Friday, March 29, 2013

கோயில்களில் போர்னோக்ராஃபி! பித்துப் பிடித்த ஆத்திகர்கள்!

சொன்னா நம்பமாட்டிங்க, இப்போலாம்  நாத்திகர்கள் ரொம்பவே திருந்திட்டாங்க. என்னதான் செய்தாலும் கடவுள் துதிபாடி, கடவுளை சந்தோஷப்படுத்தி, அதனால் கடவுள் நம்மள் கவனிச்சுக்குவாருனு ஓட்டும் கடவுளின் கைக்கூலிகளை எல்லாம்  திருத்தவே முடியாது! மதத்தையும், கடவுளையும் சாகிறவரை கட்டி வச்சு அழட்டும், நம்ம பொழைப்பைப் பார்ப்போம்னு கொஞ்சம் கொஞச்மா ஒதுங்கிப் போயிட்டாங்க!

ஆனால் இந்த கடவுள் புகழ்பாடும் ஆத்திகர்கள் எதையும் விடுவதில்லை! ரொம்பவே, அறிவியல், பகுத்தறிவு வாதம் செய்வதில் எல்லாம் தீவீரமாக இறங்கிட்டாங்க!

இவர்களுக்கு ஏதுப்பா இம்பூட்டு தில்லு!

மெஜாரிட்டி உலகம் இது! இது முட்டாள்கள்  மெஜாரிட்டியாக இருக்கும் ஒரு "முட்டாள்களின் உலகம்" ! இதிலே எவனுக்கும் சந்தேகம் இருக்கா?

ஆத்திகர்களா? பகுத்தறிவுவாதாமா? என்னப்பா சொல்றீங்க?!

ஆமாண்ணே!

* டார்வினுடைய பரிணாமத்தை கவனமாக "அனலைஸ்" செய்து அதை இஷ்டத்துக்கு அதில் உள்ள குறைகளை  இன்று விமர்சிக்கிறவர்கள், ஆத்திகர்கள்தான்! சரி, இவர்கள் சொல்வது போலவே பரிணாமத்திற்கு போதுமான "எவிடெண்ஸ்" (தடயங்கள்) இல்லை! Carbon dating of fossils are not quite correct! னு வச்சுக்குவோம்! இவர்கள் வாதப்படி டார்வினுடைய பரிணாமம் தப்புனே சொல்லிட்டுப்வோம்! இருந்துட்டுப் போகட்டும்! இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு?

எனக்கு என்ன புரியலைனா, நீங்க  கடவுள் மண்ணாங்கட்டினு ஒரு 1008 கடவுளை சொல்லிக்கிட்டு கும்பிட்டுக்கிட்டு அலையிறீங்களே!  அவர் இருப்பதற்கு ஏதாவது "எவிடெண்ஸ்" கொடுங்களேன்?!னு கேட்டு வைப்போமே? இப்போ, பரிணாமம் பற்றி பகுத்தறிவுவாதம் பேசிய அதே வாய்  எதையாவது ஒளற ஆரம்பிச்சுடும்! பரிணாமம் பேசும்போது இவர்கள் மூளை ஒரு மாதிரி வேலை செய்யும்! இப்போ இன்னொரு மாதிரி வேலை செய்யும்! இல்லாத கடவுளை இஷ்டத்துக்கு உருவம் கொடுத்து கற்பனையில் உருவாக்கி வணங்குவார்கள்!

யார் இவர்கள்? கொஞ்ச நேரம் முன்னால பகுத்தறிவு பேசி, டார்வின் பரிணாமம் தப்புனு சொன்னவர்கள்தான்!

*  மறைந்த ஒருவருக்கு சிலை வைத்தல். உயிரில்லாத சிலைக்கு மரியாதை கொடுத்தல் போன்றவை அபத்தம் என்பது  ஒரு வாதம். என்னை பொறுத்தவரையில் அபத்தம் என்பது எவன் செஞ்சாலும் அது தப்புத்தான். சரி, தி க காரன் எல்லாம் முட்டாப் பயளுக, மாலை மரியாதை எல்லாம் பொணமாப் போனவனுக்கு எதுக்கு?! அவர்கள் வணங்குற சிலைய எல்லாம் எடுத்துடலாம். சரியா?

அப்புறம், அதேபோல் கோயில்ல உள்ள கடவுள்னு சொல்லிக்கிட்டு வச்சிருக்க கற்சிலையை (கிருஷ்ணா பரமாத்மாவையும் சேர்த்துத்தான்) எல்லாம் தூக்கி குப்பையில் போடத்தயாரா? சரி சாமி சிலையாவது பரவாயில்லை!

 கீழே உள்ள சிலை ஒரு கோவிலில் உள்ளதாம்!!!

 Sex Temples of India

நான் தெரியாமல்த்தான் கேக்குறேன். ஆமா, கோயிலுக்கு சாமி கும்பிடத்தானப்பா போறீங்க? கோயிலுக்குப்போயி செக்ஸ் கல்வி கற்கவா போறீங்க?  கோயில் என்ன அடல்ட்ஸ் ஒன்லியா என்ன? வயதுக்கு வராத விடலப்பசங்க, பருவப்பொண்ணுங்களை எல்லாம் அழச்சுண்டுத்தான கோயிலுக்கு போவீங்க? எதுக்கு இதுபோல் போர்னோக்ராஃபி அங்கே வச்சு இருக்கீங்க?  நம்ம பத்தினி பெண்கள் எல்லாம் இதை பார்த்து கெட்டுப் போயிற மாட்டாளா?

டார்வினையும், பெரியாரையும் விமர்சிக்கும் நீங்கள் கோயில்களில் உள்ள இது போல போர்னோக்ராஃபிக்  சிலையை எல்லாம் இடித்து தகர்த்தால் என்ன? எனக்குத் தெரிய தி க காரான் போர்னோக்ராஃபியை உலகறிய சிலை வடிச்சு சொல்லிக் கொடுக்கலை! ஆனால் இந்த ஆத்திக அயோக்கியர்கள் பித்துப்பிடிச்சு அலையிதுக!

உடனே மறுபடியும் எதையாவது ஒளறுவார்கள்.

ஆத்திகர்கள் பகுத்தறிவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே சமயத்தில் இவர்கள் செய்கிற அடிமுட்டாள்தனத்தை எல்லாம் பகுத்தறியாமல், தி க காரனை மட்டும் கேள்வி கேட்பதுதான் அபத்தம்! தி க காரனையாவது திருந்த்துவோம், ஆத்திகர்கள் எல்லாம் அடிமுட்டாள்கணு இவர்களே இவர்களை தலைமுழுகிட்டாங்களா?

நம்ம ஜெயவேல்தான் பகவானிடம் கேட்டு வந்து விளக்கணும்! :)))



Tuesday, March 26, 2013

விஸ்வரூபத்தில் பத்தினி நிரூபமா!

கடைசில விஸ்வரூபம் டி வி டி ல பார்த்தாச்சு! ஏதோ லோட்டஸ்னு போட்டிருக்கு! ஒரிஜினல் ப்ரிண்ட்தான்னு கடைக்காரன் சொன்னான். :)

 நான் பொதுவாக கமல் படத்துக்கு விமர்சனம் எழுதுறது இல்லை! அதுவும் படம் வந்து 50 நாள் ஆகப்போது. :)

என்னணு தெரியல, இந்தப் படத்துல எல்லாருமே ஒரு மாதிரியா தமிழ் பேசுறா. ஹிந்தி வேர்ஷன், தெலுகு வேர்ஷன் எல்லாத்துலயும், இதே மாதிரித்தான் தெலுகு, ஹிந்தியெல்லாம் பேசுறாளா? ஆமா, இஸ்லாமியரெல்லாம் அராபிக் தமிலு பேசுறாங்க! கமலும் அவரோட ஆத்துக்காரியும், அப்புறம் இன்னொரு ஐயராத்து மாணவியும். அடாடா பிரானனாள் பாஷைல தமிழ் பேசுறா!

பூஜாக்குமார், "மேரேஜ் ஆஃப் கண்வீனியண்ஸ்"க் காக நம்ம தலைவரை கட்டிக்கிட்டாராம் (இவருக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை என்பதை இப்படி ஜஸ்டிஃபை பண்ணுறாரு போல! என்ன? கல்யாணம் என்றாலே ஏமாத்துதான், அதான் நான் லிவ் "இன் டுகெதர்" வாழ்க்கை வாழறேன். இது புனிதமானதுனு சொல்றாரா? )

சரி தர்மபத்தினி நிருபமாவப் பார்க்கலாம். கணவன் உடலுறவுக்கு லாயக்கு இல்லாதவர் என்பதால் இன்னொருவரோட சுத்துறா! ஆனால் இந்தப் பத்தினி கமலோடையும் செக்ஸ் வச்சிக்கமாட்டார! அந்த பாய்ஃப்ரெண்டோடையும் செக்ஸ் வச்சுக்க மாட்டா!  பேசாமல் அவர் ஏதாவது "டாய்" வச்சு சுய இன்பம் பண்ணி காலத்தை ஓட்டுறானு கமல் காட்டியிருக்கலாம். ஆமா, என்ன பயம் கமல்??? உங்களுக்கு புருசன் பொண்டாட்டி உறவு "பலப்படல"னு சொல்ல தைரியம் இருக்கு! ஆத்துக்காரிக்கு இன்னொருவருடன் "உறவு" இருக்குனு சொல்ல தைரியம் இருக்கு! அப்புறம் செக்ஸ் மட்டும் கலக்காம ஏன் பத்தினியாவே அவாள வச்சிருக்கேள்?  இன்றைய  இந்தியாவிலேயே ப்ரிமாரிட்டல் செக்ஸ் எக்ஸ்ட்ரா மாரிட்டல் செக்ஸ், வைஃப் ஸ்வாப் இல்லாமல் எங்களால வாழ முடியாதுங்கிறாக. ஆமா, உங்களைப்போல உயர்தர சிந்தனை உள்ள இந்திர்யர்கள்தான்! நீங்க என்னடானா ஆங்கிலப் படம்போல ஹாலிவுட் படம்போல எடுக்க முயன்றும் நம்ம நிரூபமாவ அசிங்கமா பத்தினியாவே காட்டி இருக்கீங்க?  இதுக்குப் பேருதான் அரைக்கிணறு தாண்டுவது!

கதக் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும்போதுதான் சிக்கன் குக் பண்ணுவேளா? நாங்க எல்லாம் எத்தனையோ டாண்ஸ் ஸ்கூல் பார்த்து இருக்கோம், இந்தமாரி கேணத்தனமா டாண்ஸையும் சாப்பாட்டையும் மிக்ஸ் பண்ணுறவனை பார்த்ததே இல்லை!

சரி, உங்க ஸ்டூடண்ட்ஸ்ல பலர், வெளிநாட்டவர், தமிழ் அறியாதவர். அந்த ஒரு சூழலில் அமெரிக்காவில், எல்லாருக்கும் புரியிறாப்பிலே ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். ஆனால், உங்களுக்கு என்ன? எப்படியோ  "பாப்பாத்தியம்மா சிக்கன் சாப்பிடுவானு" ஒரு வசனம் சொல்லணும். அதென்னவோ உங்களை அந்த வசனம் செமையா "டேர்ன் ஆன்" பண்ணுதுபோல! அதை சொல்வதற்காக், தமிழ் தெரியாதவா, வெளிநாட்டு சிறுக்கிகள  எல்லாரையும் வச்சுண்டு தமிழ்ல கதைக்கிறேளே? கேவலமா இல்லை? It is impolite to talk in a language which can't be understood by few of your students, moron!

-to be continued

Friday, March 22, 2013

பின்னூட்டம் என்பது ஒரு கற்புள்ள பெண் மாதிரி..

சில கசப்பான உண்மைகளைப் பேசிப்புடுவோம்! பதிவெழுத அசாத்திய திறமை உள்ளவங்க பலருக்கு ஒரு அர்த்தமாகப் பின்னூட்டம் போடத் தெரியாது! பல பிரபல பதிவர்களுக்கே இந்த "பிராபளம்" உண்டு!  ஆமா, அவர் பிரபலப்பதிவர் மட்டும்தான். பிரபலப் பின்னூட்டப் பதிவரல்ல! பதிவுக்கு வரும் மாற்றுக்கோண பின்னூட்டங்களை எப்படி விவாதிக்கிறது என்பதுகூட தெரியாது இந்த அப்பாவிகளுக்கு. இதையெல்லாம் பதிவுலக "வெட்டி ஞானி" கள் மட்டுமே உணருவார்கள்.

பின்னூட்டத்தில் மாற்றுக் கருத்து அல்லது அது சம்மந்தமாக தன் அனுபவம் போன்றவற்றை சொல்லணும் என்று தோன்றினாலொழிய என்னைப்போல் ஒரு சிலருக்கு பின்னூட்டமிட்ட திருப்தி இருக்காது.

நம்ம நடராஜன் பதிவில் போயி நான் "ரொம்ப நல்ல கருத்து" அல்லது "நல்ல பதிவு" னு நான் சொன்னேன்னு வச்சுக்கோங்க, அவரையும் அவர் பதிவையும் அதைவிட யாரும் அவமானப்படுத்தியதாக ஆகாது! என்னிடம் இருந்து இந்த வகைப் பின்னூட்டம் அவர் பதிவுக்கு ஏழாம் பொறுத்தம்! ஏதாவது புரியுதா?

அதேபோல் உலக சினிமா ரசிகன் பதிவில் போயி, அவர் கமலைப் பத்தி பீத்துற பீத்தை, "ஆமாங்க சரியா சொன்னீங்க"னு சொன்னால் அது அவருக்கு நான் செய்ற மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல, என் மனசாட்சியை கொன்று எனக்கே நான் செய்யும் துரோகம்! இப்போ புரியுதா?

ஒவ்வொருவர் பதிவு மட்டுமல்ல பின்னூட்டங்களும் ஒரு "யுனீக்" தன்மை உள்ளதுதான். அதாவது ஒரு சிலர் பாசிட்டிவா பின்னுட்டமிட்டால்தான் "தரமானதாகும்". ஒரு சிலர் "க்ரிட்டிசைஸ்" செய்து பின்னூட்டமிட்டால்தான் அது அழகானதாகவும், ஆழமான கருத்துள்ளதாகவும் ஆகும். இப்போ என்ன? இன்னும் குழம்புதா?

பின்னூட்டங்கள் ஒரு கற்புள்ள பெண் போல. அவளுக்கு ஒரு உயர் தரம் இருக்கு! சும்மா பொய் பின்னூட்டங்கள் இட்டு அவள் "கற்பை" வித்துப் புடாதீங்கப்பா! பின்னூட்டங்களில் பதிவரைத் திட்டினால்கூட பரவாயில்லை, மனதில் உள்ளதை அப்படியே சொல்லுங்கள்! தயவு செய்து அதை வச்சு "பாலிட்டிகஸ்" செய்து பின்னூட்டங்களை "தரங்கெட்ட பெண்" போல் ஆக்கிவிடாதீர்கள்!

ஆமா, அதென்ன "பெண்களை" மட்டும் உதாரணமா எடுத்து இருக்கீங்க? இதையெல்லாம் விளக்கணுமா? ஆண்கள்மேலே "அம்பூட்டு" "மரியாதை"! உதாரணம் சொல்லக்கூட ஒருத்தன் ரெண்டுபேராவது அப்படி இருக்கணும்! :)

Thursday, March 21, 2013

எனக்கு பதிவெழுத "மூட்" இல்லை! உளறல்-1!

தி மு க, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கழண்டு கொண்டதாமே?

அதனால என்ன இப்போ?

ஸ்டாலின் வீட்டிலே சி பி ஐ ரெய்ட் நடந்ததாமே?

அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே? இதைப்போட்டு ஊதிக்கிட்டு

ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் எல்லாரும் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்துறாங்களாம். அவர்களை பாராட்டி எதாவது?

மனசுலேயே பாராட்டியாச்சு விடு!

சினிமா?

ஆமா, விஸ்வரூபத்தைப் பத்தி நூத்தி எட்டு எழவை எழுதியாச்சு! பாலாவின் பரதேசி பத்தி எல்லாரும் ஒட்டுமொத்தமா நல்லாயிருக்குனு சொல்லிட்டாங்க! புதுசா என்னத்தைச் சொல்ல?

இப்படி எதைப் பற்றி யோசித்தாலும், இதைப் பத்தி என்னத்தை எழுதிக் கிழிக்க? என்ற மாற்றுக் கருத்து உடனே தோன்றுகிறது.

ஏதாவது காதல் கதை?

சாதாரண காதல் கதை எல்லாம் எல்லாரும் எழுதிட்டாங்க. அன்பு, இதயம், பிரிவு, கண்ணீர்னு கோடிக்கணக்கான கதைகள் எழுதிட்டாங்க. ஏதாவது புதுமாதிரியா கள்ளக்காதல், அடல்ட்டரி, த்ரீசம், ஸ்விங்கிங், வைஃப் ஸ்வாப்  போல டாப்பிக்ல எழுதினால்த்தான் நாலு பேரு இண்டெரெஸ்டா வந்து படிப்பான். நம்மாளெல்லாம் "அந்த லெவெல்"லதான் இப்போ இருக்கான்! எதுக்கு கஷ்டப்பட்டு கேவலமா அப்படி ஒரு கதை எழுதி கிழிச்சுட்டாலும்? அதான் ஏற்கனவே இன்னைக்கு நம்மாளுக எல்லாரும் ஊர் மேஞ்சிட்டுத்தானே இருக்காங்க இந்த நவீன உலகில்?

சரி விட்டுத்தொலை! பதிவுலகம் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்! நீ எழுதிக்கிழிக்கலைனா இங்க ஒண்ணும் குடி முழுகிப் போகப் போவதில்லை! எல்லாம் சரிதான், பதிவெழுத வேண்டாம்ங்கிறது நல்ல முடிவுதான்! ஆனால் இந்த  ஔறலை எல்லாம் டைப் அடிச்சு, அதை ஒரு பதிவாப்  போட்டு தலைப்புக்கு எதிர்மாறா எதையாவது செஞ்சுபுடாதே!

ச்சே சே! அப்படியெல்லாம் செய்வேணா?  :-)

Dilbert-20050910.png

Wednesday, March 13, 2013

பாலாவும் அவர் உருவாக்கும் கொடூர வயலண்ஸும்!

பாலா அவர்கள் தமிழ் படங்களில். வெள்ளித்திரையில் காட்டுற வயலண்ஸே எரிச்சலைக் கிளப்பும். "சரி, சினிமாதானே?" னு நம்ம பார்க்கணும்னு நம்மை நாமே சரிக்கட்டிப் பார்த்தாலும் கஷ்டமாத்தான் இருக்கும்.

இப்போ என்னடானா ரியாலிட்டி ஷோனு இவர் "களத்தில்" வயலண்ஸை எவ்ளோ ரசிக்கிறார்னு பரதேசிக்கு ஒரு விளம்பரம் வேற.

நான் இதை ஏற்கனவே சொல்லியிருக்கேன், பாலாவின் அசாத்திய திறமையை என்னால் பாராட்டமுடியாமல் அவரை வெறுக்க வைப்பது அவர் படங்களில் அவர் வயலண்ஸை காட்டும் விதம்தான் என்று.

வயலண்ஸை நிஜ வாழக்கையிலும் ரசிக்கும் ஒருவர் தான் இதுபோல் ரசித்து ரசித்து இதையெல்லாம் காட்ட முடியும் என்பது என் "மூடநம்பிக்கை"!



I always wonder, Has Bala been physically abused by someone when he was young?

இந்த பரதேசி ட்ரைலெர் தியேட்டருக்கு கூட்டத்தை கூட்டிவருமா? இல்லைனா இந்தப்படத்தை குழிதோண்டி பொதைக்க உதவுமானு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

இப்போ உள்ள நம்ம இள ரசிகாமனிகளின் ரசனையை எல்லாம் குறைத்து மதிப்பிடமுடியாது! பார்க்கலாம்!

ஆமா,  எனக்கும் பாலாக்கும் என்ன பிரச்சினை? எதற்காக பாலா படங்களை எப்போவுமே நெகட்டிவாவே விமர்சிக்கிறேன் (கீழே உள்ள தொடுப்புகளையும் பார்க்கவும்)

பிரச்சினைனா..அவர் ரசிச்சு ரசிச்சுக்காட்டுற வயலண்ஸ்தான்.
 

பாலாபடங்கள், பாலா பற்றி தொடர்புடைய என் பதிவுகள்!

நான் கடவுள் இல்லை! கஞ்சா சாமியார்!

இயக்குனர் பாலாவின் “மிருகவெறி”!

நான் கடவுள் ஃப்ளாப் ஆனது ரஜினியாலா?



Tuesday, March 12, 2013

விஸ்வரூபர் வென்றதும் இழந்ததும் தோற்றதும்!

விஸ்வரூபத்தின், வியாபார வெற்றிக்காக கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி ஆரம்பிப்போம். ஹே ராம்க்கு அடுத்து, கமலுடைய  இயக்கம், ராஜ் கமல் கம்பெணி தயாரிப்புனு என்று வந்த படம் இது! ஹே ராம் படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப் பட்டாலும், வியாபார ரீதியாக படு தோல்வியைத்தான் தழுவியது.

மல் அடைந்வெற்றி!

விஸ்வரூபம்! 

இயக்கி, தயாரித்து வெளியிட்ட எந்த ஒரு படத்திலும் இதுவரை பெரிய வெற்றிடையாத கமலே மறுபடியும் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு!  விஸ்வரூபம் என்ன ஆகுமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருந்தது.  

90-95 கோடி செலவழிச்சு எடுத்த படம் இது! கமல் தன் வீட்டையே அடகு வச்சு  பெரிய தொகை "இண்வெஸ்ட்" செய்து  எடுத்த படம்! இம்பூட்டுப் பணம் போட்டு இது போல் ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு ரொம்பவே தைரியம் வேண்டும்.
என்ன ஆகப்போதோ?

படம் வெளிவரும் முன்பே..

* டி ட்டி எச்ல வெளியிட முயற்சி தோல்வி! அதனால பொங்கலுக்கு வெளிவரவில்லை!

* தியேட்டர் ஓனர் எல்லாம் ஒன்றுகூடி கமலுக்கு எதிராக  பலவிதமான பிரச்சினைகள்!

* இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!

* ஆளுங்கட்சியின் அதிரடி 144 தடை உத்தரவு!

இப்படி பலவிதமான பிரச்சினைகள்.

கடைசியில் விஸ்வரூபம் எல்லாப் பிரச்சினைகளையும் உடைத்தெறிந்தது! அதைவிட முக்கியம், போட்டிக்கு வந்த படங்கள், பெரிய பட்ஜெட் அகெக்ஸ் பாண்டியன், மணிரத்னத்தின் கடல் போன்றவைகளை உருத்தெரியாமல் ஆக்கிவிட்டு  மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. 

ஹே ராம் தோல்விக்குப் பிறகு  14 வருடங்களுக்குப் பிறகு, தன்  58 வயதில் கமலின் விஸ்வரூபம் அடைந்த வியாபார வெற்றி தமிழ் சினிமா வரலாற்றில், கமலுக்கு இன்னொரு  முக்கியக் மைல்க்கல் என்றுதான் சொல்லணும்.  இந்தப்படத்திற்கு இன்றுவரை வசூல் 205-220 கோடி என்கிறார்கள். இதை கமல் தரப்பே சொல்வதால் ஏற்றுக்கத்தான் வேணும்.

தியேட்டர்காரன், விநியோகஸ்தர்கள் அது இதுனு போக, இதில் தயாரிப்பாளர் கமல் கைக்கு 100 கோடி வந்தாலே கமல் போட்ட காசை எடுத்ததாக ஆகிவிடும். பிறகு சாட்டலைட் ரைட்ஸ், லொட்டு லொசுக்குணு ஒரு 20-30 கோடி வந்ததுனா, கமல் சம்பளம் 25 கோடியைச் சேர்த்து 50 கோடிபோல கமல் சம்பாரித்ததாக ஆகும்.

ஆக, புகழ், பணம், விமர்சங்கள் எல்லாவற்றிலுமே விஸ்வரூபம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. தடைகளை உடைத்து கமல் வென்றார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! வாழ்த்துக்கள்!

------------

கமல் இழந்தது என்ன?

* கமல்,  இஸ்லாமியர்கள், பல இஸ்லாமிய நாடுகளும் இவர்மேல் வைத்திருந்த மதிப்பை இழந்துட்டார்னுதான் சொல்லணும். இவர் தாலிபன்களுக்கு எதிராகதான் கொடிபிடிக்கிறார் என்றெல்லாம் இவரைப் புரிந்து கொள்ளவில்லை! இஸ்லாமியரையும், இஸ்லாமையும் இவர் அவமானப்படுத்துவாதத்தான் எடுத்துக்கொள்ளப்பட்டது..

அதன் விளைவால்

 * மலேசியா, மையக்கிழக்கு நாடுகளில் வசூல் ஆகவேண்டிய ஒரு 15-20 கோடி கமலுக்கு ஒழுங்காக வந்துசேரவில்லை.

* காலங்கடந்து மலேசியாவில் ரிலீஸ் செய்ததால், திருட்டு வி சி டி ஏற்கனவே வெளிவந்துவிட்டதால் வரவேண்டிய வசூலில் 20% தான் கமலுக்கு வந்து இருக்கு.

 *அதேபோல் மையக்கிழக்கு நாடுகளில் இந்தப்படம் ரிலீஸே ஆகவில்லை! அங்கிருந்து வர வேண்டியது சுமார் 6-8 கோடி.

* இவருடைய டி ட்டி எச் வெளியீடு முயற்சி என்று ஆரம்பிச்சு வெற்றிபெறாமல் விட்ட ஒரு பிரச்சினையால் தியேட்டர் ஓனர் எல்லாம் இன்னும் கடுப்பாகத்தான் இருப்பாங்க.

* டி ட்டி எச் முயற்சியால் கடுப்பான கேரள திரையரங்கு ஓனர்கள், கடைசிவரை பெரிய மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் மற்றும் தரமான திரையரங்குகளில் இந்தப்படத்தை  வெளியிடத் தயாராக இல்லை. கடைசியில் வேற வழியில்லாமல் சாதாரண திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டதால், விஸ்வரூபத்திற்கு 3.5 கோடி போலதான் கேரள வசூல் வந்தது என்கிறார்கள். டி ட்டி எச் பிரச்சினை வராமலிருந்து இருந்தால் நல்ல உயர்தர திரையரங்குகளில் படம் வெளிவந்து இருந்தால், 8-10 கோடி வசூல் செய்து இருக்கும் என்கிறார்கள்.

* கமல் என்றாலே காண்ட்ரோவெர்ஸி என்று இருந்தது ஒரு உச்சத்தை அடைந்துவிட்டது இந்த விஸ்வரூபப் பிரச்சினை. இப்போ ஒரு மாதிரி காண்ட்ரோவெர்ஸி க்ளைமேக்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த சூழலில், இனிமேல்  மறுபடியும் விஸ்வரூபம் ரெண்டு, மூனுனு ஆரம்பிச்சு இன்னொரு புதிய காண்ட்ரோவர்ஸி தொடர்ந்து வந்தால், இந்தாளுக்கு வேற வேலை இல்லைனு மக்கள் கடுப்பாகிவிடுவார்களோ? என்ற பயம் கமலுக்கு வந்து இருக்கலாம். வரணும்.

தோல்விகள்???

என்னதான் விஸ்வரூபம் பெரிய வெற்றியடைந்தாலும்,  எந்திரனின் கலக்சனில் ஒரு 60-65% கலக்சன் தான் பெற்றது இந்த மெஹா பட்ஜெட் படம். 

மற்றவர்கள் எப்படியோ, கமல், நிச்சயம் தன்னுடைய விஸ்வரூபம் முந்தைய தமிழ் சினிமா வசூல் சாதனைகளை முறியடிக்கணும்னு (முக்கியமாக எந்திரன்) எதிர்பார்த்துத்தான் இருப்பார். கமலுக்கு இந்தப் போட்டி போடும் மனம் இருப்பதை அவரே பச்சையாக சொல்லியுள்ளார். அது நடக்கவில்லை! இது ஒரு மாதிரியான தோல்விதான்.

சென்னையில் வசூல் நிலவரம்..

விஸ்வரூபம் எந்திரனை வீழத்தவில்லை என்பது மட்டுமல்ல, விஸ்வரூபம், துப்பாக்கியைக்கூட வீழ்த்தவில்லை என்பதே நிதர்சனம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள டேட்டா வை வைத்து புரிந்து கொள்ளுங்கள்!


 துப்பாக்கி! (5 வார வசூல்)

Week : 5

Thuppakki

Total collections in Chennai : Rs. 13,25,91,260
Verdict: Blockbuster


 விஸ்வரூபம் (5 வார வசூல்)

 Week : 5

Vishwaroopam
Total collections in Chennai : Rs. 11,74,50,039
Verdict: Blockbuster


எந்திரன் (4 வாசூல்தான் கொடுத்து இருக்கேன்)

 

Week 4:

 No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

Friday, March 8, 2013

என்னால் ஜீரணிக்கவே முடியாத இந்தியச் செய்திகள்!

* கேரளாவில் 3 வயது சிறுமியை கடத்திக்கொண்டு போய் வன்புணர்வு செய்ததாக செய்தி வருகிறது. அந்த அறியாச்சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்த டாக்டர்கள் சொல்லும் மெடிக்கல் ரிப்போர்ட் வாசிக்கவே முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கு! 3 வயது சிறுமி! குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுனு சினிமாப் பாடல் கேட்டதுண்டு! குழந்தை தெய்வத்துக்கு சமானம் என்பது தெரியாதா இந்த மிருகங்களுக்கு? ஏன்?

* கொஞ்ச நாள் முன்னால, நம்ம தமிழ் நாட்டில் ஒரு 13 வயது சிறுமியை 60, 50, 70 வயது ஆட்கள் பலவிதமாக பாலியல் பலவந்தப்படுத்தி அவளை சின்னா பின்னப்படுத்தியதாக செய்திகள் சாதாரணமாக வருகின்றன. இது தெரிந்தே செய்கிற தவறு. தெரிந்தே உன் மனசாட்சியை கொன்றுவிட்டு செய்யும் குற்றம். உணர்ச்சிவசப்பட்டு ஒருவனை குத்திக் கொல்வது போன்றவை வேறு விசயம். 50-70 வயது ஆண்கள்! ஒரு 13 வயது சிறுமியை!

* அதற்கு முந்திய மாதம் டெல்லியில் ஒரு 22 வயது பெண்ணை 5 மிருகங்கள் ஓடும் பேருந்தில் வைத்து வன்புணர்வு செய்து அவளைக் கொன்றே விட்டார்கள். உலகமே நம்மை காறித் துப்புது இந்த நிகழ்ச்சிக்கப்புறம். ஸ்லம்டாக் மில்லிய்னர் படத்தில் இந்தியர்களை மட்டமாக் காட்டிவிட்டார்கள்னு கொதித்தெழுந்தார்கள் ஒரு சிலர்! இந்த டெல்லி நிகழ்சியைப் பார்த்து அதே இவர்கள் என்ன செய்கிறார்கள்னு தெரியவில்லை!

* "காதல் தோல்வி, என்னை அவள் காதலிக்க வில்லை" னு கோபத்தில் அமிலத்தை பெண்கள் முகத்தில், உடம்பில் எறிகிறார்கள் அறியாமையில் வாழும் ஒரு சில மிருகங்கள்! முகம், உடல் எல்லாம் சின்னா பின்னப்பட்டு பரிதாபமாக இறக்கிறாள் அந்த "வினோதினி"!

இதை எல்லாம்  விமர்சிச்சு, இந்தப் பதிவு எழுதும்போதும் நல்ல உணர்வுகளே இல்லை! எதுக்கு இதைப் பத்தி எழுத ஆரம்பிச்சோம்? னுதான் தோணுது. இதனால் யாருக்கு என்ன இலாபம்ணுகூட தோணுது. :(

ஆமா, என்ன ஆச்சு நமக்கு?

என்ன ஆச்சு இந்த ஆண்களுக்கு?

இல்லை எப்போவுமே ஆண்கள் இப்படித்தானா?

காலங்காலமாக மனிதன் இப்படித்தானா?

முடியாதவர்களையும், உலகறியாச் சிறுமிகளையும் காலங்காலமா மனிதன் வன்புணர்வு செய்றானா? இது தப்புணு அவனுக்கு ஏன் விளங்கவில்லை?? கடவுள், மதம், மண்ணாங்கட்டி எல்லாம் இருந்தும் இவர்கள் இன்னும் திருந்தலையா? இல்லைனா இதுபோல் குற்றம் செய்பவர்கள் அனைவரும் நாத்திகர்களா??

"இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்" னு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்வதை நான் திருப்பிச் சொன்ன ஞாபகம். இந்த மிருகங்களும் நம் உடன் பிறந்தவர்களா? அப்போ நம்மளும் இது போல் மிருகங்கள்தானா?

என்ன செய்யலாம் இந்த மிருகங்களை?

உலகறிய தூக்கில் போடலாமா?

அடிச்சே கொல்லலாமா?

இல்லை உலகறிய இவர்கள் தலையை துண்டிக்கணுமா?

இல்லைனா மனிதாபிமானத்துடன்  இவர்கள் குற்றங்களை, இவர்கள் மனநிலையைப் பகுத்தறிந்து இவர்களை திருத்தணுமா? இவர்களை மனிதாபமானத்துடன் அணுகணும்னு எழுதவே எனக்கு கஷ்டமா இருக்கு! எழுதும்போது எனக்கே இப்படி எழுதும் என்னை நினைத்து அருவருப்பா இருக்கு!

மிருகங்களிடம் எப்படி மனிதாபிமானம் கொள்ளலாம்?!

திருந்துங்களா இந்த மிருகங்கள்?

எப்படி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது? I mean I don't want to hear one more news like this in the future!

பொதுவாக நான் இதை அணுகும் விதம்..

என்னால இப்படி யாரையும் வன்புணர்வு செய்ய முடியாது! என்னால இதை நினைத்தே பார்க்க முடியவில்லை! சாதாரண கற்பனைக் கதைகளில் இதுபோல் சிறுமிகளை வன்புணர்வு செய்வதுபோல் எழுதியிருப்பதைப் படித்தாலே அதை எழுதிய ஆசிரியர்மேல் படுகோபம் வருகிறது. அதுபோல் கற்பனைக் கதைகளுக்கு அறிஞர்களும், நடுநிலையாளர்களும் பரிசளித்தால் அவர்கள் மேலே எரிச்சல் வருவதும் உண்டு. சாதாரண நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபோது, சிறுகுழந்தைகளை சற்றே அநாகரிகமாக விமர்சித்த பதிவர்களை கேவலமாக விமர்சிச்சதுகூட உண்டு. வேறென்ன செய்யணும்?

இதுபோல் பதிவெழுதுவதால் நாலு பேர் திருந்துவார்களா? இல்லை இதுபோல் ஒரு பதிவே தேவையற்றதா? இதுபோல் பதிவால் என்ன சாதிக்க முடியும்? சும்மா நானும் அந்த அபலைகளை, குழந்தைகளை நினைத்து ஒப்பாரி வைக்கிறேன்னு ஊர் உலகத்துக்கு என்னை மனிதன்னு காட்டிக்கொள்வதைத்தவிர வேறென்ன மாறுதல் உண்டாக்க முடியும் இதுபோல் பதிவெழுதுவதால்?

கடைசியில் குழப்பமும் அதிருப்தியும்தான் மிஞ்சுகிறது இதுபோல் ஒரு தலைப்பைப் பற்றி பேசுவது, விமர்சிப்பது எல்லாம். :(

Monday, March 4, 2013

அமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி !!

மகன் ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டான்! மகனுக்கு  புற்று நோய்! மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான்! மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு! னு உலகறிய டி வியில் வந்து அழும் அம்மாமார்களை நம் தாயைப்போல் மதிக்கவும் அவங்களுக்காக கண்ணீர் விடவும் தோன்றுவது மனித இயல்பு. அவர்கள் பட்ட துயரம் நம் வாழ்க்கையிலும் ஒரு சின்ன தடுமாற்றத்தை சில நிமிடங்களோ, சில மணிநேரங்களோ, சில நாட்களோ ஏற்படுத்துவதுண்டு. நாமெல்லாம் நல்லவர்களோ இல்லை கெட்டவர்களோ ஆனால் இதயம் இல்லாதவர்கள் அல்ல!

ஆனால், "என் தேசம் என் மக்கள்" ல மகன்களை எவ்ளோவோ காசைச் செலவழிச்சு படிக்கவச்சு பெருமைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு பணம் பகட்டுனு   மகன் கிழிக்கிற கிழிப்பைப் பார்த்து ரசித்துக்கொண்டு, திமிருடனும், பெருமையுடன் வாழும் ஒரு தாய் வந்து, "என் மகன் அமெரிக்காவுக்கு பரதேசம் போயிட்டான், ரொம்ப மிஸ் பண்ணுறேன்" னு கோபிநாத்துடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பதை எல்லாம் சகிக்க முடியாது! கேவலமாயிருக்கு அதுபோல் ஒரு தாய்வந்து ஏதோ சினிமா நடிகைமாரி நீலிக்கண்ணீர் விட்டு அழுவது!

You and your son chose this ****ing life! Why are you coming in TV and crying about it as if someone forced you to do so, IDIOT?!

என் தேசம் என் மக்கள்னு இதுபோல் பணக்கார, பகட்டுடன் வாழும் அரைவேக்காடுகளை வைத்து பொழைப்பு நடத்தும் கோபிநாத், இனிமேல் மரியாதையாக அந்தம்மா வீட்டுக்குப்போயி சேர்ந்து ஒப்பாரி வைத்துவிட்டு, ஆறுதல் சொல்லிவிட்டு வருவது நல்லது!

TV ல வந்து இதுபோல் நீலிக்கண்ணீர்விடும் அம்மாக்களை ஒதுக்கிவிட்டு வேற ஏதாவது சமுதாயத்துக்கு தேவையான பிரச்சினைகளை இனிமேல் பேசலைனா, கோபிநாத்க்கு இனிமேல் பலவிதமான அர்ச்சனைகள் நடக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

Friday, March 1, 2013

சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!

எச்சரிக்கை! அமரர் சுஜாதாவை வணங்கும் பக்தர்கள் இந்தப் பதிவை வாசிக்காமல் தவிர்ப்பது நல்லது! நன்றி!

பாமர தமிழ் வாசகர்கள், ஏன் எதற்கு எப்படி? ல  சுஜாதாவிடம் அறிவியல் சம்மந்தமான கேள்விகள் கேட்பார்கள். இது ஒரு நேரடி கேள்வி பதில் நேரம் கிடையாது. அதாவது கேள்வி கேட்டதற்கும் பதில் சொல்வதற்கும் இடையே உள்ள காலம் எவ்ளோனா.. நாட்கள், வாரங்கள் ஏன் மாதங்களாகக் கூட இருக்கலாம்.

சுஜாதாவிடம் கேள்வி கேட்பதையே பெரிய க்ரிடிட்டாக நினைக்கும் பாமர வாசகன் ஒருவன் கேட்ட கேள்வியை நம்ம சுஜாதா எடுத்துட்டுப் போயி விக்கிப்பீடியா இல்லனா ஏதாவது ஒரு நல்ல சோர்ஸ்ல போயி பதிலைதேடி எடுத்து அதை தமிழாக்கம் செய்து நமக்குக் கொடுப்பாரு (சிறிது நக்கலும் கிண்டலும் சேர்த்து). "ஐயா எனக்கு இந்தக் கேள்விக்கு பதில் தெரியலை"னு இவர் எந்தக் கேள்வியையும் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆக க்ரிடிட் எல்லாம் பதிலைத் தேடி எடுத்து வரும் சுஜாதாவுக்குத்தான் போகும். ஏன் என்றால் பொதுவாக அவர் பதில் சொல்ல உதவிய சோர்ஸை எல்லாம் நம்ம பாமரனுகளுக்கு தெளிவாக சொல்வதில்லை. "நான் கேள்விப்பட்ட வரைக்கும்," இல்லைனா "நான் அறிந்தவரைக்கும்"  என்ற  சொற்கோர்வைகள்  அவர் தேடிப் படித்த "சோர்ஸை" குறிக்கும் என்பது பாமரனுக்குப் புரியாது. ஒரு வேளை புரியுமோ? இப்படித்தான் நம்ம ஊர்ல பொதுவாக பல மேதைகள் (சுஜாதா, மதன் போன்ற) உருவாக்கப் படுறாங்க.

இந்த அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு டெக்னாலஜி பத்தி நம்ம மேதாவிக்கெல்லாம் மேதை கமலஹாசன் விட்ட பந்தா இருக்கே! என்னவோ இவரே "இண்வெண்ட்" செய்த உலகமகா டெக்னாலஜி அது என்பதுபோல! கடைசியில் சொன்னதுபோல அதை வெளிவிடவும் இல்லை!

சுஜாதாபோல் மேதைகள்,  தான் செய்யும் தொழிலில் (மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு) பி இ எல் ல ஏதாவது விஞ்ஞான "ப்ரேக் த்ரு" செய்து நோபல் பரிசு இல்லை ஏதாவது பெரிய பேட்டண்ட் எதுவும் செய்தாங்களானு பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது. பாமரனுக்கு மேதையா இருப்பதில்தான் இவர்களுக்கு பெருமை! என்ன நாலு படத்துக்கு சினிமா வசனம் வேணா எழுதி சாதிச்சு இருப்பாங்க! ஆனால் பாமரனைப் பொறுத்தவரையில் அவன் விஞ்ஞானக் கேள்விக்கு பதில் தேடி எடுத்து வந்து சொன்ன சுஜாதாதான் மேதை. விஞ்ஞானத்தில் 24 மணி நேரமும் செலவழிக்கும் ஒரு அறிவியல் ஆய்வாளன் எல்லாம் யாருனே தெரியாது. இதுதான் உலகம்!

நேற்று முந்தினம் சுஜாதா மறைந்த தினமாம். அஞ்சலி எல்லாம் செலுத்தினார்கள்! நம்மூர்ல உள்ள "பிரப்பலப் பதிவர்கள்" எல்லாருமே ஒட்டு மொத்தமான சுஜாதா ஜால்ராதான். அது மட்டுமல்ல கமலஹாசன் ஜால்ராவாவும் இருப்பாங்க. ஏன் என்றால் "பப்ளிசிட்டி" விரும்பும் இந்த மேதைகளும் ஒரு மாதிரி "பிரப்பலப் பாரமரன்கள்" தான். இவர்களுக்குப் அறிவியல் , அறிவியலை எப்படிப் புரிந்து கொள்ளணும், பொது அறிவு, பகுத்தறிதல்  இதெல்லாம் ரொம்ப கம்மினுகூட  சொல்லலாம்.  ஆனால் "கவர்ச்சி எழுத்தழகு", "சினிமா ஞானம்" "அடல்ட் ஜோக் ஞானம்" எல்லாம் அதிகம் இருக்கலாம்தான். அதனால் நம்ம வாசக பாமரர்கள் சுஜாதாவை புகழ்வது  போலவே இந்த "பிரப்பல மேதைகளும்" சாண்ஸ் கெடைக்கிற போதெல்லாம் சுஜாதாவை வானளவுக்குப் புகழுவாங்க.

* தமிழ் இலக்கியத்தில் சுஜாதா எதையும் பெருசா சாதிக்கவில்லை. தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை சாகித்ய அகாதமி விருதுகூட பெறாத ஒரு இலக்கியவாதிதான் சுஜாதா. 

* காதல் என்பது ஜஸ்ட் செக்ஸ்/ஹார்மோண்ஸ் என்று புரிந்துகொண்டவர் சுஜாதா. 

* தத்துவம் பேசுவதெல்லாம் பொதுவாக பார்ப்பனர்களுக்கு கொஞ்சம் கஷ்டம். அவர்களுக்கு "சர்வைவல்" தான் ரொம்ப ரொம்ப முக்கியம்!
அதனால் "சுஜாதா தத்துவத்தையும்" ஒதுக்கி வைத்து விடலாம். 

* சரி, சுத்தமான விஞ்ஞானத்திலும் இல்லைனா தொழில்நுட்பத்திலும் எதுவும் பெருசா சாதிச்சாரா?னா  அதுவும் சாதிக்கவில்லை!

சரி தலைப்புக்கு வர்ரேன்..

ஏன் எதற்கு எப்படி? யில் அவர் ஆற்றிய அவருடைய அறிவியல் பங்களிப்பைப் பொறுத்தவரை சுஜாதாவின்  இழப்பை  இன்றைய இணையதள உலகம் எளிதாக சமன் செய்து விட்டது என்னும் கூற்று முற்றிலும் உண்மை. ஏன் எதற்கு எப்படி? என்கிற பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமல்லாமல் பலவிதமான அறிவியல் விசயங்களை எல்லாம் இன்று விக்கில மட்டுமன்றி பல நல்ல தளங்களில் அழகா சேகரிச்சு வச்சிருக்காங்க. அரைகுறை  ஆங்கிலத்தில் கூகில்ல இல்லைனா தமிழில்கூட டைப் அடிச்சா எல்லா பதிலும் கண் முன்னால் வந்து நிக்கும். நீங்க அள்ளிக்கலாம்!

அதனால சுஜாதா இல்லாமல் நாங்க அறிவீணர்களாயிட்டோம்னு ஒப்பாரி வைக்காமல், உங்க கேள்விக்கெல்லாம் உடனே பதில் சொல்லும் கூகிலையும், விக்கியையும் ஒழுங்கா பயன்படுத்த கத்துக்கோங்க! ஆமா, நீங்களும் மேதையாகலாம்!