குழந்தைகள், மாணவ மாணவிகள் பள்ளிக்குப் போயி படிப்பது அறிவை வளர்த்துக்கொள்ளத்தான். ஆனால் தமிழில் ஆர்வம் உள்ள உங்க மகனை, மகளை .எத்தனை பேரு தமிழ் இலக்கியம் படிக்க ஊக்குவித்து இருக்கீங்க? ஒரு வேளை நீங்க தமிழ் படிக்க ஊக்குவித்து இருந்தால், அவர் தமிழில் டேன் ப்ரவ்ன் அளவுக்கு ஒரு பெரிய எழுத்தாளராகி இருக்கலாம். இல்லைனா தமிழிலக்கியத்தில் அல்லது ஆங்கில இலக்கியத்தில் அவர் நோபல் பரிசு பெற்றிருக்கலாம். அந்த ஒரு வாய்ப்பை நீங்க கொடுப்பதே இல்லை. நீங்க ஒரு மிகவும் சாதாரணமான இந்தியப்பெற்றோகள்தானே? பிளஸ் 2 வில் நெறைய மதிப்பெண்கள் பெற்று என் மகன் டாக்டர் ஆகணும். என் மகள் இஞ்சினியார்கணும். இதே கனவுதான் எல்லாப்பெற்றோருக்கும். அமெரிக்கா வந்தும் இந்தியர்கள் மட்டும் இதே வட்டத்தில்தான் இருக்காங்க. கடைசியில் ஏழைகளுக்கு உதவ டாக்டர் ஆனேன், ஆனால் நான் இப்போ என்ன பண்ணுகிறேன்னு ஒரு குற்ற உணர்வுக்கு குபதில் சொல்ல முடியாமல் யோகா அது இதுனு இறங்கி வாழ்ந்து முடிக்கணும். பொதுவாக உங்க குழந்தையின் தலை எழுத்தை அழகாக எழுதாமல் கிறுக்கி வைப்பது நீங்கள்தான். ஆமா, உங்க தலை எழுத்தை உங்க அம்மா அப்பா கிறுக்கி வைத்தார்கள்.
குழந்தையிலிருந்து உங்களுக்குப் பிடிச்ச, நீங்கள் ரசித்துப் படிக்கும் ஒரு பாடத்தில் நீங்கள் சுதந்திரமாக அதிக நேரத்தை செலவழிக்கவும், மேன் மேலும் அதையே படிக்கவும் உங்களுக்கும் வாய்ப்புக் கொடுப்படவில்லை. அதாவது உங்களுக்கும் போதுமான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதேபோல் நீங்களும் உங்க குழந்தைக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை. இது ஒரு தொடர்கதை.
ஆமாம், நான் பெற்ற இன்ப/துன்பம் தான் என் குழந்தையும் பெறணும் என்று தெரிந்தோ தெரியாமலோ நாமே முடிவு செய்கிறோம்.
உங்களை "சரி செய்யச் சொல்ல" நான் மடையன் இல்லை. நாம் செய்யும் செயல்களை நாம் புரிந்து கொள்வோம் என்கிறேன். என்ன பண்ணுறது, உங்களுக்குப்பிடிக்காத பாடங்களையும் நீங்க படித்தால்த்தான் பாஸ் ஆக முடியும், நிறைய மதிப்பெண்கள் பெற முடியும்.அப்போத்தான் டாக்டராக முடியும் இஞ்சினியர் ஆக முடியும். நெறைய சம்பாரிக்க முடியும். இல்லையா? ஆக உங்களுக்கு பிடித்தவற்றில் மட்டும் உங்க அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பை வழங்குவது இல்லை. அதுதான் நம்முடைய எஜுக்கேஷன் சிஸ்டம். இதுதான் நாம் வாழும் வாழ்க்கை.
ஒரு சில நேரம் ஒரு சில மாணவ மாணவிகளிடம் "நீ இந்த சப்ஜெக்ட்ல இன்னும் அதிக நேரம் செலவழிச்சுப் படிக்கணும். கெமிஸ்ட்ரி ஒரு மாதிரியான சப்ஜெக்ட், எளிதில் எவாப்பரேட் ஆயிடும், அதாவது படிச்சதெல்லாம் மறந்துவிடும்" னு சொன்னால்..
