Wednesday, December 31, 2008

நடிகர் இரா. ஸ்ரீ. கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் பிறந்த ஊர் இராமநாதபுரம். தந்தைக்கு வேலை மாற்றத்தால் பிறந்து பல மாதங்களில் பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு சென்றார். அங்கிருந்து சென்னை, களத்தூர் கண்ண்ம்மா,அப்புறம் உங்களுக்கு தெரியும் அவர் சினிமா உலகம் மற்றும் தனிப்பட்ட வாழக்கை. ஆனா என்ன காரணமோ தெரியவில்லை, இவர் பிறந்த ஊர் பரமக்குடி என்றுதான் நிறைய நேரங்களில் தவறுதலாகச் சொல்லப்படுகிறது. அதை கமலஹாசனே சரி செய்வதில்லை.

இங்கே இரா-> இராமநாதபுரம்

ஸ்ரீ-> ஸ்ரீனிவாசன் அய்யங்கார்

கமலஹாசன் ஒரு பார்ப்பனராகப் பிறந்தாலும், சமீபகாலம்வரை (அவரின் தசாவதாரம் வெளிவருமுன்னர் வரை) இவர் நாத்தீகர்கள் பலராலும் அரவணைக்கப்பட்டுத்தான் வந்தார், வரப்படுகிறார். தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று தைரியமாக சொன்னவர் இவர். இந்துக்களில் பொதுவாக 99.9% பார்ப்பனர்கள் மத, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். பல பார்ப்பனர்கள்தான் இந்து மதப்பாதுகாவலர்களாக இருக்கும் இந்த உலகத்தில் கமலஹாசன் போல ஒரு பகுத்தறிவுவாதி அக்ரஹாரத்திலிருந்து வந்ததைப் பார்த்ததும் திராவிட கழகத்தை சேர்ந்த பல நாத்தீகர்கள், கமலஹாசனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார்கள். திராவிட பாரம்பரீகம் இவரை நவீனகால பாரதி என்றுகூட மிகைப்படுத்தி அழைத்தனர்.

ஆனால், சமீபத்திய தசாவதாரம் படம், பலவிதமான கேள்விகளை கொண்டுவந்து விட்டது. சினிமாவில் ஒரு நாத்தீகர், ஆத்தீகராக ஒரு வேடத்தில் நடித்தால் என்ன? இது ஃபிக்ஷன் தானே? என்று பல நாத்தீகர்களும் மற்றும் கமலஹாசன் விசிறிகளும் வாதிடத்தான் செய்கிரார்கள். இருந்தாலும் பல ஆத்தீகர்கள் இந்தப் படத்தைப்பார்த்து கமலஹாசன் நம் வழிக்கு வந்துவிட்டார் என்று பெருமிதம் கொள்வதுதான் பிரச்சினை.


இந்து மதத்தை தன் தாயைவிட மேலாக மதிக்கும் பார்ப்பனர்கள் பலரை கமலஹாசன் நடித்த "நம்பி ராஜன்" என்கிற மதவெறி பிடித்த ஒரு வெறியன் பாத்திரம், சந்தோஷப்படுத்தி இருக்கிறதென்பதை புத்தியுள்ள பகத்தறிவுவாதிகள் காணலாம். மொத்தத்தில், நாத்தீகள்களும், ஆத்தீகர்களும் அவரவர் கண்ணோட்டத்தில் கமலஹாசனை தன் "இனமாக" பார்த்ததால், தசாவதாரம் பெரிய வெற்றியை தழுவியது.

ஆத்தீகர்களுக்க்கும் இந்து மத வெறியர்களுக்கும், கமலஹாசன் ஆத்தீகப்பாதையில் வருவதுபோல் தோன்றினாலும், அவர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தங்கள் மனதுக்குள் ரசித்துக்கொண்டார்கள்.


"பைத்தியக்காரன்" என்கிற ஒரு பதிவுலகத்தை சேர்ந்த ஒருவர், தசாவதாரத்தில் உள்ள பாத்திரங்களில் இருக்கும் மதவெறியை கண்டு, கோபமடைந்து கமலஹாசன் தன் பார்ப்பன புத்தியை காட்டிவிட்டார் என்று வசைமொழிகளில் விமர்சனம் எழுதினார்.


எழுத்தாளர் சாரு நிவேதிதா பொதுவாக கமலஹாசனை மதிக்கும் இவர், இந்தப்படத்திற்கு ஒரு நெகட்டிவ்க்ரிடிசிஸம் எழுதினார்.

அதே சமயத்தில், எழுத்தாளர் ஜெயமோஹன் இந்தப்படத்தை ஆஹாஓஹோ என்று புகழ்ந்து எழுதினார்.

பல நாத்தீகர்களுக்கு கமலஹாசனுடைய இன்றைய மனநிலை சந்தேகமாகவே உள்ளது. தசாவதாரம் பார்த்து குழம்பிப்போய் உள்ளார்கள் இவர்கள். ஆனால், வெளியில் இதை தெளிவாக சொல்லுவதில்லை.

