Sunday, February 20, 2022

செல்ஃபோன் உலகில் கதை கட்டுரை எழுதுவது எல்லாம் அர்த்தமற்றது

உங்களுக்கு வயதாகுதுனு எப்படி தெரியும். கண்ணாடில பார்த்தெல்லாம் தெரியாது. அதில் நீங்க நீங்களாத்தான் இருப்பீங்க.

பின்னே? உங்களுக்கு தெரிந்தவர்கள் பலர் வாழ்ந்து இறந்து இருப்பார்கள். உங்க ரசனை இளய சமூதாயத்தின் ரசனையைவிட வேறு படும். நீங்க வாழ்ந்த "உங்கள் உலகம்" சிதைந்து அழிந்து இருக்கும். நீங்கள் குப்பை என்று சொல்வதை சந்தனம் என்று பொது அல்லது வெகுஜங்கள் பேசுவாங்க..அதையெல்லாம் பார்த்து சகிக்க பழகிக் கொண்டு இருப்பீங்க.

காலம் மாறிப் போய்விட்டது . எந்தக் காலத்தில் இருக்க? என்பார்கள்.

ஒன்னும் கவலைப்படாதீங்க. 

இதேபோல் நீங்களும் கேட்டு இருக்கீங்க. உங்க  அப்பா, தாத்தா புலம்பும்போது பார்த்து தலையில் அடிச்சுக்கிட்டு இருந்து இருப்பீங்க. இப்போ உங்க டேர்ன் அதனால் புலம்புறீங்க. அப்போ என்ன செய்தீங்க? அவர்களைப் பார்த்து சிரிச்சீங்க. அறியாமையில்தான் வாழ்ந்தீங்க. நீங்களும் கொஞ்ச வருடத்தில் இதேபோல் புலமப்போறீங்கனு நெனச்சு இருக்க மாட்டீங்க, பாவம்.

 ஆக, சந்தோசமான வாழ்க்கையே அறியாமையில் தான் இருக்கு. 

இன்னும் 100 வருடத்துக்கு பிறகு, நீங்கள் பிணமான பிறகும் இந்த உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கப் போகிறது. உங்களை மறந்து இவ்வுலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். 

 இதிலிருந்து என்ன நீங்க கத்துக்கப் போறீங்க?

இப்படியெல்லாம் எதுக்கு யோசிக்கணும்? என்பீர்கள்.

ஆமா, நாம் இல்லாத உலகம் எப்படிப் போனா நமக்கு என்ன? என்பீர்கள்

இதுபோல் கொஞ்சம் இறங்கி யோசித்தால் என்ன விளங்கும் என்றால்..

 நீங்க எல்லாம் ஒன்னுமே இல்லை என்பதை உணருவீங்க. மண், கல், தண்ணீர் எல்லாம் அழியாமல் வாழ்ந்து கொண்டே இருக்கும். 

நீங்க செத்ததும், உங்கள் செல்களை பாக்டீரியாக்கள் தின்று பல பாக்டீரியாக்கள் உருவாகும். நீங்க சாவதால் இவ்வுலகில் பல  நன்மை செய்யும் உயிர்கள் உருவாகும்- உங்க சந்ததிகள் பாக்டீரியாக்களாக மாறி இவ்வுலகை சிறப்பிக்க வைப்பார்கள். 

நீங்க வாழ்ந்து புடுங்கியதை விட உங்க அழுகிய செல்களில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இவ்வுலகுக்கு பல நன்மைகள் பயக்கும்னு புரிந்து கொள்ளுங்கள். 

ஆக நீங்க வாழ்ந்து புடுங்குறதைவிட சாவது இவ்வுலகுக்கு நன்மை.

அட் லீஸ்ட் ஒரு சில நேரம் நீங்கள் உங்களைப் பிரித்து உலகைப் பாருங்கள். 

உங்கள் உலகிலேயே பணம், செக்ஸ், குடும்பம், பாசம்,  என்று சிற்றின்ப வாழ்க்கையே  வாழ்ந்து அறியாமையிலேயே அழிந்து போகாதீங்கனு நான் யாருங்க உங்களுக்கு சொல்ல?

But நீங்க சீக்கிரம் போய் சேர்ந்தால் இந்த உலகுக்கு நீங்கள் செய்யும் ஒரு பேருதவி. அதுதுதான் உண்மை.  ஏன் வாழ்ந்து வாழ்ந்து இவ்வுலகை நாசமாக்குறீங்க?

இவ்வுலகில் உங்க வாழ்வால் ஏற்படும் தீமைகளை  புரிஞ்சுக்காமல் நான், எனக்கு என்றே வாழ்ந்து சாகுறதுலதான் இன்பம் என்றால் பரவாயில்லை, உங்கள் வாழ்க்கை, வாழ்ந்து  உலகை நாசமாக்குங்க.  ஆனால் உங்களால் இவ்வுலகுக்கு நன்மை பயக்குது அது இது னு ஏது உளறாமல் வாழணும். மனிதம் மண்ணாங்கட்டினு சும்மா பிதற்றக்கூடாது.

 அறியாமையில்தான் இன்பமே இருக்குனு அதையாவது புரிந்து கொள்ளுங்கள். 

Yeah, I know this is your fucking life. You could live as you wish! Ignorance is bliss after all. Right?