Monday, October 8, 2012

அவரு..அவரு..ஒரு..

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போறாங்க! சீக்கிரம் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, அலங்காரம் பண்ணிக்கோம்மா லதா!" என்றாள் அம்மா, வாசுகி!

"இதோ ஒரு நிமிஷம் அம்மா!" என்று தன் அறையில் ஜி மெயிலை மட்டும் செக் பண்ணிவிட்டு, எல்லா விண்டோஸையும் க்ளோஸ் பண்ணிவிட்டு எழும்போது அவள் மாணிட்டரில் இருந்த ஃபேவரைட் நடிகரின் போஸ் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஸ்டைலாக வந்து நின்றது. லதா, எழுந்து புடவை மாற்றி, மேக்-அப் பண்ணுவதற்காக ஓடினாள்.

லதாவுக்கு காதல் கல்யாணத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதுவும் இந்த கம்ப்யூட்டர் ஆண்-லைன் காதல் தலைவிரித்தாடும் இந்தக்காலத்தில்! நேற்றைய காதல் ஜோடிகளெல்லாம் இன்று பிரிந்து தியானமும் மெடிட்டேஷனும் செய்துகொண்டிருக்கிற இந்த நவீன உலகத்தில், காதல் எல்லாம் சும்மா கொஞ்ச நாள் உடல்ப்பசிக்குத்தான் என்று நம்பினாள், லதா. ஆனால் கணவன் மனைவி உறவு பலப்பட ஓரளவு ஒரே டேஸ்ட் இருக்கனும். ஒருவர் ரசிப்பதை இன்னொருவர் நிச்சயம் வெறுக்கமட்டும் கூடாது என்று முழுமையாக நம்பினாள் அவள்.

லதாவை பெண்பார்க்கவந்த மாப்பிள்ளை குடும்பம் உயர்தரமானதாகவும், மாப்பிள்ளை மோகன் நல்ல உயரமாக, மாநிறமாக, ஆள் ரொம்ப அழகா இருந்தார், மேலும் நல்ல வேலையும் பார்த்துக்கொண்டிருந்தார். புன்னகையுடன் நல்ல மேன்னர்ஸுடன் நாகரீகமாகப் பேசினார். அப்பா, அம்மா, அண்ணாவுக்கும், அவள் தங்கை ஹேமாவுக்கும், ஏன் அவளுக்கும் அவரை ரொம்பவே பிடித்துவிட்டது. அன்று இரவு அப்பாவிடம் ஒருமாதிரி மாப்பிள்ளையைத் தனக்குப் பிடித்ததாக சொல்லிவிட்டாள், லதா.

அதன்பிறகு ஒரு நாள் குடும்பத்துடன் போய் அவர் வீட்டில் ஸ்னாக்ஸ், காஃபி சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். இன்னொரு நாள் அவள் அம்மா அப்பாவின் ஏற்பாட்டின்படி, அவளும், மோகனும், அவள் அப்பா சீனிவாசன், மற்றும் அம்மாவுடன் சேர்ந்து கோயிலுக்கு போனார்கள். கோயிலில் இவர்களை தனியாக பேசிக்கொள்ள வசதி செய்துகொடுத்தார்கள், அவளுடைய அன்பான அப்பா, அம்மா. லதா ஒரு பச்சைகலரில் பட்டுச்சேலை கட்டிப்போயிருந்தாள். மாப்பிள்ளை மோகனுக்கு அந்த சேலையில் அவள் இருக்கும் அழகு ரொம்பவே பிடித்ததாக சொன்னார். அவர் அணிந்துவந்த பேண்ட்ஸ், டி-ஷிர்ட்டும் கலர் செலக்ஷன் அவளுக்கும் பிடித்தது. போகப்போக அவரை ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது அவளுக்கு. இருந்தாலும் ஏதோ ஒண்ணு அவரிடம் கேக்கனும்னு அவள் மனதில் உறுத்தல் இருந்தது. அது ரொம்ப சில்லியான விஷயம் என்பதால அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

ஒரு மாதிரி நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் 3 மாதத்தில் திருமணம் என்று கல்யாணத்தேதியும் முடிவானது. நிச்சயம் செய்யப்பட்டு முடிந்து சில நாட்களில் அவளுக்கு கல்யாணத்திற்கு வாங்கிய நகை, பட்டுப்புடவை காட்டுவதற்காக லதாவையும் தன்னுடன் அழைத்து சென்றார் தந்தை சீனிவாசன். கொஞ்ச நேரம் பேசியபிறகு அவளை மோகன் தன்னுடைய அறைக்கு தனியாக அழைத்துச் சென்றார். லதா, மோகனின் அறையில் ஒரு 5 நிமிடம் இருந்துவிட்டு அங்கே இருந்து அவருடன் வெளியே வந்தாள்.

வந்தவள் முகம் வேற மாதிரி ஒரு கலவரத்துடன் இருந்ததை கவனித்தார், தந்தை. மகளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அவர், "சரி, ஒண்ணும் இருக்காது, நாளைக்கு சரியாகிவிடும்" என்று ரொம்ப கேள்வி கேட்காமல் விட்டுவிட்டார். ஆனால் அடுத்த நாளும் லதா முகத்தில் அதே போல் ஒரு கலவர உணர்ச்சி இருந்ததை கவனித்தார். கடைசியாக, அவள் அறைக்கு சென்று உட்கார்ந்து மெதுவாக லதாவிடம் கேட்டேவிட்டார்,

“என்னம்மா லதா, ஒரு மாதிரியா இருக்க?”

“இல்லப்பா ஒண்ணுமில்லை”

“சும்மா சொல்லும்மா” என்றார்.

“இனிமேல் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாதாப்பா?” என்றாள் பரிதாபத்துடன்.

“என்னம்மா நடந்தது?”

“ஒண்ணுமில்லைப்பா அவரோட குடும்ப வாழ்க்கை ஒத்துப்போகாதுனு தோனுதுப்பா எனக்கு”

“என்னம்மா நடந்தது, அவர் ரூமிலே? எதுவும் தப்பா நடந்துகொண்டாரா உன்னிடம்?”

“இல்லைப்பா. அவர் எதுவும் தப்பா எல்லாம் நடக்கவில்லை. எனக்குத்தான் அவர் டேஸ்ட் பிடிக்கலை அப்பா”

“விபரமா சொல்லும்மா. எதுனாலும் பரவாயில்லை” என்றார் அன்புடன்.

லதா, அழ ஆரம்பித்துவிட்டாள்.

“சும்மா சொல்லும்மா. கல்யாணத்தை நிறுத்திடுவோம். என்ன காரணமா இருந்தாலும் பரவாயில்லை” என்றார் அப்பா கனிவுடன்.

“அவர்.. அவரு, ஒரு.. என்று ஒருவழியாக விசயத்தைச் சொல்லி முடித்தாள் லதா. தன் மகள் மனதை நன்கு அறிந்தவர் சீனிவாசன். அவளுக்கு பிடிக்கிற சின்ன சின்ன விசயங்களையும், அவள் வெறுக்கிற சில்லியான விசயங்களையும் கவனித்து அவள் எண்ணங்களை மதிப்பவர் அவர். அவருக்கு தெளிவாக மகளின் அச்சம் புரிந்தது. "அதனால் என்னம்மா? இதெல்லாம் பெரியவிசயம் இல்லை" என்று சொல்லி அவளை ஃபோர்ஸ் பண்ண விரும்பவில்லை அவர். அத்துடன் கல்யாணத்தை ஒரு வழியாக நல்லமுறையில் நிறுத்திவிட்டார்கள். நேரிடையாக மாப்பிள்ளையிடமே தன் மகள் பலஹீனத்தை சொல்லிக் கேட்டதும், மோகனும் சரி என்று சொல்ல, கல்யாணம் சுமூகமாக நிறுத்தப்பட்டது.

லதா, அவள் தந்தையிடம் சொன்னது இதுதான், "ஏன்னா ஏன்னா அவர் ஒரு கமல் ரசிகர்ப்பா"

-முற்றும்

இது ஒரு மீள் பதிவு!

