என் நண்பன் சாமி வசிக்கும் தெருவில் வாழும் அம்மா அது. ஒரு 46 வயது இருக்கும். எதிர்த்தாப்பிலே நடந்து வந்தது. அது பேரெல்லாம் எதுக்கு?"
"அந்த அம்மா ரொம்ப மோசம்டா" என்று என் காதைக் கடித்தான் சாமி.
"ஆமா யாரைத்தான் நல்ல அம்மானு நீ சொல்லியிருக்க சாமி?"
"இப்பப்பாரு என்னைப்பார்த்தால் பயந்து நடுங்கும் பாரு !" என்றான். அத்துடன் அந்தம்மா இவனை தவிர்க்க முடியாத படி நின்றான். அவன் சொன்னதுபோலவே சாமியைப் பார்த்தவுடன் ஏதோ பேயறைந்தது போல் அது பயந்து ஒதுங்கியது போலதான் எனக்கும் தோணுச்சு.
"என்னடா சாமி? ஏன் இப்படி உனைப்பார்த்து பேயைப் பார்த்ததுபோல் பயப்படுது?" என்றேன் நான்.
"அதை ஏன் கேக்கிற? அதுக்கு நம்ம வயதில் பையன் இருக்கான்டா. ஓர் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு இருக்கு. ஆனால் தரங்கெட்டதனமா நடந்துகொள்கிறது.."
"என்னடா சொல்ற? எதுவும் தெருச் சண்டையில் இஷ்டத்துக்குப் தாறுமாறாப் பேசுமா? உங்க தெருலதான் பொன்மொழியெல்லாம் அதுலதானே வரும்? "நீ அவனை வச்சிருக்க, இவனை கூட்டி கொடுத்தது தெரியாதா?" னு இஷ்டத்துக்கு திட்டுவாங்களே? அது மாரிப்பேசுமா சண்டையிலே?" என்றேன் நான்.
"அதாவது பரவாயில்லை. இது அதைவிட மோசம்"னு மறுபடியும் புதிர் மேலே புதிர் போட்டான் சாமி.
"என்னனு சொல்லித் தொலைடா, சாமி"
"இதைக்கேளு! ஒரு நாள் சக்கண்ட் ஷோ முடிஞ்சு வந்து இங்கே நின்னு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு 20 வயதுப்பையன் இந்த சந்துலயிருந்து வெளியே வந்தான். அவன் யாருனு கவனிச்சுப் பார்ததேன். அவன் யாருனு தெரியும் எனக்கு. அவன் இந்தத் தெரு இல்லை. என்னடா இன்னேரத்திலே ஏண்டா லேடீஸ் பொது டாய்லெட் பக்கம் இருந்து வருகிறான்? னு நாங்க பேசிட்டு விட்டுட்டோம். ஆனால் நான் அதோட விடலை சரினு அவன் மேலே ஒரு கண்ணு வச்சிட்டு இருந்தேன். இன்னொரு நாள் நைட் இதே மாரி நைட் ஒரு மணி இருக்கும் அங்கேயிருந்து வெளிய போனான். அவன் போன அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதே சந்திலிருந்து இந்தம்மாவும் வெளிய வந்து அவங்க வீட்டுக்குப் போச்சு..இதில் இன்னொரு விசயம் என்னனா இந்த அம்மா புருஷனிடம்தான் இந்தப் பையன் ஏதோ வேலை செய்றான். அடிக்கடி அவங்க வீட்டுக்கு வருவான். எனக்கு என்னடா எதோ நடக்குது போல னு சந்தேகம் வந்துச்சு"
"நாசமாப் போச்சு போ."
"அப்புறம் ஒரு நாலு நாள் இருக்கும், அன்னைக்கு தெருல ஏதோ கோயில் திருவிழா நடந்துச்சு. திருவிழா எல்லாம் முடிஞ்ச பிறகு நைட் அதே பையன் அந்த சந்துக்குள்ள சுத்திப் பார்த்துட்டு யாருக்கும் தெரியாமல்ப் போனான். கொஞ்ச நேரத்திலே அந்தம்மாவும் அதே சந்துக்குள்ள் போச்சு. நானும் என் ஃப்ரெண்டும் போய் ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சாச்சு!"
