக்கு? கருணாநிதி ஒரு இன துரோகி! மொழி துரோகி! என்ன ஒரு பரிதாபம்!

சரி திரு. கருணாநிதியை விட்டுவிடுவோம். இப்போ தமிழனால் தமிழனை காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழர்கள் என்ன செய்வார்கள்? இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது? அப்படி ஒரு நிலைமையில் என்ன செய்வார்கள் தமிழ் பற்றாளர்கள்?

தமிழ்பற்றுடன் இருக்கும் இன்னொரு திராவிடனை தமிழின தலைவனாக்கி வெற்றியடைவார்களா?

காமெடி பண்ணாதீங்க! அதெல்லாம் அவர்களால் என்றுமே முடியாது! ஏன் முடியாது? அதுமட்டும் முடியவே முடியாது!

ஏன்? ஏன்? ஏன்?

எனக்குத்தெரியாது! வை கோவை கேளுங்க! இல்லை சீமானை கேளுங்க! இல்லைனா ராமதாசை கேளுங்க!

அப்போ என்னதான் செய்வார்கள்?

திராவிடரான தமிழர்கள், பார்ப்பன தெய்வங்களை வணங்குவார்கள்! தெய்வம் அருள் புரியாமல் இருக்குமா?


இப்போ பார்ப்பன தெய்வமான ஜெயலலிதாவை ராமதாசு, வை கோ போன்ற திராவிட பூசாரிகள் வழிபட்டு, தெய்வம் அருளை பெற்று விட்டார்கள்!

ஆக, இன்று தமிழனுக்காக குரல் கொடுப்பது பார்ப்பன வகுப்பை சேர்ந்த தெய்வம் அன்னை ஜெயலலிதா!

ஆமாம், கைபர் போலன் என்று பிதற்றும் ஒரு சில அரைவேக்காடுகளும் தெய்வம் ஜெயலலிதாவின் கைபர் போலன் பூர்விகத்தை மறந்த மரமண்டைகள்தாம்.

பார்ப்பன தெய்வம் ஜெயலலிதாதான் தமிழன் கண்ணீரை துடைக்கப்போகிறது. எப்படி? இன்னொரு இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி! பயப்படாதீர்கள்! இந்தமுறை இது நல்ல இந்திய அமைதிப்படை! இது சிங்களர்களைத்தான் தாக்கும்! தமிழர்களை அல்ல! என்று தெய்வத்தை வழிபடும் தமிழர்கள் நம்புகிறார்கள்! பார்ப்பன தெய்வத்தை நம்பாமல் இருக்கலாமா?

மொத்தத்தில் தமிழனுக்கு இனப்பற்று கிடையாது! அதனால் அவர்கள் வழிபடும் பார்ப்பன தெய்வங்கள்தான் தமிழன் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று மறத்தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

சரி, தமிழ்நாட்டுத் தமிழனுக்கு நாட்டுப்பற்றாவது உண்டா?

நீங்க வேற! நாட்டுப்பற்றுனா கிலோ எத்தனை ரூபாய்னு கேட்பவன் தமிழ்நாட்டுத்தமிழன்! அவனுக்கு என்னைக்குமே நாட்டுப்பற்று கிடையாது! நாட்டுப்பற்றின்மையை பெருமையாக நினைப்பவன் தமிழன்.

அப்போ தமிழனுக்கு என்னதான் இருக்கு? என்னதான் தெரியும்?

* பெரிய வாய்! வாய்கிழிய நெறையவே உளறத்தெரியும்!

* வாய்விட்டு அழுது பார்ப்பனதெய்வங்களை வணங்கத்தெரியும்!

* தமிழனுக்கு எதிரா சதி செய்ய பார்ப்பன தெய்வ வழிபாடு தெரியும்!

வேறென்ன வேணும்?

Monday, May 4, 2009

"கலியுலக கர்ணன்" ஜே கே ரித்தீஷ்!

