Sunday, June 28, 2009

போதை மருந்து விற்ற அமெரிக்க இந்திய டாக்டர்!

நரேந்திர குமார் அகர்வால் (நல்லவேளை தமிழன் இல்லை!) அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர், போதை மருந்துகளை தேவை இல்லாமல் ப்ரிஸ்க்ரைப் செய்து விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். போதை மருந்துகளை நோயாளிகளுக்கு ப்ரிஸ்க்ரைப் பண்ணுவது நெறையவே ரொம்பச்சாதாரணமாக நடக்கிறது. காலம் சென்ற மைக்கேல் ஜாக்ஷன் முதல் கொண்டு பல “டிப்ர்ஸெட்” நோயாளிகள் வாழ இவைகள்தான் உதவுகின்றன. இல்லை என்றால் இவர்கள் தற்கொலை செய்து போய் சேர்ந்துவிடுவார்களாம்! ஆனால் அதே சமயத்தில் நல்லா உள்ள இதுபோல போதை மருந்து தேவைப்படாத நோயாளிக்கு இதை ப்ரிஸ்க்ரிப்ஷனாகக் கொடுப்பது சட்ட விரோதம். நம்ம அகர்வால் அதுபோல் ஏதோ செய்து இருப்பார்போல தெரிகிறது.

இந்த டாக்டர், Rapid Response Medical Center என்று ஆரம்பித்து சட்டவிரோதமாக போதை மருந்துகளை “நோயற்றவர்களுக்கும்” டிஸ்ட்ரிப்யூட் பண்ணியதாக சொல்லப்படுகிறது.

No comments: