Friday, September 26, 2008

காதல் கல்வெட்டு-13

"அந்தக்கடிதத்திலிருந்த விசயத்தை சொல்றேன் கேட்டுகோ, கேக்கறியா, கயல்?"

"சொல்லுங்க, வேற வழி?"

"உன்னை நல்லா உதைக்கனும், கயல்! ஏதோ கதை கேட்பது பிடிக்தாத மாதிரி ரொம்பத்தான் சலிச்சுக்கிற?"

"சரி, சரி, சொல்லுங்க, வருண். சும்மாதான் டீஸ் பண்ணினேன்"


டியர் வருண்,

எப்படி இருக்கீங்க வருண்? you would not have expected this letter from me. ஏன் என்னோட பழகினீங்க, வருண்? லக்ஷ்மி சொல்லுவாள் வருணோட ரொம்பப்பேசாதே என்று. அதையும் மீறி உங்களோட வந்து பேசுவேன். யாரோடையுமே இப்படியெல்லாம் நான் பேசியதில்லை, பழகியதில்லை.உங்க டேட் ஆஃப் பெர்த் படி பார்த்தால் நீங்க "ஜெமினி". உங்களுக்கு கண்மூடித்தனமான விசிறிகள் அதிகமாக இருப்பாங்களாம். ஜோசியத்தில் எல்லாம் நம்பிக்கை எனக்குக்கிடையாது, இருந்தாலும் ஒரு பொழுதுபோக்குக்காக பார்ப்பேன். அம்மாவிடம் உங்களைப்பற்றி சொல்லுவேன். அடிக்கடி உங்களைப்பற்றி சொல்வதால், என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். எனக்கு ஒரு செருப்பு வாங்கனும்னாக்கூட அப்பா அம்மாதான் செலெக்ட் பண்ணுவாங்க, வருண். கல்யாணம் எல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாது.

எனக்கு இந்த கடிதத்திற்கு பதில் எழுதுவீங்களா வருண்?

Affectionately yours,
Jeyanthi.

"ஆமா, என்னதான் சொல்கிறாள் உங்க ஜெயந்தி?"

"நாந்தான் என்ன எழுதினாள்னு சொன்னேன் இல்லை, கயல்?"

"ஆமாம், சொன்னீங்க. ஆனால் எனக்கு ஒன்னுமே புரியல! உங்களை லவ் பண்ணுவதா சொல்றாளா?"

"நேரடியா அப்படி சொல்லவில்லை, நான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பாள் இல்லையா?"

"நீங்க சொன்னீங்களா?"

"என்ன சொல்ல? நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால் இப்போ கல்யாணம் எல்லாம் பண்ணிக்கமுடியாது. என் ஃபேமிலி சூழ்நிலையில் நான் நல்லாப்படித்து முதலில் வேலைக்குப்போகனும்...இப்படியா?"

"பதிலே எழுதலையா, நீங்கள்?"

"இல்லையே, எழுதினேன். அவளை மாதிரியே நானும் ஏதோ உளறினேன். ஆனால் உன்னைக்காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை"

"ஏன் சொல்லவில்லை? என்னென்ன உளறனீங்க அதையும் சொல்லுங்க. அவள் உளறல்களை மட்டும் சொன்னவர் உங்களுடையதை மட்டும் மறைக்கறீங்க பார்த்தீங்களா?" சொல்லிவிட்டு மீண்டும் குறும்பாக சிரித்தாள்.

"அப்படி ஒரு கமிட்மெண்டுக்கு நான் அப்போது தயாரா இல்லை கயல்"

"But you loved her?"

"yes, I think so"

"What is wrong in saying it?"

"I don't think that will take us anywhere further. I have had lots of responsibilities, Kayal"

"அப்போ உங்களை காதலிக்கிறேன்னு பொண்ணுங்கதான் வந்து சொல்லனுமா?"

"நான் அப்படியா சொன்னேன்?"

"அப்புறம் என்னவாம்? பொதுவா எந்தப்பொண்ணும் சொல்ல மாட்டாள், வருண்"

"நான் எதிர்பார்க்கவில்லை, கயல்"

"ஆமாம்,உங்க ஜென்னி எதுவும் புது பாய்ஃப்ரெண்ட் பிடிச்சு இருக்காளா இப்போ?"

"இல்லையே, அவள் ரொம்ப வருத்தமா இருக்காள்"

"ஏன் நீங்க ஆறுதல் சொல்லலையா, இந்திப்பட ஷாருக்கான் மாதிரி?"

"உனக்கு கொழுப்புத்தானே? நான் அவளோட அப்படியெல்லாம் பழகலைனு எத்தனை தடவை சொல்றது உனக்கு?"

"எப்படியெல்லாம்?" இப்போது அவள் வருணை பார்த்த பார்வையில் குறும்பு கொப்பளித்தது. சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு சீரியசான முகபாவத்துடன் கேட்டாள்,

"எப்படி எல்லாம் பழகலைனு கேட்டேன்?"

"சரி அதை விடு! அவள்தான் உன்னை ஞாபகப்படுத்தி கூப்பிடச் சொன்னாள்"

"உங்களுக்கு நான் கால் பண்றேனோ இல்லையோ, அவள் தினமும் உங்களுக்கு கால் பண்ணுகிறாள். அவளுக்கென்ன அக்கறையாம்? அவள் என்னை ஞாபகப்படுத்தலைனா, கால் பண்ணி இருக்க மாட்டீங்களா? உங்களுடைய குரலைக்கேட்க நான் ஒன்னும் ஏங்கவில்லை"

"ஏதாவது ஹேண்ட்சம் பாய்ப்ரெண்டோட ஓடிப்பிடித்து விளையாடிட்டு இருந்து இருப்ப. உனக்கெதுக்கு என் ஞாபகம் எல்லாம் வருது?'

"அது ஓரளவு உண்மைதான். ராம கிருஷ்ணன் என்று ஒருவரை தான் டேட் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் டீசண்டா பழகுகிறார். ஆனால் அப்படி ஒண்ணும் "இது" வரவில்லை அவர் மேலே"

"இது னா என்ன அது?"

"உங்க ஜெயந்திக்கு உங்க மேலே இருந்துச்சில்ல அதுதான்"

கயல் இன்று வருணை கிண்டலடித்தே கொல்லப்போகிறாள் என்று தெரிந்துவிட்டது, பேச்சை மாற்ற, "சரி கோயிலுக்குப்போகலாமா? வந்து நேரமாச்சு!" என்றான்.

"சரி வாங்க போகலாம். ஏதோ பெரிய காதல் கதை சொல்றேனு சொல்லி இப்படி ஏமாத்திட்டீங்களே வருண்"

"அவ்வளவுதான் என் காதல் கதை, கயல். ஃப்யூச்சர்ல ரொம்ப ரொமான்ஸோட யாரையாவது காதலித்தால் உனக்கு அப்படியே சொல்றேன், சரியா?

கயல் உதட்டை சுழித்து பழிப்புக்காட்டினாள்.

"நீ பழிப்புக்காட்டினால் ரொம்பவே அழகா இருக்க கயல்"

"உங்ககிட்ட கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கனும்"

"ஆமாம், அதற்கு உதவி செய்ய அந்தக் கடவுள்ட்டப்போயி வேண்டிக்கோ"

"அம்மா பேருக்கு ஒரு அர்ச்சனை மட்டும்தான் இன்று. கடவுளை ரொம்பத் தொல்லை பண்ணப்போவதில்லை, உங்களை பார்த்துக்க நானே போதும்"

இருவரும் வாசலில் காலணிகளை கழட்டி வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்தார்கள்

-தொடரும்

Tuesday, September 23, 2008

காதல் கல்வெட்டு-12

கயல், ஃப்ரீவேயிலிருந்து கோவில் போகும் ரோடு வந்தவுடன் "எக்ஸிட்" எடுத்து, கோயிலில் உள்ள "பார்க்கிங் லாட்" டில் காரை நிறுத்தினாள்.

“சரி வருண், இந்தக்கதையை சொல்லி முடிங்க, பிறகு கோயிலுக்கு உள்ளே போகலாம். சரி, என்ன சொன்னாள் காயத்ரி, வருண் ?”

”காயத்ரி என்னை நோக்கி வந்ததும், என் இதயம் வேகமாக அடித்தது. என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்தாள், ஒரே வினாடிதான் அவள் முகத்தில் அந்தப்புன்னகை இருந்தது, அடுத்தவினாடி அந்தப் புன்னகை அழுகையாக மாறியது, காயத்ரி கண்களில் கண்ணீராக ஓடியது. ஒண்ணுமே சொல்லாமல் அழ ஆரம்பித்து விட்டாள், கயல்”

நான் உடனே "நீங்கள் இப்படி அழுதால், யாராவது பார்த்தால் தப்பாக நினைத்துக்கொள்வார்கள். என்ன விசயம்னு சொல்லுங்கள், ப்ளீஸ்" என்றேன்.

அவள் அழுதுகொண்டே, "வருண்! அவள் உங்களோட பழகுவதால் எனக்கு ஒண்ணுமில்லை!"

"யாருங்க ஜெயந்தியா?" என்று கேட்டேன்.

"ஆமா, அவள் கொஞ்சம் வேற டைப், வருண். உங்களோட எல்லோருடைய முன்னிலையிலும் வலிய வந்து கூச்சமில்லாமல் பேசுகிறாள். என்னால் அப்படி உங்களோட வந்து பழக பேச முடியவில்லை, வருண். நீங்கள் அவளோட சந்தோஷமாக இருங்கள், வருண். அதனால் எனக்கு ஒண்ணுமில்லை" என்றாள் அழுகையுடன்.

"நீங்கள் நினைப்பதுபோல் ஒண்ணும் இல்லைங்க" என்றேன் நான் குற்ற உணர்வுடன்.

"இல்லை, வருண் யாரோடையுமே க்ளோஸா பழகக்கூடாது. இது எனக்கு ஒரு பாடம்" என்றாள் அழுகையுடன் மறுபடியும்.

எனக்கு பயங்கர குற்ற உணர்வு கயல். அவள் அழுகைக்கு நான்தான் காரணம் என்று அவள் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது. ஆனால் எல்லாமே என் கற்பனைதான், கயல். காயத்ரி அழுதுகொண்டே இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது வெளியில் இருந்து வந்து ஒரு லைப்ரரி ஸ்டாஃப் எங்களை எட்டிப்பார்த்து விட்டுப் போனார். இவர் பார்த்துட்டுப்போயி ஏதாவது கதைகட்டப்போறாருனு எனக்கு பயம் வேற.

அத்துடன் "தேங்க்ஸ், வருண்" என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

"ஏன் அழுதாள் வருண்?"

"எனக்குத்தெரியவில்லை, கயல். ஆனால் இதுதான் நடந்தது. ஜெயந்தி போய் நான் சொன்னதை அப்படியே அவளிடம் சொல்லி இருக்கிறாள்.இவள் வந்து அழுதுவிட்டுப்போனாள். எனக்கு ஜெயந்தி மேலேயும் என் மேலேயும் கோபம் வந்தது"

"இதையே அவள் சிரித்துக்கொண்டு கேசுவலாக கேட்டுவிட்டு போயிருக்கலாம் இல்லையா, வருண்?”

"ஆமாம், கயல், ஆனால், சில பெண்கள் எதற்கு எடுத்தாலும் அழுவார்கள்"

“சரி அப்புறம் சொல்லுங்க, வருண்”

நான் ஜெயந்தியை அடுத்த முறை சந்திக்கும்போது அவளிடம் கேட்டேன், "ஏன் இப்படி, காயத்ரியிடம் போய் நான் சொன்னதை சொன்னீங்க?" அவங்க வந்து ஒரே அழுகை. என்னால ஒழுங்கா அவங்ககிட்ட பதில் சொல்ல முடியவில்லை ஜெயந்தி"

"காயத்ரி உங்களிடம் வந்து இதைப்பற்றிக் கேட்டாளா?" என்றாள் ஜெயந்தி.

"உங்களுக்கு அவங்க வந்து கேட்டது தெரியவே தெரியாதா, ஜெயந்தி?!!"

"இல்லை வருண், அவள் வந்து கேட்டதும் தெரியாது. அதை என்னிடம் அவள் சொல்லவும் இல்லை" என்றாள்.

"ஜெயந்திக்கு ஒரே ஆச்சர்யம், கயல்"

“அப்புறம், ஜெயந்தியோட என்ன பண்ணுனீங்கனு சொல்லுங்க, வருண்?”

"கயல்! ஒண்ணு சொல்றேன் தெரிந்துகொள் ப்ளீஸ். அந்த சூழ்நிலையில் நான் பேச்சளர்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலம் என்னவென்றே தெரியாது. என் காதலை அடுத்த ஃபேஸ்க்கு எடுத்துப்போகும் சூழ்நிலையில் நான் அப்போது இல்லை! அதனால் நான் எதுவும் ஏடாகூடமாக செய்யவில்லை. ஜெயந்தியும் நானும் பேசிக்கொள்வோம். ஒருசில நேரம் தனிமையில். ஆனால் அவள் விரல்களைக்கூட நான் தொட்டதில்லை. அவள் ரொம்ப அன்பா இருப்பாள்,கயல். அவளோட என்ன பேசினாலும் நல்லா இருக்கும். ஜெயந்தியிடம் ஐ லவ் யு கூட நான் சொன்னதில்லை"

"உங்களுக்கு பெண்கள் “ஐ லவ் யு” சொன்னால்தான் பிடிக்குமோ, வருண்?"

"அது உண்மையில்லை கயல். ஆனால் எனக்கு நெகட்டிவ் பதில் வந்தால் பிடிக்காது. அதனால் அப்படியெல்லாம் சொல்லி காம்ளிக்கேட் பண்ணு வதில்லை!"

வருண், இது “மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்” படத்தில் இருந்து, “if you love someone you say it, you say it right then, out loud. Otherwise the moment just... Passes you by...”

“நல்லாத்தான் இருக்கு, கயல். ஆனால் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. சோஸியல் ப்ரேக் அப் முடிந்து, பரீட்சை எல்லாம் முடிந்து ஊருக்கு போயாச்சு. ஜெயந்தியை அதுக்கப்புறம் பார்க்க முடியவில்லை”

“அதோட அவ்வளவுதானா உங்க ஜெயந்தி?”

இல்லை, இதைக்கேளு, பரீட்சைஎல்லாம் முடிந்து ஒரு 2 வாரம் இருக்கும். ஊரில் வீட்டில் இருக்கும்போது, ஒரு நாள் மதியம், அம்மா வந்து உனக்கு ஒரு கடிதம்னு "ஸ்னைல்மெயில்" ஒண்ணு கொடுத்தாங்க என்னிடம், கயல்”

“லெட்டெர் யாரிடமிருந்து, வருண்?”

”அது ஜெயந்தியிடமிருந்து வந்து இருந்தது, கயல்!”

“என்ன எழுதி இருந்தாள், வருண்?”

-தொடரும்

Friday, September 19, 2008

என்ன கொடுமை இது? நாங்க மட்டும் என்ன பாவம் செய்தோம்?

டிஸ்கி: இந்த பதிவு சிரிப்பதற்காக மட்டுமே, சீரியசா கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

ஆந்திராவில் கீழ்க்கண்ட நடிகர்கள் எல்லாம் டாப்பாம், விகடன் ஆன்லைனில் இருந்த செய்தி இது.



நம்ம ஊரில் டாப்பான நடிகர்கள்:

சூப்பர் ஸ்டார்:


Gabடன்:


ஒலக நாயகன்:




என்ன கொடுமை இதெல்லாம்? தமிழ் நாட்டு மங்கையர் என்ன பாவம் செய்தோம்? :( ஸ்டமக் பர்னிங். தமிழ் நடிகர்கள் அதிகம் வெறுக்கும் வார்த்தை என்ன தெரியுமா? ரிட்டயர்மெண்ட்

Wednesday, September 17, 2008

காதல் கல்வெட்டு-11

சனிக்கிழமை சரியாக 3:47க்கு கயலின் அக்யூரா டி எல், வருண் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றது. வருண், கயலுக்காக, அப்பார்ட்மெண்ட் வாசலிலேயே நின்றிருந்தான். காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி வெளியில் வந்தாள் கயல், ஒரு சல்வார் காமிஸ் பின்க் கலர்ல அணிந்து இருந்தாள். உதட்டில் சாயம் பூசி இருந்தாள். அந்த சல்வார் காமிஸ் அவள் அணிந்து இருந்ததால் அழகாக இருந்தது. இப்போதுதான் தலைகுளித்து வந்ததுபோல் அவள் அடர்ந்த கூந்தலை லூஸாக விட்டிருந்தாள். வருண், ஒரு டாக்கர்ஸ் பேண்ட்ஸும், ஒரு கேப் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தான்.

“என்ன வருண், வீட்டுக்கு வெளியவே நிக்கிறீங்க? உள்ளே வந்துவிடுவேன் என்று பயமா?” என்றாள் சிரித்துக்கொண்டே.

“அது ஓரளவுக்கு உண்மைதான், கயல்”

“எது உண்மை?”

“வீடு ஒரு மெஸ்ஸா இருக்கு. மேலும் உன்னை உள்ளே அழைத்தால் பயம்தான்”

“என்ன பயம் என்னிடம்?”

“ஒரு மாதிரியான பயம். அதை எப்படி உன்னிடம் சொல்வதென்று தெரியலை. சரி, புறப்படுவோமா, கயல்? அவசரமாக உனக்கு பாத்ரூம் எதுவும் போகனும்னா மட்டும் கதவைத் திறக்கிறேன்”

“அதெல்லாம் இல்லை வருண், நாம போகலாம்”

வருண் காரில் அமர்ந்தவுடன், காரை ஸ்டார்ட் பண்ணி கோயிலை நோக்கி காரை ஓட்டிச்சென்றாள், கயல். அது ஒரு 20 நிமிட பயணம். அவளுக்கு பழக்கமான வழிதான்.

கார் ஃப்ரீ வேயில் நுழைந்தவுடன்

“சரி, என்னிடம் என்ன பயம்?”

“உன்னிடம் எல்லாம் பயமில்லை. என் மேல்தான் நம்பிக்கை இல்லை. நீ கனவில் வந்து ரொம்ப தொந்தரவு செய்ற கயல்”

“உங்க கனவில் வந்தேனா, வருண்!!?”

“ஆமாம். ஆக்ட்சுவல்லி, நீ ஒழுங்காத்தான் பிஹேவ் பண்ணின. நாந்தான் அளவுக்கு மீறி நடந்தேன், கனவில்”

“நீங்க கனவில்தான் இப்படியா? நிஜத்தில் பக்கா ஜெண்டில்மேனா?”

“ஆமா, நான் உன்னை என்ன பண்ணினதா நீ கனவு கண்டாய், கயல்?”

“இல்லை வருண், எனக்கு இப்போ எல்லாம் கெட்ட கனவுதான் வந்தது. வீட்டில் வரன் பார்க்கிறேன் என்று நிறைய ஃபோட்டோ அனுப்பி தொந்தரவு செய்றாங்க”

“நான் சொல்றதை கோவிச்சுக்காமல் கேக்குறியா, கயல்?”

“சொல்லுங்க”

“என்னைக்கேட்டால், "டேட்டிங்" பண்ணுவதற்கு "அரேஞ்ஜிட் மேரேஜ்" எவ்வளவோ பெட்டெர்”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“ஜென்னி ஒருவனை டேட் பண்ணி, பாய்ஃப்ரெண்ட் ஆக்கி, ஃபியாண்சே ஆக்கினாள். ஒரு 3 வருடம் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனா இப்போ பிரிஞ்சிட்டாங்க!”

“ஜென்னியை நீங்க இப்படி கைவிடலாமா வருண்?” என்று கயல் குறும்பாக கேட்டு சிரித்தாள்.

வருண் முறைக்க, "இது சும்மா ஜோக் வருண், முறைக்கக்கூடாது சிரிக்கனும். சரி ஏன் பிரிஞ்சாங்க?"

“ஜென்னி பாய்ப்ரெண்டுக்கு வேறொரு பெண் மேல் காதலாம்”

"இப்போ திரும்பவும் சந்தேகம் வருதே" கயல் மீண்டும் டீஸ் பண்ண, இந்த முறை வருணும் கூட சேர்ந்து சிரித்தான்.

“இப்போ எல்லாம் கொஞ்ச நாள்தான் காதல் எல்லாம்,அப்புறம் காணாமல் போயிடுது போல”

“நிறைய நேரம் இதெல்லாம் காதலே இல்லையென்று நினைக்கிறேன், சும்மா உடல்ப்பசிக்காக ஒரு துணை ”


“அரேஞ்ஜிட் மேரேஜ்லயும் அப்படித்தானே, வருண்?”

“ஆமாம், ஆனால், அங்கே இந்த காதல் ட்ராமா எல்லாம் இல்லையே?”

“நீங்க யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா, வருண்?”

“நிறையப்பேரை காதலிச்சு இருக்கேன், கயல்”

“நிஜம்மாவா?”

“ஆனால் அது காதலா இல்லைனா இன்ஃபேச்சுவேஷனா, இல்லை ஒரு தலைக்காதலானு தெரியல,”

“எனக்கு சொல்லுங்க, வருண். எதுவா இருந்தாலும் பரவாயில்லை”

“சரி சொல்லி உன்னை போர் அடிச்சு கொல்லுறேன்! செக்ஸ்லாம் என் காதல்ல இருக்காது. ரொம்ப புனிதமான காதல் என்னுடயைது ” என்று சிரித்தான் வருண்.

“அப்படியா? சொல்லுங்க உங்க புனிதக்காதலை, ப்ளீஸ்”

அப்போ நான் “கோ-எஜுக்கேஷனில்” பேச்சலர்ஸ் இந்தியாவில் பண்ணிக்கொண்டு இருந்தேன், என் வகுப்பில் ஒரு பெண் இருப்பாள். ரொம்ப புத்திசாலி, மா நிறம், க்ளாஸ் போட்டு இருப்பாள், அழகா, அதே சமயத்தில் செக்ஸியாவும் இருப்பாள். அவளை எனக்கு ரொம்பப்பிடிக்கும். சும்மா கண்களாலேயே பார்த்துக்குவோம். பாட சம்மந்தமாக எப்போவாவது ஒருசில வார்த்தைகள் பேசிக்கொள்வோம், ஆனால் அப்பப்போ என் பார்வை அவள் மேல் விழும். அவளுக்கும் இது நல்லாத்தெரியும். அவள் மேலே எனக்கு ஒரு மாதிரியான இண்ஃபேட்ச்சுவேஷன் இருந்தது. அவளுக்கும் என் பார்வை பிடிக்கும்னு எனக்கு தோணும்.

“அவள் மேலே உங்களுக்கு ஒரு இதுவா, வருண்? அவள் பேர் என்ன?”

“காயத்ரி”

“சரி அப்புறம்?”

“அவள் ரொம்ப கன்சர்வேட்டிவ், கயல். ஓரளவுக்கு நல்லா படிப்பாள். எனக்கும் அவளுக்கும்தான் படிப்பில் போட்டி. ஆனால் அவள் லாங்குவேஜ் மற்றும் ப்ரரோனன்ஷியேஷன் லாம் ஆங்கிலத்தில் நல்லா இருக்கும். ஒரு மாதிரி ரிச் ஃபேமிலியில் இருந்து வந்தவள். பெண்களிடம் கூட அளவாத்தான் பேசுவாள்”

“அதான் கண்கள் லயே பேசிக்குவீங்களா, வருண்?”

“அந்த வயதில் அந்த மாதிரி பேசிக்கொள்வது நல்லாயிருக்கும், கயல். சரி, கதையைக்கேளு! இப்படிப் போய்க்கொண்டு இருக்கும்போது, அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தி இருப்பாள். எங்க பேட்ச்மேட், ஆனால் வேற க்ளாஸ். அவள் பெயர் ஜெயந்தி. கருப்பாத்தான் இருப்பாள். ஆனால் கவர்ச்சியா இருப்பாள், ரொம்ப அழகான கண்கள் அவளுக்கு. நல்லாவும் படிப்பாள். காயத்ரியும் ஜெயந்தியும் ரொம்ப ரொம்ப க்ளோஸ். தோழிகளின் நெருக்கம் பார்த்து, கூட படிப்பவர்களே பொறாமைப்படுவார்கள். திடீர்னு புதுப்பழக்கமாக ஜெயந்தி அடிக்கடி என்னோட வந்து ஏதாவது பேச ஆரம்பித்தாள். ஒரு மாதிரி உரிமையோட அன்பா பேசுவாள்.

“உரிமையோடனா?”

“ எப்படி சொல்றதுனு தெரியலை. ரொம்ப அன்பா பேசுவாள். ஒரு சம்பவம் சொல்றேன் கேளு. ஒரு நாள், என்னிடம் வந்து, “வருண், எனக்கு அவசரமாக ஒரு 500 ரூபாய் வேணும். தர்றீங்களா, ப்ளீஸ்?” என்றாள்.

“இப்போ என்னிடம் இல்லையே, ஜெயந்தி. ஈவெனிங் கொடுத்தால் போதுமா?” என்றேன்.

“வீட்டில் கேட்டு இருக்கிறேன், வருண். அடுத்த வாரம்தான் அனுப்புவாங்க. அடுத்தவாரம் கட்டாயம் திருப்பி தந்துவிடுவேன்” என்றாள்.

நான் லன்ச் ப்ரேக்ல போய் பணம் எடுத்து வந்து கொடுத்தேன். ஒரு வாரம் சென்று திருப்பிக்கொடுத்தாள்.

நான், "வேணாம், ஜெயந்தி" நு சொன்னேன். உடனே “இது உங்க பேரெண்ட்ஸ் சம்பாதித்த பணம், வருண். உங்க பணம்னா திருப்பி தரமாட்டேன். நிச்சயம் நீங்க சம்பாதித்ததென்றால், வாங்கிக்குவேன்” என்றாள்.

அதுக்கப்புறம் ரொம்ப உரிமையோடு பேசுவாள், பழகுவாள், எனக்கும் அவளை பிடிக்க ஆரம்பித்தது. ரொம்ப லவ்வபிளா இருப்பாள் கயல். ஜெய்ந்தி என்னோடு வலிய வந்துப் பழகப்பழக, காயத்ரிக்கும் ஜெயந்திக்கும் பயங்கர மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆனது. ரெண்டு பேரும் பேசிக்கொள்வதே குறைந்தது.

“ஜெலஸி? இல்லைனா தற்செயலா கூட இருக்கலாம் இல்லையா வருண்?”

“எனக்கு தெரியாது, கயல். ஒரு நாள் ஜெயந்தியிடம் கேட்டேன். “என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்?. நீங்களும் காயத்ரியும் பேசிக்கொள்வதில்லையா?” என்று.

“தெரியலை வருண். என்னனு தெரியலை, ரெண்டு பேருக்கும் பயங்கர மிஸ் அண்டர்ஸ்டேண்டிங். எங்களுக்கே காரணம் தெரியல” என்றாள் ஜெயந்தி.

நான் ஒரு தவறு செய்தேன் இங்கே. “நீங்க என்னோட பழகுவது ஒருவேளை காயத்ரிக்கு பிடிக்கலையா, ஜெயந்தி?” என்று கேட்டேன். எனக்கென்னவோ அப்படி தோன்றியது, கயல். ஆனால் நான் அப்படி கேட்டது தப்பு.

“அதெல்லாம் இருக்காது வருண். காயத்ரி அப்படி டைப் கிடையாது” என்று அடித்துச் சொன்னாள் ஜெயந்தி. நானும் என் தியரியை மூடி வைத்து விட்டேன்.

“அவ்வளவுதானா? அப்புறம் என்ன ஆச்சு?” கயல் கண்களில் ஆர்வம் மின்ன கார் ஓட்டுவதையும் மறந்து வருணைப்பார்த்து கேட்டாள். பக்கத்தில் ஒரு கார் ஹாங்க் பண்ணியது.

"பார்த்து ஓட்டு கயல், கதை கேட்க்கறதுனா உனக்கு ரொம்ப பிடிக்குமோ?" இப்போது வருணுக்கு கயலை டீஸ் பண்ண ஒரு காரணம் கிடைத்தது.

"அதெல்லாம் இருக்கட்டும், நீங்க முதல்ல கதையை சொல்லுங்க"

"ஜெயந்தியுடன் அந்த உரையாடலுக்குப்பிறகு அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். அன்று, சனிக்கிழமை, டிப்பார்ட்மெண்ட் லைப்ரரியில் இருந்தேன். வேறு யாரும் இல்லை. முதலில் காயத்ரி உள்ளே வந்தாள், ஏதோ புக் ரிட்டேர்ன் பண்ணிவிட்டு வெளியில் போனாள். மறுபடியும் உள்ளே வந்தாள், என்னை நோக்கி, இந்த முறை.

Tuesday, September 9, 2008

21: என்னுடைய பார்வையில்




பாவங்களின் நகரமாக கருதப்படும் லாஸ் வேகஸை சுற்றிப்பார்க்க ஆசை இருப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம், லாஸ் வேகஸை இன்ச் இன்சாக கேமராவில் ரசித்திருக்கிறார்கள். எனக்கெல்லாம் 2 மணி நேரம் சென்றாலே போர் அடிக்கும் லாஸ் வேகஸில் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று வியப்படைய வைத்த படம் 21.

கதை ப்ளாட் ரொம்ப சிம்பிள், கதாநாயகன் பென் கேம்பெல்(ஜிம் ஸ்டர்கெஸ்) ஒரு ஜீனியஸ் எம்.ஐ.டி மாணவர். இவருக்கு ஹாவர்ட் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது. இவருக்கும், ஹாவர்டுக்கும் இடையே தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான்: பணம்! அறை, படிப்பு, சாப்பாடு எல்லாவற்றுக்கும் 300,000 டாலர்கள் தேவைப்படுகிறது. பென்னுக்கு அப்பா இல்லை, ஏழை அம்மா மட்டுமே. பணத்தை எப்படி தேடுவது என்ற கவலையில் இருக்கும் ஹீரோவுக்கு எம்.ஐ.டி பேராசிரியர் மிக்கி ரோசா மூலமாக ஒரு தீர்வு கிடைக்கிறது, ப்ளாக் ஜாக்!

ப்ளாக் ஜேக் என்பது உலகின் ரொம்ப பாப்புலரான சீட்டு விளையாட்டு, நினைவாற்றலை அடிப்படையாக வைத்து விளையாடப்படுகிறது. லாஸ் வேகஸில் அதிக சூதாட்டக்கிளப்புகளில் விளையாடப்படுவது. நான் ஒரு முறை கூட விளையாடியது இல்லை(நம்புங்க, நிஜமா தான்). ஆனால், "Winner! winner! chicken dinner" என்ற கோஷத்துடன் சிகரெட் புகைய நிறைய பேர் விளையாட பார்த்திருக்கிறேன். எனக்கு "Wheel of fortune" மற்றும் ஸ்லாட் மெஷின்கள் விளையாடத்தான் பிடிக்கும், அதுவும் கொஞ்ச நேரம்(உண்மையை சொல்லிட்டேன் பார்த்தீங்களா?). சரி நம்ம கதையை விட்டு சினிமா கதைக்கு வருவோம், ப்ளாக் ஜாக் விளையாடி நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசிரியரின் குறுக்கு வழி யோசனையை முதலில் மறுக்கும் பென், பிறகு தன்னுடைய நெடுநாள் 'க்ரஷ்' ஆன ஜில் டெயிலர்(கேட் போஸ்வொர்த்) வற்புறுத்தியதும் ஒப்புக்கொள்ளுகிறார்.

பிறகு லாஸ் வேகஸைப்பற்றிய அற்புதமான காட்சிகள் விரிகிறது. கேமராவை கதாநாயகன் பார்வையில் இருந்து எடுத்திருப்பதால் எங்கே பார்த்தாலும் அழகான பெண்கள்,பெண்கள், பெண்கள்! சலிப்பு(பொறாமை) தட்டுகிறது. ஆண்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். கதாநாயகனுக்கு அந்த பெண்களை எல்லாம் விட்டு ஏன் சுமாராக இருக்கும் ஜில்லை பிடிக்கிறது என்ற லாஜிகல் கேள்வியை எல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, அது அப்படித்தான். பிறகு என்ன ஆகிறது? கதாநாயகனுக்கு தேவையான பணம் கிடைக்கிறதா என்பதெல்லாம் மீதி கதை.

படத்தில் நான் ரசித்த காட்சிகள் நிறைய இருக்கிறது, குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கதாநாயகன் - நாயகி காதல் காட்சியின் போது பேக்கிரவுண்டில் துள்ளி குதிக்கும் பெலாஜியோ செயற்கை இசை நீரூற்று(லாஸ் வேகஸ் செல்பவர்கள் இந்த காட்சியை காணத்தவறாதீர்கள்) மற்றும் சூதாட்ட டேபிளில் கதாநாயகன் முதல் முறையாக லேசான தடுமாற்றத்துடன் ப்ளாக் ஜாக் விளையாட ஆரம்பிக்கும் காட்சி. கதாநாயகனுக்காகவே இந்த படம் பார்க்கலாம். டாம் க்ரூஸ் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாரோ, அப்படியே பார்க்க லட்சணமாக இருக்கிறார்.

படத்தில் நிறைய லாஜிகல் ஓட்டைகள் இருக்கிறது, இவ்வளவு படித்த, அறிவான கதாநாயகன், சம்பாதிக்கும் பணத்தை கூரையில்லா மறைத்துவைக்கவேண்டும்? வேறு இடமா கிடைக்கவில்லை? சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது! படத்தின் கடைசி 30 நிமிடம் சலிப்பு தட்டுகிறது. சினிமாத்தனமாக இருக்கவேண்டும், சராசரி ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற ஆதங்கத்தில் 'லீகலி ப்ளாண்ட்' போன்ற வெற்றிப்பட இயக்குனரான ராபர்ட் லுகேட்டிக் கதையை லாஜிக் இல்லாமல் அவசர அவசரமாக நகர்த்துகிறார். லீகலி ப்ளாண்டில் இருந்த நிதானம் காணாமல் போயிருக்கிறது! க்ளைமேக்ஸில் அதிக கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும். மேலும் சாதாரண மக்களுக்கு உதவும் ப்ளாக் ஜாக் டிப்ஸ் ஏதும் இந்த படத்தில் கிடையாது, உபயோகிக்கப்படும் கை சிக்னல்களும் "இதோ பார், நான் ஏதோ திருட்டுத்தனம் பண்ணுகிறேன்" என்று காட்டிக்கொடுக்கும் விதமாக இருக்கிறது. மேலும் ப்ளாக் ஜாக் டீலர்களை படத்தில் ஏமாற்றுவது போல நிஜத்தில் ஏமாற்றுவது கடினம். டீலர்களே பொதுவாக நல்ல கவுண்டர்களாக இருப்பார்கள், கார்ட் எண்ணுபவர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதையும் இயக்குனர் சற்று கவனித்திருக்கலாம்.

மொத்தத்தில் 21 படத்தை ஒரு முறையாவது பார்க்கலாம், கணித அல்லது பொறியியல் துறையை சேர்ந்த நம்மைப்போன்றவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். லாஸ் வேகஸில் பளபளப்பையும், அதனுடைய இருண்ட மறுப்பக்கத்தையும் பார்க்க விரும்புபவர்களும் இந்த படம் பார்க்கலாம்.

Friday, September 5, 2008

அழகான பொண்ணு நான்!

5 வருடப்படிப்பு முடிந்துவிட்டது! அமெரிக்கா போவதற்கு விசாவும் வாங்கியாச்சு! எல்லோருக்கும் நாளை ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு பறக்க வேண்டியதுதான் இந்த நாட்டைவிட்டு. இப்படி யோசித்துக்கொண்டே தன் முகத்தை தன் அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில் பார்த்தாள் சகுந்தலா.

அவளுக்கு தன் முதல் வருடம் இந்த ஐ ஐ டி யில் வந்து சேர்ந்த ஞாபகம் வந்தது. அன்று இவள்தான் புது வரவுகளில் பேரழகி! இவளை வேடிக்கை பார்க்கதாத மாணவர்களோ, இளம் மற்றும் வயதான பேராசிரியர்களோ இல்லை. நீதாண்டி இந்த வருட #1 என்று அவள் தோழிகள் தன் பாய்ஃப்ரெண்ஸிடம் இருந்து கேட்டு வந்து சொன்னார்கள். அவளுக்கு தன் அழகினால் பெருமிதமும் கொஞ்சம் திமிரும்கூட இருந்ததென்றே சொல்லவேண்டும். அடுத்த வருடம் இன்னொரு புது வரவுக்கு அந்தப்பேரழகிப்பட்டம் போய்விட்டது. இவளுடைய ரசிகர்கள் எல்லாம் புதுவரவின் ரசிகர்களாகி விட்டார்கள்! இருந்தாலும் இவளுடைய “லாயல் விசிறிகள்” இரண்டாவது வருடத்திலும் இருக்கத்தான் செய்தார்கள். அப்போதெல்லாம் சகுந்தலா தன் முகத்தை அவளே பார்த்து ரசித்துக்கொள்வாள். கண்னாடி முன் பலமணி நேரம் நின்று தன்னை அழகு பார்ப்பாள். “அழகான பொண்ணு நான், அதற்கேற்றகண்ணுதான்” என்கிற ஆதிகாலத்துப்பாடல் அவளையே நினைத்து எழுதியது போல தோனும் அவளுக்கு. அதெல்லாம் ஒரு காலம்!

ஆனால் இன்று? கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தில் இருக்கும் அந்த தழும்புகளைப் பார்த்தாள் சகுந்தலா. இப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் அவள் நிற்கும் நேரம் மிக மிகக் குறைவு! அவளுக்குப் பார்த்து பார்த்து பழகிவிட்டது. ஆனால் புதிதாக அவளைப் பார்ப்பவர்கள்தான் ஒரு பரிதாபப்பார்வை பார்த்து அவளை கஷ்டப்படுத்துவார்கள். அவள் முகத்தில் உள்ள தழும்புகளை ஞாபகப்படுத்தி, அவள் முகம் விஹாரமாக இருப்பதை அவளுக்கு ஞாபகப்படுத்தி அவளை அழவைப்பார்கள்! தன் மேல் அனுதாபம்தான் படுகிறார்கள் என்று அவளுக்குப்புரிந்தாலும் அவளுக்கு அந்தப் பரிதாபப்பார்வை பிடிக்காது!

இவள் 3 ம் வருடம் படிக்கும்போது அந்த எக்ஸ்பரிமெண்ட் பண்ணும்போதுதான் அந்த விபத்து நடந்தது. “லிக்விட் அம்மோனியா” வை ஒரு கண்ணாடிக்குடுவையில் எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய வேலை செய்யும் “ஹூட்” ல வைக்கும்போது, இவள் அந்த “மெட்டல் ஸ்டாண்ட்” ல் சரியாக அந்தக்குடுவையை “க்ளாம்ப்” பண்ணாததால், அது நழுவி, கிழே உள்ள இரும்புப்பகுதியில் பட்டு உடைந்து, அம்மோனியா அவள் மேல் தெறித்தது! தெறித்து அவள் முகத்திலும் உடலிலும்கூட பட்டது. நல்லவேளை “சேஃப்டி கண்ணாடி” போட்டிருந்ததால் கண்கள் மட்டும் தப்பியது! ஆனால் அவள் முகம் மற்றும் உடலெல்லாம் பட்டுவிட்டது. உடலெல்லாம் எரிந்தது! எப்படிக் கதறினாள்!

அந்த வலியெல்லாம் சில வாரங்களில் போய்விட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட இந்த வடுக்கள்? அதுபோல் ஒரு பயங்கர விபத்து இதுவரை அந்த ஆய்வகத்தில் எந்தப் பெண்ணுக்குமே, ஏன் ஆண்களுக்குக்கூட நடந்ததில்லையாம். அன்றிலிருந்துதான் அவளுக்கு “அழகான பொண்ணு நான்” பாட்டை கேட்டாலே பிடிக்காமல் போனது. தத்துவப்பாடல்கள் எல்லாம் பிடிக்க ஆரம்பித்தது, அதில் உள்ள அர்த்தங்கள் எல்லாம புரிய ஆரம்பித்தது. அழகு நிரந்தரமானதில்லை என்பதை அறிந்து கொள்ள இவ்வளவு பயங்கரமான பாடமா அவள் கற்க வேண்டும்? பிறவியிலேயே அழகில்லாமல் பிறந்தால்கூட பரவாயில்லை. என்னைப்போல் பாதியில் எல்லாவற்றையும் இழப்பதுதான் மிகவும் பரிதாபம் என்று நினைப்பாள் சகுந்தலா.

“எல்லாம் இறைவன் செயல்” என்று சிலர் பேசும்போது எரிச்சலாக வரும் அவளுக்கு. யார் இந்த இறைவன்? மனிதர்களின் வாழ்க்கையில் விளையாட இவருக்கு யார் அனுமதி கொடுத்தது? இறைவன் ஒரு கொடூரப்புத்தி உள்ளவன் போலும்! இல்லையென்றால் என் முகத்தை ஏன் இப்படி சிதைக்க வேண்டும்? உலகத்தில் யார் எதை சாதித்தாலும் அது இந்த இறைவன் சாதனையாம்! யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அது அவர் விளையாட்டாம்! இல்லை இல்லை அது அவர்கள் முன்பு செய்த பாவத்தின் விளைவாம்! வேடிக்கையான மனிதர்கள்!

“நான் இந்தப்பிறவியில் யாருக்கு என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்டால். அது என்னுடைய “கர்மா” வாம்! நான் இந்தப்பிறவியில் அனுபவிப்பது, போன பிறவியில் செய்த பாவமாம்! சரி அப்படியே பார்த்தாலும் “என்னுடைய முதல் பிறவியில் யாருடைய “கர்மா” வால் நன்மை தீமை அனுபவிக்கிறேன்?” என்பதை யாராவது சொல்ல முடியுமா? “கர்மா” என்பதே அர்த்தமில்லாமல் போய்விடும் இப்படி எல்லாம் யோசித்தால்! பக்திமான்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அவர்களுக்கு பதில் சொல்லத் தெரிந்த கேள்விதான் கேட்கனும்! இல்லை என்றால் என் கேள்வி விதண்டாவாதமாகிவிடும்! மேலும் இப்படியெல்லாம் கேட்டால் கடவுளுக்குப் பிடிக்காது! எனக்கும்தான் இப்படி ஒரு விபத்து நடந்தது பிடிக்கவில்லை! எனக்குப்பிடித்ததை செய்யாத கடவுளுக்கு நான் ஏன் அவருக்கு பிடித்ததெல்லாம் செய்யனும்?

“உனக்கு ஃபோன் கால், சகுந்தலா!” என்றாள் தோழி.

ஹாஸ்டலில் உள்ள “லேண்ட் லைன்” க்கு போய் ரிசீவரை எடுத்தாள்.

“விசா கிடைத்துவிட்டதா, சகுந்தலா! கண்க்ராட்ஸ்” என்றான் அவள் நண்பன் குமார் இன்னொரு அமெரிக்க முனையிலிருந்து!

“ஆமா, குமார்! நாளைக்கு ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு, திருச்சிக்குபோய் எல்லோரிடமும் பை சொல்லிவிட்டு பறந்து வரவேண்டியதுதான் உங்களிடம் என்றாள் மகிழ்ச்சியுடன்!

“சரி, ஃப்ளைட் ஸ்கெட்யுள் எனக்கு இ-மெயில் பண்ணு! உன்னை விஷ் பண்னத்தான் கூப்பிட்டேன், பை” என்றான் குமார்.

“பை, குமார்!” என்று சொல்லிவிட்டு ஹேங் அப் பண்ணினாள்.

இவள் #1 அழகியாக இருக்கும்போது இவளை சட்டை செய்யாத குமார், அந்த விபத்துக்குப்பிறகு, இவள் மேல் எவ்வளவு அன்பு! என்ன பரிவு! மனிதர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்! இவர்களை வணங்கலாம், ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு என்று நினைத்துக்கொண்டு இரவு உணவுக்காக ஹாஸ்டலில் இருந்து மெஸ் க்கு புறப்பட்டு சென்றாள், சகுந்தலா!