Wednesday, December 24, 2008

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். ஒருமுறை வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போது, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக சொன்னார்கள். “என்ன ஆச்சு?” நு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், அப்பாவை திடிவிட்டாரேனு அவன் கோபத்தில் கத்தியை வைத்து குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்! என்ன சண்டைக்கோழி கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை. என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

38 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரு சின்னப்பையன் கொன்னு புட்டான் என்று சிரித்தார்கள்.//

ரிலாக்ஸ் ப்ளீஸ் அப்படின்னு பேர் எல்லாம் வச்சிருக்கீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உன்னுடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.//

கண்ணில...........?

வருண் said...

***SUREஷ் said...
//ஒரு சின்னப்பையன் கொன்னு புட்டான் என்று சிரித்தார்கள்.//

ரிலாக்ஸ் ப்ளீஸ் அப்படின்னு பேர் எல்லாம் வச்சிருக்கீங்க

24 December, 2008 8:33 PM ***

வாங்க சுரேஷ். ஆமா ரிலாக்ஸ் பண்ணுங்க :)

வருண் said...

***SUREஷ் said...
//உன்னுடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.//

கண்ணில...........?***

I mean a very young player can outplay a super star player as he is no longer young and tough :-)

ஆளவந்தான் said...

//“நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.
//
நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்

ஆளவந்தான் said...

//

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உன்னுடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

//

திமிர், தெனாவெட்டு, மண்டகனம்(Headweight), அகங்காரம், கர்வம், கோபம்.... எல்லாம் இருக்கனும்.. இருந்தான் மனுசன்.. ( குறிப்பு : அளவோட இருக்கனும்)

வருண் said...

வாங்க ஆளவந்தான்!

ஆமாங்க அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

அளவோட இருக்கனும். :-)

Unknown said...

நான் என்ற அகந்தை.

If you take only these three words, your opinion is correct.

But it is a religious point of view also. The religion is against ego. Naan is translated into Ego.

The religion has an ulterior motive in decrying the ego in human beings.

If a person does have ego that is quite strong, he will question anything that is not rational to him. Such questioning is not liked by religious people. They are afraid of him.

The believers in God should not be like him. That was why, they made a strong prejudice against ego in religion. By doing so, they can create a fear psychoisis in the believers.

Believe blindly. Without blind belief, there can be no religion. Without blind belief, there can be no God also. Because there is no tangible proof to show or feel God.

Therefore, நான் என்ற அகந்தை is a religious charade.

In common life, as you have agreed with a member here who has pointed it out, the ego is the driving force behind achievements of man. It is positive in this sense. All of us are grateful to such egoist men and women who have made our lives better.

In the negative sense, it can be abused to bring sufferings to humanity as in the case of Hitler, and now, Robert Mugabe.

Like fire or like money, ego is a good servant but a bad master.

வருண் said...

pvina:

As you said, yes, "get rid of your ego" is a religious concept as well. "ego" is important for anybody's achievement! "ego" is also important for one's motivation.

So, it has to be balanced in such a way that one does not irritate or annoy people by being an egoist I suppose :-)

Thanks for your response :)

KARMA said...

Dear pvina,

Religion says "get rid of your ego" for a different reason. This is nothing to do with blind faith.

According to religion (at least with hindusim) your ego is your wrong identity, and that cause all your sufferings.

You don't need to follow any religion, no need to be afraid of any GOD, but still get rid of your ego, coz thats your enimy and the cause of all our suffering.

வருண் said...

வாங்க கர்மா! :-)

வால்பையன் said...

இதுவரை
நீ
என்று
கருதிய
நீ
அழிந்தொழிய
நீ
அல்லாத
நீ
தான்
நீ

அட உங்கள சொல்லலைங்க
இது வைரமுத்து சொன்னது!

Anonymous said...

//நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!//
அகந்தை இல்லாட்டிக்கும் வயசு வர அழகுகரையாதாக்கும்
ஹி,,,,,,,,ஹி,,,,,,,,ஹீ

வருண் said...

****கவின் said...
//நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!//
அகந்தை இல்லாட்டிக்கும் வயசு வர அழகுகரையாதாக்கும்
ஹி,,,,,,,,ஹி,,,,,,,,ஹீ ***

அகந்தையில்லாமல் அகம் அழகா இருந்தால், புற அழகு நாளுக்கு நாள் கூடுமாம்!

நான் என்னும் அகந்தையுள்ள அழகி, தன்னைவிட இன்னொருவர் இளமையும் அழகுமாக இருப்பதைப்பார்த்து பொறாமையில் மேக்-அப் போட்டு சீக்கிரம் அசிங்கமாயிடுவாங்கலாம், கவின்! :):)

வருண் said...

**வால்பையன் said...
இதுவரை
நீ
என்று
கருதிய
நீ
அழிந்தொழிய
நீ
அல்லாத
நீ
தான்
நீ

அட உங்கள சொல்லலைங்க
இது வைரமுத்து சொன்னது!

26 December, 2008 5:52 AM***
வால்பையன்:

பரவாயில்லையே! :0

ஆனால் வைரமுத்து போன்ற கவிஞர்களுக்கு நான் என்கிற அகந்தை அதிகம்னு ஒரு குற்றச்சாட்டு உண்டு!

-----------------------

வாலி பாடியது!

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!

நம்ம ஊர்ல எப்படி இவ்ளோ கடவுள் வந்தாங்கனு இப்போ புரியுதா?

Anonymous said...

வால் பையன் கவிதயான்னு படிக்காம போய்ட்டேன். அப்புறம் வைரமுத்து பேர பாத்ததும் அது நிஜமாவே கவிதையா தான் இருக்கும்னு படித்தேன் . நல்ல கவிதை. நன்றி வால்பையன்.இந்த 2009நல்ல மாற்றங்களை தரும் போலிருக்கிறது.
வருண்,
அப்படி பார்த்தா, நம்பியாரும் நிஜ வாழ்க்கையில் வில்லன் என்று சொல்வது போல இருக்காதா !. வாலி ஒரு கதாநாயகனுக்கு கதைக்கு எழுதிய வரிகள் அல்லவா அவை. அரசியல் சினிமாக்களில் இருப்பவர்களுக்கு தனி இமேஜ் பில்டப் செய்யவேன்டியது என்பது அந்த தொழிலின் அவசியம் (அரசியலும் தொழில்தானே). அது பிரான்டிங் எக்சர்சைஸ் என்பதால் விதி விலக்குத் தர வேன்டும்.

திருநாவுக்கரசு

வருண் said...

***வருண்,

திருநாவுக்கரசு***

திரு நா அவர்களே!

உண்மைதான்.மேலும் வாலி அவர்கள் புதுராகம் படைப்பதில்லை. அவர் ஒருபோதும் நான் என்று பேசியதில்லை தான். ஆனால் அவர் எழுதிய வரிகளால் சில புதுராகம் படைப்பவர்கள் தங்களை கடவுள் னு நெனச்சுக்க வாய்ப்பு இருக்கு. இல்லையா? :-)

அப்டியெல்லாம் ஒன்னும் இல்லீங்க.. இந்த பாட்டிலேயே எனக்கு பிடிச்ச வரி இது தான்.. அந்த வார்த்தையில் ஒரு இறுமாப்பு இருக்கும்.. ஒரு கர்வம் இருக்கும்.. நம்மளும் இந்த மாதிரி எதாவது படைக்குணும் ஒரு ஆர்வத்தை தூண்டும் அற்புதமான வரி..

அதனால் தான் என்னவோ, அரைகுறையா பதிவாவது போட்டு சந்தோசப் ப்ட்டுகிறான்..

புது பதிவு போடுவதாலே நானும் இறைவனே.

ஆளவந்தான் said...

புது ராகம் படைப்பதாலே நான் மட்டும் இறைவனே!
என்றிருந்தால் அது அகந்தை தான்

வருண் said...

ஆளவந்தான்:

ஆமாங்க, நம்ம யாருக்கும் குறைந்தவர்கள் இல்லைனு சொல்வதில் தவறில்லைங்க.

நம் பதிவைப்பார்த்து நாம் நிச்சயம் சந்தோஷப்பட்டுக்கனும். நாலு வரி எழுதத் தெரியிறதே பெரிய விசயம்தான் இல்லையா.

ஆனால், நான் "பிரபலம்". நான் எப்படி பிரபலமானேன் னு சொன்னீங்கனு வச்சுக்கோங்க, உங்கள்மேலே மரியாதை வச்சிருந்த பலர் மனதுக்குள்ளேயே உங்களைப்பார்த்து சிரிப்பாங்க இல்லையா?

மிகச் சரியாக புரிந்து கொண்டீர்கள்

//
ஆனால், நான் "பிரபலம்". நான் எப்படி பிரபலமானேன் னு சொன்னீங்கனு வச்சுக்கோங்க, உங்கள்மேலே மரியாதை வச்சிருந்த பலர் மனதுக்குள்ளேயே உங்களைப்பார்த்து சிரிப்பாங்க இல்லையா?
//
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு... ஆணவ சிரிப்பு

Anonymous said...

\\அகந்தையில்லாமல் அகம் அழகா இருந்தால், புற அழகு நாளுக்கு நாள் கூடுமாம்!

நான் என்னும் அகந்தையுள்ள அழகி, தன்னைவிட இன்னொருவர் இளமையும் அழகுமாக இருப்பதைப்பார்த்து பொறாமையில் மேக்-அப் போட்டு சீக்கிரம் அசிங்கமாயிடுவாங்கலாம், கவின்! :):)\\
நிசம்தாங்க

வருண் said...

***ஆளவந்தான் said...
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு... ஆணவ சிரிப்பு***

நான் "ஆயிரத்தில் ஒருவன்" ல ஆரம்பிச்சேன்.

"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை"

நீங்க ரிக்ஷாக்காரன்ல இருந்து "அங்கே சிரிப்பவர்கள்" பாடல் பாடி இருக்கீங்க.

இப்போ என் டேர்ன்!

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உல்கத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!

இது வேட்டைக்காரன் (1964) :-)

வருண் said...

***கவின் said...
\\அகந்தையில்லாமல் அகம் அழகா இருந்தால், புற அழகு நாளுக்கு நாள் கூடுமாம்!

நான் என்னும் அகந்தையுள்ள அழகி, தன்னைவிட இன்னொருவர் இளமையும் அழகுமாக இருப்பதைப்பார்த்து பொறாமையில் மேக்-அப் போட்டு சீக்கிரம் அசிங்கமாயிடுவாங்கலாம், கவின்! :):)\\
நிசம்தாங்க ***

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்தற்கும்,புரிதலுக்கும் நன்றி, கவின் :)

ஆளவந்தான் said...

//
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு... ஆணவ சிரிப்பு***

நான் "ஆயிரத்தில் ஒருவன்" ல ஆரம்பிச்சேன்.

"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை"

நீங்க ரிக்ஷாக்காரன்ல இருந்து "அங்கே சிரிப்பவர்கள்" பாடல் பாடி இருக்கீங்க.

இப்போ என் டேர்ன்!

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உல்கத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!

இது வேட்டைக்காரன் (1964) :-)
//

இது கூட நல்ல இருக்கே..

சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

உலகம் சுற்றும் வாலிபன்(????)

வருண் said...

ஆளவந்தான்!

ரொம்ப நல்ல பாடல்! ஆமா, உ சு வாலிபன் தான் அது! அதுவும் கண்னதாசன் தான்! :-)

நான் தன்னை பிரபலமென்று தாங்களே சொல்லிக்கொள்ளும் சில பெரிய மனிதர்களுக்காக ஒரு பாடல் இருக்கு!

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலப்பார்த்து சிரிப்பு வருது!

இது சந்திரபாபு பாடல்! கண்ணதாசன் தான் :)

ஆளவந்தான் said...

//
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலப்பார்த்து சிரிப்பு வருது!

இது சந்திரபாபு பாடல்! கண்ணதாசன் தான் :)
//

சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார் நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்

வருண் said...

***ஆளவந்தான் said...

சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார் நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்***

அப்படியா? நான் பாடியே பதில் சொல்றேன்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!

உனக்கும் கீழே உள்லவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! :-)

ஆளவந்தான் said...

//
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!

உனக்கும் கீழே உள்லவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! :-)
//

மாபெரும் சபையினில் நீ ந்டந்தால் உனக்கு மாலைக விழவேண்டும்

ஒரு மாற்று குறையாத மன்னவரென்று
போற்றி புகழ வேண்டும்

வேட்டைக்காரன்

Anonymous said...

கண்னுங்களா ரென்டு பேரும் லியோனி ட்ரூப்-ல் இருந்து ஓடி வந்திட்டிங்களா ! நல்ல விளயாட்டாத்தான் இருக்கு. நடத்துங்க நடத்துங்க. பதிவை இது போல லைட்டாகவும் மென்மையாகவும் உணர்பவர்கள் இந்த தமிழ் கூறும் நல்லுலகில் வெகு சிலரே.

திருநாவுக்கரசு.

வருண் said...

***கண்னுங்களா ரென்டு பேரும் லியோனி ட்ரூப்-ல் இருந்து ஓடி வந்திட்டிங்களா ! நல்ல விளயாட்டாத்தான் இருக்கு. நடத்துங்க நடத்துங்க. பதிவை இது போல லைட்டாகவும் மென்மையாகவும் உணர்பவர்கள் இந்த தமிழ் கூறும் நல்லுலகில் வெகு சிலரே.

திருநாவுக்கரசு.***

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?
பூப்பறிக்க கோடரி எதற்கு?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு! :-)

ஆளவந்தான் said...

//
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?
பூப்பறிக்க கோடரி எதற்கு?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு! :-)
//

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனந்தான் உணர மறுக்கிறது

வருண் said...

ஆள்!

வைரமுத்துவின் அழகான தத்துவம்!

அந்தக்காலத்தில் சி எஸ் செயராமன் பாடியபாடல்...

மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக் குள்ளே

அவன் ஆடி அடங்குவது மண்ணுக் குள்ளே!

ஆளவந்தான் said...

//
அந்தக்காலத்தில் சி எஸ் செயராமன் பாடியபாடல்...

மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக் குள்ளே

அவன் ஆடி அடங்குவது மண்ணுக் குள்ளே!
//
அருமையான பாடல்

இளையாராஜாவின் இசையில்

ஆறும் அது ஆழமில்லை
அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது அய்யா? அந்த பொம்பள மனசு தான்ய்யா!
....
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி..
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி..
சொன்ன சொல்லு என்ன ஆச்சு?
சொந்தமெல்லாம் எங்கே போச்சு?
நேசம் அந்த பாசம்
அது எல்லாம் வெளி வேசம்
திரை போட்டு செஞ்ச மோசமே!

Selva Kumar said...

//“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது. //

சரிங்க நீங்க சொல்லிட்டா சரியாகத்தான் இருக்கும்....

வருண் said...

***வழிப்போக்கன் said...
//“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது. //

சரிங்க நீங்க சொல்லிட்டா சரியாகத்தான் இருக்கும்....

27 December, 2008 10:51 AM***

வாங்க வழிப்போக்கன்!!!! :-) :-)

உங்களைப்பார்த்து எவ்ளோ நாளாச்சு!!!

ஒரு ரகசியம்!

அது எனக்கு நானே சொல்லிக் கொள்வதும் கூட. சும்மா ஊருக்கு உபதேசம் இல்லை :)

உங்களை மறுபடியும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! :-)

வருண் said...

அருமையான பாடல்

இளையாராஜாவின் இசையில்

***ஆறும் அது ஆழமில்லை
அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது அய்யா? அந்த பொம்பள மனசு தான்ய்யா!
....
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி..
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி..
சொன்ன சொல்லு என்ன ஆச்சு?
சொந்தமெல்லாம் எங்கே போச்சு?
நேசம் அந்த பாசம்
அது எல்லாம் வெளி வேசம்
திரை போட்டு செஞ்ச மோசமே!***

ஆள்!

நீங்க பாடிய இந்தப்பாடல் என்ன படம்னு சொல்லுங்க!

--------------------

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக் கும் பூமியடா!
பொல்லாத கண்களடா ...
புன்னகையும் வேஷமடா...
நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா :(