Tuesday, March 31, 2009

"நாத்தீக இஸ்லாமியர்" அரிதிலும் அரிது?

தந்தை பெரியார், கெளதம புத்தர், மஹாவீரர் போன்றவர்கள் பிறப்பால் இந்துக்கள்தான். இந்து மதத்தில், அவர்கள் வழிபடும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வேறு பாதையில் சென்றவர்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாமியராக பிறந்திருந்தால் "பகுத்தறிவு பாதையில்" போய் இருப்பார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஏன் இந்த சந்தேகம்? அதுபோல் உருவான யாரையும் நான் பார்க்கவில்லை.

இந்து மதத்தில் குறைபாடுகள் அதிகம். ஜாதியை உருவாக்கியது இந்து மதம். மனிதக்கடவுள்கள் இந்து மதத்தில்தான் உண்டு. பாபாஜி, சாய்பாபாஜி அந்த ஜி இந்த ஜினு போய்க்கிட்டே இருக்கும். ஏகப்பட்ட கடவுள்கள். ஆண் பெண், அலி என்று பலவகை கடவுள்கள்.

பொதுவாக இந்து மதக்கடவுள்கள் மனிதர் மாதிரியே உருவமுடைவராக கற்பனை செய்யப்பட்டவர்கள்.

கடவுளுக்கு மனிதனுக்கு உள்ள உடல் உறுப்புகள், மூளையெல்லாம் இருக்கனுமா என்ன?

ஏன் இருக்கக்கூடாது? என்பார்கள், கடவுளை படைத்தவர்கள்!

கடவுளுக்கு மனித உருவம் கொடுத்து, அவருக்கு நகை போட்டுவிட்டு, கை வச்சு, கால் வச்சு, சேலை அணிவித்து, நகைகள் போட்டு அலங்காரம் செய்து வேடிக்கை பார்ப்பவர்கள் இந்துக்கள்தான்.

கடவுளுக்குப் பாட்டுப்பாடி அவரை தூங்க வைப்பவர்கள், மகிழவைப்பர்களும் இந்துக்கள்தான்.

இவ்வளவு "குறைபாடுகள்" இருந்தாலும் ஒரு வகையில் பிறப்பால் இந்துக்களை பகுத்தறிவுவாதிகளாக ஆக்குகிறது. சிந்தனையாளர்களாகவும் ஆக்குகிறது.

இந்தியாவில் இந்துக்களுடையை மக்கள் தொகை 70 விழுக்காடுகளுக்கு மேல் இருந்தாலும், இதில் மத வெறியர்கள் எத்தனை விழுக்காடுகள் என்று பார்த்தால், அதிகம் இல்லை என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்து மத வெறியர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இந்துவாகப் பிறந்து இந்துமதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் வருகிறது.

உருவ வழிபாடு இல்லாத, இஸ்லாம் மதத்தில் இருந்து உருவாகிற கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் மிக மிக அரிது. அது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா?

Friday, March 27, 2009

ஜெ ஜெ யுடன் கூட்டணி சேரும் ராமதாஸ் ஒரு சாதாரண அரசியல்வாதிதானா!!!

ஜெயலலிதா ஈழத்தமிழருக்காக போராடுவது உலக மஹா காமெடி! அவருடன் கூட்டணி சேர்ந்து தனி ஈழத்திற்கு போராடுவதாக டாக்டர் ராமதாஸ் சொல்வது அதைவிட காமெடி. இவர் ஜெ ஜெ பற்றி என்ன என்ன சொல்லி இருக்கிறார்!!! எப்படி இதெல்லாம் மறக்குது!!! இவருக்கு எந்தவிதமான தன்மானம், கொள்கை எதுவுமே கிடையாதா!!! 4 எம் பி சீட், 10 எம் எல் ஏ சீட் எப்படியாவது பெற்றுவிட்டால் போதும் இவருக்கு!

வன்னியர்களின் தெய்வமான ராமதாஸ், ஒரு சாதாரண சாதிக்கட்சி நடத்தும் அரசியல்வாதி. அவ்வளவுதான். ஒவ்வொரு தேர்தலுக்கும் ராமதாஸ் தி மு க கூட்டணியிலிருந்து அ தி மு க கூட்டணிக்கு தாவுவது, பிறகு தி மு க வுக்கு தாவுது என்பதே பிழைப்பா போச்சு! ஜாதிக்கட்சி வைத்து நடத்தினால், இரண்டு கட்சிகளுக்கு இடையே மாறி மாறி தாவ வேண்டியதுதான். இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது.

அ தி மு க - ம தி மு க - பா ம க எல்லாம் சேர்ந்து காங்கிரஸ்- தி மு க விடமிருந்து 50% இருக்கைகளை பறிக்க நிச்சயம் வாய்ப்பு உள்ளது! ஆனால், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் ராமதாஸ் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் நேரத்துக்கு நேரம் கூட்டணி தாவும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான் என்பதை இன்னொரு முறை ஊர்ஜிதம் செய்துள்ளார்.

சாரு நிவேதிதாவுடன் ஒரு நேர்முக பேட்டி! (கற்பனை)!

"வணக்கம் சாரு சார்"

"வணக்கம்!"

"உங்ககிட்ட ஒரு சில கடினமான கேள்விகள் கேக்கலாமா?"

"கேளுங்க"

"விமர்சகரா இருப்பது எளிது. ஆனால் ஏதாவது உருவாக்குவது கடினம்னு உங்களுக்கு தெரியுமா?"

"அது உண்மைதான். ஒரு விமர்சனம் எழுத அடுத்தவர்கள் குறைகளை பார்க்கத்தெரிந்தால் போதும். அதை நம்மால் செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டியதில்லை"

"அப்போ அது உங்களுக்கே தெரியும்?"

"எல்லோருக்கும் தெரியும்"

"நீங்க கமலஹாஷன் நடிப்பில் எவ்வளவு திறமைசாலியோ அந்த அளவுக்கு திறமையான எழுத்தாளர்னு உங்களுக்கு தெரியுமா?"

"அப்படினு சொல்றீங்களா?"

"அதுதான் உண்மை! நம்புங்க"

"என்ன சொல்ல வர்ரீங்க?"

"கமலஹாஷன் ஆஸ்கர் பெற தகுதி இருந்தும் அவர் ஹாலிவுட் படங்கள், ஆங்கிலப்படங்கள் செய்யாததால் அவருக்கு கிடைக்கலை.. அது மாதிரி..."

"சொல்லுங்க"

"அதே மாதிரி, இலக்கியத்தில் நீங்க நோபல் பரிசு பெற தகுதி இருந்தும் நீங்க தமிழில் உங்க படைப்புகளை படைப்பதால் உங்களுக்கு கிடைக்கலை"

"அப்படினா சொல்றீங்க?"

"அப்படித்தான் சார்"

"சரி அதை அடைய நான் என்ன செய்யனும்?"

"கம்லஹாஷனிடம் கேளுங்க! உங்களுக்கு அவர் குறைகள் தெரிவதுபோல், உங்க குறைகள் அவருக்குத்தான் தெரியும்! நீங்க இலக்கியத்துக்கு நோபல் பரிசு வாங்க எப்படி எப்படி எழுதனும், எப்படி உலகத்திற்கு உங்க படைப்புகளை அடையச் செய்யலாம் என்று சொல்வார். உங்க "பட்" உங்களுக்கு தெரியாது பாருங்க!"

"நான் இதைப்பத்தி கொஞ்சம் யோசிக்கனும்"

"நல்லா யோசிங்க. நான் வரேன் சார்!"

Tuesday, March 24, 2009

பூநூலே மாட்டிக்குவான் போல!!!

"என்னடா மெஸ்ல நம்ம மக்களையே ஒருத்தனையும் காணோம், முருகா?"

"நீ மூனு வருடம் சென்று திடீர்னு கனடாவிலிருந்து வருவனு யாருக்கும் தெரியாது. திடீர்னு வந்து இறங்கி கல்யாணம் பண்ணப்போறேன் னு பத்திரிக்கையோட நிக்கிற?"

"என்னடா பண்றது? என் நிலைமை அப்படி! எங்கே எல்லோரும்?"

"எல்லோரும் நம்ம மதியழகன் கல்யாணத்திற்கு போயிருக்கார்கள் சென்னையில். எனக்கு நாளைக்கு தீசிஸ் டிஃபென்ஸ், அதான் நானாவது இருந்தேன்"

"எந்த மதியழகன்?"

"அவந்தாண்டா கம்ப்யூட்டர் சயண்ஸ் ல எம் எஸ் முடிச்சான் இல்லை, அப்புறம் பி எச் டி இங்கேயே ஜாயின் பண்ணினான். அடுத்த மாதம் யு எஸ் போறான்"

"ஓ அவனா! என்னோடதாண்டா பேச்சலர்ஸ் பண்ணினான்! சரி, பொண்ணு யாருடா?"

"அவன் க்ளாஸ்மேட் தான். பேரு, ருக்மிணி, பிராமணப் பெண், ரொம்ப அழகா இருப்பாள்"

"ஜோக் அடிக்கிறயா?'

"இல்லைடா. லவ் மேரேஜ் மாதிரி. பேரெண்ட்ஸும் ஒத்துக்கிட்டார்கள். ஏன் இப்படி கேக்கிற?"

"பார்ப்பான், பார்ப்பான்னு ப்ராமின்ஸை எதற்கெடுத்தாலும் கண்ணா பின்னானு திட்டுவான்டா நம்ம மதி! அவனா ஒரு ப்ராமின் பொண்ண கல்யாணம் பண்ணப்போறான்?!!"

"நெஜம்மாவாடா சொல்ற?"

"அய்யோ அவன் ரொம்ப அடாவடியா திட்டுவான்!"

"இப்போ பாப்பாத்தியை கல்யாணம் பண்ணப்போறான் போல!"

"நம்பவே முடியலைடா!"

"அதுவும் கல்யாணம் பிராமண முறைப்படி, அம்மி மிதிச்சு, அருந்ததி, பார்த்து, பெண்ணை தாரை வார்த்து கொடுத்து, இத்யாதி இத்யாதி.."

"நீ சொல்றத பார்த்தா பூநூலே மாட்டிக்குவான் போல!"

"அதென்னவோ உண்மைதான்!"

"என்னவோ போ! வாழ்க பல்லாண்டு!"

-----
இது ஒரு பழைய பாடல்! இது ஒருவகையில் உண்மைதான்!


பிரேமையின் ஜோதியினால்...
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
அன்பு மழை பொழியும்.

பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
சீருலாவிடுமோ.. ஓ...
ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
இன்ப மழை பொழியும்.. ஓ..

