Tuesday, October 11, 2011

ஓட்டுக்கள் இல்லா இன்ட்லி ஓட்டுப்பெட்டி!

தமிலிஷ்/இன்ட்லி திரட்டி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு மிக வேகமாக வளர்ந்ததை நாம் அனைவருமே அறிவோம். இந்தத்திரட்டி மேல் யாரு கண்ணு பட்டுச்சோ என்ன எழவோ தெரியலை இப்போ ஒரு மாதிரியாக வேகம் குறைந்து தளர்ந்து காணப்படுகிறது.

இப்போ இன்ட்லி திரட்டியிலே என்ன நடக்குதுனு தெரியலை. என்னை விடுங்க, என் பதிவுக்கெல்லாம் எப்போவுமே அதிகமாக ஓட்டுவிழுவதில்லை! ஆனால் 20-30 ஓட்டுக்கள் பெறுகிற ஒரு சில பதிவர்களுடைய தரமான பதிவுகளுக்கு இப்போ 2-3 ஓட்டுத்தான் இன்ட்லில விழுகிறது!!! இதனால வலைதளங்களில் உள்ள இன்ட்லி ஓட்டுப் பெட்டி அர்த்தமில்லாததாக காணப்படுகிறது!

இன்னைக்கு ஒரு பதிவருடைய பதிவை பரிந்துரைக்க "க்ளிக்" பண்ணினால் இன்ட்லிக்கு என்னை எடுத்துச் சென்றது, அங்கே முறைப்படி "உள்நுழைந்தாலும்" ஓட்டுப் போடவே முடியலை?

ஒரு ஓட்டுப்போட இவ்வளவு போராட்டமா? I really get irritated to see the attitude of this intli's administration these days! Why are the making our life so complicated even for recommending a post?

இவர்கள் சமீபத்தில் இன்ட்லி திரட்டியில் ஏற்படுத்திய மாற்றத்தை மாற்றி அமைத்து பழைய நிலைக்கு கொண்டு செல்வது இன்ட்லிக்கு நல்லதுனு தோணுது. ஏதோ சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். :-)

தயவுசெய்து இன்ட்லி ஓட்டுப்பதிவு முறை பிடிக்குதா பிடிக்கலையானு உங்க வாக்கைப் பதிவு செயுங்கள்!!! ( வலதுபக்கம் மேலே பாருங்கள்!).

நன்றி! :)

9 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்டலி ஒட்டு ரொம்ப தான் கஷ்டமா இருக்கு...

ரஹீம் கஸ்ஸாலி said...

ithanaal thaan indli vote pattaiyai naan en pathivilirunthu thookki vitten.

ILA (a) இளா said...

Please vote against this Voting on Right hand side Can you please add this poll to your post too.

வருண் said...

iLa: I thought I voted already in your blog. I did vote again, now. :)

I dont know how to add this poll here, iLa! oops! :)

வருண் said...

இளா: நன்றி, உங்க தயவால தளத்தில் ஓட்டுப்பெட்டி கொண்டுவருவதை கத்துக்கிட்டேன். :-)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இன்ட்லி கஷ்டம்தான்.

என் வலைப்பூ வாருங்கள்.

www.nizampakkam.blogspot.com

வருண் said...

வாங்க சகோ நிஜாமுதீன்!

உங்க தளத்திற்கு விரைவில் விஜயம் செய்கிறேன்! நிஜாம் பக்கம்

Thenammai Lakshmanan said...

அப்பாடா என்னோட நெடுநாள் எண்ணத்தை இடுகையாக்கிட்டீங்க.. எனக்கும் இண்ட்லியில் இருந்து நிறைய ரீடர்ஸ் வருவாங்க இப்போ வோட்டு பெட்டியே காணாம போயிருச்சு . ஏன்னு தெரியலை.

வருண் said...

வாங்க தேனம்மை லக்ஷ்மணன்! இது சம்மந்தமாக பொன் மலர் என்பவர் இன்னொரு தளத்தில் கொடுத்த பின்னூட்டம் கீழே இருக்கு பாருங்க!

----------------
பொன்மலர் said...

தமிழிஷ் இண்ட்லியாக மாறி பல வருடம் ஆகி விட்டதே. பழைய நிரல் வேலை செய்யாது. அதை எடுத்து விட்டு புதிய நிரலைப் போடுங்கள்.


புதிய நிரல் கீழே.
இண்ட்லி நிரல்
செப்டம்பர் 8, 2011 11:57 PM

----------------

உங்க தள அட்மினிஸ்ட்ரேட்டரிடம் சொல்லி இந்த ஸ்க்ரிப்ட்டை வெட்டி ஒட்ட சொல்லுங்க!

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க! :)