"கொஞ்சம் இரும்மா வர்றேன், யாரோ கதவை தட்டுறா!"
***************
"வாங்க கண்ணன்!"
"யாரோட பேசிட்டு இருக்க, பிருந்த்?"
"வேற யாரு? எங்கம்மாதான்!"
"சரி பேசு. நான் நீ பேசுற அழகைப் பார்த்து ரசிக்கிறேன்"
"உங்களைமாதிரி உலகத்திலே யாருமே ஐஸ் வைக்க முடியாது."
"நெஜம்மாவே நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க பிருந்த்"
"தேங்க்ஸ்"
**********************
"யாருடி அது?"
"என் ஃப்ரெண்டுதான்."
"ஃப்ரண்ட்னா? யாருடி அது?"
"கண்ணன் னு சொல்லுவேன் இல்லை? அவர்தான்.."
"யாரு? உன்ன அந்த மரப்பசு கதைப்புத்தக்கம் படிக்கச் சொன்னவரா?"
"அவரேதான். நான் ஃபோனை அவர்ட்ட கொடுக்கிறேன். "ஏன் என் மகளை இது மாதிரி கதையெல்லாம் படிக்கச் சொல்ற"னு நாலு கொடுக்கிறயா?"
"அதெல்லாம் வேணாம்டி"
"பயப்படாதே! அவர் ரொம்ப அப்பாவி. நீ திட்டினாலும் எனக்காக வாங்கிக்குவாரு"
"ஏய், நீ ஃபோனை என்ட்டகொடு, பிருந்த்! நான் ஆண்ட்டிக்கு ஹாய் சொல்றேன்"
"கண்ணன் ஏதோ சொல்லனுமாம். அவர்ட்ட பேசும்மா"
"இந்தாங்க, ஃபோன்."
"ஹலோ ஆண்ட்டி! நான் கண்ணன், உங்க பொண்ணோட ஃப்ரெண்ட்"
"ஹல்லோ"
"எப்படி இருக்கீங்க, ஆண்ட்டி?"
"நல்லாயிருக்கேன்..நீங்க நன்னாயிருக்கேளா?"
"ஆண்ட்டி! உங்க மகளுக்கு மரப்பசு புத்தகம் படிக்கச்சொல்லி ரெக்கமெண்ட் பண்ணின பாவி நாந்தான்! திட்டுறதுனா இப்போவே நேரடியா திட்டலாம்."
"இல்லை, ஏன் இதுமாதிரி கதையெல்லாம் அவளை படிக்க சொல்றீங்க?"
"பிருந்தா இப்போ பச்சை குழந்தை இல்ல ஆண்ட்டி. பெரிய பொம்னாட்டியா ஆயிட்டா. அவளுக்கு ஒரு கதையில் உள்ள கருத்தில் எதை எடுத்துக்கனும் எதை விடனும்னு தெரியும்."
"எனக்கு மரப்பசு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் அந்த அம்மணி இருக்காளே, அவளை சுத்தமாப் பிடிக்கலை! என்ன பொண்ணு அவ!"
"ஏன் ஆண்ட்டி உங்களுக்கு கோபாலியைத்தான் ரொம்பப் பிடிக்குமா?"
"அச்சச்சோ! யாருக்காவது அந்த கெழத்தைப் பிடிக்குமா?"
"ஆண்ட்டி! கதை எப்படிப் போனாலும் முடிவு நல்லாத்தானே இருந்தது?"
"முடிவு பரவாயில்லைதான்."
" சரி, உங்க மகளோட பேசுங்க. வெர்ரி நைஸ் டாக்கிங் டு யு ஆண்ட்டி."
"சேம் ஹியர்!"
"இந்தா பிருந்த், ஃபோன்!"
************************************
"என்னடி உன்ன இப்படி கூப்பிடுறாரு?"
"என்ன சொன்னாரு?"
"உன்ன பிருந்த் னு சொல்றாரு."
"ஆமா, அவர் அப்படித்தான் கூப்பிடுவாரு. ஏன் உனக்குப் பிடிக்கலையா?"
"அது இல்லடி."
"வேற என்ன?"
"என்னவோ ரொம்ப உரிமையாப் பேசுற மாதிரி இருக்கு."