"இல்லை எனக்கு இன்னொரு பாடத்தில் டெஸ்ட் இருக்கு, அதுக்கும் படிக்கணும்" என்று தன் பிரச்சினைகளை சொல்வார்கள். நியாயமான காரணங்கள்தான் அவைகளும் என்று அதுபோல் அறிவுரை சொல்வதை விட்டுவிட வேண்டிய நிலை வரும். ஆக பொதுவாக நாம் படிக்கும் மாணவ பருவத்தில் எதையும் உள்ளிறங்கி புரிந்துகொள்ள சரியான அளவு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும்
ஒரு சில மாணவருக்கு என்ன படிக்கணும்னு தெரியும், எப்படி மார்க் வாங்கணும்னு தெரியும். எப்படிப் புரிந்துகொண்டால் சரியாக பதில் சொல்ல முடியும் என்றறிந்து பதிலெழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்றும் மேலே மேல்ப்படிப்புக்குப் போய் விடுவார்கள். அதுக்கப்புறம் ஒரு வருடம் கழித்து அவங்க படிச்சு நெறைய மதிப்பெண்கள் பெற்ற அந்த சப்ஜெக்ட் சுத்தமாக மறந்துவிடும். அதைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் என்பதுதான் கொடுமை.
ஆக நம் எஜுக்கேஷன் சிஸ்டம் (இந்தியா அமெரிக்கா எல்லா இடங்களிலும் தான்) நிச்சயம் குறையில்லாததல்ல! அதனால் நீங்க நல்லாப் படிக்கவில்லைனா நீங்க மக்கு என்றும், நிறைய மதிப்பெண்கள் வாங்கி மேலே சென்றுவிட்டால் நீங்க அறிவாளி என்றெல்லாம் என்னால் ஏற்றுக்க முடியாது.
உங்களிடம் உள்ள திறமையை நீங்க உங்களுக்கு எது நல்லா வருதோ அதில் முழுவதுமாக செலவழிக்கவில்லை. அதனால் உங்க எதிர்காலம் பிரகாசமாக அமையவில்லை. நீங்க திறமையே இல்லாதவராக எல்லாம் பிறக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால் நீங்க டாக்டராகி, இஞினியராகினால் நெறைய சம்பாரிக்கலாம், உங்க ஸ்டேட்டஸ் உயரும்.
ஆனால்
you need to understand, you have to do the job for 30 years! You should like what you are doing besides making money.
Choose a job you love, and you will never have to work a day in your life.
பள்ளியில் படிக்கும்போது என்னுடைய நண்பன் ஒருவன். மற்ற மாணவர்கள் போல் அவர் போட்டி, பொறாமை, நான் முதலிடம் வரணும் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனம் பண்ண மாட்டான். பொய் சொல்ல மாட்டான். அவனுடைய அப்பா அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அவர்களும் அவன் மனமறிந்து அவனை அவன் இஷ்டப்படி இஷ்டமிருந்தால் படிக்க ஊக்குவித்தார்கள்னு நினைக்கிறேன். பாடம் படிப்பதைவிட ஏகப்பட்ட புத்தகங்கள் படிப்பான். அவனிடம் ஏதாவது நான் சந்தேகம் கேட்டால், "உனக்கு இதுகூடத் தெரியலையா?" என்று சொல்லி சிரிக்கமாட்டான். அவனைவிட என்னை ஒருபோதும் குறைவாக நினைக்க மாட்டான். பொறுப்பாக அவனுக்கு தெரிந்ததை அவனால் முடிந்த அளவு அதை விளக்குவான். அழகாக விவரிப்பான். அவனுக்குப் போட்டி மனப்பாண்மை எல்லாம் கிடையாது. அவனுடைய வீக்னெஸ்னு பார்த்தால் அவனுக்கு படிக்க "மூட்" வேண்டும் என்பான். "மூட்" இல்லைனா படிக்க மாட்டான். மற்ற நல்லாப் படிக்கும் மாணவர்கள் (ரொம்பச் சாதாரணமானவர்கள்), அவனுடைய ரைவல்ஸ் எல்லாம் அவனைக் கேலி செய்வார்கள் (புறமாகத்தான்).. "ஆமா, நாளைக்கு பரீட்சை இவனுக்கு இருந்தால், படிக்க மூட் இல்லைனா, ஃபெயிலா யிடுவானா?" என்று.
You need to understand, people talk behind your back. They smile at you and behave wonderfully in front of you. They may not have much to say good about you when they talk about you to another friend.
I agree, not everybody is like that. But people in general are like that. It is better to know such facts. Anyway..
நான் மேலே சொன்ன நண்பன் பெரிதாகப் படித்து ஒண்ணும் சாதிக்கவில்லை என்பது உண்மையே. சாதனை என்று நீங்கள் நினைக்கும் சாதனைகளைச் சொன்னேன். ஆனால் என்னைப்பொருத்தவரையில் இன்றும் அவன் எனக்கு பெரிய அறிவாளியாகத்தான் தோன்றுகிறான். அவனைவிட பல மடங்கு படித்து மேலே வந்தவர்கள் சாதாரணமாக்த்தான் தோனுகிறார்கள். சகமாணவன் ஒருவனுக்கு தனக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுத்தால் அவனும் கற்றுக்கொள்வானே? அவன் அதிகமாக மார்க் வாங்கிவிட்டால்? என்கிற சிறு புத்தி அவனுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. நம்மையே அறியாமல் இதுபோல் நண்பர்களிடம் இருந்துதான் நமக்கும் இன்றுள்ள நாலு நற்குணங்கள் சிலவும் வந்துவிடுகின்றன.
*********************************
கொசுறு 1 (giriblog இல்லை இது. :) )
சரி, தங்கம், ப்ளாட்டினம் எல்லாம் விலைஉயர்ந்த உலோகங்களாக இருக்கின்றன. விலை உயர்வுக்குக் காரணம் எப்போவுமே மங்காமல், மாறாமல் இருக்கின்றன. அதனால் அவைகளுக்கு மதிப்பு அதிகம். ஆனால் இரும்பு, அலுமினம் போன்றவை அப்படியல்ல.
இதை வேற மாதிரி யோசிப்போம்.
ஆக்ஸிடேஷன் என்பது ஒரு இயற்கையாக நடக்கும் ரியாக்சன். அதாவது இரும்பு தாதுக்களாக இருக்கும்போது ஆக்ஸைட்ஸ் ஆகக் கிடைக்கும். மனிதன் அதிலுள்ள ஆக்ஸினை கழட்டிவிட்டு, அதை இரும்பாக ஆக்குவான். அதை பலவகையிலும் பயன்படுத்துவான். அதிலிருந்து ஸ்டீல் உருவாக்குவான். பல உலோகக் கலவைகள் தயாரிப்பான். அதை வைத்து தனக்குத் தேவையான திடமான பொருள்களை தயாரிப்பான். ஆனால் வருடங்கள் கடக்கக் கடக்க இரும்பு ஆக்ஸிஜனுடன் உறவாடி மறுபடியும் இரும்பு ஆக்ஸைடாக, ரஸ்ட் ஆக ஆரம்பித்துவிடும். அதாவது திரும்ப தாதுக்களாகவே மாற ஆரம்பிக்கும்.
ஆனால் தங்கம் ப்ளாட்டினம் போன்றவை அவ்வளவு எளிதாக ஆக்ஸினோடு உறவாடி ஆக்ஸைட்களாக மாறுவதில்லை. அதனால் அவைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலே பளபளப்பாகவே இருக்கும் என்றும் விளக்கலாம்.
கொஞ்சம் கெமிஸ்ட்ரி கத்துக்கிட்டீங்களா?
தங்கத்தின் அணு எண் என்ன?
அதனோட எலக்ட்ரான் கான்ஃபிகுரேஷன் தெரியுமா?
+2 வில் நீங்க அறிவியல் படிக்கவில்லையா?
படிச்சேன்.. ஆனால் ..
எல்லாம் மறந்துடுச்சா?
இல்லை உங்க வாத்தியார் புரிகிறார்போல் சொல்லிக் கொடுக்கவில்லையா?
சரி, விடுங்க! நான் எப்போதுமே என் கெமிஸ்ட்ரி வாத்தியார்களைத்தான் குறை சொல்லுவேன்!
-----------------
கொசுறு 2:
ஸ்டாக் மார்க்கட் பத்தி எழுதுவோமா?
இது காசு சம்பாரிக்கவோ, உங்களை டெம்ப்ட் பண்ணி, புதை குழியில் தள்ளவோ எழுதவில்லை. சும்மாதான். நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, நான் சொன்ன ஸ்டாகில் காசை நீங்க விட்டுவிட்டால் நான் பொறுப்பல்ல.
* ஹாண்டா (HMC) , டொயோட்டா (TM) எல்லாம் கடந்த மூன்று மாதங்களாக அதில் இன்வெஸ்ட் பண்ணியவர்களை சந்தோஷப்படுத்துகிறது.
* ட்விட்டர் (TWTR) மற்றும் ஃபேஸ் புக் (FB) ஸ்டாக் களும் தான். கடந்த 3-6 மாதங்களில்.
* ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பில் சரியான நேரத்தில் இறங்காத்தால் படுத்து இருந்த சோனி (SNE), கடந்த இரண்டு மாதங்களில் 15% மேலே போய் உள்ளது.
* கடந்த வார இறுதியில் மைக்ரோ சாஃப்ட் 10% அதிகமாகி உள்ளது. இது தொடர்ந்து மேலே போகுமா? இல்லை கீழே வருமா?னு சொல்ல எனக்கு ஜோஸியம் தெரியாது.
* kroger திடீர்னு மேலே போயி (30%?) ஒரு மாதிரி நிதானிச்சு நிக்கிது.
Are you a gambler? I mean do you invest in stocks?
A says: Stock market? What's that?
You are lucky!
B says: I dont have money.
You are lucky too.
C says: I did own all those stocks and made money!
You are a winner today. May be not tomorrow! Keep gambling!
D says: All my stocks went down! I did not have FB, HMC, TWTR, TM, KR, MSFT stocks.
I am sure you are going to wait until your stock goes up! Keep gambling. Hold them till it goes up or down!
*************************