Sunday, May 31, 2015

வெட்டிப்பேச்சு பேசும் வேதாந்தி (மீள் பதிவு)

ஒரு சிலர் என்னதான் யோக்கியன், அறிவாளி வேடம் போட்டாலும், இன்னும் ஒரு சிலர் இந்த வேடதாரிகளின் உண்மையான மனநிலை (மர மண்டை நிலை)யை எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். எப்படி? நியாயம் பேசுறேன்னு சொல்லி பேசுவான். கவனிச்சுப்பார்த்தால் அவன் பார்ப்பீனிய சிந்தனைகள் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்! சரி, இந்த மீள்பதிவை வாசிங்க!
-------------------------

இந்த வெளக்கெண்ணை வேதாந்தி ஒரு  #1 ஃப்ராடு, அயோக்கியன் னு சொன்னால் நம்புவீங்களா?  மாட்டீங்களா?!! கடவுளுக்கு ஜால்ரா அடிக்கிறவன் எல்லாம் ரொம்ப நல்லவன், யோக்கியன், நியாயஸ்தன் போலதான் கதையை ஆரம்பிப்பான்.

You have to be careful and you need to read between lines when you read their fucking story!

Let us see his story..
***எனது சிறுவயதில் கடவுள் மறுப்புக் கொள்கை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததென்னவோ உண்மைதான்.***
சிறு வயதிலேயே இவரு ஆத்தாவும் அப்பரும் இவருக்கு கடவுள் இல்லைனு சொல்லிச் சொல்லி கடவுள் மறுப்புக் கொள்கை   ஊட்டி ஊட்டி வளத்தாங்களாம்!

அதனால இந்த வெளக்கெண்ணைக்கு கடவுள் மறுப்புக் கொள்கை பசுமரத்தாணிபோல..

எப்படி? எப்படி?

பசுமரத்தாணிபோல பதிந்ததாம்!

இது இந்த வெளக்கண்ணை சொல்ற உண்மைக்கதை!!!

எத்தனை பேரு இதை நம்புறீங்க??

மனசாட்சி உள்ளவன் எல்லாம் சொல்லுங்க!!!

****வளர வளர இது சரியா எனத் தோன்றியது.***
இந்த வெளக்கெண்ணை வளர வளர இவரு மூளை வளர்ச்சி குன்ற ஆரம்பிச்சிருச்சாம். உடனே இவரு மழுங்கிய மூளையை வச்சு ரொம்பவே யோசிக்க கத்துக்கிட்டாராம்!

இதே எழவைத்தான் மணிகண்டப் பண்டாரமும் சொல்லுச்சு!
***அப்போது கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ‘சமூக நீதி காக்க கடவுள் மறுப்புக் கொள்கை அவசியமாகிறது’ என்றனர். ***
யாரு இவன்கிட்டப் போயிச் சொன்னதாம்?? சமூக நீதி காக்கத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையாம்!! கடவுள் மறுப்புக் கொள்கை , கடவுள் இல்லை என்பதால் இல்லையாம்? பண்டாரங்கள் பகுத்தறிய ஆரம்பிச்சாலே இதுமாரி ஒளற ஆரம்பிச்சிடுறானுக!! 

***‘சாமியை அடிச்சா சாமியார் சரியாயிருவான்’ என்றனர். எனக்கு குழப்பமாயிருந்தது. எதிர் வீட்டுக்காரனை சரி செய்ய பக்கத்து வீட்டுக் காரனை அடிப்பது சரியாகுமா?***

 முண்டம்!! சாமி என்பது கல், உயிரற்ற ஜடம்!  அதோட தலையை பிளந்தாலும் ரத்தம் வராது. சாமிக்கு ஆத்தா அப்பன் கெடையாது.