ரித்தீஷ்க்கு "பெரிய மனசு", இவர் ஒரு "கலியுலக கர்ணன்", "வள்ளல் பாரி பரம்பரை" என்று பலரும் சொல்கிறார்களாம் இவர் தொகுதியில். அவரை பார்ப்பது எளிது. பார்த்தால் நிச்சயம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் அவர் என்று இந்த தொகுதி மக்கள் நம்புறாங்க. ரித்தீஷ் ஜெயித்தால் நிச்சயம் தொகுதிக்கு செய்வார் என்றும் நம்பப்படுகிறது.

பலகோடி சொந்தக்காரர்களுக்குத்தான் இந்த முறை எம் பி டிக்கெட் கொடுக்கப்பட்டது! ஜே கே ரித்தீஷ் ஒரு கோடிஸ்வரர் என்பதால்தான் இவருக்கும் கொடுக்கப்பட்டது என்பதும் உண்மை. இன்றைய கோடீஸ்வரர் ரித்தீஷ்குமார் ஒரு 20 வருடங்கள் முன்னால் ஒரு ஏழை சிவக்குமார். "குமாரு" என்று அழைக்கப்பட்டார். எப்படியோ கிடைத்த ஒரு "லாட்டரி" தொகையை வைத்து "ரியல் எஸ்டேட்" பிஸினெஸ் செய்து குறைந்த நாட்களிலேயே முன்னேறியவர்தான் இன்று கோடிஸ்வரான இந்த ரித்தீஷ் குமார்.

இவர் பரந்த மனது, அள்ளிக்கொடுக்கும் கரம் எல்லாம் தெரிந்த இவர் தொகுதியில் உள்ள மக்கள் பேசிக்கொள்வது..

நம்ம குமார பார்த்தியா? காசு கொடுத்தானா?


அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவதற்கு காரணம் "குமாருடன்" அவ்வளவு "இண்ட்டிமேட்" ஆ பழகுறாங்க மக்கள்

எலக்ஷன் முடிந்ததும் செய்வது எல்லாம் அந்தக்காலம்! எலக்ஷனுக்கு முன்னாலேயே காசு வாங்கிக்கொள்வது இந்தக்கால வாக்காளர்கள்! யார் சொன்னா வாக்காளர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று?

பி ஜே பி இல் இருந்து நிற்கும் முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்த திருநாவுக்கரசர்க்கு "நல்ல மனிதர்" என்கிற பெயர் இருக்கு என்பது உண்மைதான். ஆனால் இந்தக்காலத்தில் பணம்தான் எல்லாம் என்று நம்பப்படுகிறது. அ தி மு க வேட்பாளர் சத்தியமூர்த்தியும் தேவர்தான். இருந்தாலும் "ரித்தீஷ்" அளவுக்கு கொடுக்கும் கரமல்ல இவர் கரம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவரிடம் பணம் வாங்கிவிட்டு இன்னொருவருக்கு ஓட்டுப்போடும் பழக்கம் என்னவோ நம்ம மக்களிடம் இல்லை போல் தோனுது. "கலியுலக கர்ணன்" ரித்தீஷ் வெற்றி பெறுவாரா? பெறுவார் என்று நம்பப்படுகிறது :-))

Monday, April 27, 2009

திராவிட இனத்துரோகிகள் வைகோவும், ராமதாசும்தான்!

இந்தியாவில் இதுவரை பிரதமராக இருந்தவர்களில் 99% ஆரியர்கள்தான். திராவிடனுக்கு ராமாயணத்திலும் சரி, டெல்லியிலும் சரி மரியாதை இல்லை. அது ஏன்?? திராவிடனுக்கு இனப்பற்று கிடையாது. திராவிடனுக்கு எதிரி இன்னொரு திராவிடன்தான். ஒரு திராவிடனை ஒழிக்க இன்னொரு திராவிடன் வெள்ளைக்காரனுடன் சேரவும், பார்ப்பனர்களுடன் சேரவும் தயங்க மாட்டான்!

சோ ராமசாமியையும் ஹிந்து ராமையும் திட்டுவதெல்லாம் அர்த்தமற்றது. இன்று ஜெயலலிதாவுக்கு ஆயில் அடிப்பது திராவிட துரோகிகள் திரு. வைகோவும், திரு. ராமதாசும்தான்! தமிழ்நாட்டிலே எத்தனை ஆயிரம் திராவிட தலைவர்கள் இருக்கார்கள்?? அது ஏன் இந்த பாமர திராவிடர் ராமதாசுக்கும், சுயமரியாதையை காற்றில் பறக்கவிட்ட வைக்கோவிற்கும், 10 கோடி திராவிடன் வாழும் தமிழகத்தில் ஒரு "பாப்பாத்தி" க்குத்தான் பிரதமராக தகுதி இருப்பதுபோல தோனுது??

*** From Hindu!

To a question on MDMK leader Vaiko’s suggestion of projecting Ms. Jayalailthaa for the post of Prime Minister in the event of Third Front forming the government, Dr. Ramadoss endorsed it and said his party would certainly support the candidature of Ms. Jayalalithaa who, he said, had all the qualifications to hold the post. ***


ராமதாஸ், வை கோ போன்ற திராவிட கோடரிக்காம்புகள் பார்ப்பனர்களுக்கு மட்டும் பெரிய தலைவராக தகுதி உள்ளதாக உறுதியாக நம்புகிறார்கள்! இந்த மனப்போக்கு திராவிடர்களிடம் இருக்கும்போது, "பார்ப்பான் பார்ப்பான்" என்று சோ ராமசாமியையும், ஹிந்து ராமையும் திட்டுவதெல்லாம் அர்த்தமற்றது!

திராவிடனுக்கு எதிரி என்றுமே திராவிடன்தான். பார்ப்பனர்கள் அல்ல! இனவெறி எனபது ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன?

இன உணர்வு கொள்! இன உணர்வு கொள்! என்று சும்மா ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும் காட்டினால் போதாது!

Tuesday, April 21, 2009

உளறலா? இல்லை ராஜதந்திரமா இது, கலைஞரே?!

முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிரபாகரனை மனிதாபிமான அடிப்படையில் "தன் நண்பர்" என்பதுபோல் சொல்லியுள்ளார். இது போல் அவர் சொன்னது, பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்போது அவர் சொன்னதை சரி செய்து திரும்ப வேறுமாதிரி சொல்கிறார் என்கிறார்கள்.

சிலர் நினைக்கிறார்கள் இது (இந்த ஸ்டேட்மெண்ட்), திரு. கருணாநிதியின் உளறல் என்று. அதாவது பிரபாகரனை அவர் நண்பர் என்று தேவை இல்லாமல் சொல்லியுள்ளார் என்று. இது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணலாம்.

ஆனால்...

என்ன ஆனால்?

கவனித்துப்பார்த்தால் இது ஒரு கலைஞரின் ராஜதந்திரமாகக்கூட இருக்கலாம்.

* காங்கிரஸ் இதை எதிர்த்து அரசியல் செய்யும் நிலையில் இன்று இல்லை! அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

* இது நிச்சயம் ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர் அபிமானிகளையும் மறைமுகமாக திருப்திப்படுத்தித்தான் இருக்கும்- உளறலாக இருந்தால்கூட.

* ஈழத்தமிழர் பிரச்சினனயை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும், வை கோ வோ, ராமதாஸோ, ஜெயலலிதாவோ இதை வைத்து, இதை க்ரிடிசைஸ் செய்து அரசியல் செய்தால், விபரீதமாக முடிய வாய்ப்புள்ளது.

கவனமா இருங்கப்பா! ஒண்ணு கெடக்க ஒண்ணாகிடறப்போது! :-)))

Friday, April 17, 2009

ஜெயலலிதாவின் ஆபாச அரசியல் நடனம்!


ராஜிவ் காந்தி மரணத்தில் “சோல் பெனிஃபிஸியரி” (sole beneficiary) ஜெயலலிதாதான். ஈழப்பிரச்சினையை அரசியலாக்கி ஈழத்தமிழர்வாழ்வைப்பற்றி கவலையே படாமல் இரக்கமில்லாமல் அரசியல் செய்து முதல்வரானது இதே ஜெயலலிதா.

· இது எப்படி ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழ அபிமானிகளுக்கும் மறக்கும்?

· இன்று ஜெயலலிதா ஈழத்தமிழருக்காக போ ராடுவதும் அரசியல்தான்.

சரி ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி! யாரைவேணா விற்று பதவியைப்பிடிக்க தயங்க மாட்டார் என்று மரமண்டை தமிழர்களுக்கு புரியாதா?

****Jayalalitha, however, made her stand clear that her party would never support the armed struggle of the LTTE, because of its murky track record involving the killing of Rajiv Gandhi on Tamil Nadu soil.****

கருணாநிதி சொத்து சேர்ப்பது, பண அரசியல் செய்வது, சட்டம் ஒழுங்கை சரியாக பாதுகாக்காதது, ஈழப்பிரச்சினையில் காங்கிரஸை எதிர்த்து போராடாதது எல்லாம் உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் ஈழத்தமிழர் நலனைப்பற்றி ஜெயலலிதாவும், ஈழத்தமிழர்கள் படுகொலை நடக்கும்போதும் நேற்றுவரை காங்கிரஸ் ஆட்சியில் பதவி அனுபவித்த அன்புமணி ராமதாஸும் ஈழத்தமிழர்களுக்காக போராடப்போகிறார்கள் என்று நம்பும் தமிழர்கள் இருந்தால், தமிழர்கள்தான் முட்டாள்களில் #1 என்பேன் நான்.

ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பயன்படுத்தும் ஜெயலலிதாவின் அரசியல் யுக்தி, ஜெயலலிதாவின் ஒரு அசிங்கமான ஆபாச அரசியல் நடனம்!

Wednesday, April 15, 2009

எஸ் எஸ் சந்திரனுக்கு இதய வலி-போட்டியாளர் மாற்றம்!



மத்திய சென்னையில் திரு. தயாநிதிமாறனுக்கு எதிராக எஸ் எஸ் சந்திரன் அ இ அ தி மு கழகத்தின் வேட்பாளராக போட்டி போட இருந்தார்.

அவருக்கு இதயவலி வந்ததால், தேர்தல் டென்ஷன் அவருக்கு உடல்நலகுறைவை உண்டு பண்ணும், மற்றும் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று வேறு வேட்பாளரை நிறுத்தவுள்ளார்கள்.

இந்த மாற்றத்தின்படி தயாநிதிமாறனை எதிர்த்து போட்டி இடப்போவது, எஸ் எம் கே. முகம்மது அலி ஜென்னா என்பவர் ஆவார்.

Monday, April 13, 2009

தமிழின துரோகிகள் பலவகை!


நல்லவேளை ப சிதம்பரம் ஒரு பார்ப்பனரல்ல! நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.

தமிழன் தமிழன் என்று அடிச்சுக்கிறவன், ஒரு சீக்கியர் தமிழனை செருப்பை தூக்கி தாக்குவதை ரசிப்பானா?

நமக்குள் 1000 பிரச்சினை இருக்கலாம், என்ன இருந்தாலும் சிதம்பரம் ஒரு தமிழ்நாட்டில் பிறந்த தமிழன்.

அவரை செருப்பால் அடிக்க முயற்சித்ததை பார்த்து ரசிப்பவனை தமிழின துரோகி என்கலாமா?

கூடாதா? ஏன் கூடாது?

தமிழ், தமிழினப்பற்று, தமிழ் துரோகிகள் போன்றவைகள் எப்போதுமே விவாதத்திற்குரிய ஒரு சப்ஜெக்ட்தான்.

என்னைக்கேட்டால் தமிழன் ப. சிதம்பரத்தை செருப்பால் அடிப்பதை பார்த்து ரசிக்கும் ஒரு சில "தமிழ் பற்றாளர்களும்" தமிழின துரோகிகள் தான்!

வைகோவை எதிர்த்து காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா?!


விருதுநகரில், வை கோபால்சாமி போட்டியிடுகிறார். கம்மா நாய்டு அல்லது நாயக்கர் வகுப்பை சேர்ந்தவர் இவர். இந்த தொகுதியில் நாயக்கர்கள் வாக்கு கனிசமாக உள்ளது. அது போக, மறவர்கள், நாடார்கள், தலித் ஓட்டுக்கள் கனிசமாக உள்ள எம் பி தொகுதி இது.

இவரை எதிர்த்து தி மு க போட்டிக்கு (தற்போது அது காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதி) ஒரு ஸ்ட்ராங்க் கேண்டிடேட்டை நிறுத்தலாம் என்கிற வதந்தி நிலவுகிறது. ஆனால் அது நடக்கப்போவதில்லை.

வை கோபால்சாமி, அனேகமாக காங்கிரஸ் வேட்பாளரைத்தான் எதிர்ப்பார். இதுவரை காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று நம்புகிறேன். அப்படி வரும்போது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையை பெரிது படுத்தப்பார்ப்பார். அது தவிர வேறு எப்படி அம்மாவுடன் சேர்ந்து ஒத்து ஊதப்போகிறார் என்பது தெரியவில்லை.

விருதுநகர் தொகுதி இப்போதைக்கு, வை கோ வெற்றி பெற வாய்ப்பு உள்ள ஒரு தொகுதி போல்தான் உள்ளது. ஆனால் காங்கிரஸ் மோகம் என்பது லோக் சபா எலெக்ஷனில் ரொம்ப சாதாரணம். காங்கிரஸ் ஒரு ஸ்ட்ராங் கேண்டிடேட் நிறுத்தினால், வை கோ கண்னில் விரலை விட்டு ஆட்டலாம்.

இதில் பரிதாபம் என்னவென்றால் ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் எல்லோரும் பயன்படுத்துகிற ஒரு "அரசியல் ஆயுதம்".

என்னைப்பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களின் கண்ணீரை அரசியலுக்காக பயன்படுத்துகிற எவனுமே ஒரு கேவலமான தமிழன்.

தமிழ் ஈழம் பொறுத்தவரையில் இதுவரை தமிநாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியாலும் ஒண்ணும் கிழிக்க முடியலை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் மனசாட்சியுள்ள தமிழ் அரசியல்வாதிகள் இதைப்பற்றி பேசாமலாவது விடலாம்! ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கப்பாடுவதாக சொல்லி இதில் அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்க வேண்டிய ஒன்று.

Saturday, April 4, 2009

வை கோ விற்கு நாலுமே தேறாத தொகுதிகள்!


என்றைக்கு வை கோ அவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தாரோ அன்னைக்கே பிடிச்சது சனியன் இந்த “பெரிய மனிதருக்கு”! இப்போ அவர் மதிமுக இருக்கும் நிலையில் "மறுமலர்ச்சி" அடைமொழியை பெறுவதைவிட "மடிந்தமலர்ச்சி" அடைமொழிதான் பொருந்தும். ஜெயலலிதாவை வளர்த்துவிட்டது யாரு? நெடுஞ்சிழியன், காளிமுத்து, ஆர் எம் வீரப்பன் போன்றவர்கள்! எல்லாரும் மறத்தமிழர்கள்! அவர்களுக்கும் வை கோ வுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எனக்கென்னவோ ஒண்ணும் பெருசா தெரியலை!

ஜெயலலிதா எப்போதுமே ஈழத்தமிழர்களுக்கு எதிரிதான் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இந்த பிரச்சினை பொறுத்தவரையில் வை கோ வும் ஜெயலலிதாவும் தண்ணீரும் எண்ணையும் போல்தான்! ஒன்றாக கலப்பது கடினம்-அவர்கள் ஈழத்தமிழர், தனி ஈழம் கொள்கையில்!

இப்போ விஜய்காந்துவும் வை கோபால்சாமியின் ஜாதியை சேர்ந்தவர் (இருவரும் நாயக்கர்கள்?)என்பதால் ஓரளவுக்கு வை கோ வின் ஜாதி ஓட்டு பிரிந்துவிட்டது. அதனால் இன்றைய நிலைமைக்கு வை கோ விற்கு ஜாதி ஓட்டு பலமும் இல்லை! கொள்கை பலம் என்றும் பெருசா ஒண்ணுமே இல்லை! வை கோ கடித்தாலும் விசம் ஏறாத ஒரு “தண்ணிப் பாம்பு” தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் நிலைமைக்கு! என்பதை புரிந்து கொண்டார் அன்னையார்!

வன்னியர்கள் அளவுக்கு இவர் ஜாதியான நாயக்கர்கள் ஓட்டுக்கள், கனிசமாக ஒரு சில ஏரியாவில் மட்டும் கிடையாது. அவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் இருக்காங்க. அதனால் இவருக்கு ராமதாஸைவிட ஜாதி பலம் மிக மிக கொஞ்சம்!

இன்றைய அரசியலில் வை கோ விடம் எதுவும் பெரிய கொள்கையோ, பெரிய மாஸோ, பெரிய தனித்துவமோ, பணமோ, எதுவுமே இல்லை என்று தெரிந்தவுடன், "அன்னையார்" வை கோ விடம் பேசுகிற பேரமிதுதான். "உங்களுக்கு எதுவும் பெரிதாக செய்ய முடியாது! கொடுக்கிறதை வாங்கி கொண்டு போங்க!" என்று சொல்லாமல் சொல்லுகிறார் அன்னையார். இதுதான் இன்றைய "மடிந்தமலர்ச்சி" தி மு க தலைவர் பரிதாப நிலை.

* அ தி மு க அணியில் இருந்து வெளியில் வந்தால் அசிங்கம்! ரொம்ப காலம் கடந்தும்விட்டது. எங்கே போறது?

* சரி, தனித்து போட்டியில் நின்றால், ஒரு பயலும் ஓட்டுப்போட மாட்டான்.

* சரி, ஐந்து வேணாம், அன்னையார் பெரியமனதுடன் கொடுக்கும் நாலையாவது வாங்கிக்குவோம் என்றால், அம்மா கொடுக்கிற நாலும், “தயாநிதி மாறன் தொகுதி”, “மு க அழகிரி தொகுதி” போன்றவைகள்! இதை வாங்குவதற்கு சும்மாவே போயிடலாம் “பெரிய மனது” தன்மையை காட்டி!

என்ன பண்ணுவார் பாவம் இந்த கோபால்சாமி? :(

ஜெ கே ரித்தேஷ் (முகவை குமார்) எம் பி சீட்க்கு முயற்சி!!


* நாயகன், * காணல் நீர் போன்ற படங்களில் நடித்தவர் முகவை குமார். இவருக்கும் தமிழ் வலைபூக்களில் ரசிகர், ரசிகைகள் அதிகம். இவர் இப்போது தி. மு.க சார்பில் இராமநாதபுரம் (முகவை) தொகுதியில் எம் பி சீட்க்கு முயற்சி செய்து கொண்டுள்ளதாக வதந்திகள் அடிபடுகிறது. இவர் முக்குலத்தோரில் தேவர் வகுப்பை சார்ந்தவர்.

தற்போது இந்த தொகுதியில் எம் பி ஆக இருந்து வருவது திருமதி. பவானி ராஜேந்திரன். இவர் முக்குலதோர் வகுப்பில் அகம்படியர் (அகமுடையார்) பிரிவை சேர்ந்தவர். இந்த தொகுதியில் தேவர் வாக்குகள் அதிகம். அதன் பிறகு அகம்படியர் வாக்குக்கள். முஸ்லிம்கள் மற்றும் கோனார் , மற்றும் தலித் ஓட்டுக்களும் கனிசமாக உள்ள தொகுதி இது.

திருமதி பவானி ராஜேந்திரனுக்கு முன்பு அதே குடும்பத்தில் அமரர் திரு. எம் எஸ் கே சத்தியேந்திரன் பலமுறை எம் பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். இந்த தொகுதியில் எம் எஸ் கே குடும்பம் காலங்காலமாக தி மு க வில் இருந்து வருகிறார்கள். அதனால் முகவை குமாருக்கு இந்த சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. பார்க்கலாம்!