Tuesday, June 5, 2012

உங்க ஆத்துக்காரர் எப்படி?

"ஏண்டியம்மா வர்ஷா! உன் ஆத்துக்காரன்தான் நெறையா சம்பாரிக்கிறானே, ஏண்டி டெய்லி அவனோட சண்டை போட்டுண்டே இருக்க?"

"விடுங்கோ மாமி! அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது!"

"கேக்கிறேன்னு கோவிச்சுக்காதடிம்மா. குடிப்பழக்கம் எதுவும் இல்லையே?"

"குடிச்சாக்கூட பரவாயில்லையே, மாமி!"

"அதான், கோயில் கோயிலாப்போயி பகவானை  தரிசனம் பண்றாரே.. அதெல்லாம் குடிக்கமாட்டார்னு நேக்குத் தெரியும்."

"ஆமா, உங்களுக்குத்தான் அவரைப் பத்தி எல்லாம் தெரியுது, மாமி!"

"நான் இப்போ தப்பா என்னடி சொல்லிட்டேன்? நேக்கு எல்லாம் தெரியும்னு குதற்கமா சொல்ற?"

"நீங்கதானே சொன்னீங்க, மாமி "

 "நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்கிதுனு நேக்கென்னடி தெரியும்?!"

"ஆமா நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாதா?!"

"என்னடி இப்படி அசடாட்டம்? நேக்கெப்படி உன் ஆம்படையான் தெரியும்?"

"அப்போ ஒரு நாள் வந்துதான் பாருங்களேன்!"

"நானா? இதென்னடி வெக்கக்கேடு?"

"ஓ நீங்க அதச்சொன்னேளா?"

"ஏண்டி, நீதான்  எதுக்கு சண்டை போடுறனு சொல்லப்படாதோ? அப்படி என்னடி தப்பு செய்றான் உன் ஆம்படையான்?"

"அவருக்கு ஏதோ மன வியாதி போல இருக்கு மாமி!"

"அவனைப் பார்த்தா பித்துப் பிடிச்ச பிள்ளையாண்டான் மாதிரியா இருக்கான்?"

"அதெல்லாம் நாலு சுவத்துக்குள்ள நடக்கிறது! நேக்குத்தான் தெரியும் மாமி!"

"என்னடியம்மா சொல்ற?"

"சரி, ஊரெல்லாம் போயி என் ஆத்துக்காரர் பித்துப்பிடிச்சு அலையிறாருனு சொல்லிடாதீங்கோ, மாமி! நான் வரேன்"

-------------------------------

"நம்ம ருக்மணி மாமி நேத்து நமகுள்ள என்ன சண்டைனு நொழச்சி நொழச்சிக் கேக்கிறா.  சொல்லிடவா?"

"என்னடி சொல்லப் போறங்கிற?"

"நீங்க நேத்து சொன்னதை சொல்லவா?"

"நான் உன் புருஷன்டி! சும்மா குடிச்சுட்டு வந்து அடிக்கிறாருனு சொல்லு!"

"எதுக்குப் பொய் சொல்ல? இல்ல நீங்க சொன்னதையே  சொல்லிடுறேன்."

"அதெல்லாம் படுக்கையறையிலே சொல்றதுடி. தூங்கி எழுந்ததும் மறந்துடனும்!"

"அதெப்படி மறக்க முடியும்? உள்ள மூடையும் இப்படி ஏதாவது சொல்லி கெடுத்துடுறேள் ..!  அந்த மாமியை பார்க்கும்போது எனக்கு நீங்க சொன்னதுதான் ஞாபகம் வருது! அது ஒரு அசடு..எதையோ ஒளறிக்கிட்டு இருக்கு"

"சரி, எனக்கு ஒரு ப்ராஜெக்ட் முடிக்கனும். ஈவனிங் லேட்டாத்தான் வருவேன். நீ?"

"நான் எப்போவும் போலதான்.

-----------------------------------------

"சுபத்ரா! எல்லா ஆம்பளைகளுமே என் புருசன் மாதிரித்தானா?"

"உன் புருசன் என்ன நல்லாத்தானே இருக்காரு? அழகா, நெறையா சம்பாரிக்கிறாரு."

"நான் அதை சொல்லலடி!"

"வேறென்ன?"

"சொல்லவே அருவருப்பா இருக்கு!"

"அப்போ சொல்லாதே!"

"உனக்குப் புரியலையா?"

"என்ன எந்நேரமும் போர்ன் பார்க்கிறாரா? உன்னையும் பார்த்து ரசிக்கச் சொல்றாரா?"

"அடிப் பாவி!"

"அதைத்தானே சொல்ற? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!"

"என்னடி சொல்ற?"

"இன்னைக்கு எல்லா ஆம்பளைகளுமே ஆண்மை இல்லாதவனுகதான்! இது மாதிரி ஏதாவது எவளோட தூண்டுதலையோ வச்சுத்தான் ஒரு பத்து நிமிசம் தாக்குப் பிடிக்கிறானுக!"