மனத்தாலே நினைத்தாலும் இனிப்பாகும் எண்ணம்
மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
நீதி மழை பொழியும் .. ஓ..

Monday, March 23, 2009

விஜய்காந்த் தேர்தலில் படுதோல்வியை தழுவுவார்!

விஜய்காந்த், மேடையில் கேட்டாராம்,

* நான் தி மு க வில் கூட்டணிசேரலாமா?

வேண்டாம்!!! (அவர் தொண்டர்கள்)

* அ தி மு க வில் கூட்டு சேரலாமா?

வேண்டாம்!! (அவர் தொண்டர்கள்)

* காங்கிரஸ்ல சேரலாமா??

வேண்டாம்!! (அவர் தொண்டர்கள்)

இப்படி மேடையிலே கேட்டு மக்கள் தனியாக நில்லுங்கள், நீங்க "பெரிய இவரு" னு சொன்னதைக் கேட்டு தனியாக போட்டியிடப் போறாராம்!

இதோட சேர்த்து அவர் இன்னொரு கேள்வியும் கேட்டிருக்கலாம்!

* நான் தனியாக நின்றால் டெப்பாசிட் இழப்பேனா?

"ஆமா!" என்று மக்கள் கூவி இருப்பார்கள்!!


தமிழக அரசியலில் இறங்கி விட்டால், எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்! இவர் பெரிய யோக்கியன் என்றால், அரசியல் சாக்கடையில் இருந்து ஒதுங்கி நிக்கனும்! இவருக்கும் முதல்வராகனும்னு பேராசை இருக்கு! அந்த வகையில் இவர் ஒரு சாதாரண சுயநலம்கொண்ட அரசியல்வாதிதான். பெரிய பெரியாரோ, காந்தியோ இல்லை இந்த நடிகர்!

இது வந்து பாராளுமன்ற தேர்தல். இதில் தனியாக போட்டியிட்டால் நிச்சயம் டெப்பாசிட் போகும் என்று தெரிந்துதான் எல்லோரும் காங்கிரஸ், பி ஜெ பி பின்னால் கேவலமாக அலைகிறார்கள்.

விஜய்காந்த் தன்னை எம் ஜி ஆர் னு சொல்லிக்கிறார்.

* இவர் சொல்லும் எம் ஜி ஆரே காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டு 1980 ல் மரண அடி வாங்கினார். அந்த அடியை அவர் என்றுமே மறந்ததில்லை!

* குடிக்காதேனு படத்துக்கு படம் வெள்ளித்திரையில் அறிவுரை செய்த எம் ஜி ஆரே சாராயக்கடையை திறந்துவிட்டுத்தான் சத்துணவு கொடுக்க முடிந்தது!

இதுதான் தமிழ்நாட்டு அரசியல்!!!

வெள்ளை எம் ஜி ஆர் கே பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலைமைனா, இந்த கருப்பு எம் ஜி ஆர் நிலைமைய கேக்கவா வேணும்! உண்மை என்னனா, சும்மா பேருக்கு பாராளுமன்ற தேர்தலில் நிக்கிறார் விஜய்காந்த். இதில் படுதோல்வி வருகிறது என்று தெரிந்துகொண்டே! இது ஒரு மாதிரியான இவருடைய "ஒரிஜினாலிட்டி" கொள்கையை காட்டும் கண்துடைப்பு. இந்தக் கொள்கை, வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் உதவுமமென்று நம்புகிறார்! அதுதான் இவருடைய ஃபோக்கஸ்! பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் விஜய்காந்த் வெற்றுவேட்டு! சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம்!

Saturday, March 21, 2009

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!

சும்மா வெள்ளித்திரையில் வர வேண்டியது, 4 சண்டை, 4 டுயட் ஒரு குத்துப்பாட்டு, 4 பன்ச் டயலாக், கொஞ்சம் ஜொள்ளு என்று படத்துக்குப்படம் பிழைப்பை ஓட்டுகிறார் நடிகர் விஜய். சக நடிகர்கள், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒரு சில படங்களாவது வித்தியாசமாக செய்கிறார்கள். ஆனால் விஜய்?? ஒரு முயற்சிகூட செய்வதில்லை! சூர்யாவுடன் சேர்ந்து நடித்த ஃப்ரெண்ஸ் படத்தில் இவரைவிட இணெக்ஸ்ப்பீயன்ஸ்ட் சூர்யா நல்லா செய்துட்டு போயிட்டார்.

இதுல இவருடைய அப்பா, சந்திரசேகராவுக்கு இவரை வருங்கால முதல்வராக்கனும்னு ஒரு பேராசை! திரு. சந்திரசேகரா! முதல்ல உங்க மகருக்கு நடிக்கவும் தெரியும்னு 4 படம் பண்ண சொல்லாமல், என்ன கொடுமை இது, சந்திரசேகரா?

அஜீத், வரலாறு மற்றும் வாலி போன்ற படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்!

சூர்யா, பேரழகன், நந்தா, பிதாமகன், மாயாவி போன் ற படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்.

விக்ரம், பிதாமகன், காசி, அந்நியன் என்று பல படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்.

சிலம்பரசன் மற்றும் தனுஷ்கூட ஒரு சில வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார்கள்.

ரஜினி மற்றும் எம் ஜி ஆர் கூட நல்ல படங்களில் நடித்து தன் நடிப்புத்திறமையையும் காட்டியுள்ளார்கள். நடிகர் விஜய்போல சும்மா ஒரே மாதிரி ஹீரோ ரோல் வைத்து பிழைப்பு ஓட்டவில்லை.

விஜய் மட்டும் வித்தியாசமாக நடிக்க ஒரு சிறுமுயற்சிகூட எடுக்காமல் இருப்பது அவருடைய வருங்காலத்திற்கு நல்லதல்ல! கமல் ஆடாத டாண்ஸா? இப்படியே டாண்ஸாடியே இன்னைக்கு பொழை ப்பு ஓட்டலாம். ஆனால் எத்தனை நாளைக்கு?? ஒரு நல்ல நடிகராக தொ டர்ந்து பல ஆண்டுகள் நிலைக்க வேண்டுமென்றால் இதெல்லாம் மட்டும் உதவப்போவதில்லை.

விஜய்! நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாகவும் நடிக்க முயற்சி செய்யவில்லை என்றால், உங்கள் எதிர்காலம் இருட்டிக்கும் என்று தோன்றுகிறது. கொஞ்சமாவது வித்தியாசமான ரோலில் நடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால், உங்களை யாரும் காப்பாற்ற முடியாது!

Friday, March 20, 2009

“நான் கடவுள்” கமர்ஷியலாக வெற்றிப்படமல்ல- நிதர்சனம்!

அதான் "ப்ளாப்" ஆயிருச்சுனு ஏற்கனவே ஒரு பதிவு போட்ட இல்லை? இப்போ எதுக்கு இன்னொரு பதிவுனு கேக்கிறீர்களா? அதையெல்லாம் மறப்பேனா? இல்லை மறுக்கத்தான் முடியுமா? விசயம் என்னவென்றால், ஒரு சில படங்கள் 4 வாரங்களுக்கு அப்புறம் கண்ணா பின்னானு பிக்-அப் ஆகலாம். அதுமாதிரி எல்லாம் தமிழ் சினிமா உலகில் ஆகியிருக்கு. ஆனால் அதுபோல எதுவும் இந்தப்படத்திற்கு பெருசா லேட் பிக்-அப் ஆகவில்லை. அதுதான் உண்மையில் நடந்தது!

தலைப்புக்கு வரேன்...

மூன்று வருடம் சிரமப்பட்டு மூன்று ஹீரோக்களை மாற்றி கடின உழைப்பில் உருவான ஒரு படம்தான் “நான் கடவுள்” என்கிற படம். தமிழ் வலைபூக்களில் எந்தப்படத்திற்கும் இல்லாத பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்திற்கு கிடைத்தது. மற்றபடி இது விமர்சனர்களை ஓரளவுக்கு கவர்ந்தது. ஆனந்தவிகடன் 44 மதிப்பெண்கள் கொடுத்தது. மற்ற விமர்சகர்கள் ஓரளவுக்கு நல்ல விமர்சனமே கொடுத்தார்கள். இந்தப்படத்தில் நடித்ததற்காக நடிகை பூஜாவுக்கு ஒரு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இயக்குனர் பாலாவுக்கும் ஒரு தேசிய விருது கிடைக்கலாம்.

கமர்ஷியலாக எப்படிப்போகிறது என்று இன்றைய தேதிக்குப் பார்த்தால்,

· இன்று 7 வது வாரம்! சென்னையில் பல மல்டிப்ளெக்ஸில் இதை தூக்கிவிட்டார்கள். சத்யம் காம்ப்ளெக்ஸில் ஒரு ஷோ கூட இன்று ஓடவில்லை! அபிராமி காம்லெக்ஸ்ல ஒரு சின்ன தியேட்டரில் மட்டும் ஓடுது. அவ்வளவுதான்.

· சென்னையில் செக்கண்ட் ஸ்ட்ரிங் தியேட்டர்களான முரளி கிருஷ்ணா, கிருஷ்ண வேணி, மஹாலக்ஷ்மி போன்ற திரையரங்குகளில் ஓடுது.

· மற்றபடி, மதுரை, கோவை , சேலம், பங்களூர் போன்ற பெரிய ஊர்களில் இப்படத்தை தூக்கி விட்டார்கள் என்று தெரிகிறது.

· பி அண்ட் சி செண்டர்களில்படம் சுமாராகத்தான் போனது. போட்ட காசை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கலாம்.

· ஓவெர் சீஸ் லயும் படம் பெரிய கலெக்ஷன் கொடுக்கவில்லை! மலேசியாவில் மட்டும் இன்னும் ஒரு 9 திரையரங்குகளில் ஓடுகிறது. இருந்தாலும் இது ஒரு பெரிய சாதனை அல்ல!

இதிலிருந்து என்ன தெரியுதுனா ஓவெர் ஹைப் நல்லதில்லை! நான் கடவுள், ரஜினி கடிதம் எழுதியதால் பிச்சுக்கிட்டு ஓடுச்சு, அது இதுனு சொன்னதெல்லாம் அர்த்தமற்றது.
படம் 7 வாரம்கூட மல்டிப்ளக்ஸ்ல ஓடலை என்பதுதான் இன்றைக்கு உண்மை நிலவரம். 7 வாரங்களில் சென்னையில் மட்டும் சென்னை வசூல் என்ன என்று பார்த்தால் அதுவும் தோல்விப்படங்கள்(வில்லு) போல்தான் இருக்கு!ஒண்ணும் பெரிய அளவில் இல்லை(சோர்ஸ்: பிஹைண்ட்வூட்ஸ்).