"க்ளோஸ் ஃப்ரெண்டுனு சொன்னேன் இல்ல? சரி நான் அவருக்கு காஃபி போட்டுக்கொடுக்கனும்மா. அடுத்த வாரம் பேசுறேன். சரியா?"
"கொஞ்ச நேரம்கூட உன்னோட பேசலை."
"நான் அப்புறம் கூப்பிடுறேன். சரியா?"
"சரிடி, பிருந்தா."
"பை ம்மா"
*********************************
"ஏய்! என்ன அதுக்குள்ள உங்கம்மாட்ட பேசி முடிச்சுட்ட?"
"உங்களை கவனிக்க வேண்டாமா? அதான்."
"உங்கம்மா என்னை திட்டுறது கேக்குது"
"திட்டிட்டுப் போகட்டும் விடுங்க. சரி, எனக்கு ஒரு கிஸ் கொடுங்க!"
"காஃபி போட்டுத் தரப்போறதா சொன்ன?"
"ஆமா. அது அப்புறம்தான்"
"இங்கே வாடா!"
"வந்துட்டேன்"
Kannan gently kissed her in her cheek holding her really tight.
"அவ்ளோதானா?"
"கிஸ்தானே கேட்ட?"
"கன்னத்திலேயா கேட்டேன்?"
"வேறெங்கே வேணும்?"
"என்ன கேட்டாலும் கெடைக்குமா? பெட்ரூம் போகலாமா?"
"ஆர் யு நாட் ஹாவிங் யுவர் பீரியேட்ஸ் நவ்?"
"ஆமா, அதான் ரொம்ப மூடாயிருக்கு."
"உனக்கு கேரம் விளையாடத் தெரியுமா?"
"நல்லா வெளையாடுவேனே.."
"ரியல்லி! நீ என்னை பீட் பண்ண முடியாது!"
"பார்க்கலாம்!"
"நான் ஒரு போர்ட் வாங்கி வந்திருக்கேன். விளையாடுவோமா?"
"எங்கேயிருக்கு?"
"என் கார்ல இருக்கு. உனக்குத்தான்."
"பொய்"
"நெஜம்மாத்தான். இரு எடுத்து வர்றேன்."
"நான் காஃபி போடுறேன்."
-தொடரும்
13 comments:
நசரேயன்,
இந்த புத்தகத்தை நீங்க மட்டும்தான் துருப்பாப் பாவிக்கிறீங்கன்னு நினைச்சேன்... அப்படி இல்லையா கதை??
கபாலி என்ன ஆனான்??
வாங்க, பழமைபேசி!
அது கபாலி இல்லைங்க. கோபாலி! :)))
கோபாலி.... பெருசு....
இடையில ஒருத்தன் வருவானே, அவன்?? காமேசுவோ, கபாலியோ.... பேர் தெரியலை.... புத்தகம் வீட்ல அல்ல இருக்கு?? தளபதி நசரேயனுக்குத் தெரியும்.....
காமேஸ்வரன், "நளபாகத்தில்" (இதுவும் தி ஜா ரா தான்) வர்ற சமையல்க் காரன் பேர்னு நெனைக்கிறேன்.
நீங்க சொல்ற கேரக்டர் பேரு எனக்கும் மறந்துபோச்சு!
இருங்க யோசிச்சு சொல்றேன் :)
ம.ப, அ.வ, மோ.மு, ந.பா, இதெல்லாமும் ஆச்சா? நீங்க தஞ்சாவூரா?? தாட்பூட்... தஞ்சாவூர்... அப்டின்னா என்ன??
நசரேயன்... ஒரு பகீமா....
அது கபாலி இல்லைங்க. கோபாலி! :)))
கோபாலி.... பெருசு....
இடையில ஒருத்தன் வருவானே, அவன்?? காமேசுவோ, கபாலியோ.... பேர் தெரியலை.... புத்தகம் வீட்ல அல்ல இருக்கு??
.....பதிவுக்கு பின்னூட்டம் போட வந்தேன். இந்த கமென்ட்ஸ் கண்ணில் பட்டு, நல்லா சிரிச்சேன்!
