Monday, September 21, 2009

80, 90 களில் சிவாஜி படங்கள்!


நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பராசக்தியில் நடிக்க ஆரம்பித்து படையப்பாவில் நடித்து முடித்தார். நடிப்பில் என்றுமே இவர்தான் #1 என்பதில் சந்தேகமில்லை. இவருடைய ரைவல் எம் ஜி ஆர், 1976-1977 போல் திரையுலகில் இருந்து ஒதுங்கி அரசியலில் இறங்கிவிட்டார் அரசியலில் மிகப்பெரிய வெற்றியும் அடைந்தார். அதனால் மதுரையை மீட்டிய சுந்தர பாண்டியனுடன் எம் ஜி ஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தார். சிவாஜி அவர்கள் இன்று ரஜினி, கமல் மாதிரி இரண்டு வருடத்திற்கு 1 அல்லது 2 படங்கள் நடிக்கவில்லை. வருடத்திற்கு 5-10 படங்கள் நடித்தார். இவரை வைத்து படம் எடுத்து சம்பாரித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவரை என்றுமே ரசித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் சிவாஜி ரசிகர்கள் பலருக்கு இவர் வயதானபிறகு இத்தனை படங்கள் நடிக்கனுமா என்கிற வருத்தம் இருந்தது. சிவாஜி ரசிகர்கள் பலருக்கு சிவாஜியின் பழைய படங்கள்தான் பிடிக்கும். என்னைப்பொருத்தமட்டில் 80 க்கு பிறகு வந்த படங்களில் எனக்குப் பிடித்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

* முதல் மரியாதை

* தேவர் மகன்

* படிக்காதவன்

* படையப்பா போன்றவைகள்தான்

சிவாஜி வெறியர்கள் பலர் அவர் என்ன நடித்தாலும் ரசிக்கத்தான் செய்தார்கள். ஆனால், சிவாஜியின் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்த பலர், இவர் 80 க்கு அப்புறம் நடித்து வந்த பல படங்கள் இவர் சம்பாரித்தபேரையும் புகழையும் இழந்தார் என்ற எண்ணம் உண்டு. முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்கள் விதி விலக்காக அமைந்தாலும் இவர் நடித்த எமனுக்கு எமன், ரத்த பாசம் போன்ற படங்களைப் பார்த்து நெறையப்பேர் தலையில் அடித்துக் கொண்டார்கள் என்பதென்னவோ கசப்பான உண்மைதான்.

No comments: