Monday, May 12, 2014

நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?

இக்பால் செல்வன் என்கிற கோடங்கிச் செல்வன், தமிழ்மணத்தை புதிய தமிழ்தளங்களை திரட்டச் சொல்லி வேண்டிக் கேட்டுக்கொண்ட பதிவில், நம்பள்கியின் தளம் முடக்கப்பட்டு இருக்கலாம் என்பதுபோல் டிஸ்கஸ்ஸன் செய்யப்பட்டுள்ளது.

நாத்திக பதிவு எழுதி வந்த நம்பள்கி வலைப்பக்கம் சில நாட்களாக காணவில்லை.கடைசியாக கடுமையாக கடவுளை மறுத்தும் விமர்சித்தும் எழுதியிருன்(வந்)தார். அந்த பதிவுடன் அவரது வலைப்பக்கமும் காணக்கிடைக்கவில்லை. இது பற்றி ஏதேனும் விபரம் யாருக்காவது தெரியுமா? www.nambalki.com பக்கத்தை யாராவது களவாடி (hack செய்து) விட்டார்களா?

பூபதி துபை



நாத்திக பதிவுகளுக்கு நடக்கும் வழமையான துன்பம் இந்த இணைய களவாணித் தனம் ( Hacking ) . எனது கொடுக்கி என்ற பெயரில் இயங்கிய தளமும் Hack செய்யப்பட்டு நூற்றுக்கும் அதிகமான பதிவுகளை இழந்தேன். தற்சமயம் Backup செய்து பாதுகாப்பை அதிகரித்துள்ளேன். நம்பள்கியின் தளம் இருமுறை சூறையாடப்பட்டுள்ளது. தற்சமயம் அவரது டொமைன் சிக்கலோ என தோன்றுகின்றது. Blogspot முகவரி ஊடாக போய் பாருங்கள். அவரே வந்து பதிலளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

இது உண்மையா?

உங்கள் தளம் முடக்கப் பட்டால் உங்களுக்கு மட்டுமே அவ்வலி தெரியும். நம்பள்கி, ஆத்திகரோ, நாத்திகரோ, தரமாக எழுதுகிறாரோ இல்லையோ என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் திடீரென வாசகர்களை எட்டிப் பார்க்க வைப்பதுபோல் கவர்ச்சியான் தலைப்புகள் கொடுத்து பல வாசகர்களையும் சில வாசக நண்பர்களை சமீபத்தில் பெற்றார்.

அவர் தளம் முடக்கப் பட்டு இருந்தால், அது மிகவும் கண்டிக்கத் தக்க செயல். இன்று நம்பள்கி நாளை நீங்கள்! என்பதை நினைவில் கொள்ளவும்.

இது உண்மையா? என்பதை அவரே வந்து பின்னூட்டத்தில் சொல்ல வேண்டும். அதற்காகவே இப்பதிவு.

நன்றி.

Sunday, May 11, 2014

என்னை ஏன் பிளாக் பண்ணின? நீ என்ன பெரிய இவனா?

"இவன் ஒரு மெ ண் டலு! எதுவும் உருப்படியா எழுதமாட்டான்! இவன்லாம் எதுக்கு எழுதுறான்னே தெரியலை! ஒரு மட்டு மரியாதை தெரியாது! இவனால தமிழர்களுக்கு எல்லாம் தலைக்குனிவுதான்" என்ற எண்ணுத்துடந்தான் தற்போது இருந்தார் அந்தப் பெரியமனிதர். ஆனால், அவனுடைய பதிவை அவர் தொடர்பவர். மொதல்ல ஏதோ சுமாரா எழுதுறமாரி இருந்ததுனு தெரியாமல் தொடர்ந்தார். கொஞ்சநாள் ஆன அப்புறம்தான் அவன் தரம் தெரிந்தது! அவன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறினதும், "எதுக்கு இந்த சனியன் பிடிச்சவன் பதிவை எல்லாம் பின் தொடரணும்?"னு தெரியலை என்று மனதுக்குள்ளேயே புழுங்கினாலும், அவர் பெரிய மனிதன் என்பதால் திடீர்னு தொடர்வதை நிறுத்தினால் அநாகரிகமாக இருக்குமே என்று என்ன செய்வதென்றே தெரியவில்லை!