நான் தஞ்சாவூர்மாதிரி செழிப்பான பூமில பிறக்கலைங்க. உங்க நண்பர் சாருதான் தஞ்சாவூராம்! LOL
செம்பருத்தினு இன்னொரு நாவலும் உண்டு. அதுவும் படிச்சு இருக்கேன். இவரோட சிறுகதைகள்தான் நாவல்களைவிட நல்லாயிருக்கும் என்பது என் கருத்து :)))
***Chitra said...
அது கபாலி இல்லைங்க. கோபாலி! :)))
கோபாலி.... பெருசு....
இடையில ஒருத்தன் வருவானே, அவன்?? காமேசுவோ, கபாலியோ.... பேர் தெரியலை.... புத்தகம் வீட்ல அல்ல இருக்கு??
.....பதிவுக்கு பின்னூட்டம் போட வந்தேன். இந்த கமென்ட்ஸ் கண்ணில் பட்டு, நல்லா சிரிச்சேன்!
2 September 2010 8:31 AM ***
வாங்க சித்ரா :)
நம்ம பழமை திஜா ரா கதைகளை கரைச்சு குடிச்சு இருக்காரு போல.
அவரு, "பட்டாபி"னு ஒருகேரக்டரை சொல்ல வந்து வாய்தவறி, "கபாலி"னு சொல்லி இருக்கார்.
பெருசு கோபாலியை அவருக்கு நல்லாத்தெரியும் போல இருக்கு! :)
***Blogger பழமைபேசி said...
கோபாலி.... பெருசு....
இடையில ஒருத்தன் வருவானே, அவன்?? காமேசுவோ, கபாலியோ.... பேர் தெரியலை.... புத்தகம் வீட்ல அல்ல இருக்கு?? தளபதி நசரேயனுக்குத் தெரியும்.....
2 September 2010 8:07 AM***
அந்த கேரக்டர் பேரு, "பட்டாபி" ங்க, பழமைபேசி! :)
ஆங்.... அவனேதான்.... இன்னுமா அவன் அம்மணி கூடக் குடும்பம் நடத்திட்டு இருக்கான்?? கடைசி காலத்துல அவங்கிட்டவே இவ போய்ச் சேந்துட்டதாச் சொன்னாங்களே??
//நான் தஞ்சாவூர்மாதிரி செழிப்பான பூமில பிறக்கலைங்க. உங்க நண்பர் சாருதான் தஞ்சாவூராம்!//
அய்ய.... வருண் கேலியெல்லாம் பேசுதாரு.... ஆமா, அப்ப அவர்கிட்டவே தாட்பூட்டுன்னா என்னன்னு கேட்டு சொல்லுங்க....
உங்களுக்கு ஜெமோ, சாரு அல்லாருமே வேண்டியவங்களாங்க?? பெரிய ஆளுதான் நீங்க....
***பழமைபேசி said...
ஆங்.... அவனேதான்.... இன்னுமா அவன் அம்மணி கூடக் குடும்பம் நடத்திட்டு இருக்கான்?? கடைசி காலத்துல அவங்கிட்டவே இவ போய்ச் சேந்துட்டதாச் சொன்னாங்களே??
2 September 2010 9:44 AM **
அப்படித்தான் அந்தக் கதை முடியும். உங்களுக்கு பட்டாபி மேலே பொறாமையா இல்லை பரிதாபமா? :)))
பழமைபேசி said...
//நான் தஞ்சாவூர்மாதிரி செழிப்பான பூமில பிறக்கலைங்க. உங்க நண்பர் சாருதான் தஞ்சாவூராம்!//
அய்ய.... வருண் கேலியெல்லாம் பேசுதாரு.... ஆமா, அப்ப அவர்கிட்டவே தாட்பூட்டுன்னா என்னன்னு கேட்டு சொல்லுங்க....***
அவருதாங்க சொல்லிட்டு திரிகிறாரு, அவரு தஞ்சாவூராம்.. டெல்லிக்கு எதுக்குப் போனாருனு தெரியலை!
*** உங்களுக்கு ஜெமோ, சாரு அல்லாருமே வேண்டியவங்களாங்க?? பெரிய ஆளுதான் நீங்க....
2 September 2010 9:47 AM***
வேண்டியவங்களா? நீங்க வேற! :)))
Post a Comment