Thursday, February 11, 2010

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா?


இயக்குனர் கெளதம் மேனன், சிம்புவை வைத்து படம் எடுக்கிறார் என்றதும், சிலம்பரசன் அதிர்ஷ்டசாலி என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். காரணம்? இன்றைய சூழ்நிலையில் கெளதம் மேனன் ஒரு வெற்றிப் படங்களைக் கொடுக்கும் திறமையான இயக்குனராக முன்னேறி உள்ளார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வந்த படங்கள் எல்லாமே ஓரளவு வெற்றியடைந்துள்ளன.

* சூர்யா நடித்த * வாரணம் ஆயிரம் மற்றும் * காக்க காக்க இரண்டுமே வெற்றிப்படங்கள்.

* கமலஹாசன் நடித்த * வேட்டையாடு விளையாடுவும் வெற்றிப்படம்.

* சரத்குமார் நடித்த * பச்சைககிளி முத்துச்சரமும் தோல்விப் படம் இல்லை!

ஆனால் சிம்புவுடைய வெற்றிப்படம் வந்து பல வருடங்களாகிவிட்டது! சிம்புவுக்கு திறமை இல்லைனு யாரும் சொல்ல முடியாது. நிச்சயம் சிம்பு ஒரு திறமையான நடிகர்தான். ஆனால் தமிழ் சினிமாவில் திறமை மட்டும் வச்சு பிழைப்பை ஓட்ட முடியாது. அப்பப்போ ஒரு வெற்றிப்படம் கொடுக்கனும்.

* வின்னைத்தாண்டி வருவாயா? வில் த்ரிஷா ஜோடியாக நடிக்கிறார்.

* இன்னொரு முக்கியமான விசயம், இதற்கு இசையமைத்துள்ளவர் ஏ ஆர் ரகுமான். கெளதம் மேனனுக்கும் ஹரிஷ் ஜெயராஜுக்கும் ஏதோ பிரச்சினைனு சொன்னது உண்மை என்பதுபோல இது இருக்கு.

* இந்தப் படத்திற்கு சென்ஸார் UA சர்ட்டிஃபிகேட் வழங்கிவிட்டது!

* இந்த மாதக் கடைசியில் (26 ம் தேதி) படம் வெளி வருகிறது!

Wish you all the best Silambarasan!

6 comments:

குடுகுடுப்பை said...

ஆழமான தகவல்

நன்றி

வருண் said...

****குடுகுடுப்பை said...
ஆழமான தகவல்

நன்றி***

That's very "kind" of you, குடுகுடுப்பை! :-)

Prasanna Rajan said...

ஊருக்கே தெரிந்த தகவல்களை முந்தி தரும் உங்களின் சேவையே சேவை. சிம்புவோட ‘சிலம்பாட்டம்’ ‘ஏ’ செண்டர்ல எப்படியோ, ‘பி’,’சி’ செண்டரில் ஹிட்...

வருண் said...

***பிரசன்னா இராசன் said...
ஊருக்கே தெரிந்த தகவல்களை முந்தி தரும் உங்களின் சேவையே சேவை. ***

இல்லங்க, நமக்குத் தெரிந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைப்பது தவறு :)

***சிம்புவோட ‘சிலம்பாட்டம்’ ‘ஏ’ செண்டர்ல எப்படியோ, ‘பி’,’சி’ செண்டரில் ஹிட்...***

இருக்கலாம், ராசன். இருந்தாலும் சிம்பு இன்னைக்கு நிலைமைக்கு ரொம்ப டவ்ன் தான்.

வஜ்ரா said...

//
கெளதம் மேனன் ஒரு வெற்றிப் படங்களைக் கொடுக்கும் திறமையான இயக்குனராக முன்னேறி உள்ளார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வந்த படங்கள் எல்லாமே ஓரளவு வெற்றியடைந்துள்ளன.
//


கௌதம் மேனனுக்கு தோல்வியின் ஆரம்பம் இதுவாக அமையாமல் இருந்தால் நல்லது.

சிம்புவும் தனது வாலைச் சுருட்டிக்கொண்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் கௌதம் தப்பிப்பார். இதிலும் விரலை வெடக்கு வெடக்கு என்று அசைத்து "பிரித்து மேய்ந்திருந்தால்" படம் ஊஊஊஊத்திக்கும்.

வருண் said...

***வஜ்ரா said...
//
கெளதம் மேனன் ஒரு வெற்றிப் படங்களைக் கொடுக்கும் திறமையான இயக்குனராக முன்னேறி உள்ளார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வந்த படங்கள் எல்லாமே ஓரளவு வெற்றியடைந்துள்ளன.
//


கௌதம் மேனனுக்கு தோல்வியின் ஆரம்பம் இதுவாக அமையாமல் இருந்தால் நல்லது.

சிம்புவும் தனது வாலைச் சுருட்டிக்கொண்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் கௌதம் தப்பிப்பார். இதிலும் விரலை வெடக்கு வெடக்கு என்று அசைத்து "பிரித்து மேய்ந்திருந்தால்" படம் ஊஊஊஊத்திக்கும்.***

Vajra, At first, I also felt that this GM-simbu combination is sort of a "mismatch". But I believe simbhu will be completely (under control) dominated by the GM as GM is well-known for that!

So, it will be a GM film with little input from Simbu other than the acting part.

Let us wait and see! :)