Friday, April 30, 2010

சுறா விஜய்யும், அவருடைய அரசியல் கனவும்!


இளயதள விசய் இன்னொரு மசாலா கலந்த படத்தோட வ்ந்திருக்காராம்! அதான் சுறா. என்ன ஒரு பேரு செலெக்சன்!

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய எல்லாருமே ஒண்ணுமட்டும் சொல்றாங்க. நம்ம விசய் அரசியல்ல இறங்குவதுபோல மெசேஜ் கொடுக்குதாம்! 35 வயசுலயே இவருக்கு அரசியல் ஆசை என்பது எரிச்சலைக்கிளப்புதுனு நெறைய தடவை சொல்லியாச்சு.

இவரோட அப்பா எஸ் ஏ சந்திரசேகரா மகனை முதல்வராக்கிப்புடனும்னு பைத்தியம் பிடிச்சித் திரியிற மாதிரி இருக்கு! படத்துக்குப் படம் ஒரே மசாலா, அரைச்சமாவையே அரைக்கிறார் வருங்கால முதல்வராக ந்நெனைக்கும் விசய். ரஜினி எல்லாம் முள்ளும் மலரும், புவனா ஒரு ? 16 வயதினிலே போன்ற ஒரு சில படங்கள் பண்ணி தனக்கு நடிக்கவும் தெரியும்னு காட்டிவிட்டுத்தான் மசாலால இறங்கினார்.

ஆனா நம்ம விசய் அப்பாவை வச்சு சினிமால நொழஞ்சாரு. இப்போ நான் முதல்வராகியே ஆகனும்னு நிக்கிறார். இதெல்லாம் இப்போ தேவையா?


ஒருவேளை இந்த அரசியலில் இறங்கி கிழிக்கப்போவதுபோல பட்ம் காட்டுறதையே தன் ஃபார்முளாவா ஆக்கிக்கிட்டாரோ என்ன எழவோ!

Rediff: Give your brains a rest, and enjoy this mass masala entertainer. That much is guaranteed.

Rediff Rating: **

ரொம்ப சுமாரான விமர்சனம்தான்! மூளையில்லாதவனுக்குத்தான் இந்த சுறாங்கிறமாதிரி இருக்கு.

Indiaglitz: Strictly for Vijay fans. மத்தவங்க எல்லாம் ஒதுங்கிக்கனுமா? சுமாரான விமர்சனம்தான்!

Sify:
இது கொஞ்சம் பாஸிட்டிவ் விமர்சனம்! ஒரு கமர்ஷியல்லா வெற்றிப்படம் என்பது போல நல்லாவே எழுதி இருக்காங்க!


விஜய்படமெல்லாம் தீயேட்டரில் போய்ப் பார்க்கிறத சுத்தமா நிறுத்தியாச்சு! அதனால் விஜய்க்கு ரசிகர்/ரசிக்கைகள் கொறஞ்சிடுவாங்களா என்ன? நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக்கிட்டுத்தான் இருக்காங்க! விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதில் எனக்கு என்றுமே கொஞ்சம்கூட சந்தேகமில்லை!

விமர்சகர்களும், இவரோட அப்பாவும் அடிக்கடி இவரோட இந்த அரசியல் பிரவேஷம்பத்தி பேசாமல் இருந்தா விஜயை கொஞ்சமேனும் மதிக்கத் தோனும்.

Thursday, April 29, 2010

ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!- கடலை கார்னர் (51)

"ஆண்ட்டி! இவர்தான் இன்னைக்கு நம்ம ட்ரைவர்.. கண்ணன்னு சொன்னேன் இல்லயா?!"

"ஹலோ ஆண்ட்டி!"

"ஹல்லோ!"

"உங்களுக்கு ஏதாவது சமச்சுப் போட்டாளா ஆண்ட்டி? இவ சமையல வாயில வைக்க முடிஞ்சதா?"

"பிருந்தா ரொம்ப நல்லா சமைக்கிறாள், கண்ணன். நீங்க சும்மா என்னை காயத்ரினே கூப்பிடுங்களேன்!"

"இவ மட்டும் உங்களை ஆண்ட்டினு சொல்றா? இதென்ன டிஸ்க்ரிமினேஷன்?"

"இல்ல, பிருந்தா சொன்னா ஒரு மாதிரி இருக்கு.. நீங்க சொன்னா வேறமாதிரி இருக்கு"

"கண்ணன்! ஜாடையாச் சொன்னால் புருஞ்சிக்கோங்க! உங்களை பார்த்தா அவங்க வயசுமாதிரி இருக்கோ என்னவோ ? ஹா ஹா ஹா"

"ஆமா இங்கே நானும் இவங்களும அடல்ட்ஸ், நீ ஒரு டீனேஜர்! உனக்கு நெனப்புத்தான், பிருந்த்"

"நான் ஒண்ணும் டீனேஜெர்னு சொல்லல!"

"இதுக்கு முன்னால டெவான் போயிருக்கீங்களா, காயத்ரி?"

"காயத்ரியா?!!! என்ன இப்படி ஆண்ட்டிய ஏகவசனத்திலே கூப்பிடுறீங்க, கண்ணன்? " பிருந்தா சிரித்தாள்.

"ஆண்ட்டினு சொன்னா அவங்க வேணாம்ங்கிறாங்க.. வேணா அக்கானு கூப்பிடவா?"

"ஐயோ அக்கா எல்லாம் வேணாம்!"

"ஏய், உண்மையிலேயே இவங்களை பார்த்தால் உன் வயசு மாதிரித்தான் இருக்கு."

"என்வயசு மாதிரி இருக்கா? ஆமா, எனக்கு என்ன வயசுனு சொல்றீங்க இப்போ?"

"நான் சொல்லி முடிச்சுக்கிறேனே?. இருந்தாலும் கல்யாணம் பண்ணி வாழ்ந்த அனுபத்திற்காக கொஞ்சம் மரியாதை கொடுக்கனும்னுதான்.. ஆண்ட்டினேன்"

" சரியாப் போச்சு! கல்யாணம் ஆகி இருந்தா மரியாதை கொடுக்கனுமா?"

"இல்லையா? அனுபவசாலியாடுறாங்க இல்லையா?"

"அப்போ எனக்கு கல்யாணம் ஆனதும் மரியாதையா பிருந்தா மேடம்னு சொல்லுவீங்களா, கண்ணன்?"

"சொல்லீட்டாப் போச்சு! இங்கே பாருங்க காயத்ரி! நீங்க இளமையா இல்லைனு சொல்றா!"

"அவ அப்படியெல்லாம் சொல்லல கண்ணன்!"

"ஆண்ட்டி! கண்ணன் பயங்கரமா பொய் சொல்லுவாரு. நம்பி ஏமாந்திடாதீங்க! உங்க முன்னால ஒரு மாதிரி பேசுவாரு. அப்புறம் உங்க முதுகுக்குப் பின்னால் வேறமாதிரி பேசுவாரு!"

"அவருக்கு நான் ரொம்ப யங்கா தெரியிறேனோ என்னவோ, பிருந்தா! ஹா ஹா ஹா"

"அப்படி சொல்லுங்க!"

"பாவம் நீங்க, ஆண்ட்டி!"

" அவ சொல்றது உண்மைதான். உங்க முன்னால ஒரு மாதிரி, பின்னால வேறமாதிரித்தான் பேசுவேன். ஆனால் நீங்க இல்லாதபோது உங்களைப்பத்தி நல்லபடியாத்தான் பேசுவேன்"

"நல்லபடியானா என்ன அதுனு சொல்லுங்க!" என்றாள் பிருந்தா.

"நல்லபடியானா, அவங்க முதுகுக்குப் பின்னால "ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!"னு உன்னிடம் சொல்லுவேன்!"

"ஏன் அதை நேர சொன்னால் என்ன? மயங்கி விழுந்துடுவாங்களாக்கும்"

"எனக்கு உண்மையிலேயே இப்போ மயக்கம் வருது, பிருந்தா!"

"ஹா ஹா ஹா"

"பிருந்த்! சரி, ஏதாவது காஃபி கீஃபி இல்லையா எனக்கு?"

"ஆரஞ்ச் ஜூஸ் வேணா வேணுமா, கண்ணன்? உங்களுக்குகாக காஃபி எல்லாம் போட்டுத்தர முடியாது!"

"சரி அதையாவது ஊத்திக் கொடு!"

"இருங்க கொண்டு வர்றேன்."

-----------------------------------------

"இந்தியா விசிட் பண்ணுறீங்களா?"

"இல்ல கண்ணன். சும்மாதான் ரின்யுவ் பண்ணி வைக்கிறேன்!"

"உங்க எக்ஸை ஏன் அடிச்சு விரட்டிட்டீங்கனு சொல்லுங்களேன்.."

"அடிச்சு வெறட்டினேனா?!"

"இல்லை, ஐ மெண்ட் ஏன் டைவோர்ஸ் பண்ணீட்டிங்கனு கேட்டேன்?"

"என்னவோ போங்க! லவ்மேரேஜ்தான் பண்ணிக்கிட்டோம். நாளாக ஆக லவ்வையும் காணோம், மேரேஜையும் காணோம்!"

"ஐ ஆம் நாட்மேக்கிங் யு அண்கம்ஃபர்ட்டபிள், ரைட்?"

"இல்லை கண்ணன். ஐ ஆம் ஃபைன்."

"எதுவும் சீரியஸ் பிரச்சினையா?"

"தெரியலை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து போரடிச்சுருச்சோ என்னவோ?"

"அப்படினா?"

"லவ் பண்ணும்போது கத்துக்க வேண்டியது நெறையா இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வேண்டியதெல்லாம் பாக்கி இருக்கு. கலயாணத்துக்கப்புறம் அப்படி ஒண்ணூம் பெருசா இல்லாமப் போயிடுது போல. மிஞ்சுவது வெறும் வெறுப்புத்தான்."

"அன்பே இல்லாமல் எப்படிப் போகும்?"

"போகாதுதான். அன்பு, பரிவு இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வெறுப்பு அதைவிட பலமடங்காயிடும். அதனால அன்பு, பரிவு எல்லாம் அதில் ஒண்ணுமில்லாமப் போயிடுது."

"ஆர் யு ஹாப்பி நவ்?"

"ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்த பிறகு சும்மா சேர்ந்து வாழ்றது இருக்கே, அது ரொம்ப சோகம்! அதுக்கு இது பரவாயில்லை!"

------------------------------

"இந்தாங்க ஆரஞ்ஜ் ஜூஸ்! ஐஸ் க்யூப்ஸ் இதிலே இருக்கு எவ்ளோ வேணுமோ போட்டுக்கோங்க!"

"தேங்க்ஸ் பிருந்த்!"

"உங்களுக்கு எப்போ கல்யாணம், கண்ணன்?"

"எனக்கா? வீட்டிலே பொண்ணு பார்த்துண்டு இருக்காங்க, காயத்ரி!"

"வீட்டிலே பார்க்கிறாங்களா!!"

"ஏன் அதிசயமா கேக்கிறீங்க?"

"இல்ல இந்தக் காலத்தில் அரேஞ்சிட் மேரேஜா பண்ணப்போறீங்க!"

"நோ அஃபெண்ஸ் பட் ல்வ மேரேஜ் எல்லாம் உங்க மேரேஜ் மாதிரித்தான் முடியுதுங்க காயத்ரி. அதான் ஜாதகம் கீதகம் எல்லாம் பார்த்துக் கல்யாணம் பண்ணலாம்னு பார்க்கிறேன்."

" கண்ணனுக்கு வர்றவ ரொம்பப் பாவம், ஆண்ட்டி!"

"சே சே"

"நெஜம்மாத்தான்!"

"ஏண்டி பாவம்? என்னவோ என்னோட வாழ்ந்து என்னை டைவோர்ஸ் பண்ணின மாதிரி சொல்லுற?"

"இல்ல இல்ல, அன்பாலேயே கொன்னுடுவீங்கனு சொல்ல வந்தேன்!"

"ரெண்டுபேரும் என்னை ரொம்பக் குழப்பாதீங்க!"

"நெஜம்மாத்தான் ஆண்ட்டி. கண்ணன் அப்பப்போ ரொம்ப ஏங்க வச்சுடுவார்!"

"ஏங்க வைக்கிறதுனா?"

"அதெப்படி சொல்றது..?"

"சரி அவங்கள போட்டு அறுக்காதே! புறப்படுவோமா?"

-தொடரும்

Monday, April 26, 2010

ராமனும் நாந்தான் ராவணனும் நாந்தான்!


விக்ரம் நடிக்க மணிரத்னம் இயக்க ராவன் அல்லது ராவணன் படம் பேரு அறிவிச்சதும் எனக்கு ஒரே குழப்பம். என்ன படம்ப்பா இது? புராணப்படமா இல்லை சமூகப்படமா? இதுபோல் க்யூரியாஸிட்டியை உருவாக்குவதே மணிரத்னத்தின் முதல் வெற்றி! போய் எல்லா விபரத்தையும் படிக்கலாம். எல்லார் கற்பனையும் வாசிச்சால் ஓரளவுக்கு கதை புரியத்தான் செய்யும். ஆனால் தலைப்பை வச்சே படத்தை யூகிப்பதே ஒரு கெட்ட பழக்க மாயிடுச்சு! தளபதி மாதிரி ஒரு சமூகப் படம் போல இருக்கு! அதாவது தளபதி "கர்ணன்" படத்தை தழுவியதுபோல இந்த ராவணன்!

இந்தப் படத்தில் என்ன விஷேசம்னா, நடிகர் விக்ரம் முதல்முறையாக மணிரத்னத்துடன் இணைவதுதான்! இவருடைய நடிப்பையும், திறமையையும் வெளிக்காட்டி ஸ்டார்வால்யுவை மேலே கொண்டுபோக மணிரத்னம் கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு இது. தமிழில் உள்ள எல்லா டாப் ஸ்டார்களும் விக்ரம் மேல் பொறாமைப் பட வைக்கும் நிலையை ராவன் அறிவிப்பும், படப்பிடிப்பும் உருவாக்கியுள்ளது.

கமலுக்கு அடுத்து விமர்சகர்களால் கண்ணா பின்னானு பாராட்டுப்பெற்ற ஒரே தமிழ் நடிகர் விக்ரம்தான்! கமலே ஒருமுறை விக்ரமைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டுவதைத் தாங்க முடியாமல் விக்ரமுக்கு காமெடி பண்ணத்தெரியாது என்று சொல்லி தன்னை ஒரு படி மேலே உயர்த்திக்கொண்டார்!

இன்று விமர்சகர்களால் திறம்மைமிக்க நடிகர் என்று பாராட்டப்பட்டது உண்மைதான் என்று உணர்த்தும் அளவுக்கு மணிரத்னமும் விக்ரமை நம்பி எதிரும் புதிருமான ரெண்டு ரோல்களை ரெண்டு வேர்ஷன்ல கொடுத்துள்ளாராம். அதாவது ஹிந்திப்படத்தில் இவர் ஐஸ்வர்யாராயின் போலிஸ் கணவரான தேவ் என்ற பாத்திரத்திலும், தமிழில், "outlaw" மற்றும் ஹீரோ பாத்திரமான "வீரா" வாகும் நடிக்கிறாராம்! மொத்தத்தில் ரெண்டு ரோலுமே படத்தில் முதன்மைப் படுத்தப்பட்ட கேரக்டர்கள்!

இதில் வீரா கேரக்ட்டர்தான் ஹீரோவாக இருக்கும் போல இருக்கு. போலிஸ்காரர் கேரக்டர் ரசிகர்களைப் பொறுத்தவரையில் வில்லந்தான் என்று தோனுது.

இதுமாதிரி, ராமனாகவும், ராவணனாகவும் . ஹிந்தி மற்றும் தமிழில் நடிக்கும் விக்ரம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்!

ஆமா இதில் ராமன் ராவணன் எங்கிருந்து வந்தார்கள்னு கேக்குறீங்களா? ஒரு யூகத்தில் ஈஸீயா சொல்லலாமே.

தேவ் - ராமன்

ராகினி (தேவின் மனைவி)- சீதை

வீரா (beera)- ராவணன்.

அனேகமாக ராகினியை, வீரா கடத்தி வச்சு இருப்பாரு! நிச்சயம் இந்த ராவணன் (வீரா)வும் அவரிடம் பலவந்தமாக தவறாக நடக்காமல் டீசண்டான கைதியாக வச்சிருப்பாரு! :)

ராவன், ஆடியோ ஏப்ரல் 24 ரிலீஸ் ஆயிடுச்சு. ஏ ஆர் ரகுமான் - மணிரத்னம் படப்பாடல்கள் என்னைக்கு சோடை போச்சு?

படம் ஜூன்ல வெளிவரப்போகுதுனு சொல்றாங்க! நிச்சயம் வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய படம்தான்!

Let us hope the movie lives up to the expectations! We always expect too much from maNirthnam, which often bring him down these days. :)