ஏற்கனவே "ப்ளாப்" னு நான் க்ளைம் பண்ணிய பதிவு இங்கே!

http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_17.html

Thursday, March 19, 2009

கஞ்சாவையும் சாராயம், சிகரெட் போல் "லீகல்" ஆக்குங்க!

அமெரிக்கா ஒரு மாதிரியான தேசம். என்ன அப்படி வித்தியாசம்? நாய் விற்ற காசு குரைக்காது! என்பதை நம்புபவர்கள். உலகத்தில் அதிகமான அளவு போர்னோக்ராஃபி தயாரிப்பது அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில்தான். பாவப்பணம்னு சொல்றீங்களா? அரசாங்கம் அனுமதித்தால் அது பாவம் இல்லை!

அப்படியா? அப்போ கடவுள்? பைபில்? கடவுள் எங்களை மன்னித்துவிடுவார்! In God we trust! எங்களுக்கு பாவம் செய்ய துணையா இருப்பார்! இல்லை இல்லை! கடவுள் எப்போவும் எங்களுக்கு மட்டும்தான் துணையிருப்பார்! என்பது போல நம்பிக்கை உள்ள முட்டாள்கள் அமெரிக்கர்கள்!

இப்போ என்ன சொல்ல வர்ரீங்க?

கலிஃபோர்னியாவில் கஞ்சாவை லீகல் ஆக விற்கலாமா என்று யோசிக்கிறார்களாம்.

கஞ்சா உடல் நலத்திற்கு தீங்கானதாச்சே? உங்க மூளையை பாதிக்கலாமே?

அப்படியா? அப்போ குடிக்காதீர்கள் என்பார்கள்!

அதெப்படி உடல் நலத்திற்கு தீங்கானதை சட்டவிரோதமில்லாமல் விக்கலாம்? என்று கேட்டால், அதற்கும் பதில் உண்டு!

சிகரெட், அல்கஹால் எல்லாம் என்ன உடல் நலத்திற்கு நல்லதா? அதை விற்கிறோம்! ஒருகாலத்தில் அல்கஹால் விற்பது சட்டவிரோதம் என்று வைத்திருந்தோம், இப்போ அதை தளர்த்தவில்லையா? அது மாதிரித்தானே கஞ்சாவும் என்பார்கள்!

சட்டவிரோதமாக இல்லாமல் விற்றால், அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் வரும் என்று யோசிக்கிறார்களாம். என்னவோ போங்கப்பா! அஹோரி சாமியார்கள் எல்லாம் அமெரிக்கா போகவேண்டியதுதான்!

Wednesday, March 18, 2009

நடிகர் திலகத்தின் "வசந்த மாளிகை" ஒரு காவியம்!


தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார், ஆனந்த் என்கிற சின்னதுரை தான் சிவாஜி. இவரை ஏன் நடிகர் திலகம் னு சொல்றாங்க னு யாருக்கும் இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த டி வி டி பார்க்கவும்!

குடிகாரராக இருக்கும் இளைய ஜமீன் இடம் பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேரும் அழகான கவர்ச்சியான, நேர்மையான அகம்பாவம் பிடித்த, சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத லதாவாக நடித்துள்ளார் வாணிஸ்ரீ.

லதா, குடிகாரராக, பெண்பொறுக்கியாக இருக்கும் சின்னதுரை ஆனந்தை நற்பாதைக்கு கொண்டு வருகிறார், ஆனந்த் தன் மனதை லதாவின் அழகுக்கும், அன்புக்கும் பறிகொடுக்கிறார். தன்னை நல் வழிப்படுத்திய லதாவுக்கு தன் இதயத்தை அளிக்கிறார். லதா ஆசையுடன் அந்த அன்பு இதயத்தை பெற்றுக் கொள்கிறார்.

ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்! தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது. தமிழில் சுமூகமாக முடிகிறது.


இந்தப்படத்தில் சிவாஜி பேசும் சில வசனங்கள்!

* தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம்:

இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!

* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:

பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?

*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:

இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.

* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:

குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.

* நன்றியுள்ள வேலைக்காரனிடம்:

பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!


பாடல்கள்:

கண்ணதாசன் பாடல்வரிகள் எழுத கே வி மஹாதேவன் இசையமைக்க டி எம் சவுந்தர்ராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடியவை.

* மானிட ஜாதியே * ஏன் ஏன் ஏன் * குடிமகனே * கலைமகள் கைப்பொருளே * மயக்கமென்ன
* இரண்டு மனம் வேண்டும் * யாருக்காக! எல்லாமே நல்ல பாடல்கள்!


இந்தப்படத்தில் காதல் கட்டமா இருக்கட்டும், வசனமா இருக்கட்டும், ஸ்டயிலாக இருக்கட்டும், சிவாஜி பின்னி இருப்பார்.

வாணிஸ்ரீ இவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருப்பார். கவர்ச்சியிலும், காதலிலும், தன் சுயமரியாதயை காப்பாற்றும் சீன்களிலும் கிளப்பி இருப்பார் வாணிஸ்ரீ.

பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், ஸ்ரீகாந்த், நாகேஷ், வி கே ராமசாமி, ரமாபிரபா, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி எல்லோரும் நடித்துள்ளார்கள்

வசந்த மாளிகை, 1972 வில் வந்த ஒரு காவியம்தான்!

Tuesday, March 17, 2009

காதலுடன் -12

"ஏன் கல்யாணம்னா இப்படி பயப்படுறீங்க, ரமேஷ்?"

"தெரியலை, சந்தியா, கல்யாணம்னா உண்மையிலேயே பயம்மாதான் இருக்கு. அதான் ஜோக் மாதிரி சொல்லி சமாளிக்கிறேன்"

"நானே தைரியமா இருக்கேன். உங்களுக்கென்ன பயம், ரமேஷ்?"

"நீ தான் கல்யாணத்தில் என்னைவிட ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆச்சே"

"கொழுப்புத்தானே?"

"உண்மைதானே?"

"சரி அப்போ உங்களுக்கு நான் சொல்லித்தரேன்"

"ஏய்! நீ ஏற்கனவே கல்யாணம் வரை போனவள்னு சொல்ல வந்தேன்"

"இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்னு நீங்க சொல்றீங்க?"

"ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்குனு அவளுக்கே தெரியாதாம். இதை நீ நம்புறியா?"

"யாரு சொன்னது? எவனாவது ஒரு அரைவேக்காட்டு ஆண் எழுதி இருப்பான்!"

"அதெப்படி கரெக்ட்டா சொல்ற?"

" உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு உடலுறவின்போது ஆர்கஸம் தேவையில்லைனு ஆண்கள் ஏமாற்றியது?"

"அதெல்லாம் அநியாயம், சந்தியா”

“இப்படித்தான் எங்களை காலங்காலமா ஏமாற்றி வர்ரீங்க”

”ஏய் நான் ரொம்ப அப்பாவி தெரியுமா?'

"ச்சு ச்சு ச்சு "

"ஆமாம், உன் உதட்டை என் அருகில் கொண்டுவா! எனக்கு கிஸ் பண்ணக்கூடத்தெரியாது! வாய், உதடெல்லாம் வந்து சும்மா பேச, சாப்பிட மட்டும்தான்னு நெனைச்சுண்டு இருக்கேன்"

"ஐயோ என்ன செய்வீங்க பாவம்!"

"ஏய் பொதுவாக ஆண்கள்தான் ரொம்ப வீக்-மைண்டெட் தெரியுமா சந்தியா?"

"நீங்க வீக்-மைண்டெட் ஆ? கிடையவே கிடையாது! இந்த மாதிரி எதாவது சும்மா தியரி விடாதீங்க"

"எனக்கென்னவோ அப்படித்தான் தோனுது. பேசாமல் ஃப்ரெண்டாவே இருந்துடுவோமே, சந்தியா?"

" Let me be very frank here, I want more than friendship from you!"

"என்ன வேணும் உனக்கு?" அவன் அவளை ஒரு மாதிரியா சிரித்துக்கொண்டேஎ பார்த்தான்.

"பச்சையா சொல்லனுமா? நீங்க வேணும் என்னை இன்பப்படுத்த! புரியுதா?"

"உன்னோட ரொம்ப உறவுகொண்டு கலந்துட்டேன்னா, அப்புறம் என்னால நீ இல்லாமல் வாழ முடியாது. அதுவும்.. அப்புறம் எனக்குத்தான் கஷ்டம்"

"நான் இல்லாம வாழமுடியாது கேக்க நல்லாயிருக்கு! ஆனா பொய்! அதென்ன அதுவும்?"

"நீ ரொம்ப அழகா மட்டும் இல்லை, ரொம்ப கவர்ச்சியா இருக்க சந்தியா. நீ எப்படியெல்லாம் என் புத்தியை அலையவைக்கிற தெரியுமா? ஒரு ஆணா இருந்தால்தான் இதெல்லாம் உனக்கு புரியும்"

"எதுக்கு இந்த ஐஸ்? புது மாதிரியா காம்ப்ளிமெண்ட் பண்னுறீங்களாக்கும்?"

"ஐஸ்லாம் இல்லை! I get sexually attracted to you. உன்னை சாதாரணமா பார்க்கமுடியலை தெரியுமா?"

"அதுதான் தெரியுமே?"

"என்ன தெரியும்?"

"எனக்கு உங்க பார்வையெல்லாம் ஒரு மாதிரியா இருக்குனு தெரியும் சார். அது நல்லதுதானே? என்னை பார்தால் வணங்கனும் போல இருந்தால்தான் எனக்கு பிரச்சினை. இது பிரச்சினை இல்லை"

"உனக்கு நல்லதுதான். என்னைப்பத்தி யோசிச்சியா? It is very likely that I might get addicted to have sex with you after being with you for a while. If I reach that point, it is dangerous. You can do anything with me and get anything done by me as I am addicted to you, you see. I would be like your slave or something. அப்புறம் உனக்கு என்னை பிடிக்காம போயிருச்சுனா? "போடா பொறுக்கி" னு விரட்டி விட்டுட்டேனா? நான் நீயில்லாமல் என்ன பண்ணுவேன்?"

"என்னதான் நீங்க சொல்ல வரீங்க?" அவள் சிரித்தாள்.

"கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது.
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது"


"இப்போ எதுக்கு இந்த அந்தக்காலத்து சோகப்பாட்டு? இதுவும் ஒரு ஆண் எழுதியதுதானே?"

"ஆமா, நாங்க உங்களை கவிதை எழுத வேணாம்னா சொன்னோம்? தத்துவம் எல்லாம் ஆண்களுக்குத்தான் வருமாக்கும்.உங்களுக்கு வராது"

"எங்களுக்கு உங்களை மாதிரி பொய் சொல்லத்தெரியாதுதான்"

"I have a bad feeling about the marriage thing"

"நீங்க ஒரு சரியான லூசு, ரமேஷ்"

"இப்போ யார் இல்லேனு சொன்னா?'

"நான் சொல்றதை கேளுங்க! உங்ககிட்ட எனக்கு பேச பழக, comfortable ஆக இருக்கு. I am not afraid of you. I can give you myself completely with pleasure. I feel very secured being with you. I trust you. That is why I shamelessly asked you to marry me. இது சும்மா இண்பாச்சுவேஷன் இல்ல"

"நான் வேணாம் வேணாம்னு சொல்றேன் இல்ல? இப்போ நீயும் வேணாம்னு சொன்னனு வச்சுக்கோவேன். அப்புறம் எனக்கு வேணும்னு தோனும்"

"இல்லை எனக்கு வேணும்"

"சரி, இதைப்பத்தி இன்னொரு நாள் பேசி முடிவெடுப்போமே?"

"ரொம்ப அறுத்துட்டேனா?'

"சே சே"

"சரி நான் புறப்படவா?'

"இப்போத்தான் வந்த மாதிரி இருக்கு?"

"கல்யாணம் செய்துகொண்டால் உன்னிடம் இருந்து இப்படியெல்லாம் தப்பிச்சு ஓட முடியாது பாரு!"

"யார் சொன்னா?"

"இல்லையா பின்னே?"

"உங்க ஃப்ரீடத்திற்கு இடையில் நான் வந்து நிக்கமாட்டேன். சரியா?"

"சரி, நான் இப்போ புறப்படுறேன்"

-தொடரும்

Monday, March 16, 2009

வாழ்க்கையில் நடுக்கமா?

"அப்பா! எப்படி இருக்கு இந்த அவுட்ஃபிட்" என்றாள் அபர்னா, தன் அரைகுறை மழலைத் தமிழில்.

"யு லுக் பியூட்டிஃபுல், டியர்" என்றார் ராஜன்.

"தேங்க் யு டாட்" என்று புன்னகைத்தாள், அபர்னா.

அவளுக்கு 16 வயதாகிறது. ஹை ஸ்கூல் போய் வருகிறாள். இப்போது அவள் போட்டிருந்தது ஒரு சின்ன மினி ஸ்கர்ட். உதட்டில் லிப்ஸ்டிக், தலைமுடியை விரித்துப்போட்டு ஏதோ மாடல் போலிருந்தாள்! படிப்பது போக மற்ற நேரங்களில் அவள் நிலைக்கண்ணாடி முன்னால்தான் நின்றாள். அழகாக இருந்தாள் அபர்னா.

இதுபோல் இளம் பெண்கள் மேக்-அப் போடுவது, மினிஸ்கர்ட் போடுவதை எல்லாம் பார்த்து ஒரு காலத்தில் வெறுத்தவர் ராஜன். இவர் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது சேலைகட்டிய அல்லது சல்வார் அணியும் பெண்களை மட்டும்தான் நல்ல பெண்களாக மதித்தார். இதுபோல் மினிஸ்கர்ட் போட்டு, அரைகுறையாக வரும் பெண்களைப்பற்றி கேவலமாகப் பார்ப்பவர், பேசியவர் ராஜன். இப்போது அவர் மகள் அவர் எதை தவறு என்று பேசினாரோ வெறுத்தாரோ அதையே அதைவிட பலமடங்கு மோசமாக செய்கிறாள் என்று நினைத்துப் பார்த்தார். தன் மகள் என்பதலோ என்னவோ அப்படி ட்ரெஸ் பண்ணுவது மேக்-அப் போடுவது தவிர மகளிடம் அப்படி எதுவும் தவறான எண்ணங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லை அவருக்கு. ராஜன், படிப்புவிசயத்தில் #1 ஆக இருந்தவர். ஆனால் வாழ்க்கை பாடங்களில் ஒர் மக்காகவே வளர்ந்து வந்திருந்தார். அவருக்கு பாடங்களை சரியாக சொல்லிக் கொடுத்தது அவர் மனனவியும், மகளும்தான். அதுவும் இப்போத்தான் அதை ஒழுங்காகக் கற்றுக்கொண்டு வருகிறார்.

அபர்னாவிடம் அவர் மனதில் தோன்றியதை, "இதுபோல் உடல் தெரியும் ஸகர்ட் போடாதே! ஜீன்ஸ் போடு" என்று சொன்னால், அவளுக்கு கோபம் வரும்!

"Why?" "It is really hot outside, I cant wear Jeans today" என்பாள்.

அவளிடம் வாதாடி இவர் வெற்றி பெறுவதென்பது நடக்கிற காரியம் இல்லை. She can defend herself so well, always!

தன் கல்லூரியில் படிக்கும் பெண்களின் உடுப்புகளை வைத்து அவர்களை இவர் கீழ்த்தரமாக யோசித்ததுபோல பெண்கள் நினைப்பதில்லை என்பதை மகள் சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம்தான் கற்றுக்கொண்டார், ராஜன்.

திடீரென்று, "Will you allow me to date American boys, dad?" என்றாள் அபர்னா.

"Why do you want to date?'

"Well, how will I find my life partner then? Please dont tell me to do arranged marriage. It does not make any sense to me, dad. No offense to you or mom"

"What if I say, you should date only Indians?"

"Indians think that they are great but they are not! They lack social skills and open mind. I dont think I can live with an Indian, dad. It wont just work for me"

"I am an Indian too, Aparna!"

"You are an exception, dad!" she smiled.

"Then why do you ask me if you dont want to listen what I say?"

"I dont know. It will make me happy if you understand and approve of it, dad"

"First concentrate in your studies! Finish your college, get a job, then you can do all these dating and stuff, Aparna"

"Are you kidding me, dad ? I cant wait that long! I would not ask your persmission then because I will be a major then. Anyway, I have to be going now. Love you dad" என்று வெளியே போனாள். அவள் தோழி ஒரு காரில் வந்து அவளை பிக் அப் பண்ணி சென்றாள்.

"பை" என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கோயிலுக்கு போக ரெடியானார் ராஜன். அவருக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இருந்ததில்லை. இந்த பாழாப்போன அமெரிக்காவில், தன்னால் தன் பெண்ணை சரியான வழியில் வளர்க்க முடியும் என்கிற நம்பிக்கையில்லை அவருக்கு இப்போது. அவள் வாழ்க்கை முழுவதும் அவள் கையில் மட்டும்தான் என்று தோன்றியது. இவரால் தலைகிழாக நின்னாலும் எதுவுமே செய்யமுடியாது! தன்னால் கட்டுப்படுத்தமுடியாத அவள் வாழ்க்கை மற்றும் அவளைப்பற்றி யோசிக்க வேண்டாம் என்று எண்ணிய அவர், மனைவியுடன் சேர்ந்து கோயிலுக்கு புறப்பட்டு போனார்.

தன் "ஐ பாட்" ல பழைய பாடல்களை எல்லாம் டவுன்லோட் செய்து வைத்திருந்தார். கார் புறப்பட்டு ஃப்ரீ வேயில் நுழைந்தவுடன், தன் ஐ பாடை ஆண் பண்ணினார், ராஜன்.

அந்த பழைய பாடல் கலக்ஷனிலிருந்து, "மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?" என்ற பி பி ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியது. அதில் ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக தோன்றியது ராஜனுக்கு.

Saturday, March 14, 2009

நடிகர் விஜய்காந்த் அவ்வளவுதானா?!

நடிகர் விஜய்காந்த் சட்டம் ஒரு இருட்டறையில் அறிமுகமானார். ரஜினிக்கு அடுத்து இவர்தான் வியாபார ரீதியாக பி அண்ட் சி செண்டர்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் நடிகராக மட்டும் இருந்தபோது இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள்கூட்டம் மாஸ் இருந்ததென்னவோ உண்மைதான். இன்றைய நடிகர்கள் அஜித், விஜய், விக்ரம், சூர்யா இல்லாத காலகட்டத்தில் கமர்ஷியல் ஹிட் என்று சொன்னால் இவர்தான் ரஜினிக்கு அடுத்து.

சமீபத்தில் விஜய்காந்த் தன்னை எம் ஜி ஆரின் ரசிகர் என்றும் கறுப்பு எம் ஜி ஆர் என்றும் சொல்லிக்கொண்டு அரசியல் களத்தில் இப்போது இறங்கி அதில் மூழ்கிக்கொண்டு இருக்கிறார்.

அரசியலில் இவர் வெற்றியடைய வாழ்த்துக்கள். இவர் அரசியலில் இறங்கியதிலிருந்து இன்னும் ஒரு 20 கிலோ வெயிட் போட்டு இருக்கிறார். ஒரு நடிகராக இருந்தும் ஏற்கனவே இவர் ரொம்ப கவனமாக உடலை ஃபிட்டாக வைக்கவில்லை. இந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துகிறார். இப்போது ஒரு பெரிய தொப்பையோட ரொம்ப குண்டாக இருக்கிறார். கமல் மற்றும் ரஜினி இவரைகாட்டிலும் உடலை நல்லாவே வச்சிருக்காங்க. இதோடு இந்த தொப்பையுள்ள கறுப்பு எம் ஜி ஆர், அப்பப்போ சினிமாவிலும் ஹீரோவாகவும் நடித்து தன் நடிப்பு திறமையை காட்டுகிறார். ஆனால் எனக்கென்னவோ சினிமாவில் இன்று இவருக்கு முன்பு இருந்த மாஸ் போய், இவர் சினிமாவில் மங்கிவிட்டதாக தோன்றுகிறது. இவர் தலைகீழா நின்றாலும் இவருடைய உடல்வாகுவை ஒரு நல்ல நிலைக்கோ அல்லது பழைய சினிமா மார்க்கட்டை திரும்ப எட்டிப்பிடிக்க முடியும் என்றோ தோனலை.

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாஷனுக்கும் வயதாகிவிட்டதுதான். ரஜினி, இவரைவிட பல வருடம் வயதானவர். இருந்தாலும் ரஜினி, கமலுக்கு இன்றும் அந்த சூப்பர் ஸ்டார் மதிப்பு குறையவில்லை. ஆனால் விஜய்காந்தின் நிலைமை ரஜினி கமல் நிலைமைபோல் இல்லை என்று நம்புகிறேன். இவருடைய கறுப்பு எம் ஜி ஆர் அரசியல் கூத்துக்கு விலை இவர் சினிமாவில் வைத்திருந்த ஸ்டார் வால்யு என்று சொல்லலாமா? ஒருவேளை அரசியலில் இவர் தோல்வி யடைந்தால், அரசனை நம்பி புருசனை கை விட்டகதைதான் இவருக்கு!

Friday, March 13, 2009

"கர்வம்பிடித்த நன்றிகெட்ட பதிவர்" பட்டம்!

அய்யோ நான் யாரையும் அப்படி சொல்லவில்லை! நெறையப்பேர் இதுபோல் ஒரு சில பதிவர்களை மனதுக்குள் திட்டிக்கொண்டு இருக்கார்கள். ஏன்? பல காரணங்கள். ஆனா நம்புங்க, இதுபோல் ஒரு சிலர் உங்களை தவறா புரிந்துகொள்வது பதிவுலகத்திலே ரொம்ப சாதாரணமா நடக்கிற ஒண்ணு.

நம்மை வளரவைக்கும் ஒரு நிர்வாகத்துடன் அனுசரித்துப்போனால், நீங்க தமிழினதுரோகி, இல்லைனா தமிழ்மண ஜால்ரா! நாளைக்கு நமக்கும் இதுபோல் ஒரு பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் செய்கிறோம். நம் பதிவுகளும் ஏதோ ஒரு பொது நோக்குடன் புறக்கணிக்க படலாம் என்று தெரியாதா என்ன? பொது நலத்தையும், பெரிய நோக்கிலும் அதை அனுகித்தான் நம் கருத்தை சொல்கிறோம் என்பது யாருக்கு தெரியும்?

கருத்து சுதந்திரம்னா என்ன? பதிவுலக நாகரீகம்னா என்ன? செய் நன்றிமறப்பதுனா என்ன? இவைகளின் அர்த்தம் பிரபல பதிவர்களுக்கு தெரியுமா? இல்ல தினமும் ஏதாவது ஒப்பாரி வைக்கும் பெரிய மனிதர்களுக்கு தெரியுமா? இல்லை ஒண்ணுமில்லாத என்னைப்போல் வெற்றுவேட்டு பதிவர்களுக்கு தெரியுமா? இல்லை பலமுறை யோசித்து கவனமாக பின்னூட்டமிடும் ஒரு சில வாசகர்களுக்கு மட்டும் தெரியுமா? இல்லை யாருக்குமே சரியாக தெரியாதா? இணையதளத்தில், தமிழ் பதிவுலகத்தில்தான் எவ்வளவு பிரச்சினை! எவ்வளவு மிஸண்டர்ஸ்டாண்டிங்! எவ்வளவு எதிரிகள்! எவ்வளவு பொறாமை!

நியாயம்னு எதுவும் இல்லையா? எல்லாமே சுயநலம்தானா? நம் சகோதரர்கள் தானே? மனம் திறந்து சொல்வோமேனு ஏதாவது சொன்னால், உங்களை தலைக்கனம் பிடித்த பதிவர்னு நினைப்பார்கள். உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தமிழ்பற்றாலர்களுக்கு புரியாது. ஏன்னா உங்களை பர்சனலா தெரியாது. நீங்க உண்மையில் எப்படிப்பட்டவர்னு ஒரு எழவும் தெரியாது.

இதைக்கேளுங்க, நீங்க நல்ல இந்தியனா இருந்தா, உங்களை தமிழ் துரோகி என்பார்கள்! தமிழனா இருந்தால் தேச துரோகி என்பார்கள்! இப்படி பல பட்டங்கள் வேறெங்கே வாங்க முடியும்?

இப்படி பல குழப்பங்கள் இருந்தாலும் ஏதாவது சொல்லனும், எழுதனும்னு ஒரு துடிப்பு. சரி எதையாவது எழுதி பதிவு செய்து தமிழ்மணத்தில் இணைத்தாச்சு! ஒருத்தராவது நம்மை சரியாக புரிந்துகொள்ள மாட்டாரா? என்கிற ஏக்கம்.

இந்த நேரத்தைல் பின்னூட்டங்களில் உள்ள குழப்பங்கள் பல.

ஒரு பதிவர்களுக்கு, ”நான் அவர் பதிவுக்கு பின்னூட்டமிடுகிறேன். ஆனா அவர் மட்டும் என் வலைதளம் வருவதே இல்லை” என்கிற குழப்பம், குற்றச்சாட்டு, கோபம்.

ஒரே பெயரில் வருவார்கள் ஆனால் சம்மந்தமே இல்லாத இருவர். கவனித்து பார்த்தால் தெரியும், ஒரே பெயர் வைத்திருக்கும் வேற வேற ஆட்கள் என்று.

ஒரே ஆள் புகழ்றதுக்கு ஒரு ஐ டி, திட்ட ஒரு ஐ டி!

பிரச்சினை பண்ணுவதற்கும், சண்டை போடுவதற்குமே ஒரு சில ஐ டி க்கள் வைத்து அலையும் பல "சைக்கோ தமிழர்களும்" இருக்காங்க!

நமக்கு ஒரு பிரச்சினனயினு வந்தால், அதற்கு நெறைய வகையான தீர்வுகள் இருக்கு. ஆனா அதே தமிழர் பிரச்சினைனு வந்தால்? கவனம்! நீங்க ஈசியா தமிழ் துரோகி பட்டம் வாங்க வாய்ப்பிருக்கு! யார் கொடுப்பா? ஏதாவது ஒரு முதுகெலும்பு இல்லாத அனானி!

காந்தியும்தான் சுதந்திரம் வாங்கினார். அவர் ஒரு கோழை என்பார்கள். நீங்க காந்தியவாதியா? உங்களுக்கு ரத்தம் சிந்துவது பிடிக்காதா? ஆனால் தமிழர்கள் அழிவதை தடுக்க முடியவில்லையா? என்ன செய்வதுனே தெரியலையா? நீங்க ஒரு கோழை! யார் சொல்றா? பேரில்லாத ஒரு அனானி! பெயர் மட்டும்தான் இல்லை! திமிரை பார்க்கனும்! அனானியா வந்து வாய்கிழிய பேசுவார்கள்! உனக்கும்தான் ப்ரொஃபைல் இல்லை! அதனால் என்ன? எனக்கு ஒரு பேர் இருக்கு! நான் அதே ஐ டி யில் வந்து நான் சொன்ன கருத்தைப்பற்றி விவாதிப்பேன்! யார் வேணா அனானியா வரலாம். ஏன் நானே, நீயா வரலாம், அனானி! புரியுதா?

தமிழர் பிரச்சினையில் உங்களால் தெளிவான ஒரு கருத்தை சொல்ல முடியாததால் பேசாமல் இருந்தால், தமிழின உணர்வுக்காக பதிவே நீ எழுவதில்லை என்ற குற்றசாட்டு வரும்!
என்னைக்கேட்டல் பேசாமல் முத்துக்குமார் மாதிரி எரிச்சிக்கிட்டு செத்தால்தான் நீங்க தமிழின உணர்வைக்காட்டி தியாகியாக முடியும். சரி, அப்படியே செய்தால் இதற்கு ஒரு முடிவு வந்துவிடுமா என்ன? அதுபோல் வரலாறு எதுவும் இல்லையே? இருக்கா? எங்கே?

உங்களை நம்பி நெறையப்பேர் இருக்காங்களா? சாகட்டும் விடுங்க! தமிழின துரோகி பட்டம் ஒரு அனானிட்ட இருந்து பெறாமல் நீங்க தப்பிக்கனும் இல்லையா? உயிரா முக்கியம்?

Wednesday, March 11, 2009

நான் ஒரு பார்ப்பான்தான்! ஆனால்...

நான் ஒரு பார்ப்பனர் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் இணையதளத்தில் என் கருத்தை சொல்லனும். பார்ப்பான் என்கிற காரணத்தால் என்னை எல்லோரும் தமிழின துரோகினு சொல்றாங்க! நான் சொல்வதில் உள்ள நியாயத்தையோ , உண்மையையோ பார்க்க மறுக்கிறார்கள் என்கிற ஒரு பிரச்சினையுடன் வந்தார் என் நெருங்கிய நண்பர்.

அவருக்கு நான் சொன்ன அறிவுரைகள்:

* உங்க பேர் என்ன? விஜயராகவனா? முதலில் அதை தமிழழகன் என்று மாற்றுங்கள். இதுதான் இனிமேல் உங்க பெயர்.

* நீங்க வெஜிடேரியனா? ”ஆமா. வீட்டில் அதுதான் குக் பண்ணுவாங்க. அதே சாப்பிட்டு பழகிட்டேன்” நு சொல்றீங்களா? ஒண்ணு பண்ணுங்க, அங்கங்கே,சிக்கன் பிரியாணி சாப்பிட்டேன், பர்கர் சாப்பிட்டேன், சைனீஸ் ஃபூட் பிடிக்கும்னு சொல்லுங்க!

* அப்புறம் இந்த மன்னி சொன்னாங்க, அத்திம்பேர் சொன்னாரு, அண்ணா சொன்னான், தங்கை சொன்னாள் நு எதுவும் சொல்ல ப்படாது! அண்ணி சொன்னாங்க, அத்தான் சொன்னாரு, அண்ண்ன் சொன்னாரு, தங்கச்சி சொல்லுச்சி நு சொல்லனும். இதில் ரொம்ப கவனமா இருக்கனும். சரியா?

* நீங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? நல்லதா போச்சு. தந்தை பெரியார் சொன்னார். கலைஞர் சொன்னார்னு அப்பப்போ ஏதாவது சொல்லுங்க.பொய் எல்லாம் சொல்ல வேணாம். அவர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தானே? உங்க கருத்தை ஒத்து ஏதாவது சொன்ன தை ”கோட்” பண்ணி சொல்லுங்க.

* அப்புறம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தானே? அதுமட்டும் போதாது, ராஜிவ் காந்தி படுகொலை தப்பே இல்லைனு சொல்லுங்க!

* இன்னொரு விசயம். நீங்க ரஜினி ரசிகரா? முடிந்தால் கமல் ரசிகராகப்பாருங்க! என்ன அப்படி பார்க்கிறீர்கள்? தமிழர்களை பொறுத்தமட்டில் ரஜினி ரசிகர்கள் எல்லாம் தமிழின துரோகிகள்.

சரி, நீங்க பார்ப்பனரல்லாதவரா ஒரு இமேஜ் உண்டாக்க இது ஓரளவுக்கு போதும் என்றேன். நண்பர் முயன்று, பயங்கர வெற்றியடைந்து விட்டாதாக எனக்கு நன்றி சொன்னார்.

