Thursday, August 7, 2008

கூத்தாடிகளின் அரசியலும், ஆட்டு மந்தை மக்களும்!

இந்த பதிவை கடுங்கோபத்தில் எழுதுகிறேன். திரைப்படத்தை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள், திரைப்படத்துறையினர், முக்கியமாக யார் எப்படி ஏமாற்றினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாத மக்கள் என்று அனைவர் மேலும் கோபம் கோபமாக வருகிறது. திரைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் நலமாக இருந்திருக்கும். திரைப்படத்துறை மூலமாக நாம் அடைந்தது என்ன? ஒன்றுமே இல்லை! அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் அதே கதை: காதல், காதலுக்கு வில்லன் - வில்லி, நாலு சண்டை, ஆறு பாட்டு கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள் - இந்த same old கதைக்கு விதிவிலக்காக வந்த தமிழ்ப்படங்கள் ரொம்பக்குறைவு.

இந்த 'காதல்' என்ற அரைத்த மாவை விதம் விதமாக அரைத்தாகிவிட்டது. பார்த்து காதல், பார்க்காமலே காதல், பொருந்திய காதல், பொருந்தாக்காதல், ஏழை காதலி - பணக்கார காதலன், பணக்கார காதலி - ஏழை காதலன், வேண்டாம் என்று ஒதுக்கி, நாலு அறை கொடுத்தால் கூட மானமே இல்லாமல் ஹீரோ பின்னால் ஓடும் ஹீரோயின்கள் etc etc. நடுநடுவே வன்முறை, ஆபாசம், ஜாதிப்பற்று, மதம்,அரசியல், போலீஸ் போன்ற இதர மலிவு மசாலாக்கள்.

தரமான தமிழ்ப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தரமான தமிழ்ப்படம் என்று நாம் நினைப்பவைகளும், அறிவுஜீவி இயக்குநர்/நடிகர்களாக கருதப்படுபவர்களும் கூட ஹாலிவுட் அல்லது வேற்று மொழி படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை/காப்பியடித்தவர்கள் என்பது கசப்பான உண்மை. யாருடைய படத்தையோ காப்பி அடித்துவிட்டு, வெட்கமில்லாமல் டிவியில் 'என் படம்' என்று பேட்டி பொடுப்பார்கள், விளம்பரப்படுத்திக்கொள்வார்கள்!

இதெல்லாம் கொஞ்ச காலமாகவே என்னிடம் இருந்து வந்த எண்ணங்கள், தமிழ் சினிமா பார்ப்பதையே விட்டுவிட்டேன். நண்பர்கள் யாராவது சினிமா பற்றி பேசினால் கூட தவிர்த்து விடுவேன். என்னுடைய தற்போதைய கோபத்துக்கு காரணம், ரஜினியின் மன்னிப்பு கடிதம் மட்டுமல்ல. ரஜினி என்ற சுயநலவாதியின் சாமியார் முகமூடி பலமுறை கிழிந்தாகிவிட்டது. அதைக்கேட்டு கேட்டு நம்மில் பலருக்கு சலித்துவிட்டது! ஆனால் ரஜினி மட்டும் தான் இப்படியா? உண்ணாவிரதத்தின் போது ஆவேசமாக ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி சொற்பொழிவாற்றிய சத்யராஜ் இதில் ரஜினிக்கு சப்போர்ட். சத்யராஜ் மட்டும் பல்டி அடிக்கவில்லை- பாரதிராஜா, சீமான் போன்றவர்களும் அப்படியே. இவர்களை எல்லாம் நம்பிய நம்மை என்ன செய்தால் தகும்? பிஸ்னஸ் என்றவுடன் அனைவரும் கைகோர்த்துக்கொள்கிறார்களே?

இந்தக்கூத்தாடிகளை நம்பி இவர்களிடம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு அரசியலையே ஒப்படைத்தாகிவிட்டது. சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கும், மக்களுக்குக்காக உழைத்தவர்களும், படித்தவர்களுக்கும் போக வேண்டிய முக்கிய அரசியல் பதவிகளை, படத்தில் மட்டும் ஏழை பங்காளியாக நடித்தவர்களுக்கும், அவர்களின் பெண் நண்பர்களுக்கும், கதை வசனம் எழுதுபவர்களுக்கும், ஏன், காமெடியன்களுக்கு கூட கொடுத்தாகி விட்டது. அவர்கள் ஆட்சி செய்த/செய்யும் அழகை(!) ரசித்தாகிவிட்டது. இனி என்ன? திரும்பவும் கேப்டன், விஜய், கார்த்திக் போன்ற அடுத்தச்சுற்று ஏமாற்றுக்காரர்களுக்கு தயாராகப்போகிறோமா அல்லது இனியாவது மாற்றம் வருமா?

சினிமாவினால் நாம் இழந்தது ஏராளம். நல்ல புத்தகங்களைப்படித்தல், சிந்தித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், உடற்பயிற்சி போன்ற நல்லதெல்லாம் தொலைந்து போய் நாம் couch potato ஆகி வெகு காலமாகிறது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, சினிமாவுக்கும், தொலைக்காட்சிக்கும், நடிகர்களுக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது இயலாத காரியம் இல்லை. நாம் ஆட்டு மந்தையாகவே தொடர்ந்து இருக்கப்போகிறோமா அல்லது மனிதர்களாகி திருந்தப்போகிறோமா என்பது நம் கையில் இருக்கிறது.

Monday, August 4, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 5

எனக்கு எதை பார்த்து வியப்பாக இருக்கிறது தெரியுமா? இந்த பதிவுகளைப்படித்து மற்ற பதிவர்கள் அதிர்ச்சி அடைவது. என்னுடைய அனுபவத்தைப்போல உலகில் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது/ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது, சொல்லப்போனால் என்னை விட பல மடங்கு அதிகமாக!

உதாரணத்துக்கு இந்த நினைவலைகளின் பின்னூட்டத்தில் துளசி டீச்சர் தன்னுடைய தந்தையினால் அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏற்பட்ட வேதனையை பகிர்ந்துக்கொண்டிருப்பார்கள். அது போன்ற அனுபவங்கள் என் அனுபவங்களை விட பலமடங்கு கொடியவை. அந்த ஒரு முறை சறுக்கலைத்தவிர, அப்பா வேறு எந்த தவறும் செய்ததாக நினைவில்லை(அல்லது முட்டாள்தனமான தவறுகள் செய்து மாட்டிக்கொள்ளவில்லை). காலையில் இருந்து மாலை வரை குடும்பத்துக்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு குடும்பத்தலைவர்களுள் அவரும் ஒருவராகவே இருந்தார். நான் இதை எல்லாம் எழுதுகிறேன், மற்றவர்கள் எழுதுவதில்லை. சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

இதை விடவும் பயங்கரமான அனுபவங்கள் சில பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, நாம் கற்பனை பண்ணிக்கூட பார்க்க தயங்கும் பயங்கரம்! உதாரணத்துக்கு திருமதி. டிலோரிஸ். என்னுடைய இருப்பிடத்துக்கு அருகிலேயே வசிக்கிறார் இந்த அமரிக்க-மெக்சிகன் பெண்மணி. எனக்கு உடற்பயிற்சி செய்வது ரொம்ப பிடிக்கும். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை உள்ள ஜிம்மை விட, சுதந்திரமாக பார்க் போன்ற பொது இடங்களில் ஜாக் பண்ணுவதே பிடிக்கும். அங்கே பலரும் ஜாக் பண்ணிக்கொண்டிருப்பார்கள்,அப்படித்தான் டிலோரிஸ் எனக்கு அறிமுகமானார். டிலோரிஸ்(Delores) என்றால் ஸ்பானிஷ் மொழியில் துன்பம் அல்லது வருத்தம் என்று அர்த்தமாம். அவருடைய வாழ்க்கைக்கதையை கேட்ட பிறகு, 'என்ன பொருத்தமான பெயர்'! என்று நினைத்து வியந்தேன்.

சிரித்த முகம், சுருள் சுருளான பொன்நிற முடி, நீலக்கண்கள் - டிலோரஸை முதன் முதலில் சந்தித்தபோது நான் முதலில் கவனித்தது. அதை சொன்னால், "இல்லை எனக்கு உன்னுடைய ப்ரவுன் முடியும், ப்ரவுன் நிறக்கண்களுமே ரொம்ப பிடித்திருக்கிறது" என்று சொல்லி சிரிப்பார். ஒரு 40- 45 வயது இருக்கும், அந்த வயதிலும் ரொம்ப ஃபிட்டாக இருந்தார், அவர் சொல்லவில்லை என்றால் எனக்கு அவருடைய வயதே தெரிந்திருக்காது. தினமும் பார்த்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் துணையாக ஜாக் பண்ண ஆரம்பித்தோம்.

டிலோரஸை பல நேரம் அந்த பகுதியில் பார்த்திருக்கிறேன். நான் அவசரமாக வேலைக்கு ட்ரைவ் பண்ணிக்கொண்டிருக்கும் காலை நேரங்களில், பக்கத்து ஸ்கூல் குழந்தைகள் கவனமாக தெருவை கடக்க உதவும் வாலண்டியராக பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருப்பார். சில சமயம் மாலை நேரங்களில், ஆல்பர்ட்சன்ஸில் வாங்கிய உணவுப்பொருட்களை வெளியே நிற்கும் ஹோம்லெஸ்களுக்கு தானமாக கொடுத்துக்கொண்டிருப்பார். அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணியதால், அதே வயதுடைய, கூடவே இத்தனை நல்ல மனமுடைய பெண்மணியிடம் பழகுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆபீஸ் விட்டு வரும்போது, அவர் செய்யும் இரவு உணவு ஏதாவது, என்சிலாடாவோ அல்லது புரிட்டோவோ கொண்டு வந்து கொடுப்பார். ஒருவருடைய வீட்டுக்கு மற்றொருவர் வந்தால், சுதந்திரமாக கிச்சன் வரைக்கும் சென்று தண்ணீர் எடுத்துக்குடிக்கும் அளவு எங்களுடைய நட்பு வளர்ந்தது.

டிலோரிஸ் என்னுடைய பெற்றோரைப்பற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துக்கொள்வார், அவருடைய கணவரைப்பற்றியும், குழந்தைகளைப்பற்றியும் பெருமிதத்துடன் நிறைய சொல்லுவார். என்னுடைய பெற்றோரைப்பற்றி சொல்லும்போதெல்லாம், அவருடைய கண்களில் ஒரு வித ஏக்கம் தோன்றி மறையும். ஒரு நாள் அப்படி பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, "இவர் தன் பெற்றோரைப்பற்றியோ அல்லது பிறந்த வீட்டைப்பற்றியோ எதுவுமே பேசுவதில்லையே?". ஒரு நாள் என்னுடைய சந்தேகத்தை ஆர்வத்துடன் கேட்டே விட்டேன், உடனே அவருடைய பளீர் சிரிப்பு மறைந்தது. இறுகிய முகத்துடன் சிறிது நேர சிந்தனைக்கு பிறகு, "உனக்கு அப்புறம் சொல்றேன் மினியக்கா" என்றார். மினியக்கா(Muñeca) என்றால் "சின்ன குழந்தையே, அல்லது பெண்ணே" என்று ஸ்பானிஷில் அர்த்தமாம், மெக்சிகன் அம்மாக்கள் செல்லமாக தங்கள் மகள்களை அழைப்பது. அதையும் அவரே தான் சொன்னார். "ஒருவேளை கேட்கக்கூடாது ஏதாவது கேட்டு வருத்தப்படுத்திவிட்டோமோ?" எனக்கு கவலையாக இருந்தது.

சில நாட்கள் ஏதுவுமே நடக்காத மாதிரி வழக்கம்போல ஜாகிங் போனோம், உலக விஷயங்களைப்பற்றி பேசினோம், க்ளோபல் வார்மிங்கைப்பற்றி கவலைப்பட்டோம். நான் கேட்ட கேள்வியை சுத்தமாக மறந்துவிட்ட பிறகு, ஒருநாள் அவரே அந்த சப்ஜெக்ட் பற்றி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் 4 சகோதரிகளுள் கடைக்குட்டியாக பிறந்திருக்கிறார் டிலோரிஸ். அவருக்கு 6 வயது இருக்கும் போது, அப்பாவுக்கு வேலை போய்விட, டிலோரிஸின் அம்மா காலையில் இருந்து இரவு வரையிலும் ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அம்மா வேலையில் இருந்து வந்த பிறகு அசதியில் அடித்துப்போட்டது மாதிரி தூங்குவாராம். குடும்பத்தை வறுமை வாட்ட, ஏற்கெனெவே குடிகாரரான டிலோரிஸின் அப்பா, மனைவி வேலைக்கு போனவுடன் பகல் நேரத்திலேயே குடிக்க ஆரம்பித்திருக்கிறார். பெரிய அக்கா வேலைக்கு போக, அடுத்த இரண்டு சகோதரிகள் அரசு பள்ளிக்கு சென்றுவிட, டிலோரிஸை மட்டும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடிப்படைக்கல்வியை அவருடைய அப்பாவே சொல்லிக்கொடுத்து, "ஹோம் ஸ்கூல்" பண்ணி இருக்கிறார்.

சிறுவயதிலேயே அவர் சகோதரிகளை விட டிலோரிஸ் மிக அழகாக இருப்பாராம், வளர்ச்சியிலும் அப்படியே. மதிய வேளையில் டிலோரிஸுக்கு ரொம்ப பசிக்குமாம், வயறு வலிக்கும் அளவுக்கு! தன்னை சுற்றி பாட்டிலும் கையுமாக இருக்கும் அப்பாவிடம் தயங்கி தயங்கி தனக்கு பசிக்கிறது என்பதை தெரிவித்தால், மூர்க்கமாக டிலோரிஸை எட்டி உதைப்பாராம். "நீ பிறந்ததே வேஸ்ட், உன்னால் எனக்கு ஒரு டாலருக்கு பயனில்லை" என்று முகம் சிவக்க கத்துவாராம். அதற்கு பிறகு அவர் சொன்னதை கேட்க எனக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

-நினைவுகள் தொடரும்.

காதல் கல்வெட்டு-9

வந்த புதியவர் காஃபி ஆர்டெர் செய்கிற லைனுக்கு போனவுடன், கயலின் முகமாறுதல்களை கவனித்த வருண், "என்ன ஆச்சு கயல்?" என்றான்.


"ஒண்ணுமில்லை, வருண்!" என்று புன்னகைக்க முயற்சித்து தோல்வியடைந்தாள், கயல்.


"சரி, எனக்கு கொஞ்சம் Fresh Air வேணும், வெளிய போய் உன் காரில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசுவோமா, கயல்?"


"எனக்கும்தான், நல்ல ஐடியா, வருண்!" என்று சொல்லி உடனே எழுந்தாள் கயல்.


இருவரும் காஃபியை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்கள். கயலின் காரை நோக்கி அவள் நடந்தாள். வருண் மெதுவாக அவளை தொடர்ந்து அருகிலேயே அமைதியாக நடந்தான்.


"இந்த அக்யூரா டி எல் தான் உங்கடையதா? நானும் ஒரு ஹாண்டா ஃபேன் கயல், டொயோட்டா எனக்கு பிடிக்காது"


"நான் முன்னால ஒரு கரோலாதான் வைத்திருந்தேன், வருண். இப்போதான் சமீபத்தில் இதுக்கு தாவினேன்"


"நான் கரோல்லாவையும், இந்த அக்யூரா டி எல் சீரீஸையும் நிச்சயம் கம்ப்பேர் பண்ண மாட்டேன். அது ஆப்பிளையும் ஆரஞ்சையும் கம்ப்பேர் பண்ணுவதுபோல ஆயிடும். பொதுவா எனக்கு டொயோட்டாவை விட ஹாண்டா பிடிக்கும்"


"என் கார் பிடிச்சிருக்கா, வருண்?" என்று சிறுபிள்ளைபோல் கேட்டாள், கயல்.


"ரொம்ப நல்ல கார், கயல். I am glad you could afford one. நான் ட்ரைவ் பண்ணுவது ஒரு பழைய 2001 ஹாண்டா அக்கார்ட்! அதில் ஒரு 80,000 மைல்ஸ் இருக்கு அல்ரெடி"


"நிஜம்மாவா? ஏன் புதுக்கார்லாம் பிடிக்காதா?"


"எனக்கு புது கார்களில் எதுவும் அப்சஸன் கிடையாது, கயல்!. I prefer using that money elsewhere."


கார் கதவை திறந்தாள் கயல்.


"இஞ்சினை ஸ்டார்ட் பண்ணுங்க, கயல். உள்ளே உட்கார்ந்து பேசலாம். ஏசி ஆன் பண்றீங்களா?"


கயல், ட்ரைவர் சீட்டில் அமர்ந்து அவள் காரை ஸ்டார்ட் பண்ணினாள். வருண் அதர் சைட்ல கதவை திறந்து பாசஞ்சர் ஃப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து கதவை அடைத்தான்.


"சரி யார் அந்த ஆள்? அவர் வந்ததும் உங்க முகம் மாறிவிட்டது, கயல்?" என்று விசயத்திற்கு வந்தான் வருண்.


"அவரா, வருண்? நான் ஒருமுறை அவரை டேட் பண்ணினேன், வருண். ஆனால் அவர் நிறைய பொய் சொல்லி இருக்கிறார். அவருக்கு கல்யாணம் ஏற்கனவே ஆகிவிட்டது என்பதையும் மற்றும் ஒரு 10 மாத குழந்தையும் உண்டு என்பதையும் என்னிடம் வேண்டுமென்றே மறைத்துவிட்டார். ஒரு பேச்சிலர் போலவும், சீரியஸ் ரிலேஷன்ஷிப்க்காக டேட் பண்ணுவதுபோல் நடித்தார். பிறகுதான் உண்மையை கண்டு பிடித்தேன்! எனக்கு உண்மையிலேயே பெரிய ஷாக், வருண். ஏன் இப்படியெல்லாம் கீழ்தரமா செய்றாங்க வருண்?"என்றாள் வருத்ததுடன் .


"நீங்க கேள்விப்பட்டதில்லையா, கயல்? All men are Bastards! That is an exaggeration but most of them certainly are. Some of them are shameless like this guy. It is some kind of a "joke" for these people, kayal" என்றான் கோபமாக.


"என்னவோ போங்க, வருண். அரேஞ்ஜிட் மேரேஜ்லதான் ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்குனு நினைக்கிறோம். அதனால்தான் என்னை மாதிரி ஆட்களெல்லாம் டேட்டிங் போறது, ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை தேட! ஆனால் டேடிங்ல கூட இந்த மாதிரி ஏமாற்றுக்காரர்கள்தான் நிறையப்பேர் இருக்காங்க. டேட்டிங்கில் கூட இவர்களைப்பர்றி தெரிந்துக்கொள்வது ரொம்ப கஷ்டம்! நிறைய உண்மைகளை மறைக்கறாங்க, இவரை மாதிரி. I become more and more suspicious and prejudicious about men unfortunately. I am really scared of men, Varun".


"உண்மைதான், கயல். டேடிங்லயும் ஏகப்பட்ட தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.நான் டேட்டிங் எல்லாம் போவதில்லை, அதில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இல்லை. BTW, நான் வேணா, நல்ல அழகான, தகுதியான இளம் தமிழர்கள் பார்த்தால் உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கவா? எனக்கு ஒரு சில பேர் இப்பகூட தெரியும். They are looking for serious relationship. You want to give it a try, Kayal?"


"Since when you are doing this broker job?" கயல் சிறிது கோபத்துடனே கேட்டாள்.


"Come on, Kayal! What is wrong in suggesting some good guys I know to you? Especially who can be a good match for you and your status? Moreover, I know for sure, they are not really liars like this bastard"


"I am sorry, varun. I don't want you to. And I know how to find some dates for me!"


"Take it easy, Kayal. You don't have to get mad at me for this!"


"எனக்கு பிடிக்கலை வருண்!" என்றாள் அவள், அவன் முகத்தைப்பார்க்காமல்.


வருண், அவள் சீட் அருகில் வந்தான். தன் வலதுகரத்தை கொண்டு கயலின் நாடி மற்றும் இரண்டு கன்னத்தையும் சேர்த்து பிடித்தான், பிறகு மெதுவாக, அவள் முகத்தை தன் புறம் திருப்பினான். அவள் கண்கள் கலங்கி இருந்தன.


"Hey! OK, I apologize, Kayal. I am sorry I said that! I promise it wont happen again"


"Thank you for understanding me varun. What is time now?"


"1 மணியாகிவிட்டது, கயல். நானும் புறப்படனும். தேங்க்ஸ் கயல் ஃபார் தி நைஸ் டைம்". காரிலிருந்து இறங்கி கதவை அடைத்தான்.


"பை, வருண்" என்றாள் கயல்.


பை சொல்லிவிட்டு, வருண் அவன் காரை நோக்கி சென்றான். அவன் காரை ஸ்டார்ட் பண்ணி அடுத்த வினாடியே பறந்துவிட்டான், வருண். கயல், கொஞ்ச நேரம் அப்படியே பேசாமல் உட்கார்ந்திருந்தாள். அது வருணுடன் அவளுடைய முதல் ஆர்க்யூமெண்ட்!


-தொடரும்