Monday, January 23, 2012

உலகமெங்கும் ஒரே மதம்னு ஆனால் மதவாதிகள் பொழைப்பு?

எங்கே பார்த்தாலும் தன் மதம்தான், தன் மார்க்கம்தான் உயர்ந்ததுனு பதிவுலகில் எல்லாரும் வந்து சொல்லித் தன் மதத்தின் உயர்ந்த நிலையை உலகுக்கு (முக்கியமா பிறமதத்தினருக்கு) எடுத்துக்காட்டுறாங்க!

இவர்கள் ஆசைப்படுவதுபோல் உலகமெங்கும் ஒரே மதம்னு இவங்க மதமே ஆக்கிரமித்து விட்டால்? சும்மா ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம். அப்படி எல்லாரும் இவங்க மதத்துக்கு மாறிவிட்டால் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் மறைந்து இந்த உலகம் சொர்க்க பூமியாகிடுமா? ஆகாதா? ஆகுமா?

எல்லாருமே இவர்கள் மதத்திற்கு தாவிவிட்டால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம், போர்னோக்ராஃபி, பேராசை, தாந்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் அகங்காரம், தாந்தான் அழகுனு நெனைக்கிற சின்னப்புத்தி, ஏழை-பணக்காரன் என்கிற ஏற்றதாழ்வு எல்லாமே இல்லாமல்ப் போயிடுமா?

உலகில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எல்லோரும் சமாதானமாக, மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார்களா? எல்லாரும் திருந்தி, நல்லவர்களாயிட்டா அப்புறம் கடவுள் எதுக்கு? தூக்கி எறிஞ்சிடலாமே?

கொஞ்சமாவது மூளையைக் கசக்கி யோசிங்கப்பா!

ஒரே மதத்தை சேர்ந்தவர்களிடம் (உங்க மதத்தில்தான்! ஆமா உன் மதத்திலதான்!), பதவிக்காக, புகழுக்காக, பெருமைக்காக மெலிந்தவரை, வலியவர் ஏறி மிதிப்பது காலங்காலமாகவும், இன்றும் நடக்கவில்லையா? உங்க பகல்க்கனவு நனவாகி பிறமதத்தவரே இல்லாமல் போயிட்டாலும், நீங்க இதே மாதிரி எழவை உங்க மதத்துக்குள்ளேயே கூட்டத்தான் போறீங்க!

ஒண்ணு மட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு பிரச்சினை, பிறமதத்தவரல்ல! உங்களை, உங்க மதத்தை, மற்றவர்கள் உயர்வா நினைக்கனும்னா உங்க மதத்தில் உள்ள ஒவ்வொருவரும் (ஆமா, ஒவ்வொருவரும்), யாருக்கும் எந்தத் தீமையும் செய்யாமல் எல்லோரும் வணங்குமளவுக்கு மாறுங்கள் (உங்க மதநூல்கள் சொல்வதுபோல)! ஆமா உங்க மதத்தில் உள்ள அனைவரும்!

நன்னடத்தை இல்லாதவங்க உங்க மதத்தில் இருக்காங்களா? அப்போ மொதல்ல உங்க மதத்தில் உள்ள நன்னடத்தை இல்லாதவர்களிடம் போய் உங்க பிரசங்கத்தை வச்சுக்கோங்க! அவங்களை மொதல்ல திருத்துங்க. எல்லாரும் திருந்திட்டாங்களா? இல்லையா? அதெல்லாம் உங்களால முடியாதா? அப்படிலாம் நீங்க சொல்லப்படாது!

அதை செய்றதை விட்டுப்புட்டு போற வாரவன், தெரிந்தவன் தெரியாதவன் எல்லார்ட்டயும் போயி என் மதம்தான், என் மார்க்கம்தான் உலகிலேயே உயர்ந்ததுனு எதுக்கு பீத்திக்கிட்டு? பிறமதத்தினரே அதை சொல்லுமளவுக்கு நடந்து காட்டுங்களேன்?! மொதல்ல இப்போதைக்கு உங்க மதத்தில் இருக்கிறவன் எல்லாத்தையும் நல்லவனாக்குங்க! அப்புறம் மத்தவனையும் உங்க மதத்துக்கு மாற்றுவதை கவனிக்கலாம்.

36 comments:

ராஜ நடராஜன் said...

When did u left your pinky bloggy face:) It was a unique!

வருண் said...

That was long time ago (6 moths ago?). :)))

I tried to change something in the blog design and somehow I lost that design. Could not bring it back.

Well, there are so many things we lose over the time, after all it is just a blog design. I convinced myself that it is not a big deal! :-)))

நெல்லை கபே said...

//உங்க பகல்க்கனவு நனவாகி பிறமதத்தவரே இல்லாமல் போயிட்டாலும், நீங்க இதே மாதிரி எழவை உங்க மதத்துக்குள்ளே கூட்டத்தான் போறீங்க!// 'பளிச்'சென்ற வரிகள். இது எல்லா மதத்துக்கும் பொருந்துகிற விஷயம்தான்.வலியவன் எளியவனை அடக்கி ஆளுதல் நடந்து கொண்டே இருக்கிறது எப்போதும். அதை எதிர்த்துக் கொண்டே இருத்தலும் நடந்து கொண்டே இருக்கிறது.எல்லாமே சுமூகம் என்பது அலையில்லாத கடலை எதிர்பார்ப்பதுமாதிரிதான். நன்றி!

Robin said...

ஒரே "மார்க்கமா" இருக்கிற நாடுகளிலேயே யார் ஒரிஜினல், யார் டூப்ளிகட்டுன்னு அடிச்சுக்குறாங்க :)

கோவி.கண்ணன் said...

ஊதிய சங்கு ;)

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
வருண் said...

உண்மைதான் கோவி. மத சம்மந்தமாக நான் எது பேசினாலும் அது அரச்சமாவாகத்தான் இருக்கு. ப்லர் பேசியது அல்லது நானே முன்னால் பேசியது என்ற உணர்வு வராமல் இல்லை. ஆனால் பதிவர்களும் வாசகர்களும் மாறிக்கொண்டு வரும் வேளையில் நம் "நிலை" "புரிதல்" பற்றி புதியவர்களுக்கு தெளிவு படுத்த உதவும் என்று நெனைக்கிறேன்.

வேகநரி said...

மதவெறிக்கெதிராகன அருமையான பதிவு வருண்.
மதவெறிக்கெதிராக மதம் பரப்ப முயற்சிப்போருக்கு எதிராக பதிவு போட்டதால் உங்களுக்கு வாக்கு கிடைக்கவில்லை.

அதிரைக்காரன் said...

மதத்தை முன்னிறுத்தாத நாடுகளில் இருப்பவர்களெல்லாம் யோக்கிய சிகாமணி என சொல்ல வருகிறீர்களா? உலகில் அப்படி ஒருநாட்டை வேணாம், ஒரு மாநிலத்தைக் காட்ட முடியுமா?

உலமெங்கும் ஒரேமதம்னு ஆனபிறகு எல்லோருமே மதவாதிகளாகிவிடுவர் என்பதால் அதை வைத்து பிழைப்பு நடத்தவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.மதங்களிருக்கும் வரைதான் நாத்திகர்களின் பொழைப்பு ஓடும்.

ஆக,நாத்திகர்களின் பொழைப்பு நடக்க மதம் அவசியங்கிறேன்.

வருண் said...

****thequickfox said...

மதவெறிக்கெதிராகன அருமையான பதிவு வருண்.
மதவெறிக்கெதிராக மதம் பரப்ப முயற்சிப்போருக்கு எதிராக பதிவு போட்டதால் உங்களுக்கு வாக்கு கிடைக்கவில்லை.

24 January 2012 5:56 AM


ஓட்டு விழலைனா போகுது விடுங்க. நானே ஓட்டுப்போட மறந்துட்டேன் :)

வருண் said...

***அதிரைக்காரன் said...

மதத்தை முன்னிறுத்தாத நாடுகளில் இருப்பவர்களெல்லாம் யோக்கிய சிகாமணி என சொல்ல வருகிறீர்களா? ***

அப்படியா நான் சொல்ல வாரேன்? :-B)

***உலகில் அப்படி ஒருநாட்டை வேணாம், ஒரு மாநிலத்தைக் காட்ட முடியுமா?****

நான் அப்படி ஒரு மாநிலம் இருக்குனு எங்கே சொன்னேன்?

*** உலமெங்கும் ஒரேமதம்னு ஆனபிறகு எல்லோருமே மதவாதிகளாகிவிடுவர் என்பதால் அதை வைத்து பிழைப்பு நடத்தவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மதங்களிருக்கும் வரைதான் நாத்திகர்களின் பொழைப்பு ஓடும். ***

ஆக,நாத்திகர்களின் பொழைப்பு நடக்க மதம் அவசியங்கிறேன்.

24 January 2012 6:47 AM***

ஆக நாத்திகர்களின் பொழைப்பை கெடுக்க எல்லாமதவாதிகளும் ஒண்ணு சேர்ந்து உதவுங்களேன்??

அதுக்கு என்ன அப்படி யோசிக்கிறீக??

நாத்திகர்கள் பொழைப்பில் மண்னள்ளிப்போட ஏன் தய்ங்கௌறீங்க?

நீங்க நாத்திகர் இல்லைதானே?? இல்லைனா நீங்க நாத்திகர் என்பதால் சுயநலமா? :)

ராவணன் said...

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால், இருந்தால் ஒரே மதமாக, ஒரே இனமாக, ஒரே மொழியினராக படைத்திருப்பார்.

அப்படி எந்த கன்றாவியும் இல்லாத படியால் இவ்வளவு பிரச்சனைகளும்.

இப்போது கடவுளே நேரில் வந்தாலும் மத வியாதிகள் திருந்தப் போவதில்லை.

விருத்தசேனம் செய்துகொண்டு விறைவீங்க விபச்சாரம் செய்வார்களொழிய திருந்த வழியில்லை.

வருண் said...

***ராவணன் said...

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால், இருந்தால் ஒரே மதமாக, ஒரே இனமாக, ஒரே மொழியினராக படைத்திருப்பார்.

அப்படி எந்த கன்றாவியும் இல்லாத படியால் இவ்வளவு பிரச்சனைகளும்.

இப்போது கடவுளே நேரில் வந்தாலும் மத வியாதிகள் திருந்தப் போவதில்லை.***

ஆமா, கடவுளே வந்து சொன்னாலும், "போயி வேலையைப் பாருப்பூ! ஏன் எங்க பொழைப்புல மண்ணள்ளிபோடுற?" னு அவரை மிரட்டி அனுப்பிவிடுவார்கள் இவர்கள்! :)))

Jayadev Das said...

For one who explains this supreme secret to the devotees, pure devotional service is guaranteed, and at the end he will come back to Me.

There is no servant in this world more dear to Me than he, nor will there ever be one more dear.

Bhagavad Gita 18.68-69.

