யுவகிருஷ்ணா தளத்தில் அந்த பிரச்சினைக்குரிய இரண்டு பக்கங்களும் இருக்கு. அதை வாசித்துவிட்டு என் கருத்தை இங்கே வைக்கிறேன்.
மதுவின் மலர்த்தரு தளத்தில் பின்னூட்டமாக எழுதியது இது. என்னுடைய ஸ்டைலில் எழுதியுள்ளதால், தரமான தளம் நடத்தும் மதுவின் தளத்தில் என் பின்னூட்டம் அழுக்கை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் என் வரம்பு மீறிய பின்னூட்டங்களை மது மட்டுறுத்தவும் வாய்ப்புண்டு.
அதனால் நான் அதே கருத்தை இங்கே எழுதுகிறேன்.
I think I am very liberal guy. That's how I rate myself. I read those two pages where PerumaaL Murugan talked about some sort of "sex swap" or "free sex" or “orgy” or whatever you would like to call happening in thiruchengode (read those pages from one of the websites).
Suppose I am from that town or if the town he mentioned were
my hometown (I grew up in a very rough neighborhood in TN), I am sure my town
people will NOT leave that writer "alive". I am very honest here.
I am an agnostic or an atheist guy. This issue has NOTHING to do
with RELIGION as they project. Whatever this author described is nothing but
garbage I would call. Already our community is so screwed up these days. This
guy is trying to make it worse by writing some "trash" like this.
Yeah, people should condemn this kind of writing because
those people are seriously offended by his "BS". A guy with some good morals will dare to write like this. I wonder how this author grew up? What
kind of parents he had? He seems like a SICK SOB if you ask me. His mind is so
f***ed up I would say.
Yeah we have freedom of speech. It is a fiction. Right. But the
town he names does exist. There are mothers living there. How would they feel
when they read this garbage? It is not a town namely "jupiter" or something.
The way he has written does not look that "imagination" either.
The following is a response by a guy who lives in that town.
I got this from luckylookonline.com
website.
http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html
யுவகிருஷ்ணா தளத்தில் வந்த பின்னூட்டம் இங்கே..
யுவகிருஷ்ணா தளத்தில் வந்த பின்னூட்டம் இங்கே..
இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.* திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?*நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?* மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.****
சும்மா ஆளாளுக்கு கருத்துச் சுதந்திரம் மண்ணாங்கட்டினு
பேசக்கூடாது. உங்க கருத்துச் சுதந்திரத்தை வைத்து உங்க அம்மா, அக்காவை பத்தி எழுதுங்க, அல்லது உங்க மனைவி பத்தி அல்லது கொழுந்தியா பத்தி
தாறுமாறா எழுதுங்க. அதை விடுத்து ஒரு ஊரில் வாழும் பெண்கள் இப்படி வாழ்கிறார்கள்/வாழ்ந்தார்கள் என்று எழுதினால், அவர்கள் உங்களை செருப்பை கழட்டித்தான் அடிக்க வருவார்கள்..
கருத்துச் சுதந்திரத்திற்கும் வரையறை அல்லது லிமிட் இருக்கு. அந்த கோடு எங்கே வரையணும்னு எந்த கொம்பனுக்கும் தெரியாது, அது தெரியாமல் "இது கருத்துச் சுதந்திரம்"னு கொடி பிடிக்கக்கூடாது!
கருத்துச் சுதந்திரத்திற்கும் வரையறை அல்லது லிமிட் இருக்கு. அந்த கோடு எங்கே வரையணும்னு எந்த கொம்பனுக்கும் தெரியாது, அது தெரியாமல் "இது கருத்துச் சுதந்திரம்"னு கொடி பிடிக்கக்கூடாது!
18 comments:
இல்ல வருண். அவர் எல்லா பொண்ணுங்களும் அப்படி பண்ணினாங்கன்னு சொல்லல. அப்படி நடக்கவே இல்லைன்னு அவங்க போராடட்டும். அதே இன்சிடென்ட் டை வைத்து ஒரு பொண்ணுக்கு அப்படி பிறந்தந்ததாவும் அவள் அதன் பின் தன்னை மாய்த்துக்கொண்டு அங்கேயே குலதெய்வமாக இருப்பதாகவும் வேற்றொரு நட்சத்திர எழுத்தாளர் விகடனிலும் ஒரு கதை எழுதியிருந்தார். அதற்கு இப்படி விமர்சனங்கள் வரவில்லை. இங்கே பெருமாள் முருகன் அதை பொதுபடுத்தி எழுதவும் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள். இலைமறை காயாய் பல தெற்கு கதைகளில் இந்த வழக்கம் சொல்லப்பட்டு வந்தவரை சும்மா தான் இருந்தார்கள். வருண் போல பெருமாள் முருகன் தான் பார்த்து வளர்ந்த ஒன்றை தைரியமாக சொன்னதற்காக இப்போது தண்டிக்கபட்டிருகிறார். திராவிட கழகத்தார் சொன்னதெல்லாம் முழுமையாக படித்து பாருங்கள். மங்களம் என முடியும் ஊர்களுக்கும், அசவமேதம் எனும் யாகத்திற்கும் அவர்கள் சொல்லும் அர்த்தங்களும் இதிலும் பொருந்தும். எல்லா ஊருக்கும் ஒரு அழகான முகமும், அசிங்கமான முகமும் இருக்கவே செய்கிறது. அந்த அழகு முகத்தை ஆராதிகிறவரை எங்கள் மண்ணின் பெருமையை நிலை நாட்டியவர் என்றும், அழுக்கு முகத்தை காட்டிவிட்டாலோ துரோகி பட்டமும் கட்டிவிடுகிறார்கள். பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் கூட இது பற்றி என்னைபோல பூசி மொளுகியோ, கஸ்தூரி(மது) போல நாசுக்காகவோ இந்த விஷயத்தை தொட்டு சென்றிருகிறார்கள். பிரச்சனையை என்வென்றால் எந்த ஊரில் வளர்ந்த, நேரடியாக தெரிந்து வளர்ந்த விஷயம் தானே என துணிந்து அவர் பதிவு செய்யும் போது அவர் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இதை அவர் prove பண்ண வாசகர்களை எல்லாம் அங்க கூட்டிட்டா போக முடியும். உங்களுக்கு அந்த ஏரியாவில் ஏதேனும் உண்மையை சொல்லக்கூடிய நெருக்கமான நண்பர்கள் கிடைத்தாலே ஒழிய பெருமாள் முருகன் உங்கள் மனதில் நல்ல இடம் பெறப்போவதே இல்லை.
காலையில் பார்த்தபோதே கமென்ட் போட்டிருந்தால் தீபிகா, காத்ரீனா என ஜாலியாய் ஏதோ சொல்லிவிட்டு தப்பித்திருக்கலாம் :(( என்ன செய்ய dongle சொதப்பி, இப்போ வீணா மனவருத்தம்.
வணக்கம் வருண்.
கடந்த மூன்று மணி நேரத்திற்குமுன் கருத்து சுதந்திரம் என்று மட்டுமே இந்தப் விஷத்தை அணுகினேன்.
எனது பார்வைகள் இன்னொரு கோணத்திற்கு தானாக செல்கின்றன ..
பாப்போம்
Lateral thinking. I appreciate.
**Mythily kasthuri rengan said...
இல்ல வருண். அவர் எல்லா பொண்ணுங்களும் அப்படி பண்ணினாங்கன்னு சொல்லல. அப்படி நடக்கவே இல்லைன்னு அவங்க போராடட்டும். அதே இன்சிடென்ட் டை வைத்து ஒரு பொண்ணுக்கு அப்படி பிறந்தந்ததாவும் அவள் அதன் பின் தன்னை மாய்த்துக்கொண்டு அங்கேயே குலதெய்வமாக இருப்பதாகவும் வேற்றொரு நட்சத்திர எழுத்தாளர் விகடனிலும் ஒரு கதை எழுதியிருந்தார். அதற்கு இப்படி விமர்சனங்கள் வரவில்லை. இங்கே பெருமாள் முருகன் அதை பொதுபடுத்தி எழுதவும் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள். இலைமறை காயாய் பல தெற்கு கதைகளில் இந்த வழக்கம் சொல்லப்பட்டு வந்தவரை சும்மா தான் இருந்தார்கள். வருண் போல பெருமாள் முருகன் தான் பார்த்து வளர்ந்த ஒன்றை தைரியமாக சொன்னதற்காக இப்போது தண்டிக்கபட்டிருகிறார். திராவிட கழகத்தார் சொன்னதெல்லாம் முழுமையாக படித்து பாருங்கள். மங்களம் என முடியும் ஊர்களுக்கும், அசவமேதம் எனும் யாகத்திற்கும் அவர்கள் சொல்லும் அர்த்தங்களும் இதிலும் பொருந்தும். எல்லா ஊருக்கும் ஒரு அழகான முகமும், அசிங்கமான முகமும் இருக்கவே செய்கிறது. அந்த அழகு முகத்தை ஆராதிகிறவரை எங்கள் மண்ணின் பெருமையை நிலை நாட்டியவர் என்றும், அழுக்கு முகத்தை காட்டிவிட்டாலோ துரோகி பட்டமும் கட்டிவிடுகிறார்கள். பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் கூட இது பற்றி என்னைபோல பூசி மொளுகியோ, கஸ்தூரி(மது) போல நாசுக்காகவோ இந்த விஷயத்தை தொட்டு சென்றிருகிறார்கள். பிரச்சனையை என்வென்றால் எந்த ஊரில் வளர்ந்த, நேரடியாக தெரிந்து வளர்ந்த விஷயம் தானே என துணிந்து அவர் பதிவு செய்யும் போது அவர் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இதை அவர் prove பண்ண வாசகர்களை எல்லாம் அங்க கூட்டிட்டா போக முடியும். உங்களுக்கு அந்த ஏரியாவில் ஏதேனும் உண்மையை சொல்லக்கூடிய நெருக்கமான நண்பர்கள் கிடைத்தாலே ஒழிய பெருமாள் முருகன் உங்கள் மனதில் நல்ல இடம் பெறப்போவதே இல்லை.
காலையில் பார்த்தபோதே கமென்ட் போட்டிருந்தால் தீபிகா, காத்ரீனா என ஜாலியாய் ஏதோ சொல்லிவிட்டு தப்பித்திருக்கலாம் :(( என்ன செய்ய dongle சொதப்பி, இப்போ வீணா மனவருத்தம்.***
வாங்க மைதிலி. :)
இந்த விவாதத்தில் நாம் இருவரும் எதிர் எதிர் அணியில் இருக்கிறோம் போல இருக்கு. :-)))
இதுபோல் நடந்தது என்பது உண்மையாகவே இருக்கட்டும். சரியா? தெரியாத ஒருவரிடம் "ஒன்று கூடுவது" எல்லாராலும் முடியாது. இதுபோல் விடயங்களில் நம்பிக்கை இல்லாமல் பல பெண்கள் இதை புறக்கணித்து இருக்கலாம். சரியா? அப்படி புறக்கணித்து தன் கணவரின் மூலமே சற்று தாமதமாக குழந்தை பெற்ற ஒருத்திக்கு இதுபோல் பொத்தாம் பொதுவாக சொல்வது நியாயமாகப் படுமா??? அப்படிப்பட்ட ஒருத்திக்காக, அவள் படும் மனவேதனையைப் புரிந்து அவளுக்காக நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று எதுக்கொள்ளுங்கள்! :)
Please don't tell em everyone in that community believed in that kind of stuff.
பெருமாள் முருகன் ஒரு ஆம்பளை. அவனுக்கென்ன தெரியும் பெண்களின் மனநிலைனு ஏன் நான் யோசிக்கக்கூடாது. We even hesitate to eat if some stranger suggests some food which we are not used to. How hard it would be to sleep with some stranger just like that?? I am thinking like this.. :) Take it easy, Mythily. :)
****Mathu S said...
வணக்கம் வருண்.
கடந்த மூன்று மணி நேரத்திற்குமுன் கருத்து சுதந்திரம் என்று மட்டுமே இந்தப் விஷத்தை அணுகினேன்.
எனது பார்வைகள் இன்னொரு கோணத்திற்கு தானாக செல்கின்றன ..
பாப்போம் ***
இதை பல கோணங்களில் பார்க்கலாம் மது. தங்கள் கருத்துரைக்கு நன்றி. :)
***காரிகன் said...
Lateral thinking. I appreciate.***
வாங்க, காரிகன். :) தங்கள் கருத்துரைக்கு நன்றி.
பெருமாள் முருகனை எதிர்த்து உருவாக்கப்பட்ட எதிர்ப்பில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது என்பது உண்மையே. அந்தவகை அரசியலையும் அந்தவகை எதிர்ப்பையும் நிச்சயம் எதிர்க்கத்தான் வேண்டும்.
அதற்காக பெருமாள் முருகனின் அந்த எழுத்துக்களை நியாயமென்று பேசுவதும் சரியல்ல. படைப்பாளியின் சுதந்திரம் இந்தவகை எழுத்தை சமூகத்தின் முன் கொட்டுவது அல்ல.
reedom of speech.....ought to have limits ...ஒருவரின் கருத்து சுதந்திரம், இன்னொருவரின் சமூகத்தை குடும்பத்தை வாழ்க்கையைப் பாதிக்க நேரிட்டால் அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது
இதேதான் எனது ஆணித்தரமான கருத்தும்
**** Amudhavan said...
பெருமாள் முருகனை எதிர்த்து உருவாக்கப்பட்ட எதிர்ப்பில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது என்பது உண்மையே. அந்தவகை அரசியலையும் அந்தவகை எதிர்ப்பையும் நிச்சயம் எதிர்க்கத்தான் வேண்டும்.
அதற்காக பெருமாள் முருகனின் அந்த எழுத்துக்களை நியாயமென்று பேசுவதும் சரியல்ல. படைப்பாளியின் சுதந்திரம் இந்தவகை எழுத்தை சமூகத்தின் முன் கொட்டுவது அல்ல. ***
வாங்க அமுதவன் சார். சரியாக சொன்னீர்கள்!!
ஆர் எஸ் எஸ் பெருமாள் முருகனை எதிர்க்கிறான். நான் தி க காரன்/காங்கிரஸ்/திமுக காரன். அதனால நான் ஆர் எஸ் எஸை எதிர்க்கணும் என்கிற மனப்போக்கில் உணமையான பிரச்சினையை யாரும் பார்ப்பதில்லை என்று நம்புகிறேன்.
அந்தாளுஎழுதுறான்..
இதுபோல் கருத்தரிக்காத பெண்கள் எல்லாம் யாருடணும் உறவு வைத்துக் கொள்வதால் வேசிகளுக்கு அன்று கிராக்கி இருக்காதாம். என்ன ஒரு வக்கிர ஆணாதிக்க சிந்தனை இந்தாளுக்கு!
உண்மையை எழுதுறனாம். இவன் அம்மாவுடைய செக்ஸ் லைஃப் பற்றி உண்மையை எழுதலாமே? இல்லை இவனோட தோல்விகளை, அவமானங்களை பச்சையாக எழுதலாமே?? ஏன் இந்தாளால் அதையெல்லாம் எழுத முடியவில்லை!!
