தமிழ்மணத்தில் திரைமணத்தை தனியாகப் பிரிச்சபோது இருந்தது போலவே சமீபத்தில் (எப்போ இருந்துனு தெரியலை) திரைமணம் திரட்டியை மாற்றியமைத்துள்ளது ரொம்ப நல்லாயிருக்கு. இடையில் ஏதோ வேற ஃபார்மட்ல திரைமணம் மாற்றப்பட்டபோது ஆரம்பத்தில் நல்லாயிருந்தது. அப்புறம் நாள் ஆக ஆக, கண்ட குப்பைகளும் அங்கே வந்து குவிவதுபோல ஒரு பிரமை ஏற்பட்டது. மேலும் தமிழ்மணத்தில் "சிக்நேச்சர்" அதில் இல்லாமல்ப் போய்விட்டது. அங்கு செல்லும்போது தமிழ்மணம் சம்மந்தமில்லாத ஏதோ வேறு தளம் சென்றதுபோல தோன்றியது. அதனால என்னைப்போல பலருக்கும் (எனக்கு மட்டும்தானா?னு தெரியலை :) ) திரைப்படப்பிரிவில் பதிவு போடவே "மூட் " வரலை.
இப்போ என்ன காரணத்தாலேயோ திரைமணம் பகுதி பழைய கவர்ச்சியான திரைமணமாக மாற்றப்பட்டுள்ளது திரைப்படப்பிரிவில் பதிவுபோட பலரையும் ரொம்ப ஊக்குவிக்கிது. இந்த "ஃபார்மட்ல" தான் தமிழ்மணம் "சிக்நெச்சர்" (அப்படினா என்னனு கேக்காதீங்க) தெரிகிறது!
திரைப்படப்பதிவை ஊக்குவிப்பது நல்லதா கெட்டதா என்பது விவாதத்திற்குரிதாக ஒருபக்கம் இருக்கட்டும். திரைமணத்தின் இந்த ஃபார்மட் நல்லாயிருக்குனு மட்டும் சொல்ல வந்தேன்! என்னைப் பொருத்தவரையில் பொய்கலப்பு மற்றும் தேவையில்லாத ஆபாசக்கலப்பில்லாமல் எதை எழுதினாலும் பரவாயில்லை! மேலும் சிலநேரம் வலைபதிவர்களுக்கு பலவிதமான அரசியல் பிரச்சினைகள், சாதிப்பிரச்சினை, மதப்பிரச்சினைஅது இதுனு தேவையில்லாத வம்பில் மாட்டாமல் பதிவுபோட திரைப்படப்பதிவுகள் உதவுகினறன என்பது என் நம்பிக்கை.
மறுபடியும் இதுவும் எதிர்காலத்தில் மாற்றத்துக்கு உள்ளாகலாம்தான். ஏதோ தோன்றியதை மைக் போட்டு சொல்லனும்னு தோனுச்சு, அதான் இந்தப் பதிவு! நன்றி! :)
No comments:
Post a Comment