ஆமாம் இந்த ஏழாம் அறிவு படத்தை நெறையப்பேரு பார்த்துட்டாங்க! விமர்சனமும் கொடுத்துட்டாங்க, கொடுத்துக்கிட்டே இருக்காங்க. என்ன ஒரு சோகம்னா இந்தளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்துக்கு இதுவரை பார்த்து விமர்சிச்சவர்களில் ஒருவர்கூட படம் நல்லா இருப்பதாகச் சொல்லி விமர்சிக்கவில்லை!
நான் சொல்லுவது பொதுமக்களின்- படம் பார்த்துட்டு வந்து சொன்னவங்களுடைய- விமர்சனங்கள்! படம் பார்த்த நம்ம ஸ்ரிதர் பிள்ளை ட்விட்டரில் கொடுத்த மார்க் 2.5/5! கஜினியில் உள்ள மேஜிக் இதில் இல்லைனு தெளிவா சொல்லிட்டாரு! வேறென்ன வேணும்?
பதிவுலகிலும், ஆன்லைன்ல யும் ஏழாம் அறிவுக்கு வருகிற விமர்சனங்கள் எதுவும் தெளிவாக இல்ல! சுருதிஹாசன் இருப்பதாலேயோ என்னவோ இன்றைய பதிவுலக மற்றும் இணையதள விமர்சகர்கள் இந்தப் படத்தை எப்படி விமர்சிக்கிறதுனு தெரியாமல் குழம்பிப்போயி நிற்பதுதான் புரியுது.
பச்சையாச் சொன்னால் சுருதிஹாசனிடம் நடிப்பும் இல்லை, தமிழ் உச்சரிப்பும் தாங்க முடியலை, அப்படி ஒண்ணும் கவர்ச்சியுடன் அழகு பொங்கி வரவில்லை! னு சொல்லத் தயக்கத்துடன் ரொம்பத்தான் பயப்படுறாங்க.நம்ம கமலின் செல்வப் புதல்வி! அதுவும் முதல்ப்படம் அதனால எப்படி கடுமையாக விமர்சிப்பதுனு குழம்பி நிற்பதுதான் பல விமர்சனங்களில் தெரியுது.
கேபிள் சங்கர் என்ன சொல்றாருனா
***ஸ்ருதி அழகாக இருக்கிறார். ஸ்பஷ்டமாய் அழுத்தம் திருத்தமாய் டாமினண்ட் வாய்ஸில் பேசுகிறார். பாடல் காட்சிகளில் ராவிஷிங் பியூட்டியாக இருக்கிறார். சில பல காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.****
அப்புறம் நம்ம ஃபிளாசபி சொல்லுராரு..
****ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே.****
ஏன் இந்த பூசி மொழுகல்?? சுருதிக்கு நடிக்கத் தெரியலை, தமிழ் உச்சரிப்பும் சகிக்கலை னு பச்சையாச் சொல்ல வேண்டியதுதானே? இதே சுருதி யாரோ ஒரு புதுமுகமாக இருந்தால், நிச்சயம் இதுபோல் "சிரமப்பட்டுப் பாராட்டும்" பாராட்டு வந்திருக்காது. இதே சுருதி வேற யாருடைய மகளா இருந்தாலும் நாறடிச்சு இருப்பார்கள் இதே விமர்சகர்கள்!
* மற்றபடி ரா ஒன் வெற்றி பற்றி இன்னும் தெளிவாகத் தெரியலை. ஸ்ரிதர் பிள்ளையும் இதற்கு 2.5/5 மதிப்பெண்கள் கொடுத்து எந்திரன் அளவுக்கு இல்லை என்கிறார். பொதுவாகவே ரா ஒன் விமர்சனங்கள் ரொம்ப நெகட்டிவாகத்தான் வந்திருக்கு. அதனாலென்ன? அதுக்கும் பாக்ஸ் ஆஃபிஸுக்கும் சம்மந்தம் இருக்கனுமா என்ன? எப்படியோ ஷாருக் கான் போட்ட காசை எடுத்துத் தப்பிச்சா எனக்கு சந்தோஷம்தான். ஆனால் இந்தப் படத்தின் வெற்றி எப்படினு பொறுத்திருந்துதான் பார்க்கனும்!
* அப்புறம் நம்ம விஜயின் வேலாயுதம்! அரைச்ச மாவையே அரைப்பதைத்தவிர என்னால் எதுவும் பண்ண முடியாது னு தைரியமாக ஒத்துக்கொண்டு மறுபடியும் அரைச்சு இருக்காரு விசை. ஆனால் தீபாவளிக்கு வெளிவந்த இது ஒரு நல்ல மசாலாப் படம்னு சொல்றாங்க. தங்கச்சி செண்டிமெண்ட்ல பாசமலர் சிவாஜி, முள்ளும் மலரும் ரஜினி பக்கத்தில் போகமுடியாதுனாலும் ஏதோ அவரு தகுதிக்கு நல்லாவே செஞ்சிருக்காருனு சொல்றாக. இந்தப்படம் எ, பி அண்ட் சி ஏரியாவில் இது நல்லாப்போகும் னு எதிர்பாக்கப்படுகிறது. போறபோக்கைப் பார்த்தால் இந்தமுறை விஜய் சூர்யாவை ஜெயித்துவிடுவார் போல இருக்கு! அதைவிட சோகம் இந்தப் படம் வெற்றியடைந்தா இவர் அரைச்ச மாவை அரைக்கிறதை மறுபடியும் தொடர ஆரம்பிச்சுடுவாரே! :)
16 comments:
நான் தான் முதலாவதா,,,,,,,
ஆமா கமல் பொண்ணு அதிர்ஷ்ட கட்டை..
வாங்க, சண்முகம்! எனக்கும் படம் எடுபடாதது வருத்தம்தான். என்ன பண்ணுறது?
Collection அப்படிச் சொல்லலைங்க. 7ம் அறிவு, கல்லா கட்டிட்டாங்க. அதனால தயாரிப்பு தப்பிச்சுக்கும். முருகதாஸுக்கு எந்தப் படம் வெற்றியடைஞ்சாலும் சந்தோசம். காரணம் அடுத்த விஜய் படம் அவர்தான் இயக்குறாரு.
உண்மையைச்சொன்னா வந்த 3 படங்களில் ரெண்டு சுமார், ஒன்னு குப்பை(Raw-one)
***ILA(@)இளா said...
Collection அப்படிச் சொல்லலைங்க. 7ம் அறிவு, கல்லா கட்டிட்டாங்க.***
அதுக்குள்ளயா?!!
***உண்மையைச்சொன்னா வந்த 3 படங்களில் ரெண்டு சுமார், ஒன்னு குப்பை(Raw-one)***
ரா ஒன் சுமாராத்தேன் போகும்னு சொல்றாங்க. ஆனால் முதல் ரெண்டு நாள் கலக்சன் ரா ஒன் க்கும் நல்லாத்தாங்க இருக்கு.
பார்க்கலாம், இன்னும் ரெண்டு வாரத்தில் தெரியும் உண்மை நிலவரம்! :)
She looks like a palli stuck to the wall.
***கயல்விழி said...
She looks like a palli stuck to the wall.
27 October 2011 11:59 AM***
OMG!!! That is mean, kayal!
But, I agree that she is not attractive at all. May be because she is Kamal's daughter and has a "duaghterly" look to me. I dont know! :)
That's what one of the ladies told me yesterday(which I totally agree). We had the privilege(!) of watching this movie in the theatre.
***கயல்விழி said...
That's what one of the ladies told me yesterday(which I totally agree). We had the privilege(!) of watching this movie in the theatre.
27 October 2011 12:14 PM***
I see! :)
கமல் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டுத் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
மத்தபடி வாத்தியார் மகன் கணக்குல வீக் மாதிரி ஆகிவிட்டதோ.
வாங்க வல்லியம்மா! இந்தக்காலத்து பொண்ணுங்களுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க முடியாதுங்க. அவங்களா முட்டி மோதி கத்துக்கிட்டாத்தான் உண்டு. கமல் தன் மகளை இதுபடிக்கனும், இப்படிப் படிக்கனும்னு ஃபோர்ஸ் பண்ணாத உயர்தர அப்பாவாக இருக்காரு போல! நல்லது.
வாத்தியார் பிள்ளை பேராசிரியர்களாகவும் ஆகிறாங்க, வல்லியம்மா! என்ன அதெல்லாம் கொஞ்சம் அரிது! :)
"சுருதிஹாசன் அதிர்ஷ்டக்கட்டை போல இருக்கு!"/
True...
சரிகா மகளுக்கு நடிக்கத் தெரியாது என்றால் ஒத்துக்கொள்ளலாம்.
24 மணிநேரமும் நடித்துக்கொண்டே இருக்கும் ஒலக நாயகன் மகளிற்கு நடிக்கத் தெரியாதா?
அது எப்படி?
ippo bayam sruthi hasan pathi illa... vijay pathi :(
suryavachum pakistan afghanistan rendaiyum maranthuttu adhukku opposite sidela travel pannirukkar.. vijayku konjamavathu makkal mela anuthabam irundha thevalai... thangachi sentiment, afghanistan theeviravathi ellam romba thikattiduchu :(
***இராஜராஜேஸ்வரி said...
"சுருதிஹாசன் அதிர்ஷ்டக்கட்டை போல இருக்கு!"/
True...**
///ராவணன் said...
சரிகா மகளுக்கு நடிக்கத் தெரியாது என்றால் ஒத்துக்கொள்ளலாம்.
24 மணிநேரமும் நடித்துக்கொண்டே இருக்கும் ஒலக நாயகன் மகளிற்கு நடிக்கத் தெரியாதா?
அது எப்படி?
28 October 2011 8:07 AM///
###nila said...
ippo bayam sruthi hasan pathi illa... vijay pathi :(
suryavachum pakistan afghanistan rendaiyum maranthuttu adhukku opposite sidela travel pannirukkar.. vijayku konjamavathu makkal mela anuthabam irundha thevalai... thangachi sentiment, afghanistan theeviravathi ellam romba thikattiduchu :(
28 October 2011 6:49 PM##
தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிங்க, ராஜராஜேஸ்வரி, ராவணன் & நிலா! :)
இப்ப வேற ட்ரைலர் போட்டு கொள்றாய்ங்க..! ”யான புடிக்கும் சின்ன வயசில இருந்தே புடிக்கும்”
Post a Comment