Thursday, April 29, 2010

ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!- கடலை கார்னர் (51)

"ஆண்ட்டி! இவர்தான் இன்னைக்கு நம்ம ட்ரைவர்.. கண்ணன்னு சொன்னேன் இல்லயா?!"

"ஹலோ ஆண்ட்டி!"

"ஹல்லோ!"

"உங்களுக்கு ஏதாவது சமச்சுப் போட்டாளா ஆண்ட்டி? இவ சமையல வாயில வைக்க முடிஞ்சதா?"

"பிருந்தா ரொம்ப நல்லா சமைக்கிறாள், கண்ணன். நீங்க சும்மா என்னை காயத்ரினே கூப்பிடுங்களேன்!"

"இவ மட்டும் உங்களை ஆண்ட்டினு சொல்றா? இதென்ன டிஸ்க்ரிமினேஷன்?"

"இல்ல, பிருந்தா சொன்னா ஒரு மாதிரி இருக்கு.. நீங்க சொன்னா வேறமாதிரி இருக்கு"

"கண்ணன்! ஜாடையாச் சொன்னால் புருஞ்சிக்கோங்க! உங்களை பார்த்தா அவங்க வயசுமாதிரி இருக்கோ என்னவோ ? ஹா ஹா ஹா"

"ஆமா இங்கே நானும் இவங்களும அடல்ட்ஸ், நீ ஒரு டீனேஜர்! உனக்கு நெனப்புத்தான், பிருந்த்"

"நான் ஒண்ணும் டீனேஜெர்னு சொல்லல!"

"இதுக்கு முன்னால டெவான் போயிருக்கீங்களா, காயத்ரி?"

"காயத்ரியா?!!! என்ன இப்படி ஆண்ட்டிய ஏகவசனத்திலே கூப்பிடுறீங்க, கண்ணன்? " பிருந்தா சிரித்தாள்.

"ஆண்ட்டினு சொன்னா அவங்க வேணாம்ங்கிறாங்க.. வேணா அக்கானு கூப்பிடவா?"

"ஐயோ அக்கா எல்லாம் வேணாம்!"

"ஏய், உண்மையிலேயே இவங்களை பார்த்தால் உன் வயசு மாதிரித்தான் இருக்கு."

"என்வயசு மாதிரி இருக்கா? ஆமா, எனக்கு என்ன வயசுனு சொல்றீங்க இப்போ?"

"நான் சொல்லி முடிச்சுக்கிறேனே?. இருந்தாலும் கல்யாணம் பண்ணி வாழ்ந்த அனுபத்திற்காக கொஞ்சம் மரியாதை கொடுக்கனும்னுதான்.. ஆண்ட்டினேன்"

" சரியாப் போச்சு! கல்யாணம் ஆகி இருந்தா மரியாதை கொடுக்கனுமா?"

"இல்லையா? அனுபவசாலியாடுறாங்க இல்லையா?"

"அப்போ எனக்கு கல்யாணம் ஆனதும் மரியாதையா பிருந்தா மேடம்னு சொல்லுவீங்களா, கண்ணன்?"

"சொல்லீட்டாப் போச்சு! இங்கே பாருங்க காயத்ரி! நீங்க இளமையா இல்லைனு சொல்றா!"

"அவ அப்படியெல்லாம் சொல்லல கண்ணன்!"

"ஆண்ட்டி! கண்ணன் பயங்கரமா பொய் சொல்லுவாரு. நம்பி ஏமாந்திடாதீங்க! உங்க முன்னால ஒரு மாதிரி பேசுவாரு. அப்புறம் உங்க முதுகுக்குப் பின்னால் வேறமாதிரி பேசுவாரு!"

"அவருக்கு நான் ரொம்ப யங்கா தெரியிறேனோ என்னவோ, பிருந்தா! ஹா ஹா ஹா"

"அப்படி சொல்லுங்க!"

"பாவம் நீங்க, ஆண்ட்டி!"

" அவ சொல்றது உண்மைதான். உங்க முன்னால ஒரு மாதிரி, பின்னால வேறமாதிரித்தான் பேசுவேன். ஆனால் நீங்க இல்லாதபோது உங்களைப்பத்தி நல்லபடியாத்தான் பேசுவேன்"

"நல்லபடியானா என்ன அதுனு சொல்லுங்க!" என்றாள் பிருந்தா.

"நல்லபடியானா, அவங்க முதுகுக்குப் பின்னால "ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!"னு உன்னிடம் சொல்லுவேன்!"

"ஏன் அதை நேர சொன்னால் என்ன? மயங்கி விழுந்துடுவாங்களாக்கும்"

"எனக்கு உண்மையிலேயே இப்போ மயக்கம் வருது, பிருந்தா!"