இவரு கதை எழுதாமல்ப் போனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. நல்ல முடிவு. I wish he does not change his mind!
ஒரு சிலர் சொல்றாங்க.. இவர் உண்மையில் நடந்ததை அந்த சமூகத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து எழுதினாராம்..
சமீபத்தில் கார்திக் அம்மா பையன் ஆக்சிடெண்ட் பத்தி செந்தழல் ரவி உண்மையாக நடந்ததை சொல்வதுபோல் எழுதி இருந்தார். அவர் எழுதியது என்னவோ அப்படியே நடந்ததை எழுதுவதுபோல்தான் இருந்தது..ஆனால் கார்திக் அம்மா வந்து அவர் எழுதியது புனைவு, என்கிறார். "உண்மை" என்பது எப்படி எல்லாம் திரிக்கப் படுகிறது என்பதற்கு இது ஒரு அழகான உதாரணம். உண்மையை எழுதுறாராம்..
வருண்,
மதுவின் வலைதளத்தில் பின்னூட்டமிட்டு இங்கு வருகிறேன்... சகோதரி மைதிலி அவர்களின் பின்னூட்டம் என்னை வேறுமாதிரி சிந்திக்க செய்கிறது !..
நான் நாவலை படிக்கவில்லை.... ஒரு நாவலின் இரண்டு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு முழுமையாய் மதிப்பிட்டுவிடமுடியாது என தோன்றுகிறது...
சகோதரி மைதிலி கஸ்துரி ரெங்கன் அவர்களின் பின்னூட்டமே எனது கருத்தும்.
" எல்லா ஊருக்கும் ஒரு அழகான முகமும், அசிங்கமான முகமும் இருக்கவே செய்கிறது... "
இங்கு ஊர் என்பதை சமூகம் என்றோ, ஜாதி என்றோ கூட மாற்றிக்கொள்ளலாம்.
" பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் கூட இது பற்றி என்னைபோல பூசி மொளுகியோ, கஸ்தூரி(மது) போல நாசுக்காகவோ இந்த விஷயத்தை தொட்டு சென்றிருகிறார்கள். "
கி.ராஜநாராயணனும் "பாலியல்" பற்றி எழுதியிருக்கிறார்... தோப்பில் முகம்மது மீரானின் சில படைப்புகளில் கூட இலைமறை காயாய் இதுபோன்ற சம்பவங்கள் உண்டு !
ஆனாலும்...
பல்வேறு ஜாதி மத கூறுகளை கொண்ட, " உணர்ச்சிமயமான " நமது சமூகத்தில் படைப்பாளி சற்று ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்தான் !
நன்றி
சாமானியன்
*** Blogger Angelin said...
Freedom of speech.....ought to have limits ...ஒருவரின் கருத்து சுதந்திரம், இன்னொருவரின் சமூகத்தை குடும்பத்தை வாழ்க்கையைப் பாதிக்க நேரிட்டால் அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது
இதேதான் எனது ஆணித்தரமான கருத்தும் ****
Angelin.. Again this is from luckylookonline.com One of the responses by an "anonymous woman" who belogns to thiruchengode..
///இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there),
விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்.
என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).
எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை.
திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா.
இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம்.
என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க.///
****saamaaniyan saam said...
வருண்,
மதுவின் வலைதளத்தில் பின்னூட்டமிட்டு இங்கு வருகிறேன்... சகோதரி மைதிலி அவர்களின் பின்னூட்டம் என்னை வேறுமாதிரி சிந்திக்க செய்கிறது !..
நான் நாவலை படிக்கவில்லை.... ஒரு நாவலின் இரண்டு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு முழுமையாய் மதிப்பிட்டுவிடமுடியாது என தோன்றுகிறது...
சகோதரி மைதிலி கஸ்துரி ரெங்கன் அவர்களின் பின்னூட்டமே எனது கருத்தும்.
" எல்லா ஊருக்கும் ஒரு அழகான முகமும், அசிங்கமான முகமும் இருக்கவே செய்கிறது... "
இங்கு ஊர் என்பதை சமூகம் என்றோ, ஜாதி என்றோ கூட மாற்றிக்கொள்ளலாம்.
" பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் கூட இது பற்றி என்னைபோல பூசி மொளுகியோ, கஸ்தூரி(மது) போல நாசுக்காகவோ இந்த விஷயத்தை தொட்டு சென்றிருகிறார்கள். "
கி.ராஜநாராயணனும் "பாலியல்" பற்றி எழுதியிருக்கிறார்... தோப்பில் முகம்மது மீரானின் சில படைப்புகளில் கூட இலைமறை காயாய் இதுபோன்ற சம்பவங்கள் உண்டு !
ஆனாலும்...
பல்வேறு ஜாதி மத கூறுகளை கொண்ட, " உணர்ச்சிமயமான " நமது சமூகத்தில் படைப்பாளி சற்று ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்தான் !
நன்றி
சாமானியன்***
saam: இந்த "பெருமாள் முருகன்" என்ன சாதியச் சேர்ந்தவர்னு எனக்குத் தெரியாது.
இவர் திருசெங்கோட்டில் உள்ள எந்த சமூகத்தினரைப் பற்றி எழுதினார்னும் எனக்குத் தெரியாது.
இந்தப் பிரச்சினையை நான் "சாதி", "மதம்" போன்ற "லேபல்" களைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டுப் பார்க்கிறேன்.
Let us disagree to agree on this, Saam! :)
நேரிடையாக ஜாதியையும் ஊரையும் குறிப்பிட்டதால் வந்த வினை இது.
மாதொரு பாகனை வாசிக்கிறேன்...
வாசித்து முடித்தால் தெரியும்...
பார்ப்போம்.
சரியாக சொன்னார் கவிப்ரியன் கலிங்கநகர்,நேரிடையாக ஜாதியையும் ஊரையும் குறிப்பிட்டதால் வந்த வினை இது.
அது மட்டுமின்றி எந்த ஒரு ஆதாரமோ, முகாந்திரமோ இன்றி
இருப்பதால் தான் இந்த அளவு எதிர்ப்பு.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யாரையும் புண்படுத்தக் கூடாது என்பதே என் கருத்தும். இந்த விசயத்தில் மட்டும் அல்ல, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இன்னும் பல விசயங்களுக்கும் அதுவே என் நிலைப்பாடு.
The novel's subject is a sensitive issue and shouldn't have been handled like this. நிஜப் பெயர்களைப் பயன்படுத்தியது தவறு. கள ஆய்வு செய்தவை என்று சொல்லிவிட்டு இப்படிப் பயன்படுத்தும்பொழுது என்ன ஆகும் என்று யோசித்திருக்க வேண்டும்.
******தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யாரையும் புண்படுத்தக் கூடாது என்பதே என் கருத்தும். இந்த விசயத்தில் மட்டும் அல்ல, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இன்னும் பல விசயங்களுக்கும் அதுவே என் நிலைப்பாடு.
The novel's subject is a sensitive issue and shouldn't have been handled like this. நிஜப் பெயர்களைப் பயன்படுத்தியது தவறு. கள ஆய்வு செய்தவை என்று சொல்லிவிட்டு இப்படிப் பயன்படுத்தும்பொழுது என்ன ஆகும் என்று யோசித்திருக்க வேண்டும்.***
வாங்க கிரேஸ்! :) உங்கள் கருத்துரைக்கு நன்றி.
என்னுடைய பார்வையில் பலரையும் அவமானப்படுத்தும், மனம் புண்பட வைக்கும் இதுபோல் இலக்கியங்கள் எல்லாம் தேவையற்றது. :)
Post a Comment