Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Thursday, January 10, 2013

என்னுடைய டி ட்டி எச் புக்கிங் பணம் எங்கே கமல்ஹாசன்?

கமல் என்னனா, தான் சொன்னதுபோல் படத்தை டி ட்டி எச் ல கொடுக்காமல்,  "இது என் பொருள், நான் வைக்கிறதுதான் சட்டம்" னு இன்னும் வீம்பு பேசிக்கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தோ என்னவோ "டைம்ஸ் ஆஃப் இந்தியா" வில் ஒரு கட்டுரை வந்து இருக்கு. அதில் ஒரு ஆள், A Subramani, என் பணம் எங்கே கமல்? னு கேட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.


kamalahassan


Mr Kamal Haasan, where is my money?

 எழுதியவர். எ. சுப்பிரமணி!


Irked over the delay of Vishwaroopam, Kamal Haasan's latest flick, on DTH, a fan writes to apprise the actor how he felt cheated.


Dear Padmashri Mr Kamal Haasan,


I am writing this representing the collective and the rightful indignation of thousands of your fans who shelled out sums ranging from Rs 500 to Rs 1,200 to watch the so-called pre-release premiere of your film 'Vishwaroopam' on DTH.


Mr Kamal, I am the head of a family of four and, just like you, Rajni and Barack Obama, I too have two daughters. We restrict our cinema theatre visits only for real biggies such as Enthiran and Avatar for a wholesome effect. And the moment you unveiled Vishwaroopam, we decided that the film fell in that category and that we all should book tickets in a swanky theatre for a quality entertainment. We, of course, were aware that such an experience comes with a fat price tag.


But, then, you started talking about pre-release of the V-film on DTH. You did everything right to promote your film. You got the audio CD released by a physically disabled fan. Your appearance on a hugely popular TV show as guest was a mega hit among children. You spoke so well that many children, as those in my family, prevailed upon their fathers to book a slot on DTH. You spoke as to how you spent Rs 95 crore on the movie, and how it is your right to choose the medium of release. You even claimed that you already had 390 theatres under your kitty to release the film after its DTH debut.


Then you visited the Chennai city police commissioner's office, with your publicist in tow, complaining of certain threats. Even when my Editor doubted whether it was a publicity stunt, I, quite naively, defended you, saying, "no, boss. It looks like Kamal's battle against the theatre lobby."


When Regent Saimira dragged you to high court demanding refund of Rs 4 crore it had apparently paid you as advance for a still-born film and sought to stall Vishwaroopam's release, your advocate-brother and your goodself filed a counter explaining the economics behind film-making. You said the failed deal cost you Rs 40 crore. You won the case, Mr Kamal, as the court dismissed the suit.


Then, convinced that you will stand by your resolve to give us a pre-theatre release experience of the V-film at 9.30pm on January 10, I paid up not Rs 1,000 but an apex fare of Rs 1,200. While I had decided to return early for the advertisement-free entertainment that night, my children decided to stay up for the rendezvous.


Well, Mr Kamal, today is January 10. Where is the film? And, more importantly, where is my money?


On Wednesday, you again appeared in TV, your publicist in tow, telling us that the release date has been postponed and that you would try to release the film simultaneously on DTH and theatres. You said your money is at stake and that you felt cheated.


Hold on, Mr Kamal, you are mouthing my dialogue. It is we, having signed up for the DTH rendezvous, who should be complaining that we had been betrayed, my children disappointed and our money stolen from our wallets. When my daughter asked me, "daddy, is Kamal uncle cheating us?" I defended you and tried hard to explain her the business matrix behind your failure. But it did not wipe off her disappointment entirely.


Remember the Baaba days of superstar Rajnikanth. Riding high on his popularity wave in 2002, they slapped an entry fee on Rajni fans, merchandised his pictures and even banned his fans from using his images without 'authorisation'. They sought to metamorph a people's star into a body corporate, a Rajni Inc. The film bombed -- of course not because fans failed Rajni. It was vice versa.


But more than grieving over the failure of their superstar's film, Rajni fans felt betrayed.


Kamal fans and those who hold him aloft as the pride of Indian cinema are now engulfed in the same sense of betrayal. I know people who bought new DTH because of Vishwaroopam. Now the set top box in their hall will grimly remind them of the betrayal. You may say it is all beyond your limits and that you too lost to the theatre lobby, but we put the money in an unknown service provider's kitty believing your words.


Two things are clear. One, you have got tons of free publicity for your film and you are sure to reap a bumper harvest. Two, you proved my Editor right.


Now, Mr Kamal, tell us how are you going to help us get back the money?

இதுபோல் டி ட்டி எச் காரன் அவன் இவன்னு பலரும் பிரச்சினை செய்ய வாய்ப்பிருக்கு. எனக்கென்னவோ ஆழம் தெரியாமல் கமல் காலை விட்ட மாதிரித்தான் இருக்கு.

ஆனால், இப்போவும் கமலஹாசன் பேசுவதைப் பார்த்தால்  இன்னும் அடங்கிறமாரி தெரியலை! He has not apologized to anyone! He just blames others!

Friday, June 26, 2009

உழைக்கும் கரங்கள்! பெரிய குப்பை!

எம் ஜி ஆர் 1976 வெளியிட்ட படம் இது. அதாவது முழுக்க முழுக்க அரசியலில் இறங்கிய பிறகு. எம் ஜி ஆருக்கு வயது 60-61 இருக்கும். இளமையெல்லாம் குட் பை சொல்லிருச்சு! இதுல அவருக்கென்று ஒரு தனி "ஸ்டெயில்", ஒரு தலைப்பாகை, கையில் ஒரு தடி (இது என்ன இழவுக்கோ தெரியலை), ஒரு செருப்பு ஒண்ணு போட்டுக்கிட்டு திரிகிறார் இல்லை ஊருக்காக உழைக்கிறார் எம் ஜி ஆர்.

பொதுவாக எம் ஜி ஆர் படங்களில் பாடல்கள் நல்லா இருக்கும். ஆனா இந்தப்படத்தில் அதுவும் இல்லை. இவர் லதாவுடன் செய்யும் ஊடல் சகிக்கலை. அதுவும் ரெண்டுபேரும் ஒரு ஒத்தையடிப்பாதை பாலத்தில் எதிரெதிரா வந்து சின்னப்பிள்ளைங்க போல சண்டைபோட்டு விளையாடுவது! மாம்பழம் புடுங்கி விளையாடுவது! அப்பா ஆளை விடு!

படத்தில் என்ன ப்ளாட்? மு க வை ஒரு மாதிரியாக சாடுவதுதான். இவர் தி மு க வில் இருந்து வெளியே வந்த காரணத்தை ஜஸ்டிஃபை பண்ணுவதுபோல இருக்கு. இவரை ஆடு மாடு முதல்கொண்டு படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் நல்லவர்னு புகழுது! ஒரே சலிப்பா இருக்கு இவருக்குப் பாடும் புகழாரம்! இவர் நல்லவராம், மக்களுக்கு தொண்டு செய்ய தன் "எஜமானை" விட்டு வெளியே வந்து இருக்காராம். முழுக்க முழுக்க அரசியல் நிறைந்த ஒரு படம் இது!

படம் டைரெக்ஷன்: அடிமைப்பெண், ஆலயமணி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய அதே கே. சங்கர்!

என்ன கொடுமை இது சங்கர்? :(

"இந்தப்படத்துக்கு என்ன குறை?" என்று யாராவது சொன்னால், நிச்சயம் அவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சி! கண்மூடித்தனமான எம் ஜி ஆர் வெறியர்! அ தி மு க தொண்டர்!

நல்லவேளை அடுத்து வந்த தேர்தலில் எம் ஜி ஆர் ஜெயித்தார். அப்படியில்லாமல் தொடர்ந்து நடித்து இருந்தால் எல்லோருக்கும் கஷ்டகாலம்தான்! உழைக்கும் கரங்களை படத்தை விட்டு ஒதுங்கி இருப்பது விவேகம்- நீங்க எம் ஜி ஆரை தெய்வமாக நினைக்காத சாதாரண ரசிகர் என்றால்.

மதிப்பெண்கள் 29/100! சரியான குப்பை!

Friday, June 5, 2009

ரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா? (2)

இந்தப்படத்தில் நடிப்பில் ரஜினிதான் #1 என்று விமர்சகர்களும் பொதுமக்களும் பொதுவாக ஏற்றுக்கொள்வார்கள். ரஜினி கேரக்டர் அப்படி அதனாலேதான் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏன் என்றால், முள்ளும் மலரும், அவர்கள் போன்ற படங்களில் ரஜினி கேரக்டர் மோசமாக இருந்தாலும் அதிலும் ரஜினிதான் ஜொளித்தார்! சிவகுமார் எப்படி இந்த "வில்லன்" மாதிரி ரோலுக்கு சரி என்றார் என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை!

நெறைய நேரங்களில் ஒரு சில பெரிய நன்மையை கருதி மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில காரியம் செய்வதுண்டு. ஆனால் அதன் விளைவுகளை நாளடைவில் அவர்களாலேயே சமாளிக்க முடியாது. ஆம், ஆண்கள் பொதுவாக வலுவிழந்த மனிதர்கள்தான். அதேபோல்தான் இந்தப்படத்தில் வரும் சம்பத்தும்.

சம்பத்தின் இன்றைய நிலைமை!

அன்று காதலி இறந்துவிட்டாள். வாழ்க்கையே முடிந்துவிட்டதுனு சாகப்போவான். புவனாவை பேருக்குத்தான் கல்யாணம் செய்துகொண்டு பெரிய தியாகியாவான். ஆனால், காலப்போக்கில் அவன் புவனாவையே காதலிக்க ஆரம்பித்துவிடுவான். புவனாவின் மகன் இவன் மகனாகி விடுவான். "அப்பா" அப்பா" என்று அந்தப்பையன் சம்பத்தை விளிப்பது/அழைப்பது அவனுக்கு பிடிக்கும். ஆனால், சம்பத், அன்று அவ்வளவு பெரிய தியாகம் செய்தாலும் தான் ஒரு சாதாரண மனுஷந்தான் நான் என்று வெட்கமே இல்லாமல் ஒத்துக்குவான். புவனா இளமையா இருப்பாள், நல்லவள், அழகா இருப்பாள். அவளோட பிரிந்து "சும்மா" வாழும் சம்பத் காலப்போக்கில் அவளை காதலிக்க ஆரம்பித்துவிடுவான். அதை வெட்கமே இல்லாமல் அவளிடமும் சொல்லாமல் சொல்லிவிடுவான்! ஏன் பச்சையாகவே சொல்லிவிடுவான்!

புவனா, இன்றும் அதே மன உறுதியுடன் இருப்பாள். பிடிவாதம் அவளுக்கு பலம்! காலப்போக்கில் மாறமாட்டாள். சம்பத்தை தெய்வம் நிலையில் வைத்து அவனை உயர்த்தி ஒதுக்கிவிடுவாள்! தான் முடிவெடுத்தது போலவே வாழ்ந்து முடிக்க முடிவு செய்துவிடுவாள்.

ஒரு மாதிரி புவனா மனது "டபுள் ஸ்டாண்டார்ட்" வச்சிருக்கும். அதாவது தனக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேற என்பது போல.

Sampath will tell Bhuvana about his latest disturbance and his love for her, is not the same as what he had. Sampath will bring up a situation to Bhuvana, regarding what she thinks of young widows' remarriage?

அதற்கு, Bhuvanaa, இளம் விதவைகள் மறு கல்யாணம் செய்துகொள்ளனும்னு சொல்லுவாள். அதாவது தனிமையில் சாக வேண்டியதில்லை என்று சம்பத்திடம் சொல்லுவாள்.

உடனே சம்பத், அப்போ நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று வெட்கத்தைவிட்டு (நாகரீகமான முறையில்தான்) கேட்பான். புவனா சொல்லுவாள் "நம்ம வேற". "நீங்கள் எனக்கு தெய்வம்போல!" "நான் உங்களுக்கு தகுதியானவள் அல்ல!" என்று சொல்லுவாள்!

ஆனால் சம்பத் சொல்லுவான், நான் ஒரு சாதரண மனுஷந்தான். பலஹீனம் நிறைந்த மனுஷன் என்பான்! புவனா அவனைப் புரிந்துகொண்டாலும் அவளால் இந்த ஒரு விசயத்தில் அவனுக்கு உதவ முடியாது!

இந்த சூழ்நிலையில்தான்

* "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ" பாடல் இந்தப்படத்தில் இடம் பெரும்.

இது பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்! ஆனால் கண்ணதாசன் லெவலுக்கு இருக்கும்!

அந்தப்பாடலில், சம்பத், புவனாவிடம்:

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ!

ஒரு உறவும் இல்லை! அதில் பிரிவுமில்லை!

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நானே!


ஆசைக்கு வெட்கமில்லை!

அனுபவிக்க யோகம் இல்லை!

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை!

ஏன் படைத்தானோ இறைவன் என்னை?

எனக்கு உலகில் நிம்மதி இல்லை!


புவனா, சம்பத்திடம்:

தெய்வத்தில் உன்னைக்கண்டேன்!

தினம் தினம் பூஜை செய்தேன்!

நிலவுக்கு களங்கம் என்று உறவுக்கு விலகி நின்றேன்!

கலக்கம் ஏனோ? தயக்கம் ஏனோ?


Friend of mine said long time ago that "Human minds have double standards" and that which is not uncommon! I did not believe it then but it is true!

புவனா மனதும், நாகராஜ் மனதும் இதில் "டபுள் ஸ்டாண்டார்ட்" வைத்திருப்பதை தெளிவாகப் பார்க்கலாம்! அது ஒருவர் மன உறுதி, மன தைரியத்துக்கு உதவும்னு தோனுது.


நாகராஜ்,

இந்த புவனா பிரச்சினை முடிந்ததும் நிம்மதியா இருப்பான். அந்த நிம்மதி ரொம்ப நாளைக்கு நிலைக்காது! He cant become a father anymore. His "sperm count" will go down. So he will become INFERTILE (not impotent!). அதனால் ஊர் உலகம் அவன் மனைவியை மலடி என்பார்கள்! ஆனால் பிரச்சினை நாகராஜ்க்குத்தான் என்று அவள் தெரிந்துகொள்வாள் அவனை ஹர்ட் பண்ண வேண்டாம் என்று அவளுக்குள்ளேயே வைத்திருப்பாள். நாகராஜுக்கும் உண்மை தெரியும். ஆண் என்ற ஆணவத்தாலும், அவன் ஏற்கனவே நெறைய பேரை கற்பம் உண்டாக்கியதாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் முதலில் மறுக்கும்.

That marital problem has been very well taken in this movie. Their arguments and the discussion of this sensitive issue is taken exceptionally well in this movie!

இப்போ நாகராஜின் குழந்தை, நண்பன் சம்பத்திடம் வளரும். அவனை தினமும் நாகராஜ் பார்ப்பான். நாகராஜை அவன் அங்கிள் னு கூப்பிடுவான்! I loved this part!

இந்த நிலைமையை சமாளிக்க As usual, Nagaraj will come up with another plan! That is, he will adopt his own son! This time he wont win! Because that is the only thing (the child) helps Bhuvana and Sampath to live at least this life. Moreover, Bhuvana will HATE nagaraj for what he has done and she will NEVER forgive him!

Even sampath will get tired of his friend. Their friendship will sort of crack.

சம்பத், நல்லவந்தான் ஆனால் நாகராஜிடம் அவன் எப்போவுமே ஒரு மாதிரி செடிஸ்டிக்காத்தான் நடந்து கொள்வான்! நண்பன் என்கிற உரிமைனு கூட சொல்லலாம்! அவன் நாகராஜிடம் பேசும் சில வசனங்கள்!

* நாகராஜ் அண்ணே! கல்லுளிமங்கன் நீங்க! கடப்பாறைய முழுங்கிட்டு சுக்கு கஷாயம் சாப்பிடுற ஜாதி நீங்க!

* நாகராஜ் அண்ணே! நீங்க முழுங்கிய கடப்பாறை ஒரு நாள் வயித்தை கிழிச்சுட்டு வெளியே வந்துடும்!

* நாகராஜ்! கடப்பாறையை முழுங்கிட்டு, இப்போ குத்துது கொடையுதுனு சொன்னால் எப்படி!


ஒருமுறை நாகராஜ் வெறுப்புடன் சம்பத்திடம் சொல்லுவான்,

* உன்னை அன்னைக்கே சாக விட்டுருக்கனும்! உன்னை காப்பத்தினேன் பாரு! அதுக்கு நன்றிக்கடனா இது?! என்பான்.

அதற்கு சம்பத் சொல்லுவான்!

* அன்னைக்கே நிம்மதியா போய் சேர்ந்து இருப்பேன்! இப்போ பாரு என் வாழ்க்கையை! என்பான் ஒரு விரக்தியுடன்!

Conclusion!

Anyway, this world is not for "good people" and kind-hearted gentleman like Sampath! It is for people who knows how to survive rather. That we can see in our life. Not only in this movie but also in movies like "Gone with the wind"!

Kind-hearted, nice person Sampath dies of heart attack as this world is not for good people! :(

Bhuvana and Nagaraj will cry but I am sure they know how to survive and they have hearts which are strong enough to survive and continue living in this world!

Thursday, June 4, 2009

ரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா? (1)

இன்றைய வலையுலக மக்களில் பலர் ரஜினி என்கிற நடிகனை உணராதவர்கள்! ரஜினிகாந்த் என்கிற நடிகன் அபார நடிப்புத்திறன் கொண்ட பிறவி நடிகன் என்பதை உணரனும்னா நீங்க புவனா ஒரு கேள்விக்குறி படம் கட்டாயம் பார்க்கனும்! முள்ளும் மலரும் பார்க்கனும்! அவர்கள் பார்க்கனும்! நீங்க திறமைமிக்க நடிகன் ரஜினிகாந்தை அங்கேதான் பார்க்கலாம்.

அந்தப்படங்கள் வந்த நேரம் புகழ் என்கிற போதையில் மயங்கி மிகவும் உயர்ந்து நிற்கும் இன்றைய சூழலில் அல்ல! அன்று ரஜினிக்கு புகழ் கிடையாது, ஸ்டார் வால்யூ கிடையாது, வசதி கிடையாது, எதிர்காலம் தெரியாது. ஒரே மோட்டிவேஷன் முன்னேறனும்! நடிப்பால் முன்னேறனும்! என்று ஒரே வைராக்கியத்தில் நடித்த ரஜினிகாந்தை பார்க்கலாம்! எங்கே? புவனா ஒரு கேள்விக்குறியில் அந்த நடிகனை பார்க்கலாம்!

என்னைபொறுத்தவரை இது காலத்தால் அழியாத மிகவும் எதார்த்தமான காவியம். ஆண் என்பவன் ஒரு சில தெய்வீக குணாதிசீகங்களுடன் இருந்தாலும் அவன் காம மற்றும் காதலுணர்வு க்கு எளிதில் உள்ளாகிவிடுவான் என்பது உண்மை. பலஹீனம் நிறைய உள்ளவன் ஆண்.

ஆண் பெண் இருவரும் சரி சமம் சமானம்தான் என்றாலும் ஆண் வேறு பெண் வேறு! அவர்கள் உணர்வுகள் வேறு! ஒவ்வொரு பிரச்சினையையும் ஆணும் பெண்ணும் அனுகும் விதம் வேறு வேறு.

பொதுவாக பல ஆண்கள் ஒரு சில உயர்ந்த குணங்களுடன், உண்மை தத்துவங்களுடனும், மிகப்பரந்த மனதுடன் உள்ள உயர்ந்த ஜீவனாக இருந்தாலும், வாழ்ந்தாலும், அந்த குணங்களுடன் சேர்த்து அதே ஆண்மகனுக்கு மிகப்பெரிய பலஹீனங்களும் இருப்பதுண்டு. காதலில் பலஹீனம்! காமத்தில் பலஹீனும்! புகழ் என்னும் போதையில் பலஹீனம். பொதுவாக காமம், காதல் என்ற உணர்ச்சிகள் வரும்போது ஆண்கள் பெண்களைவிட மிகவும் கீழே போய்விடுவார்கள். உணர்ச்சி வசப்படக்கூடிவர்கள் ஆண்கள். காமம் என்கிற மிருக இச்சை இவர்களை எளிதாக ஆட்கொண்டுவிடும். ஒரு சிட்டி பஸ்ஸில் போகிற பெண்ணூக்கு, "எந்த ஆம்பளைதான் இந்த உலகத்தில் யோக்கியன்?" என்கிற தீவீர சந்தேகம் வருமளவுக்கு அநாகரீகமாக நடந்துகொள்வார்கள். தெய்வீக குணம் கொண்ட தத்துவங்கள் பேசும் அதே ஆண்மகந்தான் தன் பலஹீனத்தால் மிருக இச்சைக்கு உள்ளாவதும்.

அதே சமயத்தில் பெண் பொதுவாக சுயநலமாக வாழ்பவள்தான். பரந்த நோக்கெல்லாம் பொதுவாக பெண்களுக்குக் கிடையாது. அவர்களை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாலோ என்னவோ அவர்கள் அப்படித்தான் தெரிகிறார்கள், இருக்கிறார்கள். தாய் என்பவள்கூட தன் பிள்ளைகள் என்கிற சுயநலத்தால்தான் தியாகிபோல் தோன்றுவாள் என்று விவாதிக்கலாம். பெண்களிடம் ஆண்கள் அளவுக்கு பெரியமனதோ, பரந்த மனமோ பொதுவாகக் கிடையாது! பெண்கள் விளைவுகளை யோசிக்காமல் தவறுகள் செய்வதுண்டு. கவனக்குறைவாக இருப்பதுண்டு. தத்துவங்கள் எல்லாம் பெண்ணுக்கு பொதுவாகப் பிடிக்காது! ஆனால் மன உறுதி என்பது பெண்களுக்கு ஆண்களை விட பல மடங்கு அதிகம். பெண் என்பவள் பொதுவாக மிருக இச்சையான காமம், மற்றும் காதல் உணர்வுகளை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெல்லத்தெரிந்தவள். பெண்களிடம் இதுபோல் பலஹீனம் அதிகம் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்து அவ்வளவு சீக்கிரம் தன்னை தன் உயர்ந்த தரத்தை கீழே கொண்டு போய்விடமாட்டாள். கூட்டி, கழிச்சுப்பார்த்தால் ஆணும், பெண்ணும் சமம்தான் ஆனால் வேறு வேறு என்பதை மறுக்கவோ மாற்றவோ முடியாது.

இதெல்லாம் இப்போ எதுக்கு? புவனா ஒருகேள்விக்குறி படத்தைப்பார்த்ததால் இதையெல்லாம் யோசிக்கச்சொல்லுது! இப்படியெல்லாம் பேசச்சொல்லுது! சரி இப்போ பட விமர்சனத்தை பார்ப்போம்!

புவனா ஒரு கேள்விக்குறி!

இந்தப்படம் எஸ் பி முத்துராமன் படம்.

எந்த எஸ் பி எம்?

ஆமா, பின்னால் பாயும் புலி, சகலகலாவல்லவன் போன்ற கமர்ஷியல் குப்பைகளை டைரெக்ட் செய்த அதே எஸ் பி எம் தான்! பாலசந்தர், ஒரு திறமைமிக்க டைரக்டர் என்றாலும் அவர் படங்களில் பொதுவாக நாடகபாணி இருக்கும். ஆனால் எஸ் பி எம் மின் இந்தப்படத்தில் அந்த நாடக பாணிகூட இருக்காது. நல்ல திரைக்கதை ஓட்டம். அபாரமான வசனங்கள்!

ரஜினியும் எஸ் பி எம் மும் முதன் முதலில் இணைந்த படம் இதுனுகூட சொல்லலாம். எஸ் பி எம் உடைய முதல்ப்படம்னு கூட இதைச் சொல்லலாம்! முதல் படமா என்னனு உறுதியா எனக்குத் தெரியலை.

சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ராவை வைத்து எடுத்த ஒரு காவியம் இது! நடிப்பில் யாரையும் எந்த வகையிலும் குறை சொல்லமுடியாது.

என்ன கதை? ரஜினியும் சிவக்குமாரும் நண்பர்கள்! ரெண்டுபேரும் அனாதைகள்! இவர்கள் வாழ்வது நாகர்கோயிலில். இருவரும் எதிரும் புதிருமான கேரக்டர்களாக இருந்தாலும் நல்ல நண்பர்கள்! வாழ்க்கையை வாழ விரும்பும் விதம் வேற வேற மாதிரி! இருவருக்கும் தொழில் என்னனா சிறிய அளவில் ஜவுளி வியாபாரம். ரெடிமேட் துணிகள் தெருவில்விற்று சம்பாரித்து வாழக்கையை ஓட்டும் வாலிப ஏழைகள்.ஒரு முதலாளியிடம் ஜவுளி எடுத்து சந்தையில், மற்றும் பொது இடங்களில் விற்பது.

ரஜினி பெயர் சம்பத்! சம்பத் என்றால் உதவி னு ஒரு அர்த்தம் உண்டா? சம்பத் ஒரு அனாதை, ரொம்ப நல்லவன். நல்லவன்னா? நல்ல மனசு! அப்படினா? அளவுக்கு மீறி ஆசை கிடையாது. யாரையும் ஏமாற்றத்தெரியாது. ஏமாற்றிப்பிழைப்பதில் திருப்தி இல்லை. பொழைக்கத்தெரியாத பிள்ளை என்று சொல்லலாம். பாலிடிக்ஸ் பண்ணத்தெரியாது. கடவுள் நம்பிக்கை உண்டு. அன்பு பாசம், தியாகம் என்று உருகும் வகை. சம்பத்துக்கு ராஜி என்கிற அழகான காதலி. அவள் அருகில் இருக்கும்போது அவளுடனும், அவள் இல்லாத நேரம் அவள் நினைவுகளுடனும், கனவிலும் வாழ்கிறான், சம்பத். அழகான வாழக்கைதான் ஆனால்..!நல்லவனா இருந்தா நல்லா வாழ்ந்து விடலாமா என்ன? அவ்வளவு எளிதானதா மனித வாழ்க்கை?

ரஜினிக்கு ஜோடி மீரா (ஜெயா?). இவர்களுக்கு ஒரு நல்ல டூயட், * விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது என்கிற பாடல்.

ஆனா சம்பத்க்கு ஒரு பெரிய பலஹீனம் உண்டு. அவன் கொஞ்சம் குடிப்பான். புகை பிடிப்பான்! தன் உடலை கெடுப்பதால் மற்றவர்களுக்கு என்ன தீங்கு? என்று நினைப்பானோ எனன்வோ.

சிவகுமார் பெயர் நாகராஜன்! சம்பத்துக்கு நேர் எதிர் குணாதிசீனங்கள் உள்ளவன். நாகராஜும் ஒரு அனாதைதான். ஆனால் அவனுக்கு மன தைரியம் அதிகம், கடுமையாக உழைப்பவன். Very motivated. Very determined. நாகராஜ் knows how to do business. He knows the psychology of customers. He does not mind lying to sell his products. He is very practical and very very shrewd. His conscience is different from Sampath's. Nagaraj does not believe in love. Unlike Sampath he has not fallen in love with any girl. He is very practical than foolish and he is not philosophical like sampath. நாகராஜிடன் கெட்ட பழக்கங்கள் கிடையாது. குடிக்க மாட்டான். புகைபிடிப்பதும் கிடையாது. ஆனால் இளம் பெண்களை மயக்கி அவர்களை வஞ்சித்து உடலுறவு வைத்துக்கொண்டு பிறகு கழட்டிவிட்டுவிடுவான். சம்பத்தை பொறுத்த வரையில் இது காதல் அல்ல! அந்தப்பெண்கள் காமத்துக்காகத்தான் அவனை விரும்புகிறார்கள். இருவருக்கும் கிடைத்தது சுகம். இதில் என்ன தப்பு? அப்படியே அவர்களுக்கு கரு உண்டானால் அவர்களை ஒரு டாக்டரிடம் கூட்டி சென்று “அபார்ஷன்” செய்துவிடுவான். இந்த வீக்னெஸை தவிர்த்தால் நாகராஜ் சம்பத்தைவிட 10 மடங்கு அதிகமாக உழைப்பவன் சம்பாரிப்பவன் by cook or crook he know how to do successful business.

சீக்கிரமே அழகாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பத்தின் வாழ்க்கையில் இடி விழுந்துவிடும்! காதலி எதிர்பாராத வகையில் ஒரு விபத்தில் அவன் கண்முன்னே மரணமடைகிறாள். கவலையில் சம்பத் சாப்பிடாமல் இருப்பான். நண்பன் நாகராஜ்தான் வனை கவனித்துக்கொள்வான். சம்பத் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து சாகப்போவான். நாகராஜ்தான் காப்பாற்றுவான். இனிமேல் தற்கொலை செய்யாதே என்று சத்தியம் வாங்கிக்குவான். சம்பத் மேல் உண்மையிலேயே பிரியமாக, கனிவுடன் இருப்பான் நாகராஜ்.

காதலி மறைவுக்குப்பின் சம்பத் முன்பைவிட அதிகமாக குடித்துக்கொண்டே அவள் நினைவில் வாழுவான்! ஒரு மாதிரி அல்கஹாலிக் போல ஆகிவிடுவான்! நண்பன் நாகராஜ் அவனுக்கு ஆறுதல் சொல்வதுடன் அவனை நல்லா பார்த்துக்குவான். ஆனால் சம்பத்க்கு நாக்ராஜ் தவிர வேறெதுவும் உறவு இருக்காது.

ஒருநாள் இருவரும் சென்னைக்கு ரயிலில் போவார்கள் ஒரு பெரிய வியாபார நோக்கோடு. ஆனால் அத்ற்கு தேவையான பணம் இருக்காது. இருந்தாலும் முயன்று பார்ப்போம் என்று சென்னை போவார்கள். அப்போ அவர்களுடன் அதே பெட்டியில் இன்னொருவர் வருவார். அது ஒய் ஜி மஹேந்திரன். அவர் பெட்டி நிறைய பணம் வைத்திருப்பார். விழுப்புரத்தில் தண்ணி குடிக்க வெளியே இறங்கிப்போன அவர் ஹார்ட் அட்டாக்கில் ப்ளாட்ஃபார்மிலேயே இறந்துவிடுவார். அவருடைய அந்தப்பணப்பெட்டியில் உள்ள பணத்தை நாகராஜ் எடுத்துக்கொள்வான். சம்பத் நண்பனுக்காக ஒத்து ஊதுவான். போலிஸ் விசாரிக்கும்போது நாகராஜ் மற்றும் சம்பத் பொய் சொல்லிவிடுவார்கள்.

அந்தப்பணமும் கருப்புப்பணம் என்பதால் அதன் சொந்தக்காரர்கள் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், புவனா (சுமித்ரா), அண்ணன்கூட ட்ராவெல் செய்த பிரயாணிகளை கண்டுபிடித்து இதைப்பற்றி விசாரிக்க வருவாள். வரும்போது அங்கே இருந்த இறந்த அண்ணன் கொண்டு சென்ற சூட்கேசை பார்ப்பாள். அதைப்பற்றி விசாரிப்பாள். ஆனால் அதில் பணம் இருக்காது. நாகராஜ் ஏதோ சொல்லி மழுப்பிவிடுவான். ஆனால் புவனா சந்தேகப்படுவது தெரிந்து, அவளுடன் வேணும்னே பழகுவான், நாகராஜ். அவள் நாகராஜை நம்பி அவனை காதலிப்பாள். நாகராஜ் அவளை காதலிப்பதுபோல் நடிப்பான்.

இவர்களுக்கு ஒரு டூயட் வரும். * பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா..

நாகராஜ் அவளையும் கெடுத்து, வயிற்றில் குழந்தை உண்டாக்கிவிடுவான். ஆனா புவனா பிடிவாதக்காரி. நாகராஜை கல்யாணம் பண்ண சொல்லுவாள். நாகராஜ் அவளை அபார்ஷன் பண்ண சொல்லுவான். அவள் முடியாது என்பாள் அடித்து. இந்த நேரத்தில் நாகராஜ் அந்த திருடிய பணத்தை வைத்து பெரிய ஜவுளிக்கடை ஆரம்பிப்பான். பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் நாகராஜ். புவனா ஒரு ஏழை என்பதால் அவளை மணப்பதென்பது நாகராஜை பொறுத்தவரையில் சாண்சே இல்லை.

நாகராஜ், திறமை வளர்ச்சியை பார்த்த அவனுடைய பழைய முதலாளி (சுருளிராஜன்) அவனுக்கு தன் பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்வான். நாகராஜ் உடனே சரி என்பான். இப்போ புவனாவை எப்படி கழட்டிவிடுவது என்று நாகராஜ் யோசிப்பான். சம்பத்திடம் பேசுவான். அப்போது, அவள் நாகராஜ் முன்னேற்றத்துக்கு தடையா இருந்தால் அவளை கொலை கூட செய்ய தயாராக இருக்கிறான் தன் நான்பன் நாகராஜ், என்று சம்பத் புரிந்துகொள்வான். சம்பத், இவன் எது வேணா செய்வான் என்று பயந்துவிடுவான். இந்த நிலைமையில் சம்பத், ஒரு ப்ளானுடன் புவனா வீட்டிற்கு சென்று அந்த குழந்தைக்கு தாந்தான் அப்பா, புவனாவை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்பான். புவனா வீட்டில் யாரு புவனா குழந்தைக்கு அப்பா என்று தெரியாமல் இருப்பார்கள். நாகராஜை அவர்களுக்கு சுத்தமாக தெரியாது. அதானல் சம்பத் தான் அப்பா என்று நம்பிவிடுவார்கள். ஆனால் புவனா எதிர்ப்பாள். பிறகு சம்பத் அவளிடம் உள்ள நிலைமையையும் நாகராஜ் கொலைகூட செய்வான் என்றும், தான் "பேருக்கு" "ஊருக்குத்தான்" புருஷன் என்று விளக்கிய பிறகு புவனா வேறுவழியில்லாமல் சரி என்பாள். நாகராஜ் தன் ஆசைப்படி அந்த பணக்கார பெண்ணை (ஜெயா?) கல்யாணம் செய்வான். சம்பத் புவனாவை கல்யாணம் செய்துக்குவான். ஆனால் புவனாவுக்கும் அவனுக்கும் உடலளவில் எதுவும் உறவு இருக்காது.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா? அதெப்படி முடியும்? அடுத்த பகுதியில் மிகுதி!

Saturday, April 11, 2009

Unforgiven(A)-மன்னிப்பே கிடையாது! (முடிவு)


லிட்டில் பில், சரியாக இடதுமார்பில் குண்டு துளைக்கப்பட்டு கீழே கிடப்பான். அவனை சுற்றி அவன் டெபுட்டி நான்கு பேர் சாக/செத்தும் கிடப்பார்கள். அதில் ஒரு குண்டான டெபுட்டி, அந்த எழுத்தாளன் மேலே விழுந்து கிடப்பான்.

எல்லோரும் ஒடிவிடுவார்கள்- உயிரோடு இருக்கும் சார்லி என்கிற டெபுட்டியும் வெளியே ஓடிவிடுவான். அப்போ, அந்த எழுத்தாளன் கீழே இருந்து எழுந்திரிப்பான்,

“என்னை சுட்டுட்ட, என்னை சுட்டுட்ட” என்றான் தன் மேல் உள்ள ரத்தத்தை பார்த்து அழுதுகொண்டே எந்திரிப்பான்.

“உன் மேலே குண்டு படல” என்பான் வில் மன்னி தன் ரிவால்வாரை அவனை நோக்கி பாயிண்ட் பண்ணி.

“என்னிடம் துப்பாக்கி இல்லை. தயவு செய்து என்னை சுடாதே!"

“அந்த ரைஃபிலை எடு” என்பான் வில் மன்னி

"நான் ஒரு எழுத்தாளன்” என்பான்.

"கடிதம் எழுதுவியா?"

"இல்லை புத்தகங்கள்!" என்பான்

“அந்த ரைஃபிலை எடுத்து என்னிடம் தா”

“நீ ஐந்து பேரை கொன்னுட்ட! நீ ஒரே ஆளு” என்று சொல்லிக்கொண்டே அவனிடன் ரைஃபிலை எடுத்துக்கொடுப்பான்.

மரணக்காயங்களுடன் கிடக்கும் லிட்டில் பில் இதை வேடிக்கை பார்ப்பான். இப்போ அந்த எழுத்தாளன் ஹீரோ வில்லியம் மன்னி ஆகி இருப்பான்!

“yeah” என்பான் வில் மன்னி.

“யாரை முதல்ல கொன்ன?”

“என்ன?!!” எரிச்சலுடன் கேட்பான் வில் மன்னி.


“இல்லை, திறமையான கன் ஃபைட்டர்ஸ் உடைய பெஸ்ட் ஷாட் முதல் ஷாட்டாகத்தான் இருக்கும்னு லிட்டில் பில் சொன்னான். நீ அவனை கொன்னுட்ட. நீ அவனைத்தான் முதல்ல சுட்ட இல்லையா?” என்பான்.

“ஐ ஆம் அல்வேஸ் லக்கி” என்பான் வில் மன்னி.

“ரெண்டாவது யாரை சுட்ட?” என்பான்.

வில் மன்னி எரிச்சலாகி, “ஐ கென் ஒன்லி டெல் ஹு இஸ் கோயிங் டு பி லாஸ்ட்?” என்று அவனை நோக்கி துப்பாக்கியை காட்டுவான். Meaning, he will kill him if he keeps talking/annoying like this!

அதோடு, அந்த எழுத்தாளன் வெளியே நடந்து போயிடுவான். William Munny wont fall for his compliments or anything. He just has finished what he has to and want to get back home. So, his hero-worshipping wont please him or anything. He will just say I AM LUCKY that I am alive and they are dead. That is all.

அந்த எழுத்தாளன் வெளியே போனதும், வில் மன்னி மறுபடியும் ரைஃபிலை லோட் பண்ணிட்டு கொஞ்சம் விஷ்கியை ஊற்றி குடிப்பான்.

அந்த நேரத்தில் மரணக்காயங்களுடன் இருக்கும் லிட்டில் பில் தன் ரிவால்வாரை வைத்து வில் மன்னியை சுட பாயிண்ட் பண்ணப்போவான். வில் மன்னி தன் ரைபிலை வைத்து அவன் ரிவால்வாரை தட்டிவிட்டு விட்டு, அவன் அருகில் போவான். தன்னுடைய துப்பாக்கியை அவன் கழுத்தில் க்ளோஸாக வைத்து ட்ரிகரை “காக்” பண்ணுவான்.



இந்த நேரத்தில் சாகக்கிடக்கும் லிட்டில் பில் சொல்லுவான்.



“நான் ஒரு வீடு கட்டிக்கொண்டு இருந்தேன். I don't deserve to die like this”

“Deserve got nothing to do with it” என்பான் வில்லியம் மன்னி.

“See you in Hell, William Munny” என்பான் லிட்டில் பில்- வில் மன்னி சுடப்போகும் குண்டை வாங்க தயாராகிக்கொண்டு.

“Yeah” என்று எந்தவித இரக்கமும் இல்லாமல் சுட்டு கொல்லுவான் வில் மன்னி.

It is interesting to note that Little Bill hated Assassins all his life. He said that to the writer “I hate assassins and that assassins are low characters” not long ago. Now that Little Bill himself finally gets killed by an Assassin for his brutality and for his dictatorship! Yeah, it is not fair that an assassin is killing him. God is not fair either lots of times or not?

அங்கே அரைகுறையாக இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு சில டெபுட்டிகளையும் சுட்டு கொன்னுட்டு வெளியே வர தயாராவான், வில் மன்னி. அவனுக்குத்தெரியும் எல்லோரும் மிரண்டு போய் இருக்கிறார்கள் என்று. அவர்களை மிரட்டியே இங்கிருந்து தப்பிக்கனும் என்று முடிவு செய்வான்.

“நான் இப்போ வெளியே வரேன். எவனாவது என் மேலே சுட முயற்சி செய்த உன்னை மட்டுமல்ல, உன் குடும்பம், நண்பர்கள் யாரையும் உயிரோட விடமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியே வருவான்.

லிட்டில் பில் மற்றும் 4 டெப்டிகள் செத்துட்டானுக, என்கிற சூழலில் யாருக்கும் அவனை சுட தைரியம் இருக்காது.

வெளியே வந்து, தன் குதிரையை அவிழ்த்துவிட்டு தன் நண்பன் நெட் லோகனுடைய பாடியை பார்ப்பான்.

“என் நண்பனை ஒழுங்கா மரியாதையா புதைத்து விடுங்கள். இனிமேல் எந்த விலைமாதையும் குத்துறது வெட்றது என்பதெல்லாம் செய்யாதே! அப்படி ஏதாவது செய்தால் நான் திரும்ப வந்து உங்க எல்லோரையும் கொல்லுவேன்” என்று சொல்லிவிட்டு குதிரையில் ஏறி போவான்.

அவனை பயத்துடன் ஊரே வேடிக்கை பார்க்கும். விலைமாதுகள் அவனை நன்றியுடன் பார்ப்பார்கள். அந்த் எழுத்தாளன் இந்த அதிசயத்தை கண்கூடாக பார்த்து தன் கதையை எழுதி முடிக்க தயாராவான்.

வில் மன்னி, மிசவ்ரிக்கு திரும்பி வந்து தன் மனைவி புதைபட்ட இடத்தில் அவளுக்கு ஒரு மலர் வளையம் வைத்துவிட்டு அந்த ஊரை காலி செய்து குழ்ந்தைகளுடன் வேறு ஊருக்கு போய்விடுவான்.

கடைசிப்பகுதி இந்த யு-ட்யுப் க்ளிப்ல இருக்கு!

http://www.youtube.com/watch?v=5SO5VO2ixWY



அவ்வளவுதான் :-)))))

Friday, April 10, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது! (4)



மேலே படத்தில், பாதிக்கப்பட்ட விலைமாது டெலைலியா மற்றும் விலைமாது ஸ்ட்ராபெர்ரி


ஐந்து நாட்கள் வைரல் ஃபீவருக்கு அப்புறம் வில்லியம் மன்னி பிழைத்துவிடுவார்! ஜுரம் சரியாகி முழிக்கும்போது, பார்ட்னர்கள், நெட் லோகன் மற்றும் ஸ்கோஃபீல்ட் கிட் இருவரும் இருக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட அந்த விலைமாது, முகத்தில் கீறல்களுடன் அருகில் வில் மன்னி அருகில் இருப்பாள். வில்லியம் மன்னிக்கு சாப்பாடு கொடுப்பாள். சாப்பிட்டுவிட்டு, வில்லியம் மன்னி ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேரும் எங்கேனு கேட்பார். அவர்கள் அந்த கவ்பாய்ஸ் ரெண்டு பேரையும் தேடிப் போயிருக்காங்க என்பாள்.

அவள் அஹோர முகத்தை பார்த்துவிட்டு,

"உன்னைதான் வெட்டி கீறினார்களா?" என்பார் வில் மன்னி.

"ஆமா" என்பாள் கவலையுடன்.

" உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் பேமெண்ட்ல அட்வாண்ஸ் வாங்கிக்கொள்கிறார்கள்.
காசு கொடுக்காமல் எங்களிடம் செக்ஸ் வச்சிக்கிறாங்க" என்பாள்.

"அப்படியா?"

"உனக்கு ஃப்ரீயா வேணுமா?" என்பாள்

"உன்னோடவா? வேணாம்!" என்பார் வில் மன்னி.

அவள் கீறுபட்டு இருப்பாதால் அப்படி சொல்வதாக நினைத்துக்கொண்டு "நான் என்னிடம்னு சொல்லல. மற்ற விலைமாதுகளிடம் நீங்க வச்சுக்கலாம்" என்பாள் ஒரு காம்ப்ளெக்ஸுடன்.

வில் மன்னி சொல்வார், "நீ இப்படி வெட்டுப்பட்டு இருப்பதால் நான் அப்படி சொல்லவில்லை. என் மனைவியால் விலைமாதிடம் என்னால் போகமுடியாது. If I wish to have sex I would certainly have with you than other two girls. You are a beautiful women and you just ahve scars" என்பார்.

"I admire you for being truthful to wife and all. I know lots of men who are not like you!"

"I suppose"

"Your wife is back in Kansas?"

"yeah, she is watching over the younger ones"

The way he says seem as if his wife is alive and taking care of the children in Kansas. He will sound like an excellent human being for her.

"இந்தாங்க உங்களுடைய தொப்பி. நீங்க க்ரீலிஸ்ல விட்டு வந்துட்டீங்க" என்று வில் மன்னியிடம் அவன் தொப்பியை கொடுப்பாள்.

"அந்த செரீஃப், பெரிய முரடன் அவன், அடி அடினு அடிச்சே என்னை கொல்லப்பார்த்தான். இன்னும் என்னை தேடிக்கிட்டு இருக்கானா?"

"லிட்டில் பில்? இல்லை, நீங்க பயந்துகொண்டு திரும்பி போயிட்டதாக நினைக்கிறான்" என்பாள்.

"Are you really gointg to kill those cowboys?" க்யூரியஸா கேட்பாள்.

"I guess so. Still the payment coming. right?"

"yeah".

இதுவரைக்கும், வில்லியம் மன்னி ஒரு நல்ல "வைஸ் மேன்" ஆகத்தான் தெரிவார். ஒரு கொலைகாரன், அயோக்கியன் என்பது இதுவரை தோனாது. He will not take the sherif's brutal beating personally either. He will let it go. All he cares now is the money and killing those two guys and get the money, go back. He does not care about anything. He gets into business now!


முதல் கொலை (டேவி):

டேவி என்கிற அந்த இளைஞன் நண்பர்களுடன் ஒரு குன்றுப்பகுதியில் குதிரையில் ரைட் பண்ணி விளையாண்டு கொண்டு இருப்பான். பக்கத்தில் உள்ள குன்றுகளில் இவர்கள் மூவரும் மறைந்து நின்று அவனை சுட முயல்வார்கள். முதலில் "நெட் லோகன்" தன் ஸ்பென்ஸர் ரைஃபிலை வைத்து அவனை சுடுவார். அந்தப்பையனின் குதிரையில் குண்டு பட்டு குதிரை கீழே சாய்ந்து விழும். அது விழும்போது டேவியின் கால் குதிரைக்கும் தரைக்கும் இடையில் மாட்டி அவன் கால் உடைந்துவிடும். சுடுவதிலிருது தப்பிக்க அவனால் குன்றுகளின் மறைவுக்கு ஓடிப் போகமுடியாது. நண்பர்கள் எல்லாம் சுடுகிற சத்தம் கேட்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள். டேவி கால் உடைந்து தைரில் இருப்பான்.

இப்போ இதெல்லாம் தூரத்தில் நடப்பதால் ஷாட்-ஷைட்டெட் ஸ்கோஃபீல்ட் கிட்-க்கு ஒரு மண்ணும் விளங்காது. என்ன நடக்குது? அவன் செத்துட்டானா? சுட்டுட்டியா? னு கேட்பான்.

நெட் லோகனுக்கு அவனை சுட்டுக்கொல்ல மனசு வராது. தயங்குவான். "

அவன் மலைக்குன்றுகளில் மறையும் முன்னால அவனை முடிக்கனும், “நெட்”" என்பான் வில் மன்னி.

“நெட்” ர¨ஃபிலை வில் மன்னியிடம் கொடுத்துவிடுவான்- நீ சுடு என்பதுபோல். வில் மன்னி இரண்டு குண்டு மிஸ் பண்ணிய பிறகு கடைசி ஷாட்ல அவனை சரியாக வயிற்றில் சுடுவான். அவன் அந்தக்காயத்தில் செத்துவிடுவான்.

இந்த கொலை செய்துவிட்டு திரும்பி வரும்போது நெட் லோகன் ஒரு மாதிரியாகிவிடுவான். அவனுக்கு திடீர்னு பெரிய கில்ட்டி ஃபீலிங்/பயம் வந்துவிடும்.

டேவியை கொன்னுட்டு அடுத்தவனை எப்படி கொல்வதுனு ப்ளான் பண்ணும்போது, நெட் சொல்லுவான், "நான் திரும்பிப்போறேன்" என்று.

வில் மன்னி சொல்லுவான், "நெட்" நீ இங்கேயே இரு, அவனையும் சுட்டுட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சீக்கிரம் போயிடுவோம் என்று. ஆனால் நெட், வில் சொல்வதை கேட்காமல் புறப்பட்டு திரும்பி போவான். அவன் ஸ்பென்சர் ரைஃபிலை வில் மன்னிக்கு வேணுமானு கேட்பான். வில் மன்னி வேணாம். நான் உன் ஷேரை கொண்டு வறேன் என்று அனுப்பிப்வைப்பான்.

நெட் லோகன் மாட்டிக்குவார் (செரீஃப்பால் கொல்லப்படுவார்):

நெட் திரும்பிப்போகும்போது, அவனை சில ஃபார்ம் வொர்க்கர்ஸ் அடையாளம் கண்டு பிடித்து கொண்டுவந்து லிட்டில் பில்லிடம் கொண்டுவருவார்கள். லிட்டில் பில் நெட் லோகனை சித்ரவதை செய்து ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருடைய பெயர், ஊர் பற்றி கேட்பார். நெட் லோகன் உண்மையை சொல்லாமல் பொய் பெயர் விலாசம் சொல்லி சமாளிப்பான். ஆனால் அவனை விசாரிக்கும்போது அருகில் அந்த கதை எழுதுகிறவன் நோட்ஸ் எடுப்பார். அதில் அவன் சொல்லும் பெயர்கள் முன் பின் முரணாக இருப்பதை காட்டுவான். உடனே லிட்டில் பில் நெட் சொல்றது பொய்கள் என்று புரிந்து கொள்வான். அவனை இன்னும் சித்ரவதை பண்ணுவார் செரீஃப்.

இரண்டாவது கொலை (க்விக் மைக்):

நெட் மாட்டியது வில் மன்னிக்கும், கிட் க்கும் தெரியாது. அவர்கள் க்யிக் மைக்கை கொல்ல ஆயத்தமாகி காத்திருப்பார்கள். க்விக் மைக் நண்பர்களுடன், டெபுட்டியின் பாதுகாப்பில் இருப்பார். அப்போது அவன் எப்போ வெளியே வருவான் என்று வில் மன்னியும், கிட் டும் காத்திருப்பாங்க. அவன் வெளியில் உள்ள டாய்லெட் போவதற்காக் தனியாக வெளியே வருவான். ஒரு டாய்லெட் உள்ளே நுழைந்ததும், வில் மன்னி, கிட் இடம் சொல்லி அவனை சுட சொல்லுவான். கிட் அவன் அருகில் சென்று டாய்லெட்லயே வைத்து சுட்டு க்விக் மைக்கை சுட்டுக் கொல்லுவான். சுட்டுவிட்டு உடனே இருவரும் குதிரையில் ஏறி பறந்துவிடுவார்கள்.

இதுதான் கிட் செய்யும் முதல் கொலை என்பதால் கொலை செய்துவிட்டு அவனால் அதை ஜீரனிக்க முடியாது. பயங்கர கில்ட்டி ஃபீலிங்குடன் இருப்பான். நிறைய குடிப்பான்.

நெட் லோகன் மற்றும் கிட் இருவருமே கொலை செய்ததால் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணுவார்கள். வில் மன்னிதான் எதுக்குமே கலங்க மாட்டான்.

அந்த நேரத்தில் அவர்கள் சொன்னபடி சரியாக $1000 கொண்டுவந்து ஒரு விலை மாது அவர்களிடம் கொடுப்பாள். கொடுத்ததும் பணத்தை 3 ஷேரா பிரி என்பார் வில் மன்னி. நெட் ஷேரை நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்பான் வில் மன்னி.

அதைக்கவனித்த விலைமாது, நெட் இறந்துவிட்டதாகவும், அது அவர்களுக்கு தெரியும் என்று நினைத்ததாகவும் சொல்லுவாள். அது மட்டுமில்லாமல், அவன் "பாடி"யை க்ரீலிஸ் முன்னால் வைத்து “அசாஸின்களுக்கு இதுதான் இங்கு நடக்கும்” என்று அவன் மேல் ஒரு “சைன்” வைத்து இருப்பதாகவும் சொல்லுவாள்.

இந்த இடத்தில் வில் மன்னி பயங்கர கடுப்பாகிவிடுவான். இதுவரை அவன் பணத்துக்காக கொலை செய்துவிட்டு போவதாக இருப்பான். செரீஃப் அவனை அடித்ததை எல்லாம்பற்றி கவலையே படமாட்டான். ஆனால் இப்போ தன் நண்பன் "நெட் லோகனை" லிட்டில் பில் கொன்னுட்டதாக சொன்னதும் பயங்கர கோபம் வந்துவிடும். அதுவும் அவன் மேலே ஒரு “சைன்” வைத்து இருப்பதை கேட்டதும் வெறியே வந்துவிடும்.

இதுவரை குடிக்காமல் இருந்த வில்லியம் மன்னி, கிட் இடம் இருந்த விஷ்கியை வாங்கி குடிப்பான். பிறகு அந்த விலைமாதிடம் என்ன நடந்ததுனு தெளிவாக கேட்பான்.

அவள் சொல்லுவாள், "நெட் டை ஒரு சில ஃபார்ம் வொர்க்கர்ஸ் பிடிச்சிட்டு வந்தாங்க. அவனை அடிச்சு நீங்க யாருனு விசாரித்தான் லிட்டில் பில். முதலில் நெட் எதையுமே சொல்லவில்லை ஆனால் நீங்க க்யிக் மைக்கை கொன்னவுடன், அதிஅ கேள்விப்பட்ட லிட்டில் பில் அவனை ரொம்ப சித்ரவதை பண்ணியதும், அவன் உங்களைப்பற்ரி உண்மையைச் சொன்னான், நீங்க வில்லியம் மன்னி என்றும், மிசவ்ரியிலிருந்து வருகிறீங்க என்றும், நீங்க ரொம்ப மோசமான கொலைகாரர் என்றும், நெட்டை லிட்டில் பில் கொன்னால், நீ நிச்சயம் திரும்பி வந்து லிட்டில் பில்லை கொன்னுடுவ என்றும் சொன்னான். லிட்டில் பில் சிதரவைதிலேயே அவன் செத்துட்டான்"

“என்னைப்பற்றி உண்மை தெரிஞ்சதும் அதைக்கேட்டு லிட்டில் பில் பயந்தானா?”

