
சிவாஜி - பத்மினி - கே ஆர் விஜயா நடித்த படம். இயக்கம்: எ சி திருலோகசந்தர் இசை: எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள்: கண்ணதாசன். மறுபடியும் ஒரு முக்கோணக் காதல்தான். கே ஆர் விஜயா சிவாஜியின் அத்தை மகள். அவருக்கு அப்பா அம்மா கிடையாது, தாய் மாமாதான், சிவாஜியின் தந்தை (நாகையா) அவரை தன் வீட்டில் வளர்ப்பார். சிறுவயதிலிருந்து சிவாஜியுடன் வளர்ந்தவர். கல்லூரியில் சென்று படிக்கவில்லை. அத்தான் அத்தான் என்று சிவாஜி மேல் உயிராக இருப்பார். சிவாஜிக்கு அவள் காதல் புரியாது, அவரால் உணரமுடியாது. அவர் அன்பு புரியும்.
* 1) வெள்ளிமணி ஓசையிலே பாடல் கே ஆர் விஜயாவுக்கு
சிவாஜி, அவருடன் கல்லூரியில் படிக்கும் சகமாணவி பத்மினியை காதலிப்பார். இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பார்கள்
* 2) மாதவிப் பொன்மயிலாய்
* 3) மன்னிக்க வேண்டுகிறேன்
இரண்டு பாடல்கள் இவர்களுக்கு வரும்.
ஆனால் இவர்கள் காதல் துரதிஷ்டவசமாக கல்யாணம் வரைக்கும் போகாது. பரீட்சை லீவுக்காக ஊருக்கு செல்கிற பத்மினி, என் அண்ணனிடம் பேசி கல்யாண சம்மதம் பெற்று கடிதம் எழுதுறேன் என்று ஊருக்குப்போவார். திடீர்னு தன் அண்ணனுக்கு நடக்கும் விபத்தால் எல்லாம் மாறிவிடும். அநாதையாகிய அண்ணன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை பத்மினிக்கு உருவாகும். தன் காதலை, காதலனை மறந்து ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து அண்ணன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெரிய பொறுப்பால், சிவாஜியை “டம்ப்” பண்ணியாக வேண்டிய நிலை. தான் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதாக பொய் சொல்லிக்கடிதம் எழுதிவிடுவார். ஆனால் அவர் கல்யாணமே செய்துகொள்ளாமல் கன்னியாக இருப்பார் அந்தக் குழந்தைகளுக்குத் தாயாக.
கே ஆர் விஜயா, சிவாஜி தன்னை மணக்க விரும்பவில்லை என்று தெரிந்ததும், அவர் மேல் கோபமோ, வெறுப்போ அடையாமல் தொடர்ந்து அவரை அன்போடும் பரிவோடும் இருப்பார்.
காதல் தோல்வியால் சிவாஜி தற்கொலை செய்யுமளவுக்கு போய்விடுவார். மனம் உடைந்து இருப்பார். இதற்கிடையில் கே ஆர் விஜயாவுக்கு சிவாஜியின் தந்தை நாகையா திருமணம் செய்துவைக்கப் பார்ப்பார். ஆனால் ஊர் உலகம் சிவாஜிக்கும் கே ஆர் விஜயாவுக்கும் ஏதோ உறவு இருப்பதுபோல் பேசும். சிவாஜி, கே ஆர் விஜயாவை மணம் முடித்துக்கொள்வார்.
வாழ்க்கைச் சக்கரம் ஓடும், இருவரும் 1 பெண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆவார்கள். ஒரு 10 வருடம்போல போய்விடும். காதல் வாழ்க்கை, காதல் தோல்வியை மறந்து குடும்பம், மனைவி, குழந்தைனு சந்தோஷமாக இருப்பார்கள்
* 4) ஒரு மஹராஜா ஒரு மஹா ராணி இந்த இருவருக்கும் ஒரு குட்டிராணி பாடல்
சிவாஜி பத்மினியை மறந்து வாழ்ந்துகொண்டு இருக்கும்போது, மறுபடியும் பத்மினி அதே ஊருக்கு டீச்சராக வருவார். சிவாஜியின் மகளுக்கே டீச்சராக இருப்பார். இருவரும் எதிரும் புதிருமாக சந்திப்பார்கள்.
சிவாஜி, பத்மினி அவருக்கு துரோகம் செய்துவிட்டதாக நம்புவார். பத்மினியை பார்த்த்திலிருந்து சிவாஜி- கே ஆர் விஜயா உறவில் பிரச்சினை வரும்.
கே ஆர் விஜயாவும் பத்மினியும் தோழிகள் போல பழகுவார்கள். ஆனால் கே ஆர் விஜயாவுக்கு பத்மினியின் கடந்த காலம் மற்றும் அவர் சிவாஜியின் பழைய காதலி என்கிற உண்மை தெரியாது. பத்மினியுடன் கே ஆர் விஜயா தோழிபோல பழகுவார். தன் கணவனுக்கும் தனக்கும் பிரச்சினை வருது. என்னனு தெரியலை என்பார். பத்மினிக்கு விபரம் நல்லாப் புரியும்.
ஒருமுறை சிவாஜியும் பத்மினியும் சிவாஜி குழந்தையுடன் சந்திப்பார்கள். அந்த சந்திப்பை சிவாஜி கே ஆர் விஜயாவிடம் மறைப்பார். அதை அறிந்த் குழந்தை அப்பா பொய் சொல்லுகிறார்னு அவர் மேல் பயங்கர கோபமும் எரிச்சலும் கொள்ளும். அதனால் குழப்பத்திற்கு மேல் குழப்பமாகும் .
இந்த சூழ்நிலையில்
“ 5) கடவுள் தந்த இருமலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே (கே ஆர் விஜயா)
ஒன்று பாதை ஓரத்திலே (பத்மினி)
பாடல் வரும்! பத்மினியும் கே ஆர் விஜயாவும் பாடுவார்கள்.
அருமையான பாடல்! பத்மினி நிலைமையை நினைத்தால் அழுகை வந்துவிடும். கடைசியில், சிவாஜிக்கு உண்மை தெரியும். பத்மினி கல்யாணம் செய்யாமல் தன் அண்ணன் குழந்தைகளுக்காகத்தான் இப்படி செய்தார் என்று.
* 6) மன்னிக்க வேண்டுகிறேன் (சோகப் பாடல் வரும்)
அந்த சூழ்நிலையில் சிவாஜியிடம், கே ஆர் விஜயாவுடன் தான் தொடர்ந்து வாழனும்னு சொல்லிவிட்டு அந்த அண்ணன் குழந்தைகளுடன் பத்மினி அந்த ஊரைவிட்டே போய்விடுவார்.
It is really a beautiful movie but very sad movie. It made me cry when I was watching it.