"எதைப்பார்தாலும் சிரிப்பு வருகிறது" என்றுதான் மரப்பசுவில் ஜானகிராமன் ஆரம்பிப்பார்னு நினைக்கிறேன்..அம்மணி மனிதப் பைத்தியங்கள் நிரம்பிய பைத்தியக்கார உலகைப் பார்த்து சிரிப்பதுபோல் ஆரம்பித்து கதை போகும்.
எல்லோருமே பைத்தியக்காரர்கள். ஏன் இப்படி அலைகிறார்கள்? காசுக்காக அலைகிறார்கள். நாட்டுக்காக. தான் நம்பும் இல்லாத கடவுளுக்காக. தன் சாதிக்காக. தான் பேசும் மொழிக்காக. காமத்துக்காக அலைகிறார்கள். அழகான பெண்களுக்காக அலைகிறார்கள். வாழும் வரை இப்படி அலைந்து கொண்டேதான் திரிகிறார்கள்.
அப்பப்போ சுடுகாட்டு ஞானோதயம், பிரசவ வைரக்கியமும் வந்து போவதென்னவோ உண்மைதான்.
-------------------------------
உன் வாழ்க்கையின் குறிக்கோள் (purpose of your life. why do you think you have born?) என்ன? னு ஒரு பெரியவர் என்னிடம் அடிக்கடி கேட்பார்.
"அப்படினா??" என்பது என் கேள்வி.
என் "பழைய" தோழி ஒருவர் சொல்லுவார். "நீ ஒரு ட்யூப் லைட்" என்று. எனக்கு அப்போப் புரியவில்லை அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று. இப்போ யோசித்துப் பார்த்தால் உண்மை என்றுதான் தெரிகிறது. ஆமாம், அவர் என்னைவிட என்னை நன்றாகப் புரிந்து கொண்டவர்.
"அப்படினா?..நீ ஏன் பிறந்து வாழ்கிறாய்? வாழ்ந்து சாகும்போது என்ன சாதித்துவிட்டு செல்லப் போகிறாய்?" விளக்க முயல்கிறார் அவர்.
"நான் அப்படியெல்லாம் இப்பொழுது யோசிப்பதில்லை" என்பது "ட்யூப்லைட்"டின் பதில்.
"நீ அதைப் பத்தி யோசிக்கணும்! நீ பிறந்தற்கு ஏதோ காரணம் இருக்கிறது" என்பார் கனிவாக.
என்னால் நடிக்க முடியாது. என்னிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு இது.
"இல்லை, நான் ரொம்பவே யோசித்ததுண்டு, ஆனால் அதெல்லாம் வெறும் அனுமானங்களை அடிப்படையாக வைத்தவை. உண்மையை அல்ல. அதனால் எனக்கு அர்த்தமற்றதாகத் தோனுது" என்பது ட்யூப் லைட்டின் பதில்.
அவருக்கு இன்னும் திருப்தி இல்லை. என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்.
இவர் இப்போது தனியாக வாழ்கிறார்.பிறப்பில் க்ரிஷ்ட்டியன். பர்சனல் வாழ்க்கையில் பெரிய வெற்றி இல்லை.இப்போது மெடிட்டேஷனில் நாட்டம். மனநிம்மதிக்காக இதுபோல் ஏதாவதில் நேரத்தை செலவளி(ழி)க்கிறார். "பர்ப்பஸ் ஆஃப் லைஃப்"னு அவரே கற்பனை பண்ணிக்கொள்கிறார். தன் கற்பனையை உண்மை என்று நம்புகிறார். அந்த நம்பிக்கையுடன் வாழ்ந்து முடிப்பார்.
உங்களுக்கு இப்போ என்ன புரியுது?
மனிதர்கள் எல்லோருமே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோம். கடவுள் என்கிற கற்பனையில். காதல் என்கிற கற்பனையில். நாம் நல்லவன்/நல்லவள் என்கிற கற்பனையில். இவரைப் போல.
ஏன் அவரை மட்டும் விமர்சிக்கணும்? நீங்களும், நானும் இதில் விதிவிலக்கல்ல! என்பதும் கசப்பான உண்மை!
-தொடரும் (நேரம் வாய்க்கும்போதெல்லாம்)
----------------------
அறிவியல் கார்னர்:'
# 4 உனக்கு நினைவு படுத்துவது என்ன?
"கார்பனுக்கு "4" வாலென்ஸ் எலக்ட்ரான்கள்"..
You must be an organic chemist! Ha ha ha!
------------------------------------------
4 comments:
தொடக்கம் மிக நன்று. தொடருங்கள்.
ஆரம்பமே அசத்தல்! தொடருங்கள் சார்!
பைத்தியங்கள் சிந்திக்கத் தொடங்கினால் ஒரு வேளை பித்து விலகுமோ.?
அழுக்கு போக குளிக்க முடியுமா என்பதுபோல நிறைவான வாழ்க்கை வாழ முடியுமா? நம் எதிர்பார்ப்பு, விருப்பங்களைக் கொண்டு அடுத்தவர் நிறைவான வாழ்க்கை வாழ்கிறாரா இல்லையா என்று அளவிட முடியுமா? நிறைவும், குறைகளும் சேர்வதான வாழ்வில் எது அதிகம் என்று பார்க்கலாம். அதுவும் அவரவர் மனதைப் பொறுத்து!
:)))
Post a Comment