Monday, July 15, 2013

ஒழிந்தது சனியன்! ஹாப்பி இன்று முதல் ஹாப்பி!

அவன் அவன் பிரச்சினை அவன் அவனுக்கு. இளவரசன் ஏன் தற்கொலை செய்தான்? ஒருவேளை இது கொலையா இருக்குமோ? அதான் இல்லைனு ஒரு போஸ்ட்மார்ட்டம் இல்லை ரெண்டு சொல்லிருச்சே! திவ்யா இனிமேல் சந்தோஷமாக வாழ்வாளா?  இதெல்லாம் என் பிரச்சினையா என்ன? எவன் எப்படிப் போனா நமக்கென்ன? எல்லாம் பகவான் செயல். பகவானும் அவனை கட்டி அழறவாளும், சாதியையும் இந்தக் கருமத்தையும் கட்டி அழட்டும்! நம்ம பொழைப்பைப் பார்ப்போம்!

நம்ம பிரச்சினை இந்த "ஸ்பைவேர்"! அதான்  "ஐ மீட்ஸு டாட் காம்" ரீடைரெக்ட் ஸ்பைவேர்!! தளத்துக்கு வர்ர நாலு பேரையும் எரிச்சலைக் கிளப்பி ஓடவைக்கும் இந்த எழவை ஒழிக்கணும்!

* எங்கேயிருந்துடா இந்த எழவு வந்துச்சு?

* ஒரு சில பேரு நானே வேணும்னே இப்படி ஒரு சைட்டை புதைத்து வைத்து சம்பாரிக்கிறேன்னு நெனச்சாலும் நெனைப்பானுக! :-)))

சரி, எங்கேயிருந்து இந்த எழவு வந்துச்சுனு கூகில் பண்ணினால் ஒரு பயலுக்கும் இந்தப் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை! இந்தத்தளத்தைத் தவிர இன்னொரு தளத்தில் இந்தப் பிரச்சினை வந்ததாக மட்டும் தெரிந்தது.

அந்தம்மாவும் ஒப்பாரி மேல் ஒப்பாரி வச்சுட்டு எப்படியோ இந்த எழவை ஒழிச்சுக்கட்டிப்புடுச்ச்சுனு சொல்லியிருக்கு! இருந்தாலும் தெளிவாக சொல்லாததால எனக்கு எப்படி இதை ஒழிக்கிறதுனு சரியாகத் தெரியவில்லை.

அப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தால்தான் என்ன பிரச்சினைணு தெரிஞ்சது,

 "ஃப்ரீயூசர்ஸாண்லைன்.காம்"க்கும் "ஐமீட்ஸ்யுடாட்காம்"க்கும் ஏதோ டீல்னு.

அப்புறம் என்னுடைய சைட்டை கவனிச்சுப்பார்த்தால், இந்தத் தளத்தில் எத்தனைபேர் இருக்கிறா னு கண்டுகொள்ள ஒரு கவுண்டர் இணைத்து இருந்தேன். எத்தனை பேர் வந்து வாச்சிண்டு இருக்கானு சொல்லும் அந்தக் கவுண்டர். அது எங்கே இருந்து எடுத்து வந்தேன் என்று பார்த்தால் இந்த "ஃப்ரீயூசர்ஸாண்லைன்.காம்" சைட்ல இருந்து எடுத்துட்டு வந்து இருக்கேன். நிற்க, நான் எடுத்து வந்த போது, இந்த ஐமீட்ஸு தளத்துடன் இவர்களுக்கு டீல் கெடையாது. நான் அந்தக் கவுண்டரை இணைத்தபோது இந்த பிரச்சினை வரவில்லை! பின்னாலதான் இவர்கள் ஐமீட்ஸுக்கு தரகராக மாறி இருக்காங்க.  என் தளத்தை அவர்களுக்கு "விற்று" இருக்கார்கள் என்று விளங்கியது!

அந்த ஆண்லைன் கவுண்டரை கழட்டியதும், இந்த ஐமீட்ஸு ரீடைரக்ஸனும் ஒழிஞ்சது. சனியன் ஒழிஞ்சதுனு நிம்மதியா இருக்கு! :)))

Nothing is FREE in the world my friend!!! That's the moral of the story! :-)

6 comments:

'பரிவை' சே.குமார் said...

இந்தப் பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு என்று நினைக்கிறேன்.

எப்படியோ பிராப்ளம் தீர்ந்ததல்லவா.

வருண் said...

வாங்க குமார்!

நான், யாரு தளத்திலும் (அங்கே விசிட் செய்யும்போது) இந்தப் பிரச்சினை எதிர்கொள்ளவில்லை!

நண்பர் சத்யப்பிரியன் தான் முதலில் இதைச் சொன்னார். அப்புறம் ஜெயதேவ். நான் இந்தப் பிரச்சினை வந்தபோது, ஏதோ என் கணிணில பிரச்சினைனு நெனச்சேன். தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. பின்னாலத என் தளத்தில் ஏதோ புதைந்து இருக்குனு ரியலைஸ் பண்ணினேன்.

ராஜி said...

எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு/ என்ன பண்ணனும்ன்னு தெரியலை

வருண் said...

வாங்க காந்தி! நான் தான் சொல்லியிருக்கேனே, எதை கழட்டிவிடணும்னு?? புரிகிறார்ப்போல சொல்லலையா?

கரந்தை ஜெயக்குமார் said...

பிரச்சினை தீர்ந்தால் சரி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மைதான். எதுவும் இலவசம். இல்லை.நாம் பயன்படுத்தும் பல மென்பொருள்கள் நம் தகவல்களை சேகரித்து அனுப்பி பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றன.