திடீர்னு ஒரு நாள் பாத்தால், அவன் பதிவை அவர் தொடர்பவராக இல்லை! "எப்படியோ ஆண்டவனாப் பார்த்து ஒரு நல்லது செஞ்சிருக்கான், சனியன் தொலைந்தது!" னு போயிருக்கலாம்தான். இருந்தாலும் அவருக்கு ஒரே மனக்குழப்பம்.. "எப்படி இது நடந்தது?"  என்று யோசனையுடன் தூங்கிப் போயிட்டார்.

இரவில், கனவில் வந்தார், பகவான்.

ஏதோ சண்டை நடப்பதுபோல் இருந்தது. பகவான் யாரோடையோ வாக்குவாதம் பண்ணிக்கொண்டு இருந்தார்..யாருனு பார்த்தால்.."அந்த அயோக்கியன் தான்". பகவானையே எதிர்த்து எதோ சொல்லிக்கிட்டு இருந்தான்..அவர்கள் வாக்குவாதம் அரைகுறையாகதான் கேட்டது இருந்தாலும் புரிந்தது.

"நீயே ஒரு தரங்கெட்டவன் உனக்கு இவ்வளவு திமிரா?" என்றார் பகவான்.

"யோவ்! உன் பக்தனுகளுக்குத்தான் அறிவு இல்லை! உனக்குமா? என் பதிவை பெரிய மனிதர்கள் நல்லவர்கள் எல்லாம் வாசிக்கலைனாத்தான் அவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். தெரியாமல் வந்து வாசிச்சுட்டா பரவாயில்லை! "தொடர்ந்து" வாசிப்பது அவர்களுக்கு சித்ரவதை! இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் நிம்மதியா வாழட்டுமேனு என்று அவர்களுக்கு என் மேல் உள்ள மரியாதை தெரிந்து, அவர்களை "பிளாக்" பண்ணி ஒரு நல்லது செய்தால், வந்து அதற்கு நன்றி சொல்லாமல் ஒளறிக்கிட்டு?" என்று பகவானையே எதிர்த்துப் பேசினான் அந்த நாதாரி.

"எனக்கா அறிவு இல்லை? நான் யாரு தெரியுமா?" பகவானே டென்ஷனாகிவிட்டார்.

"நீ மனிதர்கள் உணர்வுகள் புரியாத மரமண்டைனு எனக்குத் தெரியும். ஓடிப் போயிடு! உன் பொய் பக்தகோடிகள் காத்திருக்கா உனக்கு கால் அமுக்கி விட! போவியா?"னு கத்தினான் மெண்டலு.

"எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை? எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை? எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை?" என்று பகவான் அழுவது கேட்டு .....அவசரமாக கனவு கலைந்து எழுந்தார் அந்தப் பெரிய மனிதர்.

உடனே ஆண்லைன் போயிப் பார்த்தால், இவர் அந்தத் தளத்திருந்து "ஃபாலோவர் லிஸ்ட்"ல இருந்து  அந்த மெண்டலால் அகற்றப் பட்டுத்தான் (பிளாக் செய்யப்பட்டு) இருந்தார். உண்மை தெளிவானது. அதான் இந்தக் கனவு போல?

இருந்தாலும் அவருக்கு இன்னும் ஒரே குழப்பம். "நான் அவமானப் படுத்தப்பட்டு இருக்கேனா? இல்லைனா என்னை உயர்வாகக் கருதி அவன் தன்னையே இறக்கிக்கொண்டானா?" என்று குழம்பினார். வெள்ளிக்கிழமை பகவானுக்கு பெரிய பூஜை நடத்தி, உண்மை என்னனு அவரிடம் கேட்டால் சொல்லிறமாட்டாரா என்ன? னு மறுபடியும் தூங்க முயன்றார் அவர்.

-முற்றும்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு- இது பழமொழி!

நீங்க ஆறடி ஒதுங்கினால், நான் 100 அடி உங்களிடம்  இருந்து ஒதுங்குவேன், கவலையை விடுங்கள் பெரியவரே! :-) - இது வருண் மொழி!
************************

இன்றைய பொன்மொழி: 

உலகம் மிகப் பெரியதாம். இதில் தோன்றி மறையும் நாம், நமக்கு மட்டுமே முக்கியமான்வர்கள். இதில் இந்த "நமக்கு" ஒண்ணும் பெரிய எண் இல்லை!

கொஞ்சம் உலக கடிகாரத்தையும் கவனிக்கவும்!  நீங்களும்  இதில் ஒரு "ஒண்ணு"! அவ்ளோதான்.


Friday, May 9, 2014

என்னைப் பற்றி கொஞ்சம்!

 இது ஒரு அந்தக் காலத்துப் பதிவு. நான் பதிவுலகில் ரொம்ப பழசெல்லாம் இல்லை. என்னைவிட மூத்தவர்கள் பதிவுலகில் அதிகம். என்ன ஒண்ணு, I never give up! That's my strength and weakness. பதிவுலகில் நட்பு வட்டம் மாறிக்கொண்டே வரும் என்பது பல ஆண்டுகள் குப்பைகொட்டுபவர்களுக்குத் தெரியும். ஏகப் பட்ட பதிவுகள் எழுதிவிட்டதால் எனக்குக் கூட நெறையப் பதிவுகள் (இந்தப் பதிவும்தான்) ஞாபகம் இல்லை!

ஏதோ தேடும்போது எதுவோ மாட்டுச்சு.

BTW, This is an old one and don't worry about "the tagging part"!  Answer to Q 19!  :-)

**********************************

thanks to nila

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABC s of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.

The Tag:

1. A – Available/Single? : Not available

2. B – Best friend? : Several

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Tea

5. E – Essential item you use every day? : Car, Computer

6. F – Favorite color? : Blue

7. G – Gummy Bears Or Worms?: What are these?

8. H – Hometown? : Southern Tamilnadu

9. J – January or February? : September

10. K – Kids & their names?: n/a

11. L – Life is incomplete without?: love, of course

12. M – Marriage date?: who knows

13. N – Number of siblings?: Two wonderful sisters

14. O – Oranges or Apples?: Why not both?

15. P – Phobias/Fears?: Nothing serious

16. Q – Quote for today? : உங்களுக்கு மிக மிக சந்தோஷமா இருக்கும் அதே நிமிடம் இன்னொருவருக்கு மிகவும் "நரக வேதனை" அனுபவிக்கும் நிமிடமும் கூட!

17. R – Reason to smile? : என்னைப் பார்த்து புன்னகைத்தால் புன்னகைப்பேன் :)

18. S – Season?: American Football season :)

19. T – Tag 4 People?

குறை ஒன்றும் இல்லை
ராமலக்ஷ்மி
சுரேஷ் (பழனியிலிருந்து)
துளசி டீச்சர்

20. U – Unknown fact about me? : People, in general, misunderstand me always as I am sort of mysterious!

21. V – Vegetable you don't like?: Beet root

22. W – Worst habit?: Expectations from friends

23. X – X-rays you've had?: Checking for presence of TB germs in lungs as the "skin test" was +ve due to the earlier BCG vaccination.

24. Y – Your favorite food? : வெண்பொங்கல் (தேங்காய்ச் சட்னி, சாம்பாருடன்)

-----------------------
  1. அன்புக்குரியவர்கள்: என் குறைகளை விலக்கி என்னிடமும் அன்போடு இருப்பவர்கள்.
  2. ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் :-)))
  3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகள்
  4. ஈதலில் சிறந்தது: அனுபவம்
  5. உலகத்தில் பயப்படுவது: நல்லவர்கள், ஹானஸ்ட்டா இருக்கவங்களைப் பார்த்து மட்டும்.
  6. ஊமை கண்ட கனவு: பதில் சொல்ல தெரியலை
  7. எப்போதும் உடனிருப்பது: கவலைகள்
  8. ஏன் இந்த பதிவு: nila அழைத்ததால்...
  9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: தன்னலமில்லா அன்பு
  10. ஒரு ரகசியம்: எனக்கு பொய் சொல்றவங்களை சுத்தமா பிடிக்காது
  11. ஓசையில் பிடித்தது: நதியோசை
  12. ஔவை மொழி ஒன்று: ஊக்கமது கைவிடேல்
  13. (அ)ஃறிணையில் பிடித்தது: கோழிக்குஞ்சு  
இது ஒரு மீள்பதிவு என்பதலால். சாரம் (content) எதையும் மாற்றவில்லை)!