தனக்கு எவ்வளவு மாதச்சம்பளம்னு யோசித்துப் பார்த்தான் பிரகாஷ்! சமீபத்தில் மிகப்பெரிய போனஸ் ஒண்ணு கொடுத்தாங்க அவன் சாதனைக்கு. ஆனால் அவன் செய்ற வேலைய நெனச்சா அவனுக்கே குற்றவுணர்வா இருந்துச்சு. படிச்சு வந்து சமூகத்துக்கு அவன் உதவுறானா? இல்லை படிச்சு வந்து சமூகத்தை பாழாக்கிறானா? அவனுக்கு பதில் தெரியும்! நான் செய்யலைனா இன்னொருத்தன் செய்யப்போறான்? னு அவனுக்கே அவன் சொல்லும் சமாதானம் எல்லாம் இப்போ அவனிடமே எடுபடவில்லை!
சாக்கடை அள்ளுறதெல்லாம் புனிதமான வேலை! என்ன இருந்தாலும் அவர்கள் அசுத்தத்தை சுத்தம் செய்றாங்க. ஆனா அந்தமாரி நல்லவேலையைச் செய்ய நம்மாளுக எவனும் முன்வரமாட்டான்! நம்ம ஊர்ல உயர்சாதி இந்தியனுக்கு என்னைக்குமே மூளை கெடையாது! இல்லாத கடவுளுக்கு ஓடி ஓடி சேவை
செய்வான்! இதுபோல் நல்லவேலை செய்றவங்களை கீழ்சாதினு கேவலப்படுத்துவான்!
ஆமா அசுத்தத்தை அகற்றும் அவங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
சாக்கடை அள்ளுபவன் சம்பளத்தை அதிகமாக்கினால் என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன் ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்று ஆக்கினால் என்ன?! எவனுமே செய்யத் துணியாத ஒரு கஷ்டமான வேலைக்கு அதிக சம்பளம் கொடுத்தால் என்ன? சமுதாயத்துக்கு உதவிக்கொண்டே அவனும் அவங்க பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கலாம். அப்போத்தானே அவங்களும் நாளைக்கு ஒரு நல்ல படிப்புப் படிச்சு ஒரு உயர்தர வாழ்க்கை வாழ வாய்ப்வாவது அமையும்! இப்படியெல்லாம் நம்மாளு யோசிப்பானா?. இவனுக அசுத்தத்தை சுத்தம் செய்யனு ஒரு சாதியை உருவாக்கி அவர்களை சிறுமைப்படுத்தி பொழைப்பை ஓட்டும் கீழ்த்தரமானவனுகதான் இந்த உயர்சாதி இந்தியர்கள்.
பிரகாஷ், தனக்குள்ளே பேசிக்கொண்டான்..நான் செய்யும் வேலையில் காமப் பசியைத்தான் தூண்டுறேன். அறியாச் சிறுவர்களை கெடுக்கிறேன். எவ்வளவு ஒரு கேவலமான தொழில் இது! நிச்சயமாக ஒரு வேசி செய்றதைவிட கேவலமான தொழில்! ஆனால் இன்னும் வயித்துப்பொழைப்புக்காக அதே வேலையில்தான் இருக்கான், பிரகாஷ். யாருக்குத் தெரியப்போது பிரகாஷ், என்ன தொழில் செய்றான்னு? அதையெல்லாம் வெளியே சொல்ல அவன் என்ன முட்டாளா?
அவன் படிச்சதென்னவோ சாஃப்ட் வேர் இஞ்சினியரிங்தான். இருந்தாலும் அவன் இன்று தான் என்ன தொழில் செய்கிறேன் என்று வெளிப்படையாக யாரிடமும் தைரியமாகச் சொல்லமுடியாத நிலை. ஆமா இன்னைக்கு லட்ச லட்சமாக சம்பாரிக்கும் ஒரு சாஃப்ட்-போர்ன் -இஞ்சினியர்! அப்படினா? போர்ன்சைட் நடத்துறவங்களுக்கு வெப்-டிசைனர் மற்றும் தள அட்மினிஸ்ட்ரேட்டர்!
இந்த "புனிதமான வேலை" செய்துதான் பிரகாஷ் சமூகத்துக்கு உதவிக்கொண்டே லட்சலட்சமா சம்பாரிக்கிறான்! ஆனால் எத்தனை "சோப்" போட்டுக்குளிச்சாலும், எத்தனை "டீ-யோடரைசர்" பயன்படுத்தினாலும் அவன் நாற்றம் என்றுமே அவனைவிட்டுப் போனதில்லை!
Thursday, August 9, 2012
Monday, August 6, 2012
மதுரையில் ஒரு சிறு வீட்டின் விலை மில்லியன் டாலரா?!
சுமாரான பணக்காரங்ககூட இன்னைக்கு சென்னையிலே தி நகர்ல எல்லாம் வீடு வாங்குறது குதிரைக் கொம்புனு சொல்லுவாங்க. தி நகர், அண்ணா நகர்ல சொந்த வீடு வச்சுருக்கவா எல்லாம் மில்லியன் டாலர் வீடு வச்சிருக்கவா!! ஆமங்க நம்ம ஊர்ப் பணம் 5 கோடி என்பது 1 மில்லியன் டாலர். நம்மூர்ல இம்பூட்டு மில்லியனர்கள் இருக்காங்கனு எனக்கு இந்தமாரி கணக்குபோட்டு பார்த்தப்போத்தான் தெரியுது. சரி, சென்னை, மும்பை, டெல்லி எல்லாம் அப்படினு நெனச்சா, சமீபத்தில் நான் பார்த்த ஒரு வீடு விற்பனை விளம்பரம் (மதுரையில்):
இந்த வீட்டின் விலை என்னனு யு எஸ் டாலர்ல கணக்கு பண்ணினால் $ 700,000 . அதாவது, 0.7 மில்லியன் இந்த வீட்டின் மதிப்பு. இது ஹார்ட் ஆஃப் த சிட்டில இருக்கு என்பது எனக்கு விளங்குது. இருந்தாலும், என்னப்பா மதுரையிலே ஒரு சின்ன வீட்டுக்கு இம்பூட்டு விலைனு ஆச்சர்யமாத்தான் இருக்கு!!!
வீடு விற்பவர்களுக்கு அவர்கள் விற்கும் வீடு அவர்களுடைய பரம்பரை சொத்தாக இருக்கலாம். ஆனால் ஒருவரிடம் மில்லியன் டாலர்கள் இருந்தாலும் இவ்ளோ பெரிய ஒரு தொகையை ஒரு வீட்டில் ஏன் இண்வெஸ்ட் பண்ணனும்னு எனக்கு விளங்கவில்லை!
இது போல் ஒரு சில விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் விளங்குது, நம்மூர்ல தடுக்கிவிழுந்தா எத்தனையோ மில்லியனர்கள் இருக்காங்கனு. அவங்களுக்கே அவங்க ஒரு மில்லியனர்னு தெரியுமா என்னனு தெரியலை :)
Property for sale
Property with clean title available in Madurai. An old house in the heart of the city very near Meenakshi Amman temple, ideal for establishing a lucrative facility for a variety of shopping, hostel, business, storage purposes. Area is 2350 sq. ft. Rate proposed- Rs.15,000/sq.ft.
Contact: pavalamani_pragasam@yahoo.com
இந்த வீட்டின் விலை என்னனு யு எஸ் டாலர்ல கணக்கு பண்ணினால் $ 700,000 . அதாவது, 0.7 மில்லியன் இந்த வீட்டின் மதிப்பு. இது ஹார்ட் ஆஃப் த சிட்டில இருக்கு என்பது எனக்கு விளங்குது. இருந்தாலும், என்னப்பா மதுரையிலே ஒரு சின்ன வீட்டுக்கு இம்பூட்டு விலைனு ஆச்சர்யமாத்தான் இருக்கு!!!
வீடு விற்பவர்களுக்கு அவர்கள் விற்கும் வீடு அவர்களுடைய பரம்பரை சொத்தாக இருக்கலாம். ஆனால் ஒருவரிடம் மில்லியன் டாலர்கள் இருந்தாலும் இவ்ளோ பெரிய ஒரு தொகையை ஒரு வீட்டில் ஏன் இண்வெஸ்ட் பண்ணனும்னு எனக்கு விளங்கவில்லை!
இது போல் ஒரு சில விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் விளங்குது, நம்மூர்ல தடுக்கிவிழுந்தா எத்தனையோ மில்லியனர்கள் இருக்காங்கனு. அவங்களுக்கே அவங்க ஒரு மில்லியனர்னு தெரியுமா என்னனு தெரியலை :)
Thursday, August 2, 2012
மரணம் வந்தால் தெரிந்துவிடும்!
மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!
என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும் நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.
மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!
ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!
இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.
நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!
* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.
* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.
* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.
* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.
மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!
------------
இது ஒரு தேவையான மீள்பதிவு!
அன்று (Sunday 31 August 2008), இதே கருத்துக்கு பின்னூட்டங்கள் எப்படி இருந்தன என்பதை இங்கே சொடுக்கி படிக்கவும். இதில் பின்னூட்டங்கள் இட்டவர்களில் ஒரு சிலர் பதிவுலகில் "இறந்துட்டாங்க"னு கூட சொல்லலாம்! :(

Subscribe to:
Comments (Atom)