சாமினு நீ கும்பிடுற ஜடத்தை அடிப்பதுக்கும், உயிருள்ள உணர்ச்சியுள்ள தாய் தந்தையுள்ள மனுஷன் ஒருத்தனை காரணம் இல்லாமல் அடிப்பதுக்கும் வித்தியாசம் இல்லையாடா முண்டம்?
***இவர்கள் ஏன் சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் தயக்கமில்லாமல் குழப்பமில்லாமல் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.***

உனக்கு மூளையே மழுங்கிடுச்சு. மேலும்  நீ பேசுறதெல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய்! பொய்யன்  உனக்கு என்ன எழுந்தால் எவனுக்கென்ன?
***ஆராய்ந்து பார்த்ததில்  அவர்கள் மூட வழக்கங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உண்மையை மறுப்பதைப் போன்று தோன்றியது. சமூக அநீதிகளையும் மூட வழக்கங்களையும் மறுப்பதைச் சரியென்று சொன்னாலும் கடவுளையே மறுப்பது சரியாகுமா?***

நீ ஆராய்ந்தயா?

நீ?

நெஜம்மாவே ஆராய்ந்த??

காமெடி பண்ணாதீங்கப்பா!

ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியம் உண்மை பேசுபவன்! நீ ஒரு பொய்யன்! உன் வெளக்கெண்ணை ஆராய்ச்சியே பொய்யை அடிப்படையா வைச்சது. நீ  ஆராய்ந்து ஆராய்ந்து ஒரே புடுங்காப் புடுங்கிட்டாலும்!

எங்கேயிருந்துடா வர்ரீங்க உன்னைமாரி வெளக்கெண்ணை வேதாந்திகள்??

*******

இவன் தொடரும் கதை....

***** 1. மேலே சொன்னபடி மனிதன் ஒரு படைப்பாளியாக இருந்தாலும் மனிதனின் உருவாக்கலுக்கும் கடவுளின் படைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.***
 ****2. மனிதனின் உருவாக்கல் எப்போதும் ஒரு விளைவை – இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரான விளைவை -உண்டாக்கும் ஆனால் ஆண்டவனின் படைப்பு எந்த வகையிலும் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சுய சார்பு சார்ந்த மேலாண்மைக்கு எதிராக இருக்காது.****

1. திடீர்னு கடவுள் படச்சாரு, உருவாகினாருனு சொல்ற? கடவுள் என்னத்தை உருவாக்கினாருனு சொல்ற இப்போ? அதைச் சொல்லு!!!

திடீர்னு கடவுள் என்னத்தையோ உருவாக்கினாருனு கதை விடுற??

2. அதென்ன?  என்ன? மனிதர்கள் ஆக்ஸிஜனை (O2, O=O) எடுத்துக்கிட்டு, கார்பன் டை ஆக்ஸைடை (CO2, O=C=O) வெளியிடுறாங்களாக்கும்? தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை (O=C=O) எடுத்து, அதிலுள்ள "கார்பனை" (C) பிரிச்சு எடுத்துக்கிட்டு ஆக்ஸிஜனை (O=O)  வெளியிடுதுகளாக்கும்? சரி. அப்புறம் என்ன சொல்ற?  கடவுள் ஆக்ஸிஜனையும், கார்பண் டை ஆக்ஸைடையும் வேற வேற ப்ராப்பர்டீஸுடன் எப்படி உருவாக்கினாருனா?

அதெப்படி? அதாவது ஒண்ணுமே இல்லாததை "ஒண்ணை" வைத்து எல்லாத் தனிமங்களையும் கடவுள் உருவாக்கினார்னு எவன் சொன்னான் உனக்கு?

முண்டம்!!! நீ மேலே சொல்றது.. கடவுள் இதை உருவாக்கினாரு அதை உருவாக்கினாருனு கதை சொல்றது..உன்னுடைய- மூளை மழுங்கிய நிலையில் உள்ள ஒருவனுடைய-  தியரி!!!

புரியுதா?

அதான் கடவுள் "ஒண்ணுமே இல்லாததை" வைத்து எல்லாத்தனிமங்களையும் உருவாக்கி கிழிச்சாருனு சொல்ற இல்ல அது! That's your theory! புரியுதா??

 மொதல்ல நீ யார்னு  உன்னை உணர்ந்து கொள்!

நீ பிதற்றுவதெல்லாம் (கடவுள் இதை செஞ்சாரு அதை செஞ்சாருனு) மூளை மழுங்கிய நிலையில் உள்ள வேதாந்தி என்னும் வெளக்கெண்ணை (நீதான்!) ஒருவனுடைய  உளறல்!!

புரியுதா??

உன் மண்டைக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?


பின் குறிப்பு:

நீ என்னுடைய பின்னூட்டத்தை கவனமா வெளிவிட மாட்டனு எனக்குத் தெரியும்!! அதனால என்ன? இப்போப் பாரு!! நான் இட்ட வெளிவராத பின்னூட்டம் ஒரு பதிவா வந்து நிக்கிது!

உன் பகவான் தான் என்னையும் அனுப்பி வச்சாரு! :))

உன் பகவாந்தான் என்னை அனுப்பி இந்த வேதாந்தினு ஒரு பொய்யன் சும்மா கதை விடுறான் அவனை என்னனு கேளு னு அனுப்பி வச்சாருனு சொல்லி இன்னொரு கதை எழுது!

Friday, May 22, 2015

ஐ டி தம்பதி தற்கொலை! வினவு சகா கண்ணீர்!

எவன் செத்தாலும் வந்து "கண்ணீர் விட்டுக் கதறி அழ"னு ஒரு சில பேரு இருப்பானுக. இவனுகளுக்கு அழுவது ஒரு தொழில். பதிவுலகில் அந்தத் தொழில் நல்லாப் பண்ணுறவனுக யாருனு கேட்டால்.. இந்த வினவுனு ஒரு தளம் நடத்துறவனுக!

ராதா கிருஷ்ணன், ஜாக்குலின் தம்பதியினர் ரெண்டு பேரும் ஐ டி கம்பெனில வேலை பார்த்தாங்களாம்! நெறைய சம்பாரிச்சாங்களாம். திடீர்னு ரெண்டு பேருக்கும் வேலை போயிடுச்சாம். உடனே  இந்த ஐ டி கம்பெனி வேலையில்லாமல் இவர்கள் மனம் உடைந்து, சுக்கு நூறாகி  இந்த உலகில் வாழ வழிதெரியாமல் புத்தி பேதலிச்சுப் போயி தற்கொலை பண்ணிச் செத்துட்டாங்களாம். அதுவும் ஆறு மாதக் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, ரெண்டு பேரும் "பொறுப்பாக"ப் போய் சேர்ந்துட்டாங்களாம்!

வினவு தளத்தில் வந்த கண்ணீர் கதை இது!

ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் தம்பதியினர் தங்களது 6 மாதக் குழந்தையுடன் சென்னை தில்லைகங்கா நகரில் வசித்து வந்தனர். மே 20, 2015 அன்று காலை ராதாகிருஷ்ணன் பழவந்தாங்கல் அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் போலீசால் மீட்கப்பட்டது. முன்னதாக, ஜாக்குலின் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டு இறந்திருக்கிறார். அவர்களது ஆறு மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு இந்த இளம் தம்பதியினர் இந்த கொடூரமான முடிவை எடுத்திருக்கின்றனர்.
ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் இருவரும் ஒரே ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்திருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் பணி புரிந்த நிறுவனத்தினால் வெளிநாட்டில் வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறார். கடந்த ஓராண்டாக ஐ.டி துறையில் அதிகரித்து வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, அவர் வெளிநாட்டிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டு, எந்த வேலையும் கொடுக்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஜாக்குலினும் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது குடும்பத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தத் துயர சம்பவம் ஐ.டி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மார்ச் மாதம் இதே போன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 2 ஐ.டி துறை இளைஞர்கள் அப்ரைசல் மன அழுத்தம் தாங்க முடியாமல் எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவற்றைப் போன்ற பல தற்கொலைகள் செய்தியாக வெளிவராமல் மூடி மறைக்கப்படுகின்றன.
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
டி.சி.எஸ், சின்டெல் போன்ற ஐ.டி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவதையும், அதன் விளைவாக தற்கொலைகள் அதிகரிப்பதையும் அறிந்துள்ள தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
டி.சி.எஸ். சில் 25 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது.
.
ஐ டி வேலை பண்ணுறவங்களுக்கு இன்னுமா புரியவில்லை?  வேலைனு ஒண்ணு கெடச்சதுனா அது போகவும்தான் செய்யும்! எப்ப வேணா போகலாம்! இதெல்லாம் சாதாரணமாக மேலை நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கு. அமெரிக்கர்களுக்கும் இதே நிலைதான். ஏன் அமெரிக்கா எல்லாம் போக வேணாம். இங்கேயே கொடிகட்டி பறந்த நடிகர், நடிகையர். பாடகர்  இப்போ என்ன பண்ணுறாங்கனு பாருங்க! மேலை நாடுகளில் அவன் அவன் வயதான காலத்தில் படிச்சதுக்கும், வேலை அனுபவத்துக்கும் சம்மந்தமே இல்லாத வேலை எடுத்துக் கொண்டுதான் பொழைப்பை ஓட்டுறானுக. ஏனென்றால் டெய்லி சாப்பிடப் பணம் வேணும் இல்லையா? ஒரு சிலர் பேங்க்ரப்ஸி ஃபைல் பண்ணுகிறார்கள்.  மேலை நாடுகள் வாழ்க்கைத் தரத்தில் வாழும் ஐ டி கம்யுனிட்டிலயும் இதுபோல் ஒரு சூழல் வரத்தான் செய்யும். ஐ டி வேலை போனா, அந்த பொருளாதார மாற்றத்துக்கு ஏற்ப தன்னை, தன் வாழ்க்கையை மாற்றிக்க முடியாமல் வாழமுடியாமல் தற்கொலை செய்து சாகணுமா என்ன? அதுவும் ஒரு பச்சைக்குழந்தையைப் பெத்து அதை உயிரோட விட்டுவிட்டு இவர்கள் இருவரும் பரலோகத்தில் போயி ஐ டி வேலை பார்க்க போயிட்டாங்களாம்!

சரி, ஐ டி வேலை போனா என்ன இப்போ? கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு? கொஞ்ச நாள் சரவணபவன்ல போயி சர்வரா வேலை செய்ய வேண்டியதுதானே? இல்லைனா ஒரு ஆட்டோ ஓட்டு! அந்தம்மா யாருக்காவது நாலு பிள்ளைங்களுக்கு ட்யூஷன் எடுக்க வேண்டியதுதானே? அதெல்லாம் வேலை இல்லையா என்ன? அதெல்லாம் செய்றவன் அதற்கேத்த சம்பளம் வாங்கி சாப்பிடலையா என்ன? அவனும் வாழவில்லையா? அவனுக்கும் சுயமரியாதை இருக்கத்தான் செய்யுது. இல்லையா? அதெல்லாம் தெரியாதா? நான் ஐ டி வேலைதான் பார்ப்பேன் எனக்கு லட்ச லட்சமா பணம் வேணும். இல்லைனா என்னால வாழ முடியாதுனா,  செத்துத் தொலை! உன் பிள்ளை அனாதையா அலையட்டும்!

மறந்துட்டேனே..இருக்கவே இருக்கானுக ஊருக்காக  ஒப்பாரி வைக்கும் வினவு சகாக்கள்.  அவனுக பொழைப்பை ஓட்ட, ஆடம்பர வாழ்க்கை இல்லாததால  நீ செத்து தொலைந்ததுக்காகவும்  அமெரிக்காவை திட்டி, அரசாஙக்த்தைத் திட்டி பதிவெழுதி எழவைக் கூட்டிவிட்டு. உன் பிள்ளையையும்  வளர்த்து ஆளாக்குவானுக!

Monday, May 11, 2015

நீதிபதி குன்ஹாவின் இன்றைய மனநிலை!!

பார்பனர்கள்போல் நான் சிந்திப்பதில்லை! எப்போதுமே என் சிந்தனைகள் ஓரளவுக்கு அர்த்தமுள்ளதாகவே இருக்கும். எனக்காக ஒரு கடவுளை உருவாக்கி என்னையே ஏமாற்றிக்கொள்பவனல்ல நான்! மனசாட்சியை ஓரமாக வைத்துவிட்டு நான் உருவாக்கிய  பகவானிடம் நான் வேண்டுவதில்லை! அதனால்தான் நான் சட்டம் படிக்கவில்லை! ஆனால் பாவம் நீதிபதி குன்ஹா. அவர் மனநிலை எப்படி இருக்கும்? சட்டம் படித்து நாசமாகப் போய்விட்டார். அவர் படித்த சட்டத்தை, நீதியை எல்லாம் நமது சமூகம் மற்றும் அரசியல் சூழல் கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது. அவருக்காக நாம் ஒப்பாரி வைக்க வேண்டிய இச்சூழலில், நாமெல்லாம் அநீதி வென்றதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். என்ன பரிதாபம்?! I really really feel sorry for Mr. Cunha today!

Saturday, May 9, 2015

ரசனை, கடந்தவார ஸ்டாக் மார்க்கட், அன்னையர் தினம்!

கீழே படத்தில் உள்ள ரெண்டு படங்களில் இவங்க ரெண்டு பேருமே செலிப்ரிட்டிகள்தான். பலரால் ரசிக்கப் படுகிறவர்கள்தான். ஆனால் எல்லாரையும் எல்லாராலும் ரசிக்க முடியாது. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறமாதிரித்தான் இருக்கு. மற்றவர்கள் ரசனை பத்தி எனக்குத் தெரியாது. என் ரசனை பத்தி, அதான் நான் ரசித்தது பத்தி  சொல்லுறேன்.

ஒருத்தரைப் பார்த்தால் பிடிக்கிது இன்னொருத்தரைப் பார்த்தால் கொலவெறி வருது.
சன் டிவி சண்டே கலாட்டா தேவதர்ஷினி! ரொம்பப்பிடிச்ச செலிப்ரிட்டி! அந்த அண்ணனை இப்போதைக்கு ஃப்ரியா விடுங்க!


விஜய் டிவில வரும் இவனைப் பார்த்தாலே எனக்கு கொலைவெறிதான் வரும்! இவன் வாயைத் திறந்தால் கேட்கவே வேணாம்.


உங்க முதல் தியரி..

அவ (தேவதர்ஷினி) ஒரு பொண்ணு,  நீ ஒரு ஆணு, அப்படி இப்படினு ஏதாவது தியரி விடாதீங்கப்பா. அதெல்லாம் ஓரளவுக்குத்தான் இன்ஃப்ளுவெண்ஸ் பண்ண முடியும். அதுவே முழுமையான காரணம் இல்லைனு நான் நம்புகிகிறேன். ஏன்னா டி வி ல செலிப்ரிட்டியா வர்ர அழகான எல்லாப் பொண்ணுங்களையும் நான் ரசிப்பதில்லை.

என்ன என்ன? தேவதர்ஷினி பொண்ணு இல்லை, ஆண்ட்டியா?? நான் இந்த விவாதத்துக்கு வரலை. :)))

உங்க அடுத்த தியரி என்ன?

 உனக்கு சன் டிவிதான் பிடிக்கும்போல.. விஜய் டி வி பிடிக்காதுபோல.. அதுவும் உண்மை இல்லை. நான் அதிகமாகப் பார்ப்பது விஜய் டி வி தான். சன் இல்லை.

என் ரசனை அப்படி, அவ்வளவுதான்.  This guy annoys me but Devadharshini can not annoy me even if she tries hard.

*******************

ஸ்டாக் மார்க்கட்:

போன வாரம் ட்விட்டர் (TWTR)  மேலே இருந்து ஒரு 22-26 % கீழே போயி பாதாளத்தில் விழுந்துவிட்டது. அதைத் தொடர்ந்து LNKD மற்றும் yelp போன்ற சமூக வலைதள ஸ்டாக் மார்க்கட்  பாதாளத்தில் விழுந்துவிட்டது. முகநூல் அந்தளவுக்கு பாதிக்கப் படவில்லை.

இந்த ஷேர்ஸ் வாங்கி வைத்திருந்தவர்கள் நிலைமை கஷ்டம்தான். YELP மட்டும் மேலே வந்துவிட்டது. ட்விட்டர், லின்க்ட் இரண்டும் இன்னும் பாதாளத்தில்தான் இருக்கு.

*************************

இன்று அன்னையர் தினம்:

மேலே உள்ள படம் நான் வரையவில்லை! திருடியது





Saturday, May 2, 2015

நான் உத்தம வில்லன் பார்த்த கதை!

எனக்கு உத்தமவில்லன் பட சம்மந்தமான ஸ்டில்களைப் பார்க்கும்போதே ஒரு மாதிரியான உணர்வு. எப்படிச் சொல்றது? கொஞ்சம் பீதி, கொஞ்சம் ஒரு மாதிரியான, எப்படினு தெளிவாகச் சொல்ல முடியாத உணர்வு.  நிச்சயம் அது ஒரு நல்லுணர்வு இல்லைனு மட்டும் தெரியும். மற்றபடி அதை விவரமாகச் சொல்லத் தெரியவில்லை.

 இல்ல, நான் கொஞ்சம் பயந்த சுபாவம் வேறயா? அதனாலேயா என்னனு தெரியலை, கீழே உள்ளதுபோல் வந்த ஸ்டிலகளைப் பார்த்தால் கொஞ்சம் இல்ல ரொம்பவே பயம்.


உங்களுக்கு பயமா இல்லையா?



உங்களுக்கு ஒரு மாதிரியான உணர்வு ஏற்படலையா?

சரி, விடுங்க, என் பிரச்சினை எனக்கு.

ஆனால், கமலஹாசன் என்கிற ஒரு உன்னதக் கலைஞன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்  என்று  சொல்வதே  எனக்கெல்லாம் பெருமை சேர்க்கும்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை! அப்படிப்பட்ட மாபெரும் ஒரு கலைஞனை நாம் பெரிதாக நினைக்கவில்லை என்றால், அவனுடைய தன்னலமில்லா ஆக்கங்களை மதித்து,  பாராட்டி, மெச்சவில்லை என்றால்..பாமரன் என் நிலைமை  என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க. கலாரசனையே இல்லாத ஒரு ஜடம் இந்த வருண்ணு நம்ம விமர்சனம் எழுதுவதில் பிரபலங்கள் கேபுளு, அப்புறம் பிச்சைப்பாத்திரம் சுரேஷு, அப்புறம் பெயரைச் சொல்ல முடியாத பல கலாரசிகர்கள் எல்லாம் சொல்லிடுவாங்க. உலகம் மேதைகள் சொல்வதை நம்புமா இல்லைனா பாமரன் சொல்வதை நம்புமா? அதனால சரி, எப்படியாவது இந்த உன்னதக் கலைஞனுடைய தன்னலமில்லாத உழைப்பை, தமிழர்க்காகவும், கலைக்காகவும் செய்யும் சேவையை நாம்  "அக்னாட்ஜ்" செய்தே ஆகணும்னு, உத்தம வில்லன் படம் பார்க்க டிக்கட்டை வாங்கி விட்டேன். வெறும் பதிணைந்தே டாலர்கள் தான். ஆண்லைன்லயே வாங்கியாச்சு.

அமெரிக்காவில் படம் ரிலீஸ் ஆவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. சரி நம்ம உன்னதக் கலைஞனின் அற்புதப் படைப்பைப் பார்த்துப் பரவசம் அடைவோம்னு தியேட்டர்ப் பக்கம் போனால் அங்கே இருக்க மக்கள் கூட்டத்தில் நம்மள மாதிரி சல்லவாரிப்பயளுக எவனும் இல்லை. கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு  நம்மைவிட பல மடங்கு நாகரீகத்திலும், அறிவிலும், அழகிலும் உயர்ந்தவர்களாக இருப்பவர்கள்போல எனக்குத் தோன்றினார்கள்.  உள்ளே சினிமா ஹாலில் நுழைவதற்காக லாபியில் நடக்கும்போது  ஒரே படபடப்பு. அந்த பீதி தரும் ஸ்டில் கள் என் கண் முன்னால் வந்து நின்னது. எனக்கு மறுபடியும் பயம் தொத்திக் கொண்டது. உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு.

நான்  யோசிச்சு யோசிச்சு ஒரு வழியா ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிட்டேன்.  எப்படியோ  இந்த மாபெரும் கலைஞனை நாம் பாராட்டும் வகையில் நம் பங்குக்கு ஒரு டிக்கட் வாங்கியாச்சு. அந்தக் கலைஞனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நம்ம வைக்க வேண்டிய தட்சணையை  வச்சாச்சு. இனிமேல் படத்தைப் போயிப் பார்க்கணும் என்பது அவசியமா?? படம் பார்த்துட்டு.. சப்போஸ் அந்த படைப்பு நமக்குப் பிடிக்கலைனா? வாயைத் திறந்து அந்த உண்மையை யாரிடமும் சொல்ல முடியுமா? நிச்சயம் வாயைத் திறக்க முடியாது. ஆக உண்மையான விமர்சனம் என்று  நம்ம தளத்தில் எழுதவும் முடியாது. அப்படி எழுதினால் விளைவுகள் பயங்கரமா இருக்கும். நாதாரிப்பய! இவனுக்கு கமல்மேல எப்போவுமே காண்டு, னு சொல்லிடுவாளே!. கொஞ்சம் யோசிங்க! நம்ம கேபுளு , பிச்சைப் பாத்திரம் போன்ற சினிமாவைக் கறைத்துக் குடிச்ச மேதைகள் சொல்வதை ஊர் உலகம் நம்புமா? இல்லை இந்தக் கேணப்பய வருண் உளறுவதை உலகம் நம்புமா?

ஆக, படத்தைப் பார்த்து ஒரு வேளை படம் பிடிக்கலைனா.. வெளியில் கலைஞானியின் படைப்பு எனக்குப் பிடிக்கலைனு நிச்சயம் சொல்ல முடியாது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. அப்போ ஒண்ணு செய்வோமே? படத்தைப் பார்க்காமலே விட்டுடுவோமே? அப்படிச் செய்தால் இப்போ நமக்கும் பெரிய நஷ்டமில்லை! அந்த மாபெரும் கலைஞனுக்கும் நஷ்டமில்லை! காசு கொடுத்து டிக்கட்தான் வாங்கியாச்சு இல்லை? அதுதானே தமிழுக்கும், கலைக்கும், ஒரு உன்னதக் கலைஞனுக்கும் நான் செய்ய வேண்டிய நற்பணி? நம்முடைய கடமை முடிந்தது அல்லவா?  அப்படினு ஒருநல்ல முடிவுக்கு வந்து டிக்கட்டை கிழிச்சுக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து நம்ம மார்ட்டின் ஸ்கார்சேசி யுடைய the departed dvd   யை இன்னொரு முறை பார்த்தேன்.

 

இதுதான் நான் உத்தம வில்லன் பார்த்த கதை.