
* எந்திரன் அதிகாரப்பூர்வமான ஹிந்தி ட்ரைலெர் வெளி வந்து விட்டது! அதிகாரப் பூர்வமான ரிலீஸ் டேட்டும் அதில் அறிவிக்கப் பட்டுள்ளது!
தொடுப்பு 1
தொடுப்பு 2
ரஜினி ரசிகர்களுக்காக ஒரு பதிவுலகப் புதிர்!
ஒரு பதிவுலக நண்பருக்கு எந்திரன் மேலே உள்ள "அன்பை"ப் பத்தி சொல்லௌம்! இவருக்கு ஷங்கரைப் பிடிக்காதாம்! அப்புறம் ரஜினியை மட்டும் பிடிக்குமா என்ன? பிடிக்காதாம்! ஏ ஆர் ரகுமானையும் பிடிக்காதாம்! சன் நெட் வொர்க்கை பிடிக்கவே பிடிக்காதாம்! அதுமட்டுமல்ல, 10 கோடிக்கு மேலே செல்வழிச்சு எடுக்கிற எந்த்ப் படமும் பிடிக்காதாம். அதனால 100 கோடிக்கு மேலே பணம் போட்டு தயாரித்த எந்திரனைப் புறக்கணியுங்கள்னு இவர் எல்லாரையும் ஆதங்கத்துடன் கேட்டுக்கிறார்.
யார் இவர்? சிவாஜி படத்தை வீம்புக்கு பார்க்காத ஒரே பதிவர் இவர்தான்னு சொல்லிக்கிறார்! சிவாஜி படத்தி டி வி ல போட்டாலும் பார்க்க மாட்டார் போல! பெண்களை ஒதுக்கனும் நெனைகிறவர்கள்தான் "பெண் சுகம்"னா எப்படியிருக்கும்னு ஏங்குவார்களாம். அப்படிப்பார்த்தால் இவர் சிவாஜி (ஸ்ரேயா) ஏக்கத்தில் இருப்பாரோ என்னவோ?
எந்திரன் டீம்ல இவருக்கு காண்டு இல்லாத ஒரே ஒருவர் வைரமுத்துதான். அது ஏன் வைரமுத்துவை மட்டும் விட்டுட்டாரு? அவர் சம்பளம் இல்லாமலே பாட்டு எழுதினாரோ? அவர்ட்டத்தான் கேக்கனும். ஒரு வேளை பயம்மா? இருந்தாலும் இருக்கலாம்! அவர் மீசையைப் பார்த்து பயந்து இருப்பாராக்கும்!
இவர் எழுதிய எச்சரிக்கை பதிவில் எந்திரனை சயண்ஸ் ஃபிக்ஷன் படம்னு அந்தப்படத்தைப் பற்றி தெரிந்தவர்கள் சொன்னால், சயண்ஸ்னா என்ன ஃபிக்ஷன்னா என்னனு கேக்கிறாரு? ஏன் சயண்ஸுக்கும் ஃபிக்ஷனுக்கும் இவர்தான் அந்த்தரிட்டியா என்ன? எந்திரன் படத்தை இவர் கற்பனா ஷக்தியாலேயே பார்த்த இவருக்கு மட்டும்தான் தெரியுமாம சயண்ஸும், ஃபிக்ஷனும்! நமக்கென்ன தெரியும்?
படம் வெளி வருமுன்னாலேயே இவர் ஏன் சயண்ஸ்லயும், ஃபிக்ஷன்லயும் பெரிய அத்தாரிட்டி மாதிரி இவர் பேசுறார்னு யாருக்காவது புரியுதா? எனக்குப் புரியலை. சரி, ரஜினி விசிறி யாராவது, நான் மேலே சொன்ன பதிவர் யாருன்னு கரெக்ட்டா சொல்லுங்க பார்க்கலாம்!
இரங்கல் செய்தி ஒண்ணு!
எனக்குப் பிடித்த நடிகர் பூவிலங்கு முரளி இறந்துவிட்டாராம். பல லட்சக்கண்க்கான ரசிக ரசிகர்கள் இவருடைய திடீர் மறைவால் அழாத குறைதான். இவருக்கு வயது 47 தானாம். குடிப் பழக்கம் உண்டுனு சொல்றாங்க! ஆமா இப்போலாம் யாரு குடிக்கிறதில்ல? கார்டியாக் அரெஸ்ட் னு சொல்றாங்க. இதயம் சம்மந்தமான வியாதிகளை எவ்வளவோ ஒழிச்சிட்டோம். இருந்தும், பணப்பற்றாக்குறை இல்லாத ஒரு நடிகர் இதயக் கோளாரால் சாகிறார்னா, என்னனு புரியலை.
7 comments:
அதெல்லாம் விடுங்க.. எப்படியோ போறாங்க.. புது ட்ரைலர் பாருங்க.. தாறுமாறா இருக்கு.. http://www.youtube.com/watch?v=hNXHveyzUvY
ஆமா நீங்க ஏன் காலைல எழுந்து இப்படி அரக்க பரக்க எதுக்கு பணக்காரர்களோட ஷுவை துடைக்கீறிங்க...?
***Blogger கிரி said...
அதெல்லாம் விடுங்க.. எப்படியோ போறாங்க.. புது ட்ரைலர் பாருங்க.. தாறுமாறா இருக்கு.. http://www.youtube.com/watch?v=hNXHveyzUvY
9 September 2010 7:48 PM***
வாங்க கிரி!
ட்ரெய்லெர் பாத்துட்டுத்தான் இந்தப் பதிவு போட்டேன்!
தொடுப்பு 1 & 2 ல தான் கொடுத்து இருக்கேன், கிரி :)
இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு :)))
***Blogger raja said...
ஆமா நீங்க ஏன் காலைல எழுந்து இப்படி அரக்க பரக்க எதுக்கு பணக்காரர்களோட ஷுவை துடைக்கீறிங்க...?
9 September 2010 10:06 PM***
வாங்க ராஜா!
என்னவோ ஷூ அது இதுனு புரியாத பாஷைல பேசுறீங்க! உங்க பெரிய மனசுக்கு நீங்க ந்ல்லாயிருக்கனும்!
என்ன பழமைபேசி, ஏதோ சொல்லக்கூடாதத சொல்லீட்டீங்களா?
:))))
படம் செப் 30 தான் ரிலீஸ்னு சொல்றாங்க! இப்போ நான் பொய் சொன்னது மாதிரி ஆயிப் போச்சு!
//
என்ன பழமைபேசி, ஏதோ சொல்லக்கூடாதத சொல்லீட்டீங்களா?
//
மணி அண்ணன் என்ன சொன்னாருன்னு தெரியாம தலையே வெடிக்கும் போல இருக்கு
Post a Comment