இன்று பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்ட்ஸ் வந்தாச்சு! தமிழ்ப்படம், ஓரளவுக்கு எல்லோரையும் சிரிக்கவைத்து ரசிக்க வைத்ததால் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல #1 வர வாய்ப்பிருக்கிறது என்று ஆவலோடு இருந்தேன். ஆனால் இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல #1 ஆக கோவாவும், தமிழ்ப்படம் இரண்டாவது இடத்தையும், ஆயிரத்தில் ஒருவன் 3வது இடத்தையும் பெற்றுள்ளது!
* கோவா வுக்கு ஓப்பனிங் நல்லாத்தான் இருந்து இருக்கு. ஆனால், அடுத்த வாரம் அனேகமாக தமிழ்ப்படம் ரெண்டாவது இடத்திற்கும், கோவா 3 வது இடத்திற்கும் தள்ளப்பட வாய்ப்பிருக்கு! முதலிடத்தில் என்ன் படம்? நம்ம அஜீத்தின் அசல்!
* கோவா, வெங்கட் பிரபுவுவிற்கு ஒரு முக்கியமான படம்! அவரிடம் இருந்து நெறைய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் க்ரிட்டிக்ஸ் பார்வையிலும், மக்கள் தீர்ப்பிலும், சென்னை-28 >> சரோஜா > கோவா என்று தெளிவாகிவிட்டது! கோவா, ஓரளவுக்கு வெற்றியடைந்தாலும் வெங்கட் பிரபுக்கு இந்தப்படம் ஒரு அடிதான்.
* கோவா வால் செளந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய ரெப்யூட்டேஷனை கெடுத்துக் கொண்டதுபோல ஒரு இமேஜ் உண்டாக்கி இருக்கு! இதற்குக் காரணம் கோவா படத்தின் ப்ளாட் ஒரு மாதிரி மட்டமான ப்ளாட்!
* மற்றபடி, ஓவர்சீஸ்ல தமிழ்ப்படம், கோவாலாம் சரியாகக்கூட ரிலீஸ் பண்ணப்படவில்லை! அதனால் ஓவர்சீஸ்ல இருந்து பெருசா கலக்சன் எதுவும் வராது!
* கோவாவிற்கு போட்ட காசை திருப்பி எடுத்தால் பெரிய விசயம்தான்!
* தமிழ்ப்படம் ஒரு வெற்றிப்படம்தான் என்பது உறுதியாகிவிட்டது!
* ஆயிரத்தில் ஒருவன்? போட்டகாசை எடுத்தாரா செல்வா?
4 comments:
//ஆயிரத்தில் ஒருவன்? போட்டகாசை எடுத்தாரா செல்வா?
//
செல்வா எங்கங்க காசு போட்டாரு? தயாரிப்பாளர் தலைல தான் துண்டு..
செல்வராகவன் தயாரிப்புனு நெனச்சேன்! இல்லையா? படம் பி அண்ட் சி செண்டர்ல சரியாப் போகலை. மலேசியால ஓரளவுக்கு நல்லாப் போகுது.
சென்னைல? பிரச்சினை என்னனா
every other week 5 new movies are released, it is hard for any movie to survive @ BO!
THey say in Feb there are 10 more movies to get released!!!
//* மற்றபடி, ஓவர்சீஸ்ல தமிழ்ப்படம், கோவாலாம் சரியாகக்கூட ரிலீஸ் பண்ணப்படவில்லை! அதனால் ஓவர்சீஸ்ல இருந்து பெருசா கலக்சன் எதுவும் வராது!//
நீங்க எப்ப பட விநியோகஸ்தரானீங்க!
சிவாஜி,தசாவதாரம் தவிர எந்தப் படமும் மார்க்கெட்டிங் சரியா செஞ்ச மாதிரி எனக்குத் தோணல.
***ராஜ நடராஜன் said...
//* மற்றபடி, ஓவர்சீஸ்ல தமிழ்ப்படம், கோவாலாம் சரியாகக்கூட ரிலீஸ் பண்ணப்படவில்லை! அதனால் ஓவர்சீஸ்ல இருந்து பெருசா கலக்சன் எதுவும் வராது!//
நீங்க எப்ப பட விநியோகஸ்தரானீங்க!
சிவாஜி,தசாவதாரம் தவிர எந்தப் படமும் மார்க்கெட்டிங் சரியா செஞ்ச மாதிரி எனக்குத் தோணல.***
உண்மைதாங்க!
மணிரத்னம், கெளதம் மேனன் போன்ற இயக்குனர்கள் லேபல் இருந்தாலும் ஓவர்சீஸ்ல ஓரளவு போகுது. மற்றடி ஊர் பேர் தெரியாத நடிகர்கள்னா படம் கலக்கலா இருந்தாலும் ஓவர்சீஸ்ல கஷ்டம்தான்!
Post a Comment