Showing posts with label பதிவர் ஆனந். Show all posts
Showing posts with label பதிவர் ஆனந். Show all posts

Monday, December 16, 2013

பதிவர் anand R க்கு தமிழ்மணம் தனி பகுதி ஒதுக்க வேண்டுகோள்!

யாருனு தெரியலை இந்த கமர்ஷியல் பதிவர் anand R  என்று சொல்லிக்கொண்டு திரிவது?? ஒரு அப்பாவி குழந்தைப் படத்தை ஒண்ணை மாட்டிக்கிட்டு ஒரு நாளைக்கு 10-20 பதிவுகளை தமிழ்மணத்தில் தட்டிவிட்டு, அந்தத் தளத்தில் எல்லா இடங்களிலும் கமர்ஷியல் தொடுப்புகளை கொடுத்து எழவைக் கூட்டுறான் இந்தாளு.

இந்தப் பதிவர், ஆனந் ஆர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி, இ மெயிலில் வரும் "spam" போலதான் இந்தாளுடைய கமர்ஷியல் பதிவுகள் இருக்கின்றன.

தமிழ்மணம் நிர்வாகிகள் இவருடையத் தமிழ்த்தொண்டைப் பாராட்டி இவருக்கென்று தமிழ்மணத்தில் ஒரு தனிப் பகுதி ஒதுக்கி இவரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

எங்கே இருந்துப்பா வர்ராணுக இவனுக?  இதுமாரி கமர்ஷியல் நிறைந்த தளம் ஆரம்பிச்சு, தமிழ்த் தொண்டு ஆற்றி தமிழ்மணத்தின் தரத்தை குறைக்க?

இந்தப் பதிவரை ஏதாவது செய்யுங்கப்பா! நன்றி!