கமலஹாசன் நாத்தீகராகவே சாகும்வரை இருக்கப்போகிறாரா? இல்லை ஆத்தீகராக மாறப்போகிறாரா அல்லது மாறிக்கொண்டு இருக்கிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

அவர் என்னவா இருந்தால் உனக்கென்ன என்கிறீர்களா?

அவர் ஆத்தீகப்பாதையில் போனால், என்னைப்போல் ஆட்களுக்கு அவர் கேலிக்கூத்தாக தோனுவார். அதான்.

Monday, December 29, 2008

தற்கொலை! சுயநலமும் தியாகமும்!!!

ஒரு வகை!

எனக்குத்தெரிய ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த “ஜான்” என்ற “நண்பன்” தொங்கிவிட்டான்.

பிரச்சினை என்னவென்றால், அவன் ஒரு அழகான பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்துவிட்டான். அவள், அவனுடைய ஜூனியர், மற்றும் அவனுடைய ஆய்வகத்தில் வேலை செய்பவள். இவன் கொடுத்த இதயத்தை அவள் வாங்க மறுத்துவிட்டாள். இவனுக்கு அவளைப் பிடித்ததுபோல் அவளுக்கும் யாரையாவது பிடிக்கும் இல்லையா?

ஜானின் இதயம் அவள் வாங்க மறுத்ததால் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. இதயத்தை உடைத்த இவனால் அதிகமான நாட்கள் வாழ முடியவில்லை. தூக்குப்போட்டுக்கொண்டு தொங்கிவிட்டான்.

அவன் உடலைப்பெற அவனுடைய ,அப்பா அம்மா வந்து இருந்தார்கள். ஒரு நடுத்தரக்குடும்பத்திற்கும் கீழே உள்ள ஒரு பரிதாபமான நிலைமை. அவர்களின் ஒரே "ஹோப்" இவந்தான் என்று விளங்கியது! மகன் படித்துவிட்டான்! இனிமேல் மகன் சம்பாரித்து அவங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கப்போகிறான் என்று நம்பி ஏமாந்தவர்கள் அவர்கள்.

இந்த தற்கொலையில் சுயநலம், தன்னலம், தகுதிக்குமீறிய ஆசை, மற்றும் அடுத்தவர்களும் தன்னைப்போல் தான், அவர்களுக்கும் ஆசை இருக்கும், அதையும் நாம் மதிக்கனும் என்ற எண்ணமில்லாமை. இதைத்தான் பார்த்தேன். அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை! எரிச்சல்தான் வந்தது! இது ஒரு வகை தற்கொலை!

இன்னொரு வகை!

இது என்னுடைய பாஸ் சொன்னார். அவர் அப்பாவுக்கு இப்போது வயது 89. இன்னும் அவராவே கார் ஓட்டிச்சென்று, அவரை அவரே கவனித்துக்கொண்டு தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு 90 வயது ஆள், அவர் என் பாஸ் அப்பாவுக்கு நண்பர் மாதிரி. அருகில் வசித்து வந்தவர். இந்த முறை என் பாஸ், அவருடைய அப்பாவை கிருஸ்துமஸ்க்கு அழைதுவர போனபோது, அவர் அப்பாவின் ந்ண்பர் இறந்துவிட்டதாக அவர் அப்பா சொன்னதும், என்ன ஆச்சு? என்று கேட்டாராம்!

கிடைத்த பதில் இதுதான். துப்பாக்கி எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டாராம் அந்த 90 வயது ஆள். காரணம்? அவருக்கு சாகும் அளவுக்கு எதுவும் பெரிய வியாதி இல்லை. இருந்தாலும், அவருக்கு சில வியாதிகள் இருந்தன. அதனால் தொடர்ந்து சில உதவிகள் தன் மகன்மற்றும் மகளிடம் இருந்து தேவைப்பட்டுக்கொண்டு இருந்ததாம். அது அவருக்கு தவறாக தோன்றியதாம். தன் குழந்தைகளுக்கு கடைசிக்காலத்தில் தான் பெரிய பாரமாக இருக்க வேண்டாம் என்று தன் உயிரை தானே மாய்த்து கொண்டாராம் அந்த பெரியவர். இதுவும் தற்கொலைதான்! இதில், சுயநலத்தைவிட, நம்மால் தன் குழந்தைகளுக்கு அளவில்லாத கஷ்டம் எதற்கு? என்கிற தியாக மனப்பான்மைதான் அவரிடம் இருந்தது.

In US, people who are in sixties are taking care of their father and mother who are in 80s or 90s. I know several cases. Some people are too healthy and they dont die even if they want to. Mainly bcos of the medical developments in dealing with heart diseases, controlling cancer and so on.

Who says Americans are selfish?

Who says Americans don't have much family value?

That is not what I see here! They take care of their old parents better than us in several cases I know of.

Sunday, December 28, 2008

கவனம்!!! நகைச்சுவை என்பது விபரீதமானது!

