Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Thursday, December 3, 2020

கொஞ்சம் நம்மை, உலகைப் புரிந்து கொள்வோம்!

எனக்கு அருகில் ரெண்டு இந்தியர்கள் குடும்பம் இருக்காங்க. ஒருத்தர் தமிழ் குடும்பம். இன்னொருவர் தமிழ் தெரியாத இந்தியர் குடும்பம். உண்மைய சொல்லப்போனால், தமிழ் தெரியாதவரை நம்பலாம், உதவி கேக்கலாம்னு தோணும். தமிழர்? எதுலடா ஆதாயம் பார்க்கலாம் னு பார்ப்பாரு. நம்ம கஷ்டப்பட்டா சந்தோஷ்ப்படுவார். நம்க்கு ப்ரமோஷ்னன்னா அவர் நாலு நாளைக்கு சாப்பிட மாட்டார்.

இதில் யாரை நீங்க நண்பரா வச்சுக்குவீங்க?

தமிழ், தமிழ்ப் பற்று, தமிழ் மொழிதான் செம்மொழினு உளறிக் கொண்டு திரியும் தமிழ்ப் பற்றாளர்களைக் கேட்டால் என்ன சொல்வார்கள்?னு எனக்குத் தெரியலை.

நான் என்ன பண்ணுவேன்னா, தமிழ் குடும்பத்தை விட்டு ஒதுங்குவேன். தமிழ் தெரியாதவரிடம் விரும்பிப் பழகுவேன்.

 ------------------------------

ரெண்டாவது சூழ்நிலை!

 தமிழ் தெரிந்தவன் = உங்க சாதிக்காரன்

தமிழ் தெரியாதவன் = வேறொரு சாதிக்காரன் னு

 இதே சூழல்ல எடுத்துக் கோங்க. 

இப்போ? 

 சாதி சாதினு அலையும் சாதி வெறியர்களை விடுங்க.

நான் என்ன பண்ணுவேன்னா, என் சாதிக்கார்னைவிட்டு ஒதுங்குவேன். இன்னொரு சாதியைச் சேர்ந்தவருடன் ப் பழகுவேன்.

----------------------------

தமிழர், நம்ம சாதிக்காரன் என்பதெல்லாம் இதுபோல் சூழல்களில் அர்த்தமற்றதாகிவிடும். எனக்கு மட்டும் இல்லை. இதுதான் மனித இயல்பு.

 In every community, good, bad and ugly people are there. We prefer good people and less trouble!

ஆனால், பொத்தாம் பொதுவாக நாம் தமிழர்னு ஒற்றுமையா இருக்கணும். நம்ம சாதிக்காரன்னு அவனிடம் அனுசரிச்சுப் போகனும் என்பதல்லாம் இதுபோல் ஸ்பெசிஃபிக் சிச்சுவேஷன் வரும்போது அர்த்தமற்றதாகிவிடும்.

----------------------

Most of the time, we dont realize what we really are! What we like and what we dislike, we just get carried away! We dont have time to think! Some can not think!

We all live and die. It is better to understand what life is all about! Again not everyone can! Only a very few understands!

Tuesday, September 24, 2019

எது சரி? எது தவறு?

எனக்குத் தெரிய ஒரு ஃப்ரெண்ட் சொல்லுவான், சரி, தவறல்லாம் அர்த்தமற்றது. காரணம்? அவன் வாழ்க்கையே வேடிக்கையானது. ஹைக்கிளாஸ்ல பிறந்த அவன் வாழ்க்கை பயங்கர காம்ப்லெக்ஸானது. அப்பா ஒரு கல்லுரியில் (ஐ ஐ டி) பெரிய பேராசிரியர். அம்மாதான் பிரச்சினை. அவங்க அப்பா அம்மாக்குள்ள பிரச்சினை. பிரிந்துவிட்டார்கள். ஆனால் முறைப்படி விவாக்ரத்தெல்லாம் செய்தார்களானு தெரியலை.

அவனுடைய அம்மா பத்தி இஷ்டத்துக்கு என்ன என்னவெல்லாமோ சொல்லுவான். எனக்கு புதிய அனுபவம் அது.  எனக்கு அவன் சொல்றதை எல்லாம் கேட்டால் உண்மையா இல்லை சும்மா கதை விடுறானானு தோனும். எனக்கு அதுபோல் பிர்ச்சினை இல்லாததால் என்னால புரிந்துகொள்ளவே முடியாது. என்னடா சொல்ற? உன் அம்மாடா அவங்க?னு திரும்பத் திரும்பச் சொல்லுவேன்.

ஜானகிராமன் கதைகளில் வரும் ரங்கமணி, அலங்காரம், அம்மனி எல்லாம் அவன் அம்மாவை விட ரொம்ப சாதரணமான கேரக்டர்கள். அவன் அப்பாவுடந்தான் வாழ்ந்தான். அப்பாவே அம்மாவை வில்லனாக்கிட்டாரா? என்னனு விளங்கவில்லை.

பிரச்சினை என்னனா, நம்ம நார்மல் அம்மா அப்பாவுக்குப் பிறந்து, சாதாரண வாழ்க்கை வாழும்போது, இவன் சொல்லும் இதுபோல் அம்மா கேரக்டர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. கற்பனையே செய்ய முடியவில்லைனா பிரச்சினைதான். என்னுடைய இயலாமைனு கூட சொல்லலாம்

எனிவே, if someone life is fucked up like this, அவர்கள் நியாய தர்மங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதில்லை. ஊர் உலகில் உள்ள அம்மாக்களை அவன் சரியாகப் புரிந்து கொள்வானா? என்கிற சந்தேகம் எழும் எனக்கு. I have seen people, if their life is fucked up, they will theorize that the whole world is like that only. I think such theories help them feel better. திருமணம் பற்றிப் பேசும்போது நம்ம மேதை கமலஹாசன், திருமணங்கள் உடைகின்றன, திருமணம் அர்த்தமற்றதுனு சொல்வதை நீங்க கவனித்து இருக்கலாம். Because he fucked up he blames the "marriage" rather than himself. Some people like to blame someone or something whenever they fuck up. Kamalahaasan is the best example for that!

 நான் பார்த்தவரைக்கும் பலர் எதைப்பத்தியுமே யோசிப்பதில்லை. இதுபோல் வித்தியாசமான அம்மா பத்தி பேச ஆரம்பித்தால், நமக்கென்ன?  இது அவன் பிரச்சினைனு போயிடுவாங்க. பல ஆண்டுகளுக்குப் பிறகும் எனக்கு மட்டும் இன்னும் அவன் அம்மாவைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
இப்போ உள்ள அமெரிக்க கலாச்சாரத்தில் அது போல அம்மாக்களை பார்க்க முடிகிறது. ஆனால் இன்னொரு கலாச்சாரத்தில் பார்க்கும்போது அது ஒன்னும் பெருசா தோனமாட்டேன் என்கிறது.

 என் நண்பன் என்ன ஆனான்னு தெரியவில்லை. இப்போ எல்லாம் ஒரு காலத்தில் நண்பன், ஒரு காலத்தில் தோழினு தான் பலர் இருக்காங்க. காலப் போக்கில் நம் வாழக்கையில் அவர்களுக்கும், அவர்கள் வாழ்க்கையில் நமக்கும் சம்மந்தமில்லாமல்ப் போய்விடுகிறது. அவர்களிடம் உறவாடிய ஒரு சில நினைவுகள் மட்டும் நம்மிடம் தேங்கி விடுகிறது. அதை எப்போதாவது நாம் அசை போடுகிறோம்..

Thursday, May 30, 2019

இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்?!

நிச்சயமாக அவனுக்கு அவள் மேல் ஏதோ 'க்ரஷ்' இருக்கு போல..  என்ன இருந்தாலும் அவள் ஒரு அழகுதான். எத்தனை ஸ்லிம்மா இருக்கிறாள்... இருக்கட்டும் எத்தனை நாளைக்கு? இன்னும் 10 வருடமானால்? அவளயும் கழட்டிவிட்டு இன்னொரு இளம் பெண்ணை ரசிப்பான்.   சரி, இப்போ என்னைப் பார்த்தால் அவனுக்குப் பிடிக்குமா? அய்யோ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? நான் ஏன் இப்படி க்ரீன் மான்ஸ்டராக மாறுகிறேன்? அவன் யாரோட ஃப்ளர்ட் பண்ணினாள் எனக்கென்ன? அவன் யார் எனக்கு? அவனிடம் கோபிக்கவோ, அவனைக் கேள்வி கேட்கவோ, இல்லைனா கேலி பண்ணவோ எனக்கு என்ன அருகதையிருக்கிறது?  அவனைத்தான் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டாச்சே? அவனுடன் பழகியதை கெட்ட கனவாக நினைத்து மறந்தாச்சே? ஓரு வேளை என்னை வேணும்னே இப்படி எல்லாம் பழி வாங்குறானா? இருக்கலாம். ஹி இஸ் சச் எ காம்ப்ளெக்ஸ் பர்சனாலிட்டி. சேச் சே இவனையா ஒரு காலத்தில் காதலிச்சோம்?

"என்னடி வித்யா, ஒரே யோசனை? முகத்தில் ரத்தம் பாயுது? காஃபியைக் குடி. ரொம்ப கோல்ட் ஆகுது" என்றாள் தோழி லாவண்யா.

"ஒண்ணூமில்லடி, சும்மா இந்த ஆம்பளைங்க பத்தி யோசித்தேன்" என்றாள்.

"நீ பேசாமல் என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கலாம்?  நீ வாடினா நான் இந்தாள கழட்டி விட்டுட்டு வந்து இருப்பேன்."

"சும்மா இருடி!"

"அப்புறம் என்ன? திரும்பத் திரும்ப பதில் தெரிந்த அதே கேள்வி? உன் ஆத்துக்காரர்தான் "ஜெம்", பக்கா ஜென்ட்ல்மேன். எனக்கும் ஒண்ணு வந்து வாச்சிருக்கே?"

"ஆரம்பிச்சுட்டியா?. ஏய் உனக்கு விசயம் தெரியுமா? ரேச்சலும், ஆஷ்லியும் செப்பரேட்டட்"


 Related image


"யாரு?  உன் கலீக்ஸ்?  அந்த லெஸ்பியன் கப்புளா?"

"ஆமடி"

"என்னாச்சு?"

"என்னனு எனக்குத் தெரியலை. ஒத்துக் போகலையாம். "ஐ டோண்ட் லவ் ஹெர் எனிமோர்"ணு சொல்றாள் ரேச்சல்"

"எனக்குப் புரியல? இந்த ஆம்பளைங்கதான் இப்படினு நெனச்சேன். இவளுகளுமா! "

"இங்கேயும் அதே கதைதான் போல"

"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்"

"என்னடி?"

"எனக்கு அந்த எண்ணங்கள் தலை தூக்கும்போது, மெடிட்டேஷன் பண்ணப் போறேன்." என்றாள் லாவண்யா.

"ஹா ஹா! நீயா?!'

"பின்ன நீயா?"

"இல்ல, அப்போ  24 மணி நேரமுமா மெடிட்டேஷன் பண்ணப்போற!?"

"கொழுப்புடி உனக்கு!"

"அதை விடு.. இல்ல, நம்ம இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லுவோம்.. ரெண்டு பெண்களுக்கு இடையில் கூட கொஞ்ச நாளில் "மண உறவு" பிரச்சினை வந்து விடுகிறது"

"இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்னு  சொல்லுவாளா ரேச்சல்?  சரி, சரி ரொம்ப யோசிக்காதே! ஜஸ்ட் லிவ்!"

"உனக்கு நீயே சொல்லிக்கோ!"

"எனக்கும்தான்"

***************

Friday, December 14, 2018

நட்பு, காதல், அன்பு, பாசம்

என்னைப் பொருத்தவரையில் எல்லாவற்றூக்கும் அடிப்படை சுயநலம்தான்.

உங்க நண்பர், அல்லது தோழியை ஏன் உயர்வா நினைக்கிறீங்க. பொதுவாக அவர்கள் உங்கள மனது நோகவைக்க மாட்டார்கள் உங்கள உயர்வா நினைப்பாங்க. பிறரிடம் உங்கள விட்டுக் கொடுக்கமாட்டாங்க. It is all about YOU!

காதல். இதுக்கும் நட்புக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ஹார்மோன்களீன் விளவுகள் மேலும் இதில் கலப்பதால் இன்னும் கொஞ்சம் இமோஷ்னாலாக இருக்கும். மற்றபடி, ஒருதலைக் காதல் என்பது பெரிதாக இருப்பதற்கு காரணம், எதுவுமே நமக்குக் கிடைக்கவில்லைனா பெருசாத் தெரியும். அது கிடைத்த பிறகு உண்மை விளங்கிவிடுவதால் அது இன்னும் பலமடைவதைவிட பலஹீனமடைவதே இயற்கை. உன் மனதுக்குப் பிடிப்பதுபோல் அவள் இருப்பதால் அவள ரசிக்கிற, அடிப்படையில் சுயநலம்தான் இதிலும்.

அன்பு.. உங்க மேலே அன்பா இருக்கவங்க மேலேதான் நீங்க அன்பா இருப்பீங்க.  கடவுள் உங்கள கைவிடமாட்டார்னு அவர் மேலே அன்பு. கடவுள் மற்றவாவை உங்களவிட நல்லா ட்ரீட் பண்ணீனால் இன்னொரு கடவுள தேடி ஓடுவீங்க. Again, it is all about YOU!

பாசம், தாய்ப்பாசம். ஒரு தாய் அவள் குழந்தையை உலகில் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் குழந்தை ஒரு சாதாரண மனிதஜென்மம்தான். தன் குழந்தை, தன் மகன் என்கிற அடிப்படை சுயநலம்தான் தாய்ப் பாசத்திற்கு அடிப்படை.

எல்லாவற்றூக்கும் அடிப்படைக் காரணம், சுயநலம்தான். ஆனால் சுயநலம் என்பது ஒரு அற்ப (கீழ்மையான) விசயமாக நாம் கருதுவாதால், எதையும் உடைத்து பார்த்து உண்மையை உணர மறூக்கிறோம்.

நம்மை நாமே ஏமாற்றீக் கொண்டு, நம் மனம் பாதிக்காமல் வாழ்வதே வாழ்க்கை. ஆனால் நம் வாழ்க்கைக்கு அடிப்படையே சுயநலம்தான்.




Sunday, May 14, 2017

பாகுபலி ஒண்ணும் ரெண்டும் அப்புறம் நானும்!

உலக இந்தியர்கள் கொண்டாடும் ஒரு படம் பாகுபலி. நாலு தரப் பார்த்தேன் ஏழுதரப் பார்த்தேன் என்கிறார்கள். ஒரு பக்கம் ஒரே புகழாரம். இன்னொரு பக்கம் வர்ணாசிரப்படம், தெலுங்கர்கள் படம் என்றெல்லாம் குறைசொல்லிக் கொண்டு இப்படத்தை பார்க்காதவர்கள் இல்லை. என் அக்கா, தங்கச்சி மற்றும் அவர்கள் குடும்பம் அனைவரும் பார்த்து விட்டதாகவும் படம் பிரம்மாண்டம் என்றும் பாராட்டுகிறார்கள்.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஹிந்தியிலும் எல்லா அம்மொழிப்படங்கள் செய்த சாதனைகளை முறியடித்துள்ளது இப்படம். இனி எந்த ஒரு படமும் இச்சாதனையை முறியடிக்க முடியாது என்கிற ஒரு மிரட்டலுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது இப்படம்.

எனக்கு மட்டும் இப்படங்களைப் பார்க்க ஒரு ஈர்ப்பு இல்லை. இதென்ன வீண் பிடிவாதம்? இது ஒரு "ஆட்டிட்டூட் ப்ராப்ளம்". ஆமா, இல்லைனு இப்போ யார் சொன்னா? எதையும் யாரையும் மிகவும் உயர்த்திப் பேசிக்கொண்டே போனால் ஒரு சிலருக்கு அப்படத்தின் மீது ஈர்ப்பு குறைந்துவிடும். அதேபோல் ஒரு பிரச்சினைதான் இது. ஒண்ணு பார்க்காத்தால் கட்டப்பாவோ கழுதப்பாவோ அவன் யாரு தாலியை அறுத்தா நமக்கென்ன? என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லாமல்ப் போய்விட்டது போலும் எனக்கு மட்டும்.

வீரத்தமிழர் சத்யராசு வாய்க்க்கொழுப்புடன் பேசியதுக்கு கன்னடர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டாராம். அடேங்கப்பா! ஆனால் தமிழன் பூராம் இதைப் பார்த்துக்கொண்டு பொத்திக்கிட்டுதான் இருக்காணுக. இதே செயலை ரஜினிகாந்த் செய்தபோது என்னவெல்லாம் பேசினாணுக? தமிழர்கள் நெஜம்மாவே உயர் பண்புள்ளவர்களா இல்லைனா தற்குறிகளா? என்கிற கேள்வி என்னைப் போல் தமிழனுக்கு எழாமல் இல்லை. கழுதப்பா மன்னிப்புக் கேட்டா அது பெரியமனுஷத் தன்மை. படையப்பா மன்னிப்புக் கேட்டால் அது சிறுப்பிள்ளைத்தனம்? அப்படித்தானே?

சமீபத்தில் ஜல்லிக்கட்டு விவாதத்தில் ஒரு தமிழன்பருடன் மல்லுக்கட்டும்போது நான் தெரிந்து கொண்ட விசயம், அவருக்கும் கமலஹாசனுக்கும் ஒரு ஒற்றுமையை கண்டேன், ரெண்டு பேருமே இதுவரை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டதில்லை. ஆனால் முழுநேரமும் ஊருப் பயலுகளைத் தூண்டிவிட்டு ஒரு 10-20 பேரை பலிகொடுத்த வாய்ச்சொல்லில் வீரர்கள் இல்லை ஈனத் தமிழர்கள் என்று. 10 பேரு செத்தான்னு படிக்கும்போது வீரம், தாலினு பேசும் இந்த "வாய்ச்சொல்லில் வீரர்கள்" ஏன் போய் மாடுமுட்டி செத்தால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. "ஆமா 10-15 செத்து இருக்காணுக,  நீர் இன்னும் சாகலையா?" என்று நேரிடையாகக் கேட்டதும் அவருக்கு ரொம்ப சங்கடமாகிப் போயிடுத்து. உங்க "நல்லெண்ணம்" நிறைவேறாது அன்பரே! நாங்க  கமலகாசன் எல்லாம் மத்தவனைத் தூண்டிவிட்டு தமிழர் மரபைக் காப்பாற்றுவோமே ஒழிய எங்களைப் பலிகொடுக்க மாட்டோம் என்று சொல்லாமல் சொன்னார் ஒரு கொற அழுகையுடன்..

பாகுபலியை விடுங்க..மனிதர்களில்தான் எத்தனை விசித்திரப் பிறவிகள்! தனக்கென்று ஒரு நியாயம். ஊரில் உள்ளவனுக்கு இன்னொன்று! எத்தனை எத்தனை (எத்தினி இல்லை! I HATE when it said, "எத்தினி"... தென் தமிழ்நாட்டிலிருந்து வந்ததாலோ என்னவோ) வகைகள்! எத்தனை ஊருக்கு உபதேசம் பண்ணும் சுயநலவாதிகள்! எத்தனை சந்தர்ப்பவாதிகள்! இதுகளை கவனித்தாலே ஏகப்பட்ட எண்டர்டெய்ண்மெண்ட் கிடைக்கும் போது நமக்கெதுக்கு பாகுபலி ஒண்ணும் ரெண்டும்?

என்ன பார்க்கிறீர்கள்?  பாகுபலி பார்க்காதற்கு இதெல்லாம் வெறும் சப்பைக்கட்டுதான்.

ப்ளஸ் டூ படிக்கும்போது முக்கியமாக அறிவியலில் ஒரு சில காண்ஸப்ட் சரியாகப் புரியாமலே புரிந்துகொண்டதுபோல் ஒரு மாதிரி தவறாக அனுமானித்து படிச்சு பதிலெழுதி பாஸான வகை நான். ஆனால் அந்த "கில்ட்டி ஃபீலிங்" இன்னும் இருக்கிறது. ஏன் நமக்கு மட்டும் புரியலை? நம்ம பார்ப்பனரல்லாதலால் நமக்கு அறிவு கம்மியா? இல்லைனா ஆங்கில ஞானம் கம்மியானதாலா? இல்லைனா ஒரு சாதாரணப் பள்ளியில் படித்ததாலா?. இதேபோல் இளநிலை, முதுநிலை மேற்படிப்பு படிக்கும்போதும் புரியாதவைகள் தொடர்ந்தது.. நெறையவே சேர்ந்துவிட்டது. அதாவது புரியாமல் படித்து முடித்த பாடங்கள் ஏகப்பட்டது. நல்லவேளை வட்டி எல்லாம் கிடையாது அது இன்னும் பலமடங்காக. ஆனால் அதே கில்ட்டி ஃபீலிங் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.

இன்றைய சூழலில் ஏகப்பட்ட ரிசோர்ஸஸ், புத்தகங்கள்  கிடைப்பத்தால் புரியாமல் படித்தவற்றை, சேர்த்து வைத்தவைகளை  இன்று புரிந்துகொள்ள நெறையவே வாசிக்கிறேன். சாதாரண பேசிக் சயண்ஸ்தான். உங்களுக்கெல்லாம் அப்பவே புரிந்த விசயங்கள்தான். That keeps me busy and keeps me away from baahubali too. Trust me, it is lot of fun and relaxing when you get rid of "such a guilty conscience" by learning the "unlearned" concepts today!  Today I could do it because I am not having an exam coming soon and there is no such pressure now!

Relax please!

Image result for deepika padukone





Monday, April 27, 2015

படிப்பது அறிவை வளர்த்துக்கொள்ளவா? ஸ்டாக் மார்க்கட் அப்டேட்!

குழந்தைகள், மாணவ மாணவிகள் பள்ளிக்குப் போயி படிப்பது  அறிவை வளர்த்துக்கொள்ளத்தான். ஆனால் தமிழில் ஆர்வம் உள்ள உங்க மகனை, மகளை .எத்தனை பேரு தமிழ் இலக்கியம் படிக்க ஊக்குவித்து இருக்கீங்க?  ஒரு வேளை நீங்க  தமிழ் படிக்க ஊக்குவித்து இருந்தால், அவர் தமிழில் டேன் ப்ரவ்ன் அளவுக்கு ஒரு பெரிய எழுத்தாளராகி இருக்கலாம். இல்லைனா தமிழிலக்கியத்தில் அல்லது ஆங்கில இலக்கியத்தில் அவர் நோபல் பரிசு பெற்றிருக்கலாம்.  அந்த ஒரு வாய்ப்பை நீங்க கொடுப்பதே இல்லை. நீங்க ஒரு மிகவும் சாதாரணமான இந்தியப்பெற்றோகள்தானே? பிளஸ் 2 வில் நெறைய மதிப்பெண்கள் பெற்று என் மகன் டாக்டர் ஆகணும். என் மகள் இஞ்சினியார்கணும். இதே கனவுதான் எல்லாப்பெற்றோருக்கும். அமெரிக்கா வந்தும் இந்தியர்கள் மட்டும் இதே வட்டத்தில்தான் இருக்காங்க. கடைசியில் ஏழைகளுக்கு உதவ டாக்டர் ஆனேன், ஆனால் நான் இப்போ என்ன பண்ணுகிறேன்னு ஒரு குற்ற உணர்வுக்கு குபதில் சொல்ல முடியாமல் யோகா அது இதுனு இறங்கி வாழ்ந்து முடிக்கணும். பொதுவாக உங்க குழந்தையின் தலை எழுத்தை  அழகாக எழுதாமல் கிறுக்கி வைப்பது நீங்கள்தான். ஆமா, உங்க தலை எழுத்தை உங்க அம்மா அப்பா  கிறுக்கி வைத்தார்கள்.

குழந்தையிலிருந்து உங்களுக்குப் பிடிச்ச, நீங்கள் ரசித்துப் படிக்கும் ஒரு பாடத்தில் நீங்கள் சுதந்திரமாக அதிக நேரத்தை செலவழிக்கவும், மேன் மேலும் அதையே படிக்கவும் உங்களுக்கும் வாய்ப்புக் கொடுப்படவில்லை. அதாவது உங்களுக்கும் போதுமான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதேபோல் நீங்களும் உங்க குழந்தைக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை. இது ஒரு தொடர்கதை.
 ஆமாம், நான் பெற்ற இன்ப/துன்பம் தான் என் குழந்தையும் பெறணும் என்று தெரிந்தோ தெரியாமலோ நாமே முடிவு செய்கிறோம்.

உங்களை "சரி செய்யச் சொல்ல" நான் மடையன் இல்லை. நாம் செய்யும் செயல்களை நாம் புரிந்து கொள்வோம் என்கிறேன். என்ன பண்ணுறது, உங்களுக்குப்பிடிக்காத பாடங்களையும் நீங்க படித்தால்த்தான் பாஸ் ஆக முடியும், நிறைய மதிப்பெண்கள் பெற முடியும்.அப்போத்தான் டாக்டராக முடியும் இஞ்சினியர் ஆக முடியும். நெறைய சம்பாரிக்க முடியும். இல்லையா? ஆக உங்களுக்கு பிடித்தவற்றில் மட்டும் உங்க அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பை வழங்குவது இல்லை. அதுதான் நம்முடைய எஜுக்கேஷன் சிஸ்டம். இதுதான் நாம் வாழும் வாழ்க்கை.

ஒரு சில நேரம் ஒரு சில மாணவ மாணவிகளிடம் "நீ இந்த சப்ஜெக்ட்ல இன்னும் அதிக நேரம் செலவழிச்சுப் படிக்கணும். கெமிஸ்ட்ரி ஒரு மாதிரியான சப்ஜெக்ட், எளிதில் எவாப்பரேட் ஆயிடும், அதாவது படிச்சதெல்லாம் மறந்துவிடும்" னு சொன்னால்.. "இல்லை எனக்கு இன்னொரு பாடத்தில் டெஸ்ட் இருக்கு, அதுக்கும்  படிக்கணும்" என்று தன் பிரச்சினைகளை சொல்வார்கள். நியாயமான காரணங்கள்தான் அவைகளும் என்று அதுபோல் அறிவுரை சொல்வதை விட்டுவிட வேண்டிய நிலை வரும். ஆக பொதுவாக நாம் படிக்கும் மாணவ  பருவத்தில் எதையும் உள்ளிறங்கி புரிந்துகொள்ள சரியான அளவு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் ஒரு சில மாணவருக்கு என்ன படிக்கணும்னு தெரியும், எப்படி மார்க் வாங்கணும்னு தெரியும். எப்படிப் புரிந்துகொண்டால் சரியாக பதில் சொல்ல முடியும் என்றறிந்து பதிலெழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்றும் மேலே மேல்ப்படிப்புக்குப் போய் விடுவார்கள்.  அதுக்கப்புறம் ஒரு வருடம் கழித்து அவங்க படிச்சு நெறைய மதிப்பெண்கள் பெற்ற அந்த சப்ஜெக்ட் சுத்தமாக மறந்துவிடும். அதைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் என்பதுதான் கொடுமை.

ஆக நம் எஜுக்கேஷன் சிஸ்டம் (இந்தியா அமெரிக்கா எல்லா இடங்களிலும் தான்) நிச்சயம் குறையில்லாததல்ல! அதனால் நீங்க நல்லாப் படிக்கவில்லைனா நீங்க மக்கு என்றும், நிறைய மதிப்பெண்கள் வாங்கி மேலே சென்றுவிட்டால் நீங்க அறிவாளி என்றெல்லாம் என்னால் ஏற்றுக்க முடியாது.
உங்களிடம் உள்ள திறமையை நீங்க உங்களுக்கு எது நல்லா வருதோ அதில் முழுவதுமாக செலவழிக்கவில்லை. அதனால் உங்க எதிர்காலம் பிரகாசமாக அமையவில்லை. நீங்க திறமையே இல்லாதவராக எல்லாம் பிறக்கவில்லை என்பதே உண்மை.

ஆனால் நீங்க டாக்டராகி, இஞினியராகினால் நெறைய சம்பாரிக்கலாம், உங்க ஸ்டேட்டஸ் உயரும்.

ஆனால்  you need to understand, you have to do the job for 30 years! You should like what you are doing besides making money.

Choose a job you love, and you will never have to work a day in your life.

பள்ளியில் படிக்கும்போது என்னுடைய நண்பன் ஒருவன். மற்ற மாணவர்கள் போல் அவர் போட்டி, பொறாமை, நான் முதலிடம் வரணும் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனம் பண்ண மாட்டான். பொய் சொல்ல மாட்டான். அவனுடைய அப்பா அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அவர்களும் அவன் மனமறிந்து அவனை அவன் இஷ்டப்படி இஷ்டமிருந்தால் படிக்க ஊக்குவித்தார்கள்னு நினைக்கிறேன். பாடம் படிப்பதைவிட ஏகப்பட்ட புத்தகங்கள் படிப்பான். அவனிடம் ஏதாவது நான் சந்தேகம் கேட்டால், "உனக்கு இதுகூடத் தெரியலையா?" என்று சொல்லி சிரிக்கமாட்டான். அவனைவிட என்னை ஒருபோதும் குறைவாக நினைக்க மாட்டான். பொறுப்பாக அவனுக்கு தெரிந்ததை அவனால் முடிந்த அளவு அதை விளக்குவான்.  அழகாக விவரிப்பான். அவனுக்குப் போட்டி மனப்பாண்மை எல்லாம் கிடையாது.  அவனுடைய வீக்னெஸ்னு பார்த்தால் அவனுக்கு படிக்க "மூட்" வேண்டும் என்பான். "மூட்" இல்லைனா படிக்க மாட்டான். மற்ற நல்லாப் படிக்கும் மாணவர்கள் (ரொம்பச் சாதாரணமானவர்கள்), அவனுடைய ரைவல்ஸ் எல்லாம் அவனைக் கேலி செய்வார்கள் (புறமாகத்தான்).. "ஆமா, நாளைக்கு பரீட்சை இவனுக்கு இருந்தால், படிக்க  மூட் இல்லைனா, ஃபெயிலா யிடுவானா?" என்று.

You need to understand, people talk behind your back. They smile at you and behave wonderfully in front of you. They may not have much to say good about you when they talk about you to another friend.

The one who is talking to you about me today is the one who will be talking to me about you tomorrow.

I agree, not everybody is like that. But people in general are like that. It is better to know such facts. Anyway..

நான் மேலே சொன்ன நண்பன் பெரிதாகப் படித்து ஒண்ணும் சாதிக்கவில்லை என்பது உண்மையே. சாதனை என்று நீங்கள் நினைக்கும் சாதனைகளைச் சொன்னேன். ஆனால் என்னைப்பொருத்தவரையில் இன்றும் அவன் எனக்கு பெரிய அறிவாளியாகத்தான் தோன்றுகிறான். அவனைவிட பல மடங்கு படித்து மேலே வந்தவர்கள் சாதாரணமாக்த்தான் தோனுகிறார்கள். சகமாணவன் ஒருவனுக்கு தனக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுத்தால் அவனும் கற்றுக்கொள்வானே? அவன் அதிகமாக மார்க் வாங்கிவிட்டால்? என்கிற சிறு புத்தி அவனுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. நம்மையே அறியாமல் இதுபோல் நண்பர்களிடம் இருந்துதான் நமக்கும் இன்றுள்ள நாலு நற்குணங்கள் சிலவும் வந்துவிடுகின்றன.

*********************************
 கொசுறு 1 (giriblog இல்லை இது. :) )

சரி, தங்கம், ப்ளாட்டினம் எல்லாம் விலைஉயர்ந்த உலோகங்களாக இருக்கின்றன. விலை உயர்வுக்குக் காரணம் எப்போவுமே மங்காமல், மாறாமல் இருக்கின்றன. அதனால் அவைகளுக்கு மதிப்பு அதிகம். ஆனால் இரும்பு, அலுமினம் போன்றவை அப்படியல்ல.

இதை வேற மாதிரி யோசிப்போம்.

ஆக்ஸிடேஷன் என்பது ஒரு இயற்கையாக நடக்கும் ரியாக்சன். அதாவது இரும்பு தாதுக்களாக இருக்கும்போது ஆக்ஸைட்ஸ் ஆகக் கிடைக்கும். மனிதன் அதிலுள்ள ஆக்ஸினை கழட்டிவிட்டு, அதை இரும்பாக ஆக்குவான். அதை பலவகையிலும் பயன்படுத்துவான். அதிலிருந்து ஸ்டீல் உருவாக்குவான். பல உலோகக் கலவைகள் தயாரிப்பான். அதை வைத்து தனக்குத் தேவையான திடமான பொருள்களை தயாரிப்பான். ஆனால் வருடங்கள் கடக்கக் கடக்க இரும்பு ஆக்ஸிஜனுடன் உறவாடி மறுபடியும் இரும்பு ஆக்ஸைடாக, ரஸ்ட் ஆக ஆரம்பித்துவிடும். அதாவது திரும்ப தாதுக்களாகவே மாற ஆரம்பிக்கும்.

ஆனால் தங்கம் ப்ளாட்டினம் போன்றவை அவ்வளவு எளிதாக ஆக்ஸினோடு உறவாடி ஆக்ஸைட்களாக மாறுவதில்லை. அதனால் அவைகள் நூற்றுக்கணக்கான  ஆண்டுகளுக்கு மேலே பளபளப்பாகவே இருக்கும் என்றும் விளக்கலாம்.

கொஞ்சம்  கெமிஸ்ட்ரி கத்துக்கிட்டீங்களா?

தங்கத்தின் அணு எண் என்ன?

அதனோட எலக்ட்ரான் கான்ஃபிகுரேஷன் தெரியுமா?

+2 வில் நீங்க அறிவியல் படிக்கவில்லையா?

படிச்சேன்.. ஆனால் ..

எல்லாம் மறந்துடுச்சா?

இல்லை உங்க வாத்தியார் புரிகிறார்போல் சொல்லிக் கொடுக்கவில்லையா?

சரி, விடுங்க! நான் எப்போதுமே என் கெமிஸ்ட்ரி வாத்தியார்களைத்தான் குறை சொல்லுவேன்! 

-----------------
கொசுறு 2:

ஸ்டாக் மார்க்கட் பத்தி எழுதுவோமா?

இது காசு சம்பாரிக்கவோ, உங்களை டெம்ப்ட் பண்ணி, புதை குழியில் தள்ளவோ எழுதவில்லை. சும்மாதான். நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, நான் சொன்ன ஸ்டாகில் காசை நீங்க விட்டுவிட்டால்  நான் பொறுப்பல்ல.

* ஹாண்டா (HMC) , டொயோட்டா (TM) எல்லாம் கடந்த மூன்று  மாதங்களாக அதில் இன்வெஸ்ட் பண்ணியவர்களை சந்தோஷப்படுத்துகிறது.

* ட்விட்டர் (TWTR) மற்றும் ஃபேஸ் புக் (FB) ஸ்டாக் களும் தான். கடந்த 3-6 மாதங்களில்.

* ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பில் சரியான நேரத்தில் இறங்காத்தால் படுத்து இருந்த சோனி (SNE), கடந்த இரண்டு மாதங்களில் 15% மேலே போய் உள்ளது.

* கடந்த வார இறுதியில் மைக்ரோ சாஃப்ட் 10% அதிகமாகி உள்ளது. இது தொடர்ந்து மேலே போகுமா? இல்லை கீழே வருமா?னு சொல்ல எனக்கு ஜோஸியம் தெரியாது.

* kroger திடீர்னு மேலே போயி (30%?) ஒரு மாதிரி நிதானிச்சு நிக்கிது.

Are you a gambler? I mean do you invest in stocks?

A says: Stock market? What's that?

You are lucky!

B says: I dont have money.

You are lucky too.

C says: I did own all those stocks and made money!

You are a winner today. May be not tomorrow!  Keep gambling!

D says: All my stocks went down! I did not have FB, HMC, TWTR, TM, KR, MSFT  stocks.

I am sure you are going to wait until your stock goes up! Keep gambling. Hold them till it goes up or down!

*************************


Wednesday, November 19, 2014

மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு!

சுகன்யாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. காஃபி எடுத்து கொடுத்த அட்டண்டண்ட்க்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் காஃபியை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தாள். வெயில் அதிகமாக இருப்பதால் ஒரு சல்வார் காமிஸ் அணிந்து வந்திருந்தாள். இவளுடைய இந்திய அவுட்ஃபிட்டை வழக்கம்போல ஒரு சிலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். 46 வயதிலும் சுகன்யா அழகுதான். தன் அழகு  பல ஆண்களை கவர்வதை மற்றவர்களின் பார்வையிலேயே உணர்ந்தாள். மற்ற ஆண்கள் தன்னைப்பார்ப்பதை ரசிக்கும் அவள் அதே பார்வை இன்று தன்னை மணந்த கணவன் பார்த்தால் மட்டும் அவளுக்கு பிடிக்கவில்லை! அருவருப்பாக இருந்தது!

இப்போது சனிக்கிழமை காலை 11 மணி. இந்த விடுமுறை நாளில்கூட அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தால் அந்த ஆளையும் அவர் செய்கிற நாலு மணிநேர பூஜையையும் பார்க்க வேண்டும். அவரைப்பார்த்தாலே பிடிக்கவில்லை! அவர் வாயை திறந்தால் கோபம் தலைக்கு ஏறியது! அவர் பூஜையும் அவர் வழிபாடும்! என்றுமே நிறுத்த முடியாத புகைபிடிக்கும் பழக்கம் வேற! இவரெல்லாம் என்ன விஞ்ஞானி? புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு தெரியாத பெரிய விஞ்ஞானி? இந்தாளு பேசுறதெல்லாம் வியாக்யானம் ஆனால் பண்ணுறதெல்லாம் அயோக்கியத்தனம்! அவர் செய்யும் எல்லாவற்றிலும் வடிகட்டிய சுயநலம் நிறைந்து வழிகிறது! இதில் கடவுளையும் தன் அயோக்கியத்தனத்திற்கு உதவிக்கு அழைக்கிறார் போலும்! ஆமாம், இப்படி மணிக்கணக்காக பகவானை வழிபட்டு வழிபட்டு, யாரை ஏமாற்றுகிறார் இந்த ஆளு? கடவுளையா? தன்னையேவா? இல்லை ரெண்டு பேரையும் சேர்த்தா? யாரை வேணா ஏமாற்றட்டும் என்னை விட்டால் போதும்!

மனுஷாளை மனுஷா புரிஞ்சுக்கணும்! அதற்குத்தான் ஆறாவது அறிவு! இல்லைனா மிருகத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அடுத்தவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத மிருக ஜென்மம் இது! கொஞ்சமாவது முயற்சியாவது செய்கிறாரா, புரிந்துகொள்ள? கடவுளின் தேவைகள்  மட்டும் இவருக்கு புரிகிறது! இல்லை, புரிந்துகொண்டதாக நம்புகிறார். இவர் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை செய்யாமல், எந்த விதமான கெட்ட பழக்கங்களையும் குறைக்காமல், முழுநேரமும் கடவுள் புகழ்பாடினால், அவரை துதித்தால்.. உடனே கடவுள் இவரை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொள்வார் என்று இவராகவே நம்புகிறார். என்ன ஒரு பரிதாபம்! அறியாமையின் உச்சம்!

மனைவி வேண்டும்! எதற்காக? விதவிதமாக சமைத்துப்போட! இவருக்குத் தேவையான நேரத்தில்  இவர் இஷ்டப்படி  இவரை இன்பத்தில ஆழ்த்த! ஆனால் இவரால் உடம்பை வளைத்து வேலை பார்க்க முடியாது! குடும்பத்திற்காக எந்தவித தியாகமும் செய்ய முடியாது! சம்பளம் இல்லாமல் எப்படி பில் மற்றும் மார்ட்கேஜ் கட்டுவது நான்? சம்பாரிக்காமல் எப்படி சாப்பிடுவது? இவர் இவரோட பகவானா வந்து கட்டுவான் வருகிற பில்லை எல்லாம்? இவர் கொடுக்கிற பூ வழிபாடு, புகழ்ச்சியெல்லாம் கேட்டு என்ன செய்வான் பகவான்? புகழுக்கு மயங்குகிற சாதாரண ஒருவர்தானா என்ன கடவுள்?

இதென்ன இந்தியாவா? ஒரு அரசாங்க வேலையை வாங்கிக்கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டு காலம் முழுவதும் குப்பை கொட்ட? வேலை செய்ய முடியலைனா வண்டியைக்கட்ட வேண்டியதுதானே இந்தியாவிற்கு? கஷ்டப்பட்டு சம்பாதிக்க உடல் வளையமாட்டேன் என்கிறது. இதில் எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது மூட்டு வலிக்குதுனு நாடகம் வேற! "எண்டெர்"னெட் பாக்க மட்டும் எப்படி முடியுது அப்போ?

இந்த ஆளோட எப்படி வாழ்வது? சரி உன்னைப்பிடிக்கவில்லைனு தெரிந்தால்  விட்டுவிட்டு போய் தொலைய வேண்டியதுதானே? கொஞ்சமாவது சுயமரியாதை வேணாம்? இதில் கேள்வி வேற! அப்போ  மட்டும் ஏன் என்னைப் பிடித்தது? இப்போ ஏன் பிடிக்கவில்லை?. இதை எல்லாம் பச்சையாக சொல்ல முடியுமா என்ன? அவங்கவங்களுக்கா புரியணும். ஒன்று மட்டும் புரிந்தது சுகன்யாவுக்கு! இந்த ஆளு இவளையும் நிம்மதியாக வாழ விட மாட்டான், அவனும் வாழ மாட்டான்! சுகன்யாவுக்கு கோபமும், அழுகையுமா வந்தது !

