Thursday, September 9, 2010

பதிவுலகில் பெண்கள்!! ஆண்கள் கவனம்!

நான் பதிவுலகில் பெண்களை கவனமா இருக்கச் சொல்லல! காலங்காலமாக பெண்கள் கவனமாயிருக்கிறேன் இருக்கிறேன்னு எந்தக் கருத்தையும் சொல்லாமல் போயிடுவாங்க! பேசட்டும்! கருத்தை சொல்லட்டும், கதை கவிதை எழுதட்டும், அரசியல் பேசட்டும் விவாதிக்கட்டும்! ஆனால், இன்று, மனம்திறக்கும் பெண் பதிவர்களிடம் ஆண் பதிவர்கள் கவனமாயிருக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது! அவங்க சொல்ற கருத்துப் பிடிக்காமல் பின்னூட்டத்தில் திட்டமுடியலைனு புனைவெழுதி திட்டி வம்புல மாட்டிக்காதீங்க!

சமீபத்தில் பதிவுலகில் பெண்கள் தன் பிரச்சினைகளை முன்வைக்க வந்து விட்டார்கள்! சமூகப் பிரச்சினையை அல்ல! பதிவுலகில் தனக்கு வரும் பிரச்சினைகளை! வினவு குழுவினர், பெண்களுக்காக இந்தத் தொண்டை இப்பொழுது மும்முறமாக செய்கிறார்கள்! இன்னும் யார் யார் தலை உருளப்போகுதோ தெரியலை!

உங்களுக்கு ஒரு பெண்பதிவரைப் பிடிக்கலை, அவர் கருத்தைப் பிடிக்கலைனு ஏதாவது புனைவெழுதுறேன்னு எழுதி, புனைவுதானே யார் கேக்கமுடியும்னு தாறுமாறா சாடி, வம்புல மாட்டி, அப்புறம் வினவு வந்து உங்க பேரை நாறடிச்சு பஞ்சாயத்து வச்சு, உங்க பரிதாப நிலைமையை பார்த்து உங்க குடும்பத்தினர் உங்க புனைவைப் படிச்சு, "உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்?" னு உங்க குடும்பத்துக்குள்ளே பிரச்சினை யாகப்போகிற பரிதாப நிலைமைக்கு ஆளாகப்போறீங்க!

இன்றைய சூழ்நிலையில் பெண் பதிவர்களையும் அவர்கள் கருத்துக்களையும் மதித்தே ஆகனும் நீங்க! எனக்கும் சேர்த்துத்தான் சொல்லுறேன். You just have to respect them even if you find their thoughts are unacceptable! பிடிக்கலைனா ஒதுங்கிப் போயிடுறது நல்லது! எதையாவது தனிநபர் தாக்குதல் போல புனைவா எழுதுவதால் கடைசியில் நீங்களே உங்க தலையில் மண் அள்ளிப் போட்ட கதைதான் ஆகும், ஆகிக்கிட்டு இருக்கு.

பொதுவாக தெரிந்தோ தெரியாமலோ நம்ம கலாச்சார ஆண்கள் எல்லாம் தன் தாய், தன் சகோதரி போன்ற உறவுகளை மட்டும் தெய்வம் போல் மதிப்பது மற்றபடி ஊர் உலகத்தில் உள்ள பெண்களை, வேற ஒரு லெவெல் ல வச்சிருப்பது ஒரு கசப்பான உண்மை. இது காலங்காலமாகவே நம்ம ஊர் ஆண்களுக்கு தப்பாவே தோனாது. ஏன்னா அது போலலொரு கலாச்சாரத்தில் நாம் பிறந்து வளர்ந்து ஊறிவிட்டோம்!

ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது! இது 21ம் நூற்றாண்டு! காலங்காலமாக ஆண்களால் அடக்கி வைக்கப் பட்ட பெண்கள், "ஓவெர் ரீயக்ட்" செய்யும் காலம்! அவங்க சொல்றதெல்லாம் சரினு இல்லை! ஆனால் அவர்கள் பிரச்சினைகளை முன்வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆணோ பெண்ணோ, அதிகமாப் பேச ஆரம்பித்தாலே ஏதாவது தவறுதலா வருவது இயற்கைதான். பெண் பதிவர்களை ஊக்குவிக்கனும்னு பொது நோக்குள்ள பதிவர்கள் நிறைந்த இந்தக் காலத்தில் பதிவுலகில் ஆண் பதிவர்கள் உங்க மரியாதையை காப்பாத்தனும்னா பேசாமல் பிடிக்காத பெண் பதிவர்களை "இக்னோர்" பண்ணிவிடுவ்வது நல்லது! பழி வாங்குறேன்னு ஏதாவது புனைவு அது இதுனு (புனைவுதானே, கற்பனைனு கதைவிடலாம்னு நெனச்சு) எழுதினால் கடைசியில் நீங்க நல்லவரா இருந்தாலும் உங்களுக்குத்தான் கெட்ட பேருதான் வந்து நிக்கும்!

அதனால் என்ன? நான் முந்திக்கு இப்போ பிரபலமாயிட்டேனேனு நினைத்தால், உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! பெண் பதிவர்களிடம் ஆண் பதிவர்கள் கவனமாக இருக்கலைனா உங்க மானம் கப்பலேறிடும் என்பதைத்தான் இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம்! இல்லை இல்லை "நான் இண்னொசண்ட்"னு நீங்க புலம்புறது கேக்குது! I dont think anybody is going to buy your story! Whether you win or lose, you are the LOSER for sure!

15 comments:

பழமைபேசி said...

தளபதி நசரேயன் அட்டூழியம்... என்ன சொன்னாலும், “நீங்க சொல்றது சரிதாண்ணே” என்கிறார்!!!

நசரேயன் said...

“நீங்க சொல்றது சரிதாண்ணே”

மதுரை சரவணன் said...

படித்தேன்... பகிர்வுக்கு நன்றி.

settaikkaran said...

ரைட்டு! வெரி வெரி கரெக்டு! :-)

வருண் said...

வருகைக்கு நன்றி, பழமைபேசி, நசரேயன், மதுரை சரவணன் & சேட்டைக்காரன்.

இது ரொம்ப "touchy subject" னு எல்லோரும் டச் பண்ணாமலே பின்னூட்டமிடுறீங்க? :)))

பனித்துளி சங்கர் said...

//////ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது! இது 21ம் நூற்றாண்டு! காலங்காலமாக ஆண்களால் அடக்கி வைக்கப் பட்ட பெண்கள், "ஓவெர் ரீயக்ட்" செய்யும் காலம்! அவங்க சொல்றதெல்லாம் சரினு இல்லை! ஆனால் அவர்கள் பிரச்சினைகளை முன்வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆணோ பெண்ணோ, அதிகமாப் பேச ஆரம்பித்தாலே ஏதாவது தவறுதலா வருவது இயற்கைதான்/////

நன்று

Venkatesh S said...

I really pity the people who have chosen to ignore their intellectual thinking in producing new content and got into this run off the mill rut of male chauvinism/feminism. This looks like a pattern that every 3 months are so, someone instigates such issues and majority of the bloggers pounce on it seeing this as an opportunity to add more pages in their blogs.

எல் கே said...

right well said

வருண் said...

***♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது! இது 21ம் நூற்றாண்டு! காலங்காலமாக ஆண்களால் அடக்கி வைக்கப் பட்ட பெண்கள், "ஓவெர் ரீயக்ட்" செய்யும் காலம்! அவங்க சொல்றதெல்லாம் சரினு இல்லை! ஆனால் அவர்கள் பிரச்சினைகளை முன்வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆணோ பெண்ணோ, அதிகமாப் பேச ஆரம்பித்தாலே ஏதாவது தவறுதலா வருவது இயற்கைதான்/////

நன்று**

நன்றிங்க, சங்கர்! :)

வருண் said...

***Venkatesh S said...

I really pity the people who have chosen to ignore their intellectual thinking in producing new content and got into this run off the mill rut of male chauvinism/feminism. This looks like a pattern that every 3 months are so, someone instigates such issues and majority of the bloggers pounce on it seeing this as an opportunity to add more pages in their blogs.

10 September 2010 12:17 AM***

என்னவோ போங்க!

வினவு, வினை செய்னு சொல்லிக்கிட்டு கட்டை பஞ்சாயத்து வச்சுட்டு திரிகிறாங்க! இதான் வினையா? என்ன எழவோ :)))

வருண் said...

***Blogger LK said...

right well said

10 September 2010 1:13 AM***

வாங்க, LK! :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

தேவையான கட்டுரை..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்லா விளக்கமா சொல்லியிருக்கீங்க...

பெண்களும் பயந்து ஓடவேண்டியதில்லை..எந்த புனைவுக்கும் , புரளிக்கும் பயந்து..


ஆனா வெளிப்படுத்தலாம் இவர்களை..

கத்தும் வரை கத்தி ஓய்வார்கள்..

இன்னிக்கு புதுசா ஒரு புனைவு வந்திருக்கு என்னை பற்றி

http://raguramrocks.blogspot.com/2010/09/blog-post_30.html


அமைதிப் படை

ப.கந்தசாமி said...

யாரு எப்படிப்போனா என்ன? எப்புடியோ பதிவு போடறதுக்கு டாபிக் கெடச்சா சரி, என்னங்க நாஞ்சொல்றது.

வருண் said...

***DrPKandaswamyPhD said...

யாரு எப்படிப்போனா என்ன? எப்புடியோ பதிவு போடறதுக்கு டாபிக் கெடச்சா சரி, என்னங்க நாஞ்சொல்றது.
4 October 2010 4:54 PM ***

சிரிக்கிறேன்! :)))

நீங்க இப்படியெல்லாம் சொல்லுவீங்கனுதான் நான் பதிவெழுதுவதை குறைந்த்துக்கொண்டேன்!