"ஹா ஹா ஹா"

"பிருந்த்! சரி, ஏதாவது காஃபி கீஃபி இல்லையா எனக்கு?"

"ஆரஞ்ச் ஜூஸ் வேணா வேணுமா, கண்ணன்? உங்களுக்குகாக காஃபி எல்லாம் போட்டுத்தர முடியாது!"

"சரி அதையாவது ஊத்திக் கொடு!"

"இருங்க கொண்டு வர்றேன்."

-----------------------------------------

"இந்தியா விசிட் பண்ணுறீங்களா?"

"இல்ல கண்ணன். சும்மாதான் ரின்யுவ் பண்ணி வைக்கிறேன்!"

"உங்க எக்ஸை ஏன் அடிச்சு விரட்டிட்டீங்கனு சொல்லுங்களேன்.."

"அடிச்சு வெறட்டினேனா?!"

"இல்லை, ஐ மெண்ட் ஏன் டைவோர்ஸ் பண்ணீட்டிங்கனு கேட்டேன்?"

"என்னவோ போங்க! லவ்மேரேஜ்தான் பண்ணிக்கிட்டோம். நாளாக ஆக லவ்வையும் காணோம், மேரேஜையும் காணோம்!"

"ஐ ஆம் நாட்மேக்கிங் யு அண்கம்ஃபர்ட்டபிள், ரைட்?"

"இல்லை கண்ணன். ஐ ஆம் ஃபைன்."

"எதுவும் சீரியஸ் பிரச்சினையா?"

"தெரியலை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து போரடிச்சுருச்சோ என்னவோ?"

"அப்படினா?"

"லவ் பண்ணும்போது கத்துக்க வேண்டியது நெறையா இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வேண்டியதெல்லாம் பாக்கி இருக்கு. கலயாணத்துக்கப்புறம் அப்படி ஒண்ணூம் பெருசா இல்லாமப் போயிடுது போல. மிஞ்சுவது வெறும் வெறுப்புத்தான்."

"அன்பே இல்லாமல் எப்படிப் போகும்?"

"போகாதுதான். அன்பு, பரிவு இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வெறுப்பு அதைவிட பலமடங்காயிடும். அதனால அன்பு, பரிவு எல்லாம் அதில் ஒண்ணுமில்லாமப் போயிடுது."

"ஆர் யு ஹாப்பி நவ்?"

"ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்த பிறகு சும்மா சேர்ந்து வாழ்றது இருக்கே, அது ரொம்ப சோகம்! அதுக்கு இது பரவாயில்லை!"

------------------------------

"இந்தாங்க ஆரஞ்ஜ் ஜூஸ்! ஐஸ் க்யூப்ஸ் இதிலே இருக்கு எவ்ளோ வேணுமோ போட்டுக்கோங்க!"

"தேங்க்ஸ் பிருந்த்!"

"உங்களுக்கு எப்போ கல்யாணம், கண்ணன்?"

"எனக்கா? வீட்டிலே பொண்ணு பார்த்துண்டு இருக்காங்க, காயத்ரி!"

"வீட்டிலே பார்க்கிறாங்களா!!"

"ஏன் அதிசயமா கேக்கிறீங்க?"

"இல்ல இந்தக் காலத்தில் அரேஞ்சிட் மேரேஜா பண்ணப்போறீங்க!"

"நோ அஃபெண்ஸ் பட் ல்வ மேரேஜ் எல்லாம் உங்க மேரேஜ் மாதிரித்தான் முடியுதுங்க காயத்ரி. அதான் ஜாதகம் கீதகம் எல்லாம் பார்த்துக் கல்யாணம் பண்ணலாம்னு பார்க்கிறேன்."

" கண்ணனுக்கு வர்றவ ரொம்பப் பாவம், ஆண்ட்டி!"

"சே சே"

"நெஜம்மாத்தான்!"

"ஏண்டி பாவம்? என்னவோ என்னோட வாழ்ந்து என்னை டைவோர்ஸ் பண்ணின மாதிரி சொல்லுற?"

"இல்ல இல்ல, அன்பாலேயே கொன்னுடுவீங்கனு சொல்ல வந்தேன்!"

"ரெண்டுபேரும் என்னை ரொம்பக் குழப்பாதீங்க!"

"நெஜம்மாத்தான் ஆண்ட்டி. கண்ணன் அப்பப்போ ரொம்ப ஏங்க வச்சுடுவார்!"

"ஏங்க வைக்கிறதுனா?"

"அதெப்படி சொல்றது..?"

"சரி அவங்கள போட்டு அறுக்காதே! புறப்படுவோமா?"

-தொடரும்

No comments: