Saturday, February 26, 2022

கல்லாததும் பெறாததும் (1)

 பழமொழிகள்.  

தமிழ்ல ஒரு பழமொழி சொன்னால் அது தமிழ்ல மட்டும்தான் இருக்குனு நினைத்துக் கொள்ளக் கூடாது. எங்கிருந்தோ தமிழ் மொழிக்குத் தாவி இருக்கலாம். தமிழாக்கம் செய்யப்பட்டு உருவாகி இருக்கலாம். தமிழ்தான் உலகில் மூத்த மொழி என்று விவாதிப்பது அறியாமை. 

தம் மொழியை உயர்வாக நினைப்பதோ, தன் தாயை உயர்வாக நினைப்பதோ தவறில்லை. ஆனால் பிறமொழியைவிட தன் மொழி சிறப்பு வாய்ந்தது, பிற தாய்களைவிட தன் தாய்தான் உயர்வானவள் என்பது அறியாமை. 

நமக்குத் தெரிந்ததும் நம் மொழி, நம் தாயின் அன்பு. பிற மொழிகளையோ அல்லது பிறர் தாய்களையோ நாம் உணர்வது கடினம். இதையெல்லாம் புரிந்து கொள்வது கஷ்டம் இல்லை, உங்களிடம் திறந்த மனது இருந்தால் போதும்.

திறந்த மனதா? அப்படினா?


நாம் கற்றது கைமண் அளவே. கல்லாதது உலகளவு. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு பழமொழிதான்.  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியில் இருந்து ஏழாங்கிளாஸ் கூட படிச்சு முடிக்காத நம்ம  கலை ஞாநி வரை இதில் எல்லோருமே அடங்குவார்கள்

ஆனால் ஒருவருக்கு நாலு விசயம் தெரிந்தால் அவர்  ஒரு  பெரிய மேதைனு அவனே சொல்லிக் கொள்ளவில்லையென்றாலும் அப்பட்டத்தை வழங்க பாமரர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கார்கள். ஆக இது யார் தப்பு? மேதை தப்பா? இல்லை பாமரன் தப்பா?

ஆக கற்றது கைமண் அளவே. இதில் விதிவிலக்கு யாரும் இல்லை.  


கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்து உண்மையை அறிதல் நன்று.

நாம் அனைவருமே நம் வாழ்வில் ஒரு முறை அல்லது பல முறைகள் இதை உணர்ந்து இருப்போம்.

சமீபத்தில் நான் ஜெனடிக்ஸ் படிக்கும்போது புதிதாக கற்றுக்கொண்ட ஒண்ணு.

கசப்பு டேஸ்ட் என்பதை எல்லோரும் உணரமுடியாதுனு ஒரு ஸ்டடி பண்ணி இருக்காங்க. உணர்தல் என்பது மிகப் பெரிய விசயம். பல என்சைம்கள் அதில் ஈடுபட்டு இருக்கும். போததற்கு  உங்க மூளையும் அதில் கலந்து உங்களுக்கு அவ்வுணர்வைத் தரணும். வலியை எப்படி உணருகிறோம் னு யோசிச்சா, அது ஒரு சாதாரண ஒரு விசயம் இல்லை. அதேபோல் இனிப்பு, கசப்பை என்று ஒரு சுவையை எப்படி உணருகிறோம்னு யோசிச்சீங்கனா அதில் பல என்சைம் கலந்து அந்த உணர்வை உங்களுக்கு கொடுக்கணும். ஆக ஒரு சில டேஸ்டை நாம் உணர நம் உடலில் ஒரு சில என்சைம்கள் இருக்கணும், சுரக்கணும். 

ஒரு சிலருக்கு அது சுரக்கவில்லை என்றால்? அவர்களால் அந்த டேஸ்டை உணரமுடியாது. இப்போ ரெண்டு பேரை எடுத்துக்குவோம். ஒருவருக்கு சகசப்பை உணரும் என்சைம் ஒழுங்காக சுரக்கும். இன்னொருவக்கு அது சுரக்கவே இல்லை. இப்போ இருவரும் பாகற்காய் டேஸ்ட் பண்ணி பார்க்கிறர்கள்.ஒருவர் கசக்குது என்கிறார்.இன்னொருவர், எனக்கு கசப்பு தெரியவில்லை என்கிறார். இருவருமே உண்மையைத்தான் சொல்றாங்க. ஆனால் ஒருவரல்லாமல் 1000 பேர் கசக்குதுனு சொல்றாங்க. ஒருவர் மட்டும் கசக்கவில்லை என்கிறார் என்றால் அவரை நாம் ஒரு மாதிரியாகப் பார்ப்போம்.  ஒரு சில நேரம் அவர் எதுக்கு வம்புனு கசக்குதுனு பொய் சொல்லீட்டு போய்விடுவார். இதை மட்டும் பண்ணாதீங்க. நீங்க உணருவதை சொல்லுங்க , மானிப்புலேட் பண்ணாதீங்க!  

ஜெனடிக்ஸ் பயோகெமிஸ்ட்ரி எல்லாம் புரியாத ஒரு காலத்தில் இதை எல்லாம் விளக்க முடியவில்லை.இப்போ அதை விளக்க முடிகிறது. புரிந்து கொள்ள முடிகிறது.

பாட்டம் லைன் என்னனா? வாழ்க்கையிலும் சரி, அறிவியலிலும் சரி நாம் புரிந்து கொண்டது ரொம்ப ரொம்ப கொஞ்சம்தான். எத்தனை பெரிய மேதையாக இருந்தாலும்.  பல விசயங்களை நாம் புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து இறந்து விடுவோம். பின்னாள் வர்ரவங்க புரிஞ்சுக்குவாங்க. அவங்க வாழும் கால கட்டத்தில் விஞ்ஞானம் இன்னும் வளர்ந்து இருக்கும். இன்று புரியாதவைகளை விளக்கி இருப்பாங்க.  இருந்தாலும் அவர்களுக்கு புரியாத பல உண்மைகளும் இருக்கத்தான் செய்யும். எல்லாம் தெரிந்து கொள்ள முடியாது, யாராலுமே.இது போல் நிகழ்வுகள் ஒரு தொடர்கதை.

மீண்டும் சந்திப்போம்..

எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு - குறள்

 




No comments: