Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Tuesday, April 21, 2009

உளறலா? இல்லை ராஜதந்திரமா இது, கலைஞரே?!

முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிரபாகரனை மனிதாபிமான அடிப்படையில் "தன் நண்பர்" என்பதுபோல் சொல்லியுள்ளார். இது போல் அவர் சொன்னது, பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்போது அவர் சொன்னதை சரி செய்து திரும்ப வேறுமாதிரி சொல்கிறார் என்கிறார்கள்.

சிலர் நினைக்கிறார்கள் இது (இந்த ஸ்டேட்மெண்ட்), திரு. கருணாநிதியின் உளறல் என்று. அதாவது பிரபாகரனை அவர் நண்பர் என்று தேவை இல்லாமல் சொல்லியுள்ளார் என்று. இது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணலாம்.

ஆனால்...

என்ன ஆனால்?

கவனித்துப்பார்த்தால் இது ஒரு கலைஞரின் ராஜதந்திரமாகக்கூட இருக்கலாம்.

* காங்கிரஸ் இதை எதிர்த்து அரசியல் செய்யும் நிலையில் இன்று இல்லை! அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

* இது நிச்சயம் ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர் அபிமானிகளையும் மறைமுகமாக திருப்திப்படுத்தித்தான் இருக்கும்- உளறலாக இருந்தால்கூட.

* ஈழத்தமிழர் பிரச்சினனயை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும், வை கோ வோ, ராமதாஸோ, ஜெயலலிதாவோ இதை வைத்து, இதை க்ரிடிசைஸ் செய்து அரசியல் செய்தால், விபரீதமாக முடிய வாய்ப்புள்ளது.

கவனமா இருங்கப்பா! ஒண்ணு கெடக்க ஒண்ணாகிடறப்போது! :-)))