Showing posts with label உளறர்ல். Show all posts
Showing posts with label உளறர்ல். Show all posts

Wednesday, July 17, 2019

கற்பனைக்குப் பஞ்சம்!

வர வர முழுப் பைத்தியமாக ஆகிவிட்டான் நம்ம நாயகன். கவிதை, கதை எல்லாம் வர வர அர்த்தமற்றதாக தோணியது அவனுக்கு. சுத்தி வளைக்காமல் என்னனு சொல்லித் தொலைங்கப்பா னு நேரிடையாகவே கேட்டுவிடுவான் "கவித்தவரிடம்", எந்த ஒரு கூச்சமும் இல்லாமல்.

ஏன்  புரியலையா?னு அந்த கவித்தவர் கேட்டால்..

உன் கவிதையைப் படிச்சு, நான் தவறாகப் புரிந்து கொண்டு..நீ சொல்ல வந்ததை விட்டுவிட்டு நான் வேற எதையோ நினைத்து.. உன்னைப் பாராட்டி..அந்த தகுதியில்லாத பாராட்டை நீ பெற்று.. எதுக்கு வம்பு?  என்ன சொல்ல வர்ரன்னு சொல்லிடேன்? சரியாப் புரிந்து கொள்கிறேன் என்று கற்பனைப் பிரியர்களையும் அவமானப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டான்.
இங்கிதமா? மற்றவர் மனம் புண்படுமா? இதெல்லாம் தேவை இல்லாதத அலட்டல்கள்.  Tell me the bottom line!னு கூசாமல் கேட்க ஆரம்பித்துவிட்டான்.

காதல்னா? சிரிப்பா வந்தது அவனுக்கு. காதல் கைகூடாமல்ப் போனால்த்தான் காதல் வாழும், இல்லைனா காதல் கூடிய சீக்கிரம் செத்துவிடும்னு அடித்துச் சொன்னான்.

ஏன்டா இப்படி ஆகிட்ட?னு நண்பர்கள் கேட்டால். நான் என்னவோ ஏதோ ஒரு ஸ்ட்ரேட்டஜி போட்டு இப்படி மாறியதாக காமெடி பண்ணாதே. காலத்தின் போக்கில் நான் இப்படி ஆகிவிட்டேன்னு பதில் வேற.

ஆமா, உனக்கு எவொலூஷன் தெரியுமா? ம்யூட்டேஷன் படிச்சு இருக்கியா? நாச்சுரல் செலெக்‌ஷன்னா என்னனு தெரியுமா?னு  அவனுக்குத் தெரிந்ததை எல்லாம் சம்மந்தமே இல்லாமல் கேட்பான்.  வேணும்னே கடுப்பை கிளப்ப கவிஞர்களிடம் போயி பரிணாமவியல் பேச ஆரம்பிச்சுட்டான்.

ஆக அவன் பைத்தியமாகிவிட்டான் னு எல்லோரும் நேரிடையாகவும், முதுகுக்குப் பின்னாலும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அவனுக்கு என்னவோ இப்போத்தான் எல்லாமே தெளிவாகி புரிந்து விட்டதாக  தோன்றியது. வாழ்க்கைனா என்ன?  மனிதன்னா என்ன? மனிதன் தன்னைப் பத்தி மட்டும்தான் சிந்திக்கிறான் என்பதெல்லாம் தெளிவுபட்டது. பெரிய அளவில் மனிதனால் சிந்திக்க இயலவில்லை, சரியான தற்குறிகள்தான் இம்மனுஷ ஜென்மம்னு தோனியது அவனுக்கு.

காலங்காலமாக இதே பிரச்சினைகள்தான். எத்தனை காலத்துக்கு, துரோகம், எமாத்துனு புலம்பிக்கொண்டு திரியப் போறாங்களோ தெரியலை. கடவுள்னு இவனுக வசதிக்கு ஒரு கேரக்டரை உருவாக்கி  எத்தனை காலத்துக்குக் கட்டி அழப் போறானுகளோ?  இவனுகளப் பார்த்தாலே "போர்" அடித்து விட்டது அவனுக்கு.

சரி கவிஞர்கள்தான் இப்படினா, அறிவியல் ஞானிகளும் அரை வேக்காடாகத்தான் தெரிந்தார்கள். என்ன பெருசா கிழிச்சிட்டானுக? சாதாரண ஒரு அடிப்படை கேள்விகளுக்கு எவனிடமும் பதிலில்லை. எதையோ அரைவேக்காட்டு புரிதலை வைத்துக் கொண்டு பெருசா சாதிச்சதா சொல்லிக்கிறானுக.

பயாலஜி எக்ஸ்பர்ட்க்கு கெமிஸ்ட்ரி தெரிய மாட்டேன் என்கிறது. வேதியியல் மேதைக்கு ஃபிசிக்ஸ் தெரியலை. இயற்பியல் மேதைக்கு கணிதம் புரிய மாட்டேன் என்கிறது. கணித மேதைக்கு ஒரு செல் ஃபங்க்சனைக் கூட புரிந்து கொள்ள இயலவில்லை. ஆக, இவனுக எல்லாருமே ஒரு வகையில் முட்டாள்கள்தான். ஆனால் வாயைக் கேளு! அதை புடுங்கிட்டேன், இதை கிழிச்சிட்டேன்னு ஆளாளுக்கு பீத்திக்கிறானுக அரைவேக்காடுகள்னு தோனியது.

யாருக்குத்தான்டா எல்லாம் புரிஞ்சது? னு பார்த்தால் "கடவுளுக்கு"னு இவனுகளா உருவாகிய கற்பனையை கொண்டு வந்து "கணெக்ட்" பண்ணி ஏதோ பெருசா பதில் சொல்லீட்டதா நென்ச்சுக்கிறானுக. சுத்தமான மரமண்டைகள்னு எண்ணினான்.

இவனுகளுக்கு என்ன வேணும்?

பணம், புகழ்,  some nice piece of asses! That's all

 Image result for attractive girls


சாகிற வரைக்கும் இதுக்காகத்தான் அலைகிறானுக. செத்து தொலைந்ததுக்கு அப்புறம் இவனுகளை மாதிரி இன்னொருத்தன், மறுபடியும் இதே எழவுதான், இதே உளறல்தான். அவன் சாகிறவரைக்கும். அப்புறம் இன்னொரு மூதேவி இதேதான்.

----------------------

கற்பனைக்கு பஞ்சம் வந்தால் இப்படித்தான் எதையாவது எழுத வேண்டி வருகிறது..