Thursday, June 28, 2012

இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்?

 


நான் வளர்ந்த தமிழ் மண்ணில் என்னுடைய இஸ்லாமிய நண்பர்களின் அன்னையர்கள், சகோதரிகள் முக்காடு அணிவதைத்தான் நான் முதன்முதலில்  பார்த்து இருக்கிறேன். எங்க ஆத்துலே உள்ள பெண்கள் எல்லாம் யாரும் முக்காடு அணிவதில்லை! அதனால இந்த முக்காடு அணிவது  இஸ்லாமியர்களுடைய கலாச்சாரம் என்று நம்பி அதைப் பற்றி ரொம்ப ஆராய்ந்ததில்லை. இன்னும் ஒண்ணு,  நான் வளர்ந்த/வசித்த பகுதியில் பெரும்பாலும் இஸ்லாமியப்பெண்கள் "பர்தா" அணிவதில்லை.

அப்புறம் ஒரு சில ஹிந்திப்படங்களில் வட இந்திய இந்துப் பெண்கள் முக்காடு அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். ஒருவேளை வட இந்தியாவில் வயதானவர்கள் அல்லது கணவனை இழந்தவர்கள் மட்டும் அணிவார்களோ? என்ற சந்தேகம் வந்ததுண்டு. அப்போ, இதையெல்லாம் பற்றி  ரொம்ப ஆராய்ச்சி செய்யாமல் விட்டுவிட்டேன்.

இப்போ "உறவுகள் தொடர்கதை" னு விஜய் டி வி ல வருகிற தமிழாக்கம் செய்யப்பட்ட வடமொழி சீரியல் பார்க்கும்போது அதில் வரும் ஆண்கள் எல்லாம் பெரிய பெரிய பொட்டு வச்சுருக்காங்க இல்லைனா நாமம் போட்டு இருக்காங்க. அதனால அவங்க இந்துக்களாத்தான இருக்கனும்? அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே முக்காடு அணிந்து இருக்காங்க. வீட்டைவிட்டு வெளியே வரும்போது அல்ல! கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் இவர்கள் வீட்டில் இருக்கும்போதே, முக்காடு அணிந்துதான் இருக்காங்க!

இந்த சீரியலில் வரும் இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்?

இந்து மதம் இஸ்லாமிய மதத்தைவிட பழமையானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கெடையாது. அதனால இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிவது என்கிற வழக்கம், இதுபோல வட இந்திய இந்துப்பெண்களிடம் இருந்து இஸ்லாமியர்களுக்கும் தாவிய ஒரு பழக்கவழக்கமா இருக்குமோ? னு யூகிக்கத் தோனுது. யாராவது விபரம் தெரிந்த பெரியவா இந்துப் பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்னு சொன்னால் நல்லாயிருக்கும்.

உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன், ப்ளீஸ்!

Tuesday, June 26, 2012

அய்யோ பாவம் ஜெயமோஹன்!

ஜெயமோகனுக்கு நேரம் சரியில்லை போலயிருக்கு. என்னங்க இவரு நல்ல கதை எழுதலாம் இல்லைனா இலக்கிய விமர்சனம் எழுதலாம், இல்லைனா மதம், மொழி சம்மந்தப்பட்ட விவாதங்கள் செய்யலாம். அவைகளை எல்லாம் விட்டுவிட்டு ஆதாரமில்லாத அரைகுறையான  தகவல்களை வைத்து பணம் வாங்கியதா இல்லை கொடுத்ததாக எதை எதையோ  எழுதி இப்போ வம்பில் மாட்டிக்கொ ண்டு முழிக்கிறார் பாவம். 

காலச்சுவடு கண்ணன் , TATA க்குசெய்த அந்த குறும்படத்துக்கு லீனா மணிமேகலை எவ்வளவு பணம் வாங்கினார் என்ற கேள்வி/கேலியோட நிறுத்திக்கொண்டார்.

இதை விமர்சிக்க நுழைந்த ஜெயமோகன்,  தடம் புரண்டு பல பிரபலங்களை (தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பழைய நண்பர்கள்) தேவையே இல்லாமல் இழுத்து, போதுமான ஆதாரமில்லாமல் இன்னாரு அந்நிய நிறுவனங்களிடம் பொருளுதவி/பணம் பெற்றார் அது இது எழுதிவிட்டார். இப்படி வரம்புமீறி  இவரு எழுதவும்  பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் செம கடுப்பாகிட்டாங்க.  அதோட இவரு  எதையோ எழுதிட்டுப் போறாருனு விடாமல், எரிச்சலும், கோபமுமாக பலவிதமான தொடர்ந்து மிகவும் சீரியஸான கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே இருக்காங்க.  

பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் கேள்விக்கு ஜெயமோகன் பதில்சொல்லியே  ஆகனும்னு ஒரு நிலைமை  உருவாகிவிட்டது. அதனால் ஜெயமோகன், ஒரு சில "பக்கவாத்தியங்களுடன்", தான் உளறியதெல்லாம் சரி என்பதுபோல் என்னதான்  ஆயிரம் விளக்கங்கள் கொடுத்து, சமாளிச்சாலும் இதெல்லாம் இவருக்குத் தேவையா எங்கிற கேள்வி எல்லார் மனதிலுமெழுகிறது.

ஜெயமோகன், தெரிந்து கொள்ள  வேண்டியதென்னனா இவருெழுதியது ஒருவரை கருத்துச்சண்டைகளால் கெட்டவார்த்தைகளால் திட்டுவதைவிட மோசமான  செயல்  என்பது. இன்னாருக்கு இந்த நிறுவனம் பணம் கொடுத்து இருக்கு, அதனால இவரு இப்படி இப்படி எழுதுகிறார்னு  தன் கற்பனைத் திறனைக் கலந்து போதுமான  ஆதாரங்கள் இல்லாமல் சொல்வது மிகவும் கீழ்த்தரமான செயல் ஜெயமோகனுக்கு தெரியாமல்ப்போனது பரிதாபம்.

கேள்விக்கணைகளை சமாளிக்க இவரு சொன்னவைகளுக்கு ஆதாரமாக இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் அங்கே சொன்னதை இங்கே சொன்னதை எடுத்துக்காட்டி, தன்பக்கம் நியாயம் இருப்பதாக என்னதான் ஆதாரம்னு எதையாவது கொடுத்தாலும், இவர் தரத்துக்கும், இவரு தளத்துக்கும் இவரே சூனியம் வச்சுக்கிட்டாரு னுதான் நான் சொல்லுவேன்.

பொதுவாக எனக்கு இவர் எழுத்தில் தெரியும் இவரின் அகங்காரம் எரிச்சலை உண்டாக்கும். ஆனால் இன்று இவர் தளத்தில் மற்றும் பல தளங்களில் தோன்றும் பலருடைய கடிதங்கள் இவர்மேல் பரிதாப்படவைத்துவிட்டது என்னையும்கூட.

Monday, June 25, 2012

சத்யமே வெல்லும்? பூச்சிக்கொல்லி மருந்து!

பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய விவாதம் வேடிக்கையாக இருந்தது.  

* 1) ஒரு பக்கம் பூச்சுக்கொல்லி தயாரிச்சு, அந்த  மருந்து விக்கிறவன், அதை வச்சு பல நூறுகோடிகள் சம்பாரிக்கிறவன், அகங்காரத்துடன் சொல்றான் பூச்சுக்கொல்லி மருந்து இல்லாமல் இன்னைக்கு யாரும் பொழைப்பை ஓட்டமுடியாது!.   மேலும் பூச்சுக்கொல்லி மருந்தால் கேன்சர் வருது, அது வருது, இது வருதுனு சொல்வதெல்லாம் சுத்தமான பொய், அதெல்லாம் ஏற்புடையதல்ல, னு அடித்து சொல்லுகிறான்.

* 2) இன்னொருபக்கம் அறிவியல் நிபுணர்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப் பட்டவங்களை பார்த்த, ட்ரீட் பண்ணிய  மருத்துவர் கூட்டம் பூச்சுக்கொல்லி மருந்துதான் எல்லாத்துக்கும் காரணம் என்கிறார்கள். 

* 3) இன்னும் சில உயர்ந்த சிந்தனை உள்ளவங்க,  உரம், பூச்சிக்கொல்லி மருந்து எல்லாம் பயன்படுத்தாமல் சுத்தமான "ஆர்கானிக் விவசாயம்"தான் சிறந்த வழி, அதை செய்ல்படுத்தனும், அதை செயல் படுத்துவது சாத்தியமேனு சொன்னாங்க.

 * பெஸ்டிசைட் கம்பெணியிலிருந்து வந்த ஆள், இதுபோல் பல பிரச்சினைகளை குற்றச்சாட்டுக்களைப் பார்த்தவன், படித்தவன் என்பதால், மனசாட்சியை எல்லாம் அடகு வைத்துவிட்டு, இதுபோல் கேள்விகள் வந்தால் எப்படி பதில் சொல்றதுனு ஏற்கனவே பதில் தயாரிச்சுட்டு வந்ததுபோல் இருந்தது. இப்படி பதில்கள் சொன்னால்தான் தன் பிழைப்பு ஓடும், தன் வேலை தாக்குப் பிடிக்குமென்று அதற்கேற்றார்போல பதில் சொல்லி, சில உண்மைகளையும் மறைத்து தப்பிச்சுட்டான்.

எண்டோசல்ஃபான்  மற்றும் DDT பற்றி விவாதிச்சாங்க. 

பொதுவாக எதையும் கொல்லனும்னா க்ளோரின் (Cl, Cl2) தனிமம் கலந்த வேதிப்பொருள்தான் பயன்படுத்தப் படுது.  நம்ம தண்ணீர்லகூட க்ளோரின் Cl2 கலந்துதான் பாக்ரீரியாவை எல்லாம் கொல்லுறாங்க. அதேபோல் நீச்சல் குளங்களிலும் ப்ளீச்சிங் பவுடர் (க்ளோரின் கலந்த கலவை) போன்றவை பயன்படுத்துறாங்க. 

அதேபோல் இந்த க்ளோரின் தனிமத்தை கலந்த ஒரு காம்பவுண்ட்தான் எண்டோ சல்ஃபான் மற்றும் டிடி ட்டியும். அவைகளுடைய "உருவத்தை" இங்கே தர்ரேன்!


DDT
Skeletal formula
Endosulfan
உண்மை என்னனா, இதுபோல க்ளோரினேட்டெட் பெஸ்டிசைட்ஸ் அது நம்முடைய சுற்றப்புறத்துக்கு நல்லது இல்லை என்பதுதான் மேலை நாடுகளில் பெரிய பிரச்சினை. எண்டோசல்ஃபான் பயன்படுத்துவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி சுத்தமாக அமெரிக்காவில் நிறுத்தப்போறாங்க. ஆனால் அதன் காரணம் வந்து அது என்விராண்மெண்ட்க்கு நல்லதில்லை என்பதே. 



Poster in the front foyer of the Geneva meeting hall after the vote to ban endosulfan (Photo courtesy ENB)

Deadly Pesticide Endosulfan Finally Banned in United States

Endocrine-disrupting Chemical Is Highly Toxic to Wildlife, Threatens Endangered Species and Is Dangerous to Human Health

  The EPA is cancelling the registration of endosulfan, reversing a 2002 Bush administration decision that allowed continued use with some restrictions. Most currently approved endosulfan crop uses will end in two years, and all uses will be phased out by 2016. Endosulfan was first registered for use in the 1950s, and there are currently about 80 endosulfan products. The EPA estimates that 1.3 million pounds of endosulfan were used annually from 1987 to 1997. In California, annual use of endosulfan declined from 230,000 pounds in 1995 to 60,000 pounds in 2008.

* உரம், பூச்சுக்கொல்லி மருந்தை வச்சு விவசாயம் செய்து பழக்கப் பட்டவர்கள், திடீர்னு பசுமைப் புரட்சிக்கு மாறப்போறதில்லை!ஆனால் சிறியளவில் நம்ம வீட்டில் தோட்டம் போடும் பழக்கம் உள்ளவங்க, நிச்சயமாக ஆர்கானிக் விவசாயத்தை செயல்படுத்தலாம். யு எஸ்ல ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்க, காம்போஸ்ட் எல்லாம் தயாரிச்சு இனாமாகத் தர்ராங்க! எனக்கென்னவோ ஆர்கானிக் விவசாயம் பெரியளவில் செய்ய முடியுமானு தெரியவில்லை. முடியாதுனு நெனைக்கிறேன்.


* மற்றபடி, பலவிதமான குறைபாடுகளை இந்த பெஸ்டிசைட்ஸ் உண்டாக்குது, ஒரு ஊரே எண்டோ சல்ஃபானால பாதிக்கப்பட்டு இருக்கு என்கிற வாதத்தில்  உண்மை இருந்தாலும், என்னுடைய பார்வையில் அதை பயன்படுத்தியவர்கள் எப்படி, எவ்வளவு பயன்படுத்தனும்னு தெரியாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம்னு தோனுது. 

http://www.ens-newswire.com/ens/may2011/2011-05-05-01.html

அதனால் பெஸ்டிசைட் விக்கிறவனைப் போயி இந்த விளைவுகளுக்கு நீங்க பிடிக்க முடியாது. 

http://www.ens-newswire.com/ens/may2011/2011-05-05-01.html



அதை பயன்படுத்திய விவசாயிகளின் அறியாமையால்தான் மக்கள் பலியானார்கள்னுதான் சொல்ல முடியும்!  மேலே உள்ள படங்களில் உள்ளதுபோல் மேலை நாடுகளில் endosulfan னால் பாதிக்கப் பட்டதாக எதுவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கேரள விவசாயிகளின் கவனக்குறைவுதான் இவர்கள் பலியானதுக்குக் காரணம்னு எனக்குத் தோனுது.

மூன்று குழுக்களின் வாதங்களிலும் ஓரளவுக்கு உண்மையும் பொய்யும் கலந்து இருக்கிறது. சரி, இதிலிருந்து நம் மக்கள் மற்றும் விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டியதை கற்றுக்குவாங்களா?

* பூச்சிக்கொல்லி மருந்துனா விஷம். பூச்சிக்கு அது கொல்லும் விஷம்னா நமக்கும் விஷம்தான்னு எல்லாருக்கும் தெரியும்.  
 இருந்தாலும், அது பூச்சியைத்தான் கொல்லும் நம்மைக் கொல்லமுடியாது என்கிற ஒரு மனோபாவம் உருவாகாமல் இருக்கனும்.

* அதை மிகவும் கவனமாக அளவாக பயன்படுத்தனும். அவன் கொடுத்து இருக்க "இண்ஸ்ட்ரக்சன்ஸ்" படி பயன்படுத்தினால் பூச்சி சாக மாட்டேங்கிது, அவனுடைய இண்ஸ்ட்ரக்சன்ஸ்லாம் அமெரிக்கா இல்லை ஐரோப்பாவில் உள்ள பூச்சி க்குத்தான் ஒத்துவரும், நம்ம பூச்சிக்கு இன்னும் அதிகமா தெளிச்சாதான் சாகும்னுகிற விபரீதமான சுயஅராய்ச்சி செய்து, அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவை சீரியஸாக விவசாயிகள் தவிர்க்கனும்.

* மற்றபடி இந்த வேதிப்பொருள்களால் நம்முடைய சுற்றுப்புறம் பாதிக்கப்படுது என்பது உண்மைதான். அதனால் பூச்சுக்கொல்லி மருந்தே பயன்படுத்தாமல் விவசாயம் செய்யமுடியுமா? னு கேட்டால் இப்போதைக்கு முடியாதுனுதான் நான் சொல்லுவேன்.