குறிப்பு: கதை முன்பு பிரசுரித்தபோது, பின்னூட்டத்தில் பதிவர் மணிகண்டன் கொடுத்த ஆலோசனைப்படி இதில் முடிவை "ட்ரிம்" செய்து இருக்கேன்! அவருக்கு என் நன்றிகள்! :-)

படம்: ரஜினி ரசிகைகள் (கூகில் மற்றும் பிஹைண்வுட்ஸ்)

Friday, October 5, 2012

பரதத்தையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் இக்பால்!!

தமிழர்கள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தன் பெண் குழந்தைகளுக்கு சாதி மதம் என்கிற வேறுபாடெல்லாம்  பார்க்காமல் எல்லா சாதியினரும், பல மதத்தவரும்  (இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கூட எனக்குத்தெரிய) இந்திய  நடனம் சொல்லிக்கொடுப்பது வழக்கம். பரதநாட்டியம் என்கிற நடனம் நாடுவிட்டு நாடு வந்து வாழும் தமிழர்கள் கலாச்சாரமாகிவிட்டது. தமிழ் குழந்தைகளில் இருந்து இளம்பெண்கள் வரை   பரத நாட்டியம் ஆடுவதை சாதாரணமாக வட அமெரிக்கத் தமிழர்கள் விழாக்களில் பார்க்கலாம்.

பரத நாட்டியம் எப்படி ஆரம்பிக்கப் பட்டது என்பதை எல்லாம் யாரும் தோண்டி எடுப்பதில்லை. அது தேவையுமில்லை! இன்றைய தினத்தில் அது ஒரு நல்ல நடனக்கலை, அவ்வளவுதான். அதனால்  இங்கு வாழும் தமிழர்கள், தன் மகள்களுக்கு இந்தியக் கலாச்சாரத்தில் இருந்து வந்த ஒரு நாட்டியத்தை கற்றுக்கொடுக்க, சிரத்தையுடன் 5 வயதிலிருந்து 18 வயதுவரை பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கிறார்கள். 10 வருடம் பழகிய பின்னர் கடைசியில் கல்லூரிக்குப் போகும்போது அரங்கேற்றம் நடத்துகிறார்கள்.

 மகளுக்கு திருமணம் செய்வது போல், விருந்து கொடுத்து நடத்துகிறார்கள் இந்த அரங்கேற்றத்தை! ஏன் என்றால் தன் மகள் திருமணத்தை இவர்களால் நடத்த இயலுமா என்ன வென்று தெரியாது. ஆமாம், மகள் ஒரு கருப்பனை மணக்கலாம், வெள்ளையனையும் மணக்கலாம், திருமணத்திற்கு இவர்களை இவர்கள் பொண்ணூ அழைக்கவேண்டும் என்றும் இல்லை.

அதில், கிருஷ்ணர் கோபியருடன் பாடிய பாட்டு அது இதுனு பாடல்கள் வரும்தான். அதில் வரும் பாடல்வரிகள் அர்த்தம் எல்லாம் நம் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைப்பத்தி அமெரிக்காவில் கனடாவில் வளரும் தமிழர்களின் குழந்தைகளுக்குக் கவலையும் இல்லை!

இக்குபால் செல்வன் என்னும் ஒரு அரைவேக்காட்டுப் பதிவருக்கு எந்த ஒரு விடயத்தை  எடுத்தாலும் அதை படுகேவலமாக விமர்சிப்பது என்பதே வேலையாப் போச்சு.

பொய்யும் புரட்டுமா எதையாவது உண்மைபோல எழுதுறது, ஆனால் அவர் விமர்சனம் என்னவோ "பர்ஃபக்ட்" என்பதுபோல வாக்கியங்களை அமைப்பார்.

இப்போ இவருக்கு கிடைத்துள்ளது இந்த பரதநாட்டியம்! 

இந்துக்கள் நாட்டியத்தை விமர்சிச்சு பிறமதத்தவரிடம் நல்ல பேரு எடுக்கிறாராம் இந்த பதிவுலக வியாபாரி! 

யாரைவேணா விற்பார் இவரு பொழைப்பை ஓட்ட!

* '' அரங்கேற்றம் '' செய்வதில் ஒவ்வொரு பெற்றோரும் தமது செருக்கை, பெருமிதங்களை வெளிப்படுத்தவே விரும்புகின்றனர்.  பிள்ளைகள் மீதான பரிவோ, கலையார்வமோ, பண்பாட்டின் மீதான விருப்போ கிடையாது. 

ஆமா, இவருக்குத்தான் எல்லாம் தெரியும்! கலைபத்தி பேசுற எல்லாம் தெரிந்த மேதையைப் பாருங்கப்பா!

* சுருக்கமாகச் சொல்லப் போனால் பந்தா செய்யவே அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றனர். 

அவன் அவன் கஷ்டப்பட்டு சேமித்து தன் மகளுக்கு அரங்கேற்றம் நடத்துறான். இந்தாளு வாய் கூசாமல் பேசுறாரு!!

* ஒரு அரங்கேற்றம் செய்ய இவர்கள் செய்யும் செலவுகளை நினைத்தால் மலைக்கச் செய்யும். 

ஆமா, அது என்ன உன் அப்பன் வீட்டு காசா? இது அவன் பிரச்சினை!


* அண்மையில் ஒரு பெண்ணின் நாட்டிய அரங்கேற்றம் செய்திருந்தனர். அவர்கள் சாலையில் போவோர் வருவோர் எல்லோரையும் அழைத்திருந்தனர். ஒரு பெரிய மண்டபம் பிடித்து நடத்தினார்கள். அங்கே போனால் மொக்கை தான் மிச்சம் எனலாம். 

 என்னத்துக்கு ஆர் எஸ் வி பி பன்ணிட்டு நாட்டியம் பார்க்கப் போனீர்? சாப்பாடு இனாமாக் கெடைக்கிதுனா?


* கலை ரசனை இல்லாதோர் தான் அரங்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். 

கலை ரசனை இருந்த ஒரே ஆளு நம்ம "இக்குபால் செல்வன்" தான்!
 

* ஆடும் சிறுமியோ பாவமாக ஒவ்வொரு பாடலுக்கும் ஆடிக் கொண்டிருந்தாள். ஐயகோ ! இந்த அரங்கேற்றாம் செய்ய எவ்வளவு செலவாகி இருக்கும் என விசாரித்த போது தலையே சுற்றி விட்டது. சுமார் ஐம்பதாயிரம் கனடிய டாலர்கள் ( 25 லட்சம் இந்திய ரூபாய்கள் ) செலவாகியுள்ளனவாம். 

இந்தப் பதிவை இவருக்கு அழைப்பிதழ் அனுப்பியவங்களுக்கு அனுப்புங்கப்பா! 25 லட்சம் என்பது பச்சைப் பொய்! 5-6 லட்சம் (10-12 k us $ ஆகலாம்).


* இவ்வளவு செலவு செய்து அரங்கேற்றம் செய்யும் பிள்ளைகள் கலைத் துறையில் சாதிக்கப் போகின்றனவா என்றால் இல்லை, உயர் பள்ளிக்குச் சென்ற பின் நாட்டியங்களை விட்டுவிடுவோரே மிகுதியாக உள்ளனர். 


 அதனால என்ன? இது ஒரு உடற்பயிற்சி போல இருந்துட்டுப் போகட்டுமே! உமக்கென்ன பிரச்சினை?


* அதன் பின் அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை. பெரும்பாலும் தமது பணப் பலத்தைப் பிறர் மத்தியில் நிலைநாட்டவே அரங்கேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன, அவற்றைப் படம் பிடித்து உள்ளூர் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பணம் கட்டி விளம்பரப் படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு செலவு என்று கேட்டால் ஒரு பதிலும் நமக்குக் கிடைக்காது. 


உமக்கென்ன பதில் வேண்டிக்கெடக்கு? அவன் காசு, அவன் செஞ்சிட்டுப்போறான்?? உம்மிடம்  அவன் எதுக்கு செலவு கணக்குக் காட்டனும்? எனக்குப் புரியவில்லை!


