நான் கேள்விப்பட்டவரைக்கும் தமிழ் இலக்கிய மேதைனா இன்னைக்கு இவருதான், அதான் ஜெயமோவந்தான் னு சொல்றாங்க. சரி, இருந்துட்டுப் போகட்டும்!
இப்போ இவரு தளத்தில் ஒரு விவாதத்தைப் படிச்ச பிறகு..
சயன்ஸே சொல்லுது..
இவரு என்ன அறிவியலையும் கரைச்சுக் குடிச்ச மாமேதையா? என்கிற சந்தேகம் எழுகிறது. இல்லைனா தன்னைப்போல மரைகழண்ட மதவாதிகள்தான் அறிவியலாளர்களைவிட உயர்ந்தவர்கள் என நம்பும் "படிப்பறிவுல்லாத" முட்டாளா?
மதமோ, இலக்கியமோ, ஆன்மீகமோ என்ன எழவைப்பேசினாலும் தாந்தான் பெரிய மேதைனு எழுதும் இவரு இப்போ அறிவியலையும், அதை எப்படி மற்றவர்கள் அணுகனும்னு விமர்சிக்க வந்துட்டாரு!!!
* ஆமா, இலக்கியம் எவனும் ஒழுங்காப் படிக்கிறதில்லை! சும்மா நுனிப்புல் மேய்கிறார்கள்! என்று குற்றம்சாட்டிப் பேசுற இந்தாளு எத்தைனை அறிவியல் கட்டுரைகள் படிச்சு இருக்காரு?
* Does he really know what all the top scientific journals ? (please don't go google it now!).
* இல்லைனா எத்தனை அறிவியல் மாணவர், ஆசிரியர்கள், பேராசிரியர்களிடம் பழகி, உறையாடி, அறிவியல்னா என்ன? அறிவியலாளர்கள் சிந்தனை எப்படி இருக்கும் கத்து இருக்கார்னு தெரியலை.
இந்தாளை மதிச்சு, அறிவியல்னா என்ன அதை எப்படி அணுகனும்னு ஒருத்தரு சீரியஸா கடிதம் எழுதி..(இது மாதிரி மரமண்டைகளுக்கெல்லாம் அறிவியல் பற்றி எழுதுற இந்த ராஜாவை மொதல்ல அடிக்கனும்!..)
மேதைக்கு எல்லாம் தெரியும்னு புரியாத இவரு, மேதையிடம் அறிவியல் பத்தி சீரியஸா விளக்குறாரு இந்த ராஜா..
* எந்தக் கருத்தையும் அறிவியல் சோதனைகளின்
மூலமே பரிசோதிக்க இயலும். அது திட்டவட்டமாக வகுத்துக் கொண்ட வழி. அதன்
தவறுகளும் திருத்தங்களும் தடுமாற்றங்களும் வளர்ச்சியும் பிரபஞ்ச தரிசனமும்
அதன் உள்ளே இருந்தே வர இயலும். வேறு எதையும் அது ‘துணைக்கு’ அழைக்க
முடியாது.
* தூய அறிவியல்வாதம் செய்வது மூடத்தனம்
அல்ல. அவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்ற நம்பிக்கையைப்
பற்றிக்கொண்டுதான் நிற்கிறார்கள். நீ மதத்தையும் அறிய வேண்டும் என்று
சொல்வது அவர்கள் கருவிகளைப் பிடுங்குவதற்குச் சமம்.
* காப்ரா முடிவுரையில் எவ்வளவுதான் நவீன
அறிவியல் பார்வையும் கிழக்குப் பார்வையும் ஒன்றுபோல இருந்தாலும்
பெரும்பாலான அறிவியலாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார். மிக நல்ல
விஷயம்.
அன்புடன்,
ராஜா.
ஆனால் சும்மா விடுவாரா எல்லாம் அறிந்த மேதை ஜெயமோவன்?
எதிர் வாதத்தில் என்னென்ன சொல்கிறார் இல்லை பிதற்றுகிறார்னு பாருங்க..
# அறிவியல்நோக்கு மையமானது, முதன்மையானது
என்ற எண்ணத்தை நீங்கள் தவிர்த்துப்பார்த்தீர்கள் என்றால் ஒரு முக்கியமான
விஷயத்தை கவனிக்கமுடியும். மனிதனின் அடிப்படைக் கேள்விகள், அவற்றின்
பதில்களைப்பற்றிய முன்ஊகங்கள் ஆகிய இரண்டும் அறிவியல், தத்துவம்,கலை ஆகிய
அனைத்துக்குமே பொதுவானவைதான். அவற்றின் அறிதல்முறையும் நிரூபணமுறையும்தான்
வேறுவேறானவை.
அதாவது அறிவியலைவிட இந்து மதம்தான், மத நூல்கள், வேதங்கள்தான் முதன்மையானதுனு நீங்க ஏத்துக்கனும் என்பது புதைந்து இருக்கு இங்கே! இதில் மதம், மதநூல்கள் என்கிற வார்த்தைகள், தத்துவம், கலை என்கிற போர்வையில் மறைந்து கொண்டு இருக்கு! இல்லை சூசகமாக இந்த விஷமியால் மதம் மறைக்கப் பட்டு இருக்கிறது.
அப்புறம், இந்த நிரூபணம் என்பது அறிவியலுக்கே உரித்தானது இல்லையா? அது கலைக்கோ, தத்துவத்துக்கோ அல்லது மதத்துக்கோ, கடவுளுக்கோ கிடையாது என்பதை இந்தாளுக்கு யாராவது சொல்லுங்கப்பா!
#
அறிவியல் தன்னுடைய வினாக்களையும்
முன்ஊகங்களையும் அறிவியல் என சொல்லப்படும் ஒரு தர்க்கச்சூழலுக்குள் இருந்து
மட்டுமே எடுத்துக்கொள்ளுமென்று எவரும் சொல்லமுடியாது.
அப்படியா!!! மஹா மேதை சொல்லுறாரு! அறிவியல் மேதைகள் எல்லாரும் வாயை மூடிக்கிட்டு கேட்டுக்கோங்க!
உண்மை என்னனா, அறிவியல் அதுபாட்டுக்கு இருக்கு! அது முன்யூகங்கள் எல்லாம் செய்வதில்லை! அறிவியலைப் பற்றி விமர்சிக்க எந்தக் கொம்பனுக்கும் தகுதி இல்லை! அறிவியலாளனை வேணா விமர்சிக்கலாம்!
# அவை அறிவியலாளனின்
ஆழ்மனத்தில் இருந்து பிறக்கக்கூடியவை. அவற்றின் வேர்கள் மானுடத்தின்
கூட்டுமனத்தில், பண்பாட்டுக்குறியீடுகளில் உறைகின்றன. அந்த ஆழத்தில்
அறிவியலும் தத்துவமும் கலையும் எல்லாம் ஒன்றே.
அதாவது ஐயா என்ன சொல்றார்னா..அறிவியலாளனின் சிந்தனைக்கு ஆழ்மனதில் உதவுவது மதம், மத நம்பிக்கை, மத நூல்கள் மற்றும் மதவாதிகளின் போதனைகள் என்று எல்லாரும் ஏத்துக்கனும்னு சொல்றாரு!!!
மதம் என்கிற வார்த்தை இங்கே மறைக்கப்பபட்டு பண்பாடு, கலை, தத்துவம் என்கிற வார்த்தைகள் மதத்திற்காக துணை நிற்கின்றன.
# ஆகவே ஒரே வினாவுக்கு இவை அளிக்கும்
பதில்களை ஒப்பிடுவதோ, அல்லது ஒரு துறையின் பார்வையை இன்னொன்றைக்கொண்டு
புரிந்துகொள்ளமுயல்வதோ ஒன்றும் பெரும்பிழை அல்ல.
அறிவியலில் நீங்க கொண்டு வருகிற விடைகள் நாங்க படிச்சு தெரிஞ்சுக்கிட்டு, இதையெல்லாம் எங்க மதநூல்கள்லயே சொல்லி இருக்கு. எங்க வேதங்கள், மதநூல்கள் வச்சு டி என் ஏ, ப்ரோட்டீன், எல்லாத்தையும் விளக்க முடியும்னு நாங்க சொல்லுவோம். "அண்ணே! எங்க விடைகளை ஏன்யா திருடி, மதச்சாய்ம் பூசி மொழுகிற" னு ஒரு பய இவனுககிட்ட கேக்கக்கூடாது!
ஓர் அறிவியல்
கண்டுபிடிப்பின் பண்பாட்டுவேரை தேடிச்செல்வதோ அல்லது ஒரு பண்பாட்டுக்கூறின்
அறிவியல்நீட்சியை ஆராய்வதோ மிக மிக அடிப்படையான விஷயம்.
பண்பாட்டு வேர்??? என்ன எழவுடா அது?
மறுபடியும் ஆராய்ச்சி!!! ஆமா, ஜெயமோவா! மதவாதிகள் எதுக்குப்பா ஆராய்ச்சி எல்லாம் செய்றாங்க? இவனுக மூளை ஆராய்ச்சியை அணுகும் சக்தி இல்லாததாச்சே!!! அதெல்லாம் மேதை உமக்குத் தெரியாதா???
# அது அறிவியலின்
‘புனிதமான உண்மையை’ பிற துறைகள் ‘திருடிக்கொள்ளும்’ முயற்சி அல்ல.
ஆமா என் அப்பன் குதிருக்குள்ள இல்லை!!!
அறிவியலில் கண்டுபிடிக்கப் பட்டு வரும் விடைகளை எடுத்து, திருடி, இது அந்த வேதத்திலேயே இருக்கு. அதனால அந்த வேதக் குப்பைதான் முதன்மையானதுனு நாங்க சொல்லத்தான் செய்வோம். ஏன்னா எங்க வேதம்தான் அறிவியலைவிட மூத்தது. அதில் எல்லாமே இருக்கு! ஆனால் நீங்க இப்போ கண்டுபிடிச்சு சொன்னதும்தான் நாங்க அதையெல்லாம் தோண்டி எடுக்கிறோம்!
# உதாரணமாக ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம்
இன்றும் அறிவியல் பிரபஞ்ச ஆய்வாளர்கள் வினவும் அடிப்படை வினாக்களை தானும்
எழுப்பிக்கொள்கிறது.
ரிக் வேதம்? அதாவது ஒரு மத நூல்? பண்பாடு, கலை, தத்துவம்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சதுல இருந்து மதத்துக்கு, மதநூலுக்குத் தாவுது, வேதாளம்!
சரி, அதனால என்ன? ரிக் வேதமென்ன? உலகறிவே இல்லாத சிறு பிள்ளைகூட அந்த கேள்விகளை எழுப்பும்! இதென்ன பெரிய விடய்ம?
ரிக் வேதமோ, சிறுபிள்ளையோ, வினாவை எழுப்புவதல்ல, பெரிய விடயம்! புதிய புதிய விடையை கொடுப்பதுதான் முக்கியம்! அதை யாரு கொடுக்கிறா எனபதுதான் முக்கியம்! அப்புறம் இன்னைக்கு கொடுத்த விடையை நாளைக்கு உடைத்து அது தப்புனு இன்னொருவர் சொல்லுவதையும் ஏற்றுக்கொள்வது அறிவியலாளன் மட்டுமே! அது மதத்துக்கோ, அல்லது கலைக்கோ, தத்துவத்துக்கோ, மதவாதிக்கோ ஒருபோதும் ஒத்துவராது!
# இன்றைய பிரபஞ்சவியல் சென்று முட்டிநிற்கும் திகைப்பை
தானும் பதிவு செய்கிறது. ஓர் ஆய்வாளன் ரிக்வேதத்தின் அந்தப்பாடலை
இன்றைய பிரபஞ்சவியலுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வைச்செய்தானென்றால் உடனே அதை
மதத்தையும் அறிவியலையும் கலந்துகட்டி அடிப்பது என்று சொல்வதென்பது அறியாமை
மட்டுமே.
ஆய்வு???மதவாதி எதுக்குப்பா ஆய்வாளன் ஆகிறான்? ஒரு ஆய்வாளன், அறிவியலாளன் என்பவன் எந்த ஒரு முந்தைய தவறுகளையும் ஏற்றுக்கொள்ளும் மனமுள்ளவன்! அப்படியொரு மூளையுள்ளவன். நீர் பிதற்றுகிற இந்த மதம்போற்றும் "மதவெறிபிடித்த ஆய்வாளனுக்கு" என்றுமே அந்த மனதோ மூளையோ வராது! அதான் உம்மை மாதிரி ஆட்கள் இது மாதிரி எதையாவது உளறிக்கொட்டிப் பொழைப்பு ஓட்டுறீங்க!
-----------------------------------
Her is something for you!
You
cant fool in Science. There will be serious consequences!! Look what
happened when someone, a big scientist, "improperly quoted" others' work
without giving proper credit!!!
PM's science adviser apologises for plagiarism in science journal
NEW DELHI: India's top scientist and Prime Minister Manmohan Singh's
adviser CNR Rao had to apologise to a leading scientific journal for
reproducing text of other scientists in his research paper.
"The
corresponding authors sincerely apologise to the readers, reviewers, and
editors for this oversight and for any miscommunication," Rao and his
co-author SB Krupanidhi said in an apology to 'Advanced Materials', a
peer-reviewed journal covering materials science.
Remember! You cant steal someone's results and interpretation and strengthen rig vedha!!!
---------------------------
இந்த அறியாமைக்கூற்றுக்கள் நம்மிடையே
உருவாவதற்கான முக்கியமான காரணம் நாம் அறிவியலை உள்ளூர தொழில்நுட்பம் என்று
புரிந்து வைத்திருப்பதே.
வந்துட்டாரு!!! அறிவிலை எப்படி நானும் நீயும், அறிவிலாளர்கள் எல்லாம் புரிந்துகொள்ளனும்னு சொல்ல!! எல்லாம் தெரிந்த இந்த மேதாவிக்குத்தான் தெரியும், எதை எப்படிப் புரிந்து கொள்ளனும்னு.. கேட்டுக்கோங்கப்பா!!!
# அறிவியலுக்கு கலையிலும் தத்துவத்திலும்
மானுடப்பண்பாட்டின் எல்லா தளங்களிலும் வேர் உண்டு. எல்லா இடங்களிலிருந்தும்
அது தன் வேர்நீரை எடுத்துக்கொள்கிறது.
அதாவது, மேதை என்ன சொல்றாருனா.. பண்பாடு, கலை, மதநூல்களில், (ரிக் வேதத்திலேயே) உலகமே 106+ தனிமங்களால் (இந்த ஆளையும் சேர்த்துத்தான்) ஆனதுதான் னு சொல்லியிருக்கு?! உதாரணத்துக்கு நம்ம ஜெயவமோஹனை எரிச்சால் (no offense here) அவரு ஆக்ஸிடைசாக, டீஹைட்ரேட் ஆகி, கார்பன் டையாக்ஸைடாகி, கடைசியில் வெறும் கரியாக, கார்பனாகிவிடுவார்னு பண்பாடு கலை தத்துவும் வேதம் எல்லாத்துலயும் "oxidising equation" எல்லாம் எழுதி சொல்லியிருக்கு? அப்படித்தானே?
இப்போ எரிந்த பிறகு இருக்க கார்பன் ஜெயமோவனும், மின்னும் வைரமும் ஒண்ணுதான்! ரெண்டுமே வெறும் கார்பன்ந்தான். ஆனா பார்க்க ஒண்ணு மின்னும், இன்னொன்னு கருப்பா கரியா இருக்கும்னு ரிக் வேதத்திலேயே சொல்லியிருக்கு! அப்படித்தானே?
ஆமா ரிக் வேதத்தில் என்னதான் சொல்லல? எல்லாமே சொல்லியிருக்கா???
# உலகமெங்கும் இன்று கல்வி என
அளிக்கப்படுவது அறிவியல்கல்வி மட்டுமே. மெல்லமெல்ல மற்ற கல்விகள் அனைத்துமே
பயனற்றவை எனப் புறந்தள்ளப்பட்டுவிட்டன.
அதுக்கென்ன பண்ணுறது?
உண்மையத்தான் உலகமயமாக்க முடியும்! மத்வாதிகள் சிலர் இப்படி நீர் ஒப்பாரி வைப்பதுபோல் வைப்பதால் உலகமெங்கும் வெட்டி வேதங்களை முதன்மைக் கல்வியா ஆக்கிப்புடுவாங்களா என்ன?
மேலைநாடுகளாவது இலக்கியம், சிந்தனை
போன்றவற்றுக்கு ஆரம்பநிலையில் ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றன.
கீழைநாடுகள் ‘முன்னேற்ற வெறி’ யில் அறிவியலை அனைத்து நோய்களுக்கும்
மருந்தான சஞ்சீவி போலத் தழுவிக்கொண்டுவிட்டன.
இப்போ என்ன பண்ணனும்? இந்த உருக்கமான உன்னதப் பதிவை வாசிச்சுப்புட்டு, எல்லாரும் அறிவியலை தூக்கி எறிந்துவிட்டு வேதம் படிச்சு பண்டாரமாகிடுங்கப்பா!