திரு. ஷண்முகவேல்! நீங்க மனநலமருத்துவரைப்போல பல பிரச்சினைகளை எழுதிட்டு வர்றீங்கனு உங்க பதிவிலிருந்து பார்த்து வருகிறேன். ரொம்ப நல்ல விசயம். உங்களால் நெறையப்பேர் பலன் அடையிறாங்கனு மொதல்ல தெளிவாக சொல்லிடுறேன். ஆனால் சமீபத்தில், நீங்க என்னனா "பெண்களும், ரகசியங்களும்" அப்படி இப்படினு போட்டு ஏதோ 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிற ஒரு செக்ஸிஸ்ட் ஆண் கவுண்சலிங் பண்ணுறமாதிரி எழுதுறீங்க? அதுவும் இந்த உலகத்துக்கே தெரியுறாப்பிலே!! அமெரிக்கா, ஐரோப்பாவில் வாழ்ற தமிழ்ப்பெண்கள் எல்லாம் வாசிக்கிறாப்பிலே இணையதளத்தில் இப்படியெல்லாம் எழுதிக்கிட்டு இருக்கீங்க?
என்ன சார் இதெல்லாம்? ஆணும் பெண்ணும் சமம் இல்லையா? உடளலவில் இல்லை! உணர்வளவில், அறிவளவில்? குறைகளிலும் நிறைகளிலும்? இல்லையா??
ஆமா, ஆண்களிடம் ரகசியம் சொன்னால் அது எங்கேயும் போகாமல் அவர்களிடமே செத்துவிடுமா என்ன? அந்தமாதிரி ஆம்பளைங்கதான் நெறையா இருக்காங்களா? நீங்க என்ன "ஒளறுவாயி ஆம்பளைகளே" பார்த்ததில்லையா? எதைச்சொன்னாலும் அதுவும் "யார்ட்டயும் சொல்லிடாதே" னு சொன்னால் ஒரு 100 பேருட்ட சொல்ற ஆண்களைப் பார்த்ததில்லையா?? கோடிக்கணக்கில் இருக்காங்க சார்! இருந்தாலும் அவங்க எல்லாமே விதிவிலக்கா என்ன?
அதேபோல் பெண்கள் தங்கள் கூமுட்டைக்கணவன் ஒளறுவதை எல்லாம் வெளியே சொல்லாமல் அவர்களிடமே வைத்து மறைத்து சமத்தாக இருப்பதை பார்த்ததில்லையா சார்? என்ன் சார் இதெல்லாம்? எந்த உலகத்தில் நீங்க வாழ்றீங்க? எந்த நூற்றாண்டில் வாழ்றீங்க? இது 21ம் நூற்றாண்டு சார்! விழிச்சுக்கோங்க!
சார், என்னுடைய வேண்டுதல் என்னனா.. You should not stereotype women and that too being a counselor and all? இதை நான் உங்களுக்கு ஏன் சொல்றேன்னா, இதை சொல்லாமல் உங்க தலைப்புகளை வாசிச்சு, உங்க பதிவை வாசிச்சுப்புட்டு பின்னூட்டமிடாமல் பல பெண்கள் கொதிச்சுக்கிட்டு இருக்காங்க- நாகரிகம் என்கிற பேரில், உங்களை புண்படுத்த வேணாம்னு. அவங்க கொதிதெழுந்துகொண்டு இருப்பது உங்களுக்கு இன்னும் புரியலையா? புரிஞ்சுக்கோங்க சார். நீங்க ஒரு பெண்ணை பத்தி எழுதுவது வேற. "பெண்கள்" அப்படினு பொதுப்படையா சொல்றது வேற! You also sound like a sexist and doing counseling only for MEN!
அப்புறம் நான் எங்கேயிருந்தோ வந்து குதிக்கவில்லை. நானும் இப்படித்தான் பேசிக்கிட்டு இருந்தேன் (நம்ம கலாச்சாரத்தில் இருந்து வந்ததால்), அப்புறம் நெறைய நலம்விரும்பிகள் என்னிடம் எடுத்துச் சொன்னாங்க, இப்படி "பெண்கள்"னு "ஸ்ட்டிரியோடைப் " பண்ணி பேசுறது தப்புனு. அப்படியெல்லாம் இந்த நவீன உலகத்தில் பேசப்படாது அப்படி இப்படினு (இதில் நெறையப்பேரு பெண்கள்தான்)!
தடங்களுக்கு வருத்தம்தான்! தொடருங்கள் உங்கள் நற்பணியை!
No comments:
Post a Comment