* இதில் என்ன கொடுமை என்றால் எதோ ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு அரங்கேற்றம் நிகழ்கின்றன என நினைக்க வேண்டாம். ஆயிரக் கணக்கான அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றன. சொல்லப் போனால் சொந்தக் காரர்களில் ஒருவர் அரங்கேற்றம் செய்துவிட்டால், போட்டி போட்டுக் கொண்டு பிறரும் அதனைச் செய்கின்றனர். இவர்கள் இதற்காக விரயம் செய்யும் பணமானது பல சமயம் லட்சம் கனடிய டாலர்களைக் கூடத் தொட்டுவிடுவதுண்டு. எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் என்று வேறு சிந்திக்கத் தூண்டுகின்றது. செலவு செய்யும் பல பெற்றோர்கள் வியாபாரிகளோ, ஐந்திலக்க சம்பளம் பெறுவோரோ இல்லை. பலரும் இயல்பான நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆவார்கள். 


இதுக்கு என்ன மில்லியன் டாலரா செலவு?? நடுத்தர குடும்பத்தினர் ஒரு 10 வருடம் (நடனம் கற்கும் போது) சிறு சேமிப்பு செய்தால் இதை எளிதாக நடத்தலாம்!


* இலங்கையில் தமிழர்கள் பலர் போதிய வாழ்வாதாரம் இன்றித் துன்பப் படுகின்ற சூழலில், இங்குள்ள தமிழர்களின் இவ்வளவு பெரிய ஆடம்பரங்கள் தேவை தானா ? அல்லது அரங்கேற்றங்களைக் கோவில்களில் உள்ள சிறிய மண்டபத்தில் நடத்தினால் போதாதா ?


எல்லாரும் டெய்லி ரெண்டு மணி நேரம் ஒப்பாரி வச்சா நல்லதா?? அதை செய்யட்டுமா??


* கலைகள் வளர்வது நல்லது தான், ஆனால் வெறும் பகட்டுக்காக பிள்ளைகள் மீது திணிப்புக்கள் செய்வதும், எத்தனைப் பிள்ளைகள் அரங்கேற்றம் தாண்டியும் கலைப் பயணத்தைத் தொடர்கின்றன சொல்லுங்கள். 

கலையை எப்படி வளர்க்கனும் இவரிடம் கேளுங்கப்பா! கலைத் திருமகன் இவருதான், "இக்குபாலு செல்வனு"!


* அத்தோடு கடன் பட்டும், முறையற்ற வழிகளில் பணம் சேர்த்தும் ஆடம்பர அரங்கேற்றங்கள் எல்லாம் தேவை தானா என்பது தான் எனதுக் கேள்வி.

 தேவைதான். 

* இவ்வாறாக பணத்தை விரயமாக்குவதைக் காட்டிலும், அப் பணத்தை சேமித்து வைத்தால் எதிர்க்காலத்தில் குழந்தைகளின் மேற்கல்வியை கடன் இல்லாமல் பெற முடியுமல்லவா. சற்றே சிந்தியுங்கள் தமிழர்களே!


பரதநாட்டியம் முடித்த பெண்கள் அனைவருமே கல்லூரி சென்றுதான் படிக்கிறாங்க!  கல்லூரிச் செலவுக்காக அவங்க அப்பா அம்மா உம்மிடம் வந்து பிச்சை கேட்டாரா என்ன, இக்குபாலு?


முடிவுரை!
 
அமெரிக்க, கனடாவில் தன் இளம் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்கிற பெற்றோர்கள் எல்லாம் இதை கவனிக்க!

இக்பால் செல்வன் சொல்கிறார்..


"இங்குள்ள தமிழர்கள் அப்படிச் செய்வது இல்லை, பெண் பிள்ளையாக இருந்தால் ஒரு ஐந்து வயதிலயே கொண்டு போய் ஒரு பரத்தையர் நாட்டிய வகுப்பில் சேர்த்துவிடுகின்றார்கள்."

எல்லாரும் உங்க பொண்ணுகளை கொண்டுபோயி  பரத்தையர் நாட்டிய வகுப்பில் சேர்த்து விடுறீங்களாம்!

Thursday, October 4, 2012

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருமுறை நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போனேன், அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். “என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், சிறுவன், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை திட்டிவிட்டானே?" னு ஒரு  கத்தியை வைத்து குத்தகூடாத இடட்த்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!

என்ன "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

இது ஒரு மீள்பதிவு!