"அடப்பாவி! ரெண்டுபேரை நிம்மதியா சந்தோஷமா இருக்க விடமாட்டியா? "
"அவனை ஒரு அறை அறைஞ்சி. "இந்தப்பக்கம் உன்னை இனிமேல் பார்த்தேன் கொன்னேபுடுவேன்!" னு அனுப்பிட்டு. இந்த அம்மாவ, "ஏய் உனக்கு வயசு என்ன? இந்த வயசுல என்ன இதெல்லாம்?" னு கேட்டேன். என்னத்தை சொல்ல போ! கையெடுத்து என்னை கும்பிடுதுடா! "யார்ட்டையும் சொல்லிராதே" னு கெஞ்சுது. சரி, "இனிமேல் இப்படி செய்யாதே! வயசுக்கேத்தாப்பிலே நடந்துக்கோ" னு திட்டி, அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டு வந்துட்டேன். என்ன பொம்பளைடா இதெல்லாம்?" என்றான் சாமி வருத்தமும் கோபமுமாக.
"ஏண்டா டே! பாவம் அவங்க சந்தோஷத்தைக் கெடுத்து, அந்தமம்மாவை சாகிறவரைக்கும் உன்னை மறக்க முடியாத அளவுக்கு ஆக்கிப்புட்ட!" என்று கேலியாக அவனிடம் நான் சொல்லி சமாளிச்சாலும் உள்மனதில் "ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? அதுவும் இந்த வயதில்?" னு மனதில் ஒரு சோகமான பரிதாபமான உணர்வுதான் வந்தது எனக்கும்.
"விட்டுத் தொலைடா! உன் மிரட்டலில் "தூக்குக் கீக்கு போட்டு செத்திறப்போது பாவம்!" என்றேன் உண்மையான பயத்துடன்.
*****************
அந்த நினைவுகள், அந்த அம்மாவின் பரிதாப முகம், சாமியைப் பார்த்து அது மிரண்ட பார்வை எல்லாம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அப்படியே நிற்கிறது, எனக்கு.
சினிமாக்கள் (அவள் ஒரு தொடர்கதை), கதைகள் (தி ஜா ரா வின் அம்மா வந்தாள்) போன்ற புனைவுகளில் மட்டுமல்லாமல், இதுபோல் அம்மாக்கள் தகாத உறவுகளில் மாட்டிக்கொண்டு பிடிபட்டு முழிப்பது எல்லாம் காலங்காலமாக நமது கலாச்சாரத்தில் கிராமங்கிளில் கூட நடக்கத்தான் செய்யுது.
இதுபோல அம்மாக்கள் ஒரு சில விழுக்காடுகள்தான் என்றாலும் "ஒரு சிலர் காமத்திற்காக, ஏன் இப்படி தன் வயது, தன் நிலமை, தன் தரம் என்பதை எல்லாம் யோசிக்காமல் தன்னிலை மறந்து தவறாக நடந்துக்கிறாங்க? என்கிற கேள்விக்கு என்ன பதில் இருக்கிறதென்று தெரியவில்லை.
"அவள் தேவைகளை ஆம்படையான் ஒழுங்காத் தீர்த்து வைக்கவில்லை! இதிலென்ன பெரிய தப்பு?" என்று பெண்ணியவாதியாக வாதிடலாம். "அவங்க புருசன் எப்படியோ? அவன் ஒழுங்காயிருந்தால் ஏன் இப்படி அந்தம்மா அலையுது?" என்றும் வாதம் மற்றும் விதண்டாவாதம் பேசலாம்தான்.
நம்மூர்களில் வாழும் மெஜாரிட்டி "அறிவுகெட்ட ஆண்கள்" கோடிக்கணக்கான "பெண் என்னும் பேதையர்கள்" எல்லாம் இதை எல்லாம் பார்த்து, கேள்விப்பட்டு, "தேவடியாள் ஊர் மேயிறாள்" னு இதுபோல் அம்மாக்களை ஜாடையில், மற்றும் சண்டைகளில் திட்டுவதுதான் கிராம வழக்கம். ஆனால் இதில் சிந்திக்க வேண்டியதும், இதுபோல் நடப்பவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவும் நாம் கற்றுக்கொண்டால்தான் நாம் மனிதாபிமானிகளாகவும், பண்பாடு தெரிந்தவர்களாகவும் ஆகிறோம்.
மேலை நாகரீகத்தில் இதையெல்லாம் மன்னிக்கக் கற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் நாம் எப்படி??
-முற்றும்