யாருனு தெரியலை இந்த கமர்ஷியல் பதிவர் anand R என்று சொல்லிக்கொண்டு திரிவது?? ஒரு அப்பாவி குழந்தைப் படத்தை ஒண்ணை மாட்டிக்கிட்டு ஒரு நாளைக்கு 10-20 பதிவுகளை தமிழ்மணத்தில் தட்டிவிட்டு, அந்தத் தளத்தில் எல்லா இடங்களிலும் கமர்ஷியல் தொடுப்புகளை கொடுத்து எழவைக் கூட்டுறான் இந்தாளு.
இந்தப் பதிவர், ஆனந் ஆர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி, இ மெயிலில் வரும் "spam" போலதான் இந்தாளுடைய கமர்ஷியல் பதிவுகள் இருக்கின்றன.
தமிழ்மணம் நிர்வாகிகள் இவருடையத் தமிழ்த்தொண்டைப் பாராட்டி இவருக்கென்று தமிழ்மணத்தில் ஒரு தனிப் பகுதி ஒதுக்கி இவரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
எங்கே இருந்துப்பா வர்ராணுக இவனுக? இதுமாரி கமர்ஷியல் நிறைந்த தளம் ஆரம்பிச்சு, தமிழ்த் தொண்டு ஆற்றி தமிழ்மணத்தின் தரத்தை குறைக்க?
இந்தப் பதிவரை ஏதாவது செய்யுங்கப்பா! நன்றி!
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Monday, December 16, 2013
Tuesday, February 15, 2011
தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு!
தமிழ்மணத்தில் இருந்து திரைமணத்தை பிரித்ததால், திரைப்படம் சம்மந்தப்பட்ட இடுகைகளை இரண்டாம்தரமாக ஆக்கி உண்மையிலேயே நல்ல முன்னேற்றம்தான் அடைந்தோம். ஆனால் சமீபத்தில் திரைமணத்தில் திரைப்படம் சம்மந்தமே இல்லாத கண்ட "spam" பதிவுகள் பல (search results? web directory?") புதிய இடுகைகளில் இடம்பெறுகின்றன. :(
இதை தமிழ்மண நிர்வாகிகள் அறிவார்களா? இதெல்லாம் எப்படி தமிழ்திரை வகையில் சேர்க்கமுடியும்? இது ஒரு மாதிரியான "abuse" ஆ? இல்லைனா தமிழ்மணமே இதை அனுமதிக்கிறாங்களா? னு எனக்குத் தெரியலை. அதை தமிழ்மணத்துக்கும், பலருக்கும் சொல்லலாம்னுதான் இந்தப்பதிவு!

Monday, November 15, 2010
திரைமணத்தில் எனக்கு ரெண்டு ஓட்டுப்போட முடியுது?!
என்ன காரணம்னு தெரியலை, நான் அவ்ளோ சீரியஸா என் பதிவுக்கே ஓட்டுப் போடுவதில்லை. ஆனால் திரைமணத்தில் முதலில் இடுகையை இணைக்கும்போது ஒரு ஓட்டு விழுகிறது. முன்பொருமுறை தமிழ்மணத்தின் மூலமும் இன்னொரு ஓட்டுப் போட முடிந்தது. திரைமணம் அக்கவுண்ட் தனியா என்னனு தெரியலை. ஒரு மாதிரி கில்ட்டியா இருந்தது- கள்ள ஓட்டுப் போடுவது. சரினு அதுக்கப்புறம் அதுபோல் தவறு செய்யாமல் கவனமாயிருந்தேன். நமக்கு எதையுமே ஆராச்சி செய்ற ஒரு புத்தி. சரி இந்தப் பிரச்சினையை தமிழ்மணம் சரிசெய்து இருக்குமானு என்னுடைய நேற்றைய பதிவு வாலி 1000 க்கு இப்போ தமிழ்மணம் மூலம் ஓட்டுப் போட்டுப் பார்த்தேன். (திரை மணம், தமிழ் மணம் ரெண்டுக்குமே ஒரே ய்யுசர் நேம் தான்) அதுவும் வொர்க் ஆகுது.
இதுபோல் ஒரு சின்ன க்ளிட்ச் இருப்பதையும், தெரிந்து செய்த என் தவறை சொல்லவே இந்தப் பதிவு.
இனிமேல் தமிழ்மணம் மூலம் ஓட்டுப்போடாமல் கவன்மா இருக்கேன். தமிழ்மணமும் இதுபோல் உள்ள சின்ன பிரச்சினையை சரி செய்தால் நல்லது! ரெண்டு ஓட்டுப்போட்ட குற்றத்துக்குகாக் நானே கில்ட்டியா ஃபீல் பண்ணுறேன். தயவு செய்து யாரும் என்னை திட்டாதீங்க நான் அழுதிடுவேன்! :)

