Sunday, November 1, 2009

கருத்துச்சுதந்திரமும் உண்மைப் படுகொலைகளும்!

இன்றைய வலையுலகில் ஒரு தனிமனிதனுக்கு கிடைத்த சுதந்திரமும், அதனால் கிடைத்த நன்மைகளையும் பற்றி என் கருத்துக்களை பரிமாறினேன். தன் இஷ்டப்படி என்ன வேணுமானாலும் அநியாயமாக எழுதிக்கொண்டு பிழைப்பை ஓட்டிய பத்திரிக்கைகளையும் அதில் எழுதும் பிரபல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், அவர்கள் பொய்யை எழுதும்போது இப்போதெல்லாம் நாம் ஒரு வழி பண்ணிவிடலாம் என்றும், பத்திரிக்கை தொழிலில் இல்லாதவர்கள், ஆனால் விபரம் அறிந்தவர்கள் இதுபோல் பத்திரிக்கைகளில் வரும் உண்மைக்கு புறம்பானதை எழுதுபவர்களை நார் நாராக கிழித்து எடுக்கலாம் என்றும் எழுதினேன் நான்.

ஒரு பக்கம் இதுபோல் நமக்குக்கிடைத்த சுதந்திரம் சந்தோஷப்பட வேண்டிய விசயமென்றாலும், தனிமனித கருத்துச் சுதந்திரத்தால் இன்று பொய்மூட்டைகளை வலைபதிவுகளில் எழுதி பல உண்மைகளை படுகொலை செய்கிறார்கள் பல இளம் வலைபதிவர்கள். இது ஒரு மிக மிகவும் வருந்தத்தக்க விசயம். ஒரு பொய்யை எழுதி, அதற்கு சில பொய்யர்கள் நடத்தும் பொய் வலைபதிவுப் பதிவுகளை மேற்கோள் காட்டி, சில பொய்யர்களை பின்னூட்டமிட வைத்து, பொய்யை மெய்யாக்கிக் கொண்டு வருகிறது இந்த அரைவேக்காடுகள் நிறைந்த வலையுலகம்!

இதைப்போல் எழுதப்படும் பொய்மூட்டைகளை பார்த்து, வாசித்து வரும் சில விசயம் அறிந்த பெரியவர்களும், வாசகர்களும் இவ்வலைபதிவர்கள் படுகஷ்டத்துக்கு ஆளாக்குகிறார்கள். எதனால் இந்த நிலைமை என்று பார்த்தால் இந்த “வலையுலக கருத்துச் சுதந்திரம்”தான் காரணம். வெறும் வாசகர்களாக இருக்கும் பல விபரமறிந்தவர்களுக்கு அந்தக்காலத்து ஆட்கள் நினப்பது என்னவென்றால் பத்திரிக்கைகள் பரவாயில்லை இந்த இன்றைய வலையுலகத்துக்கு என்று. வலையுலகம் என்றாலே ஏதோ அரை டவுசர்கள் எழுதும் அர்த்தமில்லாத உளறல்கள் என்று பலர் நம்பும்படி ஆகிவிட்டது இப்போது.

தவறு நடக்காத இடமே இல்லை. தவறாக எழுதுவதும் மனித இயல்புதான். ஆனால் தன் சுயநலத்திற்காக உண்மைபோல் ஜோடிக்கப்பட்ட பொய்களை எழுதுபவர்கள் சில கீழ்த்தரமான வலைபதிவர்கள். இவர்கள் எழுதும் பொய்களைக்காட்டி இவர்களை தண்டிக்க இன்று சட்டத்தில் இடமில்லை! இவர்களை மேற்கோள் காட்டி விமர்சித்தாலும் அது தனி நபர் தாக்குதல் என்றாகும் அபாயமும் இருக்கிறது.

இன்று ஒரு வலைபதி(வரின்)வின் நிலைமை, அந்தப் பதிவரின் பிழையில்லாமல் எழுதும் சுத்தமான தமிழினாலும், அரசியல் ஞானத்தினாலும், உயரத்தான் செய்கிறது என்றாலும் அந்தப்பதிவர் உண்மைக்குப் புறம்பானதை எழுதுகிறார் என்றால் காலப்போக்கில் அவர் பாதாளத்தில் விழப்போவதென்னவோ உண்மை!

5 comments:

தீப்பெட்டி said...

//பல உண்மைகளை படுகொலை செய்கிறார்கள் பல இளம் வலைபதிவர்கள்//

? :(

லதானந்த் said...

உஙகள் இந்தப் பதிவுபொத்தாம் பொதுவாய் இருப்பதால் என்னைப்போல் கத்துக்குட்டிகளுக்கு ஒண்ணும் புரிய மாட்டீங்குது? யார் பொய்ய எழுதினாங்கனு சொல்லாட்டியும் என்ன பொய்ய எழுதுனாங்கனு சொன்னாத் தேவலைங்க.

DHANA said...

லதானந்த்said...உஙகள் இந்தப் பதிவுபொத்தாம் பொதுவாய் இருப்பதால் என்னைப்போல் கத்துக்குட்டிகளுக்கு ஒண்ணும் புரிய மாட்டீங்குது? யார் பொய்ய எழுதினாங்கனு சொல்லாட்டியும் என்ன பொய்ய எழுதுனாங்கனு சொன்னாத் தேவலைங்க.///
ரிப்பிட்டு

வருண் said...

தீப்பெட்டி, லதானந்த் சார், தனா:

நான் பொதுவாத்தான் இதை சொல்லமுடியும். ஒவ்வொருவரையும் மேற்கோள் காட்டி சொன்னால் பல கஷ்டங்கள் வரும். மன்னிச்சுக்கோங்க்!

என்னுடைய பாயிண்ட் ஒண்ணுதான் கருத்துச்சுதந்திரம் பல விதங்களில் தவறாக பயன்படுத்தபடுது!

உங்கள் வருகை மற்றும் பின்னூட்டங்களுக்கு நன்றி :)

வருண் said...

இங்கே ஒரு பொய்மூட்டை இருக்கு பாருங்க!

இதில் பாதிக்கு மேலே பொய்!

அதுவும் விக்கி லயே

http://en.wikipedia.org/wiki/Mohan_%28actor%29


*******************
List of Silver Jubilee Hits

* 1) Nenjathai Killadhey (365 days)
* 2) Kilinjalgal (over 250 days)
* 3) Payanangal Mudivathillai (over 500 days)
* 4) Gopurangal Saivathillai (over 200 days)
* 5) Naan Paadum Paadal (over 200 days)
* 6) Ilamai Kaalangal (over 200 days)
* 7) Manaivi Solley Manthiram (175 days)
* 8) Saranaalayam (175 days)
* 9) Vidhi (Over 500 days)
* 10)Unnai Naan Sandhithen (175 days)
* 11)Osai (175 days)
* 12)Vengayin Mainthan (175 days)
* 13)Nooravadhu Naal (over 200 days)
* 14)Udhaya Geetham (over 200 days)
* 15)Idaya Kovil (over 200 days including its second release)
* 16) Thendrale Ennai Thodu (over 250 days)
* 17) Pillai Nila (over 200 days)
* 18) Kunguma Chimil (175 days)
* 19) Mella Thirandhathu Kadhavu (over 200 days) in Colombo
* 20) Uyire Unakkaaga (175 days)
* 21) Mouna Ragam (over 250 days)
* 22) December Pookal (175 days)
* 23) Rettai Vaal Kuruvi (175 days)
* 24) Theerthakaraiyinile (175 days)
* 25) Sahadevan Mahadevan (175 days)
*************