Monday, August 3, 2015

அப்துல் கலாம் பற்றி இரங்கல் கவிதையும் ட்வீட்டும்!

நடிகர் ரஜனிகாந்த், கலாம் மறைவு பற்றி தன்னுடைய ட்விட்டரில் ஆங்கிலத்தில் ஒரு நாலு வாக்கியங்கள் எழுதி இருக்கிறார். கலாமை, காந்தி, காமராஜர், பாரதியார் போன்றவர்களுடன் ஒப்பிட்டு உயர்த்திப் பேசியுள்ளார்.
From humble beginnings Abdul Kalam ji rose to great heights but continued to live humble and simple. He lived to inspire millions of people. He endeared himself to student community motivating them at all levels. God has embraced him silently with love. May his soul rest in peace. I did not have the privilege of seeing our mahatma Gandhiji, Kamaraj or Barathiyaar but was blessed enough to live admist mahatma Kalamji.  -ரஜினிகாந்த்


 இந்த ட்வீட்டுக்கு அப்புறம் ரஜனிகாந்த்க்கு ஒரு 50, 000 followers அதிகமாகி இருக்காங்க! இந்த ட்வீட்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . "இவன் மற்றவனைப் புகழ்ந்தே இவனும் மேலே போயிடுறான்" னு ஒரு சில வயித்தெரிச்சல் கோஷ்டிகள், இதற்கும் நொள்ளை சொல்லாமல் இல்லை!


*****************************X***************************X***********************

நடிகர் மற்றும் கவிஞர் கமலஹாசன், கலாம் மறைவைப் பற்றி ஒரு இரங்கல் கவிதை எழுதி வெளியிட்டு உள்ளார்..


கலாம்களும் கமால்களும்
கமல்களும்
இலாதுபோகும்
நாள்வரும்
இருந்தபோது
செய்தவை
அனைத்துமே
கணிப்பது
ஹெவன்என்று
ஒருவனும்
பரம் என்று ஒருவனும்
ஜன்னத்தென்று ஒருவனும்
மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன்
நடந்த பாதையே
புகழ் பெறும்
நிரந்தரம் தேடுகின்ற
செருக்கணிந்த
மானுடர்
தொண்டருக்கடிப்பொடி
அம்மெய்யுணர்ந்த நாளிது
புகழைத் தலையிலேந்திடாது
பாதரட்சையாக்கிய
கலாம் சாஹெப்
என்பவர்க்கு
சலாம் கூறும் நாளிது
 வழக்கம்போல எனக்கு கவிமனம் இல்லாததால், இந்தக் கவிதையும் சரியாகப் புரியவில்லை! 

 ஆக வருண்! ஆங்கிலம் புரியுது, தமிழ் புரியலை!! தமிழின துரோகி!!னு நீங்கள் எல்லாம் என்னைத் திட்டுறது கேக்குது. இருந்தாலும் நான் பொய் சொல்லப் போவதில்லை! :)

இக்விதையை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் இந்தியாவில் வாழும் தமிழறியாத மக்களையும் கமலின் இவ்விரங்கல் கவிதை சென்றடையும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

15 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

Is it? :-)

Avargal Unmaigal said...

பாஸ் நீங்கள் கவிதைக்கு இலக்கணம் முதலில் கற்றுக் கொள்ளனும். அதை நான் சொல்லிதருகிறேன்

புரிந்தால் அது
கவிதை இல்லை
புரியாததுதான்
கவிதை

இது புரிஞ்சால் உங்களுக்கு தமிழ்கவிதைகள் நன்கு புரியும். இப்ப சொல்லுங்க

கொ. வை.அரங்கநாதன் said...

கமலஹாசன் கவிதைக்கு பொழிப்புரை

கமல்களும் இல்லாது போகின்ற நாளும் வரும். இருந்த போது செய்த அனைத்தையும் கணிப்பது சொர்க்கம் என்று ஒருவனும், பரம் என்று ஒருவனும் ஜன்னத் என்று ஒருவனும் மாறி மாறி சொன்னாலும், இவ்வுலகில் அவன் வாழ்ந்த வாழ்வே அவனுக்கு புகழ் தரும் என்பதை, நிரந்தரமாக வாழப்பபோவதைப்போல் செருக்குடன் அலையும் மனிதர்களின் தொண்டர்கள் உண்மையை அறியும் நாள்தான் இது. புகழைத் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் காலணியாக அணிந்த கலாம் சாஹெப் என்பவருக்கு வணக்கம் சொல்லும் நாள் இது.





வருண் said...

***கமலஹாசன் கவிதைக்கு பொழிப்புரை

கமல்களும் இல்லாது போகின்ற நாளும் வரும். இருந்த போது செய்த அனைத்தையும் கணிப்பது சொர்க்கம் என்று ஒருவனும், பரம் என்று ஒருவனும் ஜன்னத் என்று ஒருவனும் மாறி மாறி சொன்னாலும், இவ்வுலகில் அவன் வாழ்ந்த வாழ்வே அவனுக்கு புகழ் தரும் என்பதை, நிரந்தரமாக வாழப்பபோவதைப்போல் செருக்குடன் அலையும் மனிதர்களின் தொண்டர்கள் உண்மையை அறியும் நாள்தான் இது. புகழைத் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் காலணியாக அணிந்த கலாம் சாஹெப் என்பவருக்கு வணக்கம் சொல்லும் நாள் இது.**

நன்றி!

ஹெவன் என்கிற ஆங்கில வார்த்தை போட்டு நான் தமிழ்க் கவிதை எழுதினால் நீங்க எல்லாம் என்னை செருப்பால அடிப்பீங்க? கமல் எழுதினால் மட்டும் ஏன் மரத்தமிழனுக்கு இனிக்கிதுனு சொல்லீட்டுப் போங்க, ஐயா!

Mahesh said...

 வழக்கம்போல எனக்கு கவிமனம் இல்லாததால், இந்தக் கவிதையும் சரியாகப் புரியவில்லை!///

ஆரம்பத்தில் இருந்து எனக்கும் அதே ப்ராப்லம் சார்!
கவிதைக்கும் எனக்கும் ரொம்ப கேப்:-)

Kasthuri Rengan said...

நம்பவே முடியலை

யாரையும் கடுமையாக சாடாத ஒரு பதிவு வருனிடம் இருந்து

இரண்டு பெரும் நட்சத்திரங்களைளின் கருத்து அருமை...

ரஜனியின் கருது மனசைத் தொட்டது...
உண்மைதானே வருண்..

கமல் கருது புரிய பழனியப்பா பிரதர்ஸ் ஒரு நோட்ஸ் போட்டாத்தான் உண்டு என்னமாரி ஞானசூனியங்களுக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தமிழ்க் கவிதையை எதிர்ப்பார்க்கிறேன்...!

கொ. வை.அரங்கநாதன் said...


<> ஐயா!
கவிதைக்கு பொழிப்புரை எழுதியதும் நான் ஏதோ கமலஹாசனின் கவிதை ரசிகன் என்று நினைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்காவது அவருடைய கவிதைதான் புரியவில்லை. எனக்கு அவர் பேசுவதே பல சமயங்களில் புரிவதில்லை.பாபனாசம் பட சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சன் டி.வி தொகுப்பாளினி ஒருவர் கமல் கவிதை ஒன்றை சொல்ல சொல்ல அப்படியே மெய் சிலிர்த்து கண்களில் கண்ணீர் வர அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.இவர்களுக்கெல்லாம் புரிவது நமக்கேன் புரியவில்லை?அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் பொழிப்புரை எழுதிப் பார்த்தேன்.இந்த பொழிப்புரை எவ்வளவு தூரம் சரியானது என்பது கூட எனக்குத் தெரியாது. இதே கவிதையை நான் எழுதியிருந்தால் தமிழ் இலக்கிய உலகம் தூர எறிந்திருக்கும். கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல இங்கு வென்றவன் சொல்வதெல்லாம் வேதமே!

Iniya said...

\\\\புரிந்தால் அது
கவிதை இல்லை
புரியாததுதான்
கவிதை///
அது தான் உண்மை. அது தான் மதுரைத் தமிழரே சொல்லி விட்டாரே அப்புறம் என்ன. இனி கவிதைகைகளை எதிர்பார்க்கலாம் அல்லவா? நன்றி !

”தளிர் சுரேஷ்” said...

சிலர் மேதாவித்தனம் இப்படித்தான் வெளிப்படும்! கமல் அதற்கு விதிவிலக்கல்ல!

Amudhavan said...

கமலுடன் நெருங்கிய நட்பில் இருந்த சமயங்களில் அவரைச் சந்திக்கப்போகும்பொழுது பெட்டியைத் திறந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து அவ்வப்போது தமக்குத் தோன்றும்போதெல்லாம் எழுதி வைத்த கவிதைகளை எடுத்து வாசித்துக் காட்டுவார். நிச்சயம் அவையெல்லாம் நன்றாகவே இருந்தன. "இவையெல்லாவற்றையும் புத்தகமாகக் கொண்டுவந்துவிடுங்க" என்று அப்போது சொல்வேன். அவருக்கும் அப்போது அந்த எண்ணம் இருந்தது.(புத்தகம் வெளியானதா என்பது தெரியவில்லை) சில கவிதைகளை எழுதி அதனைத் தபாலிலும் அனுப்பி வைப்பார். அவையும் நன்றாகவே இருந்தன.
இப்போது அவர் எழுதும் 'கவிதைகளைப்' பார்த்தால் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அதுவும் கலாம் பற்றி எழுதியிருந்தது சுத்தம். அவர் ரொம்பவும் மேலே போய்விட்டாரா அல்லது நாம்தான் ரொம்பவும் கீழே இறங்கிவிட்டோமா என்பதும் தெரியவில்லை.

G.M Balasubramaniam said...

இதற்கே இப்படிச் சொல்கிறீர்களே. புரிந்தால் அது கவிதை இல்லை,புரியாததுதான் கவிதையா.?தற்சமயம் வலைப் பூக்களில் நிறையவே கவிதைகள் வருகின்றனவே.

மகிழ்நிறை said...

நான் கமலின் விசிறி இல்லை வருண். ஆனால் எனக்கு புரிந்த அளவில் சொல்கிறேன். இங்கே ஜனத் என்றொரு உருது (!?) சொல்லும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது இசுலாமியர்களை குறிக்கிறது. பரம் இந்துக்கள் பயன்படுத்தும் வார்த்தை, எனவே சொர்க்கம் என்றால் அதற்கு தனிப்பொருள் வராது. ஹெவன் என குறிப்பிடும் போது அது கிறிஸ்தவர்களுக்கான வார்த்தை என்ற முறையில் கமல் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் என தோன்றுகிறது. then என் முதல் கம்மென்ட்டில் இருந்த புன்னகைக்கு பொருள் இதுதான் http://www.tronbrook.com/2015/08/kamal-haasans-elegy-for-dr-apj-abdul.html. படிச்சுட்டு திட்டக்கூடாது :) என்னையும் சேர்த்து:))))) ஆமா சொல்லிட்டேன்:)))

காரிகன் said...

கமலஹாசன் பேட்டியின் போது வழக்கமாக பேசும் தமிழே வழக்கொழிந்து போன எதோ ஒரு மொழியைப் பேசுவது போல பேசுவார். இதில் அவர் கவிதைகள் எழுதினால் ......சுத்தம்!

'பரிவை' சே.குமார் said...

இரண்டுமே நல்ல இரங்கல்கள்...