Tuesday, December 23, 2008
தமிழ்மணமும் சில "மூத்தபதிவர்களின்" அநாகரீகமும்!
தமிழ்மணம் ஒரு நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "ப்ளாக் அக்ரெகேட்டர்". இதில், கருத்துக்களை சொல்லி ஒரு சாதாரண பதிவர் தன் திறமையை வெளிக்கொண்டுவரலாம். அதனால் தமிழ்மணம் பல இளம் பதிவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. இன்றைய பிரபலபதிவர்கள் தமிழ்மணத்தால் தன் வலைபூவை வளர்த்தவர்கள்.
வளர்த்தகடா மார்பில் பாய்வதுபோல் இவர்கள் (மூத்தபதிவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள்) அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு தாங்கள் இல்லை என்றால் தமிழ்மணம் இல்லை என்று மிரட்டுவதுபோல நடப்பதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
எனக்கு தெரிய நிறைய கருத்துக்களங்கள், ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அந்த களநிவாகத்தை அவமானப்படுத்த முயற்சித்தால் அவரை களநிர்வாகம் நீக்குவது வழக்கம். ஆனால் பல தமிழ் கருத்துக்களங்களில் அதுபோல் செய்வதில்லை. தமிழ்மணமும் அதுபோல்தான் இன்றுவரை இருப்பதுபோல் தோன்றுகிறது. அதே சமயத்தில், ஒரு நிர்வாகிக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று கொஞ்சமாவது தெரியும் என்பதை மூத்த பதிவர்கள் உணரவேண்டும். நான் மூத்த பதிவர், நான் இல்லைனா நீ இல்லைனு மிரட்டும் வகையில் எழுதிவரும் பதிவர்களைப்பார்த்து தமிழ்மணம் கலங்கி, இவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் சரி சரி என்று போகவேண்டும் என்று சில "மூத்தபதிவர்கள்" எதிர்பார்ப்பதுபோல் இருக்கிறது.
"சூடான இடுகை" பற்றி உண்மை என்னவென்றால், உங்கள் பதிவு சூடான இடுகையில் வந்தால், சாதாரணமாக அந்த இடுகைக்கு வருகிற பார்வையாளர்கள் 3-10 மடங்கு அதிகமாவார்கள். உங்கள் இடுகை சூடாக்கப்பட்டால் நீங்கள் சாதாரண பதிவராக இருந்தாலும் ஒரு பிரபலபதிவரைக்கூட ஓரத்தில் தள்ளலாம். இந்த சூடான இடுகை இருப்பதால்தான் பலர் தன் "ப்ளாக் களை வளர்க்கமுடிகிறது. இன்று "பெரிய பதிவர்" என்று தன்னை நினைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் மற்ற தரமான பதிவுகள் வாசகர்களின் பார்வையிலிருந்து மறைக்கபடுகிறது. துரதிஷ்டவசமாக சில சமயங்களில் சில கேலிக்கூத்துகளும், உப்புபெறாத பதிவுகளும் சூடான இடுகையில் இடம்பிடித்து பல நல்ல தரமான இடுகைகளை மறைத்துவிடுகிறது. :-(
சூடான இடுகையில் தன் இடுகை வரவேண்டும் என்பது ஒவ்வொரு பதிவரின் அவா. இதை ஒரு சிலர் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்று அகந்தையுடன் சொல்லிக்கொண்டு ஆனால் சூடான இடுகையில் தன் பதிவுகளை கொண்டுவர பலவழிகளில் போராடுகிறார்கள்.
பொதுவாக, காமம், ரஜினி, கமல், கற்பு, நாய், செக்ஸ் போன்ற சொற்கள் தலைப்பில் இடம் பிடித்தால், அல்லது இன்னொரு பதிவரை விமர்சிப்பது போன்ற தலைப்புகள் உள்ள பதிவுகளை எளிதாக சூடான இடுகையில் கொண்டு வந்துவிடலாம். இல்லைனா சாரு நிவேதிதா அல்லது ஜெயமோஹன் பற்றி தலைப்பில் எழுதினாலும் சூடான இடுகையில் வரும்.
பல பதிவர்கள் சூடான இடுகைக்கு தன் பதிவை கொண்டு வந்து வந்து பழக்கப்பட்டு சூடான இடுகைக்கு "அடிக்சன்" ஆகிவிட்டார்கள். பல நேரங்களில் இவர்கள் முயற்சி எப்படி சூடான இடுகையில் இதைக்கொண்டு வருவது என்பது மட்டுமே? என்ன விசயம் நாம் சொல்கிறோம் என்பதல்ல! இதில் அதிகமாக இந்த "சூடான இடுகை" மயக்கத்தில் இருப்பது சில மூத்தபதிவர்கள்தான்.
இப்போது, ஒரு புதிருக்கு விடை தெரியாமல் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் "பேக்-அப்" செய்துகொண்டு "ஜனநாயகம்" என்கிற வார்த்தையை "தவறாக" பயன்படுத்தி, தமிழ்மணத்தின் தரத்தையும் அதன் நிர்வாகத்தையும் கீழே கொண்டு வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு விசயம்.
இவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தனிமடலில் பேசவேண்டிய விசயங்களை (புதிருக்கு விடை காண்பதை விட்டு விட்டு) ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கிறார்கள். இதுதான் தன்னை "மூத்த பதிவர்" என்று சொல்லிக்கொள்ளும் பதிவர்களின் லட்சணமா?
குறிப்பு: என்னுயை கருத்துக்களை ஓரளவுக்குத்தான் பின்னூட்டத்தில் சொல்ல முடிகிறது. அதனால்தான் இந்தப்பதிவு.

Subscribe to:
Comments (Atom)