“இல்லை” என்பாள்.

“நெட் லோகன் யாரையும் கொல்லவில்லை. நம்ம ரெண்டு பேரும் செய்த கொலைகளுக்கு அவனை கொன்னுருக்கான் லிட்டில் பில்” என்பால் கிட் டை பார்த்து.

பிறகு, "உன்னுடைய ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை கொடு!" என்பான்.

"எதுக்கு வில்?"

"என்னிடம் கொடு" என்பான் கோபமாக.

"கிட்" பயந்துகொண்டு அதை அவனிடம் கொடுப்பான்.

“நீ லிட்டில் பில்லை கொல்லப்போறியா? நான் உன்னை மாதிரி இல்லை, வில். நான் இனிமேல் நான் யாரையும் கொல்ல மாட்டேன்” என்பான் கிட்.

வில் மன்னி, "நீ திரும்பி போ மிஸ்" என்று விலைமாதை அனுப்பிவிட்டு,

“நீ ஒண்ணும் பயப்படாதே கிட்! நான் சொல்வதுபடி நீ கேட்கவில்லையென்றாலும் நான் உன்னை கொல்ல மாட்டேன். நீ ஒரு நண்பந்தான் எனக்கு இருக்க” என்பான் வில் மன்னி. பயந்து போய் இருக்கும் கிட் இடம் பணத்தை கொடுத்து, நீ என் ஷேரையும், நெட் ஷேரை என் வீட்டில் கொடுத்துவிடுனு சொல்லுவார் மன்னி. அவனிடம் இருந்து ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை வாங்கிக்கொள்வான் வில் மன்னி.

விஷ்கியை எல்லாம் குடித்துவிட்டு, கிட் டை சவுத் நோக்கி அனுப்பிவிட்டதனியாக நேர சலூனுக்கு வருவான் வில்லியம் மன்னி.

அந்த சலூன் முன்னால “நெட் லோகன்” பிணத்தை ஒரு சவப்பெட்டியில் வைத்து இருப்பார்கள்.



அவன் மேலே “திஸ் இஸ் வாட் ஹேப்பன்ஸ் டு அசாஸின்ஸ்” அப்ப்டினு ஒரு சைன் வச்சிருப்பாங்க.



வில் மன்னி நண்பனின் அந்த கோலத்தை பார்த்துவிட்டு உள்ளே நுழைவான்


ஆனால், அவன் வருகையை யாருமே எதிர்பார்க்க மாட்டாங்க. அவர்கள் அனைவரும் லிட்டில் பில் தலைமையில் இவர்கள் இருவரையும் எப்படி துரத்திபோய்ப் பிடிப்பது என்று ப்ளான் போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதாவது அடுத்த நாள் காலையில் புறப்பட்டு போய் அவர்களை பிடிப்பதாக பேசிக் கொண்டு இருக்கும் போது, வில் மன்னி தன்னுடைய ஷாட் கன்னை காக் செய்கிற சத்தம் கேக்கும்.

எல்லோரும் திரும்பிப்பார்ப்பார்கள். அங்கே தனியாக தன்னுடைய “ஷாட் கன்” துப்பாக்கியை லிட்டில்பில்லை நோக்கி பாயிண்ட் பண்ணி நிற்பான், வில்லியம் மன்னி.



விலைமாதுகள், அந்த எழுத்தாளர், டெபுட்டிகள் எல்லோருமே ஷாக் ஆயிடுவாங்க! எழுத்தாளனுக்கு ஒரே சந்தோஷமாகவும் ஆகும். உள்ளே நுழைந்தவுடன் வில் மன்னி, லிட்டில் பில்லை நோக்கித்தான் தூப்பாக்கியை பாயிண்ட்பண்னி பிடித்து இருப்பான்.

“சலூனுக்கு சொந்தக்காரன் யாரு?” என்பான் வில் மன்னி.

யாரும் ஒண்ணும் சொல்லாமல் இருக்கும்போது, ஒரு குண்டா இருக்கிற டெப்புட்டியை நோக்கி, “நீ சொல்லு!” என்பான்.

அதற்குள் ஸ்கின்னி “நான் தான் இதன் ஓனர்” என்று முன்னால் வருவான்.

அவனை சுடப்போவான் வில் மன்னி. அவனை சுடப்போகும்போது, லிட்டில் பில் கத்துவான், “ஹோல்ட் இட்” என்று.

அதையெல்லாம் சட்டை செய்யாமல் ஸ்கின்னியை தன் முதல் குண்டுக்கு பலியாக்கி சுட்டு கொல்லுவான்.



ஸ்கின்னியை கொன்னதும், லிட்டில் பில் டென்ஷனாகி, “நீ ஒரு கோழை! நிராயுதபாணியை சுட்டுட்ட!” என்பான்.

அதைப்பத்தி எல்லாம் வில் மன்னி கவலையே படமாட்டான்.

“He should have armed himself if he is going to decorate the salon with my friend (ned logan)” என்பான்.

“நீ தான் வில்லியம் மன்னியா? பெண்களையும் குழந்தையையும் கொல்லும் அயோக்கியன்!” என்பான் லிட்டில் பில்.

"That's right. I've killed women and children. Killed just about everything that walks or crawled at one time or another. And I'm here to kill you, Little Bill, for what you done to Ned." என்பான் வில் மன்னி.

அவன் ஷாட் கன் ல மிச்சம் இருக்கிற ரெண்டாவது குண்டை வைத்து லிட்டில் பி லை சுட அவனை குறிவைப்பான்.

“அந்த ஒரு குண்டை வைத்து என்னைய சுட்டதும், இவனை சுட்டுக்கொல்லுங்கள்!” என்று தைரியமாக சொல்லுவான் லிட்டில் பில்.

வில் மன்னி சுடபோவான், ஆனால் அதில் குண்டு இருக்காது (மிஸ் ஃபயர் ஆயிடும்).

உடனே லிட்டில் பில் நேர்வஸா அவன் துப்பாக்கியை எடுக்கப்போவான், எல்லா டெப்புட்டியும் துப்பாக்கியை எடுத்து வில் மன்னியை சுட ரெடியாவாங்க!

வில் மன்னி மிஸ் ஃபயரானதும் உடனே சுதாரிச்சு தன்னுடைய ஷாட் கன் னை லிட்டில் பில் மேலே தூக்கி எறிவான். கன் லிட்டில் பில் மேலே விழுந்ததும் அதனால் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி, வில் மன்னியை தன் ரிவால்வார் வைத்து சுடும்போது ஃபர்ஸ்ட் ஷாட்டை மிஸ் பண்ணிவிடுவான். ஆனால் அதற்குளவில்மன்னி தன்னுடைய ஸ்கோஃபீல்ட் ரிவால்வாரை எடுத்து, லிட்டில் பில்லை மிஸ் பண்ணாமல் நெஞ்சில் சுட்டுவிடுவான். லிட்டில் பில் கீழே விழுந்துவிடுவான். அடுத்து அவனை நோக்கி சுடும் நாலு டெபுட்டிகளையும் தொடர்ந்து வில் மன்னி சுடுவான். 5 பேரும் மரண காயங்களுடன் கீழே விழுவார்கள்.

-அடுத்த பகுதியில் முடியும்

Thursday, April 9, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது! (3)


நம்ம க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (வில்லியம் மண்ணி) ஒரு ரிட்டயர்ட் திருடன், குடிகாரன், கொ லைகாரன். ஆனால் இன்று திருந்தி வாழ்கிறார். இவரை திருத்தியது இவருடைய அழகான இளம் மனைவி. இவரை இவர் மனைவி எதுக்காக கல்யாணம் செய்தார் என்று யாருக்கும் புரியவில்லை. இவர் ஒரு திருடன் கொலைகாரன் என்பது அறிந்தும் இவரை மணந்துகொள்வார். காதல்! இவரை கல்யாணம் செய்து இவரை நல்வழிப்படுத்திவிட்டு 2 வருடம் முன்னால் அவர் மனைவி பெரியம்மை நோயால் போய் சேர்ந்துவிடுவார். மனைவியை இழந்த இவர் இப்போது தன் இரு குழந்தைகளுடன் மிசவ்ரியில் யாருக்கும் தெரியாமல் ஒரு பன்னி பண்ணை வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார். வில்லியம் மன்னிக்கு இப்போ வயதாகிவிட்டது, குடிப்பதில்லை, கொலை யெல்லாம் விட்டு பல வருடங்கள் ஆச்சு. துப்பாக்கியே தூக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்படி இவர் ஒளிந்து எந்த வம்பிலும் மாட்டாமல் ஒதுங்கி நல்வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும்போது ஒரு இளைஞன் இவரை தேடிக்கொண்டு வருகிறான். இவன் பெயர் “ஸ்கோஃபீல்ட் கிட்” நு சொல்லிக்க்குவான். அதாவது அவன் ஒரு “ஸ்கோஃபீல்ட்” பிஸ்டல் ஹேண்டில் பன்ணுவதில் மன்னன் என்பதால் அந்த அடைமொழி என்பான்.இவன் ஒரு மாதிரியான சைல்டிஷ் கேரக்டர்.



“நீங்கதான் வில்லியம் மன்னியா? உங்களை பார்த்தால் அப்படி தெரியலை. என் அங்கிள் பீட் சொன்னார், நீங்க ஒரு பெரிய கன்ஃபைட்டர்னு. எனக்கு ஒரு பார்ட்னர் வேணும்னா, நீங்கதான் நல்ல ஒரு சாய்ஸ் என்றார். உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கு” என்பான்.

“உள்ளே போய் பேசலாம்” என்பார் வில் மன்னி குழந்தைகள் அருகில் இருப்பதால்.

“என்ன விசயம்?” நு கேட்பார்.

அதற்கு அந்த இளைஞன் சொல்லுவான். நான் "பீட்"டினுடைய நெஃப்யூ இதுபோல் வயாமிங்ல ஒரு விலைமாதை இரண்டு பேர் கண்டமேனிக்கு காயப்படுத்திவிட்டார்கள். அவர்கள் இருவரையும் கொன்றால் $1000 ரிவார்ட். அவர்களைக் கொல்ல எனக்கு ஒரு பார்ட்னெர் வேணும் என்று. உடனே "வில் மன்னி" (க்ளிண்ட் ஈஸ்ட்வுட்) சொல்வார் தான் திருந்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். என் மனைவி என்னை திருத்திவிட்டாள். உன் அங்கிள் பீட் சொன்னதுபோல் நான் இப்போது இல்லை என்று விளக்கி அவனை அனுப்பிவிடுவார்.

உடனே அந்த சிறுவன், உங்க மனதை மாற்றினால், நான் வடக்குப்பக்கம் வயாமிங் நோக்கிப் போகிறேன் நீங்க வந்து சேர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் பார்த்தால் ரொம்ப கஷ்டப்படுவதுபோல் இருக்கு, இந்தப்பணம் நல்லா உதவலாம் என்று சொல்லிவிட்டு போவான்.

அவன் போனவுடன் வில் மன்னிக்கு மனது மாறும். மனைவியும் உயிருடன் இல்லாததால், ஏன் செய்யக்கூடாதுனு ஒரே மனக்குழப்பமா இருக்கும். தன் துப்பாக்கியை எடுத்து சுட்டுப்பார்ப்பார். சரியாக சுடக்கூட தெரியாது. குதிரையில் ஏறினால், அதிலிருந்து வழுக்கி விழுவார். எப்படியோ கஷ்டப்பட்டு குதிரையில் ஏறி துப்பாக்கி, மற்றும் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு, தன் குழந்தைகளை கவனமாக இருக்க சொல்லிவிட்டு புறப்படுவார்.

போகும் வழியில் தன் நண்பன் நெட் லோகனையும் (மார்கன் ஃப்ரீமேன்) அழைத்துக்கொண்டு போவார்.

பணம் தேவை என்பதாலும், ஒரு பெண்ணை அகோரப்படுத்தியதாலும் இருவருக்கும் அது தப்பாகத்தோனாது. வேதாளம் முருங்க மரத்தில் ஏறும்!

இருவரும் அந்த சிறுவனை கொஞ்ச நாளில் கேட்ச் பண்ணுவார்கள். அவன் முதலில் “நெட்” சேர்வதை விரும்ப மாட்டான். பிறகு “நெட்” என் ஃப்ரெண்டு, அவனை நீ சேர்க்கலைனா, நானும் வரவில்லைனு வில் மன்னி சொன்னதும், அந்த சிறுவன் சரி என்பான். 3 பேரும் $1000, சமபங்கா பிரிச்சுக்கலாம் என்று வயாமிங் நோக்கி போவார்கள்.

போகும் வழியில், அந்த சிறுவனுக்கு “ஷார்ட் சைட்” அவன் இதுவரை யாரையும் கொன்றதில்லை எனபதை, வில் மற்றும் “நெட் லோகன்” புரிந்து கொள்வார்கள். வில் லும், நெட் டும் பழங்கதை பேசிக்கொண்டு போவார்கள். யார் யாரை கொன்றார்கள், என்ன என்ன அயோக்கியத்தனம் எல்லா செய்தார்கள் என்று. இந்த பையன் ஸ்கோஃபீல்ட் கிட் ஏதாவது பொய் சொல்லிக்கொண்டு உளறிக்கொண்டே வருவான். அவன் சொல்லும் கதைகளையெல்லாம் இவர்கள் இருவரும் நம்பமாட்டார்கள்.

பிக் விஷ்கியில் இவர்கள் மூவரும் நுழையும்போது, இங்லிஷ் பாப் வெளியே அனுப்பப்படுவார். அன்றும், இடி மின்னல் மழையாக இருக்கும். இரவு நேரம். வில்லியம் மன்னிக்கு ஒரு ஃப்ளூ (காய்ச்சல்) வந்துவிடும். ஏதோ உளற ஆரம்பித்துவிடுவார். மூவரும் அந்த சலூன் (க்ரீலீஸ்) உள்ளே போவார்கள். க்ளிண்ட் (வில்லியம் மன்னி) மட்டும் குடிக்க மாட்டார், விலைமாதுவிடம் போவது தப்பு என்று நினைப்பார். அதனால், வில்லியம் மன்னி மட்டும் அங்கே பார்ல உட்கார்ந்து இருப்பார். மற்ற இருவரும், மேலே போய் அந்த விலைமாதுகளிடம் தாங்கள் வந்த விசயத்தையும், அவர்களை கொல்லப்போகிறோம் என்றும் சொல்வார்கள். அதற்காக அட்வாண்சாக அவர்களிடம் படுப்பார்கள். இப்போ விசயம் செரீஃப்க்கு போய்விடும். அதாவது 3 ஸ்ட்ரேஞ்சர்ஸ் வந்து இருக்காங்க, அவர்களிடம் துப்பாக்கி இருக்கு என்று.

உடனே நம்ம ப்ரூட்டல் செரீஃப் லிட்டில்பில் அங்கே வருவார். இப்போ வில்லியம் மன்னி மட்டும்தான் இருப்பார். ஒரு விஷ்கி பாட்டில் டேபில் மேலே இருக்கும். நெட் லோகன், நண்பனை குடிக்க சொல்லி வலிய்றுத்திவிட்டு மேலே விலைமாதுவிடம் போய்விடுவார்.

செரீஃப் வந்தவுடன், வில் மன்னியிடம்

"உன் பெயர்?'

"வில்லியம்"

"வில்லியம்??"

"ஹென்றிஷா"

இங்கே க்ளிண்ட் உண்மை பேரை சொன்னால் பெரிய விபரீதம் ஆகிவிடும். வில்லியம் மன்னி என்கிற பேர் அமெரிக்கா முழுவது பிரபலம்.

"துப்பாகி எதுவும் வச்சிருக்கியா?'

"இல்லை"

"உன் ஃப்ரெண்ட்ஸ் மேலே இருக்காங்க இல்ல? அவர்கள்?'

"அவங்ககிட்டயும் இல்லை"

செரீஃப், வில் மன்னி அருகில் வந்து செக் பண்ணுவார். துப்பாக்கி அவர் வைத்திருப்பார். அதை செரீஃப் கையில் வாங்கிக்கொண்டு,

"இது என்ன?"

"அது பாம்பு கீம்பு வந்தால் கொல்வதற்கு"

"இங்கே பாம்பு கிடையாது, மிஸ்டர் ஹென்றிஷா"

"லோட் பண்ணல, பவுடர் ஈரமா இருக்கு"

இப்போது, எல்லோரும் இருப்பார்கள். அந்த எழுத்தாளர், எல்லா டெப்புட்டிகளும், ஒரு சில விலைமாதுகள், ஸ்கின்னி எல்லோருமே வேடிக்கை பார்ப்பார்கள்.

செரீஃப், இது மாதிரி பொய் சொல்லி சமாளிப்பதை பார்த்ததும் பயங்கர கடுப்பாயிடுவார் தன் பிஸ்டலை வச்சி வில்லியம் மன்னி (க்ளிண்ட்) முகத்தில் ஓங்கி ஒரு அடி அடிப்பார். கீழே விழுவார் வில்லியம் மன்னி. முகத்தில் கீறல் விழுந்து ரத்தமா ஓடும். அவருக்கு காய்ச்சல் வேற, வயதும் ஆகிவிட்டது, துப்பாக்கியும் இல்லை. தற்காப்புக்காக விஷ்கி பாட்டிலை எடுக்கப்பார்ப்பார், அதை எடுத்தவுடனே அடுத்த அடிவிழும். அடினா உங்க அடி எங்க அடி இல்லை. பூட்ஸ்கால எத்தி எத்தி வில்லியம் மன்னியை பிச்சு பிச்சு எடுப்பார் செரீஃப்.

அடிச்ச அடினால எழுந்திரிக்கக்கூட முடியாது. அப்படியே தவழ்ந்து வெளியே போவார். எல்லோரும் ஷாக் ஆகி நிற்பார்கள். அந்த எழுத்தாளர் திரு திரு னு முழிப்பார்.

இங்கே செரீஃப் வந்ததை பார்த்தவுடன், ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் வேறொரு வழியில் அனுப்பிவிடுவார்கள் அந்த விலைமாதுகள். எப்படியோ தடவி தடவி வெளியே வரும் வில்லியம் மன்னி யை பின்னாலிருந்து வந்து ஃப்ரெண்ட்ஸ் குதிரையில் ஏற வைத்து அழைத்து செல்வார்கள்.

செரீஃப் வெற்றிப்புன்னகையுடன் இருப்பார்.

வில்லியம் மன்னிக்கு இந்தக்காயங்களுடன் காய்ச்சல் அடிக்கும். ஊருக்கு வெளியே விலைமாதுகள் உதவியுடன் ஒரு இடத்தில் 3 பேரும் தங்குவார்கள். வில் மன்னி காய்ச்சலில் ஒரே புலம்பல். அவருக்கு சாகப்போகிற பயம் வந்துடும். செத்துவிடார் என்றே ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் முடிவு செய்துவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் அந்த "கிட்", நெட் லோகனிடம்,

"வில் செத்தால் என்ன பண்றது?" என்பான்.

"புதைப்போம்" என்பார் நெட்.

"இல்லை, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்ந்து அந்த 2 பேரையும் கொன்றுவிடலாம். நீ உதவி செய்" என்பான்.

"நான் அவன் இல்லாமல் யாரையும் கொல்லமாட்டேன்" என்பார் நெட் லோகன்.

வில்லியம் மன்னி பிழைப்பாரா, சாவாரா என்ன ஆகப்போதுனு பயந்துகொண்டு இருப்பார்கள்.

-தொடரும்

Wednesday, April 8, 2009

Unforgiven(A)-மன்னிப்பே கிடையாது! (2)

போலிஸ் செரீஃப் லிட்டில் பில் வருவார்! மழை இடி மேலும் அது ஒரு இரவு நேரம்! லிட்டில் பில் வந்தவுடன் அந்த ஸ்ட்ராபரி என்கிற விலைமாது அவர்களை இப்படி செய்த கொடுமைக்காக தூக்கில் போட வேண்டும் என்று கேட்டுக்கொள்வாள்.

"இவர்களை தூக்கில் போடுங்க லிட்டில் பில்!" என்பாள் ஸ்ட்ராபெர்ரி

ஆனால் லிட்டில் பில் க்கு விலைமாது மேலெல்லாம் பெரிய மரியாதை இல்லை. அவர் நம்பிக்கை என்னனா "No whore is gold"! இவள் இப்படி பேசுவதே பிடிக்காது அவருக்கு. அவரோட டெப்டி ஒருவரை போய் "சவுக்கு" எடுத்து வர சொல்லுவார். அதாவது, இவர்களுக்கு தண்டனை சவுக்கால் இவர்களை அடிப்பது. இவர்களை சவுக்கால் அடித்து தண்டித்தால் போதும் என்று முடிவு செய்து, இவர்களை தண்டிக்க ஒரு சவுக்கால் அடிக்க ஆயத்தமாவான்.

அப்பொழுது, பாதிக்கப்பட்ட அந்த விலைமாது (டெலிலா) வின் ஓனர் "ஸ்கின்னி" சொல்லுவான். நான் காசு கொடுத்து அவளை வாங்கி வந்து இருக்கிறேன். இந்த நிலைமையில் அந்த விலைமாதிடம் யாரும் உறவுக்கு போக மாட்டார்கள். அதனால் என்னுடைய ப்ராப்பர்டி டேமேஜ் ஆனதற்கு லயபிலிட்டி வேணும். அவளிடம் இனிமேல் யாரும் போகமாட்டார்கள், அதனால் எனக்கு பணம் வேணும் என்பார்.

உடனே செரீஃப் சவுக்கடியை கைவிட்டு வேறு நீதி வழங்குவார். அதாவது குற்றவாளிகளுக்கு ஃபைன்!! அவர்கள் வைத்திருக்கும் குதிரைகள் மைக் 4 மற்றும் டேவி 2 கொண்டுவந்து ஸ்கின்னியிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர் வழங்கும் நீதி.

இப்போ நட்டமடையாதது ஸ்கின்னி என்கிற அந்த பிம்ப்-வியாபாரி! ஆனால் அந்த விலைமாதுவின் அழகு சிதைந்துவிட்டது. அதற்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை! இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு விலைமாது என்பதால் அவளை நாயைவிட கேவலமாக மதிப்பார் அந்த செரீஃப். ஆனால், ஸ்ட்ராபெர்ரி இந்த அநியாத்திற்கு பழி தீர்க்காமல் விடப்போவதில்லை என்று முடிவெடுத்து விடுவாள். விலைமாதுகள் அனைவரும் ஒன்று சேருவார்கள். ஸ்கின்னிக்கு தெரியாமல் எவ்வளவு பணம் சேர்த்து வைத்து இருக்கீங்கனு பேசுவார்கள். ஒரு $500 போல தேறும். ஆனால் இன்னும் சேர்த்து $1000 சேர்ந்தவுடன் அந்த இருவரையும் கொலை செய்கிறவர்களுக்கு $1000 பரிசு என்று நாடுமுழுவதும் பரப்ப முடிவு செய்வார்கள்.

செரீஃப் சொன்னது போல் அபராதமாக குற்றவாளிகள் இரண்டு பேரும் ஒரு 6 குதிரைகளை ஸ்கின்னியிடம் கொடுத்து, ஸ்கின்னியை சமாதானப்படுத்துகிறார்கள். அப்போது டேவி என்கிற அந்த சின்னப்பையன், தன்னுடைய நஷ்டயீடாக ஒரு அழகான குட்டி குதிரை ஒன்றை அந்த விலைமாதுக்கு கொடுக்க முற்படுவான். ஆனால் அவர்கள் அவனை அதற்கு அவனை கல்லால் அடித்தே துரத்திவிடுவார்கள். விலைமாதுகள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அவர்களால் இவர்களை மன்னிக்கவே முடியாது! இவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதென்று! இவர்களை உயிரோடு பார்க்க இஷ்டப்படவில்லை!

தான் சாதாரண விலைமாதுகள் எப்படி இதை செய்யமுடியும்? பணத்தால்தான் சாதிக்கலாம்! இவர்களை கொல்பவர்களுக்கு $1000 ரிவார்ட், என்கிற செய்தி ரகசியமாக பரப்புகிறார்கள். விலைமாதுக்களிடம் வரும் ஒரு சிலர்கள் அந்த செய்தியை டெக்ஸாஸ் வரை பரப்புகிறார்கள்.

இதுபோல் $1000 ரிவார்ட் விசயம் லிட்டில் பில்லுக்கு தெரிய வருகிறது. இருந்தும் விலைமாதுக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை! ஆனால் ஊரில் யாரும் துப்பாக்கி வைத்திருக்கக்கூடாது என்கிற சட்டம் கொண்டு வரப்படுகிறது! இதற்கிடையில் லிட்டில் பில் தன்னுடைய வீட்டில் கார்ப்பண்டர் வேலை செய்து ஓரளவு கட்டி முடிக்கிறார்.

முதலில் இந்த செய்தி ஒரு கன்ஃபைட்டர் அண்ட் கில்லர் இங்லிஷ் பாப் (English Bob )என்பவரை அடைகிறது. இவர் யாருனா நம்ம ரிச்சேர்ட் ஹாரிஸ் (Richard Harris).



இவர் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு கொலையாளி/கன்ஃபைட்டர். இவர் கணக்குக்கு நெறைய பேரை கொன்று இருக்கிறார். இவர் எதுக்கெடுத்தாலும் அமெரிக்கன் அரசியல் திட்டத்தை அதாவது ஜனாதிபதித்துவத்தை கேலி செய்து, ரொம்பவே பேசுவார். இது அமெரிக்கர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் இருந்தாலும் இவன் ஒரு கொலையாளி/கன் ஃபைட்டர் என்பதால் யாரும் ஒண்ணும் செய்யாமல் விட்டுவிடுவவர்கள். இப்போ இங்லிஷ் பாப் இந்த இரண்டு பேரையும் கொன்னுட்டு $1000 ரிவார்டை வாங்க பிக் விஷ்க்கிக்கு வருகிறார்.

An interesting part of this story is that, கொலையாளி English Bobக்கு ஒரு பயோக்ராஃபர்/எழுத்தாளர். அவர் பெயர், W.W. Beauchamp.



அவர் "ட்யூக் ஆஃப் டெத்" என்கிற கதை இங்லிஷ் பாப் பின் "சாதனைகளை" வைத்து எழுதிக்கொண்டு இருப்பார். இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமே, ரொம்ப பயந்த சுபாவம்.

இந்த கதை எழுதுகிற பார்ட் இந்தக்கதையில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒண்ணு. இதுபோல் இதுவரை எந்தப்படத்திலும் ஒரு கேரக்டர் பார்த்ததில்லை. அதுமட்டுமல்ல, புகழுக்கு மனுஷன் எப்படி அடிமையாகிறான் என்பதை இந்த கேரக்டர் மூலம் அழகா க்ளிண்ட் சொல்லி இருப்பார். நடக்கப்போற இந்த கொலைகளை வேடிக்கை பார்க்கவும் அதைப்பற்றி எழுதவும் இந்த ஜேர்னலிஸ்ட் (writer) இங்லிஷ் பாப் வுடன் வருவார். இதிலென்ன விசயம்னா இங்லிஷ் பாப் தன்னை பெரிய ஹீரோவாக்க நெறைய பொய் சொல்லி தன்னை மிகப்பெரிய ஒரு கதானாயகன் போல அந்த பயோக்ராஃபரிடம் சொல்லி இருப்பார். ஆனால் அவர் சொன்னதில் பாதி பொய் என்று தெரியாது.

இங்லிஷ் Bob, Big whiskey வந்தவுடன், இந்த விலைமாதுகள் ஒரே சந்தோஷமா இருப்பாங்க! ஆனால், வந்து கொஞ்ச நேர்த்திலேயே, "லிட்டில் பில்" டெபுட்டிகள் இங்லிஷ் பாபை அனுகி அவாரிடம் உள்ள துப்பாக்கிகளை கொடுக்க சொல்வார்கள் (அதுதான் சட்டம்). இங்லிஷ் பாப் கொடுக்காமல், ஏதோ கதை சொல்லிவிட்டு போயிடுவார். இன்னொரு விசயம் என்னனா, அங்கே இருக்கிற லிட்டில் பாப் டெபுட்டிஸ்ல யாருமே ரொம்ப திறமையானவர்களோ, தைரியமானவர்களோ கிடையாது. லிட்டில் பில் மட்டும்தான் பெரிய ஆளு. அதனால் டெபுட்டிகளால் இங்லிஷ் பாபை கட்டுப்படுத்த முடியாது. லிட்டில் பில்லிடம், அவர் டெப்புட்டிகள் இங்லிஷ் பாப் என்ற கொலைகாரன் வந்து இருக்கான் என்று அவரைப்பற்றி சொன்னதும் விசயத்தை கேட்டு லிட்டில் பில் வருவார். அப்போதுதான் இங்லிஷ் பாப் க்கும் லிட்டில் பில்லுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.

இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர் முன்னால் முறைப்படி அறிமுகப்படுத்திய பிறகு, இங்லிஷ் பா இடம் இன்றைய சட்டம் என்னனு சொல்லி, அவரிடம் துப்பாக்கிகளை கொடுக்க சொல்லி கேட்பார்- துப்பாக்கி முனையில், லிட்டில் பில். இங்லிஷ் பாப் தன்னிடம் உள்ள ஒரு துப்பாக்கி மட்டும் கொடுத்துவிட்டு நழுவப்பார்ப்பார். இந்த நேரத்தில் ஊரே இந்த காட்சியை வேடிக்கை பார்க்கும். ஆனால் லிட்டில் பில், இங்லிஷ் பாபை அத்துடன் விடாமல் மறைத்து வைத்திருக்கும் ஒரு சிறிய துப்பாக்கியையும் வாங்கிவிட்டு, இங்லிஷ் பாபை, கண், காது, மூக்கு தெரியாமல் அடி அடினு அடிச்சு சட்னி ஆக்குவார். பிறகு ஜெயிலில் போடுவார். இதுபோல அடித்தால்தான் ஒருவரும் இதுபோல் வரமாட்டார்கள் என்கிற எண்ணம், லிட்டில் பில்லுக்கு. இதை வேடிக்கை பார்த்த ஊர்மக்கள், மற்ரும் விலைமாதுக்கள் எல்லோருமே இனிமேல் எவனும் வரமாட்டான் அடி வாங்க என்று நினைப்பார்கள்.

இங்லிஷ் பாப் ஜெயில்ல இருக்கும்போது அவருக்கு கேட்பதுபோல இப்போ பயோக்ராஃபர், லிட்டில் பில்லுடன் பேசிக்கொண்டு இருப்பார். அப்போ அவர் எழுதிய கதையை படித்துவிட்டு அதில் சொன்ன பொய்களையெல்லாம் கேலி செய்து சிரிப்பார் லிட்டில் பில். இங்கே ரெண்டு மேட்டெர் டெவெலப் ஆகும். ஒண்ணு, அந்த பயோக்ராபருக்கும் லிட்டில் பில் இங்லிஷ் பாபைவிட பெரிய ஹீரோவாக தோனும். லிட்டில் பில்லுக்கும் தன்னுடைய புகழ் இது போல் ஒரு எழுத்தாளர்மூலம் பரவனும்னு ஆசை வரும். இருவரும் நல்ல நண்பர்களாகிவிடுவார்கள். இங்லிஷ் பாபை ஊரை (பிக் விஷ்கி) விட்டு வெளியே அனுப்பிவிட்டு. ட்யூக் ஆஃப் டெத் கதையில் லிட்டில் பில் ஹீரோ போல மாற்றியமைப்பார்.

நம்ம லெஜெண்டரி ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (வில்லியம் மன்னி) பற்றி அடுத்த பகுதியில்!

-தொடரும்

Tuesday, April 7, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது (1)!



* எனக்குத்தெரிய oscar committee ஒரு "வெஸ்டர்ன் மூவி" க்கு ஆஸ்கர் (பெஸ்ட் பிக்ச்சர்) வழங்கியது இதுதான் முதல் தடவை!

* Clint Eastwood, ஆஸ்கரை (பெஸ்ட் இயக்குனர்) தட்டிக்கொண்டு போனதும் இதுவே முதல் தடவை!



பொதுவாக க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வெஸ்டெர்ன் படங்கள்னா என்ன? சும்மா துப்பாக்கி சூடா இருக்கும். கடசியில் ஹீரோ மட்டும் தப்பிப்பார் என்று சொல்லி அதையெல்லாம் ஒரு படமாகவே விமர்சகர்கள் கருவதில்லை. ஆனால் இந்தப்படத்திற்கு பெஸ்ட் பிக்சர் ஆஸ்கர் கிடைத்தது!

அப்படி என்னப்பா இருக்கு இந்தப் படத்தில்?

என்னைக்கேட்டால் இந்தப்படத்தில் எல்லாமே இருக்கு. ரொம்ப வித்தியாசமான ஒரு வெஸ்டெர்ன் மூவிதான் அண்ஃபர்கிவென்!

கதை:

லேட் 18ம் நூற்றாண்டில் நடப்பதுபோல் எடுத்து இருப்பார்கள். Wyoming state-ல ஒரு சின்ன ஊர் Big Whiskey. அங்கே ஒரு சட்டத்தைக்காக்கும், அதே சமயத்தில் தான் வைத்ததுதான் சட்டம், நியாயம் என்று எண்ணும் ஒரு ஷெரீஃப் (Police head) இருக்கிறார். இவர் பெயர் Little Bill Daggett ! இவர்தான் நம்ம Gene Hackman!



பிக் விஸ்கியில் இவர்தான் சட்டம்! இவர்தான் நீதிபதி! இவர்தான் எல்லாம் அங்கே! இவருக்கு கீழே 4-5 டெப்டி காவலர்கள். ஒரு காலத்தில் "லிட்டில் பில்" ஒரு பொறுக்கி, ரவுடி! கன் ஃைபட்டர்! ஆனா இன்று Little Bill சட்டப்பாதுகாவலன். தான் என்கிற அகந்தையிலும், தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையுடன் ராஜா போல் இருக்கிறார் அந்த சின்ன டவுனில். இவர் தனக்கு ஒரு வீடு தானே தச்சுவேலை (காப்பெண்டர்) வேலை பார்த்து கட்டிக்கொண்டு இருப்பார். கடைசிக்காலத்தில் ஓய்வு பெற்ற பிறகு அங்கே வாழ்வதாக திட்டம்.

"பிக் விஷ்கி" டவுன்ல "க்ரிலீஸ்" என்கிற ஒரு சலூன் நடத்தி வருகிறார் "ஸ்கின்னி" என்கிற ஒரு வியாபாரி. இவர் வியாபாரம், சாப்பாடு, மதுபானங்கள் மற்றும் விபச்சாரம். பாஸ்டனிலிருந்து 5-6விபச்சாரிகளை வாங்கி வந்து அவர்களை வைத்து அந்த ஊரில் பிஸினஸ் நடத்தி வருகிறார்.

இப்படி Big whiskey town அமைதியாக போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் நல்ல இடி, மின்னல், மழை பெய்து கொண்டு இருக்கும்போது அந்த சலூனில் ஒரு பெரிய பிரச்சினை வெடிக்கிறது.

"Quick Mike" மற்றும் Davey என்கிற இரண்டு ஃபார்ம் வொர்க்கர்ஸ் (Cowboys) அந்த விபச்சாரிகளிடம் பொழுதுபோக்க வந்திருப்பார்கள். Davey என்பவன் ஸ்ட்ராபெர்ரி என்கிற ஒரு பெண்ணுடன் இருப்பான். அதே நேரத்தில் அடுத்த அறையில் மைக் என்பவன், அங்கே உள்ள “டெலிலா” என்னும் இன்னொரு அழகான விபச்சாரியிடம் படுக்கப்போவான். அப்படிப் போகும்போது, அவள் மைக்கினுடைய “ஆணுறுப்பை” பார்த்ததும் ”என்ன இவ்வளவு சின்னதாக இருக்கு?” என்று அவளையே அறியாமல் நகைத்துவிடுவாள். இப்படி அவள் நகைத்தது ஒரு பெரிய விபரீதமாகிவிடும்!

Mike க்கு ஏற்கனவே உள்ள இண்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வெடித்து கேவலம் ஒரு வேசி, அவன் குறியைப்பார்த்து கேலிபண்ணி சிரித்துவிட்டாள் என்று பயங்கர கோபம் வந்துவிடும். அந்த கோபத்தில், அவன் மிருகமாகிவிடுவான்! அந்த விலைமாதுவை கையில் இருந்த கத்தியை வைத்து அவன் நண்பன் டேவியின் உதவியுடன் முகம், மார்பு, எல்லா இடங்களிலும் கத்தியால் கீறி, வெட்டி அவளை அகோரப்படுத்திவிடுவான். அப்படி வெட்டுவதற்கு உதவியது அவன் நண்பன் டேவி. அவன் ஒரு டீன் ஏஜ் பையன். ஏதோ தெரியாமல் மைக்குக்கு பயந்து கொண்டு அவளை நல்லா பிடித்துக்கொள்வான் மைக் அவளை கத்தியை வைத்து கீறுவதற்கு. நல்லா அவளை வெட்டி காயப்படுத்தி அவள் முக, உடலழகை சிதைத்த பிறகு அந்த விபச்சாரிகளின் ஓனர், ஸ்கின்னி, வந்து ஒரு துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி இவர்கள் இருவரையும் ஒரு கயிறு வைத்து கட்டிப்போடுவார்கள். போட்டுவிட்டு, நம்ம சட்டப்பாதுகாவலர் லிட்டில் பில்(செரீஃப்)டம் வந்து தண்டனை/நியாயம் வழங்க அவரை அழைத்து வரச் சொல்லச்சொல்லி தூதுவிடுவார்கள்.

மீதி அடுத்த பகுதியில்

-தொடரும்

Wednesday, March 18, 2009

நடிகர் திலகத்தின் "வசந்த மாளிகை" ஒரு காவியம்!


தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார், ஆனந்த் என்கிற சின்னதுரை தான் சிவாஜி. இவரை ஏன் நடிகர் திலகம் னு சொல்றாங்க னு யாருக்கும் இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த டி வி டி பார்க்கவும்!

குடிகாரராக இருக்கும் இளைய ஜமீன் இடம் பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேரும் அழகான கவர்ச்சியான, நேர்மையான அகம்பாவம் பிடித்த, சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத லதாவாக நடித்துள்ளார் வாணிஸ்ரீ.

லதா, குடிகாரராக, பெண்பொறுக்கியாக இருக்கும் சின்னதுரை ஆனந்தை நற்பாதைக்கு கொண்டு வருகிறார், ஆனந்த் தன் மனதை லதாவின் அழகுக்கும், அன்புக்கும் பறிகொடுக்கிறார். தன்னை நல் வழிப்படுத்திய லதாவுக்கு தன் இதயத்தை அளிக்கிறார். லதா ஆசையுடன் அந்த அன்பு இதயத்தை பெற்றுக் கொள்கிறார்.

ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்! தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது. தமிழில் சுமூகமாக முடிகிறது.


இந்தப்படத்தில் சிவாஜி பேசும் சில வசனங்கள்!

* தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம்:

இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!

* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:

பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?

*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:

இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.

* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:

குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.

* நன்றியுள்ள வேலைக்காரனிடம்:

பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!


பாடல்கள்:

கண்ணதாசன் பாடல்வரிகள் எழுத கே வி மஹாதேவன் இசையமைக்க டி எம் சவுந்தர்ராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடியவை.

* மானிட ஜாதியே * ஏன் ஏன் ஏன் * குடிமகனே * கலைமகள் கைப்பொருளே * மயக்கமென்ன
* இரண்டு மனம் வேண்டும் * யாருக்காக! எல்லாமே நல்ல பாடல்கள்!


இந்தப்படத்தில் காதல் கட்டமா இருக்கட்டும், வசனமா இருக்கட்டும், ஸ்டயிலாக இருக்கட்டும், சிவாஜி பின்னி இருப்பார்.

வாணிஸ்ரீ இவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருப்பார். கவர்ச்சியிலும், காதலிலும், தன் சுயமரியாதயை காப்பாற்றும் சீன்களிலும் கிளப்பி இருப்பார் வாணிஸ்ரீ.

பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், ஸ்ரீகாந்த், நாகேஷ், வி கே ராமசாமி, ரமாபிரபா, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி எல்லோரும் நடித்துள்ளார்கள்

வசந்த மாளிகை, 1972 வில் வந்த ஒரு காவியம்தான்!

Tuesday, February 10, 2009

ஸ்லம்டாக் மில்லியனரும் நான் கடவுளும்!

ஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றி பொதுவாக விமர்சிக்கும்போது ஒரு ஆங்கிலேயக்குழு நம் இந்திய அடிமட்ட மக்கள் வாழ்க்கையை காட்டி கேவலப்படுத்திவிட்டார்கள் என்று எல்லோருக்கும் கவலை எரிச்சல். இப்படி ஒரு படத்தை எடுத்து வெள்ளைக்காரகள் நம்மைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறார்கள் என்று ஒரே ஒப்பாரி, பொலம்பல் கேட்டது.

http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_18.html


இப்போ நம்ம ஊர் பாலா பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி நம்ம ஊர் சாமியார்களையும் மூடநம்பிக்கையையும் ரசித்து ரசித்து படமாக எடுத்து உள்ளார். பாலா படங்கள் பொதுவாக என்னால் ரசிக்க முடியாதுதான். என் மட்டமான ரச்னை ஒருபுறம் இருக்கட்டும். இதுவரை நம்ம பாலாவின் "நான் கடவுள்" படத்துக்கு வந்த விமர்சனங்களைப் பார்ப்போம்.

* தமிழ்சினிமா.காம் (5 ஸ்டார்ஸ் *****)

* SIFY (Outstanding)

* Rediff (***)

பொதுவாக எல்லா விமர்சனங்களிலும் இந்தப்படத்தை பாராட்டியுள்ளார்கள். இதுபோக நம்ம ரசினியும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு புகழோ புகழ்னு புகழ்ந்து தள்ளிவிட்டார். பாலாவைத் தவிர வேற யாரும் இதுபோல் எடுக்க முடியாது (இதெல்லாம் ரொம்ப அதிகம்). பாலாவுடைய தைரியத்தை பாராட்டனும். பாலா ஒரு தலைசிறந்த கலைஞன் என்ற புகழாரம்தான் எங்கும் கேட்கிறது.

இதற்கிடையில் பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்கள் பலர் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லைனு சொல்ல பயப்படுகிறார்கள். ஒரு சில் இசைஞானி ஜால்ராக்கள், ஏ ஆர் ரகுமானை தேவையே இல்லாமல் இழுத்து அவமானப் படுத்துகிறார்கள்.

சரி விசயத்துக்கு வருகிறேன். இப்போ, ஒருவேளை இந்தப்படத்துக்கு (நான் கடவுள்) அடுத்த வருடம் ஆஸ்கர் வழங்குறாங்கனு வச்சுக்குவோம் ந்ம்ம இசைஞானிக்கும் சேர்த்து. அப்போவும் நம் பிச்சைக்காரர்கள் கலாச்சாரம் உலகறியும்! நம்ம சாமியார் கலாச்சாரமும் உலகம் அறியும். உலகமே இந்தியா ஒரு பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று சிரிக்கும்.

அந்த மாதிரி ஒரு நிலைமை உருவாகும்போது, இன்னைக்கு ஸ்லம்டாக் மில்லியனரை எடுத்து எங்களை கேவலப்படுத் திட்டாங்கனு புலம்பியவர்கள், அந்தப்படக்குழுவை தூற்றியவர்கள் என்ன சொல்வார்கள்? என்பது என் கேள்வி.

நம்மூர் பாலாவை தூற்றுவார்களா இல்லை போற்றுவார்களா?

Tuesday, September 9, 2008

21: என்னுடைய பார்வையில்




பாவங்களின் நகரமாக கருதப்படும் லாஸ் வேகஸை சுற்றிப்பார்க்க ஆசை இருப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம், லாஸ் வேகஸை இன்ச் இன்சாக கேமராவில் ரசித்திருக்கிறார்கள். எனக்கெல்லாம் 2 மணி நேரம் சென்றாலே போர் அடிக்கும் லாஸ் வேகஸில் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று வியப்படைய வைத்த படம் 21.

கதை ப்ளாட் ரொம்ப சிம்பிள், கதாநாயகன் பென் கேம்பெல்(ஜிம் ஸ்டர்கெஸ்) ஒரு ஜீனியஸ் எம்.ஐ.டி மாணவர். இவருக்கு ஹாவர்ட் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது. இவருக்கும், ஹாவர்டுக்கும் இடையே தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான்: பணம்! அறை, படிப்பு, சாப்பாடு எல்லாவற்றுக்கும் 300,000 டாலர்கள் தேவைப்படுகிறது. பென்னுக்கு அப்பா இல்லை, ஏழை அம்மா மட்டுமே. பணத்தை எப்படி தேடுவது என்ற கவலையில் இருக்கும் ஹீரோவுக்கு எம்.ஐ.டி பேராசிரியர் மிக்கி ரோசா மூலமாக ஒரு தீர்வு கிடைக்கிறது, ப்ளாக் ஜாக்!

ப்ளாக் ஜேக் என்பது உலகின் ரொம்ப பாப்புலரான சீட்டு விளையாட்டு, நினைவாற்றலை அடிப்படையாக வைத்து விளையாடப்படுகிறது. லாஸ் வேகஸில் அதிக சூதாட்டக்கிளப்புகளில் விளையாடப்படுவது. நான் ஒரு முறை கூட விளையாடியது இல்லை(நம்புங்க, நிஜமா தான்). ஆனால், "Winner! winner! chicken dinner" என்ற கோஷத்துடன் சிகரெட் புகைய நிறைய பேர் விளையாட பார்த்திருக்கிறேன். எனக்கு "Wheel of fortune" மற்றும் ஸ்லாட் மெஷின்கள் விளையாடத்தான் பிடிக்கும், அதுவும் கொஞ்ச நேரம்(உண்மையை சொல்லிட்டேன் பார்த்தீங்களா?). சரி நம்ம கதையை விட்டு சினிமா கதைக்கு வருவோம், ப்ளாக் ஜாக் விளையாடி நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசிரியரின் குறுக்கு வழி யோசனையை முதலில் மறுக்கும் பென், பிறகு தன்னுடைய நெடுநாள் 'க்ரஷ்' ஆன ஜில் டெயிலர்(கேட் போஸ்வொர்த்) வற்புறுத்தியதும் ஒப்புக்கொள்ளுகிறார்.

பிறகு லாஸ் வேகஸைப்பற்றிய அற்புதமான காட்சிகள் விரிகிறது. கேமராவை கதாநாயகன் பார்வையில் இருந்து எடுத்திருப்பதால் எங்கே பார்த்தாலும் அழகான பெண்கள்,பெண்கள், பெண்கள்! சலிப்பு(பொறாமை) தட்டுகிறது. ஆண்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். கதாநாயகனுக்கு அந்த பெண்களை எல்லாம் விட்டு ஏன் சுமாராக இருக்கும் ஜில்லை பிடிக்கிறது என்ற லாஜிகல் கேள்வியை எல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, அது அப்படித்தான். பிறகு என்ன ஆகிறது? கதாநாயகனுக்கு தேவையான பணம் கிடைக்கிறதா என்பதெல்லாம் மீதி கதை.

படத்தில் நான் ரசித்த காட்சிகள் நிறைய இருக்கிறது, குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கதாநாயகன் - நாயகி காதல் காட்சியின் போது பேக்கிரவுண்டில் துள்ளி குதிக்கும் பெலாஜியோ செயற்கை இசை நீரூற்று(லாஸ் வேகஸ் செல்பவர்கள் இந்த காட்சியை காணத்தவறாதீர்கள்) மற்றும் சூதாட்ட டேபிளில் கதாநாயகன் முதல் முறையாக லேசான தடுமாற்றத்துடன் ப்ளாக் ஜாக் விளையாட ஆரம்பிக்கும் காட்சி. கதாநாயகனுக்காகவே இந்த படம் பார்க்கலாம். டாம் க்ரூஸ் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாரோ, அப்படியே பார்க்க லட்சணமாக இருக்கிறார்.

படத்தில் நிறைய லாஜிகல் ஓட்டைகள் இருக்கிறது, இவ்வளவு படித்த, அறிவான கதாநாயகன், சம்பாதிக்கும் பணத்தை கூரையில்லா மறைத்துவைக்கவேண்டும்? வேறு இடமா கிடைக்கவில்லை? சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது! படத்தின் கடைசி 30 நிமிடம் சலிப்பு தட்டுகிறது. சினிமாத்தனமாக இருக்கவேண்டும், சராசரி ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற ஆதங்கத்தில் 'லீகலி ப்ளாண்ட்' போன்ற வெற்றிப்பட இயக்குனரான ராபர்ட் லுகேட்டிக் கதையை லாஜிக் இல்லாமல் அவசர அவசரமாக நகர்த்துகிறார். லீகலி ப்ளாண்டில் இருந்த நிதானம் காணாமல் போயிருக்கிறது! க்ளைமேக்ஸில் அதிக கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும். மேலும் சாதாரண மக்களுக்கு உதவும் ப்ளாக் ஜாக் டிப்ஸ் ஏதும் இந்த படத்தில் கிடையாது, உபயோகிக்கப்படும் கை சிக்னல்களும் "இதோ பார், நான் ஏதோ திருட்டுத்தனம் பண்ணுகிறேன்" என்று காட்டிக்கொடுக்கும் விதமாக இருக்கிறது. மேலும் ப்ளாக் ஜாக் டீலர்களை படத்தில் ஏமாற்றுவது போல நிஜத்தில் ஏமாற்றுவது கடினம். டீலர்களே பொதுவாக நல்ல கவுண்டர்களாக இருப்பார்கள், கார்ட் எண்ணுபவர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதையும் இயக்குனர் சற்று கவனித்திருக்கலாம்.

மொத்தத்தில் 21 படத்தை ஒரு முறையாவது பார்க்கலாம், கணித அல்லது பொறியியல் துறையை சேர்ந்த நம்மைப்போன்றவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். லாஸ் வேகஸில் பளபளப்பையும், அதனுடைய இருண்ட மறுப்பக்கத்தையும் பார்க்க விரும்புபவர்களும் இந்த படம் பார்க்கலாம்.

Tuesday, August 19, 2008

உலகத்தரம், உலகநாயகன் - இதெல்லாம் ஓவர் பில்டப்!




தசாவதாரம் படம் கடைசியில் பார்த்தாச்சு! ரொம்ப லேட் என்று நினைக்கறீங்களா? வேலையை எல்லாம் அப்படியே போட்டு ஓடிப்போய் பார்க்கும் அளவுக்கு முக்கியமான படம் இல்லை என்பதை நீங்க எல்லாம் தொடர்ந்து போட்ட விமர்சன மழையில் புரிந்துக்கொண்டேன். இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?


எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா? பட்டாம்பூச்சி விளைவைப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தயவு செய்து "Butterfly Effect" படம் பார்க்கவும், தசாவதாரத்தில் கமல் எபெக்ட் அல்லது கமல் ஓவர்லோட் வேண்டுமானால் கிடைக்கும்.

"எழவு வீட்டில் நான் தான் பிணம், கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளை" : கமலை பார்த்ததும் இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது. விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல! முகம் இருக்கிறது, மேக்கப் வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி அட்டகாசம் செய்வதா? கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.


கதாநாயகனாக நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே, கமல், தான் நடிக்கும் படங்களில் முழு ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதுவும் இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல். காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது பாவம்! ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா? தசாவதாரத்தில் கமலின் ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது போல, வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்

தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்? ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா? வயதில் குறைந்தவர்களால் மட்டுமே ஹீரோயிசம் செய்ய முடியும் என்று யார் சொன்னது? உலகில் பல சாதனையாளர்கள் வயதானவர்களே! தங்கள் இளமை காலம் கடந்த பிறகே வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் ஏன் காதல் வருகிறது என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. நான் பார்த்தவரைக்கும், ஆண்டாள் பெருமாளை தான் காதலிக்கிறார். "பெருமாளே, பெருமாளே" என்று அரை லூசு மாதிரி படம் முழுக்க சிலையை வைத்துக்கொண்டு புலம்புகிறார்(திரும்பவும் இங்கே தமிழ் கதாநாயகி என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப்). "என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! அசின் மாதிரி ஒருவர் என்னிடம் பேசி இருந்தால், சுனாமியோடு சுனாமியாக கடலில் தள்ளி விட்டு வந்திருப்பேன். சுனாமியில் இறந்தவர்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு நடுவே, இரண்டு பேரும் பேசும் காதல் வசனங்கள் அநாகரீகத்தின், அருவருப்பின் உச்சக்கட்டம்!

ரசிக்க வைத்த கேரக்டர்கள் என்றால் அது தெலுங்கு உயர் அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடுவும், வின்செண்ட் பூவராகவனும். அதிகாரியின் வேடம் கமலுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது, சம வயதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதுவும் தெலுங்குக்காரர்களைப்பார்த்ததும் அதிகாரி கமல் வெளிப்படுத்தும் சென்டிமெண்டும், முகபாவனையும், பார்வையும், பின்ணனி இசையும் அருமை! பூவராகவன் கேரக்டரை அவலட்சணமாக ஆக்கி விட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காகவும், தியாகங்களுக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம்.

ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், பொழுதுபோக்காக கூட இல்லை. அதற்காக எனக்கு ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!