Thursday, August 20, 2015

திமு காரன் கழகம் வெட்டிப்பேச்சு மேலே கேஸ் போடாதா?

தி மு காரனிடம் இருந்து சொத்தை மீட்ட கதைனு ஒரு பதிவர் விஷப் பதிவெழுதிக்கொண்டு இருக்கிறார். அதாவது எவனோ ஒரு அரசியல்ப்பொறுக்கி  செய்த அடாவடித்தனத்தை அவன் தி மு காரன் என்கிற முத்திரை கொடுத்து கழகத்தை ஒட்டுமொத்தமாக  இழிவுபடுத்தும் ஒரு கதை இது.

எனக்குத் தெரிய நேத்து தி மு கவில் இருந்தவன் இன்னைக்கு அதிமுகவுக்கு மாறுவான். நாளைக்கு காங்கிரஸ் போவான். ஒருவனை இந்தக் கட்சிக்காரன் என்று முத்திரை குத்துவதைவிட அவன் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி என்கிற முத்திரையே சரி.

எம் சி ஆரே ஒரு காலத்தில் திமுக காரந்தான்.

அடிதடி தாமரைக்கனி அதிமு காரந்தான்.

இதுபோல் விஷம் கலந்து தி மு கழகத்தை இழிவுபடுத்தும் ஒரே எண்ணத்துடன் இந்தக் கதை எழுதுபவரை தி மு க கண்டுகொள்ளாமல் விடுவதும், சட்டப்படி அனுகாததும் எனக்கு  அதிசயமாக இருக்கிறது. இதுபோல் விஷம் கலந்து எழுதும் பதிவர்களை சட்டப்படி துரிதமாக சந்திக்காமல் வளரவிடுவது திமு கழகத்திற்கு நல்லதன்று!

8 comments:

Amudhavan said...

இவற்றுக்கெல்லாம் காரணம் திமுக இம்மாதிரியான ஆட்கள் மீது எந்தவித கவனமும் கொள்வதில்லை என்பதுதான். எதையும் 'கண்டுக்காமல்' விட்டால் தானே சரியாகிப் போய்விடும் என்பது அவர்கள் கணக்கு. இந்தக் காலமெல்லாம் கடந்துபோய் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்பதே திமுக தலைமைக்குப் புரியவில்லை.
அதுபோலத்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் பேசாமலேயே இருந்தார்கள். இன்றைய திமுகவின் ஒட்டுமொத்த சரிவுக்கு அவர்களின் இந்த மனப்போக்கே காரணம். பொய்யென்று தெரிந்தும், தவறென்று தெரிந்தும் இன்னமும் ஒரு லட்சத்து எழுபத்தோராயிரம் கோடி என்றே எழுதுகின்ற அயோக்கிய சிகாமணிகள் கொண்ட ஊர் இது. பார்க்கலாம், இனிமேலாவது எப்படி செயல்படுகிறார்கள் என்று............

வருண் said...



***Amudhavan said...

இவற்றுக்கெல்லாம் காரணம் திமுக இம்மாதிரியான ஆட்கள் மீது எந்தவித கவனமும் கொள்வதில்லை என்பதுதான். எதையும் 'கண்டுக்காமல்' விட்டால் தானே சரியாகிப் போய்விடும் என்பது அவர்கள் கணக்கு. இந்தக் காலமெல்லாம் கடந்துபோய் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்பதே திமுக தலைமைக்குப் புரியவில்லை.
அதுபோலத்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் பேசாமலேயே இருந்தார்கள். இன்றைய திமுகவின் ஒட்டுமொத்த சரிவுக்கு அவர்களின் இந்த மனப்போக்கே காரணம். பொய்யென்று தெரிந்தும், தவறென்று தெரிந்தும் இன்னமும் ஒரு லட்சத்து எழுபத்தோராயிரம் கோடி என்றே எழுதுகின்ற அயோக்கிய சிகாமணிகள் கொண்ட ஊர் இது. பார்க்கலாம், இனிமேலாவது எப்படி செயல்படுகிறார்கள் என்று............***

வாங்க சார்!

இந்த வேதாந்தி பேசுற அறிவியலே தரமற்றதுனு எனக்கு நல்லாத் தெரியும். "அரசியல் பேத்தல்" எப்படி இருக்கும்?

யாருகிட்ட எத்தனை பொட்டி வாங்கிட்டு இப்படி ஒப்பாரி வைக்கிறாணூகளோ தெரியலை!

தன்னை வேதாந்தினு சொல்லிக்கிட்டா என்ன? தளப்பெயரை வெட்டிப் பேச்சுனு வைத்துக் கொண்டால் என்ன? பொங்கிவரும் "திமுக துவேஷம்" இவன் பார்ப்பான்தான் னு காட்டிக் கொடுத்துடுதே!

Peppin said...

Agree with you Amuthavan! கலைஞரை/திமுக பற்றி ஏன் இவ்வளவு
வெறுப்பானச் செய்திகள் பரப்பப் படுகிறது என்று புரியவே இல்லை!

ஸ்ரீமலையப்பன் said...

அடபோங்கப்பா! யார் வந்ததாலும் ஏழைக்கு சோறு இல்லையே!!! இரண்டு கட்சிகளும் எத்தனைமுறை ஆட்சி செய்தாலும் எவனோ ஒரு பாமரன் எங்கேயோ பசியிலும் வறுமையிலும் தற்கொலை செய்துகொண்டுதானே இருக்கிறான்....

vijayan said...

நண்பர் அமுதவன் இன்னமும் அப்பாவியாகவே இருக்கிறார்.அவன் மேல கேஸ் போடபோக அவன் இன்னும் புதுசா ஏதாவது எடுத்துவிட்டால் என்ன பண்ணறது என்பதுதான் கலைஞரின் தயக்கத்திற்கு காரணம்.

Sampath said...

அமுதவன் அவர்கள் கூற்று சரியே. ஓவ்வொரு முறையும் ஒரு லட்சத்து எழுபத்தோராயிரம் கோடி என்று படிக்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். சரியான தொகையை குறிப்பிட்டு, முறையான செய்தியை தர மாட்டார்களா?

'பரிவை' சே.குமார் said...

சரியாச் சொல்லியிருக்கீங்க...
ஆனா தப்புப் பண்ணுனவங்க தயங்கத்தானே செய்வாங்க...

நம்பள்கி said...

அமுதவன் அப்பாவி அல்ல; அறிவாளி; நாலும் அறிந்தவர்.
இந்தியாவில் சூத்திரன் கேஸ் போடுவது யாரை நோக்கி என்பது முக்கியம்--மற்றொரு சூத்திரன் என்றால் ஒகே. அவாளை நோக்கி கேஸ் போடுவது வெட்டி வேலை!