Wednesday, June 12, 2019

ராஜ ராஜ சோழன் பற்றி ரஞ்சித்!

பல விவாதங்களில் நான் சொல்லி இருக்கேன். தமிழன் என்கிற அடையாளமே சுத்தமான ஏமாற்று. ஜாதி அடிப்படையில்தான் தமிழ் கலாச்சாரம் இருக்கு. தலித் களை காலங்காலமாக அப்யூஸ் பண்ணி இருக்காங்க. இதனால் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தில் இருந்து வந்த ரஞ்சித் பொங்குகிறார். நாம் மட்டும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறோம்? நம்மை மட்டும் ஏன் இப்படி சேரிக்கு அனுப்பி இப்படி ஆக்கிவிட்டார்கள்? தமிழன் என்கிற அடையாளம் தலித் களுக்கு தேவையா? எங்கோ வடக்கே பிறந்த தமிழ் தெரியாத அம்பேத்கார்தான் என்னை இந்தளவுக்காவது மனுஷனாக மதித்துள்ளார். என்னைப் பத்தி சிந்திச்சு இருக்கிறார்.தமிழர் பெருமையெல்லாம் உயர்சாதிக்காரர் களுக்குத்தான் நமக்கில்லை! ஆக கடைசியில் இவருக்காவது புரிய ஆரம்பிச்சு இருக்கு. தமிழர்  பெருமை, தமிழ் பெருமை, நாம் தமிழர் பிர்ச்சினை எல்லாம் சேரியில் வாழும் நம் இனத்துக்கு அவசியமே இல்லைனுதலித்கள் தமிழ்/தமிழன் பெருமை பேசுமளவுக்கு அவர்களை இந்த சமுதாயம் அவர்களை வைக்கவில்லை. தமிழன் அடையாளம் எல்லாம் அவர்களுக்குத் தேவையுமில்லை. இதுபோல் ஒரு உணர்வு ரஞ்சித்க்கு வந்ததே பாராட்டத் தக்கது..

அப்புறம் என்ன சொல்றார்னா.. ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித்களை     மிகவும் மோசமாக ஆக்கியிருக்கிறார்கள், ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிறார். அவர்கள் நிலம் பறிக்கப் பட்டது என்கிறார். இதெல்லாம் எங்கே படிச்சார்னு எனக்குத் தெரியவில்லை. வரலாறே பிரச்சினையான ஒண்ணு.  சோழர்கள் பூர்வீகம் என்ன? அவர்கள் தமிழர்களா? இல்லை நமக்கு வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டை ஆண்டு தமிழரானவங்களானு தெரியவில்லை. நாயக்கர்கள் ஆந்திராவிலிருந்து வந்து தமிழ் நாட்டை ஆண்டு இருக்காங்க. திருமலை நாயக்கர். இதுபோல் வடக்கே இருந்து வந்து ராஜ்யம் அமைத்து இங்கே செட்டில் ஆனவர்களும் இருக்காங்க. நாயக்கர்கள், ரெட்டியார்கள், சக்கிலியர்கள் எல்லாம் தெலுங்குதான் பேசுறாங்க. இப்போ தமிழ் தாய்மொழியாகிவிட்டது இவர்களுக்கு. அவர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள்தானே? மேலும் மதுரையில் ஏகப்பட்ட சவுராஸ்ட்ரர்கள் வந்து செட்டில் ஆகி தமிழராகி இருக்காங்க.

சரி, ராஜராஜ சோழன் பெரிய சாதனையாளனாகவே இருக்கட்டும். அவரை தலித்கள் வணங்கனுமா? தேவை இல்லைதான். விமர்சிக்கலாமா? பாதிக்கப்பட்டவர்கள் வரும் கோபத்தில் யாரை வேணா விமர்சிக்கலாம். அந்த பேச்சுரிமை ஒரு தனி மனிதனுக்கு உண்டு. ராஜ ராஜ சோழன்  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல.

இப்போ என்னப்பா எதுகெடுத்தாலும் கேஸ் போட்டுக்கிட்டு இருக்கானுக? வக்கீல்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால்தான் வயித்துப் பொழைப்புக்காக இப்படியா?

அப்புறம் ஏதோ நிலம் நிலம்னு சொல்றார்? இவர்களிடம் இருந்து பறித்த நிலத்தைத் திரும்ப கொடுக்கணும்னு சொல்றாரா? இது மட்டும் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. சினிமாலதான் ஏதோ சொல்றார்னு நினைத்தேன், நெஜம்மாவே சொல்லுகிறார். இது எனக்குப் புரியாத அரசியல். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பறிக்கப் பட்டே இருந்தாலும், அதை எப்படி திருப்பி வாங்க முடியும்?  ராமர் கோயில் பாபர் மசூதியை இடித்து விட்டு கட்டணும். தாஜ் மஹாலை இடிக்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு எனக்கு.

பிரச்சினையைப் புரிந்து கொண்டார். ஆனால் தீர்வு என்ன? என்ன செய்யணும் இப்போனு ரஞ்சித்க்கு தெளிவான புரிதல் இருக்கமாதிரி தெரியலை.


No comments: