"வித்யா! என் கதைகளை புத்தகமாக வெளியிடலாம்னு இருக்கேன்? என்ன சொல்ற?"
"ஹா ஹா ஹா சும்மா இருங்க அகில்! அதுக்கெல்லாம் ஒரு இது வேணாமா?"
"இதா? எது? தகுதியா? இல்லை தரம் வேணும்னு சொல்றியா?"
"இல்லை அகில், நான் அப்படி சொல்லலை. ஒரு இதுனா..எதுக்கு இந்த விஷப் பரிட்சைனு சொல்ல வந்தேன்"
"அடிப்பாவி! அப்போ "அகில்! உங்க கதை நல்லாயிருந்துச்சு"னு சொன்னதெல்லாம் பொய்யா! பொண்ணுங்க யாருமே உண்மையே பேசா மாட்டீங்களா? அப்போ நீ சொன்னதெல்லாம் சும்மா ஒரு ஆறுதலுக்கு? என் மேல் ஒரு பரிதாபத்தில்? எனக்கு இப்போத்தான் புரியுது நான் ஒரு ட்யுப் லைட்னு"
"அகில்! நீங்க ட்யூப் லைட் தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இல்ல, உங்க கதை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் புத்தகமா வெளியிடணும்னா நெறையா எடிட் பண்ணனும், பிழை திருத்தணும். ஒரு நல்ல ஷேப் க்கு கொண்டு வரணும்?"
"நல்ல ஷேப்க்கா? எப்படி உன்னை மாதிரியா? முன்னால பின்னால எல்லாமே செக்ஸியா?"
"அகில்!!! கொஞ்ச வயசு பொண்ணுட்ட இதுமாதிரி ஃப்ளர்ட் பண்ணக்கூடாது!"
"யாராவது கிழவிட்டத்தான் ஃப்ளர்ட் பண்ணணும்னு சொல்றியா?"
"இப்போ எதுக்கு கதையிலிருந்து என் மேலே தாவுறீங்க?"
"சரி, எடிட்டிங், ப்ரூஃப் ரீடிங் எல்லாம் ஒரு மேட்டரா? நீ எதுக்கு இருக்க கிழங்கு மாதிரி? உன்னைவிட ஒரு நல்ல எடிட்டர் அல்லது ப்ரூஃப் ரீடர் யாரு கிடைப்பா? நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை! அதுவும் நீ ஒரு ஆத்துப் பொண்ணு. தமிழ் என்ன சமஸ்கிரதம், ஆங்கிலம் எல்லாவற்றையும்கூட சரி பண்ணிடுவ"
"இல்ல, அதுக்கு இல்லை..ரொம்ப காசு செலவாகும். மத்தவா காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் இல்லையா? அதான் சொல்றேன். உங்களுக்குத் தெரியுமா? நல்லா எழுதுறவங்க நெறையப் பேரு புத்தகம் வெளியிட்டு 100 பிரதிகூட விற்காமல் "டிப்ரெஸ்" ஆகி இருக்காங்க. நீங்களும் ஏன் அப்படி ஆகணும்னுதான் யோசிக்கிறேன். உங்க மேலே உள்ள பிரியத்திலேதான் சொல்றேன், அகில்"
"உன் பிரியத்துக்கு என்ன கொறைச்சல்? அப்போ இது நல்ல ஐடியா இல்லைனு சொல்ற? என் கதையை நீ மட்டும் பாராட்டினாப் போதுமா, வித்யா?"
"அதான் வலைபூக்களில் 100-200 பேர் வாசிக்கிறாங்க இல்லையா? எனக்கென்னவோ பப்ளிஷ் பண்ணுறது நல்ல ஐடியானு தோனலை. சும்மா வலைபூக்களிலே எழுதிட்டு அதோட விட்டுறலாமே. காலங்காலமாக அப்படியே அழியாமல் இருக்குமே?"
"வித்யா! ஐ ஆம் ரியல்லி டிப்ரெஸ்ஸெட் நவ். இங்கே வாவேன்"
"எதுக்கு?"
"என்ன இது? உன் அவ்ட் ஃபிட் ரொம்ப சின்னதான மாதிரி இருக்கு?"
"இல்லையே? என்ன இப்படி பார்க்குறீங்க?"
"இல்லை உன் அவ்ட் ஃபிட் எல்லாம் சின்னதாத் தெரியுது. "
"கொழுப்பா? என்ன நான் குண்டாயிட்டேன்னு சொல்றீங்களா?"
"அப்படி சொல்லலை. நீ ரொம்ப செக்ஸியா இருக்கனு சொன்னேன். டிப்ரெஷனுக்கு என்ன மருந்து தெரியுமா, வித்யா?"
"என்ன மருந்து? ச்சீ அங்கேலாம் கை வைக்காதீங்க"
"செக்ஸ்தான் மருந்தாம். சைக்காலஜிஸ்ட் சொல்றாங்க!"
"ச்சீ"
"நெஜம்மாத்தாண்டி! ஒருத்தர் செக்ஸுவல்லி ஆக்டிவா இருந்தால் அவருக்கு டிப்ரெஷன் வராதாம். கேன் யு ஹெல்ப் மி, வித்யா? என் டிப்ரெஷனைப் போக்க? சப்போஸ் என் புத்தகம் விக்கவே இல்லைனா.. "
"உங்களுக்கு எந்தவிதமான கூச்சமோ, வெக்கமோ இல்லையா அகில்?!"
"மத்தவாட்டதான் கூச்சப் படணும்! உன் ட்ட கூச்சப்பட்டா நீயும் இவன் சரியில்லைனு ஓடிப்போயிடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"
"அதுக்காக இப்படியா?"
"இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணப் போறியா? இல்லையா?"
"சரி, உங்க கதையில் உள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக், ப்ரூஃப் ரீட்டிங் எல்லாம் பண்ணித்தர்றேன். அதுக்கப்புறம் பப்ளிஷ் பண்றது உங்க இஷ்டம்!"
"சரி. ஏய் அப்புறம், கதைத் தொகுப்பை வெளியிட்டு 100 பிரதிகூட விற்கலைனா, என்னை விட்டுறாதே!"
"உங்களை விடமாட்டேன்! கவலைப் படாதீங்க!"
"ரொம்ப தேங்க்ஸ் வித்யா, என் டிப்ரெஷனைப் போக்க ஹெல்ப் பண்ணுவனு சொன்னதுக்கு"
"உங்களை என்ன பண்ணலாம்..."
***************************
Relax please