இதே கணவனைத்தான் 25 வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாள். அதிசயமாக இருந்தது இப்போது அதை நினைத்தால் அவளுக்கு! இவரையா காதலித்தோம் ? இன்று ஒரு இணுக்களவு காதல் கூட எஞ்சி இல்லை அவளிடம்! சுமார் 26 வருடங்கள் முன்பு! ஐ ஐ டி யில் பி எச் டி பண்ணுவதற்காக பயோ கெமிஸ்ட்ரி டிப்பார்மெண்டில் சேர்ந்தாள் சுகன்யா. இவள் சேர்ந்த ஆய்வகத்தில், 5 வருட சீனியர் ரிசேர்ச் ஸ்காலராக இருந்தார் ராகவன். அழகாக இருந்ந்த அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். இவளுக்கு கோர்ஸ் வொர்க் பண்ணும்போது எல்லாவிதமான சந்தேகங்கள், அசைன்மெண்ட் எல்லாவற்றுக்கும் ராகவன் வழியவே வந்து உதவி புரிந்தார். ராகவன், இவளைவிட நல்ல நிறம்! மேலும் அவரிடம் அழகு, நிதானம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது அன்று. அவரிடம் கெட்ட பழக்கம் என்று சொன்னால், கொஞ்சம் ஸ்மோக் பண்ணுவார்போல தெரிந்தது. அன்று அது பெரிய தவறாகத்தெரியவில்லை. காதலில் விழுந்தாள் சுகன்யா. அது காதலா? இல்லை என்னவோ ஒண்ணு! அந்த நேரத்தில் நன்றாகத்தான் இருந்தது.

இவள் தான் படிக்கபோன பி எச் டி யை முடிக்காமல், பாதியில் விட்டுவிட்டு இரண்டாம் வருடம் படிக்கும்போதே ராகவனைக் கல்யாணம் செய்துகொண்டாள். சுகன்யாமேல் அவள் அப்பாவுக்கு பயங்கர கோபம். இவள் பாதியில் படிப்பை நிறுத்தியது அவள் தந்தைக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை. கல்யாணம் நடந்து எண்ணி ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாள். அழகாக மூக்கும் முழியுமாக இருந்தாள் காயத்ரி. பிறகு அவர் மேல்ப்படிப்புக்காக அமெரிக்கா வரும்போது, கணவருடன் சேர்ந்து வந்தாள். இங்கே வந்தவுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ரமேஷ் என்றழைத்தார்கள். அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிய பிறகு இவளும் வேலைக்குப்போனாள். நல்லவேளை பி எச் டியை பாதியில் நிறுத்தினாள்! எம் எஸ் க்கு, பி எச் டியை விட வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது! வாழ்க்கை ஓரளவு நன்றாகத்தான் போனது ஒரு 15 வருடம். இப்போழுது வளர்ந்து, மூத்தவள் கல்லூரியில் சீனியராக இருக்கிறாள். பையன் ஹைஸ்கூலில் ஜூனியர். அவர்கள் ஓரளவுக்கு இண்டிப்பெண்டெண்ட் ஆக ஆகிவிட்டார்கள்!

பசங்கள் இருவருக்குமே சுகன்யாவைத்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் அப்பா பிடிக்காது என்றில்லை. என்னதான் இருந்தாலும் அப்பா-அம்மா சேர்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு பிடிக்கிறது. அமெரிக்காவில் வளரும் வாழும் பசங்க எப்படி இருப்பார்கள்? சுயநலத்தின் முழு உருவம்! சுயநலமாக இருப்பது தவறு என்றெல்லாம் அமெரிக்காவில் மாரல்ஸ் சொல்லித் தருவதில்லை. ஒரு வேளை அப்படி அவர்களுக்கும் சொல்லித்தந்திருந்தால் அவர்களும் இன்னொரு தேர்ட்-வேர்ல்ட் நாடாக இருப்பார்களோ என்னவோ.

இங்கே வளரும் குழந்தைகளுக்கு என்ன மனநிலை? தனக்கு அப்பா அம்மா எல்லாமே தரணும், அவர்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளணும். சரி, அவர்களை படிக்கவைத்து மேலே கொண்டு வந்தாச்சு! அவர்கள் இப்போ அம்மா இவள் உணர்ச்சியை புரிந்து கொள்கிறார்களா? "அப்பாவை ஏன் வெறுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்கும்போது இவளுக்கு எரிச்சலாக வந்தது. குழந்தைகளுக்கு என்ன தெரியும், இவளுடைய தேவைகள்? அவர்களுக்கு தெரியுமா, அவருடன் படுப்பதே அருவருப்பாக உள்ளது என்று? மனைவிக்குத்தான் தெரியும் கணவனின் அந்தரங்கப்பகுதி.

அவர்களிடம் சொல்ல எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல முடியுமா?  இவர்கள் அப்பா ஊர் உலகத்தைப்போல், சம்பாதித்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்தால், நான் ஏன் அவரை வெறுக்கிறேன்? எனக்கு காதலிக்க தெரியாதா? இல்லை அன்பாக இருக்கத் தெரியாதா? தேவையே இல்லாமல் ஒருவரை அதுவும் கைப்பிடித்த கணவனை வெறுப்பேனா? பணம் இல்லைனா பிணம்னு தெரியாதா இந்த ஆளுக்கு?

சுகன்யாவுக்கு இன்னொரு சந்தேகம். இந்த ஆள் இவளை பழி வாங்குகிறாரா? ஒரு மாதிரியான "சாடிஸ்டா" இவர்? யோசித்துப்பார்த்தால் இவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்ததே சுகன்யா, கணவன்  ராகவனைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்தான். இவள் அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிறதால் தான் இப்படி இருக்கிறாரோ ? அதனால்தான் எந்த வேலையும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் என்கிறாரோ? சரி எது எப்படியோ போகட்டும், இருவருக்கும் ஒத்துவரலை என்றால் விவாகரத்துக்கு சரினு சொன்னால் என்ன? இரக்கமே இல்லாமல் நாந்தான் உனக்கு இந்த வாழ்க்கையே கொடுத்தது என்றல்லவா பேசுகிறானே பாவி! ஆமாம் இவர்தான் இந்த அமெரிக்க வாழ்க்கை கொடுத்தாரு! இவரால்தான் அமெரிக்கா வந்தேன். ஆனால் இவரை சந்திக்கலைனா நானா பி எச் டி முடித்து வந்து இருப்பேனே! மேலும் இவருக்கு நான் கொடுத்ததெல்லாம்? இப்படி எல்லாம் கணக்குப் பார்க்க முடியுமா என்ன?

சுகன்யாவின் தோழிகள் இவள் உணர்வுகளை புரிந்தாலும், அவர்களால் எதுவும் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை என்பதே உண்மை. "உன் வாழ்க்கை சுகன்யா, நீதான் முடிவு பண்ணணும்" என்று சொல்லாமல் சொன்னார்கள். இந்திய கலாச்சாரத்தை அமரிக்காவில் வந்து வாழ்ந்து காக்கும் இந்தியப் பெரியமனிதர்கள் சிலர், சுகன்யாவிடம் "இந்த வயதில் இதென்ன விளையாட்டு?" என்று இவள் ஏதோ தேவையே இல்லாமல் விவாகரத்து கேட்பதுபோல் பேசுகிறார்கள். அவளுக்கு கோபமாக வந்தது! யார் சொன்னா எனக்கு வயதாகிவிட்டது என்று? யாருடைய அட்வைஸைக் கேட்டாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு.

ஒரு சில நலம்விரும்பிகள் நேரடியாகவே சுகன்யாவை பயமுறுத்தினார்கள், “இவள் விவாகாரத்துக்குப் போனால் தற்கொலை பண்ணிகொள்வார் ராகவன் என்று” ஆமாம், இரண்டு முறை அப்படி அவர் நாடகம் ஆடியதும் உண்டு. நான் சம்பாதிக்க மாட்டேன், தினமும் 4 மணி நேரம் பூஜை செய்வேன், என்னால் குடிப்பதையோ அல்லது ஸ்மோக் பண்ணுவதையோ, வேறு எதையுமே தியாகம் பண்ண முடியாது என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதுதானே?

 ராகவனுக்கு இவள் மேல் அளவில்லாத ஒருதலைக் காதலாம்! தன்னைக் காதலிக்காத, மேலும் அடியோட வெறுக்கும் மனைவியை இவர் எப்படி இன்னும் காதலிக்க முடியும்? புரியவே இல்லை அவளுக்கு! ஆனால் இவர் தற்கொலை பண்ணிக்கொள்வாரோ என்று சுகன்யாவே பயந்தாள். காரணம்? இவள் காதல் கிடைக்கவில்லையே என்ற விரக்திலாம் இல்லவே இல்லை! இவளை பழிவாங்க வேண்டும் என்கிற கேவலமான எண்ணம் ராகவனுக்கு இருக்கலாம். அப்படி ஏதாவது விபரீதம்  நடந்தால் ஊர் உலகம் ராகவனுக்கு சிலையும்,  சுகன்யாவுக்கு  கொடுமைக்காரி பட்டமும் கொடுக்கும் என்கிற கேவலமான எண்ணத்தினால் தற்கொலைகூட  செய்யலாம் என்று நம்பினாள், சுகன்யா.

எனக்கு என் வாழ்க்கையை என் இஷ்டம்போல் வாழ சுதந்திரம் இல்லையா? . இதுதான் உலகமா? இதுதான் வாழக்கையா? என்கிற பழைய பாடலுக்கு இன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு. பிடிக்காத ஒருவருடன் வாழ்வது நரகம்தான் அவளைப் பொருத்தவரையில். எதற்காக இப்படி இவரோட அர்த்தமில்லாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழணும்? இந்த பாழாப்போன உலகத்திற்கு எனக்காக நான் வாழ ஆசைப்படுவது ஏன் பெரிய தப்பாத்தெரியுது? நான் நிம்மதியாக இருக்கணும் என்று நினைப்பது பேராசையா? சுகன்யாவுக்குப் புரியவில்லை!

சுகன்யாவுக்கு வாழ்க்கை கசந்தது. நிம்மதி எல்லாம் போய்விட்டது. "மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?" என்பதெல்லாம் ஆண்களே பெண்களை ஏய்க்க எழுதிய வெறும் அர்த்தமில்லாத பாடல் வரிகள்! சுகன்யாவைப் பொருத்தமட்டில். மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு! நாமாகப் போட்டுக்கொண்ட வேலிகள் சில!  நம்மைச் சுற்றியுள்ளோர் போட்டவைகள் பல!

சுகன்யா காஃபியை குடித்துவிட்டு புறப்பட்டாள் வீடு என்கிற நரகத்திற்கு! தன் உணர்வுகளை புரியாத மதிக்கத்தெரியாத, சுயமரியாதையே இல்லாத, அந்த சுயநலவாதியுடன் தொடர்ந்து வாழ!

diclaimer: கட்டுரைபோல் இருக்கும் இது ஒரு "கற்பனைக் கதை" தான்!

அந்தக்காலத்தில் எழுதிய ஒரு மீள்பதிவு!

Tuesday, May 13, 2014

அடங்காத காளை ஒண்ணு அடிமாடானது!

"என்ன மோகன்! என்னைக்கு வந்தீங்க இந்தியாவுக்கு? என்று விசாரித்தார் அவனுடைய பி எஸ் ஸி க்ளாஸ்மேட் ராஜாராம்.

"நேற்றுத்தான்" என்றான் புன்னகையுடன்.

"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"

"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான், மோகன்.

மோகனுக்கும் அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம், அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல் முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.

மோகன் ஒரு நாள் உட்கார்ந்து தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு, கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும் பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும் செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில் வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க வேண்டியதுதான் வயதான காலத்தில்.

எதுக்காக சம்பாரிக்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு. மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன் குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.

யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.

தன் அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும் நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை அவனுக்கு.

அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல் தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான் வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடும்பத்தலைவன்!

ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன் விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports car வேணும் என்றான். அதன் விலை $30,000.

"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.

"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.

"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.

"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.

"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.

"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"

"ஒரு புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும் இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன் சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.

அவன் சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன் மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.

புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.

"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.

"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.

அவன் மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன் இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப வாழ்க்கையை.

நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால் நிம்மதியாக!

ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது. அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம் செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான் சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான் பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!

இப்போ இந்தியா வர ஒரு மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ் இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான். அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று வந்தான்.

கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய் இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.

*******

மன்னிக்கவும், இதுவும் மீள்பதிவே! :-)

Wednesday, May 7, 2014

அழகான பொண்ணு நான்!

ஐந்து வருடப்படிப்பு முடிந்துவிட்டது! அமெரிக்கா போவதற்கு விசாவும் வாங்கியாச்சு! எல்லோருக்கும் நாளை ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு பறக்க வேண்டியதுதான் இந்த நாட்டைவிட்டு. இப்படி யோசித்துக்கொண்டே தன் முகத்தை தன் அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில் பார்த்தாள் சகுந்தலா.

அவளுக்கு தன் முதல் வருடம் இந்த ஐ ஐ டி யில் வந்து சேர்ந்த ஞாபகம் வந்தது. அன்று இவள்தான் புது வரவுகளில் பேரழகி! இவளை வேடிக்கை பார்க்கதாத மாணவர்களோ, இளம் மற்றும் வயதான பேராசிரியர்களோ இல்லை. நீதாண்டி இந்த வருட #1 என்று அவள் தோழிகள் தன் பாய்ஃப்ரெண்ஸிடம் இருந்து கேட்டு வந்து சொன்னார்கள். அவளுக்கு தன் அழகினால் பெருமிதமும் கொஞ்சம் திமிரும்கூட இருந்ததென்றே சொல்லவேண்டும். அடுத்த வருடம் இன்னொரு புது வரவுக்கு அந்தப்பேரழகிப்பட்டம் போய்விட்டது. இவளுடைய ரசிகர்கள் எல்லாம் புதுவரவின் ரசிகர்களாகி விட்டார்கள்! இருந்தாலும் இவளுடைய “லாயல் விசிறிகள்” இரண்டாவது வருடத்திலும் இருக்கத்தான் செய்தார்கள். அப்போதெல்லாம் சகுந்தலா தன் முகத்தை அவளே பார்த்து ரசித்துக்கொள்வாள். கண்னாடி முன் பலமணி நேரம் நின்று தன்னை அழகு பார்ப்பாள். “அழகான பொண்ணு நான், அதற்கேற்றகண்ணுதான்” என்கிற ஆதிகாலத்துப்பாடல் அவளையே நினைத்து எழுதியது போல தோனும் அவளுக்கு. அதெல்லாம் ஒரு காலம்! அந்தக் காலம்!

இன்று? கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தில் இருக்கும் அந்த தழும்புகளைப் பார்த்தாள் சகுந்தலா. இப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் அவள் நிற்கும் நேரம் மிக மிகக் குறைவு! அவளுக்குப் பார்த்து பார்த்து பழகிவிட்டது. ஆனால் புதிதாக அவளைப் பார்ப்பவர்கள்தான் ஒரு பரிதாபப்பார்வை பார்த்து அவளை கஷ்டப்படுத்துவார்கள். அவள் முகத்தில் உள்ள தழும்புகளை ஞாபகப்படுத்தி, அவள் முகம் விஹாரமாக இருப்பதை அவளுக்கு ஞாபகப்படுத்தி அவளை அழவைப்பார்கள்! தன் மேல் அனுதாபம்தான் படுகிறார்கள் என்று அவளுக்குப்புரிந்தாலும் அவளுக்கு அந்தப் பரிதாபப்பார்வை பிடிக்காது!

இவள் 3 ம் வருடம் படிக்கும்போது அந்த எக்ஸ்பரிமெண்ட் பண்ணும்போதுதான் அந்த விபத்து நடந்தது. “லிக்விட் அம்மோனியா” வை ஒரு கண்ணாடிக்குடுவையில் எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய வேலை செய்யும் “ஹூட்” ல வைக்கும்போது, இவள் அந்த “மெட்டல் ஸ்டாண்ட்” ல் சரியாக அந்தக்குடுவையை “க்ளாம்ப்” பண்ணாததால், அது நழுவி, கிழே உள்ள இரும்புப்பகுதியில் பட்டு உடைந்து, அம்மோனியா அவள் மேல் தெறித்தது! தெறித்து அவள் முகத்திலும் உடலிலும்கூட பட்டது. நல்லவேளை “சேஃப்டி கண்ணாடி” போட்டிருந்ததால் கண்கள் மட்டும் தப்பியது! ஆனால் அவள் முகம் மற்றும் உடலெல்லாம் பட்டுவிட்டது. உடலெல்லாம் எரிந்தது! எப்படிக் கதறினாள்!

அந்த வலியெல்லாம் சில வாரங்களில் போய்விட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட இந்த வடுக்கள்? அதுபோல் ஒரு பயங்கர விபத்து இதுவரை அந்த ஆய்வகத்தில் எந்தப் பெண்ணுக்குமே, ஏன் ஆண்களுக்குக்கூட நடந்ததில்லையாம். அன்றிலிருந்துதான் அவளுக்கு “அழகான பொண்ணு நான்” பாட்டை கேட்டாலே பிடிக்காமல் போனது. தத்துவப்பாடல்கள் எல்லாம் பிடிக்க ஆரம்பித்தது, அதில் உள்ள அர்த்தங்கள் எல்லாம புரிய ஆரம்பித்தது. அழகு நிரந்தரமானதில்லை என்பதை அறிந்து கொள்ள இவ்வளவு பயங்கரமான பாடமா அவள் கற்க வேண்டும்? பிறவியிலேயே அழகில்லாமல் பிறந்தால்கூட பரவாயில்லை. என்னைப்போல் பாதியில் எல்லாவற்றையும் இழப்பதுதான் மிகவும் பரிதாபம் என்று நினைப்பாள் சகுந்தலா.

“எல்லாம் இறைவன் செயல்” என்று சிலர் பேசும்போது எரிச்சலாக வரும் அவளுக்கு. யார் இந்த இறைவன்? மனிதர்களின் வாழ்க்கையில் விளையாட இவருக்கு யார் அனுமதி கொடுத்தது? இறைவன் ஒரு கொடூரப்புத்தி உள்ளவன் போலும்! இல்லையென்றால் என் முகத்தை ஏன் இப்படி சிதைக்க வேண்டும்? உலகத்தில் யார் எதை சாதித்தாலும் அது இந்த இறைவன் சாதனையாம்! யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அது அவர் விளையாட்டாம்! இல்லை இல்லை அது அவர்கள் முன்பு செய்த பாவத்தின் விளைவாம்! வேடிக்கையான மனிதர்கள்!

“நான் இந்தப்பிறவியில் யாருக்கு என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்டால். அது என்னுடைய “கர்மா” வாம்! நான் இந்தப்பிறவியில் அனுபவிப்பது, போன பிறவியில் செய்த பாவமாம்! சரி அப்படியே பார்த்தாலும் “என்னுடைய முதல் பிறவியில் யாருடைய “கர்மா” வால் நன்மை தீமை அனுபவிக்கிறேன்?” என்பதை யாராவது சொல்ல முடியுமா? “கர்மா” என்பதே அர்த்தமில்லாமல் போய்விடும் இப்படி எல்லாம் யோசித்தால்! பக்திமான்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அவர்களுக்கு பதில் சொல்லத் தெரிந்த கேள்விதான் கேட்கனும்! இல்லை என்றால் என் கேள்வி விதண்டாவாதமாகிவிடும்! மேலும் இப்படியெல்லாம் கேட்டால் கடவுளுக்குப் பிடிக்காது! எனக்கும்தான் இப்படி ஒரு விபத்து நடந்தது பிடிக்கவில்லை! எனக்குப்பிடித்ததை செய்யாத கடவுளுக்கு நான் ஏன் அவருக்கு பிடித்ததெல்லாம் செய்யனும்?

“உனக்கு ஃபோன் கால், சகுந்தலா!” என்றாள் தோழி.

ஹாஸ்டலில் உள்ள “லேண்ட் லைன்” க்கு போய் ரிசீவரை எடுத்தாள்.

“விசா கிடைத்துவிட்டதா, சகுந்தலா! கண்க்ராட்ஸ்” என்றான் அவள் நண்பன் குமார் இன்னொரு அமெரிக்க முனையிலிருந்து!

“ஆமா, குமார்! நாளைக்கு ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு, திருச்சிக்குபோய் எல்லோரிடமும் பை சொல்லிவிட்டு பறந்து வரவேண்டியதுதான் உங்களிடம் என்றாள் மகிழ்ச்சியுடன்!

“சரி, ஃப்ளைட் ஸ்கெட்யுள் எனக்கு இ-மெயில் பண்ணு! உன்னை விஷ் பண்னத்தான் கூப்பிட்டேன், பை” என்றான் குமார்.

“பை, குமார்!” என்று சொல்லிவிட்டு ஹேங் அப் பண்ணினாள்.

இவள் #1 அழகியாக இருக்கும்போது இவளை சட்டை செய்யாத குமார், அந்த விபத்துக்குப்பிறகு, இவள் மேல் எவ்வளவு அன்பு! என்ன பரிவு! மனிதர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்! இவர்களை வணங்கலாம், ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு என்று நினைத்துக்கொண்டு இரவு உணவுக்காக ஹாஸ்டலில் இருந்து மெஸ் க்கு புறப்பட்டு சென்றாள், சகுந்தலா!

Monday, April 28, 2014

நாந்தான் ஸ்பெஷல்! இல்லை நாந்தான்! போடாங்!

"நாந்தான் ஸ்பெஷல்!"

"இல்லை! நாந்தான்!"

"ஆமா, நீ யாரு?"

"நான் ஹைட்ரஜன்! நீ யாரு?"

"நான் ஆக்ஸிஜன்!"

"ஆக்ஸிஜனா? ஆமா நீ ஏன் ஸ்பெஷல்?"

"நான் இல்லைனா இவ்வுலகில் எந்த உயிரினமும் வாழமுடியாது! எல்லோருடைய உயிரோட்டமும் என்னால்தானே ஓடுது. இதுகூடத் தெரியாதா?"

"நான் இல்லைனா வாழ்ந்திடுமாக்கும்?  தண்ணீரில் ரெண்டு மடங்கு நாந்தான். நீ ஒரு மடங்குதான்!  தெரியுமில்ல? பூமியைவிடு!  இந்த பிரபஞ்சத்திலேயே நாந்தான் அதிக அளவு இருக்கேன் தெரியுமா?"

"எதாவது ஒளறாதே! ஆக்ஸிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழமுடியாதுனுதான் சொல்லுவாங்க. ஹைட்ரஜன் இல்லாமல்னு யாராவது சொல்லுவாங்களா?"

"யாரு சொல்றாங்க?  மனிதர்களா?"

"ஆமா."

"அதுகளுக்கு ஆறு அறிவுதான். எனக்கு உடம்பெல்லாம் அறிவு!"

"அது சரி."

 "கீழே பாரு!"



இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன்


"என்ன இது? ஏதோ ரியாக்சன் மாதிரி இருக்கு"

"நீ  அந்த ரியாக்ஷன் சீக்வென்ஸில் இல்லாதனால இதெல்லாம் புரியாது உனக்கு! சரிதானே? "

"நான் இல்லைங்கிறது இருக்கட்டும். என்ன நடக்குதுனு சொல்லு!"

"சூரிய ஒளி உயிரினங்களுக்கு அவசியமா?"

"ஆமா"

"அது எப்படி உருவாகுது?"

"சூரியன்ல இருந்து"


The Sun by the Atmospheric Imaging Assembly of NASA's Solar Dynamics Observatory - 20100819.jpg
சூரியன்: இதில் உண்டாகும் ஒளிக்கு மூலகாரணம், ஹைட்ரஜன்கள் இணைந்ஹ்டு உண்டாகும் நியுக்ளியர் ஃப்யூசன் ரியாக்சன்


"சூரியன்ல இருந்து எப்படி ஒளி உண்டாகுது?"

"ஏதோ நியூக்ளியர் ஃபிஷ்ஷன், நியூக்ளியர் ஃப்பியூஷன்னு சொல்றாங்க!"

"அது யாரு யாரு "சேர்ந்து"  "ஒளி சக்தி" உருவாகுது தெரியுமா?"

"யாரு யாரு?"


" நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன். ஒளியில்லைனா இந்த உயிரினங்கள் வாழ முடியாது. நான் இல்லைனா உயிரிங்கங்கள் இல்லை! இனிமேலாவது சும்மா நான் ஆக்ஸிஜன் க்ரேட், மண்ணாங்கட்டினு ஒளறாதே!"

"நீங்க ரெண்டு பேரும் லூசா? ஹைட்ரஜனாம், ஆக்ஸிஜனாம்!  மனிதனால் மதிக்கப்படுவது நாந்தான்!"

"ஐயா யாரு?"

"நாந்தான் "கோல்ட்" என்னை "தங்கம்" என்பார்கள் தமிழில்! பார்க்க அழகா இருப்பேன்"

பொற்காசுகள் (உயிரினங்கள் வாழ அவசியமே இல்லாதது)



தங்கம்! மனிதனால் மதிக்கப்படும் விலை உயர்ந்த பொருள்


"அது சரி, ரொம்ப அழகுதான் நீ! நீ யாருக்கு வேணும்?"

திராவிடர்கள் மட்டுமல்ல பொதுவாக மனிதன் என்றுமே அறியாமையில்தான் வாழ்கிறான். அவன் வாழும் அற்ப வாழ்வு, சுமார் 30 ஆயிரம் நாட்கள்தான். இந்த குறுகிய காலத்தில் அவன் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை, மதிப்புக் கொடுப்பவைகள், போற்றிப் புகழ்பவைகள்  எல்லாம் அவன் உயிர் வாழ எந்தவகையில் உதவாத தங்கம் போன்றவைகள்தான்.

இப்படிப் பட்ட மனித முட்டாள்கள் நிறைந்ததுதான் நம் தமிழ் பதிவுலகமும் கூட! அதனால் இவர்கள் வழங்கும் சான்றிதழ்களை வைத்து உங்களை  நீங்க எடை போடாதீங்க! தாழ்வாவோ, உயர்வாவோ நினைக்காதீங்க!



தொடர்புள்ள பதிவுகள்:


Sunday, April 6, 2014

பகவானின் விளையாட்டா எம் எச் 370 விமான மறைவு?!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதுபோல இந்த விமான மறைவு பற்றி  ஏதாவது ஒரு அதிரடித் தலைப்புடன் (பொய் பொய்யா தலைப்புகளுடன்) ஒரு சில தமிழ் வலைதளங்கள் பதிவெழுதிக்கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டன. விமர்சகர்கள், மீடியாக்கள் தரமற்றவர்களாவதற்குக் காரணம் எதைவச்சு பொழைப்பு நடத்துறதுனே தெரியாமல்ப் போய்விடும் இந்த முண்டங்களுக்கு!

விமானம் மறைந்து 29 நாட்களுக்கு மேலாச்சு! ஆஸ்திரேலியன், மற்றும் யு கே சாட்லைலட்ல ஏதோ தெரிகிறதுனு செய்தி வந்தது. உடனே கப்பல் எடுத்துக்கொண்டு போயி, விமானத்தில் போயி, கடலில் தேடினாலும் இதுவரை எந்தவிதமான உடைந்த விமானப் பகுதிகள் எதுவும் மாட்டவில்லை!
இனிமேலும் இந்தத் தேடுதல்களில் வெற்றியடைவார்களா?  என்னவென்று தெரியவில்லை.

மனிதன் எவ்வளவுதான் அறிவியலில், தொழில் நுட்பத்தில்  வளர்ச்சியடைந்தாலும் இதுபோல் நிகழ்வுகள் "பகவானின் கிருபையால்" நடக்கத்தான் செய்யுது.

பகவான் விளையாட்டில் சிக்கிய பாவி மனிதர்கள்


இறைவன் எதைச் செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். அது மனிதனுக்குப் புரியாது. இதுவும் நம்ம பகவான் செயலே என இறை பக்தர்கள் நம்புவார்கள் என்றே நானும் நம்புகிறேன்.
பகவானின் விளையாட்டு

 "இறைவனின் விளையாட்டே விளையாட்டு!" னு கடவுளை மெச்சிப் பாராட்டும் கடவுள் பக்தகோடிகள்  எல்லாரும் சேர்ந்து, விஞ்ஞானிகளை எல்லாம் ஓரமாக உக்கார வச்சுட்டு, காணாமல்ப் போன அந்த விமானத்தை, பகவான் துணையுடன் ஆன்மீக முறையிலோ, யாகம் கீகம் வளர்த்தோ, இல்லைனா முழு நேரம் பூஜை செய்தோ விரைவில் தேடிக் கண்டுபிடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.

ஆனால் எவனாவது எப்படியோ தேடி கண்டுபுடிச்ச பிறகு "பகவாந்தான் வழிகாட்டி" கண்டுபிடிக்க வச்சாருனு பகவான் விளையாட்டுக்கு க்ரிடிட் கொடுத்து பகவானிடம் நல்ல பேர் வாங்கமட்டும் தயங்கமாட்டாங்க, இந்த பகவான் அடிவருடிகள்!

இவ்வளவு நாட்கள் கடந்துவிட்டதால், பயணித்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், பயணிகள் மறைந்துவிட்டதாக  அவர்கள் தாய் தந்தையர், கணவன் மனைவி மற்றும் உறவினர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அதில் நம்முடைய குடும்பத்தவர் (அக்கா, தங்கை, அம்மா போன்றோர்) பயணித்து இருந்தால், நம் நிலைப்பாடும் அதை ஒத்தே இருக்கும். இல்லையா?

மனிதன் வாழ்க்கையில் இப்படி விளையாடும் மூளையோ, உணர்ச்சிகளோ இல்லாத "உயர்தர பகவானை" தொடர்ந்து கட்டி அழுங்கள்!

"பகவான் விளையாட்டே விளையாட்டு!"என்று இதையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் பகவான் அடிவருடிகள்  அவர் கோபத்தை தணிக்க தொடர்ந்து பஜனை பூஜை எல்லாம் செய்யுங்கள்!


Sunday, December 15, 2013

வித்யா,சோமு,காமினி! (மெச்சூர் வாசகர்களுக்கு மட்டும்)

"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் மறைக்காமல்ச் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால் அவள்" னு சோமுவிடம் எந்த மடையன் சொன்னான்னு தெரியவில்லை! கண்டவன் சொன்னதையெல்லாம்  நம்பி தன்னுடைய "பாண்டஷி உலகை" மனைவி வித்யாவிடம் இருட்டில்  உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான் சோமு!

வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா  முடிஞ்சது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத சொந்தக்காரர்கள் ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ், நண்பர்கள் அறிவுரைகள் எதுவும் இல்லாம ஒருவழியா "நல்லவிதமாக" விவாகரத்தானது.

இவர்களுக்கு இல்லரவாழ்வினால் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு சோமுவுக்கு "பை" சொல்லிவிட்டு வித்யா பின்னாலேயே ஓடிட்டான்.  எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது. விவாகரத்து "அஃபிஸியல்" ஆகிவிட்டது.

****

அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக இழந்திருந்த அவனுடைய தனிமனிதச் சுதந்திரம்  கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது. சினிமா, பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை இப்போதெல்லாம் "அர்த்தமாக" செலவழித்துக் கொண்டு இருந்தான், சோமு.

போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல காமினியைப் பார்த்தான்.   எக்ஸ் வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அவளைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு  "ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள்  நுழைந்து விட்டான்.

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு  புரிந்தது அவனுக்கு.


*****

சோமு-வித்யா தம்பதிகளுக்குள் கவர்ச்சி, காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு தலைதூக்கியது. அடுத்து  ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போட ஆரம்பித்தபோது,  சோமுவுடைய வரம்புமீறல் மற்றும்  அவனோட எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை  எளிதில், குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று  நம்பி  அவளிடம் படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள் திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது  சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?" என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.

அவளோ  "நானும் எத்தனை காலமா பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்! இன்னும் இருண்டுகொண்டேதான் போகுது" என்றாள் அழுகையுடன்.

"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு" என்றான் கோபத்துடன்.

"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா,  அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்!"

"ஆமடி, ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லி தீர்த்துக்காமல்,  யாருட்டடி சொல்றது?"

"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு! நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க கண்றாவி காமப் பித்தையெல்லாம் கேட்டு, அதற்கு தீர்வு சொல்ல?"

"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"

" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக் கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். அவா எல்லாம் "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!" னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப் பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா  ஜெண்டில் மேனாக்கும்"

"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா சமச்சுப் போடவா?"

"இனிமேல் எவட்ட வேணா போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை முழுகியாச்சே?"னு சண்டை போட்டுட்டு அவ  எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை! ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!

 தனிமரமானான் சோமு!

****

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம் கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது  காமினிக்கும் அவள் கணவன் ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு பேருக்கும் குழந்தையும் கெடையாது!

ஈவனிங்  பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி" ஷாப்ல  மறுபடியும் காமினியைப் பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப் பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள்  இவனை  "ஸ்டாக்" பண்ணுவது போலக்கூட  ஒரு பிரமை.

"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு?" என்றாள் காசுவலாக.

"ஐ அம் ஃபைன், காமினி. ஹவ் ஆர் யு?"

"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.

 அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள் போட்டிருந்த பர்ஃப்யூம் தனிமையில் வாடும் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.

"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"

"ரியல்லி?"

"ஏங்க, வித்யா  உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.

"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும், நான் யாரையும் கால் பண்ணலை.  ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.

"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"

"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக் தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள் அழுத்தமாக.

"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"

"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா  ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.

ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.

"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.

"உங்க ஃபோன்  # கொடுங்களேன், சோமு?" என்றாள் காமினி.

"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

*************
அன்று இரவு  டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலறியது.

"ஹல்லோ! நாந்தான் காமினி"

"சொல்லுங்க "

"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்?"

"என்னங்க?"

"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா..'

"என்னனு?"

"நீங்க ரொம்ப மோசம் அது இதுனு."

"ஆமா நான் மோசம்தான்"

" இல்லை இல்ல, படுக்கையறையில்  ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"

" "

"உண்மையா, சோமு?"

" "

"இல்ல, அதுமாதிரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"சாரி, காமினி, ஐ ஹாவ் டு ஸ்லீப் நவ்" னு அவசரமாக ஃபோனை ஹேங் அப் பண்ணிட்டான் சோமு.

சோமுவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு இப்போ வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு அந்த வினாடி  புத்தி வந்துவிட்டது. ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. ஃபோனை கட் பண்ணிய மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வந்து அவனைக் கொன்றது.

ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தால்?  படுக்கை அறையில் நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? என்னுடைய  தேவைக்கெல்லாம் காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் காமப்பித்து பிடிச்சு இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் இன்னொருவருவருக்கு மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ?  என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.

அடுத்த நாள், ஈவ்னிங்,  அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். ஆனால் அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்த்தான். அப்போவும், அவனை  தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது  காமினியின் பின்னழகு அவனை கேலி செய்து கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .

பாவம் சோமு,  "சரி இதோட போய் தொலையிறா சனியன்,  நமக்குக் கிடைத்த  சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு  சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தானாகவே அவனை நோக்கி வந்த  அவள் ரொம்பவே தேவைப்பட்டாள்.  அன்று இரவு படுக்கையில் படுத்த அவன் அவளை  தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து  நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.

அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது

"ஹல்லோ?"

 காமினிதான்!

"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.

"இல்லங்க.."

" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"

"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"

"என்ன குழப்பம்?"

"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க..அதான்"

"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"

" "

"Are you there?"

"Yes"

"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"

"சரிங்க"

"I know we are made for each other!"

"எப்படிச் சொல்றீங்க?"

"நான் ஈவனிங் "ஜிம்" ல உங்களைக் கடந்து முன்னால போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"

"ஆமா?"

"பின்னால இருந்து என்ன பண்ணினீங்க அப்போ?"

" "

"Be honest and tell me. Did you look at my butt?"

" "

"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"

" "

"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"

"காமினி"

"வாட்?"

"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"

"யெஸ்"

"நாளை நைட் நீ உன் வீட்டிலேதான் இருப்பியா?"

"ஆமா"

"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'

"இப்போத்தான் வித்யா சொன்ன சோமு மாதிரி பேசுறீங்க..என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"

"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------

அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன்  சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.. யாரோ வீட்டு பெல்லை அடிச்சாங்க. யாருடா இப்போ?னு யோசனையுடன் கதவைத் திறந்தான்.

"டாடீ!" னு  ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.

ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு, "என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை அதிகமாகி டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப  பாதிக்கப்படுது.."

"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.

"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!

வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!

-முற்றும்

இது இந்தத்தளத்தில் ஏற்கனவே வந்தஒரு மீள் பதிவுதான். Older version has been edited and modified a bit.

Wednesday, August 14, 2013

பாவிகளே!!! ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்!

காலையில் அவன் பொண்ணு வித்யா மல்லிகைப்பூ பறிக்கிறேன் என்று வெளியே போனவள், கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள். அந்தக் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவியிடம் கொட்டு வாங்கிக்கொண்டு வந்து வலி தாங்க முடியவில்லனு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுகையை அவனால தாங்க முடியவில்லை! கொளவிக்கு என்ன தெரியும் இவள் சிறுமி, தனக்கு தீங்கெதுவும் செய்யப் போவதில்லை என்று?

பகலில் அந்தக் கொளவியிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல்,  இரவு ஆனபிறகு வீட்டுமுன் இருந்த இரண்டு சிறு துளைகளையும் சிமெண்ட் வைத்து அடைத்தான், ராமன்.  "இனிமேல் இந்த கொளவிச்சனியன் என் குழந்தையை கொட்டாது" என்கிற நிம்மதி அவனுக்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்படி அதன் கூட்டை அடைத்துவிட்டால்.. அந்த துளைகளுக்குள்ளே கொளவியின் குழந்தை குட்டிகள் எல்லாம் வெளியே வரமுடியாமல் குடும்பத்துடன் பசியில் வாடிச் சாகுமோ? என்ற மறு எண்ணம் ஒன்று அவன் உள் நெஞ்சில் அவனைக் கொட்டியது. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை! "நீ வேற எங்காவது போய் கூடு கட்டி வாழ்ந்துக்கோ!"னு சொன்னால் அதென்ன போகவா போகுது? ஆறறிவு உள்ள மனுஷனுக்கே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் படித்துப் படித்துச் சொன்னாலும், கேட்காமல் முரண்டு பிடித்து செருப்படி வாங்கிக் கட்டிக்கிறான். பாவம் கொளவி, அதுக்கென்ன தெரியும்?

"வாழு! வாழ விடு!" என்றெல்லாம் மனிதர்களுக்குள் தத்துவம் பேசிக்கிறோம். ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது. தன் இனத்தைத் தவிர யாரை நிம்மதியாக வாழவிட்டான் மனிதன்? "வாழு! வாழவிடு!"னு எதற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கணும்? மனிதனைவிட அடிமுட்டாள் எவனுமே இல்லை! என்னவோ கடவுள்ங்கிறவன் இவனுக்காகத்தான் இருக்கமாரி ஒரு எண்ணத்துடன் வாழ்ந்து, கடவுளைக் கட்டி அழுது சாகிறான்.

சிமெண்ட் வைத்து அடைத்துவிட்டு வீட்டின் உள் நுழையப் போகும்போது பக்கத்துவீட்டில் வாழும் ஜேம்ஸ், காரிலிருந்து இறங்கி  ராமனுக்கு  ஹாய் சொல்லிவிட்டு அவருடைய வீட்டிற்குள் அவர் கேர்ள் ஃப்ரண்டுடன் நுழைந்தார். அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயதுபோல் இருக்கலாம். ஜேம்ஸ்க்கு வயது அறுபத்து ரெண்டு. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர் வயதை ஒத்த மனைவியை சமீபத்தில்தான் டைவோர்ஸ் செய்திருந்தார், ஜேம்ஸ். என்ன பிரச்சினையோ எவனுக்குத் தெரியும்? அவர் மாஜி மனைவி வேறு வீட்டில் வாழ்கிறார் இப்போது.  தன் புது கேர்ள் ஃப்ரண்டுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார் ஜேம்ஸ். இதிலென்ன தப்பு? எனக்கு "காமம்" தேவைப்படுகிறது, அதற்கானதை நான் செய்வேன் என்ற வெள்ளைக்காரர்களின் வெளிப்படையான தத்துவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால் ஜேம்ஸ் வளர்க்கும் இரண்டு ஆண் நாய்களுக்கும் அவர் கவனமாக காயடித்து விட்டார்!  அவைகள் பருவ வயதையடையும் போதே! அதில்தான் நியாயம் எங்கே இருக்கிறது என்று விளங்கவில்லை, அவனுக்கு!

மதுரை டவுன்ஹால் ரோட்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு சில கிருஸ்தவ மத போதகர்கள், "பாவிகளே!" னு கூச்சல்போட்டு எல்லாரையும் கத்தும்போது ஹிந்துவான ராமனுக்கு எரிச்சல்தான் வந்திருக்கு. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவனால் இன்று யோசிக்கும்போது உணர முடிந்தது.

Tuesday, December 18, 2012

டிசம்பர் 21 2012ல் உலகம் ஏன் அழியாது?! தெளிவான விளக்கம்!

உலகம் அழியப்போதாம்! மயன் காலண்டர் சொல்லிடுத்தாம்! ஆனால் யாருமே நம்பத் தயாராயில்லை! ஏன்? வாழனும் ஆசை! சாதிக்கவேண்டியது நெறையா இருக்கு! அதுக்குள்ள எப்படி? அதெல்லாம் அழியாது!

Mayan ceremony
The modern Maya who live in Guatemala, Honduras, Belize and Mexico’s Yucatan peninsula aren’t worried about Dec. 21.
ஆனால் உலகம் அழிவதுபோல் ஒரு நல்ல விடயம் எதுவுமே இல்லை! ஒரு நிமிடம் யோசிங்க!  பொதுவாக சாவின்போது நம் உற்றார் உறவினர் நண்பர் யாரும் நம்முடன் வருவதில்லை! சாவின் மிகப்பெரிய வலியே நம்மை இழப்பவர்கள் நாம் இல்லாமல் துன்புறுவதுதான்! எல்லாருமா சேர்ந்து ஒரேயடியா போயிட்டா என்ன பிரச்சினை? எல்லாருமே அனாதைப் பொணமாப் போயிடலாம்! அதைவிட பாக்கியம் மனிதனுக்கு எதுவுமே இல்லை!

அந்தமாரி ஒரு நல்ல விடயம் எல்லாம் நடக்கவே நடக்காது! ஒவ்வொரு மனிதனும் தான் செய்த அநியாயத்திற்கெல்லாம் உயிரோட இருந்து அனுபவிக்க வேண்டியது நெறையா இருக்கு! உலகம் அழியலைனா, இப்படி ஆயிப்போச்சே! னு  கவலைப்படுங்க! அழுங்க! ஒப்பாரி வைங்க!

மற்றவர்களை விடுங்க! இந்த உலகில் எல்லாரும் யோக்கியர்கள்தான் என்னைத் தவிர! எனக்கெல்லாம் அவ்வளவு நல்ல சாவு எல்லாம் கெடைக்காது! :-) இன்னும் "அனுபவிக்க" வேண்டியது நெறையா இருக்கு! அதனால் உலகம் அழியாது! :-)

Thursday, October 7, 2010

வாழ்க்கை என்பது வியாபாரம்!

மனநலம சரியில்லாதவர்கள், குழந்தைகள் தவிர சாதாரண மனிதர்கள் எல்லாமே வியாபாரிகள்தான். வியாபாரினா? பண அடிப்படையில் மட்டும் இல்லை! எல்லா விசயங்களிலும் தனக்கு "இலாபம்" கிடைக்குமா என்று பார்ப்பதுதான் மனித இயல்பு. "இலாபம்" என்பது பணமாக இருக்கனும்னு இல்லை! எதைச் செய்தால் நமக்கு நிம்மதி கிடைக்கும்? எதை செய்தால் நமக்கு நல்லது கிடைக்கும்? என்பதை "intuitive" ஆக உணர்ந்து நடக்கும் வியாபாரிகள்தாம் சாதாரண மனிதர்கள்.

வியாபாரி, சுயநலம் என்கிற மேட்டரெல்லாம் ரொம்ப கெட்டவார்த்தைனு நம்ம எல்லாமே நெனச்சுக்கிறோம். நம்மனு சொலவதைவிட, நான் நினைப்பதுண்டு! ஆனா இது ரெண்டும் இல்லைனா நாம் வாழ்வதே கடினம்.

எல்லா வியாபாரிகளும் மட்டமானவர்களா இருக்கனும்னு இல்லையே! ஒரு சில நல்ல வியாபாரியும் இருக்காங்க! தொழில் தர்மம் என்பதை மனதில் கொண்டு நடக்கும் நல்ல வியாபாரிகளும் இருக்காங்க. One can make fair deals also or not? ஆனால் இரக்கமே இல்லாத மோசமான வியாபாரியும் இருக்காங்க! The "loser" usually feels, "life is not fair" when it happens to him/her. உங்களை நல்ல வியாபாரினு நெனச்சுக்கோங்க!

இதிகாசங்களில் வரும் வியாபாரிகள்!

* இராமாயாணத்தில் இராமர் வாலியை மறைந்திருந்து தாக்கி கொல்வதை சொல்லலாம்! இராமருக்கு தேவை சீதை! அவரை எப்படியாவது திருப்பிப் பெறுவது. அதற்காக அவர் சுக்ரீவன் ஹனுமான் உதவி தேவை. இந்த "நட்பு" என்பதே ஒர் "வியாபார" நோக்கத்தில் தன்னுடைய சுநலத்தால் உருவாவ்துதான். It was more like a deal. இது கதைதான் என்றாலும் இன்றை உலகமும் இதேபோலதான் இயங்குது

* மஹாபாரதத்தில், கண்ணன், கர்ணனிடம் உயிரை யாசிப்பது! நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேலே பயன்படுத்தக் கூடாது என்று அவன் அன்னையின் மூலம் சத்தியம் செய்ய வைப்பது! இதெல்லாம் என்ன? Different kinds of deals made to achieve what they want!

இல்லை, இது கதையல்ல! இராமரும் கண்ணனும் கடவுள் அப்படினா. அப்ப கடவுளே ஒரு வியாபாரிதான்!

In movies!

In Sabrina *ing Harrison Ford!

She (Julia Ormond) : "Did not you say, everything is Business?"

He (Ford): "Not me, but it sounds like me!"

I would say it is very very TRUE. Even in relationships it is a "deals" made between two people. People like Kamal are not good "businessman" and so they fail in their life and relationship!

Read somewhere,

"He is loyal but his loyalty changes from one person to another depending on the situation!"

Well, when his loyalty changes, he is not becoming disloyal to the former one? That is debatable. Actually he does become sort of disloyal to the former one! Now we need to define carefully what is loyal and disloyal? It is individual's opinion and changes person to person as well.

நம் சித்தரிக்கும் கற்பனைக் கதைகளில்கூட!

இது உண்மைதான். அகிலனின் பாவை விளக்கு கதையில் வரும் கதாநாயகன் தணிகாசலம் ஒரு சுயநலக்காரன் என்பதை அகிலன் பலமுறை அந்தக் கதையில் சொல்லியிருப்பார்! அதனால் "சுயநலம்" என்பது ஒரு அசிங்கமான ஒண்ணுனு நினைக்க வேண்டியதில்லை. அப்படியேயிருந்தாலும், அது இல்லாமல் மனிதன் வாழ முடியாது!

கடைசியா, நம்ம புத்தர்கூட

தன் மனைவியின் நிலைமையை யோசிக்காமல், தனக்கு எது முக்கியம்னுதான் போயிட்டாரு! இதில் சுயநலம் இல்லையா? நிச்சயம் அவர், அவர் செய்கையால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி கவ்லைப் படலைனு சொல்லலாம்! புத்தரும் மனுஷன் தானே?

வாழக்கை என்பது வியாபாரம் தான். அதில் மனிதர்கள் எல்லாமே வியாபாரிகள், சுயநலக்காரர்கள் என்பது உண்மை! இதில் விதிவிலக்குனு யாருமில்லை! ஆனால் நிச்சயம் நல்ல வியாபாரிகளும் இருக்காங்க! மட்டமான வியாபாரிகளும் இருக்காங்க!

Monday, December 29, 2008

தற்கொலை! சுயநலமும் தியாகமும்!!!

ஒரு வகை!

எனக்குத்தெரிய ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த “ஜான்” என்ற “நண்பன்” தொங்கிவிட்டான்.

பிரச்சினை என்னவென்றால், அவன் ஒரு அழகான பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்துவிட்டான். அவள், அவனுடைய ஜூனியர், மற்றும் அவனுடைய ஆய்வகத்தில் வேலை செய்பவள். இவன் கொடுத்த இதயத்தை அவள் வாங்க மறுத்துவிட்டாள். இவனுக்கு அவளைப் பிடித்ததுபோல் அவளுக்கும் யாரையாவது பிடிக்கும் இல்லையா?

ஜானின் இதயம் அவள் வாங்க மறுத்ததால் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. இதயத்தை உடைத்த இவனால் அதிகமான நாட்கள் வாழ முடியவில்லை. தூக்குப்போட்டுக்கொண்டு தொங்கிவிட்டான்.

அவன் உடலைப்பெற அவனுடைய ,அப்பா அம்மா வந்து இருந்தார்கள். ஒரு நடுத்தரக்குடும்பத்திற்கும் கீழே உள்ள ஒரு பரிதாபமான நிலைமை. அவர்களின் ஒரே "ஹோப்" இவந்தான் என்று விளங்கியது! மகன் படித்துவிட்டான்! இனிமேல் மகன் சம்பாரித்து அவங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கப்போகிறான் என்று நம்பி ஏமாந்தவர்கள் அவர்கள்.

இந்த தற்கொலையில் சுயநலம், தன்னலம், தகுதிக்குமீறிய ஆசை, மற்றும் அடுத்தவர்களும் தன்னைப்போல் தான், அவர்களுக்கும் ஆசை இருக்கும், அதையும் நாம் மதிக்கனும் என்ற எண்ணமில்லாமை. இதைத்தான் பார்த்தேன். அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை! எரிச்சல்தான் வந்தது! இது ஒரு வகை தற்கொலை!

இன்னொரு வகை!

இது என்னுடைய பாஸ் சொன்னார். அவர் அப்பாவுக்கு இப்போது வயது 89. இன்னும் அவராவே கார் ஓட்டிச்சென்று, அவரை அவரே கவனித்துக்கொண்டு தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு 90 வயது ஆள், அவர் என் பாஸ் அப்பாவுக்கு நண்பர் மாதிரி. அருகில் வசித்து வந்தவர். இந்த முறை என் பாஸ், அவருடைய அப்பாவை கிருஸ்துமஸ்க்கு அழைதுவர போனபோது, அவர் அப்பாவின் ந்ண்பர் இறந்துவிட்டதாக அவர் அப்பா சொன்னதும், என்ன ஆச்சு? என்று கேட்டாராம்!

கிடைத்த பதில் இதுதான். துப்பாக்கி எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டாராம் அந்த 90 வயது ஆள். காரணம்? அவருக்கு சாகும் அளவுக்கு எதுவும் பெரிய வியாதி இல்லை. இருந்தாலும், அவருக்கு சில வியாதிகள் இருந்தன. அதனால் தொடர்ந்து சில உதவிகள் தன் மகன்மற்றும் மகளிடம் இருந்து தேவைப்பட்டுக்கொண்டு இருந்ததாம். அது அவருக்கு தவறாக தோன்றியதாம். தன் குழந்தைகளுக்கு கடைசிக்காலத்தில் தான் பெரிய பாரமாக இருக்க வேண்டாம் என்று தன் உயிரை தானே மாய்த்து கொண்டாராம் அந்த பெரியவர். இதுவும் தற்கொலைதான்! இதில், சுயநலத்தைவிட, நம்மால் தன் குழந்தைகளுக்கு அளவில்லாத கஷ்டம் எதற்கு? என்கிற தியாக மனப்பான்மைதான் அவரிடம் இருந்தது.

In US, people who are in sixties are taking care of their father and mother who are in 80s or 90s. I know several cases. Some people are too healthy and they dont die even if they want to. Mainly bcos of the medical developments in dealing with heart diseases, controlling cancer and so on.

Who says Americans are selfish?

Who says Americans don't have much family value?

That is not what I see here! They take care of their old parents better than us in several cases I know of.

Wednesday, December 24, 2008

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். ஒருமுறை வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போது, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக சொன்னார்கள். “என்ன ஆச்சு?” நு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், அப்பாவை திடிவிட்டாரேனு அவன் கோபத்தில் கத்தியை வைத்து குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்! என்ன சண்டைக்கோழி கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை. என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

Sunday, October 19, 2008

தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? (I)

ஜானகிராமன் கதைகள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. முதன்முதலில் நான் படித்த அவரின் எழுத்து அவரின் “அம்மா வந்தாள்” நாவல். அம்மா என்றால் அன்பு! அம்மா என்றால் தெய்வம்! தாயில் சிறந்த கோவில் இல்லை! இதுதான் நாம் அறிந்தது. எனக்குத்தெரிய சில நண்பர்கள் பலர் அம்மாவைப்பற்றி யாராவது தவறாக சொன்னால் கொலையே பண்ணுவார்கள் . ஆனால் “அம்மா வந்தாள்” கதையில் வரும் அப்பு வின் அம்மா, அலங்காரம் அந்த வகையை சேர்ந்தவளா?! அலங்காரம் என்கிற அம்மா நடத்தை சரி இல்லாதவள் போல சொல்லாமல் சொல்லி இருப்பார் ஜானகிராமன்.

அந்தக்கதையில்,

ஒரு நாள் அலங்காரத்தின் கணவர் 6 மகன்/மகள்களின் அப்பா, தன் மனைவியைப்பற்றி நினைத்துப்பார்ப்பார். அன்று தனியாக மொட்டைமாடியில் படுத்து இருப்பார். பழைய நினைவுகள்...அலங்காரத்துடன் தான் நடத்திய தாம்பத்ய உறவு, அனுபவித்த இன்பம் பற்றி நினைத்துப்பார்ப்பார்.

அதெல்லாம் அவருக்கு பழைய நடந்து முடிந்த கதை. இன்று அவருடன் அலங்காரம் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதில்லை. அவளுடன் உறவு வைத்துக்கொள்ளும்போதும் அவருக்கு அவள் புரியாத புதிராகத்தான் இருந்தாள். அலங்காரம் ஒரு சில நேரம்பேசுவது அவருக்கு புரியாது. அவளின் ஆசைகள், கனவுகள் இவரால் கொடுக்கமுடியாததாக இருக்கும். ஒவ்வொரு சமயம் அவளை தன்னால் பெண்டாள முடியுமா என்றுகூட அவருக்கே சந்தேகமாக இருப்பதுபோல் தோன்றும் அவருக்கு. இப்படி அவர் மனைவி பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போது,

அலங்காரம்! பேரு வச்சிருக்காங்க பாரு! ஒரு விலைமாதுக்கு வைப்பது போல!

இப்படி எழுதி இருப்பார்! தன் மனைவியைப்பற்றி, ஒரு தாயை, கணவர் நினைப்பதாக! இந்த இடத்தில்தான் ஜானகிராமன் அலங்காரத்தின் நடத்தை பற்றி முதன் முதலில் கோடிட்டுக்காட்டுவார்.பிறகு அலங்காரம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சொல்வார்.


சரி, இந்த அம்மா வந்தாள் கதை இங்கேயே நிற்கட்டும். பிறகு தொடர்கிறேன்.

இப்பொழுது சில உண்மை நிகழ்வுகளை சொல்கிறேன்.

இந்த நாவலைப்படித்துமுடித்த பிறகு, இதைப்போல் ஒரு அம்மா கேரக்டரைப்பற்றி என் நெருங்கிய நண்பன் சீனிவாசனிடம் பேசினேன். நான் இந்தக்கதையால் பயங்கரமாக பாதிக்கப்பட்டேன். இது போல் ஒரு தாயைப்பார்க்கும்போது எனக்கு மிகவும் எரிச்சலாகவும், சங்கடமாகவும், கவலையாகவும் குழப்பமாகவும் இருந்தது. நான் என் நண்பனிடம் பேசும்போது ஒன்று புரிந்தது. நாங்கள் இருவரும் இரண்டுவிதமான அம்மாக்களின் மகன்கள் என்று.

நான் பேசும்போது என் நண்பன் சீனிவாசன் என்னைப்பார்த்து சிரித்தான்.அவனுடைய பர்சனல் லைஃப் பற்றி எனக்கு அன்று வரை சரியாகத் தெரியாது. அவன் சொன்னான், கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை என்றான். அவன் அம்மா கதையில் வரும் அலங்காரத்தைவிட ஒரு “புதிரான அம்மா” என்றான். அவனால் இதை ஈசியாக ஜீரணித்துக்கொள்ள முடிகிறது என்றும், அவன் அம்மா கொஞ்சம் ஒரு புரியாத புதிர் என்றும் சொன்னான். எனக்கு அவன் சொல்வதை நம்பவே முடியவில்லை. அவன் ஒரு ஆர்தோடக்ஸ் குடும்பத்தில் இருந்து வருபவன். நல்ல படித்த குடும்பத்தில் இருந்து வந்தவன் . அவன் அப்பா ஒரு பெரிய ப்ரீமியர் இண்ஸ்டிடூட்டில் பெரிய பேராசிரியர். மேலும் அவன் பயங்கரமான அறிவாளி. ஆனால் கொஞ்சம் “எக்சண்ட்ரிக் கேரக்டர்” என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு மாதிரியான ஜீனியஸ். மிகவும் திறந்த மனப்பாங்கு உள்ளவன்.

“என்னடா சொல்ற!!!” என்றேன் மிகவும் குழப்பத்துடன்.

அம்மா என்கிற ஒருவர் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமானவர் மதிக்கத்தக்கவர் என்று தெரியும் எனக்கு. என் தாயைப்போலவே எல்லோர் அம்மாவையும் மதிக்கத் தெரிந்தவன் நான். ஆனால் அக்கதையைப்பற்றிப்பேசும்போது அவனே அப்படி சொல்வதால்,மறுபடியும் கேட்டேன்.

“அப்படித்தான்்” என்றான் புன்னகையுடன்.

“ஜோக் அடிக்கிறயா? என்றேன் மறுபடியும் அவனிடம்.

“இல்லைடா சீரியஸாத்தான் சொல்றேன்” என்று அவர்களைப்பற்றி சொன்னான்.

அவன் தந்தைக்கு கல்யாணம் ஆன புதிதிலேயே அவன் அம்மா மிகவும் வித்தியாசமாக இருப்பதாக அவன் அப்பா ஃபீல் பண்ணினாங்களாம்.ஆனால், போகப் போக சரியாகிவிடும் என்று தொடர்ந்தாராம் உறவையும், வாழ்க்கையையும். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் (என் நண்பனும் அவன் அண்னனும்) அதே நிலைதானாம்.கடைசியில் அப்பா அம்மா பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டதாம். அதனால் கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை. அவன் அம்மா அலங்காரத்தைவிட ஒரு “காம்ளிக்கேட்டெட்” அம்மா என்றான்.

மேலும் அவனிடம் இருந்து தெரிந்து கொண்டது.

அவன் அம்மாவுக்கு மந்திரம் மாயம் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டாம். என் நண்பனுக்கும் அதிலெல்லாம் நம்பிக்கை உண்டு என்று சொல்லியதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். அவன் அம்மாவுக்கு ஒரு மாதிரியான சாமியார் கல்ட் க்ரூப்பில் பழக்கம் இருப்பதாகவும் சொன்னான். நான் சென்னையில் வளர்ந்த ஒரு நண்பனைப்பற்றிதான் சொல்கிறேன். சாதாரண கடவுள் நம்பிக்கையை நான் இங்கு சொல்லவில்லை. ஒரு மாதிரியான “கல்ட் க்ரூப்” நான் சொல்வது. அவன் அம்மாவை அவன் அப்பாவாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையாம். தற்போது அவன் அம்மா, அப்பாவுடனும் இவனுடனும் சேர்ந்து வாழவில்லை என்றும்.அப்பொழுதுதான் என்னிடம் சொன்னான்.

அவன் அண்ணா மட்டும் அவன் அம்மாவுடனசேர்ந்து வாழ்வதாகவும்,அவன் அவர்களிடம் இருப்பதால் அண்ணனால் இவனைப்போல் சரியாக படிக்க முடியவில்லை என்றும். அவன் அம்மா அவன் மூத்த பையன் என்பதால் எப்படியோ வசியம் பண்ணி தன் தந்தையிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் சொன்னான். அதைவிட கொடுமை என்னவென்றால், என் நண்பன் அவன் அம்மாவை எதற்காவது பார்க்கப்போகும்போது அவர்கள் கொடுக்கும் காஃபி டீயைக்கூட அவன் குடிக்க பயப்படுவேன் என்றான். ஏதாவது மந்திரம்,பொடி போட்டு இவனையும் அவன் அண்ணனை செய்ததுபோல் மயக்கி தன்னுடன் அழைத்துக்கொள்வார்கள் என்ற பயம் என்றான்.

அம்மாவைப்பார்த்து அவர்கள் கொடுக்கும் காஃபியைக்குடிக்க பயப்படும் ஒரு மகனை முதன் முதலில் சந்தித்தேன்.

அவன் சொன்னதையெல்லாம் இன்னும் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி சொல்லி ஆச்சர்யப்படுவேன்.

-தொடரும்

Friday, September 26, 2008

காதல் கல்வெட்டு-13

"அந்தக்கடிதத்திலிருந்த விசயத்தை சொல்றேன் கேட்டுகோ, கேக்கறியா, கயல்?"

"சொல்லுங்க, வேற வழி?"

"உன்னை நல்லா உதைக்கனும், கயல்! ஏதோ கதை கேட்பது பிடிக்தாத மாதிரி ரொம்பத்தான் சலிச்சுக்கிற?"

"சரி, சரி, சொல்லுங்க, வருண். சும்மாதான் டீஸ் பண்ணினேன்"


டியர் வருண்,

எப்படி இருக்கீங்க வருண்? you would not have expected this letter from me. ஏன் என்னோட பழகினீங்க, வருண்? லக்ஷ்மி சொல்லுவாள் வருணோட ரொம்பப்பேசாதே என்று. அதையும் மீறி உங்களோட வந்து பேசுவேன். யாரோடையுமே இப்படியெல்லாம் நான் பேசியதில்லை, பழகியதில்லை.உங்க டேட் ஆஃப் பெர்த் படி பார்த்தால் நீங்க "ஜெமினி". உங்களுக்கு கண்மூடித்தனமான விசிறிகள் அதிகமாக இருப்பாங்களாம். ஜோசியத்தில் எல்லாம் நம்பிக்கை எனக்குக்கிடையாது, இருந்தாலும் ஒரு பொழுதுபோக்குக்காக பார்ப்பேன். அம்மாவிடம் உங்களைப்பற்றி சொல்லுவேன். அடிக்கடி உங்களைப்பற்றி சொல்வதால், என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். எனக்கு ஒரு செருப்பு வாங்கனும்னாக்கூட அப்பா அம்மாதான் செலெக்ட் பண்ணுவாங்க, வருண். கல்யாணம் எல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாது.

எனக்கு இந்த கடிதத்திற்கு பதில் எழுதுவீங்களா வருண்?

Affectionately yours,
Jeyanthi.

"ஆமா, என்னதான் சொல்கிறாள் உங்க ஜெயந்தி?"

"நாந்தான் என்ன எழுதினாள்னு சொன்னேன் இல்லை, கயல்?"

"ஆமாம், சொன்னீங்க. ஆனால் எனக்கு ஒன்னுமே புரியல! உங்களை லவ் பண்ணுவதா சொல்றாளா?"

"நேரடியா அப்படி சொல்லவில்லை, நான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பாள் இல்லையா?"

"நீங்க சொன்னீங்களா?"

"என்ன சொல்ல? நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால் இப்போ கல்யாணம் எல்லாம் பண்ணிக்கமுடியாது. என் ஃபேமிலி சூழ்நிலையில் நான் நல்லாப்படித்து முதலில் வேலைக்குப்போகனும்...இப்படியா?"

"பதிலே எழுதலையா, நீங்கள்?"

"இல்லையே, எழுதினேன். அவளை மாதிரியே நானும் ஏதோ உளறினேன். ஆனால் உன்னைக்காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை"

"ஏன் சொல்லவில்லை? என்னென்ன உளறனீங்க அதையும் சொல்லுங்க. அவள் உளறல்களை மட்டும் சொன்னவர் உங்களுடையதை மட்டும் மறைக்கறீங்க பார்த்தீங்களா?" சொல்லிவிட்டு மீண்டும் குறும்பாக சிரித்தாள்.

"அப்படி ஒரு கமிட்மெண்டுக்கு நான் அப்போது தயாரா இல்லை கயல்"

"But you loved her?"

"yes, I think so"

"What is wrong in saying it?"

"I don't think that will take us anywhere further. I have had lots of responsibilities, Kayal"

"அப்போ உங்களை காதலிக்கிறேன்னு பொண்ணுங்கதான் வந்து சொல்லனுமா?"

"நான் அப்படியா சொன்னேன்?"

"அப்புறம் என்னவாம்? பொதுவா எந்தப்பொண்ணும் சொல்ல மாட்டாள், வருண்"

"நான் எதிர்பார்க்கவில்லை, கயல்"

"ஆமாம்,உங்க ஜென்னி எதுவும் புது பாய்ஃப்ரெண்ட் பிடிச்சு இருக்காளா இப்போ?"

"இல்லையே, அவள் ரொம்ப வருத்தமா இருக்காள்"

"ஏன் நீங்க ஆறுதல் சொல்லலையா, இந்திப்பட ஷாருக்கான் மாதிரி?"

"உனக்கு கொழுப்புத்தானே? நான் அவளோட அப்படியெல்லாம் பழகலைனு எத்தனை தடவை சொல்றது உனக்கு?"

"எப்படியெல்லாம்?" இப்போது அவள் வருணை பார்த்த பார்வையில் குறும்பு கொப்பளித்தது. சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு சீரியசான முகபாவத்துடன் கேட்டாள்,

"எப்படி எல்லாம் பழகலைனு கேட்டேன்?"

"சரி அதை விடு! அவள்தான் உன்னை ஞாபகப்படுத்தி கூப்பிடச் சொன்னாள்"

"உங்களுக்கு நான் கால் பண்றேனோ இல்லையோ, அவள் தினமும் உங்களுக்கு கால் பண்ணுகிறாள். அவளுக்கென்ன அக்கறையாம்? அவள் என்னை ஞாபகப்படுத்தலைனா, கால் பண்ணி இருக்க மாட்டீங்களா? உங்களுடைய குரலைக்கேட்க நான் ஒன்னும் ஏங்கவில்லை"

"ஏதாவது ஹேண்ட்சம் பாய்ப்ரெண்டோட ஓடிப்பிடித்து விளையாடிட்டு இருந்து இருப்ப. உனக்கெதுக்கு என் ஞாபகம் எல்லாம் வருது?'

"அது ஓரளவு உண்மைதான். ராம கிருஷ்ணன் என்று ஒருவரை தான் டேட் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் டீசண்டா பழகுகிறார். ஆனால் அப்படி ஒண்ணும் "இது" வரவில்லை அவர் மேலே"

"இது னா என்ன அது?"

"உங்க ஜெயந்திக்கு உங்க மேலே இருந்துச்சில்ல அதுதான்"

கயல் இன்று வருணை கிண்டலடித்தே கொல்லப்போகிறாள் என்று தெரிந்துவிட்டது, பேச்சை மாற்ற, "சரி கோயிலுக்குப்போகலாமா? வந்து நேரமாச்சு!" என்றான்.

"சரி வாங்க போகலாம். ஏதோ பெரிய காதல் கதை சொல்றேனு சொல்லி இப்படி ஏமாத்திட்டீங்களே வருண்"

"அவ்வளவுதான் என் காதல் கதை, கயல். ஃப்யூச்சர்ல ரொம்ப ரொமான்ஸோட யாரையாவது காதலித்தால் உனக்கு அப்படியே சொல்றேன், சரியா?

கயல் உதட்டை சுழித்து பழிப்புக்காட்டினாள்.

"நீ பழிப்புக்காட்டினால் ரொம்பவே அழகா இருக்க கயல்"

"உங்ககிட்ட கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கனும்"

"ஆமாம், அதற்கு உதவி செய்ய அந்தக் கடவுள்ட்டப்போயி வேண்டிக்கோ"

"அம்மா பேருக்கு ஒரு அர்ச்சனை மட்டும்தான் இன்று. கடவுளை ரொம்பத் தொல்லை பண்ணப்போவதில்லை, உங்களை பார்த்துக்க நானே போதும்"

இருவரும் வாசலில் காலணிகளை கழட்டி வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்தார்கள்

-தொடரும்