"இல்லைனா?"

"அதான் சொன்னேன் இல்ல?"

"என்ன சொன்ன?"

" இன்னைக்கு புருசனோட சந்தோஷமா ஒருத்தி இருக்கேன்னு சொன்னாள்னு வச்சுக்கோ.. அது பச்சைப் பொய்! இல்லைனா நைட்டு, அவள், அவனோட "ஏதோ பண்ணிட்டுப்போ"னு குடிச்சுட்டு போதையிலே அவள் படுத்து இருக்கனும்."

"இது வேறயா செய்ற?"

"ரெட் வைன் இதயத்துக்கு  நல்லது! எஸ்பெஷல்லி நம்மள மாதிரி மிருகங்களுடன் வாழும் பெண்கள் இதயத்துக்கு!"

"அல்கஹால் நல்லதா? என்னடி இது புதுக்கதை!"

"மொதல்ல, உயிரோட இருக்க  இதயம் வெடிக்காம இருக்கனும் இல்ல? அல்கஹால் ஒண்ணும் உன் ரத்தக் குழாயை அடச்சிடாது. ஆனா இந்த ஆம்பளைங்க செய்றதெல்லாம் சுயநினைவோட இருந்தால் இதயத்தை சுக்கு நூறா வெடிக்க வச்சிடும்!"

7 comments:

Ramani said...

"மொதல்ல, உயிரோட இருக்க இதயம் வெடிக்காம இருக்கனும் இல்ல? அல்கஹால் ஒண்ணும் உன் ரத்தக் குழாயை அடச்சிடாது. ஆனா இந்த ஆம்பளைங்க செய்றதெல்லாம் சுயநினைவோட இருந்தால் இதயத்தை சுக்கு நூறா வெடிக்க வச்சிடும்!"//

மிகச் சரி
சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு

வருண் said...

தங்கள் கருத்துக்கு நன்றி, ரமணி சார்!:)

-------------------

நன்றி, கூகிள்சிறி!

Jayadev Das said...

ஆம்பிளைங்க மேல ஒய் திஸ் கொலைவெறி?

வருண் said...

***Jayadev Das said...

ஆம்பிளைங்க மேல ஒய் திஸ் கொலைவெறி?
7 June 2012 9:16 AM ***

பெண்ணியவாதிகள், புதுமைப் பெண்கள், எல்லாம் இன்னைக்கு இதுமாரித்தான் "இன்பம்" அனுபவித்துக்கொண்டு இருக்காங்க. காமப்பித்துப்பித்துப் பிடிச்சு மனவியாதியுடன் அலைகிற தன் ஆம்படையான் பத்தி வெளிய ஏனோ தைரியமாகச் சொல்றதில்லை. ஒரு வேளை இது ஆண்களின் சுதந்திரமோனோ குழம்பிப்போயி இருக்காங்களோ என்னவோ தெரியலை. உன் ஆத்துக்காரன் மட்டும் அப்படி இல்லடிம்மா, இந்த நவீன உலக ஆம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லி அவங்களுக்கு ஒரு "ஆறுதல் பதிவு"! இதுதான் நம்மளால முடிஞ்சது. அவா ஆம்படையானையெல்லாம் பகவானே திருத்தமுடியாது. நான் எப்படிங்க?? :)))

Jayadev Das said...

Hi Varun, Did you read this article?


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=229665

வருண் said...

வாங்க ஜெயவேல்!

பாவம் அவள் சுய நினைவோட இருந்து இருக்காள், நடராஜன் ஆடச்சொல்ற ஆட்டத்தை ஆடவோ, சகிக்கவோ முடியலை போல! :(

அதுல வந்திருக்க பின்னூட்டங்களையும் பாருங்க.

"உண்மையிலேயே நாலு சுவத்துக்குள்ள என்ன நடந்தததோ?"

"அந்தப் பெண்ணுக்கு வேறு ஏதும் காதல் இருந்து இருக்கலாம்"

அப்படி இப்படினுதான் ஊர் உலகம் சொல்லுது!

என்னைக்கேட்டால் அவனை சகிச்சுக்க முடியலைனா, பேசாமல் விவாகரத்து செய்து இருக்கலாம். எதுக்கு குத்திப்புட்டு இப்பொ ஜெயில்ல போயி அவஸ்தைப் படனும்?

ஊர் உலகம் இவள் சொல்லும் உண்மையை நம்பப் போவதில்லை! ஆனால் "செக்ஸ் டார்ச்சர்" அந்தாளு பண்ணியிருக்கலாம்.

என்னைக்கேட்டால் வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும், மனைவியா இருந்தாலும் தொடக்கூடாது!

எனிவே, மனநல மருத்துவர்களுக்கு ரெண்டு கேஸு மாட்டியிருக்கு! :))