Tuesday, March 10, 2009

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?!

“உன்னை நேற்று தியேட்டரில் உன் ஃப்ரெண்டோட பார்த்தேன், காமினி”

“என்ன சொல்றீங்க!”

“ரெண்டு பேரும் ரசித்து ரசித்து அந்தப்படம் பார்த்தீங்க. உனக்கு நல்ல கணவனா அவர் இருப்பார்”

“---“

“டோண்ட் வொர்ரி, நான் இதை பெரிய விசயமாக்க போறதில்லை. என்னிடம் இல்லாதது அவரிடம் ஏதோ இருக்குனு புரிஞ்சுக்கிட்டேன். நம்ம ரெண்டு பேரும் விவாகரத்து பண்ணிக்குவோம். நீ அவரையே கல்யாணம் பண்ணிக்கோ!”

“நீங்க நெனைக்கிறாப்பில அவர்..”

“என்ன காமினி? அவருக்கும் கல்யாணம் ஆயிருச்சா? இல்லைனா கல்யாணம்லாம் பண்ணிக்க மாட்டாரு, சும்மா அப்பப்போ படுத்து எந்திரிக்க வேணா வருவாறா?”அது என் பிரச்சினை இல்லை! I just don't care about it either. I cant live with a slut, Kamini!”

அழுகை

“ரொம்ப அழாதே, காமினி. உனக்கு ஒரு வேலை இருக்கு, உன்னை நீயே காப்பாத்துமளவுக்கு உனக்கு சம்பளம் வருது. அழகா வேற இருக்க! உனக்கு 26 வயதுதான் ஆகுது! நெறையா பாய்ஃப்ரெண்டு கிடைப்பார்கள். ஆம்பளைங்களுக்கா பஞ்சம்? நாய் மாதிரி அலைறானுக! சந்தோஷமா ஒரு நாளைக்கு ஒரு ஆளோட சுத்து. ரெண்டு பேரோடபடுத்து எந்திரி! தயவு செய்து என்னை மட்டும் விட்டுடு”

“-------”

“நான் என் ஹோம் டவுன் போறேன். திரும்பி இந்த வீட்டுக்கு வரமாட்டேன்! பார்க்கலாம்!”

------------------------

“என்னப்பா ராஜா, உன் மனைவி வரலையா?”

“இல்லைம்மா, நான் அவளை விவாகரத்து செய்யப்போறேன்”

“என்னப்பா இப்படி சொல்ற?”

“உண்மையைத்தானே சொன்னேன். எங்க ரெண்டு பேருக்கும் சரியா வரலை அம்மா! எங்களுக்கு குழந்தைகளும் இல்லை. அதனால் எந்த பிரச்சினையும் வராது"

"இதெல்லாம் நம்ம குடும்பத்தில் செஞ்சா நல்லா இருக்குமாப்பா?"

"உலகம் மாறிருச்சுமா! பெண்களுக்கு சுதந்திரம் கெடச்சிருச்சு! உங்களை மாதிரி அடிமையா வாழ இப்போ உள்ள பெண் தெய்வங்களுக்கு இஷ்டமில்லை! முழு சுதந்திர தாகத்தை தீர்க்கட்டுமே? அதிலென்ன தப்பு?”

“அப்போ, நீ வேற யாரையாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறியாப்பா?”

“இல்லம்மா! ஒரு கல்யாணம் போதும் மா! வாழ்க்கையில் எல்லாப்பாடமும் படிச்ச திருப்தி வந்திருச்சு”

Monday, March 9, 2009

ரஜினி என்னும் திறமைமிக்க நடிகர்!

ரஜினிகாந்த் என்கிற நடிகர் எப்படி தமிழ்மக்களை கவர்ந்தார்? தமிழ் சூப்பர் ஸ்டாராகி முடிசூடா மன்னனாக எப்படி ஆனார்? இவருக்கு உண்மையிலேயே நடிப்புத் திறமை ஏதாவது இருந்ததா? இல்லை சும்மா சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிச்சு விளையாண்டு ஸ்டெயில் என்கிற பேரில் மக்களை கவர்ந்தாரா?

ரஜினியின் அரசியலையோ, ஆன்மீகத்தையோ, நம்பிக்கையையோ, அவர் குடும்ப வாழக்கையையோ பற்றி இங்கே நான் பேச வரவில்லை. 1974 ல அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி என்கிற நடிகர், தமிழ் சினிமாவில் எப்படி சூப்பர் ஸ்டார் ஆகும் இந்த அளவுக்கு வளர்ந்தார் என்பதை மட்டும் பற்றி பார்ப்போம்.

ரஜினியின் அப்பா ஒரு டைரக்டரோ அல்லது பெரிய நடிகரோ அல்லது படமெடுக்கும் அளவுக்கு பணக்காரரோ கிடையாது. ரஜினி, தமிழ் சினிமாவில் நுழையும்போது தமிழர் அல்ல! இவர் நடிக்க வரும்போது இவருக்கு எதுவும் பெரிய இடத்து சிபாரிசு கிடையாது! இருந்தும் ரஜினியிடம் இருக்கிற ஏதோ ஒண்ணு கே பாலசந்தரை கவர்ந்தது. இவர் முதல் படமான அபூர்வ ராகங்களில் பாலசந்தர் இவருக்கு ஒரு சின்ன வாய்ப்பு கொடுத்தார்.அதே நேரத்தில் பல படங்களில் இவருக்கு [மூன்று முடிச்சு, அவர்கள், அவள் ஒரு தொடர்கதை (தெலுங்கு வேர்ஷன்)] வாய்ப்பு கொடுத்தார் பாலசந்தர். பாலசந்தர் இதுபோல் பல நடிகர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளார், ரஜினிக்கு மட்டுமல்ல. உதாரணமாக நடிகை சுஜாதா, நடிகர் கமலஹாஷன் போன்றவர்களுக்கும் இதேபோல் வாய்ப்பு கொடுத்தார்.

ரஜினிகாந்தின் வளர்ச்சியின் வேகத்தைப்போல் எந்த ஒரு நடிகனும் தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் வளர்ந்ததில்லை. ரஜினிகாந்தின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு என்று சொன்னால் அது மிகை இல்லைதான். எம் ஜி ஆர், சிவாஜி கூட இவ்வளவு வேகமாக வளரவில்லை.

1975 லிருந்து ரஜினி ஒரு மிகவும் பிஸியான நடிகராகிவிட்டார்! அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு மார்க்கட் என்றுமே கீழேபோகவில்லை! இவருடைய நடிப்பு, அன்றைய பெரிய நடிகர்கள், எம் ஜி ஆர் போலவோ, சிவாஜி போலவோ, ஜெய்சங்கர் போலவோ, சிறிய நடிகர்கள் சிவகுமார் போலவோ கமஹாஷன் போலவோ இல்லை. ரஜினியின் நடிப்பு அவருக்கே உரிய ஒரு புது பாணியில் தனி "ஸ்டயிலுடன்" இருந்தது.

மூன்று முடிச்சு படத்தில் இவர் நடிப்பைப்பார்த்த தமிழ் ரசிகப்பெருமக்கள் அசந்துபோனார்களாம்! இவரோட திரையுலகம் வந்த சக நடிகர்கள் மிரண்டு போனார்கள் என்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர் வில்லனாக இவர் நடித்த அவர்கள் (ராமனாதன்), 16-வயதினிலே (பரட்டையன்), போன்ற படங்களில் இவருடைய நடிப்பைப்பார்த்து தமிழ்மக்கள் இவருடைய நடிப்புத்திற்மை பார்த்து பலவாறு புகழ்ந்து தள்ளினார்களாம். இவர் வில்லனாக நடித்ததை விமர்சகர்கள், "People loved to hate him! என்றார்களாம்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் போலவும், பாலிவுட் நடிகர் சத்ருகன் ஷினா போலவும் ரஜினியின் ஸ்டயில் இருந்ததாக ஒரு சிலர் சொன்னாலும், இவருடைய "16-வயதினிலே பரட்டையன்", "அவர்கள் ராமநாதன்" போன்ற ரோல்களில் இவர் தமிழருக்கே ஆன திமிர்பிடித்த ஆட்டிடூடுடன் அபாரமாக நடிப்பதைப்பார்த்த தமிழ்மக்கள் அதெல்லாம் இல்லை ரஜினியின் நடிப்பு தனித்துவம் (யுனீக்) என்று விவாதம் பண்ண ஆரம்பித்தார்கள்.

பிறகு இவர் ஹீரோவாக நடித்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்த "சம்பத் கேரக்டர், முள்ளும் மலரும் படத்தில்,வந்த காளி கேரக்டர் மற்றும் ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம் கேரக்டர் கள், ரஜினிகாந்து ஒரு திறமைமிக்க நடிகர் என்று சந்தேகமே இல்லாமல் நிரூபித்தது. இப்படியே வளர்ந்தவர்தான் இன்றைய சூப்பர் ஸ்டார். இவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருந்ததென்னவோ உண்மைதான்.

Friday, March 6, 2009

நல்ல நெருப்பும், கெட்ட நெருப்பும்! (உண்மைக்கதை)

அன்று சனிக்கிழமை! இருந்தாலும் ஒரு முக்கியமான ஒரு எக்ஸ்பெரிமெண்ட் செய்யவேண்டும் என்று காலையில் எழுந்து ஆய்வகத்திற்கு கிளம்பினாள், ஷர்மிளா. அவள் அந்த பல்கலைகழகத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் புதிதாக இந்த வேலையில் சேர்ந்து இருந்தாள். வேதியிலில் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருந்தாள், ஷர்மிளா. சில வருடங்கள் வேலை செய்துவிட்டு முதுநிலை படிப்பு படிக்கலாம் என்று நினைத்து, தன் படிப்புக்கு உதவும் இந்த வேலையில் சேர்ந்து மூன்று மாதம்தான் ஆகிறது. தன்னுடையை "பாஸ்" உடைய நல்ல புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக லீவு நாட்களில்கூட வேலை செய்தாள்.

ஷர்மிளா அன்று காலையில் எழுந்து குளித்து ரெடியாகி, ப்ரெட் டோஸ்ட் பண்ணி விட்டு காஃபி குடிக்க ஸ்டவை ஆண் பண்ணினாள். சரியாக 10 நிமிடத்தில் பால் பொங்கியது. கவனமாக ஸ்டவில் இருந்த நெருப்பை ஆஃப் செய்துவிட்டு, காய்ச்சிய பாலில் காஃபிப்பொடி போட்டு, சர்க்கரை கலந்து காஃபி குடித்துவிட்டு ஆய்வகத்திற்கு சென்றாள்.

அன்று "க்ரிஸ்த்மஸ் ஹாலிடேக்களில் ஒரு நாள்" என்பதால், ஆய்வகத்தில் அவளைத்தவிர வேறு யாரும் இல்லை. வேதியியல் ஆய்வகத்தில் தனியாக ஒருவர் மட்டும் வேலை செய்யக்கூடாது - அதுவும் பைரோஃபோரிக் வேதிப்பொருள் பயன்படுத்தக்கூடாது என்று பல சேஃப்ட்டி லெக்சர்களில் திரும்ப திரும்ப சொல்ல கேட்டிருக்காள், ஷர்மிளா. இருந்தாலும் அதை அவள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவளுக்கு அந்த ரியாக்ஷன் செய்தே ஆக வேண்டும். அப்படி என்ன ஆகிடப்போகிறது? என்று நினைத்தாள், ஷர்மிளா.

ஷர்மிளா ஒரு அக்ரிலிக் ஸ்வெட்டர் அணிந்து இருந்தாள். அதற்குமேல் நெருப்பு பற்ற முடியாத லேப் கோட் அணிந்தால், ரொம்ப ஹாட்டாக இருக்கும் என்று எண்ணிய அவள் லாப் கோட் அணியவில்லை. கையில் கவனமாக க்ளவ்ஸ் மட்டும் அணிந்து இருந்தாள்.

வினை குடுவையை "நைட்ரஜன் அட்மாஸ்ஃபியரில்" வைத்துவிட்டு, குளிர் பெட்டியில் இருந்த டெர்சியரி-பியூட்டில் லித்தியம் ரியேஜண்ட் பாட்டிலை எடுத்து வந்தாள். ஒரு ப்ளாஸ்டிக் சிரின்ஞ்வுடன் நீடிலை கனெக்ட் செய்து, தன் ரியாக்ஷனுக்கு தேவையான 16 எம் எல் டெர்சியரி ப்யூட்டில் லித்தியம் சொலுஷனை சிரிஞ்சில் சக் பண்ணி எடுத்தாள். சிரிஞ்சில் இருந்த அந்த சொலுஷனை, ரியாக்ஷன் ஃப்ளாஸ்க் ல கொண்டு செல்வதற்கு முன்னால், அவள் நீடிலை நன்றாக டைட்டாக சிரிஞ்சில் கணெக்க்ட் செய்யாததால். சிரிஞ்சிலிருந்து மெட்டல் நீடில் கழண்டு கீழே விழுந்தது. அதிலிருந்த ப்யூட்டில் லித்தியம் சில ட்ராப்ஸ் வெளியே வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ப்யூடில் லித்தியம் அட்மாஸ்ஃபியரில் உள்ள "நீராவி" மற்றும் ஆக்ஸிஜனுடன் இணைந்து நெருப்பாக மாறியது! அந்த நெருப்பை பார்த்தவுடன் ஷர்மிளா ரொம்ப நேர்வஸாகி பயந்துவிட்டாள்! நெருப்பைப் பார்த்து பயந்து சிரிஞ்சை தன் மேலேயே நழுவவிட்டாள். அந்த சொலுஷன் அவள் க்ளவ்ஸிலும், அவள் ஸ்வெட்டரிலும் பட்டது, உடனே அது பாலித்தீன் என்பதால் க்ளவ்ஸும் தீப்பிடித்து எரிந்தது, அவள் உடலில் போட்டிருந்த, அக்ரிலிக் ஸ்வெட்டரிலும் நெருப்பு பரவியது. அது போதாதென்று அருகில் இருந்த எத்தில் ஈத்தரில் நெருப்பு பட்டு பெரிய நெருப்பாகியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் உடலில் உள்ள ஆடைகளில் நெருப்பு வேகமாக பரவியது.

ஷர்மிளாவால் சரியாக யோசிக்க முடியவில்லை!

இதுவரை அவளுக்கு எக்ஸ்பெரிமெண்ட் செய்யும்போது இதுபோல் நெருப்பு உருவானதில்லை! உதவிக்கு யாரும் இல்லை! எமர்ஜென்ஸி ஷவர்க்கு ஓடி அதை ஆண் பண்ணி தன் நெருப்பை அணைக்க ஏனோ தோனவில்லை!

பயந்து ஓடினாள்! நெருப்பு வேகமாக அவள் உடலில் பரவியது! வேறு யாரும் அவள் ஆய்வகத்தில் அருகில் இல்லததால், அவள் உடலில் நன்றாக நெருப்பு பரவிய பிறகுதான் இவள் போட்ட கூச்சல் கேட்டு பக்கத்து ஆய்வத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்கள் வருவதற்கு முன் அவள் உடலில் பரவிய நெருப்பு அவளை உயிரைக்குடிக்கும் அளவுக்கு அவள் உடலில் பரவி, அவள் உடல் கருகியது. உதவிக்கு வந்தவர்கள் அருகில் இருந்ந்த ஷவருக்கு கொண்டு சென்று நெருப்பை ஒருவாறு அணைத்து, எமர்ஜன்ஸி சர்வீஸை அழைத்தார்கள். சில நிமிடங்களில் வந்த ஃபயர் சர்வீஸ், அவளை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்று, இண்டென்ஸிவ் கேரில் சிகிச்சை கொடுத்தார்கள்.

ஹாஸ்பிட்டலில் மரணக்காயங்களுடன் இருந்த அவளுக்கு புரிந்தது ஏன் வேதியியல் ஆய்வகத்தில் தனியாக வேலை செய்யக்கூடாது என்று. இப்போது புரிந்து அவளுக்கு என்ன பயன்? சில நாட்களில் இந்த நெருப்புக்காயங்களால் உயிர் இழந்தாள், ஷர்மிளா.

இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை!

http://calfire.blogspot.com/2009/03/chemical-fire-t-butyl-lithium-and.html

Thursday, March 5, 2009

சாருநிவேதிதாவின் "எதிர்வினைகள்"!

எதிர் வினைனா என்ன? An opposite reaction? A criticism on what you write or believe? இல்லையா? ஆனா நம்ம திரு சாருநிவேதிதா என்னங்க இவர் கருத்துடன் ஒத்து போயி, இவரையும் இவருடைய நான் கடவுள் விமர்சனத்தையும் புகழ்ற பின்னூட்டங்களை எல்லாம் எதிர்வினைனு சொல்றார்?

I dont know why an appreciation on his review is called as an opposite reaction?


அவர் எதிர்வினைனு சொல்கிறதெல்லாம் எதிர்வினைகளாக தோணவில்லை. அவைகள் அவர் கருத்தை எதிர்க்கும்/மறுக்கும் விமர்சகர்களின் கருத்தும் அல்ல


நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள திண்ணை ஆர்டிக்கிளை ("சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்"- சேதுபதி அருணாசலம்) வேண்டுமானால் எதிர்வினைனு சொல்லுவேன்!

[ ***இந்த விமர்சனத்தை சாருநிவேதிதா கொஞ்சம் முன்னரே வெளியிட்டிருக்கலாம். சாருநிவேதிதாவின் விசிலடிச்சான் குஞ்சுகளிலேயே பலபேர் இந்தத் திரைப்படத்தின் இசையை அவசரப்பட்டு சிலாகித்து இளையராஜாவை மேதை, கீதை என்றெல்லாம் எழுதித் தொலைத்துவிட்டார்கள். அவர்களுடைய நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது!*** ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20902261&format=html

Now someone is going to come and tell me that you have got it all wrong!

Educate me, geniuses, by your "opposite reactions"!

குறிப்பு: சும்மா சண்டைக்கு வராதீங்கப்பா. எனக்கு உண்மையிலேயே எதிர்வினை னா என்னனு தெரிந்துகொள்ளனும்! உங்க எதிர்வினை யில் சொல்லுங்க!

Wednesday, March 4, 2009

காதலுடன் -11

"இந்தா ப்ரூ காஃபி சந்தியா. சுகர் எவ்வளவு போடனும்? நான் ஒரு டீ ஸ்பூன் தான் போட்டேன் உனக்கு"

"இன்னொரு ஹாஃப் ஸ்பூன் போடுங்களேன், ரமேஷ்?'

"ஓ கே. கொஞ்சமா சுகர் போட்டா பரவாயில்லை. நெறைய போட்டுட்டாத்தான் குறைய ஆக்குவது கஷ்டம்"

"பெரிய அறிவாளிதான் நீங்க, ரமேஷ்"

"தேங்க்ஸ்"

"ஏதோ நான் காம்ளிமெண்ட் பண்னின மாதிரி ஆக்கீட்டீங்களே?"

"என்ன பண்றது? இப்படித்தான் உன்னிடம் இருந்து வாங்கிக்கனும்"

"என்ன விசயம் ரமேஷ்? ஒரே சலிப்பா இருக்கீங்க"

"சும்மாதான். ஒரு மாதிரி இருந்துச்சு. சரி சந்தியாவுக்கும் காஃபி போட்டுக்கொடுத்து நாமும் ஒண்ணு ஓசில குடிச்சுக்கலாம்னு வந்தேன்"

"உங்க "வொர்க்" லாம் எப்படி போகுது?"

"ஓ கே, சந்தியா, மோசம் இல்லை. உனக்கு?"

"எனக்கு நல்லாப் போகுது. அது ஒரு பிரச்சினைதான் இல்லாம இருக்கு"

"வேறென்ன பிரச்சினை?"

"ஒரு பிரச்சினை சொல்றேன் கேளுங்க! என்னோட கசின் ஒருத்தி இருக்காள் இங்கே. அவ பேரு, விஜி. ரொம்ப பிரியமா இருப்பாள். ஒவ்வொரு சமயம் அவங்களோட சேர்ந்து படத்துக்கு போவேன். அவளுடைய ஹஸ்பண்ட் இருக்கான் ஒருத்தன். அவன் ஒரு பொறுக்கி. வென் ஐ கோ வித் ஹெர், ஹி ஆல்சோ ஜாயின்ஸ் அஸ். ஹி இஸ் பிஹேவிங் சோ சீப்"

"என்ன மாதிரி?"

"ஜோக் மாதிரி எதாவது இன்அப்ரோப்ரியேட் ஆக பேசுறது. என் மேலே கண்ட இடத்தில் கையை வைக்கிறது..ஹி இஸ் அன் இடியட்""

"You should not let him do that, Sandhya. Just tell him straight that you dont like such things"

"How many times? நான் நெறைய தடவை சொல்லிட்டேன், ரமேஷ். But that idiot acts as if it is a joke or something on purpose"

"What about your cousin? Cant she tell him that it is inappropriate? Does not she know that you get annoyed?"

"She does know. I have told her too. She does not tell him or she is afraid of him. I dont know, Ramesh"

"உனக்கு சந்தேகமே இல்லையா அவன் தவறாத்தான் பிஹேவ் பண்னுறான் என்று?"

"Yeah, I am positive, and he is married Ramesh. I am like his sister. And why some men dont understand that? And that bastard is keep annoying me as if I enjoy his annoyance?"

"I dont know. I think he is a sick guy. You need to get rid of your cousin too. That is the only solution"

"What do you mean?"

"Just avoid meeting with her or going out with her and erase her off from your list of friends and relatives"

"அவ என்ன தப்பு செய்தாள்?"

"Her fault is that she is married to a sick guy. அவள் தான் அவனிடம் சொல்லனும். இது போல் செய்யாதே னு. அவ சொல்லித்தான் இருப்பாள். அதுக்கு மேலே அவளால் என்ன செய்ய முடியும்? You just have to lose her too becasue of that bastard"

"என்னவோ போங்க! Why it is so hard to find some decent men? Why do they think women will like such cheap act? It is disgusting, Ramesh"

"The world has got so ****ed up because of the too much exposure to porn and what not. Immigrants, esp, indians do not know the limits these days. They are worse than animals. You just have to be careful with any man. It does not matter who he is as long as it is a man"

"Ramesh! I am sorry to say this, but you need to be a woman for knowing how cheap men are! I am not joking. So many sick Indian men are there. I see them everywhere"

"You cant change them Sandhya. You just have to protect yourself from them by being smart. Dont give a chance when your sixth sense tells you something wrong with him. Just dont trust any man including me"

"I trust you, Ramesh"

"Thanks but I mean just be careful with anybody, Sandhya"

"Sorry, Ramesh, for pouring all this stuff on you"

"Hey! You are helping me to learn about men. These sort of things I can learn only from girls, you see. You are only educating me"

அவன் செல் ஃபோன் ரிங் பண்ணியது.

"ஹல்லோ"

"என்னம்மா? என்ன விசயம்?"

"அங்கே ஏதோ பனிப்புயல்னு சொன்னாங்க"

"ஒண்ணும் இல்லைம்மா. நான் நல்லா இருக்கேன்"

"வீட்டிலே இருந்தா பேசுற? உன் வீட்டு ஃபோன்ல கூப்பிட்டேன், அம்மா. நீ எடுக்கலை"

"இல்லம்மா, ஒரு ஃப்ரெண்ட் வீட்டில் இருக்கேன்"

"யார்ப்பா அது?"

"உங்களுக்கு தெரியாதும்மா. சரி, நான் நல்லாதான் இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன். சரியா?"

"சரிப்பா, ரமேஷ், வச்சிடுறேன்"

"யார் அது, ரமேஷ்?"

"எங்க அம்மா, சந்தியா. இந்தியால இருந்து கூப்பிடுறாங்க. எதாவது நியூஸ பார்த்து பயந்து அடிக்கடி இப்படி கூப்பிடுவாங்க"

"என்னை இண்ட்ரொட்யூஸ் பண்ணி வச்சிருக்கலாம்ல, ரமேஷ்?"

"எப்படினு?'

"ஏன்? உங்க வருங்கால மனைவி னு"

"அதுக்குள்ளேயா! நீ வேற! அவங்க கிட்டலாம் பக்குவமா சொல்லனும்"

"என்னை டம்ப் பண்றதா எதுவும் ஐடியா இல்லையே?"

"பண்ணினால் என்ன பண்ணுவ?"

"எனக்கே தெரியாது. ஆனா நீங்க செய்தாலும் செய்வீங்க"

"நல்லவேளை இவனிடம் இருந்து தப்பிச்சோம்னு சந்தோஷமா இரு"

-தொடரும்

Tuesday, March 3, 2009

அந்த பகவான்தான் அருள் புரியனும்!

"என்ன ஆச்சு, நம்ம ராமன் செட்டியார் கடையிலே ஒரு சரக்கையும் காணோம். என்ன கேட்டாலும் இல்லைனு சொல்றாங்க ?"

"அவர் அவ்ளோதான். ஊரெல்லாம் கடன். எவனும் சரக்கு தர மாட்டேன்கிறனாம். அந்த ஜவுளிக்கடையையும் எடுத்துட்டார்"

"என்னடா ஆச்சு? என்ன சூதாடினாரா இல்லை வேற மாதிரி காசை விட்டுட்டாரா?"

"நீ வேற அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் டெடையாது!"

"வேற என்ன சத்யம் ஸ்டாக்லயா எல்லாத்தையும் விட்டாரு?"

" இவர் பழய காலத்து ஆளு! ஸ்டாக் மார்க்கட்ல எல்லாம் பணம் போடுறதில்லப்பா! என்ன அவருக்கு மூனு பொண்ணுங்க. அவங்க மூனு பேருக்கும் 150 சவரன் நகை, வைர மூக்குத்தி, 50 பட்டு னு எடுத்து தடபுடலா கல்யாணம் பண்ணினார். கணக்கு வழக்கு இல்லாம கல்யாணத்துக்கு செலவழிச்சதாலே இப்போ தெருவுக்கு வந்துட்டார்னு சொல்றாங்க"

"என்னப்பா சொல்ற? கல்யாணத்தை கொஞ்சம் ஆடம்பரம் கொறச்சு தன்னிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றார்போல் செய்தால் என்ன?"

"இந்தா பாரு, இப்போ நம்ம ஊரில் எல்லோருக்கும் கழண்டுருச்சு. நம்மால எவ்வளவு அஃபோர்ட் பண்ண முடியும்னே இவங்களுக்கு தெரியலை. முதல்ல அவர் மூத்த பொண்ணுக்கு பெரிய இடமா பார்த்து செஞ்சாரு. அப்போ கையிலே ரொக்கப்பணம் நெறைய இருந்ததால் அவரால் கடன் இல்லாம நல்லா செய்ய முடிஞ்சது. அடுத்த வருடமே நல்ல வரன் வந்ததுனு அடுத்த பொண்ணுக்கு கல்யாணம். மூத்த பெண்ணுக்கு செய்தது போல் செய்யனும்னு கடன உடன வாங்கி அதையும் பெருசாத்தான் செஞ்சாரு. அப்போவே கடன திருப்பி கொடுக்க முடியலை. அதோட நிறுத்தி இருக்கலாம். கடசில மூனாவது பொண்ணுக்கும் 2 வருசம் முன்னாலே கல்யாணம். அதுக்கும் எந்த குறையில்லாமல் செய்யனும்னு கந்து வட்டிக்கு வாங்கி செஞ்சாரு. இப்போ தெருவுக்கு வந்துட்டாரு"

"அப்படி என்னத்ததான் பெருசா செஞ்சாரு?"

"அது மாதிரி கல்யாணம் நம்ம ஊரில் இதுக்கு முன்னால நடக்கலைனு சொல்றாங்கப்பா! ஒரு 10000 பேருக்கு சாப்பாடு, பாட்டு கச்சேரி, வான வேடிக்கை, அது இதுனு பெருசா செஞ்சாருப்பா. இதுல சொந்த பந்தம் எல்லோருக்கும் பட்டுச்சேலை பட்டு வேட்டினு வேற. அதை ஏன் கேக்கிற ரொம்ப ஆடம்பரம்"

"கைல காசு இல்லாமலா இதெல்லாம் செஞ்சாரு? கல்யாணத்துக்கு ஆகிற செலவுக்கு எதாவது சொத்த கித்த விக்கலையா?"

"அவர் மனைவி நகையை எல்லாம் அழிச்சு செஞ்சாருனு சொல்றாங்க. அவங்க என்ன ஒரு 80 சவரன் வச்சிருந்தாங்களாம். ஆனா சொத்து எதையும் வித்து கல்யாணம் செய்தால் ஊர்ல அவமானமா போயிடும்னு, காதும் காதும் வச்ச மாதிரி கந்துவட்டிக்கு வாங்கி செஞ்சாரு. நம்ம ஆளுக தான் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறானே இப்போ (அநியாய வட்டிக்கு). அந்த வட்டியெல்லாம் இப்போ குட்டி போட்டு, வளர்ந்து எல்லாத்தையும் சாப்பிட்டுருச்சு"

"என்னப்பா செட்டியாருக்கே ஒரு கணக்கு வழக்கு தெரியாதா என்ன?"

"மாசச் சம்பளம் வாங்கிறவனுக்கு தெரியும் தான் சாகிற வரை எவ்ளோ சம்பாரிக்க முடியும்னு. இது போல் வியாபாரிகள் கணக்கு தப்பு கணக்காக்கிறது. எங்கேயோ அள்ளி சமாளிச்சிறலாம்னு அகலக்கால் வச்சுட்டார்னு சொல்றாங்க. அள்ள அள்ள வந்துக்கிட்டே வா இருக்கும்?"

"என்னவோ போ, திண்ணுகெட்ட குடும்பம்னு சொல்லுவாங்க, இப்போ கல்யாணம் பண்ணி கெட்ட குடும்பம்னு சொல்ல வேண்டியதுதான்!"

"சாதாரணமாக 20 சவரன் போட்டு ஒரு சாதாரண மாப்பிள்ளைக்கு செய்தால் இவங்களுக்கு அசிங்கமாம். இதுபோல் தடபுடலா செய்து பிச்சை எடுத்தாலும் அதுல இவனுகளுக்கு ஒரு பெருமைதான்!"

"என்ன பெருமை இருக்கு இதுல?"

"செட்டியார் வீட்டிலே ஒர் கல்யாணம் நடந்ததே அதுபோல் இதுவரை நம்ம ஊர்ல எவனும் நடத்தவே இல்லைனு ஊரே மெச்சனுமாம்"

"அது உண்மைதான் இப்போ அதனால் தெருவுக்கு வந்ததையும் சேர்த்துத்தான் பேசுவாங்க! மகள்க யாரும் திருப்பி எதுவும் இவருக்கு உதவி செய்வாங்களா? திருப்பி கடனை அடச்சு நல்லா ஆக ஏதாவது வழியிருக்கா?"

"கந்து வட்டிக்காரனுக்கு வட்டியும் மொதலுமா கொடுக்கவா? இப்போ நெறைய லாட்டரிச் சீட்டு வாங்குறாராம். பகவான் அருள் புரிவார்னு நம்பிக்கையோட தினமும் பேப்பர்ல பம்பர் லாட்டரி அடிக்குதானு பார்த்துக்கிட்டு இருக்கார்!"

"அது சரி! அந்த பகவான் தான் அருள் புரியனும்"