Monday, October 18, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே!

* கடவுள் ஏன் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை?

ஒரு வேளை பார்க்க ரொம்ப அசிங்கமா, அருவருக்கத்தக்க இருப்பாராக்கும்! அதான் மறைந்திருந்து பார்க்கிறாரோ? கடவுள்கூட ஆள் பார்க்க நல்லாயில்லைனா நம்ம ஆளு மதிக்க மாட்டான்!

* எறும்பு கடிச்சா வலிப்பதுக்குக் காரணம் எதுவும் விஷமா?

அது இன்ஞெக்ட் செய்யும் ஃபார்மிக் அமிலம்தான் இந்தற்கு காரணம். இது பெரிய விஷமல்ல!

* உங்க அந்தரங்கத்தை எல்லாம் உங்க மனைவியிடம் சொல்வது சரியா தப்பா?

இண்டிமேட் ரிலேஷன்ஷிப் ஆச்சே, தப்பே இல்லை, நீங்க அவரை ஒருபோதும் விவாகரத்து செய்யாதவரை.

* டாக்டர்! இன்னும் என் ப்ளட் கொலெஸ்டிரால் லெவெல் 225 லயே நிக்குது. என்னுடைய கொலெஸ்டிரால் லெவெலை சீரோவுக்கு கொண்டு வர ஏதாவது மருந்து இருக்கா, டாகடர்?

உங்க கொலெஸ்டிரால் லெவலை சீரோவுக்கு கொண்டுபோனா நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க!

(Cholesterol plays a vital role in our body, moron!)

* நீங்க ரொம்ப அழகு, மேடம்! உங்களுக்கு நோபல் பரிசு கெடச்சா சந்தோஷப்படுவீங்களா இல்லைனா மிஸ் யுனிவேர்ஸ் கெடச்சா சந்தோஷப்படுவீங்களா?

பணமா முக்கியம்? அது வரும் போகும்! மிஸ் யுனிவேர்ஸ்தான்!

(What a bimbo!)

* உங்களுக்கு எதிரிகள் உண்டா?

தெரியலை. எனக்குப் பிடிக்காதவர்களும், என்னைப்பிடிக்காதவர்களும் நிச்சயம் இருக்காங்க!

14 comments:

பழமைபேசி said...

நீர் இன்னும் வடக்கு நோக்கியே இருக்கீரு? அப்பய்யா வருவீரு??

பொட்டியத் தொலைச்சிட்டு நிக்கிறீரு? இதுல வேற வேணும் முடி... ஆட்சி முடி?!! க்கும்...

ILA (a) இளா said...

//எனக்குப் பிடிக்காதவர்களும், என்னைப்பிடிக்காதவர்களும் நிச்சயம் இருக்காங்க!//
இதுல நான் எங்கே இருக்கேன்? முதலா? இரண்டாவதா?

ILA (a) இளா said...

//கடவுள் ஏன் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை?//
தெரிஞ்சா என்ன பண்ணுவோம்? வரம் கேட்போம். அதைதான் தெனமும் வூட்லயே கேட்குறோமே அப்புறம் எதுக்கு நேர்ல வரனும்?

ILA (a) இளா said...

//உங்க கொலெஸ்டிரால் லெவலை சீரோவுக்கு கொண்டுபோனா நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க//
சீரோ சைஸ்னு சொல்றாங்களே, அது என்ன சீரோ சைஸா? இல்லையே.. பிம்பிலிக்கா பிலாப்பி

வருண் said...

***பழமைபேசி said...

நீர் இன்னும் வடக்கு நோக்கியே இருக்கீரு? அப்பய்யா வருவீரு??

பொட்டியத் தொலைச்சிட்டு நிக்கிறீரு? இதுல வேற வேணும் முடி... ஆட்சி முடி?!! க்கும்...

18 October 2010 11:24 AM***

நீங்க இப்படியெல்லாம் லொல்லு பண்ணினால் அவரு திருபி வரவே மாட்டாரு!

வருண் said...

***Blogger ILA(@)இளா said...

//எனக்குப் பிடிக்காதவர்களும், என்னைப்பிடிக்காதவர்களும் நிச்சயம் இருக்காங்க!//
இதுல நான் எங்கே இருக்கேன்? முதலா? இரண்டாவதா?

18 October 2010 11:24 AM***

முதல் இதுல நீங்க இல்லை.. ரெண்டாவது இதுல நீங்க இருந்தாலும் இருக்கலாம் :))))

வருண் said...

***Blogger ILA(@)இளா said...

//கடவுள் ஏன் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை?//
தெரிஞ்சா என்ன பண்ணுவோம்? வரம் கேட்போம். அதைதான் தெனமும் வூட்லயே கேட்குறோமே அப்புறம் எதுக்கு நேர்ல வரனும்?***

அது சரி! :)

வருண் said...

***LA(@)இளா said...

//உங்க கொலெஸ்டிரால் லெவலை சீரோவுக்கு கொண்டுபோனா நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க//
சீரோ சைஸ்னு சொல்றாங்களே, அது என்ன சீரோ சைஸா? இல்லையே.. பிம்பிலிக்கா பிலாப்பி***

நீங்க புரியாத மாதிரி பேசக் கத்துட்டீங்க. சீக்கிரமே பெரிய ஆளாயிடுவீங்க! :)))

Chitra said...

* உங்களுக்கு எதிரிகள் உண்டா?

தெரியலை. எனக்குப் பிடிக்காதவர்களும், என்னைப்பிடிக்காதவர்களும் நிச்சயம் இருக்காங்க!

......ஆஹா.... சாதாரண கேள்விக்கு, செம பதிலு.... ஜூப்பரு!

Unknown said...

கொலஸ்ட்ராலை ஜீரோவுக்குக் கொண்டு வரச் சொல்லி அறியாமையால் கேட்கும் பேஷண்டை மோரோன் என்று திட்டச் சொல்லிக் கொடுக்கிறார்களா??

எஸ்.கே said...

கேள்வி/பதில் அருமை!

வருண் said...

***Chitra said...

* உங்களுக்கு எதிரிகள் உண்டா?

தெரியலை. எனக்குப் பிடிக்காதவர்களும், என்னைப்பிடிக்காதவர்களும் நிச்சயம் இருக்காங்க!

......ஆஹா.... சாதாரண கேள்விக்கு, செம பதிலு.... ஜூப்பரு!***

வாங்க, சித்ரா :)

வருண் said...

*** முகிலன் said...

கொலஸ்ட்ராலை ஜீரோவுக்குக் கொண்டு வரச் சொல்லி அறியாமையால் கேட்கும் பேஷண்டை மோரோன் என்று திட்டச் சொல்லிக் கொடுக்கிறார்களா??

18 October 2010 8:03 PM***

முகிலன்,

கடவுளையும்தான் அவமானப்படுத்தியிருக்கேன் னு சொல்லலாம். அதில் உள்ள மெசேஜை மட்டும் பாருங்க, ப்ளீஸ்!

வருண் said...

***எஸ்.கே said...

கேள்வி/பதில் அருமை!

18 October 2010 10:24 PM***

நன்றி, எஸ் கே! :)