எதையாவது ஏடா கூடமாக சொல்லிவிட்டு, நான் நகைச்சுவைக்காக சொன்னேன் என்று சமாளிப்போம்! இதில் வெற்றியடைவது (சமாளித்து தப்பிப்பது) கடினம்.

ஒரு சிலர் நகைச்சுவை பதிவில் சில பெரிய நடிகர்களை இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ணி மாட்டிக்குவார்கள்.

இது பழையவிசய்ம்தான் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்ப்போம்!

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி பற்றி திரு.ஜெயமோகன் எழுதிய விமர்சனத்தை பார்ப்போம்



////////

M G R (“தொப்பி”)

செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

சிவாஜி ('திலகம்')

'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'... /////////


எந்த ஒரு எம் ஜி ஆர் அல்லது சிவாஜி ரசிகர்கள் இதை “நகைச்சுவையாக” எடுத்துக்கொள்வார்களா? அல்லது எடுத்துக்கொண்டார்களா?



எம் ஜி ஆர் ஜால்ரா சத்யராஜ் சொல்கிறார்!


/////// ஜெயமோகன் முகத்தில் காறித்துப்ப வேண்டும் என்று பேசினார் சத்யராஜ். ஆனந்த விகடன் படிக்கும் போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அன்று மட்டும்தான் அழுதேன் என்றார் அவர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி கேட்காவிட்டால், இருவருக்குமே திரையுலகை சேர்ந்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சிக்கல் என்னவென்றால், விகடன் நிறுவனத்தினர் சக்தி மனசில சிவா என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். ஜெயமோகன் நான் கடவுள், அங்காடி தெரு ஆகிய இருபடங்களுக்கும் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தின் இந்த ஒத்துழையாமை எச்சரிக்கை இருவருக்குமே தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. /////



காறிதுப்ப வேணும்??? என்ன ஒரு திமிர் இந்த நடிகனுக்கு என்று ஒரு பக்கம் நமக்கு எரிச்சல் வருகிறது.

இவர் எம் சி ஆர் ரசிகர் என்பதால் எம் சி ஆர் பத்தி எழுதினால் இவர் காறி துப்புவாராம்? இவர் நடிகர்களை ரசிக்கும் ரசிகர்கள் உணர்வுகளை என்றாவது புரிந்து இருக்கிறாரா என்ன???



ஃ எழுத்துச்சுதந்திரம் என்பதை ஜெயமோகன் துஷ்பிரயோகம் செய்தாரா? அவர் இல்லைனுதான் சொல்றார்.

ஃ ஆனாலும் செயமோகன் இந்த சிவாஜி ரசிகர்களுக்கு சாதிச்சாயம் இவர் பூசுவது படுகேவலமா இருக்கு!

ஃ இல்லை பேச்சு சுதந்திரத்தை அல்லது அவர் சொல்லும் “நகைச்சுவையை” நகைச்சுவையாக எம் சி ஆர் ரசிகர் சத்யராஜால் எடுக்கமுடிந்ததா?

ஃ நகைச்சுவை என்ற போர்வையில் யாரைவேணா எதுவேணா எழுதலாமா? I really don't understand, “What difference it makes whether you claim that as “comedy” or “just for fun” or a serious issue? அதனுடைய விளைவுகள் எதுவும் மாறப்போவதில்லை.

ஃ சத்யராஜ், யாரையும் கிண்டல் அடிப்பதில்லையா? இவர் கிண்டல் அடித்தால் இவரையும் இவர் சொல்வதுபோல் செய்யலாமா?


நகைச்சுவை என்பது ஒரு விபரீதமான விசயம். அதை கையாளும் விதம் பெரிய எழுத்தாளர்களுக்கே தெரியவில்லை. எழுத்தாளன் விமர்சனம் எழுதினால் பொதுவா வம்புதான். அடிக்கடி இவர்களுக்கு கதை எழுதுகிறோமா இல்லை ஒரு சில லெஜெண்டரி கேரக்டர்களை பலர் மனமுடையும் அளவுக்கு கொஞ்சம் கீழ்தரமாக (நகைச்சுவை என்க்ற போர்வையில்) விமர்சிக்கிறமானு இவர்களுக்கு மறந்துவிடுகிறது.

சத்யராஜ் ஒரு சாதாரண hypocrite! எங்க ஊரில் ஒரு சில நண்பர்கள் பார்த்து இருக்கேன். ஊருக்கு ஒரு நியாயம், அவனுகளுக்கு ஒரு நியாயம். அவர்கள் ஊரில் உள்ளவன் தங்கையை எல்லாம் என்ன மாதிரி வேணா “காமெண்ட்ஸ்” அடிப்பானுக. அவன் தங்கையை ஒருத்தன் திரும்பிக்கூட பார்க்ககூடாது! அதுபோல்தான் இருக்கு சத்யராஜ் நியாயம்! படுகேவலமாக!

மொத்தத்தில் நகைச்சுவை என்பது வில்லங்கமான ஒண்ணு. அதை சில பெரியமனிதர்கள் எழுதினால் வம்புதான்! இதில் விதிவிலக்கு யாருமே கிடையாது!