மதம் என்பது ஒரு வாழும் கலை. அதன் நோக்கம், படைத்தவனின் இச்சைப் படி வாழ்க்கையை நடத்திச் சென்று அதை அர்த்தமுள்ளதாக்குவது. நாம் செல்லும் வழி நல்ல வழி என்று படுகிறதென்றால், பிறருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பும் பட்சத்தில் அதைப் பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி நீங்களும் முயன்று பாருங்கள் என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது? பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், "இந்த அறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவனே எனக்கு மிகவும் கவர்ந்தவன், அவனை விட நான் விரும்பத் தக்கவன் வேறு யாரும் இல்லை" என்று சொல்கிறார். கீதையை ஏற்றுக் கொண்டேன் என்றால், அவர் சொன்ன படி பிறருக்கு எடுத்துச் சொன்னால் தானே ஏற்றுக் கொண்டதர்க்கே அது அர்த்தமாகும்? கீதையின் வழி எல்லோருக்கும் பொதுவானது, சனாதன தர்மம். எல்லோருக்கும், எல்லா கால கட்டத்திலும் இது பொருந்தும். இன்னாருக்கு மட்டும் தான் இது பொருந்தும் என்று குறுகிய வட்டம் போட்டு விட முடியாது. உலகில் எல்லா நாடுகளில் உள்ளோருக்கும் எடுத்துச் சொல்வோம், கேட்டு அதை ஏற்றுக் கொள்பவர்கள் பயனடையட்டுமே, தவறென்ன?

Jayadev Das said...
This comment has been removed by the author.
வருண் said...

Well, Jeyadevdas, check out the following siad in BG, someone says.

***The most confidential knowledge is then explained by Krishna: "Become My devotee, always think of Me, act for Me, worship Me, and offer all homage unto Me. Surrender unto Me alone. Do not fear sinful reactions."

The problem here is I can't do all these and I dont want to tell anyone to listen to this Krishna either! Let me be myself and find out what is life is all about. Why do I have to become someone's devotee???

I repeat why should I become some "stranger's" devotee???

வருண் said...

அப்புறம் இந்த அர்ஜுணாவும் கிருஷ்ணாவும் கதைல வரும் கேரக்டர்களா இல்லைனா உண்மைக் கதையில் வந்த அந்தக்காலத்தில் வாழ்ந்தவங்களானு தெரியலை. எப்படி இருந்தாலும், அர்ஜுணன் கிருஷ்ணாவை சந்திச்சு இருக்காரு, அவரு சொல்றதை இவரு கேட்டு இருக்காரு. கிருஷ்ணாவை அர்ஜுணர் கடவுளா நெனச்சுக்கிட்டார், ஏற்றுக்கிட்டார். இருந்துட்டுப் போகட்டும். இப்போ அந்த ரெண்டு பேரும் வாழ்ந்து செத்து பல நூறாண்டுகளாகிப்போச்சு. இல்லையா?

இப்போ எங்கே இருக்காரு அந்த கிருஷ்ணரு?

சாய்பாபாவா வந்து இருந்தாரா? அவரும் போயிச் சேர்ந்துட்டாரு!

நித்திதான் இப்போ உள்ள நவீன கிருஷ்ணனா? அவரு சொல்றபடி கேக்கனுமா? இதென்னங்க அநியாயமா இருக்கு!! :)

Jayadev Das said...

\\The problem here is I can't do all these and I dont want to tell anyone to listen to this Krishna either! Let me be myself and find out what is life is all about. Why do I have to become someone's devotee???

I repeat why should I become some "stranger's" devotee??? \\

நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனாக வேண்டும், அவரிடம் சரணாகதி அடைய வேண்டும், அவரை வணங்க வேண்டும் [இது அத்தனையும் ரொம்ப நல்லது தான்!!] என்றெல்லாம் வற்ப்புறுத்த வில்லை. ஏனென்றால் இதை போதித்த ஸ்ரீ கிருஷ்ணரே அவ்வாறு செய்ய வில்லை. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், என்ன செய்ய வேண்டுமென்பதை நீயே முடிவு செய்து கொள் என்று அர்ஜுனனுக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து விடுகிறார்.

iti te jñānam ākhyātaḿ
guhyād guhyataraḿ mayā
vimṛśyaitad aśeṣeṇa
yathecchasi tathā kuru

Thus I have explained to you knowledge still more confidential. Deliberate on this fully, and then do what you wish to do.

Bhagavad-gītā -18.63

இந்தச் சுதந்திரம் அர்ஜுனனுக்கு மாத்திரமல்ல எல்லோருக்கும் உண்டு. அப்படியானால், ஸ்ரீ கிருஷ்ணரை பகவானாக ஏற்றுக் கொண்டு கீதை படி நடக்க முயற்சி செய்பவர்கள் என்ன தான் சொல்ல வருகிறோம்? இதோ பகவத் கீதை இருக்கிறது, இதன் படி நடந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம், நீங்களும் முயன்று பாருங்களேன்- என்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். [ஏனென்றால் பகவத் கீதையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவனைப் போல எனக்கு பிடித்தமானவன் வேறு யாரும் இல்லை என்று பகவானே சொல்கிறார்]. இதைச் சரி என்று எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும், மற்றவர்கள் அவர்கள் வழியில் தாராளமாகச் செல்லலாம். ஆனால், மற்றவர்களிடம் இதைப் பற்றி சொல்லவே கூடாது என்ற வாதம் ஏற்கத் தக்கதல்ல.

Jayadev Das said...

ஸ்ரீ கிருஷ்ணர் கடவுளா கற்பனையா? நீங்கள் ஒரு முறை பகவத் கீதையை முழுதாகப் படித்துப் பாருங்கள். அதில் சொல்லப் பட்டுள்ள விஷயங்கள் இன்றளவும் உலகில் உள்ள தத்துவ ஞாநிகளை எல்லாம் பிரமிக்கச் செய்துகொண்டுள்ளது. அவ்வளவு அற்புதமான படைப்பு. நீங்கள் கடவுள் என்று கூட பார்க்க வேண்டியதில்லை வெறும் பிலாசபி என்று கூட படித்துப் பாருங்கள், அதற்க்கு ஈடு இணையான வேறொரு நூல் கிடையாது. கீதையில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை ஊர்ந்து கவனித்தாலே போதும், இது சாதாரணமான மனிதனால் உருவாக்க முடியாது என்று புரியும்.

http://vedabase.net/bg/1/1/

Jayadev Das said...

சில போலி மதவாதிகளைப் பற்றி சொல்லியிருக்கீங்க. சார், நீங்க தங்கம் வாங்கணும்னா ஜாய் ஆலுக்காஸ் /லலிதா ஜுவல்லரிக்குப் போவீங்களா, இல்ல உங்க தெருவில் இருக்கும் காயலான் கடையில் பழைய இரும்பை தங்கம்னு சொல்லி விற்க்கிரான்னு சொல்லி அங்கே வாங்குவீங்களா? நல்ல கடைக்குத் தானே போவீங்க? ஆன்மீகத்தைப் பற்றியும் குறைந்த பட்சம் இந்த அளவுக்காவது awareness இருக்க வேண்டும், இருந்தால் நிச்சயம் நல்ல ஆண்மீகவாதியைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

வருண் said...

சரி, நீங்க ரொம்ப சீரியஸா பேசுவதால் கொஞ்சம் கவன்மாகவே இதை பார்க்கலாம்..

பகவத்கீதை வந்து மஹாபாரதத்தில் ஒரு பகுதினு சொல்லலாம். அதை எழுதியவர் வியாசர்!

***VedaVyasa wrote Bhagavad Gita. ***

மொதல்ல வியாசர் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

///Vyasa is traditionally known as author of this epic. But he also features as an important character in it. His mother later married the king of Hastinapura, and had two sons. Both sons died without issue and hence their mother asked Vyasa to go to the beds of the wives of her dead son Vichitravirya.

Vyasa fathers the princes Dhritarashtra and Pandu by Ambika and Ambalika. Vyasa told them that they should come alone near him. First did Ambika, but because of shyness and fear she closed her eyes. Vyasa told Satyavati that this child would be blind. Later this child was named Dhritarāshtra. Thus Satyavati sent Ambālika and warned her that she should remain calm. But Ambālika's face became pale because of fear. Vyasa told her that child would suffer from anaemia, and he would not be fit enough to rule the kingdom. Later this child was known as Pāndu. Then Vyasa told Satyavati to send one of them again so that a healthy child can be born. This time Ambika and Ambālika sent a maid in the place of themselves. The maid was quite calm and composed, and she got a healthy child later named as Vidura. While these are his sons, another son Śuka, born of his wife, sage Jābāli's daughter Pinjalā (Vatikā),[5] is considered his true spiritual heir. He makes occasional appearances in the story as a spiritual guide to the young princes.///

சரி பகவத்கீதையைப் படினா நீ எதுக்கு வியாசர் பத்தி பேசிக்கிட்டு இருக்கனு கேப்பீங்க?

கிருஷ்ணாவை உருவாக்கியது, வியாசர்தான். கிருஷ்ணாவை உலகுக்கு எடுத்துக்காட்டியது வியாசர்.

சரியா?

வியாசர் மனுஷன் தானே? அவர் எழுதியதில் எப்படி குறையே இல்லாமல் இருக்கும்? I dont think bhagavatgita is flawless!

-to be continued

வருண் said...

இதை கிருஷ்ணா சொன்னதாக, இப்படி பகவத்கீதையில் இருப்பதாக சொல்றாங்க!

"Become My devotee, always think of Me, act for Me, worship Me, and offer all homage unto Me. Surrender unto Me alone. Do not fear sinful reactions."

இதெல்லாம் அர்ஜுனாவால பண்ணமுடியும், உங்களால், உங்களைப்போல பலரால் செய்யமுடியும்! என்னால முடியாதுங்க!

I admire people. If such people say, worship me, surrender unto me alone"

அப்படினு அவ்ங்க சொன்னால், அவங்க மேலே உள்ள மரியாதை எனக்கு போயிடும். அது கடவுளாவே இருந்தாலும். அதுபோல் ஒரு சுப்பீரியாரிட்டி, தன்னைத்தானே பெரிய இவன் என்று சொல்லுவது கீழ்த்தரமான ஒரு செய்கை என்பது என் தாழ்மையான எண்ணம்.

-தொடரும்

வருண் said...

பகவத்கீதை போலவே எல்லா மதத்திலும் ஒரு புத்தகம் இருக்குங்க. கிருஷ்ணா போல முகமது நபி, ஜீசஸ், புத்தர் னு பலர் வந்து இருக்காங்க.

நீங்களும் இந்துக்களும் பகவத்கீதையை படிச்சு நல்லவங்களா ஆகுங்க

குர்ரான் படிச்சு இஸ்லாமியர்கள் நல்லவங்களா ஆகட்டும்

ஏசு போதனைகளை ஏற்று கிறிஸ்டியன்ஸ் நல்லவர்களாகட்டும்.

புத்தா போதனைகளை பின்பற்றி அவரை தொடர்பவர்கள் ந்ல்லவர்களாகட்டும்.

இப்படி ஒலகமே நல்லவங்களா ஆயிட்டா, எதையுமே படிக்காத நான் கெட்டவனா இருக்கனும்னு அவசியம் இல்லை!

நல்லது கெட்டது, சரி தவறு எல்லாம் பகவத்கீதை படிச்சி, குர்ரான் படிச்சு, பைபில் படிச்சு ஆக வேண்டியதில்லை.

அது படிக்கிறவ்னக்க எல்லாம் யோக்கியர்கள் ஆவதுமில்லை! இதுதான் உண்மை!

பகவத்கீதை, குர்ரான், பைபில் எல்லாம் படிச்சவங்க திருந்தி நலவழியில் வாழமாட்டேன்கீறாங்க. அதெல்லாம் உயர்ந்த புக்னு சொல்றாங்க. இருந்துட்டுப் போகட்டும்! அதிஅ படிச்சவன், படக்கச் சொல்றவன் எல்லாம் இன்னைக்கும் கேவலம் சாதாரண மனுஷனாத்தான் இருங்காங்க! அதுதான் பிரச்சினை!!

உங்க கருத்துக்கு நன்றி ஜெய்வேல்! :)

Xyz said...

Relax Please..:))

Jayadev Das said...

\\கிருஷ்ணாவை உருவாக்கியது, வியாசர்தான்.\\ காந்தியின் வரலாறு பற்றி யாராவது புத்தகம் எழுதினால், காந்தியை உருவாக்கியதே அவர்தான் என்றாகி விடுமா என்ன? \\வியாசர் மனுஷன் தானே? அவர் எழுதியதில் எப்படி குறையே இல்லாமல் இருக்கும்? I dont think bhagavatgita is flawless!\\ வியாசர் ஒரு ஷக்தியாவே ஷ அவதாரம் ஆவார். அதாவது, இறைவனால் empower செய்யப் பட்ட personality . அவற்றில் குறை எதுவும் இருக்காது, இருப்பதாக தெரிகிறதென்றால் நாம் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். உலகம் உருண்டை வடிவிலானது, தாவரங்களுக்கும் உயிருண்டு போன்ற உண்மைகள் வேதங்களில் உள்ளன. மேலும் கோள்களுக்கிடையேயான தூரங்களும் துல்லியமாக கொடுக்கப் பட்டுள்ளன. இது போல பல உதாரணங்களைச் சொல்லலாம்.

Jayadev Das said...

\\இதெல்லாம் அர்ஜுனாவால பண்ணமுடியும், உங்களால், உங்களைப்போல பலரால் செய்யமுடியும்! என்னால முடியாதுங்க!\\ விடலைப் பருவத்தில் ஒரு இளம் பெண்ணோடு காதல் வயப் பட்டு விட்டால் \\always think of her, act for her, worship her, and offer all homage unto her.\\ தானாகவே செய்ய முடியும் என்றால், ஏன் அதையே இறைவன் பக்கம் திருப்பி விட முடியாது? நிச்சயம் முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. உண்மையில் இறைவன் மேல் அன்பு செலுத்தவே ஒவ்வொரு ஜீவனும் ஏங்குகிறது, பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று பல விதங்களில் இந்த ஏக்கம் வெளிப்படுகிறது. இது அத்தனையும் எவ்வளவுதான் கிடைத்தாலும் திருப்தியே வருவதே இல்லை. ஏனெனில் அவை வெறும் நிழல்கள் மட்டுமே. நாம் எதற்காக ஏங்குகிறோம் அது இவற்றில் இல்லையே!! இறைவன் மேல் அன்பு செலுத்தும் போது மட்டுமே பூரண மனதிருப்தி வரும், எப்படி இறைவன் மேல் அன்புசெலுத்துவது என்ற விஞ்ஞானமே கீதை. அது தான் ஒரு பக்தனுக்கு வேண்டும். சொர்க்கத்துக்குப் போவதோ, "நல்லவனாக" ஆவதோ அல்லது இங்கேயே காசு பணம் சேர்ப்பதோ தேவையே இல்லை. ஒரு உண்மையான பக்தனின் நோக்கம் எத்தனை கஷ்டம் வந்தாலும் உன் திருவடியை மறவாத வரம் வேண்டும் என்று பகவானிடம் கேட்பது மட்டுமே.

வருண் said...

***உலகம் உருண்டை வடிவிலானது, தாவரங்களுக்கும் உயிருண்டு போன்ற உண்மைகள் வேதங்களில் உள்ளன. மேலும் கோள்களுக்கிடையேயான தூரங்களும் துல்லியமாக கொடுக்கப் பட்டுள்ளன. இது போல பல உதாரணங்களைச் சொல்லலாம்.***

வேதங்களில் உண்மைகள் இருந்தால், இருக்கும் உண்மைகளை நான் மறுப்பதற்கில்லை! உண்மை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே சமயத்தில் இந்த ஆராய்ச்சி குறிப்பில் அல்லது வேதப் புத்தகத்தில் குறையே இல்லை னு நீங்க சொலவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கலாகாது!

ஆனால் அதில் உள்ள குறைகளை, குறைகள் இல்லை, உனக்குத்தான் புரியலை,..அதாவது

***அவற்றில் குறை எதுவும் இருக்காது, இருப்பதாக தெரிகிறதென்றால் நாம் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். ***

அப்படினு நீங்க சொன்னால், நான் எதுவும் சொல்வதற்கில்லை! :)

வருண் said...

***உண்மையில் இறைவன் மேல் அன்பு செலுத்தவே ஒவ்வொரு ஜீவனும் ஏங்குகிறது, ***

நானும் ஒரு ஜீவந்தான். நெறியப்பேர் மேலே அன்பு செலுத்துறேன். இதுநாள் வரைக்கும் இறைவன் மேலே அன்பு செலுத்த எல்லாம் ஏங்கியதில்லை! தயவு செய்து என்னை நம்புங்கள்! :)

Jayadev Das said...

\\நானும் ஒரு ஜீவந்தான். நெறியப்பேர் மேலே அன்பு செலுத்துறேன். இதுநாள் வரைக்கும் இறைவன் மேலே அன்பு செலுத்த எல்லாம் ஏங்கியதில்லை! தயவு செய்து என்னை நம்புங்கள்! :) \\

yathā taror mūla-niṣecanena
tṛpyanti tat-skandha-bhujopaśākhāḥ
prāṇopahārāc ca yathendriyāṇāḿ
tathaiva sarvārhaṇam acyutejyā

As pouring water on the root of a tree energizes the trunk, branches, twigs and everything else, and as supplying food to the stomach enlivens the senses and limbs of the body, simply worshiping the Supreme Personality of Godhead through devotional service automatically satisfies the demigods, who are parts of that Supreme Personality.

ஒரு தாவரத்தின் வேரில் ஊற்றப் பட்ட நீர் எவ்வாறு அதன் மற்ற எல்லா பாகங்களுக்கும் சென்று பயனளிக்கிறதோ, வயிற்றுக்கு கொடுக்கப் பட்ட உணவு உடலின் எல்லா பாகங்களுக்கும் போஷாக்கு அளிக்கிறதோ, அதே போல இறைவன் மேல் செலுத்தப் படும் அன்பு மற்ற எல்லோருக்கும் சென்றடைகிறது. செடிக்கு தண்ணீர் ஊற்றும்போது இல, கிளை, பூக்கள் என்று தனித் தனியாக தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, வேரில் ஊற்றினாலே போதும் மற்ற எல்லா பாகங்களுக்கும் அது சென்றடையும். அதே போல கைகள், கால்கள், கண்கள் என தனித் தனியாக உணவு கொடுக்கத் தேவையில்லை [அது நடக்கிற காரியமும் இல்லை!!], வயிற்றுக்கு கொடுத்தாலே போதும் அது மற்ற எல்லா பாகங்களையும் சென்றடையும்.

பாண்டவர்கள் காட்டில் வாழும் போது துர்வாசர் தன்னுடைய அறுபதாயிரம் சீடர்களுடன் விருந்துக்கு வருகிறார், அப்போது திரௌபதி உணவு உண்ட பின்னர் அட்சய பாத்திரத்தை கழுவி வைத்த சமயம், அதற்க்கு மேல் அது உணவு தராது. அப்போது அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரார்த்திக்கிறார்கள், அங்கே வந்த அவர், அட்சய பாத்திரத்தை எடுத்து வரச் சொல்கிறார், அதில் ஒட்டிக் கொண்டிருந்த சிறு கீரைத் துளியை உண்கிறார், அது உலகில் உள்ள அத்தனை ஜீவன்களையும் திருப்தியடையச் செய்கிறது, துர்வாசருக்கும், அவருடைய அறுபதாயிரம்சீடர்களுக்கும் வயிறு முட்ட உண்ட திருப்தி, குளிக்கச் சென்றவர்கள் திரும்ப வராமலேயே ஓடிப் போய்விடுகிறார்கள்.

இறைவன் மேல் அன்பு செலுத்தினாலே போதும், அது மற்ற அத்தனை உயிரினத்தின் மீதும் அன்பு செலுத்துவதற்குச் சமம். இந்த அன்பைத்தான் நாம் வெவ்வேறு வழிகளில் இங்கே தேடுகிறோம், பலர் மீது அன்பு வைக்கிறோம், ஆனால் அவை நிழல்கள், தண்ணீரில் தெரியும் பிம்பங்கள், ஒரு போதும் திருதியைத் தரா. [மாம்பழத்தின் பின்பத்தை சாப்பிட்டு பசியாற முடியாது, அதற்க்கு அந்த பிம்பத்தின் ஒரிஜினல் மரத்தில் உள்ள பழத்தை பறித்து உன்ன வேண்டும்.!!] நாம் இறைவனை விட்டுவிட்டு மற்ற யார் யாரிடமோ அன்பை செலுத்துகிறோம், [சாதத்தையும், சாம்பாரையும் குழைத்து காதிலும், கண்ணிலும் அறைந்தார்ப் போல!!] அதன் விளைவு ஒன்று வாழும்போதே அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள், அல்லது சாவு அவர்களை நம்மிடமிருந்து பிரித்துவிடும்.

தருமி said...

//(கீதையில்) சொல்லப் பட்டுள்ள விஷயங்களை ஊர்ந்து கவனித்தாலே போதும், இது சாதாரணமான மனிதனால் உருவாக்க முடியாது என்று புரியும். //

இதை வேறெங்கோ கேட்டது மாதிரி இருக்கே!

வருண் said...

***அதே போல இறைவன் மேல் செலுத்தப் படும் அன்பு மற்ற எல்லோருக்கும் சென்றடைகிறது***

நீங்க இப்படி பொதுவாவே பேசுறீங்க. நான் என்னைக்குமே ஒரு உதாரணம் எடுத்துத்தான் பார்ப்பதுண்டு..பொதுவாப் பேசுறதுல நெறைய விடயத்தை கவனிக்க தவறிடுவீங்க!

சரி, ஒரு அந்தணரை/பார்ப்பனரை எடுத்துக்குவோம்- இவங்க்கதான் பொதுவா பகவான் பகவத்கீதைனு ஆஹா ஓஹோனு பேசுவாங்க.

சரி, இவரு (இந்தப் பார்ப்பனர்) இறைவன் மேலே ஒரே அன்பாயிருக்காரு!! ஏன்? உலகம் நல்லாயிருக்கனும்னா? ஆமா, அதோட சேர்த்து தானும் ரொம்ப நல்லாயிருக்கனும் எனபதால். இருந்துட்டுப் போகட்டும்.

ஆனால், இவருக்கு அன்றாட வாழ்க்கையில் பலரைப்பிடிக்காது, இஸ்லாமியர்களை பிடிக்காது, கிருத்தவர்களை பிடிக்காது, ஆடு கோழி சாப்பிடும் திராவிடர்களைப் பிடிக்காது. ஆனால் கடவுளை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! வணங்குனா வனங்கு வணங்கு வணங்கி தள்ளிப்புடுவாரு!

நீங்க என்ன சொல்றீங்கனா இந்த அந்தனர்/பார்ப்பனர் கடவுள் மேலே செலுத்துற அன்பு இவரால் வெறுக்கப்படும் இந்த மாடு சாப்பிடுகிற இஸ்லாமியர்கள்ய்க்கும், கிருத்தவர்களுக்கும், ஆடு கோழி சாப்பிடுகிற திராவிடர்களுக்கும் போய் சேரும், சென்றடையும். அப்படித்தானே?

என்ன்வோ போங்க!

வருண் said...

இன்னொரு உதாரணம் உங்களுக்கு, ஜெயவேல்!

அதாவது சங்கராச்சார்யார் ஜெயேந்திரர் பகவான் கிருஷ்ணா மேலே செலுத்தும் அன்பு மறைந்த சங்கர ராமனுக்கு போயிச் சேரும். சேர்ந்திருக்கும். இப்போ சங்கர் ராமன் குடும்பத்துக்கு, அவர் மனைவி, பிள்ளைகளுக்கு போய்க்கொண்டு இருக்கும்.

சங்கர் ராமனை சங்கராச்சாரயாருக்குப் பிடிக்கலை, அவர் மேலே வெறுப்பு இருந்தது, இருந்தாலும், இவரு பகவான்மேலே செலுத்துற அன்பு சங்கர் ராமனிடம் ஒழுங்காகப் போய் சேரும். நேரிடையா சங்கர ராமனி வெறுத்துக்கொண்டு பகவானிடம் அன்பாயிருந்தா போதும்!! அது சங்கராமன் மேலே அன்பாயிருக்கிறது சமம். :)))

இதிலே என்ன வேடிக்கைனா நீங்க சொல்ற மேட்டர் இவங்க ரெண்டு பேருக்கும் தெரிந்து இருந்தால் அந்தாளு இன்னும் உயிரோட திரிவாரு. இந்தப் பதிவைக்கூட வாசிச்சு இருப்பாரு பாவம்.

ஆக, பகவத் கீதை படிப்பதால், அது ஒரு உயர்ந்த நூல்னு சொல்லிக்கிட்டு திரிவதால் எந்தப் பிரையோசனமுமில்லை! வெறுப்பு, தன்னைப் பிடிக்காதவனை "அகற்றுதல்" போன்றவைகளை பகவத்கீத படிக்கும் மண்டுகள் செஞ்சுக்கிட்டேதான் இருக்குதுகள்.

அதைப் படிச்சு என்ன பரையோசனம் சொல்லுங்க!

Jayadev Das said...

பிராமண சமுதாயம் ஒழுங்காக இல்லை, சில மடாதிபதிகள் கிரிமினல் வேலைகளைச் செய்கிறார்கள் என்று ஆதங்கப் பட்டிருக்கிறீர்கள். பகவத் கீதை பிராமணர்களின் தயாரிப்போ அல்லது சொத்தோ அல்ல. இறைவனின் படைப்பு, அதை போதிக்கும் வேலையை பிராமணர்களிடம் இறைவன் கொடுத்தான், அவர்கள் இன்றைக்கு வழி தவறி விட்டனர். நாட்டில் எத்தனையோ பேர் தங்களது கடமையிலிருந்து தவறுகின்றனர். மாநில முதலமைச்சர் என்றால் காமராஜர் மாதிரியும் ஒருத்தர் இருந்தார். கடைசி வரையில் அவரது சொத்து இரண்டு செட் வெட்டியும் துண்டும் மட்டுமே. இன்றைக்கு இருப்பவர்கள்.....?? [முப்பதாயிரம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் இருப்பதாக ஒரு சஞ்சிகை கூறுகிறது.. நிஜமோ பொய்யோ ....!!] நாட்டில் காவல் துறையினர் சட்டத்தைக் காக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் செயல் பாடு எப்படி இருக்கிறது ...?? [உங்களுக்கே தெரியும்.] இவர்கள் எல்லாம் தாங்கள் எடுத்துக் கொண்ட கடமைக்கு நேர் மாறாக செயல் பட்டாலும் நாம் நாட்டை விட்டு ஓடி விட வில்லை, வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மதம் என்று வரும் போது மட்டும் எல்லாம் ideal ஆக நடக்க வேண்டும், பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். After all, அவர்களும் மனிதர்கள் தானே தவறிழைக்கக் கூடும் என்று நாம் நினைப்பதே இல்லை. பிராமன் இனத்தின் மீது ஏற்ப்படும் வெறுப்பால், அவர்கள் செய்வது அத்தனையும் [நல்லதோ கெட்டதோ] by default, எதிக்கவும் வெறுக்கவும் ஆரம்பிக்கிறோம். பிராமண சாதியைச் சார்ந்தவன் கீதையைப் படிக்கிறான் என்பதற்காக நாமும் கீதையை வெறுக்க வேண்டுமா?? குளத்துடன் கோபித்துக் கொண்டு குளிக்காமல் போனால் நஷ்டம் குளத்துக்கல்ல. நம் வாழ்வை எவ்வாறு பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று செயல்பட வேண்டுமே, அதுதான் வெற்றி. அந்த முயற்சியில் தோற்றவர்களைப் பற்றி நினைத்து முயற்சி செய்வதையே விட்டுவிட வேண்டியதில்லை.

வருண் said...

நான் பார்த்தவரைக்கும் கோட்சேல இருந்து சங்கராச்சார்யா வரைக்கும், பிராமனர்கள்தான் இந்து மதத்தைப்பத்தி ரொம்ப கவலைப்படுறவங்க.

ஹிந்து மதத்தை விமர்சித்தால் இவர்களுக்குத்தான் கோபம் பொத்துக்கொண்டு வரும்.

இஸ்லாமியர்களிலும், கிறித்வர்களிலும் மதவெறி உள்ளவங்க இருக்காங்க, அதேபோல் இந்து மதத்தில் உள்ள் மத வெறியர்கள் பொதுவாக பிராமனர்கள்தாம். அதனால அவர்களை விமர்சிக்காமல் ஹிந்து மதத்தையோ, பகவத்கீதையையோ விமர்சிக்க முடியாது!

இது மத வெறியர்கள் பத்தி பேசனும்னா பார்ப்பனர்களை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நீங்க, ஹிந்து மதத்தில் பார்ப்பனரல்லாதவர்கள்தான் மெஜாரிட்டி அது இதுனு பேசலாம், நீங்க அப்படிப் பேசுவதைப் பார்த்து உங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருப்பார்கள் அவர்கள். ஆமாம் இந்துமதம் அவங்க அப்பன் வீட்டு சொத்துதான்!

வருண் said...

***நம் வாழ்வை எவ்வாறு பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று செயல்பட வேண்டுமே, அதுதான் வெற்றி.***

பகவத்கீதை படிச்சாத்தான் வெற்றியடைய முடியும் என்பது உங்கள நம்பிக்கை. அதை மதிக்கிறேன். அதுக்காக எல்லோருக்குமே பகவத்கீதை படித்து கெடைக்கும் மார்க்கம்தான் சைர்யானதுனு நீங்க சொல்ல முடியாது!

உலகில் குளிக்கிறதுக்கு நெறையா குளங்கள் இருக்கு. பகவத்கீதை என்கிற ஒரே குளம்தான் இருக்கு, அஹ்டுல குளிச்சாத்தான் உடல், மனம் சுத்தமாகும்னு நீங்க சொல்வது முற்றிலும் தவறு!

Jayadev Das said...

இப்போ நம் தேசத்தைப் பொறுத்த வரையில் பிராமணர்களில் கிட்டத் தட்ட எல்லோருமே பிராமணனின் தகுதியை இழந்தவர்களாகவே உள்ளனர். ஹிந்துக்கள் [இந்த பெயரே பாகிஸ்தான் பக்கம் இருக்கும் முஸ்லீம்கள் கொடுத்தது!!] என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் பெயரளவில் மட்டுமே உள்ளனர், சனாதன [இந்து என்று தவறாக சொல்லப் படும்] தர்மத்தின் படி நடந்துகொள்வதில்லை. இந்து என்றால் ஏதாவது கோவிலுக்குச் சென்று கல்லுக்கு மாலை போட்டு வணங்குபவன் [அது சிலையாகவும் இருக்கலாம், சாலையோர மெயில் கல்லாகவும் இருக்கலாம்!!] என்ற அளவில் மட்டுமே உள்ளனர். படைத்தவன் என்றால் எல்லோருக்கும் ஒருவனாகத்தானே இருக்க முடியும். எப்படி நியூட்டனின் விதிகள் எல்லா மதத்தினருக்கும் பொதுவோ அதே போல இறைவனும் எல்லோருக்கும் ஒருவன்தான், போதுதான். அந்த மாதிரி ஒரு Universality பகவத் கீதையில் உள்ளதா என்றால் இருக்கிறது, அதற்க்கு ஆதாரம் அமெரிக்கா போன்ற மேற்க்கத்திய நாடுகளில் மட்டுமல்ல கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இன்று கீதையை படிக்கிறார்கள், ஸ்ரீ கிருஷ்ணரை கடவுளாக ஏற்று வழிபட்டும் வருகிறார்கள். அவங்க அதிர்ஷ்டக் காரங்க, ஏன்னா அவங்க நாட்டில் மேல்ஜாதி பிராமணர்கள் இல்லை!! கீதை வழி நல்ல வழி என்று ஏற்றுக் கொண்டவர்களுக்கு படுகிறது, ஆனால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் உட்பட யாரும் வற்ப்புறுத்தவில்லை, இது வாழ்வை அர்த்தமுள்ளதாக்க ஒரு வழி. அதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.